புனித அந்தோனியார் திருவிழா அழைப்பிதழ்
வேம்பாற்றில் கோயில் கொண்டிருந்து கேட்பவருக்கு கேட்ட வரம் நல்கும் கோடி அற்புதர் புனித அந்தோனியாரின் மகோற்சவ பெருவிழாவும், ஆலயத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவின் தொடக்க விழாவும் நாளை 13.09.2015 அன்று மாலை 6.00 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 22.09.2015 அன்று காலை 6.00 மணியளவில் பெருவிழா திருப்பலியுடன் நடைபெற்று, மாலை 6.00 மணியளவில் கொடியிறக்கத்துடன் நிறைவடைகிறது. பெருவிழாக் காலங்களில் காலை 6.00 மணிக்கு திருப்பலியும், மாலை 6.00 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடைபெறும். இப்பெருவிழா கொண்டாட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு இறையருள் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பில் மகிழும் : வேம்பாற்றுவாசிகள்
புனித அந்தோனியார் திருவிழா அழைப்பிதழ்
Heritage Vembarites
08:03