சதுரங்கப்பட்டினம்

பாதுகாப்புக்காக அந்த மையத்தை சுற்றி உயரமான சுவர்கள் மற்றும் அரண்கள் அமைத்து வலுவான கோட்டையை கட்டியது. வர்த்தக ரீதியான போட்டியால் ஆங்கிலேயர்களுக்கும் டச்சுக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டன. பலம் பொருந்திய ஆங்கிலேயர்கள் கடற்படை தாக்குதலில் ஈடுபட்டு அந்தக் கோட்டையை குண்டுகள் வைத்து தகர்த்து 1796இல் கைப்பற்றினர். அதன் பிறகு சிறிது காலம் 1818 இல் டச்சு மீண்டும் கைப்பற்றி 1854 ஆங்கிலேயரிடம் பறிகொடுத்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய தொல்லியல் துறை இந்த கோட்டையை பராமரித்து வருகின்றது. எனினும் தற்போது பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.
2003இல் இந்தியத் தொல்லியல் ஆய்வு மையத்தால் பெரும் செலவில் கோட்டை கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டன. கோட்டையின் நுழைவாயில் மேல் அழகிய மணி கோபுரமும் (bell tower) கீழே இருபுறமும் பீரங்கிகள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. கோட்டை செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றி உயரமான சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. நான்கு புறமும் அரண்கள் அமைக்கப்பட்டு தற்போது மூன்று அரண்கள் மட்டுமே உள்ளன. தெற்குப் பகுதியில் அழகிய கல்லறை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 1620 முதல் முதல் 1769 வரை தேதியிட்ட 20க்கும் மேற்பட்ட கல்லறைகள் அங்கு உள்ளன.
கல்லறை ஒட்டியவாறு தென்மேற்குப் பகுதியிலும் வட மேற்குப் பகுதியிலும் ரகசிய அறைகள் உள்ளன . கோட்டை வளாகத்தில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாக அழிந்த நிலையில் அடித்தளம் மட்டுமே காணப்படுகின்றன. இந்தியத் தொல்லியல் ஆய்வு மையத்தால் 2003இல் சீரமைக்கப்பட்ட இரண்டு பெரிய கிடங்குகள் கோட்டையின் கிழக்குப் பகுதியில் உள்ளன. யானை மேல் ஏறுவதற்கான தலங்கள் உள்ளன. உணவு அருந்தும் அறைகள் மற்றும் நடன அறைகள் தற்போது தரைமட்டமாக காட்சியளிக்கின்றன.
