பரத குல திருமணப் பாடல்
திருமணத்தின்போது பாடும் பாடல்
நலம்பெறுதல் அரிதான நங்கை வளர்மதி (பெயர்) உச்சுவச்சு அம்மா
தனையே பதிவான ரெட்ன கொழு ஏற்றினாளே
நாத்தமார் பட்சமும் சரமாலை சூடியே
 கொஞ்சி விளையாடும் சடங்கும் இதுவே.
கொஞ்சி விளையாடும் சடங்கும் இதுவே.சித்திரத்தை ஒத்த மடமாது மணி
ரெட்னமெனக் கொலூ ஏறினாள்-- இப்போது
பந்து குழல் கந்தமர் சூடிய--அவள்
சிந்து மத்த கூந்தலிலே ஆட
பால் வளம் பகிர்ந்து ஒரு பால் அளிக்க
மின்னல் வேல் விழியால் பன்னீரால் தெளிக்க
இங்கிதம் கலந்த ஏலம் கிராம்பு--இவள்
நங்கையெனக் களிப்பால் தாம்பூலம்
பொற்சரிகை குரிசில்லாள்--சேலை
ஒயிலை மெச்சிடவே வேண்டுமே இவ்வேலை
தென்றல் திருமங்கைதனில் துலங்கக் கொண்டு
இஸ்பிரீத்து சாந்து வரம் இணங்க
சுந்தரக் கணவனும் கிறங்க-- பின்னால்
சந்தானம் பெறுக வழி நடந்து
ஆல் இலை நிகரற்ற பயன்போல்
கொடி அணிந்த மணக்கோலப் பெண்ணே
சொல்வேன் சொல்வேன் கொடியை--இவள்
இத்தகையால் விளங்கும் பெண்ணரசி
இவள் மெச்சிடவே வேண்டும் இக்கொடியே.
-அன்டொனிட்டோ,முதுநிலைப் பொறியாளர் D.C.W. (ஓய்வு)
