Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

தஸ்நேவிஸ் மாதா பிரார்த்தனை


சுவாமி, கிருபையாயிரும்

கிறிஸ்துவே, கிருபையாயிரும்

சுவாமி, கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாய்க் கேட்டருளும்.

பரமண்டலங்களில் இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

அர்ச்சியஸ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சுதனாகிய சர்வேசுரா - எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

சர்வலோக சராசரங்களையும் படைக்கும் முன்னே சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்ட திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, *

தீயை உமிழ்ந்து தீக்குணங்களையே செய்கிற ஆதிசர்ப்பத்தின் தலையை நொறுக்கி நசுக்கிய திவ்விய தஸ் நேவிஸ் மாதாவே,

குளிர்ந்த நிலவைப் பொழியும் சந்திரனைப் பாத தாமரையால் மிதித்த திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

அடர்ந்த இருளை நீக்கும் செஞ்சுடராகிய ஆயிரங் கதிரோனை ஆடையாகத் தரித் திலங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

பன்னிரண்டு விண்மீன்களைத் திருமுடியின் மகுடமாய்ச் ஆடி விளங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

மகாதீர்க்கத்தரிசிகளால் முன்னமே அறிவிக்கப்பட்ட மோட்ச அலங்காரியான திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

பிசாசு அணங்குகள் நடுங்கிப் பதுங்கும் பரிசுத்த நாமலங்காரியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

ஆறு மூன்று மகுடாதிபதிகளின் குல விளக்காய் விளங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

வலம்புரி உயிர்த்த வெண்முகத்தைப் பார்க்கிலும் மகா அலங்காரம் பொருந்திய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

சகலவரப்பிரசாதங்களும் மலிந்த சம்பூரண அலங்காரியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

தாவீதரசரின் திருமுடியில் துவங்கிய ஜீவரெத்தினமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

அருள் நிறைந்தவளே வாழ்கவென்று தேவதூதனால் வாழ்த்தி துதிக்கப்பட்ட  திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

பரலோக பூலோக பாதாள லோகமென்னும் திரிலோகங்களிலும் அடங்காத தேவாதி தேவனைத் திருவு திரத்திலடக்கித் தாங்கிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

கொடுங்கோலனாகிய ஏரோதரசனின் கொலை பாதகத்துக்கஞ்சி குழந்தையாயிருந்த உலக இரட்சகரை எகிப்து தேசத்திற்குக் கொண்டு போய் இரட்சித்தவளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

மகோன்னத பரிசுத்த கோதுமை அப்பத்தின் மாதாவாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

அக்கினிக்குள் வேகாத அழகிய முட்செடியில் தோன்றிய அசரீரி வாக்கியத்தின் திருமகளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

அப்போஸ்தலர்கள் மேலிறங்கிய சிவந்த அக்கினி நாக்கு உருவத்தின் அமல பத்தினியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

பூலோக ஆசைகளை வெறுத்து மேலோக ஆசை கொண்ட வேத சாட்சிகளின் திடதைரியமான திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

பாவதுர்க் கந்தம் ஒழிக்கும் பரிமள தந்த மயமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

பேய்க் குணங்கொண்ட படைகளைச் சிதறடிக்கும் வாளாயுதமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

வேத விரோதமாய்ப் பாரும் அடர்ந்த கார் மேகங்களைத் துரத்தி அழிக்கும் பிரசண்டமாருதமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

சத்தியத் திருச்சபையின் ஆறுதலின் வச்சிரத் தூணாகிய திவ்விய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

மோட்ச சாம்ராஜ்யத்தின் வெற்றித் தூணாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

சன்னியாசிகளுக்கும் கன்னியாஸ்த்ரிகளுக்கும் முன் மாதிரிகையாகும் கற்பலங்காரம் நிறைந்த திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

சர்வலோகங்களையும் பரிபாலிக்க நாம் அதிகாரமுடையோம் எனக் காண்பிக்க சர்வலோகநாயகனைத் திருக்கரத்தில் ஏந்தியிலங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

உலக மீட்பராகிய உமது குமாரன் ஞானஸ்நானம் பெற்ற நன்னீர் நிறைந்த யோர்தான் நதியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

ஆதித்தாய் தந்தை செய்த தோஷத்தை நீக்கி அடைபட்டிருந்த மோட்சகபாடத்தைத் திறந்தருளிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

சத்திய வேதத்தை தூஷித்து அலையும் பதிதரின் பொல்லாத நாவிற்கு ஆணியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

பாவங்களுக்காய்ப் பரிந்து பேசிபரகதி கொடுக்கும் வரம் நிறைந்த பாவிகளின் அடைக்கலமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

கடலிலும் வனத்திலும் வருந்தும் பக்தர்களுக்கு வலியதரிசனையாகி அவர்கள் ஆபத்தில் அகமகிழ்வோடு உதவி புரியும் அபயமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

தீராத நோயாளிகளுக்கு உத்தம ஒளஷதமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

வாடாத திவ்விய மணம் வீசும் புஷ்பமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

அழுகண்ணீர்களின் அழியாத பாக்கியமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

மகாத்துமாக்களின் மகத்துவம் தங்கிய நல்ல ஆலோசனையாகும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

தரும் வான்களின் விசேஷ தயாளமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

பொறுமையின் குன்றாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

தாழ்ச்சியின் பொக்கிஷமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

நவவிலாச சம்மனசுக்களின் மகிமை மிகுந்த அரசியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

சத்திய வேக இராஜாக்களுக்குள் மேதானத்தை வளர்க்கும் சக்கரவர்த்தினியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

பரலோக சக்கரவர்த்தியின் அமல பத்திராசனமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

கொள்ளை நோயை விலக்கும் வல்லபம் வாய்ந்த மகா பண்டிகையாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

சர்வலோகநாயகன் சொன்ன சத்திய வாக்கியத்தின் சாட்சியாகிய வானமண்டலத்தில் பிரகாசிக்கும் பச்சை வில்லாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

வெண்பொன்னை நிகர்த்த பனிமயமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

நீலோற்பவத்தைப் பழிக்கும் இரு நேத்திரங்களால் எங்களை எந்நாளும் ரட்சித்துக் காத்தருளும் காருண்ணிய தாயாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

சாதுக்களாகிய சகல புனிதர்களின் சதானந்தமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

சிலுவை பத்திராசனத்தில் உயிர் விடுந் தருணம் உலக இரட்சகராகிய உமது திருமகனால் எங்களுக்குக் கையளிக்கப்பட்ட ஏக அடைக்கலத் தாயாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

உரோமை மாநகரில் பத்திரீஸ் அருளப்பருக்கும் அவர் மனைவிக்கும் பிரசன்னமாகி என்கலின் மலையில் ஒரு தேவாலயம் கட்டும்படி திருவாய் மலர்ந்தருளிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

பனி பெய்யக் கூடாத உஷ்ண காலத்தில் உறைபனியைப் பெய்வித்து ஆலயம் கட்ட இடத்தையும் அளவையும் காண்பித்தருளிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

பரிசுத்த திபேரியும் பாப்பரசருக்குத் தரிசனை தந்து அதிசயங்களைச் செய்தருளிய எஸ்கலின் மலை நாயகியான திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,

- எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,

- எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே,

- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்களுடைய எளிய விண்ணப்பங்கள் இறைவனால் அங்கீகரிக்கப்படும் பொருட்டு, திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே ,

* எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

செபிப்போமாக

சர்வலோக கர்த்தாவும், உலக மீட்ப ருமாகிய உத்தம இயேசுவே! தேவரீரை மனித சுபாவத்தின் படியே பெறு முன்னும், பெற்ற போதும், பெற்றதின் பின்னும் கன்னிமை குன்றாதிருக்க வரம் பெற்ற தேவரீருடைய திரு மாதாவின் பாதார விந்தங்களை அடைக்கலமாய்த் தேடிக் கொள்கிற அடியோர், அத் திரு மாதாவின் வல்லமையுள்ள மன்றாட்டினால் உலகம், சரீரம், பசாசென்னும் சத்துருக்களுடைய மாயையாதிய அந்தகாரத்துள் அகப்படாமல், தேவரீருடைய பரிசுத்த வரப்பிரசாதமாகிய திருச்சுடர் பரவிய இருதயங்களோடு இவ்வுலகத்தில்தேவரீருக்குப் பணி செய்து சதn காலமும் பேரின்ப வீட்டில் அத் திருத்தாயாரோடும் சகல வானோர்களோடும் தேவரீரைத் தோத்தரித்து வாழ கிருபை புரிந்தருளும் சுவாமி . பிதாவோடும், தூய ஆவியோடும் சதாகாலமும் சீவியருமாய் இராட்சிய பரிபாலனம் பண்ணுகிறவருமாய் இருக்கிற ஆண்டவரே ஆமென்.

இடிந்தகரை கடற்கரை அமைப்பு


தற்போதுள்ள தலைமுறைகளுக்கு தெரியாத 
இடிந்தகரை கடற்கரை அமைப்பு



இடிந்தகரை கடற்கரையின் அமைப்பு:

இடிந்தகரை ஊருக்கு கிழக்கே மேற்கேயுள்ள சுமார் 5 கி.மீ நீளம் கொண்ட நீண்ட கடற்கரைப் பகுதி வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.கிழக்கிலிருந்து மேற்காக கடற்கரையின் பிரிவுகளைப் பார்ப்போம்.

அருவிக்கரைப் பரப்பு

இடிந்தகரை ஊரின் கிழக்கு எல்லை.ஆறும் கடலும் சங்கமிக்கும் வெண்மணல் பரப்பால் நிரப்பப்பட்ட பரந்து அகன்ற முகத்துவாரம்.இப்பகுதி கடலின் ஆழம் மிகவும் குறைவு.

அருவிக்கரை முனை

அருவிக்கரை பகுதியில் நிலப்பரப்பு முனை போன்று கடலை நோக்கி நீட்டிக் கொண்டிருப்பதால் இப்பெயர் பெற்றது.இதை அடுத்த கடற் உட்பகுதி தொண்டு என்று வழங்கப்படுகிறது.

நக்கி ஓடை

காட்டோடை ஒன்று கடலுடன் சேரும் பகுதி.இப்பகுதியில் தலை வடிவில் பெரிய பாறை உள்ளது.இது பருந்தலை பார் எனப் படுகிறது.

கொடுவாய் முனை

நத்தைகளால் உண்டான படிம பாறைகளின் வாய்ப்பகுதி விளிம்புகள் ஒழுங்கற்று உடைந்து கடலுக்குள் நீட்டிக்கொண்டிருப்பதால் இப்பெயர் பெற்றது.நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இப்பகுதியிலிருந்த நத்தைகள் பெருமளவில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்டு கடற்கரைப் பகுதியில் படிமமாகி இப்பாறைத் தொடர் உருவாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.இப்பாறைத் தொடரின் முடிவுப் பகுதியிலிருந்து கிழக்கில் கடற்கரைக்குச் செல்ல கீழிறங்கும் பகுதி இறங்கும் கொடுவாய் எனப்படுகிறது.

கொடுவாய் முனை அந்தோனியார் கோவில்

புனித அந்தோனியார் கோவில் உள்ள பகுதி.

குடாக்கரை - கிடாங்கரை

கொடுவாய் முனையின் தொடர்ச்சியான மேற்குப்பகுதி.சுண்ணாம்பு பாறைகளளானது.இடிந்தகரை என்று ஊருக்குப் பெயரைத் தந்த பகுதி.அமைதியான, ஆழமான வளைவான கடற்பரப்பு என்பதால் இப்பெயர். இதையடுத்து மூரைப் பாரும்,நாலு முக்கு பாரும் உள்ளன.

குளம்பல்

“குளம் போல்” குடாப்பகுதியில் கடல் நீர் அமைதியாக காணப்படுவதால் குளம்பல் எனப் பெயர் பெற்றது.இது பாறைகள் நிறைந்த பகுதி.

குளம்பல் பாறை

குளம்பல் பகுதியில் இருந்த வட்டவடிவ பாறை குளம்பல் பார் அல்லது வட்டப்பாறை எனப்பட்டது.சுனாமிக்குப் பிறகு தூண்டில் பாலம் இதன் மேல் அமைக்கப்பட்டதால், இப்பாறை மறைந்துவிட்டது.

குருசடி தாவு

மரச் சிலுவை ஒன்று கரை ஒதுங்கிய பகுதி.இச்சிலுவையை வைத்து குருசடி ஒன்று கட்டப்பட்டதாலும், தாழ்வான ஆழமான பகுதி என்பதாலும் இப்பெயர் பெற்றது.இப்பகுதியில் ஆண்டு தோறும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ருவரி மாதங்களில் தங்க நகைத் துண்டுகள் கரை ஒதுங்குவதுண்டு.

தியோபிளேரன் பாறை

தியோகு என்பவருடைய வீட்டிற்கு நேர் தெற்கே உள்ள பெரிய பாறை தியோபிளேரன் பார்எனப்படுகிறது.இந்தப் பகுதியில் முன்பு வீடுகள் இருந்ததாக கருதப்படுகிறது.கடல் நீர் முன்னேறியதால் வீடுகள் மூழ்கியதாக கூற ப்படுகிறது.

வாழைத்தோட்டம்

கடற்புறத்திற்கு எப்படி வாழைத்தோட்டம் என்ற பெயர் வந்தது என்பது புதிராக உள்ளது.முன்னர் இப்பகுதியில் கடல் பின்னே இருந்ததாகவும்,இப்பகுதியில் வாழைத்தோட்டம் இருந்ததாகவும் சொல்வாருண்டு.

பண்ணிப்பிள்ளை ஓடை

அகன்ற ஓடை ஒன்று கடலில் சேரும் இடம்.

மீன் வாடி

மீன் விற்பனைச் சந்தை

கொப்புளி பாறை

மனிதர்களின் தொப்புள் வடிவத்திலான கடல் சாமந்தி எனப்படும் கடல் வாழ் விலங்குகள் இப்பகுதி பாறைகளில் ஒட்டி வாழ்வதால் இப்பெயர் பெற்றது.கொப்புளி என்பது தொப்புள் என்பதன் மரூவு ஆகும்.

ஜானிப் பிள்ளை ஓடை

மழை நீர் ஓடை ஓன்று கடலுடன் சேரும் இடம்.

தேளிப்பாய் முனை

தேளி மீன்கள் அதிகம் பாய்வதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். கட்டுமரப் பாயின் கீழ் முனை மூட்டுப்பாயும்,தாமான் பாயும் தேளிப்பாய் என்ற முக்கோண வடிவ துண்டால் இணைக்கப்பட்டிருக்கும்.இப்பகுதியில் உள்ள நிலப்பரப்பு முனை முக்கோண வடிவில் கடலினுள் நீட்டிக்கொண்டிருக்கும்.இதுவும் இப்பெயர் வரக் காரணமாக இருக்கலாம்.இதையடுத்த முனைப் பகுதி கிளாப்பரப்பு முனை எனப்படுகிறது.

செங்கழுநீர் நீர் ஓடை

இடிந்தகரையின் வடமேற்கே உள்ள உயரமான சுண்ணாம்புக் கல் நிரம்பிய பகுதி முறம்பு என்று அழைக்கப்படுகிறது.மழைக்காலங்களில் மழைநீர் இங்கிருந்து பெருக்கெடுத்து ஓடி செம்மண் பூமி வழியாக வருவதால் செந்நிறமாகி செங்கழுநீர் ஓடை எனப் பெயர் பெற்று கடலில் கலக்கும் இடம்.

பெரிய முள்ளி
முட்கள் போன்று கூர்மையான இலைகளைக் கொண்ட தரைப் படர் முள்ளிக் கொடிகள் இந் நிலப்பரப்பில் மிகுந்து காணப்படுவதால் இப்பெயர் பெற்றது .

சின்ன ஓடை
சிறிய மழைநீர் ஓடை ஒன்று கடலில் சேரும் இடம் .

சமஞ்சோடை
பாறைகள் நிறைந்த ஓடைப் பகுதி .

வெள்ளை
பாறைகள் இல்லாத வெண்ணிற சமதள மணற்பரப்பு.வெள்ளைப் பகுதியை அடுத்த கடற்கரை பகுதிகளுக்கு வரிசையாக மரக்குண்டு முனை,தில்லை நக்கி ஓடை ,பெரிய ஓடை, கருங்கல் முடுக்கு ,கிணத் தோடை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகள் தட்டையான கடற்கரை பரப்பை கொண்டவை.எனவே கட்டு மரங்களை எளிதாக ஏற்றி இறக்க இயலும்.

யானைக்கல்

இடிந்தகரை கடற்கரையின் மேற்கு எல்லை. யானை போன்ற தோற்றத்தில் பெரிய பாறை ஒன்று கடற்கரை ஓரத்தில் உள்ளது.இரண்டாம் உலகப்போரில் தாக்கப்பட்ட கப்பல் ஒன்று தரைதட்டிய இடம்.

பெரியமுள்ளி முதல் யானைக்கல் வரை ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் கட்டுமரங்களை ஏற்றி இறக்க வசதியான அழகான கடற்கரை பகுதி.தற்பொழுது கூடங்குளம் அணுமின் நிலையதின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் மீனவ மக்கள் பயன்படுதவியலாத நிலையாகிவிட்டது.

பனிமய மாதா திருவிழா - ஆயர் வேண்டுகோள்


பனிமய மாதா திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம்: ஆயர் வேண்டுகோள்

தூத்துக்குடியில் வருகிற 26ம் தேதி துவங்க உள்ள பனிமய மாதா ஆலயத் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும், திருவிழா நிகழ்வுகள் தொலைக்காட்சி, மற்றும் யூடியூப் சானலில் நேரலையாக ஒளிபரப்பப்படும். என ஆயர் ஸ்டீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

பல லட்சம் மக்கள் பங்கு பெறும் தூத்துக்குடி உலகப் பிரசித்தி பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் நடப்பாண்டில் நடைபெற உள்ள திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், கத்தோலிக்க ஆயர் ஸ்டீபன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஆயர் ஸ்டீபன் கூறியதாவது: முத்துநகரின் குலதெய்வமாக கருதப்படும் பனிமய மாதாவின் பெருவிழா கடந்த 438 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் யாரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொடிபவனி, திருவிருந்து விழா, நற்கருனை பவனி ஆகியவை நடைபெறாது.

திருவிழா வருகிற 26ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5ம் தேதி நிறைவு பெறுகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி பெருவிழா அன்று தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன், பாளையங்கோட்டை ஆயர் அந்தோணிசாமி, பணி நிறைவு பெற்ற ஆயர் ஜூடு பால்ராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தினமும் காலை 5.30, 6.30, 7.30, 8.30 மணிக்கு திருப்பலி நடைபெறும். திருவிழா நிகழ்வுகள் தொலைக்காட்சி, மற்றும் யூடியூப் சானலில் நேரலையாக ஒளிபரப்பப்படும். கரோனா நோயிலிருந்து மக்கள் விடுபடவும், தூத்துக்குடி நகரில் ஏற்படும் சிக்கல்கள் களையப்படவும் இந்த ஆண்டு இறைமக்கள் தங்களது இல்லங்களில் இருந்தே அன்னையிடம் மன்றாடி இறையாசி பெற வேண்டுகிறோம் என்றார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறும்போது, "வரும் ஆகஸ்ட் மாதம் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பனிமய மாதா ஆலய திருவிழாவில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்" என்றார். முன்னதாக திருவிழா தொடர்பான அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில், ஆயர் ஸ்டீபன், ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா, தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வருகிற 26ம் தேதி திருவிழா துவங்க உள்ள நிலையில், பனிமய மாதா ஆலயத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் அப்பகுதியைச் சுற்றி பேரிகார்டுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 800 போலீசார் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேம்பாற்றின் பங்கு குருக்கள்


வேம்பாறு பரிசுத்த ஆவி பங்கில் பணியாற்றிய குருக்கள்

St. Francis Xavier
1. Fr. Henry Hendricks
2. Fr. Franciaco Durao (1574)
3. Fr. Bernard de Almeida (1604)
4. Fr. Gaspar de Abrew (1607)
5. Fr. Manuel Campello (1608)
6. Fr. Fernand Gomez (1608)
7. Fr. Nicolas Paludanus (1608)
8. Fr. Louis Mathew Pelingotti (1608)
9. Fr. Andrew Lopez (1623-1627)
10. Fr. Antoine Valoso (1628)
11. Fr. Balthazar de Costa (1638)
12. Fr. Manuel Carneire (Vembar & Vaipar) (1708)
13. Fr. Alexander Joseph Calini (1709)
14. Fr. Manuel Dos Roys (Vembar, Vaipar, Mookoor) (1733)
15. Fr. Salvador de Costa (1738)
16. Fr. Francis Xavier Stocker (1742)
      Fr. Joseph Constantine Beschi (1742,1743)
17. Fr. Joseph Khrening (1743)
18. Fr. Anthony Maria Carisola (1743)
19. Fr. Charles Fortini (1745)
20. Fr. Mathew Lopez (1752--)
21. Fr. Xavier Bangarou (1875)
      Fr. Constant Dayirias(Ass. PP)
22. Fr. Michael (1876)
      Fr. Pouget (Ass. PP) (1878)
23. Fr. Pouget (1879)
      Frs. Berthiew, Giuge (Ass. PP)
24. Fr. P. X. Rayapar (1882)
25. Fr. Regis Calien (1887)
      Fr. Dayiriam (Ass PP)
26. Fr. Adaikalanathar (1889)
      Frs. Rayapar, Causanal, Cortes (As PP)
27. Fr. Adrian Boyisset (1894)
      Frs. Berthiew, Visuvasam, Rayapar, Talon (Ass PP)
28. Fr. Paranchothi (1897)
      Fr. Saminather (Ass PP)
29. Fr. Saminather (1901)
      Frs. Gnsnasamy, Mariadas (Ass PP) (1903)
      Fr. Soosai Manikam (Ass PP) (1904)
      Fr. Gnanapragasam (Ass PP) (1906)
      Fr. Siluvai Michael (Ass PP) (1907)
      Fr. Lourdes (Ass PP) (1911)
30. Fr. Mariadas (1919)
31. Fr. S. Mariadas (1923)
32. Fr. Remius Missier (1928)
33. Fr. G. Michael (1933)
34. Fr. Edward Christian Fernandez (1938)
      Fr. Xavier Thaninayagam
35. Fr. A. Michael (1946)
36. Fr. Rosary Corera (1947)
37. Fr. Periyanayagam (1950 six months)
38. Fr. X. Fernando (1950)
39. Fr. Venantius Fernando (1951)
40. Fr. Maria Viyagulam (1955 six months)
41. Fr. Anthony Arakal (1955)
42. Fr. T. Paul Alangaram (1957)
43. Fr. G. Soosainather (1960)
44. Fr. Liguori Fernando (1971)
45. Fr. Rubert Arulvalan (1972)
46. Fr. Bensigar (1973)
47. Fr. Paul Alangaram (1976)
48. Fr. Viyagula Marian (1977)
49. Fr. Vladmir Rayen (1979)
50. Fr. Devasagayam (1982)
51. Fr. Louis (1984)
52. Fr. Xavier Ignatius Amirtham (1985)
53. Fr. Jesu Arulappan (1988)
54. Fr. Arulmani (1991)
55. Fr. Alexander Fernando (1993)
56. Fr. Job De Rose (1998)
57. Fr. Venantius Fernando (2003)
58. Fr. Antony Ranjith Kumar Cardoza (2004)
59. Fr. Jesu Nazarene (2009)
60. Fr. A. Joseph Rathinaraj (2010)
61. Fr. L. Antony Jegathesan (2010)
62. Fr. John Benson (2012)
63. Fr. Sahayaraj Valdharis (2015)
64. Fr. Prathiban Liphonse (2017)
65. Fr. L. Raja Rodrigo (2018 - 2021)
66. Fr. Antony Titus Roshen (2021....)

வேம்பாற்றின் இறையழைத்தல்


கத்தோலிக்க திருச்சபைக்கு வேம்பாற்றுறை உவந்தளித்த முத்துக்கள் 


ராஜகுரு (BISHOP): 

மிக வணக்கத்திற்குரிய  டாக்டர்  பிடேலிஸ் லயோனல் இம்மானுவேல் பர்னாந்து, 
மன்னார் மறைமாவட்டம், இலங்கை


குருக்கள் (PRIESTS):

1. சங். வேதநாயகம் தல்மெய்தா  (சே.ச) - கண்டி 
2. சங். பெனடிக்ட் பர்னாந்து (ம.கு) - 24.07.1924 - கண்டி 
3. சகோதரர். இஞ்ஞாசி பர்னாந்து  (ம.கு) 
4. சங். சிலுவைமுத்து தல்மெய்தா (ம.கு) - 26.08.1934 - கண்டி 
5. சங். திருக்குடும்ப தாசன் தல்மெய்தா (ம.கு) - 25.08.1935 - 
6. சங். அமலதாஸ் விக்டோரியா (ம.கு) - 25.08.1936 - கண்டி 
7. சங். ஜோசப் பர்னாந்து (OMI)- 01.09.1962 - யாழ்ப்பாணம் 
8. சங். இம்மானுவேல் பர்னாந்து (OMI) - 06.01.1973 - ரோம் 
9. சங். பெஸ்கி டி அல்மெய்தா - 12.05.1978 - வேம்பாறு 
10. சங்.  நவஜோதி விக்டோரியா (ம.கு) - 13.05.1981 - தூத்துக்குடி 
11. சங். அன்றன் குரூஸ் (ம.கு) - 02.06.1981 - தூத்துக்குடி 
12. சங். அன்றன் சந்திரன் பர்னாந்து (ம.கு) - 27.04.1983 - தூத்துக்குடி 
13. சங். பீட்டர் சுபராஜ் முறாய்ஸ் (கி. ச) - 27.04.1994 - சென்னை 
14 .சங். பிரகாஷ் பர்னாந்து (OMI) - 31.07.1994 - கொழும்பு 
15. சங். புஷ்பராயன் விக்டோரியா (ம.கு) - 24.04.1995 - தூத்துக்குடி 
16. சங். ராஜ்குமார் பர்னாந்து (ச.ச) - 27.12.1996 - சென்னை 
17. சங். ஆரோக்கிய சீலன் கர்வாலோ (இர.ச) - 16.04.2005 - சென்னை
18. சங். அந்தோணிதாஸ் கர்வாலோ (ம.கு) - 23.04.2006 - சென்னை 
19. சங். ஜெயந்தன் கர்வாலோ (M.S.F) - 15.05.2007 - வேம்பாறு 
20. சங். லாரன்ஸ் பர்னாந்து (சே.ச) -14.09.2013 - மட்டக்களப்பு 

கன்னியர் (SISTERS):

1. சங். ஜான் ஆர்க் மேரி (மரியின் ஊழியர் சபை) – 20.12.1925 
2. சங். பிபியானா மேரி (மரியின் ஊழியர் சபை) – 21.12.1930 
3. சங். பிபியானா மேரி (மரியின் ஊழியர் சபை) – 23.12.1938 
4. சங். பெற்றோணிலா மேரி (மரியின் ஊழியர் சபை) – 24.12.1939 
5. சிலுவை முத்தம்மாள் – (திருச்சி அன்னம்மாள் சபையில் இணைந்து உடல்நலக் குறைவினால் கன்னியர் ஆகமுடியாமல் இறைதொண்டு புரிந்தார்) 
6. சங். தொமத்திலா மேரி (மரியின் ஊழியர் சபை) – 22.12.1940 
7. சங். கில்டா மேரி (மரியின் ஊழியர் சபை) – 22.12.1940 
8. சங். ஜூசெல் மேரி (புனித அமலோற்பவ அன்னை சபை) மதுரை - 31.05.1945 
9. சங். சலேற் மேரி (புனித அமலோற்பவ அன்னை சபை) மதுரை – 28.05.1950 
10. சங். சீலியா மேரி (மரியின் ஊழியர் சபை) – 19.12.1950 
11. சங். ஜோஸ்லின் மேரி (மரியின் ஊழியர் சபை) – 26.12.1950 
12. சங். நெல்லி ஜான்மேரி (புனித அமலோற்பவ அன்னை சபை) மதுரை – 01.06.1952 
13. சங். லில்லியா மேரி (மரியின் ஊழியர் சபை) – 26.12.1952 
14. சங். நேவிஸ் மேரி (புனித அமலோற்பவ அன்னை சபை) மதுரை – 01.06.1948 முதல் வார்த்தைப்பாடு கொடுத்து 12.07.1950 ஆம் ஆண்டு இறந்தார். 
15. சங். ரூபினா மேரி (மரியின் ஊழியர் சபை) – 23.12.1953 
16. சங். வியானி மேரி (மரியின் ஊழியர் சபை) – 23.12.1956 
17. சங். நொலாஸ் மேரி (மரியின் ஊழியர் சபை) – 23.12.1956 
18. சங். கபிரினா மேரி (மரியின் ஊழியர் சபை) – 23.12.1956 
19. சங். மரிய டிலக்டா (அப்போஸ்‌தலிக் கார்மல் சபை, கொழும்பு) – 22.05.1962 
20. சங். மேரி மோனிக்கா (நல்லாயன் சபை, கொழும்பு) – 21.12.1964 
21. சங். லில்லி மேரி (மரியின் ஊழியர் சபை) – 27.12.1964 
22. சங். பிரண்டா மேரி (மரியின் ஊழியர் சபை) – 28.05.1969 
23. சங். லூட்ஜெரா மேரி (மரியின் ஊழியர் சபை ) – 28.12.1969 
24. சங். பாலிற்றா மேரி (மரியின் ஊழியர் சபை) – 29.12.1970 
25. சங். மேரி ஜோயல்லா (அப்போஸ்‌தலிக் கார்மல் சபை, கொழும்பு) – 19.05.1973 
26. சங். வெனான்ஸியா மேரி (புனித வளனாரின் பிரான்சிஸ்கன் சபை) – 26.05.1973 
27. சங். யுஸ்டேசியா மேரி (மரியின் ஊழியர் சபை) – 25.05.1973 
28. சங். ஜான் மேரி (திருகுடும்பசபை) – 07.10.1977 
29. சங். லோரா மேரி (மரியின் ஊழியர் சபை) – 25.05.1978 
30. சங். கிறிஸ்டினா (நல்லாயன் சபை, கொழும்பு) – 16.12.1979 
31. சங். இன்பஜோதி (மரியின் ஊழியர் சபை) – 27.12.1979 
32. சங். கமலா மேரி (உயிர்த்த யேசு சபை, அனுராதபுரம்) – 15.08.1984 
33. சங். சந்திரமதி மேரி (மரியின் ஊழியர் சபை) – 29.05.1986 
34. சங். வனஜா (புனித அடைக்கல அன்னை சபை) – 09.05.1987 
35. சங். ஜோவிற்றா (பத்தாம் பத்திநாதர் சபை) – 08.09.2007 
36. சங். அகஸ்டினா மேரி (கார்மேல் சபை) – 17.12.2011 
37. சங். வினோதா மேரி (மரியின் ஊழியர் சபை) – 13.05.2012 
38. சங். அகத்தா அந்தோணி (ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபை) – 02.06.2012 ( முதல் வார்த்தைபாடு) 
39. சங். அல்ஃபோன்ஸ் அருள்மேரி (ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபை)
40. சங். ஆரோக்கியமேரி (S.A.T)

தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருவிழாவைக் குறித்து


கோடை அடிக்குதம்மா கொடிமரம் ஆடுதம்மா
குமுறிக் குதித்து வருமா
அலைகடலிலே சுழி புனலிலே - தோணி
கோண்டு செல்வோம் திடமாய்
மாிய மாதாவே என்று பிாியமுடனே விண்டு
மரக்கலம் ஓட்டல் நன்று
குறைவு வருமோ குறிதவறாமோ - மன
மகிழ்ச்சி அனுதின முண்டு
திருமந்திர நகாினிலே திங்களா வணியிலே
தேதியோ நைந்தினிலே
ஒரு குறைவிலா மாிதிருவிழா - பரதவர்
செல்லத் திருநாளிது.

- புலவர் M.A.பீாிஸ்

மாசிக்கருவாடு


மாசி மீன் என்பதனை ஆங்கிலத்தில் Maldivian fish என்கின்றனர் ஆனால் உண்மையில் அது நம் தமிழகத்தோடும் ஈழத்தோடும் அதிக தொடர்புடைய ஒரு வகை உயர்ரக மீனாகும். மாசி மீன் என்பதை சூரை மீன் (Pelagic fish) எனவும் வழங்கலாம். காரணம் இவை கடலின் அலை போல கூட்டமாக வாழும் ஒருவகை மீனினம்.

டூனா மற்றும் ஸ்கிப்ஜாக் மீன்களை போல நெருக்கமாக இவை நீந்துவதால் இவற்றை அறுவடை செய்வது மிக சுலபம். ஆழ்கடல் மீன் என்பதால் தமிழரின் கடல் வணிப வாழ்வியலோடு பழங்காலந்தொட்டே இந்த மாசிமீன் தொடர்புடையதாக இருந்து வருகிறது. தமிழர்களை போல மலையாளிகளும், சிங்களர்களும் மாலத்தீவு மக்களும் இம்மீனுக்கு அடிமையானவர்கள் ஆவர்.

பழங்காலத்தில் கடல் வாணிபத்தில் அதிகமாக ஈடுபட்டு வந்த நம் மக்களுக்கு மாதக்கணக்கான கடல் பிரயாணத்தின் போது உடன் எடுத்துச்செல்ல ஏதுவான உணவாக நெல்லுமா ஒரட்டியும் மாசிக்கருவாட்டுச்சம்பலும் மிகவும் உதவிகரமாக இருந்துள்ளது. நெல்லுமா ஒரட்டி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும் எனில் மாசிச்சம்பல் பத்து நாளுக்கு கூட கெடுவதில்லை. முந்தைய காலங்களில் மரக்கட்டை போல கடினமாக இருந்த அந்த கருவாடு தற்போது நவீனமாக அரைத்து்பொடியாக்கி எளிமையாக நம் கைகளில் கிடைக்கச்செய்துள்ளார்கள்.

மாசி மீனை கருவாடாக்குவதில் சில குறிப்பிட்ட நுணுக்கங்கள் உண்டு. பிடிபடும் மீன்களை தலை, குடல், இறக்கை, வால் மற்றும் மீனின் நடுமுள் ஆகியவற்றை நீக்கிவிட்டு அரைவேக்காடாக கொப்பரைகளில் உப்பு போட்டு வேக வைப்பார்கள். பின் வேக வைத்த மீனை இருட்டு அறை அல்லது கடற்கரை மண்ணில் குழி பறித்து கம்புகள் நட்டு அதில் குத்தி வைத்து வைக்கோல் போட்டு மூடி புகையில் பாதி அவிப்பார்கள், இதனை தான் வெள்ளைக்காரர்கள் Smoked Preservation என்கின்றனர். இவ்வாறு புகையில் வேகவைத்த மீன் அடுத்த மூன்று நாளுக்கு வெய்யிலில் காய வைக்கப்படும். முற்றிலுமாக நீர் வற்றி காய்ந்த பிறகு அந்த மீன் மரக்கட்டையை போல இறுகிப்போய்விடும். அதன் நிறமும் கொஞ்சம் உளுத்துப்போன மரக்கட்டை மாதிரியே மாறிவிடுகிறது. பிறகு அது இரண்டு வருடம் வரை கெடாது,நாற்றம் வராது. அதன் சுவையும் அலாதியாக கூடிவிடும்.

தமிழகத்தின் கடற்கரை மக்களுக்கு சூரை மீன், வாளை மீன், சீலா மீன் (நெய்மீன்) போன்றவை பச்சை மீனாக உண்பதை விடவும், இப்படி கருவாடாக மாற்றி உண்பதே மிக பிடிக்கும். விலை உயர்ந்த மீன் வகைகளை கருவாடாக மாற்றி, சீசன் மாத்திரமல்லாது வருடம் முழுக்க உண்ணும் பழக்கம் அவர்களிடத்தில் உண்டு. கருவாடு என்பது தமிழர்கள், இந்தியர்கள் உணவு என்பதை மீறி இங்கிலாந்து முதல் ஜப்பான் வரையிலும் ஒரு உன்னத உணவாக கொண்டு சேர்த்த பெருமை தமிழர்களுக்கு உண்டு.

பலநாட்கள் கப்பல் பிரயாணம் செய்வோருக்கு ஏதுவான உணவாக ஒரொட்டியும் மாசி சம்பலும் கை கொடுக்கும் என்றால் அது மிகையல்ல. புளியிட்டு தயாராக்கப்படும் உணவுகள் ஒரு வாரம்வரை கெடுவதில்லை அதுபோலத்தான் இந்த மாசி கருவாடும்.

மாசி சம்பல் செய்முறை:
(Raw chambal)

மாசி துண்டை நன்றாக அம்மியில் தட்டி, காய்ந்த மிளகாய் அதனுடன் சிறிய வெங்காயம் நறுக்கி போட்டு கொஞ்சமாக தேங்காய் துருவி அனைத்தையும் சேர்த்து பிசைந்து உப்புடன் சில சொட்டுகள் எலும்பிச்சை சாறு சேர்ந்து கருவேப்பிலையுடன் சேர்த்து இறுதியில் கிடைப்பதே மாசி சம்பல் ஆகும்.

Cooked chambal:

வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி/ கொஞ்சம் அம்மியில் நசுக்கி, கடாயில் எண்ணெய் விட்டு ஒரு சிட்டிகை சீரகம் பொறிய விட்டு, வெங்காயம் தக்காளியை போட்டு அதில் கொஞ்சம் மிளகாய்ப்பொடி, உப்புத்தூள் தூவி தண்ணீர் சேர்க்காமல் மீதமான தீயில் வேக வைத்த பிறகு இறுதியாக மாசிப்பொடியை தூவி சிறிது நேரம் பிரட்டியெடுத்தால் நாவிற்கு சுவையான சம்பல் ரெடி. ஒரட்டி மாத்திரமல்லாது, இட்லி, இடியப்பம், ஆப்பம், தோசை மற்றும் சாம்பார் சாதம், ரசம் சாதம் இவற்றுக்கும் சக்கையாக பொறுந்தும் ஒரு சைடிஷ் இது.

தமிழர்களுடன் தொடர்புடைய மலேசிய, இந்தோனேசிய, தாய்லாந்து மற்றும் கொரிய மக்களுக்கும் இந்த சம்பல் நாவில் எச்சில் ஊறச்செய்யும் ஒரு விருப்பமான பதார்த்தம் ஆகும். இதன் தயாரிக்கும் முறை இப்போது வெவ்வேறாக மாறியிருந்தாலும் அதன் தேவை எப்போதும் ஒரே போலவே இருந்து வருகிறது. மற்ற கருவாட்டு உணவுகளை அதன் நாற்றம் காரணமாக உண்ண விரும்பாத குழந்தைகள் கூட இந்த மாசிக்கருவாட்டினை வெருப்பதில்லை.

வெளிநாட்டுவாசிகளுக்கு சால்மன் மீன் தான் விலையுயர்ந்தது என்றால் நமக்கு இந்த மாசி மீன் தான் விலையுயர்ந்தது. அவர்கள் குட்டி குட்டி மஞ்சள் டூனா மீன்களை சார்டின்களாக மாற்றியதற்கு முன்னரே நாம் மாசி மீன்களை வைத்து வெளுத்து வாங்கியவர்கள்.

காவிரிபூம்பட்டின பண்டகசாலை

வான்முகந்தநீர் மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தின்று நீர்ப்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போரேறி
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரையாடு வருடைத் தோற்றம் போலக்
கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்ற
ஏழகத் தகரோடு உகளும் முன்றில்

பட்டினப்பாலை - 14

தெளிவுரை:

மேகங்கள் கடலில் இருந்து எடுத்த நீரை மலையில் சேர்த்தன அந்நீர் மீண்டும் கடலிலே சேர்ந்து, அது போல் கடலில் வந்த பொருட்களை நிலத்தில் இறக்கியும், நிலத்திலிருந்து வந்த பொருட்களை நீரில் செல்லும் கப்பல்களில் ஏற்றியும் பரப்பினர், அங்கணம் வந்த பொருட்கள் அளந்து அறிய இயலாத பல பொருட்கள் வந்திருந்தன, அந்த பொருட்களை கடுமையான காவல் பொருந்திய சுங்க சாவடியில் சோழரின் புலிச்சின்னம் பொறித்து வெளியே அனுப்பினர், மதிப்பு மிக்க, கிடைத்தற்கறிய பொருட்கள் மூங்கில் கூடைகளில் மலை போல் குவித்து வைக்கப்பட்டன, அம்மலையில் மேகங்கள் தவழ்வது போல் வருடை மான்கள் இருந்தன, கூர்ந்த நகங்களை கொண்ட ஆண்நாய்களுடன், ஆட்டு கிடாய்களுடன் பண்டக சாலையின் முன்புறம் தாவி குதித்து விளையாடின.

தமிழ் இலக்கியக் குறிப்புகளில் யவனர்

1. கள்ளி அம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
(அகநானூறு, 149)


2. கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறுமீனின் பையத் தோன்றும்
(பெரும் பாணாற்றுப் படை, வரி 316—319)

3. இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு
பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற்கொளீஇ
(பதிற்றுப் பத்து பதிகம், இரண்டாம் பத்து)

4. வன்சொல் யவனர் வள நாடு ஆண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோன் ஆயினும்
(நடுநற்காதையில் மாடலன் சொன்னது, சிலப்பதிகாரம்)

5. கடிமதில் வாயில் காவலிற் சிறந்த
அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு
(சிலப்பதிகாரம். ஊர்காண். 66 - 67)

6. பயனறவு அறியா யவனர் இருக்கையும், 
கலந்தரு திருவின் புலம் பெயர் மாக்கள் 
கலந்திருந்து உலையும் இலங்கு நீர் வரைப்பு 
(சிலப்பதிகாரம்: 5 , 10 - 12) 

7. மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட புணை மான் நல் இல்
திருமணி விளக்கம் காட்டி
(முல்லைப் பாட்டு, வரி 61-64)

8. யவனர் நன்கலம் தந்த தண்கழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து
(புற நானூறு பாடல் 56)

9. மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி
கொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினை
(மணிமேகலை : 19 :107 - 109 )

10. மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்கு வெருவருங் தோற்றத்து
வலிபுணரி யாக்கை வன்கண் யவனர்
(முல்லைப்பாட்டு . 59 - 61)

சங்க இலக்கியத்தில் கடல் வணிகம்

தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கீழை மற்றும் மேலை நாட்டினரோடு கடல் வணிகம் செய்து வந்துள்ளனர். இவற்றிற்கு வரலாற்றுச் சான்றுகளும், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகளும், கல்வெட்டுச் சான்றுகளும் ஆதாரங்களாக அமைந்துள்ளனர்.சங்க இலக்கியங்களும் தமிழர்கள் வேறு நாட்டினரோடு கடல் வணிகம் கொண்டிருந்தனர் என்பதற்குப் பல்வேறு சான்றுகள் தருவதை பின்வருமாறு காணலாம்.

நற்றிணைப் பாடலொன்றில் (295: 5, 6) பல்வேறு நாட்டிலிருந்தும் தமிழகத்தின் துறைமுகங்களுக்கு நாவாய்கள் வந்தன என்பதை அறிய முடிகின்றது!

"வேறு பன்னாடிற் காறர வந்த
பல வினை நாவாய் தோன்றும் பெருத்துன"
(நற்றினை 295 - 5 - 6)

அக்காலத்தில் தமிழகத்தில் சிறப்புற்றிருந்த, முத்தும், பவளமும், சங்கும், ஆரமும், அகிலும், மிளகும், வெண் துகிலும், பிற நாட்டினரின் மனதைக் குறிப்பாகக் கிரேக்கர், உரோமர் மனதை அதிகம் கவர்ந்தன. இவர்களைத் தமிழ் இலக்கியம் யவனர் என அழைக்கின்றது! அவர்கள் பொன்னைக் கொண்டு வந்து தமிழகத்திற்குக் கொடுத்துவிட்டு, அதற்குப் பண்டமாற்றாக மிளகை எடுத்துச் சென்றனர் என்ற செய்தி அகநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலம் (149: 9,10) தெரிய வருகின்றது.

" யவனர் தந்த வினைமா ணன் கலம்
பொனனொடு வந்து கறியொடு பெயரும் "
அகநானுறு (149, 9, 10)

இதனால் பொன்னும் மிளகும் பண்டமாற்றாகப் பயன்படுத்தப்பட்டதை பின்வருமாறு அறியலாம்! நெடிய பாய்மரத்தோடு கூடிய மரக்கலங்கள் பொன்மிகுதற்குக் காரணமாகிய சிறந்த பொருட்களைக் கொண்டு வந்தன என்றும், துறைமுகங்களில் மேலை நாட்டுக் குதிரைகளும், பிற பொருட்களும் மரக்கலங்களில் வந்து இறங்கின என்றும் கீழ்வரும் அடிகளால் அறியலாம்!

சோழ நாடு

சோழநாட்டுத் துறைமுகப்பட்டினமாகிய பூம்புகார் கடலோடு கலக்குமிடத்தில் அமைந்துள்ளது! இங்குப் பெரிய கப்பல்கள் பிற நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்து இறக்கின என்றும், அக்கப்பலின் பாய்கள் விரித்த நிலையிலே இருந்தன என்றும் புறநானூற்றுப் பாடல்வரிகள் (30:10-14) கூறுகின்றன! அந்நிய நாடுகளிலிருந்து பல பண்டங்கள் கப்பல் வழியாக காவிரிப்பூம்பட்டினத்தில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், பல பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் பட்டினப்பாலை வரிகள் (125-141) குறிப்பிடுகின்றன. .

பல்பொருளும் குவிந்து கிடக்கும் காவிரிப்பூம்பட்டனத்துப் பண்டகசாலை...

வெளியே அனுப்புவதற்காகக் குவிந்து கிடக்கும் பண்ட மூட்டைகளின் மீது சோழனுடைய புலி வடிவம் முத்திரையிடப்பட்டு இருந்தன! புலி முத்திரையிடப்பட்ட பண்டங்கள் தான் வெளியேற முடியும். முத்திரையிடப்படாத பண்டங்கள் வெளியேற முடியாது.

ஏற்றுமதியும், இறக்குமதியும் இவ்வளவு கட்டுக் காவலுடன் அக்காலத்திலே தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன என்பதற்கு இதுவே நல்ல சான்றாகும்.இந்த ஏற்றுமதி இறக்குமதிகளைக் குறித்து எவ்வளவு அழகாக உவமானத்துடன் பட்டினப்பாலை உரைத்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்...

மழைக்காலத்தில் மேகங்கள் கடலிலே முகந்த நீரைக் கொண்டு போய் மலைகளிலே பெய்விக்கின்றன. மலைகளிலே பெய்த நீர் அம்மலைகளிலேயே தங்க விடுவதில்லை. அந்த நீரை ஆறுகளும், கால்வாய்களும் கடலிலே கொண்டு போய்ச் சேர்க்கின்றன.இவ்வாறு கடல்நீர் மலையேறுதலும், மலைநீர் கடற்பாய்தலும் மாரிக்காலத்தில் நடைபெறும் காட்சி.

இதைப்போன்று காவிரிப்பூம்பட்டினத்திலே எப்பொழுதும் கடல் வழியாகப் பண்டங்கள் வந்து நிலத்திலே இறங்கிக் கொண்டிருக்கின்றன. நிலத்தின் வழியாகப் பல பண்டங்கள் நீரில் மிதக்கும் கப்பல்களிலே ஏற்றப்பட்டன! பட்டினப்பாலை பாடல் வரிகள் 185-193 வாயிலாக:

குதிரை, மிளகு, மணி, பொன், அகில், முத்து, ஆரம், துகில், ஈழ நாட்டு உணவு போன்ற பொருட்கள், காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்களாக விளங்கிய செய்தியை அறிய முடிகின்றது!

மேலே கூறியவற்றைக் கொண்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காவிரிப்பூம்பட்டினம் ஒரு வணிக நகரமாக விளங்கியதை அறியலாம்...

பூம்புகாரின் செல்வ வளம் நிறைந்த வீதிகள்...

தொண்டை நாட்டிலுள்ள நீர்ப்பெயற்றுத் துறையில் வெள்ளிய தலையாட்டத்தையுடைய குதிரைகளையும், வடநாட்டு நுகர் பொருள்களையும் ஏற்றி வந்த நாவாய்கள் நிரம்பக் காணப்பட்டதாகப் பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (319-321) கூறுகின்றன!

சேர நாடு

தமிழகத்தின் மேற்குக் கடற்கரையாகிய சேர நாட்டுக் கடற்கரையில் முசிறி துறைமுகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்! இங்கு மிளகு பெருமளவில் கிடைத்தது. இத்துறைமுகத்தில் நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி பற்றிய செய்தியைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று பின்வருமாறு வருணிக்கின்றது!

மீன்களை விற்று அதற்குப் பண்டமாற்றாகப் பெற்ற நெற்குவியல்கள் காண்போர் மயங்கும் வகையில் கழிகளில் இயங்கும் தோணிகள் மூலம் கரைக்குக் கொண்டு வரப்பட்டன. மலையில் விளைந்த பொருள்களையும் கடலிலிருந்து கிடைத்த பொருள்களையும் கலந்து பாணர்களுக்கு வழங்கும் முசிறி நகரச் சிறப்பையும் காணலாம்!

பாண்டிய நாடு :

வெளிநாட்டுக்குத் தமிழகத்திலிருந்து ஏற்றுமதியான பொருட்களில் மிளகைப்போல் சிறந்தது முத்து ஆகும். பாண்டிய நாட்டின் வளம் பொருந்திய துறைமுகமாகிய கொற்கையில் முத்துக் குளித்தல் சங்ககாலத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றதை அகநானூறு (130:9-11) எடுத்து இயம்புகின்றது! இந்தியாவிலே முத்துக் குளிக்குந் தொழில் பாண்டிய நாட்டிலுள்ள கொற்கையிலே சிறப்புற்றிருந்தது. முத்துக்குளிக்கும் இத்தொழில் தமிழகத்தில் உயர்தரமான ஓடங்களையும், தோணிகளையும் நாவாய்களையும் கட்டுவதற்கு ஒரு காரணமாகவும் விளங்கியது! கொற்கை.

அதோடு யவனர்கள் பாண்டிய நாட்டைத் தேடித் தங்கள் கப்பல்களில் பொற்காசுகளையும் பொற்கட்டிகளையும் ஏற்றிக்கொண்டு வரவும் காரணமாய் இருந்தது!.  இதுகாறும் கூறியவற்றால் தமிழர் சங்க காலத்துக்கு முன்பும் சங்க காலத்திலும் கடல் வணிகத்தில் சிறந்திருந்தனர் என்பது தெளிவாகின்றது!

நன்றி: தங்கபழனி 

நடுக்கல் வழிபாட்டில் பரதவர்


கிடுகுநிரைத் தெஃகூன்றி
நடுகல்லின் அரண்போல
நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய
குறுங்கூரைக் குடிநாப்பண்
நிலவடைந்த இருள்போல
வலையுணங்கு மணல்முன்றில்
வீழ்த்தாழைத் தாட்டழ்ந்த
வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர்
சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினால்
மடற்றாழை மலர்மலைந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை இரும்பரதவர
பைந்தழைமா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது
உவவுமடிந் துண்டாடியும்

பட்டினப்பாலை - 10

தெளிவுரை:

காவிரி பூம்பட்டினத்து பரதவர்கள் நடுக்கற்களை நட்டு வைத்து அதனைச்சுற்றி கேடயங்களையும், வேல்களையும் நட்டுவைப்பர், தாழ்ந்த கூரைகளை கொண்ட வீடுகளில் மீன் தூண்டில்களை வேல் போல் நட்டு வைத்து அவ்வீட்டின் முன்புறம் வலைகளை உலர்த்தி வைப்பர். இக்காட்சி நிலவின் இருட்டை போன்றிருந்தது  விழுதுள்ள தாழை மரத்தின் அடியில் வளரந்த குளிந்த பூவான வெண்டாளியை அணிந்திருந்தனர், கருவூற்ற சுறா மீனின் கொம்பை நட்டு தம் வீட்டிலிருந்தபடி தெய்வத்தை வணங்கினர், தாழை மலரைச்சூடி, பனை கள்ளை குடித்து மென்மையான தலையை உடைய கருத்த பரதவர்கள், பசுந்தழைகளை உடுத்திய கரிய பெண்களுடன் முழுமதிநாளில், பரந்த இருளை உடைய கடலில் மீனை வேட்டையாட செல்லாமல் தாம் விரும்பிய உணவை உண்டும், விளையாடியும் கழித்தனர்.

About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com