Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

பரவர் புராணம்

திரு. த. அருளப்பமுதலியார் அவர்களால் 

1909ஆம் ஆண்டு இயற்றப்பட்ட,

திங்களின்மர பின்வரு சீரியர்
பங்க மில்லாப் பரவர் சரித்திரமான

பரவர் புராணம்

பாண்டியன்வம்ச பாரம்பரை

Rare Book Collection

பாண்டியன்வம்ச பாரம்பரை 

- ஸ்ரீமத் சுவர்னம் எட்வார்ட்

பாண்டியாபதியின் பட்டாபிஷேக கீர்த்தனை


சி.சி.தொன் சூசை அந்தோனி தெக்குருஸ் வாஸ் பல்தான் பரதவர்ம பாண்டியன் - (1839 - 1856) என்ற பாண்டியாபதியின் பட்டாபிஷேக முகூர்த்தத்தில் ராஜா வாசல் வித்வான் லூயிஸ் ஆனப்பு லேயோ பரத பண்டிதர் அவர்கள் பாடிய கீர்த்தனை.....

(தரு. இராகம் - அசாவேரி. ஆதிதாளம் )

பல்லவி

பரத குல திலக புரவல னென வரு:
பாக்ய லட்சுமி பாண்ட்யா!

அநுபல்லவி

வரத குணன் தென் கஸ்பார் அந்தோனி தெக் குருசு
வாசுக் கொறேய்ரா மஹா ராஜன் வரத்தில் வந்த ( பரத)

சரணங்கள்

1)அட்டதிக் கெங்கும் புக ழெட்டு மிங்கிலீஷ் கொம்பன்யர்
அநவரதமு மகிழனுகூலா !
துட்டர் தமைச் செயிக்குந் துரை லாற்டாம்,
லாற்டெல் பின்ஸ்றன்!
இட்டமா யபிடேகம் பெற்ற கெம்பீரதீரா!

2) கன்ன னெனு மெஸ்க் கோயே,
மன்னன் ஜோ ஸேப்பு வாய்க்கட்
கருத்தி லிசை மஹத்வ கன சிலாக்யா!
நன்னயஞ் சேர் பரத ரிந்நிலத் தெவருக்கும்!
அண்ணலெனப் பேர்பெற்ற கன்னல் மதுரவாயா ! ( பரத)

3) இலகும் மணவை நகர் தலமாம் இன்பகவிஞ!
னெழில் சேர் புத்திரன் றனக் கிரங்கிக் கிருபைகள் செய்
பல புய கேசரி! எனப் பலர் துதித் திடும்
சிலைமத னாந் தொன் சூசை அந்தோனி,
வாஸ் பல்தான் வேள் !

பொருள்

வரதகுணன் - உபகாரகுண முடையவர்

வாழ்க பரதகுலம்

மன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு


இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியை மன்னார் வளைகுடா எனப்படுகிறது. ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பாம்பன் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகள் அமைந்து உள்ளன.

இந்த மன்னார் வளைகுடா பகுதி தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான முள்தோலிகள், சங்கு சிப்பிகள், கணுக்காலிகள், திமிங்கிலங்கள், கண்களைக் கவரும் விதத்தில் வண்ண மீன்கள், பாலூட்டி வகையான கடல் பசுக்கள், கடல் அட்டைகள், கடல் பாம்புகள், கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள், பவள பாறைகள் என இங்கு மொத்தம் 4 ஆயிரத்து 223 கடல்வாழ் உயிரினங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு வாழ்ந்து வருகின்றது.

மன்னார் வளைகுடாவில் தற்போதுள்ள கடல்வாழ் உயிரினங்களின் குறித்து விரிவான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு, அந்த ஆய்வை நடத்த தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இனைதொடர்ந்து சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் நபார்டு வங்கி மேற்பார்வையில் ஆய்வை மேற்கொண்டனர்.

ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கடலுக்கு அடியில் கணக்கெடுப்பு நடத்தினர். ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகள் 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டு, அவைகள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 11 கடல் பஞ்சு இனங்கள், 14 கடின பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 2 மீன் இனங்கள், 17 மெல்லிய பவளப்பாறை இனங்கள்,16 சங்கு இனங்கள் என 62 புதிதான உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவை தவிர 50-க்கும் மேற்பட்ட அடையாளம் காண முடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளது.இதில் 39 வடக்கு பகுதியிலும், 11 தெற்குப் பகுதியிலும் காணப்பட்டன.

இவைகளை அடையாளம் காண சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் முயன்றுவருகிறோம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரினங்கள் அனைத்தும் மன்னார் வளைகுடாவுக்கு புதியவை. கடந்த 2003-2005-ல் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களையும், தற்போதைய ஆய்வுத் தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் வளத்தில் பருவநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பேட்டர்சன் எட்வர்ட். ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை 345 கி.மீ. தூரம் உள்ள மன்னார் வளைகுடா பகுதி முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2003 முதல் 2005 வரை மன்னார் வளைகுடா பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது தூத்துக்குடி முதல் பாம்பன் வரையிலான பகுதியில் பவளப்பாறைகளைப் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு சில அடிப்படைத் தகவல்கள் மட்டும் சேகரிக்கப்பட்டன.அதனை தொடர்ந்து ஆண்டுதோறும் மன்னார் வளைகுடா பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

ஆனால், தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை இதுவரை பெரிதாக ஆய்வுகள் எதுவும்; நடத்தபடாததால்.இந்தப் பகுதிகளில் தற்போது விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களையும், தற்போதைய ஆய்வுத் தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் வளத்தில் பருவநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது என்றார்.

இந்த ஆய்வு குறித்து சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியாளர் திரவியராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில் பறவைகள் மற்றும் விலங்குகளை ஆண்டு ஒன்றுக்கு கணக்கெடுப்பு நடத்துவது போல் கடல் வாழ் உயிரினங்களையும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், காரணம் பருவநிலை மாற்றம்,புவி வெப்பமயமாதல் ஆகிய காரணங்களால் கடல் வாழ் உயிரினங்கள் எண்ணிக்கை குறித்து தெரிய வரும்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கணகெடுப்பில் 4,223 வகையான கடல்வாழ் தாவரம் மற்றும் விலங்கினங்கள், கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தாங்கள் கடலுக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்த போது 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், 77 புதிய பவளப்பாறை திட்டுகள் மற்றும் 39 புதிய கடல்புல் திட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.மேலும் 50-க்கும் மேற்பட்ட அடையாளம் காணமுடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மன்னார் வளைகுடாவின் அனைத்து கடல் பகுதிகளிளும் கண்காணிக்க வேண்டும் அப்படி கண்காணித்தால் மட்டும்மே கடலில் என்ன மாற்றம்,பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தெரிய வரும்,தற்போது நாங்கள் கடலுக்கு அடியில் நடத்திய கணக்கெடுப்பில் தூத்துக்குடி முதல் ராமேஸ்வரம் வரை அடர்த்தியான கடல் புல் திட்டுகள்; இருப்பது தெரியவந்துள்ளது அதே போல் 13 கடல் புல் வகைகளும் முன்னதான கண்டறியப்பட்டுள்ளது என கடல் ஆராய்சியாளர் மேத்யூ பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கடலுக்கு அடியில் ஆய்வு செய்வதற்க்கு மிகவும் முக்கியமான ஸ்கூபா டைவிங் குறித்து தினேஷ்குமார் பிபிசி தமிழிடம் பேசிய போது: கடல் வள ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியமானது ஸ்கூபா டைவிங். ஸ்கூபா டைவிங் என்பது ஒரு சாகச விளையாட்டு என்பதால் உடல் அளவிலும், மனதளவிலும் உறுதியாக இருத்தல் வேண்டும். கடலில் அதிக காற்று மற்றும் மழை காலங்களிலும் இந்த இந்த ஸ்கூபா டைவிங் செய்யலாம். கடலுக்கு அடியில் நடத்தப்படும் ஆய்வுக்கு ஸ்கூபா டைவிங் அவசியமான ஒன்று என்றார்.

Thanks: www.bbc.com

கப்பலும் கட்டுமரமும்

2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி ஒன்றரைக்கோடி இந்திய மீனவர்கள் ஏறத்தாழ இரண்டு லட்சத்து எட்டாயிரம் (2,08,000) பாரம்பரிய மீன்பிடிப் படகுகளையும், ஐம்பத்தையாயிரம் (50,000) இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளையும் ஆயிரத்து இருநூற்று ஐம்பது (1,500) மின் விசைப் படகுகளையும், நூறு (100) ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

பழங்காலத்தில் அருகிலிருக்கின்ற தீவுகளுக்குச் சென்று வருவதற்காக மனிதன் சிறு படகுகளைப் பயன்படுத்தினான். மரத்தைக் குடைந்து உருவாக்கப்பட்ட அந்த சிறு படகு ஒருவர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் இருந்தது.அந்தப் படகுகளை அவர்கள் ஆழமற்ற நீர்நிலைகளில் மீன்பிடிக்கவும் பயன்படுத்தினார்கள். இன்றும் இத்தகைய படகுகள் அதன் ஆரம்ப காலத் தோற்றத்திலேயே ஆஸ்திரேலிய மற்றும் பாலினேசியப் பழங்குடிகளால் பயன்படுத்தப்படுகின்றன.

காற்றின் ஆற்றலை அறிந்து கொண்ட பின்னர் மனிதன் காற்றின் போக்கிற்கு ஏற்றவாறு நெடுந்தொலைவு பயணம் செய்யும் வகையில் பாய்மரத்தை உருவாக்கினான். 'தோணி' என்று தென்னிந்திய மக்களால் அழைக்கப்படுகின்ற ஒருவகைப் படகு இந்தியத் துணைக்கண்டம், கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை, அரேபியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது.

மிகப் பழமையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இந்த வகையான படகுகளைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடக்கின்றன. இன்னொரு பண்டைய தமிழ் இலக்கிய நூலான 'சேந்தன் திவாகரம்' நீண்ட கடல் பயணம் செல்லும் மரக்கலங்களை வகைப்படுத்துகிறது :-

1. வங்கம்,
2. பாதை,
3. தோணி,
4. யானம்,
5. தங்கு,
6. மதலை,
7. திமில்,
8. பாறு ,
9. சதா
10. போதன்தொல்லை
என்று பத்து வகைப்படும் என குறிக்கிறது
.
தோணியின் மற்ற பெயர்களாக பகடு, பஃரி, அம்பி, ஓடம், திமிலை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இது தவிர மலையாள மொழியில் வல்லம், வத்தல், வஞ்சி என்று படகுகளைக் குறிக்கின்ற சொற்களெல்லாம் பண்டைய தமிழ்ச் சொற்களேயாகும். சரித்திர காலத்துக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வரும் இன்னொரு வகையான படகு தமிழ் மொழியில் ‘பரிசல் ' என்று அழைக்கப்படுகிறது. இது பிரம்பால் பின்னப்பட்ட கூடைபோல் இருக்கும். இன்றளவும் இது பயன்பாட்டில் உள்ளது.

அகநாநூறின் சில செய்யுள்கள் தமிழர்களின் தோணிகள் பெரியதாகவும், அதிக பயணிகளையும் பொருட்களையும் ஏற்றிச் செல்லத்தக்கதாகவும் இருந்ததாகச் சொல்கிறது. வழக்கமாக வேம்பு, நாவல், இலுப்பை ஆகிய மரங்களை நீரில் மூழ்கியிருக்கின்ற தோணியின் அடிப்பாகங்களைக் கட்டுவதற்கும், தேக்கு வெண் தேக்கு மரங்களை பக்கவாட்டு, மேற்பகுதிகளை அமைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

'தோ' [Dhow] என்று அழைக்கப்படுகின்ற அரேபிய நாட்டுப் பாரம்பரியக் கப்பல் தோற்றத்திலும் உச்சரிப்பிலும் தமிழ்நாட்டுத் தோணியை ஒத்திருக்கிறது. சாதரணமாக தோணி ஒரு பாய்மரத்தைக் கொண்டது என்றாலும் பல பாய்மரங்கள் கொண்ட தோணிகளும் பயன்பாட்டில் இருந்து வந்தன. இந்த வகையிலான தோணிகள் பழங்காலத்தில் இந்தியா, பாகிஸ்தான், அரேபியா மற்றும் ஆப்பிரிக்கக் கிழக்குக் கடற்கரைகளில் புழங்கி வந்தன.

சிறிய அளவிலான தோணிகள் பன்னிரண்டு பணியாளர்களையும் பெரிய தோணிகள் முப்பது பணியாளர்களையும் கொண்டிருந்தன. இவை நீண்ட அடிப்பாகத்தையும் 300 முதல் 500 டன் எடையையும் கொண்டிருந்தன. ஒரு உடைந்த வெண்கல மணியொன்று 1836ஆம் ஆண்டில் 'வில்லியம் கொலேன்சோ' [William Colenso] என்ற பாதிரியாரால் நியூசிலாந்து நாட்டின் வடபகுதியில் 'வாங்கரெய்' [Whangarei] என்ற இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. அது மாவோரி பூர்வ குடிகளால் உருளைக்கிழங்கு வேக வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அந்த மணியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவை தமிழ் எழுத்துக்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டன. 'முகையதீன் பக்சின் கப்பலின் மணி' என்று அவை மொழி பெயர்க்கப்பட்டன. அந்த மணி ஐநூறு ஆண்டுகள் பழமையானது. அந்த மணிக்கு வில்லியம் கொலென்சொ 'தமிழ் மணி' என்று பெயரிட்டார்.

சீன நாட்டின் காண்டன் [Conton] பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுக் குறிப்புகள் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் நீண்ட பயணம் செய்திருப்பதை உணர்த்துகின்றன. தமிழ் மக்கள் உலகுக்கு அளித்த மற்றுமொரு மதிப்பிட முடியாத பரிசு 'கட்டுமரம்'. இரண்டு அல்லது மூன்று மரத் துண்டுகளை இணைத்து கயிறால் கட்டப்பட்டதுதான் கட்டுமரம். இது ஒரு மனிதனை மட்டுமே சுமக்கக் கூடிய அளவுக்கு சிறியது. அதில் இருப்பவரின் கால்கள் கூட பெரும்பாலும் நீரில்தான் இருக்கும்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 'பரவர்கள்' என்ற மீனவ மக்களே கட்டுமரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்ப காலங்களில் கட்டுமரங்களைச் செலுத்த துடுப்புகள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் நீண்ட பயணம் செய்யும் நோக்கத்தில் பாய்மரங்களும் இணைக்கப்பட்டன. இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்ற 'கட்டமரான்' [Cattamaran] என்ற ஆங்கிலச் சொல் இணைத்துக் கட்டப்பட்ட மரம் என்று பொருள் தருகின்ற கட்டுமரம் என்ற வார்த்தையிலிருந்தே வந்தது.

தமிழ்நாட்டுக் கட்டுமரங்கள் தம் பழைய அமைப்பிலிருந்து கொஞ்சமும் மாறாமலேயே இருக்கின்றன. கட்டுமரங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அடிப்பாகங்களைக் கொண்டவை. தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள பல்வேறு வகையான கட்டுமரங்கள் பாலினேசியப் பூர்வகுடி மக்களின் கட்டுமர அமைப்பினை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் கட்டுமரம் என்ற தமிழ்ப் பெயராலேயே அழைக்கப் படுகின்றன. எனவே, இந்த கட்டுமரம் தமிழர்களின் கண்டுபிடிப்பு என்பதை நிறுவ முடியும்.

பதினைந்தாம் நூற்றாண்டுக் காலத்தில், தமிழ்நாட்டில், சோழ மன்னர்கள் பலம் வாய்ந்த கடற்படையைக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பெரும்பான்மையான கப்பல்கள் கட்டுமர செயல்பாட்டின் அடிப்படையிலேயே உருவாக்கப் பட்டிருந்தன.

சோழர்களின் சில கப்பல்களின் சிறப்புகளைக் காண்போம்.

• 'தரணி' - ஆழ்கடல் போர்களில் இந்த வகைக் கப்பல்கள் பயன் படுத்தப்பட்டன

• 'லோலா' - காவல் பணிகளுக்கும் சிறு அளவிலான தாக்குதல்களுக்கும் இவை பயன்பட்டன.

• 'திரிசடை'  -  இது மூன்று பாய் மரங்களைக் கொண்டிருந்தது. வேகம் குறைவு என்றாலும் இந்தக் கப்பல் கனரக ஆயுதங்களைத் தாங்கி பல்முனைத் தாக்குதல்களில் பயன்படுத்தப் பட்டது.

ராஜ ராஜ சோழன் தனது கப்பல்களைக் கட்டும் பணியில் அரேபிய மற்றும் சீன நாட்டுப் பணியாளர்களை அமர்த்தியிருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தீப்பந்துகளை வீசக்கூடிய சீன நாட்டுப் பொறியமைப்பை சோழக் கப்பல்கள் பெற்றிருந்தன. இந்த மாதிரியான சிறப்புகளால் சோழர்கள் இலங்கை, மலேயா, இந்தோனேசியா, கம்போடியா ஆகிய நாடுகளின் மீது கடல்வழி படையெடுப்புகளை நடத்தி கி.பி 984க்கும் 1042க்கும் இடைப்பட்ட காலங்களில் அந்நாடுகளை ஆட்சி செய்தார்கள்.

சிறப்பான கடற்படையைக் கொண்டிருந்த ராஜேந்திர சோழன் கி.பி 1007 ஆம் ஆண்டில் விஜய நகரப் பேரரசின் மீது படையெடுத்தான். எதிரியின் கடற்படையை அழித்தது மட்டுமல்லாமல் 'கெடா ' பகுதியைக் கைப்பற்றி மலேயா தீபகற்பத்தில் சோழ ஆட்சியையும் நிறுவினான். பூம்புகார் நகரிலிருந்து பத்தொன்பது கல் தொலைவில் கடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட கப்பலின் சிதைவுகள் கி.பி 200- 848க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த சோழர்களின் கப்பலைச் சேர்ந்தவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இந்தச் சிதைவுகளை மாதிரியாகக் கொண்டு அந்தக் கப்பலின் அடிப்பாகத்தைச் செய்து அதை திருநெல்வேலி கடல்சார் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளார்கள். சோழர் காலத்தைச் சேர்ந்த கப்பலின் உருவங்களைக் கொண்ட கற்சிற்பங்கள் கம்போடிய நாட்டு 'அங்கோர்வாட்' [Anghorvat] கோவிலிலும், இந்தோனேசிய 'போரோபுதுர்' [Poropudur] கோவிலிலும் இருக்கின்றன. இவை சோழர்களின் கப்பல் கட்டும் திறனை பறைசாற்றுகின்றன.

இந்தோனேசியாவிலுள்ள பாலித்தீவு இன்றளவிலும் அழியாது வேரூன்றிய தமிழ்க் கலாசாரத்தைக் கொண்டிருக்கிறது.

• எண்பத்தேழு கல் நீளமும் ஐம்பத்தாறு கல் அகலமும் மட்டுமே கொண்ட இத்தீவில் நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுக்குள்ளாக தமிழர்களால் கட்டப்பட்ட கோவில்கள் இரண்டாயிரம் உள்ளன.

• 'யோக்யகர்த்தா' [ Yogyakarta] நகரில் அமைந்துள்ள பிரம்பனான் கோவில் [Perumpanan] அங்கே ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களின் கட்டிடக் கலைத்திறனுக்கு ஒரு அழிக்க முடியாத ஆதாரமாகத் திகழ்கிறது.

பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்நாட்டு மரக்கலங்கள் எழுநூறு பேர் வரையில் ஏற்றிச் செல்லத்தக்கதாக இருந்தன. தமிழ் மக்கள் கப்பல் கட்டும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததையும் அவர்கள் சிறந்த மாலுமிகளாக இருந்ததையும் இது எடுத்தியம்புகிறது.

டைக்ரிஸ், யூப்ரடீஸ் நதிகளுக்கிடையே அமைக்கப்பட்ட சோழர்களின் குடியிருப்புகள் சோழதேசம் என்று அழைக்கப்பட்டன. காலப்போக்கில் சோழதேசம் என்ற சொல் உச்சரிப்பு மருவி 'சல்தே' [Chaldea ] என்றானது.

இறந்து பதம் செய்யப்பட்ட எகிப்தியர்களின் உடல்களில் [Mummy] இருந்த துணிகளில் இருந்த இந்தியச் சாயமும் [Indian ink], 'பிர்ஸ் நிம்ருட் ' [Pirs Nimrut] என்ற இடத்தில் இருந்த 'நெபுகட் நெஸ்ஸா [Nepukatnezza] மன்னனின் மாளிகையிலும் 'உர்' [Ur] என்ற இடத்தில் இருந்த நிலாக்கடவுள் கோவிலிலும் கண்டெடுக்கப்பட்ட தேக்கு மரத்துண்டுகளும் தமிழ் நாட்டிலிருந்தே கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இவைகளெல்லாம் மேற்கு நாடுகளுடனான தமிழர் வணிகத் தொடர்புகளை விளக்குகின்றன.

பண்டைய தமிழ் எழுத்துகள் பொறித்த சில உடைந்த பானைத் துண்டுகள் 'க்வாசிர் அல் க்வாடிம்' '[Quseir-al-Qadim] மற்றும் 'பெரினிகே' [Bereneke] ஆகிய எகிப்திய செங்கடல் துறைமுகங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இந்த எழுத்துக்கள் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இந்த எழுத்துக்கள் 'உறிப்பானை' என்ற தமிழ்ச் சொல்லைக் குறிக்கின்றன.

செங்கடல் வழியாக தமிழ் நாட்டுக்கும் ரோம் நகருக்கும் இடையே இருந்த வியாபாரத் தொடர்புகளுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் அழுத்தமான ஆதாரங்களாகத் திகழ்கின்றன. செங்கடல் பகுதிகளில் தமிழ் மொழியின் வளமைக்கு மற்றுமொரு சான்றும் உள்ளது.

'ஆக்ஸிரிங்கஸ் பேப்பிராய்' [Oxyrhynkas papyri] என்ற பண்டைய கிரேக்க மொழி நாடகத்தின் கதாபாத்திரங்கள் தமிழ் மொழியில் பேசியதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த உரையாடல்களில் ஏறத்தாழ 1800 கடல் சார்ந்த தமிழ் மொழி வார்த்தைகள் இருந்ததாக மொழி வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.

இது தவிர தென் அமெரிக்காவில் வாழ்ந்த புகழ் பெற்ற 'மாயன்' பூர்வகுடி மக்களின் முன்னோடிகள் உண்மையில் பண்டைக் காலத்து தமிழ்க் கடலோடிகளே என்ற கருத்தும் சரித்திர ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுகிறது. மாயன் மக்களின் கருத்த நிறமும், அவர்களுடைய கற்சிற்பங்களில் காணப்படும் தலைப்பாகை அணிந்த மாவுத்தர்களுடன் கூடிய இந்திய யானை உருவங்களும், தமிழ்நாட்டின் தாய விளையாட்டை ஒத்திருக்கும் அவர்களின் சித்திரங்களும், தமிழர்களின் கட்டிடக்கலையை ஒத்த அவர்களின் கல் கட்டுமானங்களும் இந்தக் கருத்துக்கு உறுதியான சான்று தருகின்றன

'மார்க்கோ போலோ' என்ற ஐரோப்பியக் கடலோடி 1292 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்தியக் கப்பல்களைப் பற்றிச் சொல்கிறார்.: -

'மரத்தால் அவை கட்டப்பட்டிருந்தன.ஒவ்வொரு பாகமும் நல்ல முறையில் பலகைகள் பொருத்தப்பட்டு இரும்பு ஆணிகளால் இணைக்கப்பட்டிருந்தன. காய்ந்த சுண்ணாம்பும் தாவர இழைகளும் கலந்த கலவையில் ஏதோ ஒரு மரத்திலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் சேர்க்கப்பட்டு உறுதியாக்கப்பட்ட பூச்சு கப்பலின் அடிப்பாகத்தில் பூசப்பட்டிருந்தது.'

பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க்கப்பல்கள் அடுக்குகளாகக் கட்டப்பட்டன. கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்தால் கூட பாதிப்பு எதுவுமின்றி தொடர்ந்து பயணம் செய்யும் வகையில் அது இருந்தது. தோணி, கட்டுமரம் ஆகியவற்றின் கண்டுபிடிப்பு மனித நாகரிகத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது. மனித சமுதாயத்தின் இந்த மிகப்பெரிய கொடையை வழங்கியதில் தமிழர்களின் பங்குக்காக தமிழர்களாகிய நாமும் பெருமை கொள்ளலாமே.

நன்றி : பழங்காலத் தமிழர் வரலாறு.

பட்டினப்பாலையில் வெளிநாட்டு வாணிகம்

கரிகால் பெருவளத்தானின் தலைநகரான காவிரிப் பூம்பட்டினம் துறைமுக நகரமாகவும் இருந்ததால் உள்நாட்டு வணிகம் போலப் பன்னாட்டு வணிகமும் சிறப்பாக நடைபெற்றது. சோழ நாட்டிற்கு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளில் உள்ள நாடுகளிலிருந்து பல பொருட்கள் வந்தன. கடல் தாண்டிய நாடுகளிலும் வணிகம் நடைபெற்றதால் துறைமுகத்தில் அரியவும், பெரியவுமான பொருள்கள் நிறைந்து காணப்பட்டன.

மக்களின் வாழ்க்கை நாகரிக முறையில் வளர்ச்சியடைய அதற்கேற்பத் தேவைகளும் பெருகின. தேவைகளை நிறைவேற்ற பிற நாட்டினரோடு வணிகம செய்தனர். இதற்கு நீர் வழி போக்குவரத்துத் துணை நின்றது. பண்டைய தொழில்கள் பெரும்பாலும் கடல்நீர் வழி போக்குவரத்தையே நம்பி இருந்தன. தமிழ் வணிகர் நன்முயற்சி செய்து கடல்காற்றின் பருவநிலை உணர்ந்து நாவாய் செலுத்தும் தொழிலில் ஈடுபட்னர். உள்நாட்டுச் சரக்குகளை ஏற்றிக் கொண்டு பிற நாடுகளுக்குச் சென்று விற்று அந்நாடுகளில் உள்ள பொருட்களை வாங்கினர். காவிரிப்பூம்பட்டினம்.

சோழநாட்டின் முக்கியமான துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்தது. சங்ககாலத்தில் சோழ நாட்டில் காவிரியாறு கடலில் கலக்கின்ற இடத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினம் உலகப் புகழ் பெற்றிருந்தது காவிரிப்பூம்பட்டினம். ‘மருவூர்ப்பாக்கம்’, ‘பட்டினாப்பாக்கம்’ என்று இரண்டாகப் பரிந்திருந்தது. துறைமுகத்தையடுத்த மருவூர்ப்பாக்கத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த மக்களும் வணிகர்களும் வசித்து வந்தனர்.

துறைமுகத்தையடுத்த மருவூப்பாக்த்தில் பிறநாடுகளிலிருந்து கப்பல் ஓட்டி வந்த மாலுமிகள், கப்பலோட்டிகள் தங்கியிருந்தனர். அவர்கள் பிற நாடுகளிலிருந்து வந்தமையால் பல மொழிகளைப் பேசினர். யவனர்களும் அக்கூட்டத்திலிருந்தனர்.

“மொழி பல பெருகிய பழிதிர் தோத்துப்

புலம்பெயர் மாக்கள் கலந்தினிதுறையும்

முட்டாச்சிறப்பின் பட்டினம்”

(பட்டி.216-218)

எனக் காவிரிபூம்பட்டினம் சிறப்பிக்கப்டுகிறது. இதன்வழி அந்நகர மக்கள் தம் நகருக்கு வரும் அயல் நாட்டினரிடம் காட்டிய அன்பை வெளிக்காட்டுகிறது.

காவிரிப்பூம்பட்டினத்தில் தமிழ் நாட்டுக் கப்பல் வாணிகர்கள் பலர் இருந்தனர். இத்துறைமுகத்தில் வந்திறங்கிய பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து கடல்வழியாக கப்பல்களின் மூலமாகக் கொண்டு வரப்பட்டன. குதிரைகள் கடல் வழியாக பாரசீகம், சிந்து போன்ற நாடுகளிலிருந்து வந்திறங்கின அரசர்களின் படைகளின் குதிரைகள் முக்கிய இடம் பிடித்தன. கடல்வழியாக மிளகும், வாசனைத் திரவியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இம்மிளகு சேர நாட்டு மலைச்சரிவுகளில் கிடைத்தது. சேர நாட்டு மிளகை யவனர்கள் பெரிய நாவாய்களில் கொண்டு சென்றுள்ளதனை அறியமுடிகினற்து.

தமிழ்நாட்டு வாணிகர் அயல் நாடுகளுக்குச் சென்று வாணிகத்தில் ஈடுபட்டிருந்தது போல அயல்நாட்டு வாணிகர்களும் தமிழகத்திற்கு வந்து வாணிகம் செய்தனர் என்பதனை,

“பல் ஆயமொடு பதி பழகி வேறு வேறு உயர்நத

முதுவாய் ஒக்கல் சாறு அயர் மூனர் சென்று தொக்காங்க

மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்

முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும”;

(பட்டி.213-218)

இப்பாடல் வழி அறியலாம். அக்காலத்தில் வாணிகத்தில் உலகப்புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே அயல் நாடுகளிலிருந்து பல மொழிகள் பேசும் மக்கள் தங்கியிருந்ததைக் காணமுடிகிறது வியாபாரத்திற்காகக் காவிரிப்பூம்பட்டினத்திலே பல பண்டங்கள் வந்து குவிந்திருந்தன.

அப்பொருள்கள் உள் நாட்டிலிருந்தும், வெளி நாட்டிலிருந்தும் வந்தவை. வேற்று நாடுகளிலிருந்து குதிரைகள் கடல் வழியாக வந்திருக்கின்றன. அவைகள் உயரமானவை, விரைந்து ஓடும் தன்மையுடையவை, நிலத்தின் வழியே வண்டிகளில் கொண்டு வரப்பட்ட கரிய மிளகு மூட்டைகள், இமயமலையிலே பிறந்த சிறந்த மாணிக்கங்கள், உயர்ந்த பொன்வகைகள், மேற்குத் தொடர்ச்சி மலையிலே விளைந்த சந்தனக் கட்டைகள், அகில கட்டைகள், தெற்கக் கடலிலே விளைந்த முத்துக்கள், கீழைக்கடலிலே தோன்றிய பவளங்கள், கங்கை நதி பாயும் நிலங்களிலே விளைந்த செல்வங்கள், இன்னும் பல அருமையான பண்டங்களும், மிகுதியான பண்டங்களும் பூமி தாங்க முடியாமல் நிறைந்து, செல்வங்கள் செழித்துக் கிடக்கின்றன என்பதனை,

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங் கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்

கங்கை வாரியம் காவிரிப் பயனும்

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்”

(பட்டி.185-193)

இப்பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன. இவ்வடிகளில் முதலாவதாகக் குறிப்பிடப்படும் புரவி என்கிற குதிரை இந்திய நாட்டு விலங்கு அன்று. ஆனால் இந்திய நாட்டின் அனைத்து அரசுகளும் விரும்புகின்ற ஒன்று. ஓர் அரசாங்கத்தின் நால்வகைப் படையான தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படையுள், குதிரை படைக்குத் தேவையான ஒன்று.

அரேபிய வணிகர்கள் மிகுந்த இலாபத்திற்குக் குதிரைகளை விற்பதுடன் அதை வாங்குவதற்க அரசர்களும் போட்டி போடும் நிலையில் இருந்தனா. அதனால் குதிரை வந்தவுடன் முதலில் வாங்குவதற்காக அரசு ஊழியர்கள் துறைமுகத்தில் காத்து இருப்பர். தமிழ்நாட்டில் குதிரைகள் இறக்கமதி செய்யப்பட்டாலும் அவை இங்கு நீண்ட நாள் உயிர் வாழ முடியவில்லை. தட்ப வெப்பநிலை, உணவுப் பழக்கம் இவற்றால் அவை நோய் வாய்ப்பட்டன. அத்துடன் அடிக்கடி நுட்பம் பற்றி அரேபிய வணிகர்கள், வெளிப்படக்கூறாமல் மறைத்து வைத்ததால் வெறும் கால்களுடன் பல மைல் னரம் ஓடும் குதிரைகளால் தாக்குப் பிடிக்க முடியாமல் உயிர் நீத்தனர்.

இதனால் கப்பல் எப்போதும் வரும் என்று காத்திருந்து பெற்ற அரிய செல்வமாகக் குதிரை திகழ்ந்ததால் ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவி’ என்று சிறப்பிக்கப்பட்டது. சுங்க்கம் பண்டைக்காலத்தில் இறக்குமதிப் பொருள்களுக்கும், ஏற்றுமதிப் பொருள்களுக்கும் அரசு வரி விதித்தது. இவ்வரிகளுக்கு உல்கு, சுங்கம் என்ற பெயர்கள் வழங்கின. இத்தகைய வரியே அரசின் முக்கிய வருமானமாகும். காவிரிப்பூம்பட்டினத்துக் கடல் துறைமுகத்தில் இறக்குமதி பண்டங்களுக்கும், ஏற்றுமதி பண்டங்களுக்கும் சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளன.

நிலத்திலிருந்து வந்த பண்டங்களும், நீர் வழியாக வந்த பண்டங்களும் சுங்கச ; சாவடிக்குள் அனுப்பப்படுகின்றன. அவைகள் சுங்க அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டதற்கு அடையாளமாகச் சோழனுடைய சின்னமாக புலி முத்திரையிடப்பட்டு, பண்டத்தின் நிறைக்கும், அளவுக்கும் ஏற்ப வரி வாங்கப் பட்டுள்ளது. இதனை,

“நீரினின்றும் நிலத்து ஏற்றவும்

நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்

அளந்து அறியாப் பல பண்டம்

வரம்ப அறியாமை வந்து ஈண்டி

அருங்கடிப் பெருங்காப்பின்

வலியுடைய வல் அணங்கின் நோன்

புலிப் பொறித்து புறம் போக்கி

மதி நிறைந்த மலி பண்டம்

பொறி மூடைப் போர் ஏறி”

(பட்டி.129-137)

என்னும் பாடல் வலியுறுத்துகிறது. நல்ல பாதுகாப்பையும், சிறந்த காவலையும் உடைய சுங்கச் சாவடியிலே இருந்து பொருள்களை வெளியிலே அனுப்புகின்றனர். இதனால் சுங்கவரி விதிக்கப்பட்டு வந்ததைக் காணலாம். பண்டங்கள் பாழடையாமலும், திருட்டுப் போகாமலும் சுங்கச் சாவடியிலே பாதுகாக்கப்பட்டன. இக்காலத்தில் இருப்பதைப் போல பண்டைக் காலத்திலும் இறக்குமதிப் பொருள்களுக்கும் ஏற்றுமதி பொருள்களுக்கும் அரசாங்கம் வரி விதித்தது. இவ்வரிக்கு ‘உல்கு’, ‘சுங்கம்’ என்ற பெயர்கள் வழங்கின. இத்தகைய வரியே அரசங்கத்தின் முக்கிய வருமானமாக அமைந்திருந்தது. காவிரிப்பூம்பட்டினத்து துறைமுகத்தில் இறங்கும் பண்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்களுக்கும் சுங்க வரியுண்டு. நிலத்திலிருந்து வந்த பண்டங்களும் நீர் வழி வந்த பண்டங்களும் முதலில் சுங்கச் சாவடிகளுக்குள் அனுப்பட்டுள்ளன.

அரசாங்க சுங்க அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டதன் அடையாளமாகச் சோழனுடைய புலி முத்திரை இலச்சினையாக இடப்பட்டது. பண்டத்தின் நிறைகளிலிருந்த கடல் மார்க்கமாக வந்த பண்டங்களை நிலத்திலே இறக்கவும் உள் நாட்டிலிருந்து தரைமார்க்கமாக வந்த பண்டங்களைப் பிற நாடுகளுக்கு அனுப்புவதற்காகக் கடலில் உள்ள கப்பல்களில் ஏற்றவும் அளவற்ற பண்டங்கள் வந்து குவிந்து கிடக்கின்றன.

இதன் மூலம் சுங்க வரியின் விளக்கமும் இவ்வரி மூலம் பொருள் பாதுகாப்பாக இருந்தது என்பதையும் அறிய முடிகின்றது. காவிரிப்பூம்பட்டினம் வணிகச் சிறப்புமிக்க தலைநகரமாகவும் துறைமுகமாகவும் திகழ்ந்தது. உள்நாட்டு வாணிகமும், பன்னாட்டு வாணிகமும் செம்மையாக நடைபெற்றது. பண்டமாற்று வணிகம், நாணய வணிகமும் நடைபெற்றன.

உள்நாட்டு வணிகத்தில் அங்காடியின் அமைப்பும் தேவையும் விளக்கப்பட்டுள்ளன. வணிகர்களின் நடுநிலைமையும், உண்மையும். அறநெறி புலப்படுத்தப்பட்டுள்ளன. பன்னாட்டு வணிகத்தில் கடல்வழி கப்பலில் வந்த குதிரைக்கு முன்னுரிமை தரப்பட்டது. இறக்குமதி ஏற்றுமதிப் பொருள்களுக்கு உல்குவரி வசூலிக்கப்பட்டது. பல மொழி பேசும் பன்னாட்டு மக்களும் ஓரினமாக் காவிரிப்பூம்பட்டினத்தில் கலந்து வாழ்ந்தனர் என்பதைப் பட்டினப்பாலை வழி அறியமுடிகிறது.



தமிழரின் நாவாய் சாத்திரம்

தமிழரின் கடல் வாணிபம் மிகத் தொன்மையானது. தமிழர்கள் பெரிய பாய்மரக் கப்பல்களிலே சரக்குகளை ஏற்றிக்கொண்டு அயல்நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்துள்ளனர். தமிழர் நாவாய் வைத்து வாணிபம் செய்ததற்கு ஆதாரமாகப் பானை ஓடுகள், காசுகள், சுவரோவியங்கள் ஆகிய தொல்லியல் சான்றுகளும் இலக்கியங்களும் தமிழரின் கடலோடிய ஆற்றலைப் பறைசான்றுகின்றன.

தொல்பழங்காலப் பாறை ஓவியங்களில் படகு உருவங்கள் விழுப்புரம் மாவட்டம் கீழ்வாலை, தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. கீழ்வாலையில் படகின் மீது நின்ற நிலையில் துடுப்புடன் பயணம் செய்யும் மனித உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. காமயகவுண்டன்பட்டியில் படகின்மீது ஒரு மனிதன் நிற்பது போன்று காணப்படுகிறது.

தமிழக அரசு தொல்லியல் துறை இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் அகழ்வாய்வு செய்தபோது கருப்பு, சிவப்புப் பானை ஓடுகளும் கப்பல் உருவம் பொறித்த இரு பானை ஓடுகளையும் கண்டறிந்துள்ளனர். அவற்றுள் ஒன்றினை ரோமானியக் கப்பலின் உருவமாக ஆய்வாளர் கருதுகின்றனர். கடலில் செல்லுகிறவர்கள் தங்களோடு மகளிரை அழைத்துக்கொண்டு போகிற வழக்கம் தமிழருக்கில்லை என்பதை, ""முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை'' என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. வெண்ணிக்குயத்தியார் என்ற புலவர் கரிகாலன் வெற்றியைப் புகழ்ந்து பாடியுள்ள செய்யுளில் (புறநானூறு-66) கரிகாலனுடைய மூதாதையான சோழன் ஒருவன் கடலில் நாவாய் ஓட்டியதை,

""நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக''

என்ற பாடலடிகளால் அறியமுடிகிறது. வெளிநாட்டிலிருந்து வந்த யவனர் கப்பல்கள், பொன்னொடு வந்து அப்பொன்னுக்குரிய பண்டமாற்றாக மிளகினை ஏற்றிச் சென்றனர். இச்செய்தியை அகநானூறு,

""யவனர் தந்த வினைமாண் நன்கலம்,
பொன்னொடு வந்து கறியோடு பெயரும்''

என்று கூறுகிறது. பல்லவர் காலத்தில் வெளியிடப்பட்ட காசு ஒன்றில் கப்பலில் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் பாய்மரம் காட்டப்படவில்லை. இரகுநாத நாயக்கர் கடல் வணிகத்தில் ஆர்வம் கொண்டு, தரங்கம்பாடியில் டெனிஷ்காரர்கள் வணிகத்தின் முக்கியத் துவத்தை அறிந்து காசுகளை வெளியிட்டுள்ளார். அதில் கப்பல் உருவம் பொறித்த காசுகளையும் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவர்கள் கடல் வாணிபத்தில் ஈடுபட்டுள்ளதைக் காட்டுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர் நாறும்பூநாதசுவாமி திருக்கோயில் கோபுரத்தில் ஐந்து நிலைகளிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் வடக்குப் பக்கச் சுவர்ப் பரப்பில் அரேபிய வணிகக் கப்பலொன்று குதிரைகளைத் துறைமுகத்தில் இறக்கும் காட்சி ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. கப்பலில் கொடிமரமும் பாய்மரமும் காட்டப்பட்டுள்ளன. குதிரைகளைக் கரைக்குக் கொண்டு செல்ல படகு ஒன்றும் வரையப்பட்டுள்ளது. கடற்பகுதியில் மீன்களும் சங்குகளும் சுற்றித் திரிகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வோவியங்களை முனைவர் சா.பாலுசாமி ஆய்வு செய்து "சித்திரக்கூடம்' எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார்.

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலிலுள்ள சிற்பம் குதிரை வணிகத்தை எடுத்துக்காட்டுவதாகக் கப்பல் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் குதிரை, ஒட்டகம், யானை ஆகியன காட்டப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்கு மனையடி சாத்திர நூல்கள் உள்ளது போல் கப்பல் கட்டுவதற்குக் கப்பல் சாத்திரம், நாவாய் சாத்திரம் ஆகிய நூல்கள் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன. கப்பல் சாத்திரத்தில் கப்பல் அளவுகள், வேம்பு, இருப்பை, புன்னை, நாவல், வெண்தேக்கு, தேக்கு ஆகிய மரங்கள், கயிறு, பாய்மர வகை, நங்கூர வகை முதலிய விவரங்களும் கூறப்பட்டுள்ளன. சிறந்த மரக்கலம் "தீர்கா உன்னதா' என்று பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளது.

நாவாய் சாத்திரத்தில் கப்பல் கட்டுவதற்கு மரத்தைத் தேர்வு செய்தல், கப்பல் கட்டும் முறைகள், கப்பலின் உறுப்புகள், கப்பலைச் செலுத்தும் முறைகள், மரக்கலம் செய்வதற்கான நல்ல நாள், மரம் வெட்டிவரச் சாத்திரம் ஆகியன கூறப்பட்டுள்ளன. இந்நூலில் கப்பலைக் குறிக்க நாவாய், வங்கம், கலம், ஏரா, தோணி, யாத்திரை மரம், படகு, ஓடம், கப்பல் முதலிய பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வோலைச் சுவடியில் கப்பலின் படம் ஒன்று கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. இவ்வோலைச் சுவடியை முனைவர் சு.செüந்திரபாண்டியன் என்பவர் பதிப்பித்துள்ளார்.

- கோதனம். உத்திராடம்

World's Oldest Natural Pearl Found in Abu Dhabi

The 8,000-year-old gemstone was found on Marawah Island and will go on display at Louvre Abu Dhabi

Archaeologists have discovered what is believed to be the world's oldest natural pearl, on an island off Abu Dhabi. The 8,000-year-old gemstone was unearthed on Marawah Island, which lies just off the coast of Mirfa town, about 170 kilometres west of Abu Dhabi city. Using carbon dating, archaeologists from the Department of Culture and Tourism Abu Dhabi deduced the pearl dates from 5,800 to 5,600BC.

Archaeologists believe the discovery proves pearls were used in the UAE nearly 8,000 years ago and it represents the earliest known evidence for pearling yet discovered anywhere in the world. It follows a string of discoveries on Marawah over the past few years that revealed evidence of a sophisticated Stone Age village that once thrived on the island. The people that lived there were no simple Neolithic nomads but knew how to navigate, herd sheep, fish, make jewellery and even create decorative art.

The pearl will now go on display at Louvre Abu Dhabi as part of the '10,000 Years of Luxury' exhibition that opens on October 30. It will eventually be housed at Zayed National Museum, which is being built on Saadiyat Island. “The Abu Dhabi pearl is a stunning find, testimony to the ancient origins of our engagement with the sea," said Mohamed Al Mubarak, chairman of DCT.

The discovery of the oldest pearl in the world in Abu Dhabi makes it clear that so much of our recent economic and cultural history has deep roots that stretch back to the dawn of prehistory. "Marawah Island is one of our most valuable archaeological sites and excavations continue in the hope of discovering even more evidence of how our ancestors lived, worked and thrived.”

Before this discovery, the earliest-known pearl in the UAE was uncovered at a Neolithic site in Umm Al Quwain and was believed to be 7,500 years old. Ancient pearls from the same time have also been found at a Neolithic cemetery close to Jebel Buhais in Sharjah. Carbon dating indicates that the Abu Dhabi pearl is older than both these. Excavations on the island usually take place in spring and last up to two months. The pearl was found during last year's season on the floor of one of the rooms of the village and carbon dating finished a few months later.

"We didn’t expect to find it," said Emirati archaeologist Abdulla Al Kaabi, 34, who was part of the team. "We knew it was a pearl but we didn’t know the date. We were so excited when we heard the results and we felt something we cannot really describe." Experts have suggested that ancient pearls were possibly traded with Mesopotamia (ancient Iraq) in exchange for ceramics. Pearls were also possibly worn as jewellery.

Evidence for ancient settlements on Marawah was first discovered in 1992. But digs undertaken by DCT over the past few years have shown how a vibrant and sophisticated settlement thrived there about 8,000 years ago. Significant finds have included a ceramic vase, flint arrowheads and shell beads. Painted plaster vessel fragments were also discovered and represent the earliest known decorative art yet discovered in the UAE.

Archaeological work on Marawah is detailed and painstaking. About 10 archaeologists live and work on the island for the duration of the season and every find must be catalogued. Mr Al Kaabi said it was not an easy job but a find like the Abu Dhabi pearl makes it all worthwhile. "It is a small site so you must look carefully. You have to be precise," he said. "Sometimes it gets very hot but when you find something like the pearl you forget all that."

The work on Marawah is part of a broader strategy by DCT to look at the bigger picture across the Gulf region. Its work is challenging perceptions about the people who lived here and shows how these early inhabitants thrived in a harsh landscape. "Marawah is a fundamental site," said Mr Al Kaabi. "It is a big chance to find something new and build up the history of the country." A major new dig on Marawah Island is planned for 2020.


மிக்கேல் அருகாஞ்சல் பேரில் விருத்தப்பா



எமையாளும் பரம தேவன்

இணையடி தொழுதன் நாளில்

இம்மையில் அடியோர் செய்த

குறையதனை அகற்றுதற்காய்


உம்மையே நம்பும் இந்த

ஊரில் உள்ளோர் மன்றாட

சம்மிக்கேல் அருக்காஞ்செனும்

தயாளனே துணை செய்வீரே!

கொற்கை

தூத்துக்குடி மாவட்ட பரதவர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது. நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் சித்தரிக்கிறது. பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறித்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ டி குரூஸ். பல விதமான நிகழ்வுகளையும் மனிதர்களின் வெவ்வேறு முகங்களையும் மாற்றத்தின் வியக்கவைக்கும் கோலங்களையும் நுட்பமான சித்தரிப்பில் வெளிப்படுத்துவதன்மூலம் கலைபூர்வமான வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது இந்த நாவல். நாவல் காலூன்றி நிற்கும் புவியியல் பரப்பிற்குக் கீழ் உள்ளார்ந்து நிற்கும் சூட்சுமப் பரப்பும் அதனூடே உணர்த்தப்படும் வாழ்வின் பரிமாணங்களும் இதைத் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக அடையாளம் காட்டுகின்றன.

ஆர்.என்.ஜோ டி குருஸ் (ஆசிரியர்)

The Beds Of Empire

Rare book collection 

The Beds Of Empire: Power And Profit At The
Pearl Fisheries Of South India And Sri Lanka, C.
1770-1840


Samuel Miles OstroffUniversity of Pennsylvania,

Download Link

தமிழி வட்டெழுத்து மாற்றி மென்பொருள்

கிடைத்தற்கரிய பெரும்பேறு பெற்றநாள் இன்று. மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்துவதென தெரியாத அளவிற்கு மீமகிழ்ச்சியாய் இருக்கிறேன். தமிழி மற்றும் வட்டெழுத்துகளில் எழுத நான்கைந்து ஆண்டுகளாக செயலிகளைத் தேடிக்கொண்டிருந்தேன். எங்கும் கிடைக்கவில்லை. தமிழியில் அனைத்து எழுத்துகளும் அடங்கிய ஒரு எணினி வடிவக்கோப்பு கிடைத்தது. அதிலிருந்து ஒவ்வொரு எழுத்தையும் படமாக மாற்றி வெட்டி ஒட்டி சேர்த்து எழுதிப் பதிவிட்டுவந்தேன்.

கடந்த ஒருமாதமாக மிகவும் முயன்று தமிழி மாற்றியை தேடிவந்தேன். இந்த நேரத்தில், இன்று நண்பர் தமிழ வேள் அவர்கள் இவ்வெழுத்து மாற்றி மென்பொருள் தளத்தை பதிவிட்டிருந்தார். கண்டதும் அளவிடற்கரிய பெருமகிழ்வுற்றேன். அதைப்பதிவிட்ட நண்பருக்கு கோடி நன்றிகூறி வணங்குகிறேன்.

இந்த மென்பொருளை உருவாக்கியவர்களுக்கு எத்தனை ஆயிரங்கோடி நன்றி சொன்னாலும் தகும். "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என இப்பழந்தமிழ் எழுத்துகளில் எழுதவும் அறிந்துகொள்ளவும் விருப்பங்கொண்ட நண்பர்கள், இவ்விணைப்பை சொடுக்கி, தற்காலத்தமிழில் எழுதினால் தமிழி மற்றும் வட்டெழுத்தில் மாற்றிக்காட்டும். அவற்றைப் படமாகப் பதிவிறக்கிக்கொள்ளலாம். விருப்பமுடைய அன்பர்கள் பயன்படுத்திக்கொள்ள அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

தமிழி, வட்டெழுத்து கற்போம். 

தமிழி மீண்டெழுக ! 
வட்டெழுத்து திரும்புக !! 
செந்தமிழ் சிறப்புற வாழ்க !!! 

Les Miracles de S François Xavier

மற்றுமொரு போர்த்துக்கீசிய ஆவணம்...
புனித சவேரியாருக்கு புனிதர் பட்டம் வழங்க முக்கிய சாட்சியாக இருந்த புதுமைகள் மூன்றில் வேம்பாற்றில் இறந்த சிறுமிக்கு உயிர் கொடுத்தது ஒன்றாக அமைந்தது என இப்புத்தகம் பதிவு செய்கிறது. (இதில் புன்னைக்காயலில் இறந்த இருவருக்கு உயிர் அளித்த விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.)

`கீழடி' பாண்டியர்களின் தலைநகரமா?'

'கீழடி' என்கிற ஒற்றைச் சொல், தமிழக மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் உச்சரிக்கப்படுகிறது. தமிழ் நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழைமையானது என நான்காம் கட்ட ஆய்வு முடிவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. மேலும், வைகை நதி நாகரிகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் நெருங்கிய தொடர்புடையதாகவும் சொல்லப்படுகிறது. சங்ககால வரலாற்றையே மாற்றி அமைக்கும் எனத் தகவல்கள் வெளியாகின்றன.

இவை குறித்து பேராசிரியர் அருணனிடம் பேசினோம். "நான் முதலில் தமிழக அரசைப் பாராட்டுகிறேன். இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிகரமானது. ஏனென்றால், இதற்குமுன் ஆய்வுசெய்த முதல்கட்ட முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. தமிழனுக்கென்று ஒரு நாகரிகம் இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லையா என்று எண்ண வைக்கிறது. மத்திய அரசு முழு முடிவையும் வெளியிட வேண்டும் என விரும்புகிறேன். இப்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவு, தமிழர்கள் நாம் எவ்வளவு தொன்மையானவர்கள் என்பதை உணர வைக்கிறது. மேலும், கீழடி ஆய்வில் கிடைத்த மற்றுமொரு முக்கிய அம்சம் 'எழுத்துரு'.

கீழடியில் பானை ஓடுகளில் கிடைத்துள்ள எழுத்துருக்கள், சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைத்த எழுத்துருவோடு ஒத்துப்போகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே சிந்து சமவெளி முதல் வைகை நதி வரை ஒரு நாகரிகத் தொடர்பு இருக்கிறது. இந்த அடிப்படையில் மேலும் பல ஆய்வுகள் தொடர வேண்டும். 'ஹரப்பா', 'மொகஞ்சதாரோ' போல கீழடியையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். கிடைத்த பொருள்களை அங்கே அருங்காட்சியகமாக வைக்க வேண்டும். கீழடி ஆய்வுக்காக மத்திய அரசிடம் மாநில அரசு கூடுதல் நிதி கேட்டிருக்கிறது.

அந்த நிதியை மத்திய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும். மேலும், கீழடி ஆய்வுக்கான முழு உதவியை மத்திய அரசு செய்ய வேண்டும். இன்றைக்கு வரலாற்று அறிஞர்கள் மிக முக்கியமான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள். கீழடி ஆய்வை முழுமையாகத் தொடர்ந்தால் தெற்காசியாவின் வரலாற்றை மாற்றி அமைக்கும்" என உறுதியாகக் கூறினார் பேராசிரியர் அருணன்.

பேராசரியர் பாரதி புத்திரனைத் தொடர்புகொண்டபோது, தமிழ் நாகரிகத்திலிருந்த மேன்மையான தன்மைகள் குறித்துப் பேசிய அவர், " "சங்ககாலம் என்பது தொல்லியல் சார்ந்து நம் ஆய்வாளர்கள் கி.மு 2-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3-ம் நூற்றாண்டு வரையிலான 500 ஆண்டுகள் எனக் குறிப்பிடுகிறார்கள். தற்போது கிடைத்துள்ள பொருள்கள் இன்னும் 300, 400 ஆண்டுகள் பழமையானது எனச் சொல்கிறது. அசோகருடைய காலம் கி.மு 3-ம் நூற்றாண்டு என வரையறுத்திருக்கிறார்கள். அப்படிப் பார்க்கையில் அசோகர் காலத்துக்கு முன்பே தமிழில் எழுத்துருக்கள் இருந்திருப்பதாகத் தெரிகிறது.

அகழ்வாய்வில் கிடைத்துள்ள பொருள்களில் இருக்கிற ஒப்புமையைப் பார்க்கிறபோது சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது எனக் கருத வைக்கிறது. தமிழர் நாகரிகம், நகர நாகரிகமாக இருக்கிறது. ஆய்வில் கிடைத்த உரைகிணறுகள், சுகாராதப் போக்குகள் ஆகியவற்றைக் காணும்போது 'ஹரப்பா', 'மொகஞ்சதாரோ' போல ஒரு முதிர்ச்சியான நாகரிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், வைகை நதியைப் பயன்படுத்தி ரோமானியர்களுடன் கடல்வழியாகத் தொடர்புகொண்டிருக்கிறார்கள் என, அங்கு கிடைத்துள்ள பொருள்கள் மூலம் தெரிய வருகிறது. 

தமிழர்கள் கப்பல் கட்டுமானத் துறையில் தொழில்நுட்ப அறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என இதன் மூலம் அரிய முடிகிறது. கடல் மற்றும் இயற்கை சார்ந்த புரிதல் தமிழர்களுக்கு அதிகம் என்பதையே ஆய்வில் கிடைத்த தானியங்கள், பானை ஓடுகளில் கிடைத்த குறியீடுகள் காட்டுகின்றன. மேலும், இவை பாண்டியர்களின் தலைநகராக இருக்கக்கூடுமோ என்ற தகவல் இதை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது.

ஏனென்றால், பாண்டியனின் தலைநகரான மதுரைக்கு மணலூர், ஆலவாய் உள்ளிட்ட பல பேர்கள் உள்ளன. எனவே, அந்த வகையில் நிரூபிக்கப்பட்டால் தென் பாண்டிய வரலாறு இன்னும் பழைமையாக இருக்கும். தமிழ் எழுத்துரு குறித்த தெளிவான முடிவு கிடைத்திருக்கிறது. புழங்கு பொருள்களின் மீது தம் பெயரை எழுதிவைக்கும் முறையைப் பற்றி ஏற்கெனவே ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுவார். அந்த வகையில் எளிய மக்களும் எழுத்தறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய ஒன்று. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கிறபோது கீழடி மிகத் தொன்மையான, சிறப்பான நாகரிகம் என்பது தெளிவாகிறது" எனப் பெருமை பொங்க பேசினார் பாரதி புத்திரன்.

Thanks: www.vikatan.com

நியூசிலாந்தை கண்டுபிடித்தவர் யார்?

நியூசிலாந்தை கண்டுபிடித்தவர் யார்? நிச்சயமாக தமிழர்கள் தான்.

குறைந்தது 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அல்லது 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ, ஆனால் வரலாறுபடி ஆபெல் டாஸ்மான் அல்ல. தமிழ் எழுத்து பதித்த மணி (Bell) மிஷனரி வில்லியம் கோலென்சோவால் சுமார் 1836 இல் கண்டுபிடிக்கப்பட்ட உடைந்த வெண்கல மணி ஆகும்.  இது நியூசிலாந்தின் நார்த்லேண்ட் பிராந்தியத்தில் வாங்கரேய் அருகே மாவோரியர்கள் இன பெண்கள் உருளைக்கிழங்கைக் கொதிக்க இதை ஒரு பானையாகப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த மணி 13 செ.மீ நீளமும் 9 செ.மீ ஆழமும் கொண்டது, மேலும் மணியின் விளிம்பைச் சுற்றியுள்ளவை பழைய அல்லது பண்டைய தமிழ் எழுத்துக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை மொழிபெயர்க்கும்போது, ​​அது “முஹைதீன் பக்ஷின் கப்பலின் மணி” என்று கூறுகிறது. கல்வெட்டில் உள்ள சில எழுத்துக்கள் நவீன தமிழ் எழுத்துக்களில் இனி காணப்படாத ஒரு தொன்மையான வடிவத்தில் உள்ளன, இதனால் மணி 500 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கலாம், இது பிற்கால பாண்டிய காலத்திலிருந்து இருக்கலாம்.

இந்த முஹைதீன் பக்ஷ் அல்லது முஹைதீன் வக்கா சில புத்தகங்களின் ஆசிரியர்களால் இது ஸ்பானிஷ் ஹெல்மெட் என்று தவறாக விளக்கப்பட்டது.
இந்த பெல் குறைந்தபட்சம் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மனித குடியேற்றங்களின் தோற்றத்தை நிரூபிக்கிறது. இந்த பெல்லின் கண்டுபிடிப்பு டச்சு ஆய்வாளர் ஆபெல் டாஸ்மான் மற்றும் பிரிட்டிஷ் கேப்டன் ஜேம்ஸ் குக் ஆகியோர் நியூசிலாந்தை அடைந்த முதல் ஐரோப்பியர்கள் அல்ல என்பதை நிரூபிக்கிறது.

குக்கின் டஹிடியன் என்ற மொழிபெயர்ப்பாளர் மூலம் மாவோரி மக்கள் கேள்வி எழுப்பினர், இவர்கள் முயற்சித்து வருவதற்கு முன்பு இந்த நாட்டில் எந்த வெள்ளை மனிதர்களும் காணப்படவில்லை என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர். இது ஐரோப்பியர்களை விட முன்னதாக நியூசிலாந்தை அடைந்த ஆசியர்கள் (தமிழர்கள்) என்பதையும் இது நிரூபிக்கிறது.

வில்லியம் கோலென்சோ, வடக்கில் தொலைதூர உள்நாட்டு மாவோரி கிராமத்திற்கு, வங்கரேக்கு அருகில் சென்றபோது, ​​உள்ளூர் மாவோரி மக்கள் ஒரு பழைய கப்பலில் இந்த மணியை தலைகீழாக்கி சமையல் பாத்திரமாகப் பயன்படுத்துவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். மணி எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியபோது, ​​அவர்கள் ஒரு சுவாரஸ்யமான பதிலைக் கொடுத்தனர்.

புயலில் பிடுங்கப்பட்ட ஒரு பழைய மரத்தின் வேர்களில் மணி மறைக்கப்பட்டிருந்தது எங்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், மணி என்றால் என்ன அல்லது அது எப்படி அங்கு வந்தது என்பது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்றார்கள். அதை ஒப்பிடுவதற்கு அவர்களின் கலாச்சாரத்தில் அன்று இதுபோன்ற எதுவும் இல்லை.

ஒரு சமயம் கோலென்சோ அவர்களுக்கு ஒரு பெரிய இரும்பு சமையல் பானையை கொடுத்து இந்த மணியை பரிமாறிக்கொள்ள முடிந்தது, மேலும் அதைப் பற்றி அறியலாம் என்ற நம்பிக்கையில் மணியை வைத்திருந்தார். இந்த மணி 1890 ஆம் ஆண்டில் டொமினியன் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது, இப்போது நியூசிலாந்து தேசிய அருங்காட்சியகமான தி பாப்பவுக்கு சொந்தமானது.

முக்கியமாக இந்த மணியில் உள்ளது சங்ககால 24 தமிழ் எழுத்துக்கள் என வல்லுநர்கள் ஆய்வு செய்தனர், அவை ஆறு அல்லது ஏழு சொற்களை உருவாக்கியதாகத் தோன்றுகின்றன, மேலும் கோலென்சோ அதைக் கண்டுபிடித்த நேரத்தில் இந்த மணி கி.பி 1400 முதல் 1500 வரையிலான காலகட்டத்தில் உருவாக்குகியதாக தோன்றுகிறது எனக்குறிப்பிட்டார்.
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com