Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Indus Valley Shell Works


Shell-Working in the Indus Civilization


Although shell objects may seem relatively insignificant compared to other categories of objects, such as seals or sculpture, a detailed study of shell objects and shell­ working has revealed important aspects of trade and craft specialization in the Indus Civilization. Shell-working first developed in the Indus region as early as the 7th millennium BC, in the neolithic period. During the neolithic and early chalcolithic periods, shell-working became more specialized both in terms of manufacturing techniques and in the use of specific shell species as raw materials. 

By the mid-3rd millennium BC, with the rise of the urban centres of the Indus Civilization, there is evidence for shell workshops at important coastal and inland sites. These workshops produced a wide variety of ornamental and utilitarian objects and used several species of marine shell as raw materials. The standardization of certain manufacturing techniques and stylistic features of the shell industry at widely separated sites throughout the Indus Civilization suggests that shell-workers were connected by intricate networks of trade and kin relations. These networks were necessary to supply raw materials from distant coastal resource areas and to distribute finished artifacts to inland cities and remote villages.

Shell Working Industries of the Indus Civilization: A Summary

Assorted shell inlay with intersecting-circle and womb motifs, Mohenjo-daro.

Major species of marine mollusca used in the shell industry are discussed in detail and possible ancient shell source areas are identified. Variations in shell artifacts within and between various urban, rural and coastal sites are presented as evidence for specialized production, hierarchical internal trade networks and regional interaction spheres. On the basis of ethnographic continuities, general socio-ritual aspects of shell use are discussed.

In recent years the Indus Civilization of Pakistan and Western India has been the focus of important new research aimed at a better understanding of the character of protohistoric urban centers as well as rural towns and villages. With the accumulation of new and varied types of data many of the misconceptions regarding the rigid social structure and unimaginative material culture are being replaced by a new appreciation of the complex and varied nature of this civilization.













Thanks : www.harappa.com

சிந்து வெளி தமிழனின் கப்பல் கலை




சிந்து வெளி நாகரிகம் செந்தமிழர் நாகரிகம் என்பதைக் கீழடி அகழ்வாராய்ச்சி நிலை நாட்டி வருகிறது. பழந்தமிழர் ஆழ்கடல் கப்பல் செலுத்தும் உலகச் சுற்றுக் கடலோடிகளாக விளங்கினர். கட்டுமரம் முதல் மிகப் பெரிய நாவாய்வரை இருநூற்றுக்கும் மேற்பட்ட நீர்வழிச் செல்லும் மரக் கலங்களையும், கப்பல் தளங்களையும் வணிகத் துறைமுகங்களையும் உலகின் பல இடங்களில் நிறுவி இருந்தனர். பல துறைமுகங்களைச் சொந்தமாகக் கொண்ட பாண்டியன், பல் சாலை முதுகுடுமி பெருவழுதி என அழைக்கப்பட்டான். 

பல்சாலை என்பது பல துறைமுகங்கள். குஜராத்தில் துவாரகை, லோத்தல், வங்காளத்தில் தமிழுக் நகர், ஒரிசாவில் பித்துண்டா எனப்படும் பெருந் தொண்டி, ஆகிய இடங்களில் தமிழ் வேந்தர்களின் துறைமுகங்கள் இருந்தன. சிந்து வெளி நாகரிகக் காலத்தில், காளண்ணன் என்பவன் கராச்சித் துறைமுகத்தை அடுத்த கூனயத்தம் என்னும் இடத்தில் ஒரு கப்பல் கட்டும் தளம் வைத்திருந்தான் என்னும் அரிய செய்தி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில், தனியார் தொகுப்பிலிருந்து சிந்து வெளி எழுத்து பொறித்த ஒன்பது செப்புப் பட்டயங்களை ரிக் வில்லிஸ் என்பவர் விலைக்கு வாங்கினார். அவற்றைத் டெல்லி பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த, வசந்த் சிண்டேக்குக் காட்டினார். அச்செய்தி செய்தித் தாள்களிலும் வெளிவந்தது. வசந்த் சிண்டே அந்த எழுத்துகளைப் பழைய பிராமி எனக் கருதினார். இச் செய்தி எனக்குத் தெரிவிக்கப்பட்டதும், நான் அவற்றைப் படித்துப் பார்த்து, அவை சிந்துவெளி எழுத்துகளே என உறுதிப்படுத்தி ரிக்வில்சுக்குத் தெரிவித்தேன். இச்செப்புப் பட்டயங்களில் பெரிதாக இருந்த ஒன்றில், 34 எழுத்துக் குறியீடுகள் கூறும் செய்தி கூனயத்தம் என்னும் ஊரில் இருந்த சிற்றரசன் தன்கவிகை பண்ணனுக்கு காளண்ணன் என்னும் நண்பன் இருந்தான். 

அவன் ஒரு கப்பல் கட்டும் தளம் வைத்திருந்தான். அவன் கட்டிய கப்பல்களில் ஒன்று, கடலில் மூழ்கி விட்டது. அதிலிருந்து நக்கணியன் என்பவன் மட்டும் உயிர் பிழைத்துக் கரையேறினான். அவனைப் பாராட்டும் வகையில் உகணன் என்பவன் அந்தச் செப்புப் பட்டயத்தை எழுதினான். கூனயத்தம் என்னும் இடத்திலிருந்த காளண்ணனின் கப்பல் கட்டும் தளம் இன்றைய கராச்சி அருகில் இருந்திருக்கலாம். மேற்கண்ட செப்புப் பட்டயத்தின் புகைப்படம் சிந்து வெளி தமிழர் நாகரீகம் என்னும் ஆங்கில நூலில் இடம் பெற்றுள்ளது. அக்காலத்தில் தமிழ் நாட்டில் இருந்து புறப்பட்ட கப்பல்கள் மேற்கில் எகிப்து, மத்திய தரைக் கடல் நாடுகள் கிரேக்கம் வரையிலும், கிழக்கில் மலேசியா, தென் சீனம், கொரியா, ஈஸ்டர் தீவு, தென் அமெரிக்க பெரு வரையிலும் சென்றுள்ளன. இவற்றுக்குத் தலைமையிடமான தமிழகம் மிகப் பெரிய கடல் வாணிக மையமாக விளங்கியது.

மொரிசியசில் நடந்த ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை படித்த பிரெஞ்சு நாட்டு அறிஞர் ஒருவர் மாலுமி கணக்கன் என்னும் தமிழன் துணையால், வாஸ்கோடகாமா சேரநாட்டுத் துறைமுகத்துக்கு வந்தான் என்றும் பல மேற்காசிய துறைமுகங்களில் தமிழ் நாட்டுக் கப்பலோடிகளும் கப்பல்களைப் பழுது பார்ப்பவர்களும் இருந்தனர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஒற்றைப் பாய்மரக் கப்பலை மீன் பிடிக்க மட்டும் பயன்படுத்தினர். கூடை போலிருந்த சிறிய கப்பல் கடல் துறைமுகத்திலிருந்து ஆற்று வழியாக உள் நாட்டுப் படகுத் துறைகளுக்குச் சென்றது. காற்று வீசும் திசையையும் எதிர்த்துப் போகும் பல பாய் மரங்களைக் கொண்ட பெரிய கப்பலை வடிவமைத்துத் தந்த சோழ மன்னனை வளி தொழில் ஆண்ட உரவோன் என்று குறிப்பிட்டனர்.

தமிழ் நாட்டு கீழ்வாலை பாறை ஒவியத்தில் தோணியில் நான்கு பேர் நிற்கும் ஓவியத்தின் கீழ் நாவாய்த் தேவன் என்று சிந்து வெளி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒரு சிந்து வெளி முத்திரையில் வங்கன் நத்தத்தன் என்னும் பெயரும், ஏழு கன்னிப் பெண்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. தரை வழி செல்லும் வணிகச் சாத்துக்குத் துணையாகச் செல்பவனும் சாத்தன் எனப்பட்டான். அதேபோல், கடல் வாணிகர்க்குத் துணையாகச் செல்பவன் கடலன் எனப்பட்டான். அவன் பெயரில் அமைந்த கடலனூர் என்பதுதான் கடலூர் ஆயிற்று. பழந் தமிழரின் கடலோடும் கலைக்கு அடிப்படையான கப்பல் கட்டும் தளம் மிகப் பழங்காலத்தில் எங்கெங்கு இருந்தன என்னும் ஆய்வை ஒரு தனித்த ஆய்வாகவே தொல்பொருள் ஆய்வுத் துறை மேற்கொள்வது நல்லது.


-பேராசிரியர் இரா.மதிவாணன்

Thanks: www.dailythanthi.com

மாசி கருவாடு

Skipjack Tuna என்ற சூரை மீனில் செய்யபடும் மாசி தான் முதல் தரமானது

ஆனால் அனைத்து வகை சூரை மீனிலும் (நீல தூவி சூரை, மஞ்சல் தூவி சூரை, வரி சூரை, கட்டை சூரை) மாசி செய்யலாம் சூரையை  வெட்டி, அவித்து,வெய்யிலில் காயவைத்து, புகையூட்டி மாசி தயாரிக்கப்படுகிறது.


தயாரிப்பு முறை

சூரை மீனை தோலுரித்து செதிள், குடல் நீக்கியபின், தலை, நடுமுள் (முதுகெலும்பு) போன்றவை அகற்றி பிறகு வயிற்றுப்பாகம் தனியாகப் பிரிக்கவேண்டும்

பின்னர் இது நான்காக துண்டாக்கி பெரிய சூரைமீனாக இருந்தால் இந்தத் துண்டங்கள் மேலும் சிறுதுண்டங்களாக்கப்படும். அரியப்பட்ட சூரைமீன் துண்டங்களை (கண்டங்கள்) அண்டாவில் அரைவேக்காடாக வேக வைக்கவேண்டும் ஒரு கொதி வந்ததும், இந்த மீன் துண்டங்களை இறக்கி, மெல்லிய ஒரு துணியில் இட்டு, திருகி திருகி சொட்டுத் தண்ணீரின்றி பிழிந்து. பின்னர் மூன்று நாள்கள் வரை இந்தத் துண்டங்கள் வெய்யிலில் காய வைக்க வேண்டும்

மாசி கருவாடு
வெய்யிலில் காய்ந்த பின் இந்த மீன் கண்டங்கள் பூட்டிய ஓர் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு . அங்கே அடுப்பின் மேல் பரண் அமைத்து, வைக்கோல் பரப்பி சூரை கண்டங்களை அடுக்கி

புகையூட்ட வேண்டும் இந்த துண்டங்கள் இரண்டு நாள்களுக்குப்பின் மரக்கட்டை வடிவத்தில், மாசிக்கருவாடாக மாறி இருக்கும்

இதன் பூர்வீகம் மாலத்தீவு, ஆனால் இப்போது தமிழகம், கேரளம், இலங்கை, இலட்சத்தீவுகள் எனப்படும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் பகுதி மக்களுக்கு மாசிக் கருவாடு ஒரு மிகச்சிறந்த மீன் உணவு

இதை பாதுகாக்க குளிர்சாதன பெட்டி தேவை இல்லை.


மாசி சம்பல் 

மாசி துண்டை நன்றாக அம்மியில் தட்டி ,
காய்ந்த மிளகாய் அதனுடன் பக்குவமாய் தட்டி ,
சிறிய வெங்காயம் நறுக்கி போட்டு 
கொஞ்சமாக தேங்காய் துருவி 
அனைத்தையும் சேர்த்து பிசைந்து 
உப்புடன் சில சொட்டுகள் எலும்பிச்சை சாறு சேர்ந்து கருவேப்பிலையுடன் சேர்த்து இறுதியில் கிடைப்பதே.


தமிழர் கடல்வலிமை – முப்பெரும்புலவர்கள்


சோழன் முதல் கரிகாலன், சேரன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனை இரண்டாம் வெண்ணிப்பறந்தலைப் போரில் தோற்கடித்தான். அப்போரில் தோற்று, விழுப்புண் பெற்ற சேரலாதன் நாணி வடக்கிருந்து உயிர் துறந்தான். இந்நிகழ்வை, கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்ணிக்குயத்தியார் ‘தோற்ற சேரலாதன் உன்னை விட நல்லவன்; புகழ் பெற்றவன்’ என வெற்றிபெற்ற கரிகாலனிடமே நேரடியாகப் பாடிய, நேர்மையும், தைரியமும், புலமையும் உடைய, குயத்தி வகுப்பை சேர்ந்த பெண்பாற் புலவர். அவரது பாடல் ‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி, வளிதொழில் ஆண்ட உரவோன் மருக” எனத் தொடங்குகிறது(புறம்-66). “பெருங்கடலில் காற்றின் தொழில்நுட்பம் அறிந்து அதனைக் கட்டுப்படுத்தி ஆள்வதன் மூலம் பெரும் மரக்கலங்களைச் செலுத்தி வருகிற மரபில் வந்தவனே” என்பது இதன்பொருள். சோழர்கள் மிக நீண்ட காலமாகவே கடலோடிகளாக இருந்தவர்கள் என்பதையும், சோழ மண்டலத்தை ஒட்டிய கடல்பரப்பையும், இந்தியாவின் கிழக்குக் கடற்பரப்பு முழுவதையும் தங்கள் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவந்தவர்கள் என்பதையும் பருவக்காற்று குறித்தும், கடல் நீரோட்டம் குறித்தும் அறிந்து கடலில் பெரும் மரக்கலங்களை செலுத்திய மரபில் வந்தவர்கள் சோழர்கள் என்பதையும் இப்பாடல் உறுதி செய்கிறது.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறோக்கத்து நப்பசலையார் என்கிற இன்னொரு பெண்பாற்புலவர், மலையமான் குறித்த தனது பாடலில் சேரர்களின் கடலாதிக்கம் குறித்து “சினமிகு தானை வானவன் குடகடல் பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப் பிறகலம் செல்கலாது அனையேம்” என்கிறார்(புறம்-126). மேற்குக்கடலில் சேரன் தனது பெருங் கப்பல்களை செலுத்தும் பொழுது வேறு யாரும் அவனது ஆணையை மீறி மேற்குக் கடலில் கப்பல்களைச் செலுத்த இயலாது என்பது இதன் பொருள். சங்ககாலப் பெரும்புலவன் கபிலன், அறிவில் சிறந்தவன், பெரும்புகழ் பெற்றவன், அக்கபிலன் மலையமானைப் பாடிய பிறகு பிறர் யாரும் அந்த அளவு அவனை உயர்த்திப் பாட முடியாது எனச் சொல்ல வந்த புலவர் சேரர்களது அனுமதி இன்றி யாரும் மேற்குக்கடலில் கப்பல்களை செலுத்த முடியாது என்பதுபோல எனச்சான்று காட்டுகிறார். இப்பாடல் மேற்குக் கடலில் சேரர்கள் கடலாதிக்கம் உடையவர்களாக இருந்தனர் என்பதை உறுதி செய்கிறது.

கி.மு. 4ஆம், 3ஆம்நூற்றாண்டு காரிகிழார், “செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக் கடற்படை குளிப்ப மண்டி” என பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி குறித்துப்பாடியுள்ளார்(புறம்-6). ‘செய்யும் தொழிலுக்கு எதிராக இருந்த பகைவர் தேயமே மூழ்கும் அளவு பெரும் கடற்படையை அனுப்பினான்’. என்பது இதன் பொருள். தமிழர்கள் அந்நியர் தேயத்தில் செய்யும் தொழிலாக வணிகம் இருந்தது. அதற்கு எதிராகப் பகைவர்கள் இருந்தனர். ஆதலால் தமிழக வணிகத்துக்கு எதிராக இருந்த பகைவர்களை எதிர்த்து அவர்களது தேயமே மூழ்கும் அளவு பெரும் கடற்படைகளை அனுப்பி முதுகுடுமிப் பெருவழுதி தமிழக வணிகத்தை பாதுகாத்தான். நெடியோன் எனப்படும் நிலந்தரு திருவிற்பாண்டியன் கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே மிகப்பெரும் கடற்படைகொண்டு இந்தோனேசியாவை (சாவகம்) கைப்பற்றி அங்கு மட்டும் விளைந்த “கிராம்பு” எனப்பட்ட வாசனைப் பொருள் வணிகத்தை தமிழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தான் என அப்பாதுரை குறிப்பிடுகிறார்.

தமிழர்கள் அன்று வணிகத்தைப் பிற நாடுகளில் பெருமளவு மேற்கொண்டிருந்தனர். வணிகத்துக்கேற்ற அதிகப் பொருள் உற்பத்தியும், உயர் தொழில்நுட்ப மேன்மையும், உலகளாவிய வணிக மேலாண்மையும், கடலாதிக்கமும் கொண்டதாக அன்றைய தமிழகம் இருந்தது என்பதை இப்பாடல்கள் சுட்டிக் காட்டுகின்றன. வின்சென்ட் ஆர்தர் சுமித் என்கிற புகழ்பெற்ற வரலாற்றறிஞர், “தமிழ் அரசுகள் வல்லமை மிக்கக் கடற்படைகளை வைத்திருந்தன. கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வணிகக் கப்பல்கள் தமிழகம் நாடி வந்தன” என்று தனது ‘இந்திய வரலாறு’ என்கிற நூலில் குறிப்பிடுகிற விடயத்தை இப்பாடல்கள் உறுதி செய்கின்றன.

பார்வை: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 148-151, 157-159.

- Balan Natchimuthu

வரலாற்றில் புன்னைக்காயல்

அமுதன் அடிகள் எழுதிய
‘வரலாற்றில் புன்னைக்காயல்’ என்னும் நூலை முன்வைத்து...
நிலமானது அதன் அமைப்புக்கேற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ் மண்ணில் அந்நியர் தடம் பதிக்கும் நேர்வு என்பது மிகப் பெரும்பாலும் நெய்தல் நிலமான கடற்கரை யாகவே இருக்கும்.  குறிப்பாக, சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை வான்வழிப் போக்குவரத்து இல்லாத நிலையில் கடல் வழியாகத் தானே பிற நாட்டினர் வந்திருக்க முடியும்! இவ்வாறு ஐரோப்பியர்கள்- குறிப்பாக, போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிறகு ஆங்கிலேயர்கள் என இந்தியாவில் - குறிப்பாக, தமிழகத்தில் நுழைந்த அயல் நாட்டினர், இங்கு தென் தமிழகக் கோடியில் நிலையான கூடாரமிட்டதற்குப் பல காரணங்கள் உண்டு.
தென்கடலோரத்தில் மீன்பிடித்தல், முத்துக் குளித்தல், சங்குக்குளித்தல், சங்கறுத்தல், உப்பு உற்பத்தி, உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகம் எனப் பொருளாதாரச் செழிப்புற்றிருந்தாலும், அவற்றுள் உலகையே கவர்ந்தீர்த்து பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்த முத்தின் பெயரால் சில சிற்றூர்கள் முத்துக்குளித்துறை என்றழைக்கப்பட்டன.
வடக்கில் வேம்பாறு முதலாக, வைப்பாறு, தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டினம், ஆலந்தலை, மணப்பாடு ஆகிய ஏழு ஊர்களையும் ‘ஏழுகடல்துறை’என்று அழைப்பது மரபு.
இந்த ஏழு ஊர்களில் ஒன்றான புன்னைக் காயல் என்னும் ஊரைப் பற்றி எழுதப்பட்டுள்ளதே ‘வரலாற்றில் புன்னைக்காயல்’ என்னும் நூல். வேளாங்கண்ணி, தியான இல்லம் வெளியிட்டுள்ள இந்த நூலை எழுதியிருப்பவர் அமுதன் அடிகள்.  தஞ்சாவூர்க் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் குருவாகப் பணியாற்றிவரும் இவர் குறிப்பிடத்தக்க தமிழறிஞர்.  இவர் பிறந்த ஊரே புன்னைக்காயல்.  அமுதன் அடிகள் தமது தமிழ்மொழித் திறனையும், கத்தோலிக்கக் கிறித்தவர் என்ற முறையில் தாம் பெற்ற சமயக் கோட்பாட்டுத் தெளிவு, சமய வரலாற்று அறிவு, புன்னைக்காயலில் பிறந்து வளர்ந்தவர் என் பதால் முத்துக்குளித்துறையின் பொருளாதார, சமூக வரலாற்றுப் புலமை ஆகியவற்றையும் கொண்டு இந்த நூலை எழுதியிருக்கிறார்.
ஏழுகடல் துறைகளுள் ஒன்றான புன்னைக் காயல், இயற்கையாக தாமிரபரணி ஆறு கடலோடு கலக்குமிடத்தில் அமைந்துள்ளது.  மேலும், தாமிர பரணி பல கிளைகளாகப் பிரிந்து கடலோடு சேரு மிடத்தில் உருவான தீவு என்பதால், போர்ச்சுக் கீசியர்கள் புன்னைக்காயல் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கருதி அங்கே முகாமிட்டு, தங்களுக் கென்று ஒரு கோட்டையையும் கட்டினர்.  புன்னைக் காயலுக்கு என்று அதற்கு முன்பு என்னென்ன வரலாற்றுச் சிறப்புகள் இருந்தனவோ அறியோம்.  ஆனால், இந்தப் போர்ச்சுக்கீசியக் குடியேற்றம் தொடங்கியது முதலாக, அங்கே ஏற்பட்ட சமூக மாற்றங்கள் நமக்கு அண்மைக் காலத்தவையும் மிகமிகச் சுவையானவையும் ஆகும்.
போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகிய மூன்று நாட்டினருமே அடுத்தடுத்து முத்துக்குளித்துறைப் பகுதிகளில் ஒன்றான புன்னைக்காயலில் கிறித்தவ மதத்தைப் பரப்பும் பணியை மேற்கொண்டிருந்தாலும் போர்ச்சுக்கீசியர்கள் தீவிரமாகப் பரப்பியதற்கு ஒரு காரணம் இருந்தது. 
 “கீழ்த்திசையில் போர்த்துக்கேயர்கள் கண்டுபிடித்த அல்லது கண்டுபிடிக்கப் போகிற நாடுகள் மீது ஞான அதிகாரம் (Royal Patronage -Padroada Reyal) செலுத்தும் உரிமை திருத்தந்தை ஐந்தாம் நிக்கொலாஸ் அவர்களால் அன்றைய போர்ச்சுக்கல் அரசர் ஐந்தாம் அல்போன்ஸோவுக்கு 08- 10- 1455 அன்று வெளியிடப்பட்ட ‘உரோமைப் பேராயர்’ (Romanus Pontifex) என்னும் திருத்தூது ஆணையின் மூலம் வழங்கப்பட்டது” (பக். 2) என்று நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதன்படி போர்ச்சுக்கீசிய அரசுக்குக் குறிப்பிட்ட சில உரிமைகளும் கடமைகளும் வழங்கப்பட்டுள்ளன.
தங்களது ஞான அதிகாரத்துக்கு உட்பட்ட நாடுகளில் திருச்சபையைக் கண்காணிக் கவும், ஆயர்களை நியமிக்கவும் உரிமைபெற்ற போர்ச்சுக்கீசிய அரசு, நற்செய்தியைப் பரப்புதல், கோவில்களை எழுப்பிப் பாதுகாத்தல், பக்த சபை களை நிறுவுதல், மறைபரப்புப் பணியாளர்களைப் பராமரித்தல் ஆகியனவற்றைக் கடமைகளாக ஒப்புக் கொண்டது.
இந்த ஞான அதிகாரமே அரசியல் அதிகாரமாக மாறியது. முத்துக்குளித்துறையில் வசித்த பரதவர்கள் போர்ச்சுக்கீசிய மன்னரின் குடிமக்களாகவே தங்களைக் கருதி வந்ததுடன், அவருக்கு வரியும் செலுத்தி வந்தனர்.பிற்காலத்தில் டச்சுக்காரர்கள் வருகைக்குப் பின் போர்ச்சுக்கீசியர்களின் அனைத்துத் தளச் செல் வாக்குகளும் மறைந்து போயின.  இதன் விளைவாக, போர்ச்சுக்கீசிய அரசுக்கும் பாப்பிறைக்குமிடையே விரிசல்கள் தோன்றின.இவ்வாறு போர்ச்சுக்கீசியர்கள் ஆக்கிரமிப்புக்கும், அதிகாரத்துக்கும் உள்ளான புன்னைக்காயல் ‘ஏழு கடல் துறை’யான ஏழு ஊர்களில் தூத்துக்குடிக்கு அடுத்த இடம் வகிக்கிற அளவுக்குச் சிறப்பானது.
நெய்தல் நிலத்தின் சிறப்புக்குரிய புன்னை மரங்களை நிரம்பக் கொண்டது. அதனால், அந்த ஊரே மிகுந்த எழிலுடன் காட்சியளித்துள்ளது.புன்னைக்காயல் மக்கள் அனைவருமே பரதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.  அவர்கள் சிறு வயதி லிருந்தே கடலாடி, கடலோடு வாழ்வதால் அவர்கள் மரபுவழியே மறம் நிறைந்தவர்கள்.
“பரதவர்களின் வீரம் அவர்களது கடல் தொழிலால் அமைந்ததே என்பதில் ஐயமில்லை.  அலை கடலின் ஆழ்பகுதிக்குச் சென்று மீன் பிடிக்கவும் வீரம் வேண்டும்; அங்குப் பெரிய மீன்களைத் தூண்டில் எறிந்தோ ஈட்டிகளால் போராடிக் கொன்றோ கரை சேர்க்கவும் மிகுந்த வீரம் வேண்டும்.  ஒரு பரதவர் எறியுளியால் தாக்கியதால் உதிரம் பீறிட்டுப் பெருகிக் கருங்கடலைச் செங்கடலாகக் கலக்கிச் சீறிச் சினந்து, துள்ளிக் குதித்துப் பின் துடுக்கடங்கிப் படகின் ஓரத்தில் உயிரிழந்து ஒதுங்கிய ஒரு பெரிய சுறா மீனைப் பற்றி அகநானூறு (210: 1- 6) கூறும் போது அத்தகைய கொடிய சுறா மீனை எதிர்த்துப் போராடி வெல்லும் வீரம் பரதவர்களுக்கு இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்” (பக் : 9) என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
சீனாவில் குப்ளாய்கான் ஆட்சிக்காலம் தொடங்கி, அந்நாட்டுக்கும் தமிழகத்து முத்துக்குளித்துறைக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.  அதை மெய்ப் பிக்கும் விதமாக நூலாசிரியர் செய்திகளைக் குறிப் பிடும்போது, காயல், புன்னைக்காயல் என்ற சொற்கள் யுவான் பேரரசின் ஆவணங்களில் இடம்பெற்றிருப் பதாகக் கூறுகிறார்.
“1408 முதல் 1433 வரை சீனாவின் மிங் பேரரசுக்கும் காயல் பகுதிக்குமிடையில் வாணிகத் தொடர்புகளும் அரசு முறைத் தொடர்புகளும் இருந்தன.  காயல் தூதர்கள் சீனா சென்று பேரரசரைச் சந்தித்து அன்பளிப்புகள் வழங்குவதும் சீனப் பேரரசர் அவர்களுக்கு விருந்தோடு அன்பளிப்புகள் வழங்கு வதும் நடைபெற்று வந்தன.” (பக் : 14) என்று புன்னைக்காயலுக்கும் சீனாவுக்குமான உறவை அமுதன் அடிகள் குறிப்பிடுகிறார்.
அரேபியத் துறைமுகங்களிலிருந்து குதிரைகளும் வாணிகப் பொருட்களும் காயல் பகுதியில் இறக்குமதியாகின்றன என்று மார்க்கோபோலோ குறிப்பிட்டுள்ளார். புன்னைக்காயல் உள்ளிட்ட முத்துக்குளித்தல் பகுதியில், முத்துக்கள் அதிக அளவில் கிடைக்கப் பெற்றதால், அப்பகுதி மக்கள் மற்ற பகுதி மக்களை விட பொருளாதாரத்தில் மேம்பட்டு விளங்கினர்.
இங்கு இஸ்லாமியர்கள் குத்தகைக்காரர்களான தால் பரதவர்கள் தினக்கூலிக்கு வேலை செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு இந்த இரு இனத்தவருக்கிடையே பகை மூண்டது.  இந்நிலையில், பரதவர்கள் தங்களுக்குப் பாதுகாப்பு தேடி கிறித்தவ மதத்தில் இணைந்த நேர்வுகள் காலவாரியாக நூலில் குறிக்கப்பட்டுள்ளன.
பின்னர் 16ஆம் நூற்றாண்டில் புனித சவேரியார் புன்னைக்காயலுக்கு வந்தது, பரதவ மக்களைக் கிறித்தவர்களாக்கியது உள்ளிட்ட தகவல்கள் துல்லிய மாக நூலில் பதிவு பெற்றுள்ளன.இந்த ஊர் மக்களிடையே சவேரியார் எவ்வாறு சமூக ஒழுங்கை நிலைநாட்டினார் என்பதையும், அங்கு எழுந்த வர்க்கப் பிரிவினையைப் பற்றியும் இந்நூல் மூலம் அறிய முடிகிறது.
மேலும் நூலாசிரியர் அமுதன் அடிகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல தொல்சுவடிகள் காப்பகங்கள், நூலகங்களுக்குச் சென்று ஆவணங்களைத் திரட்டி, கால வரிசைப்படி நிரல்படுத்தி, எழுதியுள்ள இந்நூலில் பின்வரும் தகவல்கள் சுவையுடன் விவரிக்கப்பட்டுள்ளன:
*  முத்துக்குளித்துறையில் அரசியல், இன மோதல்கள்,
* பரதவ மக்கள் வாழும் ஊர்களில் ‘பட்டங்கட்டி’ என்றழைக்கப்படும் சாதித்தலைவர் என்னும் பதவியின் அதிகாரம்
* பரதவ மக்களின் வர்க்கப் பிரச்சினை, அவர்கள் பின்பற்றிவரும் பண்பாடு, சடங்குகள்,
* பரதவர்கள் சந்தித்த தாக்குதல்கள், எதிர்ப்புணர்வு,
* கிறித்தவ மதத்தால் அவர்கள் பெற்ற பாது காப்பு,
* போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கி லேயர்களால் முத்துக்குளித்துறையில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்,
* புன்னைக்காயலில் எழுப்பப்பட்டுள்ள கோவில்கள்,
* பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரும் திருவிழாக்கள்,
* துறவியரின் அருந் தொண்டுகள்,
* இந்தியாவில் தமிழ் எழுத்தில் அச்சிடப்பட்ட முதல் நான்கு நூல்கள்.
வரலாற்று நிகழ்வுகளுக்கான காலத்தை முடிவு செய்கையில், மிகக் கூர்மையாகச் சான்றுகளைக் கையாண்டு, துல்லியமான மையத்தை எட்டுகிறார் நூலாசிரியர்.

‘வரலாற்றில் புன்னைக்காயல்’ என்னும் இந் நூலில் புன்னைக்காயல் என்னும் ஊரின் சமூக வரலாறு, அரசியல் வரலாறு, சமய வரலாறு அக மண்ணில் எப்படி எழுந்து, புற மண்ணில் ஊடாடி, எவ்வெவற்றைச் செழுமைப்படுத்தின என்று நூலா சிரியர் அமுதன் அடிகள் புலப்படுத்துகிறார்.
மிகச் செறிவான தமிழ்நடையில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் வரலாற்றாய்வு நூலுக்கான இலக்கணத்தைக் கொண்டது.
வரலாற்றில் புன்னைக்காயல்
ஆசிரியர் : அமுதன் அடிகள்
வெளியீடு : தியான இல்லம்
வேளாங்கண்ணி - 611 111
விலை : ரூ.150/-

www.keetru.com

Socio economic histroy of paravas in maabar coast

Research Paper:

Socio economic histroy of paravas in maabar coast


By: Rajesh K

Manonmaniam Sundaranar University -2016


Download Link

அகநானூறில் பரதவர் குறித்த சான்றுகள்


அகநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்


பாடல் 330

நெய்தல் திணை


கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும்,

வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும்,

இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும்,

தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர்

5

அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு

செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்!

செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன் நின்று,

தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்

எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும்,

10

காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ?

உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே;

குப்பை வெண் மணற் குவவுமிசையானும்,

எக்கர்த் தாழை மடல்வயினானும்,

ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு,

15

சிறுகுடிப் #பரதவர் பெருங் கடல் மடுத்த

கடுஞ் செலல் கொடுந் திமில் போல,

நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே!

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது. -உலோச்சனார்

விடிந்தகரை 3.03

நம்ம ஆத்தா இப்போ கடல்ல குளிக்காத மலையாள பகவதி 
……………………………………

பரதவ வர்மன் தான் வந்த நோக்கத்தை பூபாளன் ஆராச்சாரிடம் சொல்ல துவங்கினான். நமது அம்மாச்சி, அம்மச்சா, ஆத்தா தேர் முத்தாரம்மன் சன்னிதி முன்னாலே பொதஞ்சிகிடக்கு எல்லாரும் வந்து வாரக்கணக்கா இழுத்தும் அசைக்க முடியல்ல அதுக்கான பரிகாரம் பண்ணி தன்னிலைப்படுத்த சடங்கு சம்பிரதாயங்கள் செய்யணும்.

அதுவும் பாரம்பரிய இடத்திலிருந்துதான் செய்ய வேண்டியுள்ளது. அதான், அம்மச்சா ரதவீதியில மேக்கால உள்ள ஆச்சாரியார்கள் கோட்டாரத்தை திறக்கணும்…! என……. அரை குறையாய் எடுத்துக்கூற கேட்டும் கேட்காமலும் கோபாவேசத்துடன் சீறிப்பாய்ந்தார் பூபாளன் ஆராச்சார்.

என்னது அம்மச்சாவா.....?

அம்மச்சா இல்லை மாப்ளே! நம்ம ஆத்தா இப்போ கடல்ல குளிக்காத மலையாள பகவதி மாத்திப்புட்டானுவே மந்திரி தந்திரி இந்த நம்பூதிரிமாரு ஆத்தாவையே மாத்தியவங்க கங்கனையும் மாத்த மாட்டானுவளா….?

அதான் மாப்ளே !!
இந்த பயந்தாங்கொள்ளி ராசாமாருக்காக ஆராச்சார் தாத்தாவிடம் தரகனாய் வந்திருக்கீளோ!

இவகளுக்காக உங்க ஐயா செய்யாததா…. மாப்ளே !! நன்றி கெட்ட ராசமாருக்கு நாஞ்சில் நாட்டவனின் அருமை தெரியலை! தன் நாட்டு மக்களை காக்க தெரியாதவன் பரதவ தெய்வத்தை பகவதியாக மாத்தி முடிச்சவனுவ …… 

பேசப்பேச ஆராச்சாரின் முகம் சிவக்க கை, கால் நடுங்குவதையும் கவனித்த பரத வர்மனுக்கும் பதட்டம் ஏற்பட ஆராச்சார் விட்டபாடில்லை. குச்சிப் பிள்ளையாவே நீரு... உங்க ஐயா இரவீந்திர கங்கனார் இருந்திருந்தா இவனுவகளுக்காக இந்த பயந்தாங்கொள்ளி ராசாமாருக்காக பரிந்து பேச வந்திருப்பாரா?

நீ யாருன்னு உனக்கு தெரியிலியா ?
தன்னப்பத்தி தன் குலத்தபத்தி தெரியாதவனா நீ ?
ஆத்தாவும் ஐயாவும் இப்படியா வளத்தாவ பாரம்பரிய வீரம், பண்பாடு, அரசாங்க கவுரதி, இதெல்லாம் தெரியாத புழுக்கனா நீ ?
உன்ன இப்பவே கயித்தான் கிட்ட சொல்லி, கயித்த கட்டி கடல்ல தாத்துருவேன் பாத்துக்கோ! என அதற்கு மேல் பேச முடியாமல் கோபத்தை அடக்க தெரியாமல் முண்டை உதறி தோள்ல போட்டு கைத்தடி ஊன்றி எழுந்து நடந்து போய் கொண்டிருந்தார் பூபாளன் ஆராச்சார். 

அன்பாக கவுரதியாக பேசிய முதியவர் கண நேரத்தில் வெடித்து கிளம்பியது அதுவும் கடல்ல தாத்துருவேன்னு உறுதி பட சொன்னதை நினைத்ததுமே கங்கனுக்கு இனம் புரியாதொரு தற்காப்பு எண்ணம் ஆட்கொண்டது. 

தன்ன சுத்தி வலை ஏதோ விரிக்கப்படுகிறதோ என திடுக்கிட்டபடி சுத்து முத்தி பார்க்க நடந்து போய் கொண்டிருந்த முதியவர் தன் குரல் திரட்டி ஆணையிட்டார். 

ஒரே போடு தலை கொண்டயில போடு முனியா…….? 

குரல் கேட்டதும் மின்னும் வாளெடுத்து வீச காத்து நின்றார் கங்கன் பரதவ வர்மன்.

இப்போ சற்று முன்புதான் கங்கனாரின் கொண்டையை சிலாகித்த பூபாளன் கொண்டையிலேயே போடு என்றால் அதையும் தான் பார்ப்போம்.


உங்களை போல தயாராக நிற்கும்

........கடல் புரத்தான்........

தேர்மாறன் சரிதை


தூத்துக்குடி தூய பனிமயத் தாயின் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் 450 ஆண்டுகள் பழமையான திருச்சுரூபத்தை, 200 ஆண்டுகள் பழமையான சித்திரப்பொன் தேரில் வைத்து, நகரின் வீதிகளில் வலம் வரச் செய்யும் இந்தத்திருவிழா மிகவும் பிரபலியமானது. அந்தத் தேரைச் செய்வித்த பரதவர்களின் குலாதிபன் சிஞ்ஞோர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் என்பவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த போராட்டங்களையும், இந்தத் தேரை அவர் செய்வதற்குக் காரணமாயிருந்த நிகழ்ச்சிகளையும் இந்நாட்களில் நினைவில் கொள்வது சிறப்பானதாயிருக்கும்.

ஓர் கொற்றவனின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த இந்த பரதவர் சமுதாயம் ஒட்டுமொத்தமாகக் கிறிஸ்தவர்களாக மாறி நாலரை நூற்றாண்டுகளுக்குப் பின்பும், தங்கள் முந்தைய மதமான இந்து மதத்தின் நெறிகளை இன்றுவரைக் கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது இவர்களுடைய சிறப்பாகும். உலகெங்கிலும் இருந்து இவர்களுடைய சரித்திரத்தை ஆய்வதற்கென்று ஆராய்ச்சியாளர் வந்த வண்ணமுள்ளனர்.

இந்துப் பெண்களைப் போலவே பொட்டு, பூ வைத்துச் சேலையுடுத்தித் தரையில் அமர்ந்து ஆராதனை செய்வது, சடங்கு, சாஸ்திரம், சகுனம் பார்ப்பது கிறிஸ்துவ நெறிமுறைகளுக்கு முரணாக "முறை" எனப்படும். மாமன் அல்லது அத்தை மகனை அல்லது மகளை மணம் புரிவது, தாலி கட்டுவது, தாம்பூலம் மாற்றிக் கொள்வது போன்ற இந்த மண்ணின் சம்பிரதாயங்களை இன்றுவரைக் கடைப்பிடித்து வருகின்றனர். 

மேலும் இந்துக்களைப் போலவே, தம் உற்சவ தெய்வத்தைத் தேரில் வைத்துக் கயிற்றால் தேரினை இழுத்து நகர்வலம் வருவதும் தங்கள் பழமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதைக் காட்டுகிறது. பரதவர்கள், கிறிஸ்தவர்கள் ஆன பிறகும் கூடத் திருச்செந்தூர் திருமுருகனின் தேர் வடத்தைத் தொட்டுக் கொடுக்கும் வழக்கம் 18-ஆம் நூற்றாண்டு வரை இருந்திருக்கிறது. இந்த வழக்கத்திற்குக் கிறிஸ்தவ மத குருக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததனால் தங்களுக்கென்றே ஒரு தேரைச் செய்து கொண்டனர். இந்தச் சிறிய தேர் 1720-ஆம் ஆண்டிலிருந்து நகர் வலம் வந்துள்ளது. இதுவே கிறிஸ்துவ உலகில் கிறிஸ்தவர்களால் இழுக்கப்பட்ட முதல் தேர்.

1532-ஆம் ஆண்டு பரதவர் கிறிஸ்து மறையைத் தழுவிய நாள் முதல் பரதவர்களை ஆண்டு வந்த ஜாதித்தலைவர்களின் பரம்பரையில் 16-ஆவது ஜாதித் தலைவனாகத் தோன்றியவர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன். அவர் பாட்டனார் காலத்திலிருந்து இவர் சரிதையை அறிந்து கொள்ளுவது சிறப்பானதாய் இருக்கும்.

புன்னைக்காயல், கடல் வணிகத்திற்கு மட்டுமின்றி முத்துக்குளித்தலுக்கும், போர்த்துக்கீசிய மறை போதகர்களுக்கும், தலைமையாய் இருந்த காலம், 1745-ஆம் ஆண்டு வாக்கில் நடந்த ஒரு நிகழ்ச்சி. கடற்கரையில் ஒரு நாள் மாலை ஒரு கத்தோலிக்க மதகுருவும், பரதகுலத் தலைவனும் சந்தித்துக் கொண்டனர். முந்தியவர் முகத்தில் அருள் ஜொலித்தது. ஆனாலும் கவலை மண்டிக்கிடந்தது. பிந்தியவர் மந்திர ஜாலங்களுக்கு மனதைப் பறி கொடுத்துத் தன்னைப் பிசாசுகளுக்கு அர்ப்பணித்தவர். இருள் மண்டிக் கிடந்த இவர் முகத்தில் ஒருவித ஏக்கம் இருந்ததை குருவானவர் கவனிக்கத் தவறவில்லை.

குருவானவர் தன் கவலையை தலைவனிடம் கொட்டினார். கோவில் மற்றும் பள்ளிக்கூடத்துக்காக ஒரு பெரிய நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி இருந்தார். பிறகுதான் தெரிய வந்தது, அது கட்டிடம் கட்டத் தகுதியில்லாத வறண்டு போன ஒரு பழைய குளம் என்பது. ஒரு மலையை நொறுக்கிப்போட்டால் தான் அதில் இருந்த பள்ளத்தைச் சமப்படுத்த முடியும். இதைக் கேட்ட தலைவர் யாதும் பேசாமல் விலகிப்போய்விட்டார்.

மறுநாள் காலை, தன் பூசையை முடித்துவிட்டு, தான் வாங்கிய நிலத்தைப் பார்வையிடச் சென்ற குருவானவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பள்ளம் சீராக நிரப்பப் பட்டு நன்றாக இறுகிப் போயிருந்தது நிலம்.

அந்தக் குலாதிபனின் மந்திர ஜாலத்தினால் தான் இந்தச் செய்வதற்கரிய காரியத்தைச் செய்திருக்க முடியும் என்பதை உணர்ந்த குருவானவர் அந்தக் குலாதிபனின் மனம் திரும்புதலுக்காகப் பிரார்த்திக்கலானார்.

அந்தக் குலாதிபனின் பெயர் தொன் மைக்கல் பேதுரு தெக்ரூஸ் கோம்ஸ். இவர் அதிபனாய் இருந்த காலம் 1736- இல் இருந்து 1750 வரை. இவர் காலத்தில் பிரபலமாயிருந்த அலெக்ஸ் என்பவனின் மந்திர ஜாலங்களால் ஈர்க்கப்பட்ட இவர், தானும் பேய்களுக்கு அடிமையானார்.

இராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை பரந்து கிடந்த முத்துப் படுகைகளின் அதிபதியாக விருந்த இவருக்கு மன்னாரில் முத்துச்சிலாபம் நடக்கும் போது தன் இல்லத்தில் இருந்தே தன் மந்திர சக்தியால் சுடச் சுட அறுசுவை உணவு வகைகளைத் தருவித்து உண்பார்.

1747-ஆம் ஆண்டு முத்துக்குளித்துறையைக் கைப்பற்ற முகமது அலி என்பவன் தன் படையுடன் வந்து தாக்கிய போது தன் சிறு படையை வைத்து அவர்களை விரட்டியடித்ததுடன், கடலில் நின்ற அவன் கப்பல்களையும் திணறடித்துக் கொளுத்தியதுடன், எதிரிகளுக்கு எதுவும் முதலாய்க் கிடைக்காதவாறு தன் மந்திரசக்தியால் கடலில் புகுத்தி வைத்திருந்தார். (பனிமய மாதா 1947)

பரம்பரை பரம்பரையாகப் பேசப்பட்டு வரும் இச்சம்பவங்களுக்குச் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் உண்மை இல்லை என்று சொல்லிவிடமுடியாது. இத்தலைவன், பிசாசுகளிடம் செய்த ஒப்பந்தத்தை மீறி, பிசாசுகள் ஓய்ந்த வேளையில் கோயிலுக்குள் புகுந்து விட, இதைக் கவனித்துவிட்ட பிசாசு பூமி அதிரத் தரையில் ஓங்கி அடித்து, தன் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும், கோயிலுக்குள் சென்றுவிட்ட இவர், தன் அந்திய காலத்தைக் கோயிலிலேயே கழித்துக் கடைசியில் நற்கதி எய்தியதாகவும், பரம்பரை பரம்பரையாகப் பேசப்பட்டு வருகிறது.

1750 ஆம் ஆண்டு இவர் மரணத்திற்கு முன்னர் இவருக்கு மந்திரத்தில் குருவாய் இருந்த அலெக்ஸ் என்பவன் தனிமையில் விரக்தி யடைந்து, ஒரு புளிய மரத்தைப் பிளக்க வைத்து, பிளவின் நடுவில் நின்று கொண்டு பிளந்த மரம் திரும்பவும் மூடிக்கொள்ளுமாறு உத்திரவிட்டுத் தன்னைத் தானே மூடிக் கொண்டதாகவும், பேசப்படுவது பாரம்பரியம்.

முரண்டு பிடிக்கும் பிள்ளைகளைச் சமீப காலம் வரை பெற்றோர்கள் பேய்மரம் எனும் பேரைச் சொல்லி அடக்கி இருக்கின்றனர். வீரபாண்டியன் பட்டினத்தில் இவரது இல்லம் இருந்ததால் அந்நகர் அதிக மாந்திரீக மயமாக இருந்ததாகவும் சொல்லப் பட்டு வருகிறது.

தீமையிலும் நன்மை கண்ட நம் தலைவருக்கு, தோனமரிய அன்னா ஐடா தெக்குரூஸ் கோமஸ் பூபால ராயி என்ற மகள் இருந்தாள். தலையில் முக்காடும், வெண் துப்பட்டியும், கழுத்தில் உத்தரியமும் போட்டு நிற்கும் இவளுடைய ஆளுயர ஓவியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்திருமகள் குதிரை ஏற்றம், மல்யுத்தம் இவற்றில் பிரபலமாக விளங்கிய புன்னைக்காயல் அந்தோணி தெக்குரூஸ் வாஸ் என்பவரை மணந்து தன் தந்தையின் அரியணையைக் கணவனுக்கு ஈந்தார். இவர் ஆட்சிக்காலம் 1750 முதல் 1779 வரை. 

இவர் ஆட்சியின் போது தன் மாமனார் விட்டுச் சென்ற மாந்திரீக ஏடுகள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினார். தன் மாமனாரால் கவனிக்காமல் விடப்பட்ட கோயில்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லறைத் தோட்டங்களையும் சீர்படப் புதுப்பித்தார். இவரது ஆட்சியில் டச்சுக்காரர் இவரிடம் தங்கக் காசுகள் கடனாய்ப் பெற்ற ரசீதுகள், டச்சுக்கப்பலில் யுவான் மாதடியான் எனும் பரதவனைச் சிறைப்பிடித்து வைத்த டச்சுக்காரருக்கு 6 சவரன் அபராதம் செலுத்தி விடுவித்த ரசீதுகளையும், டச்சு மொழியில், "இளவரசருக்கு" என விளித்து, கொழும்பிலிருந்து டச்சு ஆளுநர் எழுதிய மடல் ஆகியவற்றை இன்னும் "பாண்டியபதி' கோப்புகளில் காணலாம்.

மனமொத்து வாழ்ந்த அன்னா ஐடா, தொன்கஸ்பார் அந்தோணி தம்பதியருக்குத் தலைமகனாக 1753- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி "தேர்மாறன்" என்று பேரெடுத்த தொன்கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் எனும் இளவல் தூத்துக்குடியில் பிறந்தார்.

இவ்விளவல் வீரம், கொடை, கல்வி, பக்தி முதலியவைகளில் எவரும் போற்றத்தக்கவர் என்பதை இவர் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. பனிமயமாதா ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் தூய தங்கத்தினால் ஆன பூசைப்பாத்திரம் (Chalice) 1772-ஆம் ஆண்டு இவர் திருமண தினத்தில் காணிக்கையாக அளிக்கப்பட்டது. இத்திருமணத் தம்பதியரின் பெயர்கள் பொறித்த இந்தப் பாத்திரம் அன்னையின் விழா அன்று மேதகு ஆயர் அவர்களால் நடத்தப்படும் திருவிழா பாடற்பூசைக்கு மட்டுமே வெளியில் எடுக்கப் படுகிறது என்பது இதன் சிறப்பு. தன் தந்தையின் மரணத்திற்குப் பின் 1779-ஆம் ஆண்டு தனது 26-ஆவது வயதில் பட்டத்திற்கு வந்தார்.

1658-ஆம் ஆண்டு தூத்துக்குடியைக் கைப்பற்றிய உலாந்தர் (டச்சுக்காரர்) தொடர்ந்து பரதவருக்கும், அவர்கள் தழுவிய கிறிஸ்தவ மறைக்கும் விளைவித்த இடைஞ்சல் கண்டு வெறுப்புற்ற இம்மன்னன், சென்னையிலிருந்து கிழக்கிந்திய ஆங்கிலக் கம்பெனியுடன் உடன்படிக்கை செய்து கொண்டு தூத்துக்குடியை விட்டுத் தன் பரிவாரத்துடன் "மணப்பாடு" சென்றுவிட்டார். பரதவரின் ஏகோபித்த ஆதரவால் உந்தப்பட்ட ஆங்கிலேயர், தம் சேனையுடன் வந்து டச்சுக்காரரை தூத்துக்குடியை விட்டுத் துரத்தினர். மணவையிலிருந்த இம்மன்னனுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது.

ஆங்கிலப் படையின் தளபதி கேப்டன் வீலர் என்பவர், 1782-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22-ஆம் தேதி இந்த பரத குலாதிபனுக்கு எழுதிய கடிதத்தில் தங்களுடைய உதவி எங்களுக்கு அதிக அவசரமாகத் தேவைப்படுவதால், தங்களை எங்கள் பிள்ளையாகப் பாவித்து அவ்வாறே நடத்தி வருவோம். ஆகவே நாங்கள் அனுப்பியுள்ள பிரிட்டிஷ் கொடியை ஏற்றிக் கொண்டு பல்லக்கில் அமர்ந்து க்ஷேமமாய் வந்து சேரவும்" என்று காணப்படுகிறது. (பாண்டியபதி கோப்பு.)

நாட்டை இழந்திருந்தாலும், மன்னார் வளைகுடாவில் இருந்து முத்துப்படுகைகளுக்கும் தீவுகளுக்கும் தன் முன்னோரைத் தொடர்ந்து அதிபதியாய் இருந்தார். முத்துப்படுகைகளின் வரைபடங்களும், அவற்றைச் சென்றடையும் மார்க்கங்களும், (Sailing Directions to Pearl Banks) பாண்டியபதி கோப்புகளில் இன்றும் காணலாம். முத்துச் சிலாபங்களில் தனக்குக் கிடைக்கும் மானியத்தில் பாதியை, தன் முன்னோரைப்பின் பற்றி, கோயில்கள் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு ஈந்துள்ளார். இவர் ஆட்சியில் மிகவும் அதிக அளவில் முத்துக்குளித்தல் நடைபெற்றதால் கலைநயத்துடன் கூடிய ஒரு பெரிய தேரைச் செய்வது இவரால் சாத்தியமாயிற்று.

இவர் வெள்ளையனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நாயக்க குல வீரனுக்கொரு தோழன். இவ்வேந்தனின் கப்பலில் கட்டபொம்மன் சென்னைக்குப் பலமுறை சென்றிருக்கிறார், பாஞ்சாலங்குறிச்சி யுத்தத்தின் போது அடைக்கலம் புகுந்த ஊமைத்துரையை, தன் பூர்வீகச் சொத்தான பாண்டியன் தீவில் வைத்துப் பாதுகாத்து அனுப்பியிருக்கிறார். அந்நியரால் ஆபத்து வந்தபோது தன் பொன், முத்து, வைரங்களுடன் கட்டபொம்மன் வழிபட்ட தங்கத்தினாலான சுப்பிரமணிய சுவாமி விக்கிரஹம், மற்றும் பொன் நாணயங்களையும், தன், "பாண்டியபதி"யில் மாளிகையின் பின்புறம் புதை பொருளாய்ப் புதைத்து வைத்துள்ளார்.

(மிகவும் நொடிந்த நிலையில் இருந்த கட்டபொம்மனின் வழித்தோன்றலும், ஜாதித்தலைவரும் "பாண்டியபதி"யில் சந்தித்துப் பேசி, இப்புதையலை எடுக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பின் கைவிட்டனர் என்பது 1944-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓர் உண்மையான நிகழ்ச்சி--ஆசிரியர்)

கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கெதிராய் வெகுண்டெழுந்தபோது வெடிமருந்துகளைக் கட்டபொம்மனுக்குக் கொடுத்து உதவி இருக்கிறார். ஏனெனில், வெள்ளையரை நாட்டை விட்டு விரட்டுவதில் இருவருக்கும் ஒன்றுபட்ட கருத்துக்கள் இருந்தன. 1799-ஆம் ஆண்டு கட்டபொம்மனைக் கயத்தாறில் ஒரு புளிய மரத்தில் ஆங்கிலேயர் தூக்கிலிட்டுக் கொன்றபின், கோபமுற்ற மக்கள் அவர் தம்பி ஊமைத்துரையை ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுவித்தனர். பின்னர் தொன் காபிரியேல், ஊமைத்துரைக்கும், மருது சகோதரர்களுக்கும் வெடி மருந்து, துப்பாக்கி முதலிய ஆயுதங்கள் வரவழைத்துக் கொடுத்திருக்கிறார். (தினமலர் 23-11-1999)

ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சியில் புதிதாக ஒரு கோட்டையைக் கட்டினான். அடுத்து நிகழ்ந்த போரில், கோட்டையைத் தகர்த்தெறிந்து உள்ளே சென்று பார்த்த ஆங்கிலத் தளபதி கர்னல் 'வெல்ஷ்' என்பவன், அங்கே இருந்த நவீன ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், கண்டு இவையெல்லாம் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தன என்று வியந்துள்ளான்.

மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. ராஜய்யன் தனது ஆய்வு நூலில் "பரத ஜாதித் தலைவரால் வழி நடத்தப்பட்ட பரதர் எனும் மீனவர் சமுதாயம் சுதந்திரக் கிளர்ச்சியில் ஈடுபட்டது மட்டுமின்றி பீரங்கிகளும் வெடிமருந்துகளும் கொடுத்து உதவி ஒரு பயங்கரப் புரட்சிக்கு வித்திட்டனர்." என்று எழுதியுள்ளார். (The Paravas. The Fisheermen Community led by Jathi Thalaivan, not only joined the Rebellion, but supplied guns and Gun Powder for the Promotion of the Struggle.)

மேலும், காடல்குடி எனும் சிற்றூரில் இரகசியமான வெள்ளையர் எதிர்ப்புக் கூட்டம் திருநெல்வேலி, இராமநாதபுரம் போன்ற இடங்களிலிருந்து வந்திருந்த தன் கீழுள்ள சிற்றரசர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிறகு ஆங்கிலேயர், ஊமைத்துரையைத் தூக்கிலிட்டுக் கொன்றபின், அவருக்கு வெடிமருந்துகள் கொடுத்து உதவியதாகத் தொன் கபிரியேலையும் தேடினார்கள். ஆனால் இவர் மாறுவேடம் போட்டுக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். (தினமலர் 28-11--99)

அந்த நேரத்தில் இவர் பிடிபட்டிருந்தால் இவரையும் தூக்கிலிட்டிருப்பார்கள். தொன் கபிரியேல் சார்பில் தூத்துக்குடியில் அடப்பனார் எனும் ஊர்க்காவலர், கவிராயர் என்றழைக்கப்பட்ட சேவியர் லெயோன், தஞ்சை, யாழ்ப்பாணம் உட்பட்ட இடங்களூக்குச் சென்று ஊமைத்துரைக்கு ஆதரவாக அணி திரட்டியுள்ளார். இன்பக்கவிராயர் 21 ஆண்டுகள் பிரிட்டிஷார் கையில் அகப்படாமல் தலைமறைவானார். (தினமலர் 28-11--1999)

திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அதிபராயிருந்த ஸ்டீபன் லஷ்ஷிங்டன் என்பவன் கிழக்கிந்திய ஆளுகைக்கு எதிராய், கபிரியேல் பயங்கர சதிகளில் ஈடுபட்டதாயும், அவரது ஆவணங்களையும், சலுகைகளையும் ரத்துச் செய்து, அவரையும் அவர் மக்களையும் கடுமையாகத் தண்டிக்கும்படி உயர் அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்தார். (14--2--1799 -இல் சென்னை மாகாணத்தின் வருவாய்த்துறை ஆவணத் தொகுப்பு 219-ஆம் பக்கம் 12554-இல் கண்டுள்ளது.

இது போதாது என்று பிரிட்டிஷாருக்குப் பிடித்த 19 தனவந்தர்கள், தொன் கபிரியேல் மீது 15 விதமான குற்றச்சாட்டுக்களைக் கூறி அவரைப் பதவி நீக்கம் செய்து தண்டிக்குமாறு கலெக்டரைக் கேட்டிருந்தனர். ஆனால் கொழும்பில் இருந்த அதிகாரிகள் இதற்கு இணங்கவில்லை. ஏனெனில், இவர் இல்லாமல் முத்துச் சிலாபம் நடக்கமுடியாது என்பதால் இவர் எதிர்பார்த்த தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார். (வருவாய்த் துறை ஆவணம்--மேல் கண்டபடி).

இவருக்கு மட்டுமே உரித்தான முத்துப்படுகைகளின் இரகசியங்களை வைத்து மிகவும் சிறப்பான முறையில் முத்துச் சிலாபங்கள் நடந்தேறின. ஆனாலும் இவருக்குக் கிடைக்க வேண்டிய மானியம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இவர் மீது குற்றம் சுமத்திய 19 பேரும் இவருடன் சமாதானம் செய்து கொள்ளுமாறு ஆட்சியாளரால் அறிவுறுத்தப்பட்டனர்.

வெள்ளையரிடமிருந்து உயிர் தப்பியதற்கு நன்றியாகவும், பனிமய அன்னையின் திருச்சுருபம் தூத்துக்குடி நகரை அடைந்து 250-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வண்ணமாகவும், பொன்னுலகில் இருந்து இறங்கியதா என நினைக்கத் தக்க சித்திரத் தேரைச் செய்வித்து வடம் தொட்டுக் கொடுக்கும் பாக்கியத்தைப் பேணியதற்காகவும் இவரைத் தேர் மாறன் என அழைக்கிறது தமிழர் உலகம்.

திருச்சுருபம் வந்தடைந்தது 1555-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி, 250 ஆம் ஆண்டு நிறைவாக, 1805- ஆம் ஆண்டு இழுக்கப்பட வேண்டிய இத்தேர் சித்திர வேலைப்பாடுகளைச் செய்து முடிப்பதில் ஏற்பட்ட 7மாத சுணக்கத்தின் காரணமாக 02--02--1806-இல் முதல் முறையாக நகர் வலம் வந்தது.

தூத்துக்குடியிலுள்ள இவரது தலைமை இல்லமாகிய "பாண்டியபதி" யில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களின்படி, கோவிலில் உள்ள ஆசந்தி சுருபம், பிடிபட்ட ஆண்டவர் சுருபம், உயிர்த்த ஆண்டவர் சுருபம், தந்தத்தினால் ஆன சிலுவைகளும், தந்தத்தினால் ஆன குடில் சுரூபங்களும் அன்னை பக்தர்களின் விசேஷ வணக்கத்திற்காக தேவ அன்னையின் திருத்தலைமுடிகளில் ஒன்றும், இவருடைய காலத்தில் தான் அன்னையின் ஆலயத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.

நமது அன்னையின் திருச்சடங்கிற்குப் பொன் மகுடம், வைர டோலக், முத்துமாலைகள் அணிவித்து, அலங்கரித்தவரும் இவரே. அன்னையின் திருத்தலைமுடி வந்து மேல் விபரம், 24-04--1790--இல் கொச்சி மறைமலை ஆயர், அஞ்சங்கோ என்ற ஊரில் இருந்த இம்மன்னனுக்கு எழுதிய கடிதங்கள் காணக்கிடைக்கிறது.

1792-ஆம் ஆண்டு கால்வீனிய பிரிவின் சபையின் டச்சுப் பாதிரியார், ஜான் டேனியல் ஜெனிக்கே என்பவர் மே மாதம் 4-ஆம் தேதி இத்தலைவனைச் சந்தித்து தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளதாவது: "On May 4th, I with the Chief of Paravas Caste, whom the Call Prince and conversed with him along time. He lives in European manners, reads his Bible assiduously and his knowledge excellent." என்று கூறியுள்ளார்.

தன் வாழ்வில் இடைவிடாப் போராட்டங்களை முடித்துக்கொண்டு 180? ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் தேதி தனது -- வது வயதில் கர்த்தரில் நித்திரையடையச் சென்றார். இவரது சடலம், புனித இராயப்பர் ஆலயத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் கல்லறை மீது சித்திர வேலைப்பாடுகளுடன் சிறு கருங்கல் மண்டபம் இருந்தது. பரதவர்களின் பெருமைக்குச் சான்றாய்ப் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த அழகிய மண்டபம், புனித தெலச பள்ளிக்கூடம் கட்டும் சாக்கில் இடித்துத் தள்ளப்பட்டது. போர்த்துக்கீசிய மொழியிலும், பழந்தமிழ் மொழியிலும் பொறிக்கப்பட்டு அரச முத்திரையுடன் கூடிய இவரது கல்லறைக்கல், இன்னும் தெலசா பள்ளி மைதானத்தில் நடைபாதைக்கல்லை ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பதைப் பல நாளிதழ்கள் கவலை தெரிவித்து எழுதியும் கூட இதைப் பாதுகாக்க ஒருவரும் முன்வரவில்லையே!

இம்மன்னன் புதையுண்ட இடத்தில் தான் இவரது பெற்றோரும் மனைவியும் இவர் பின்னர் வந்த குலாதிபர்களும் 1914-ஆம் ஆண்டு வரை அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறப்புகள் பல வாய்ந்த இம்மன்னன், முன் உலவி வந்த இப்பகுதியில் இன்று நாம் வாழ்வதே பெருமையளிப்பதாகும். நாட்டுப் பற்றோடும் இறை பக்தியுடனும் உலா வந்த இம்மன்னனை இந்த இனிய நாட்களில் நினைவு கொள்வோமாக.

- கேப்டன் பெர்க்மான்ஸ் மோத்தா

கொற்கைக் காசுகள்

கொற்கைப் பாண்டியர்கள் வெளியிட்ட காசுகள் நீண்ட சதுர காசுகளாகவும் பின் தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டபின் வெளியிடப்பட்ட காசுகள் பலவிதமான உருவம் தீட்டப் பெற்ற சதுர வடிவக் காசுகளாகவும், வட்ட வடிவிலுமான காசுகளாகவும் இரு வேறு வடிவில் உள்ளன. கொற்கை அஃக சாலையில் அச்சிடப்பட்டச் செம்பு காசுகள் எழுபது ஆண்டுகள் முன்புவரை தாமிரபரணி ஆற்றங்கரையில் இருபக்கங்களிலும் அமைந்த சிருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, தென்திருப்பதி, ஏரல், ஆத்தூர் மற்றும் மாறமங்கலம், பழையகாயல் போன்ற இடங்களில் ஏராளமாகக் கிடைத்தன. 

கொற்கையில் வணிகம் செய்வதற்காக மரக்கலங்களில் பன்னாட்டவரும் வந்தனர். அவர்களது நாணயங்களும் கொற்கை அகழ்வாய்வின் போதும், கொற்கையின் சுற்றுப்புறத்திலும் கிடைத்துள்ளன. ரோமானியர்கள், கிரேக்கர்கள், அரேபியர் நாணயங்கள் மற்றும் ஈழக் காசுகளும் கிடைத்துள்ளன. திருநெல்வேலி ஆட்சியராக இருந்த பக்கிள் துரையவர்கள், 1873 ம் ஆண்டில் சிருவைகுண்டத்தில் அணைகட்டி தாமிரபரணி நீரை பாசனத்திற்காகக் கால்வாய் வெட்டி திருச்செந்தூர் வரை கொண்டு செல்லும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்த போது, ஆழ்வார் திருநகரி அருகே ஒரு சிறிய செப்புப் பாத்திரத்தில் அரேபிய பொற்காசுகள் அடங்கிய புதையலை பணியில் ஈடுபட்டிருந்த வேலையாட்கள் கண்டெடுத்தனர். இவைகள் கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபுக் காசுகள் ஆகும். 

அரேபிய தினார், திரமன், ஈழக்காசு, உரோம் நாட்டு வெள்ளி, தங்க நாணயங்கள் முதலான அந்நிய நாணயங்கள் பாண்டிய நாட்டில் வழக்கிலிருந்தது. பராக்கிரமபாகு பாண்டிய நாட்டை வென்ற போது, கஹபணம் (Kaha-Pana) என்ற ஈழக்காசு பாண்டிய நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டது. பாண்டிய நாட்டிலும், கொற்கையிலும் உரோமானிய நாணயங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை கி.பி. 98 ஆம் ஆண்டைய அகஸ்டஸ் நேரவா என்ற உரோம் நாட்டு மன்னனின் காலத்திய காசுகள். உரோம் நாட்டு மன்னர்களான நீரோ கி.பி. 46 கொனேரியஸ் ஆர்க்கேடியஸ் (கி.பி.96) ஆகியோரின் நாணயங்கள் மதுரையில் கிடைத்துள்ளன. 

திருநெல்வேலி காசுகள் நூல்: 

வேலூர், டேனிசு லூத்தரன் சபையைச் சேர்ந்த கிறிஸ்தவ மறைபணியாளர் சி. உலாவேந்தல் என்பவர் கொற்கைப் பாண்டியர்களின் காசுகளையும், மதுரைப் பாண்டியர்களின் காசுகளையும் ஆய்ந்து முதன் முதலாக தென் இந்தியவில் பழங்காசுகளைப் பற்றிய நூலான திருநெல்வேலி காசுகள் என்ற நூலை வெளியிட்டார். இவரது நூலில் கொற்கையிலும், மதுரையிலும் வெவ்வேறு மன்னர்கள் இருந்து கொண்டு தமக்கெனத் தனித்தனி காசுகளை வெளியிட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். பழம் பாண்டியர் காசுகள் மதுரையிலும், கொற்கையிலும் வெளியிடப்பட்ட காசுகள் எல்லாம் ஒன்று போலவே உள்ளன. ஆனால் பிற்காலத்தில் இரு இடங்களிலும் வெளியிடப்பட்ட காசுகள் வெவ்வேறு தன்மைகளையும், வெவ்வேறு விதமான சின்னங்களையும் உடையனவாகத் திகழ்கின்றன. பிற்காலத்தில் காணப்படும் வெவ்வேறு விதமான காசுகள், கொற்கை மன்னர்கள் பரதவ சாதித் தலைவர்களாக, சிற்றரசர்களாக குருகிப்போனக் காலத்தில் அவர்கள் தமக்கென்ற நாணயம் அச்சிட்டு உள்ளதாகத் தெரிகிறது. 

கொற்கைக் காசுகள்: 

பாண்டிய மன்னர்கள் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு இருந்த மட்டும் நீண்ட சதுர வடிவிலான காசுகள் அச்சிடப்பட்டன. பிற்காலத்தில் கொற்கையில் பரதவச் சிற்றரசர்கள் வெளியிட்டக் காசுகள் பெரும்பாலும் செப்புக்காசுகளாகவே இருந்தன. கொற்கைப் பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட நீண்ட சதுரகாசுகளில் பானை, சக்கரம், இணைக்கயல், சங்கு, கொடி, தொரட்டி, நிறைகுடம், சுவத்திகம் போன்ற சுமார் எட்டு அல்லது அதற்கும் குறைவான வடிவங்கள் தீட்டப்பட்டும், பின்புறம் மீன் உருவத்தைக் காட்டும் கோடுகளால் ஆன வடிவமும், சில காசுகளில் எருதும், தொட்டியில் சிறு செடியும் பொறிக்கப்பட்டுள்ளன. சில காசுகளில் குல சேகரன், க, சுந், சுந்திர, வி முதலிய எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. 

இவை கிபி. 3௦௦ ஆம் ஆண்டு வரைக் கொற்கையில் அச்சிடப்பட்டிருக்கலாம் என அறிஞர் உலாவேந்தல் குறிப்பிட்டுள்ளார். பிற்கால கொற்கைப் பாண்டியர்களின் காசுகள், மதுரை பாண்டிய அரசர்களின் காசுகள் சதுர வடிவமும், வட்ட வடிவமும் உடையனவாக இருந்தன. சில காசுகள் மிளகு வற்றல் விதை அளவு சிறிது. இதில் அதிகமான சின்னங்கள் இல்லை. இக்காசுகளில் சுவத்திகம், தாமரை, யானை, கண்ட கோபாரி, திரிசூலம், பிறை, நண்டு, மயில் வைணவத் திருச்சின்னங்கள் முதலியன காணப்படுகின்றன. 

மதுரைக் காசுகள்: 

பாண்டிய மன்னர்கள் மதுரைக்கு இடம் பெயர்ந்த பின்னர் கொற்கையில் காசுகள் அச்சடிப்பதை நிறுத்திவிட்டு, மதுரையிலேயே அச்சிட்டனர். இவை சதுர வடிவிலும், வட்ட வடிவிலும் உள்ளன. பாண்டிய மன்னர்கள் ஆதியில் சைவர்களாக இருந்தனர். பின்னர் பௌத்தர்களாகவும், சமணர்களாகவும் இருந்தனர். பின்னர் வைணவர்களாகவும் மாறினார். வைணவ சமயத்தில் நம்பிக்கைக் கொண்டு அதிவீரராமன், வரதுங்கராமன், வரகுணராமன் முதலிய பெயர்கள் தாங்கிய தோடுதங்கள், காசுகள் வைணவச் சின்னமும் பொறித்துள்ளனர். பல காசுகளில் கருடாழ்வார் உருவமும் பொறித்துள்ளனர். 

தென்னிந்திய நாணயவியல் ஆய்வுகள்: 

தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக்கழகத் தலைவர், திரு, இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சங்ககால கொற்கைப் பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்களின் ஆய்வுகள் பற்றிய முடிவுகளை சமீப காலமாக நாளிதழில் செய்திகளாக வெளிவந்துள்ளன. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நாணயவியல் அறிஞர் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பழமையான நாணயங்களை ஆய்வு செய்து நூல் வெளியிட விரும்பியதால் அவரது பணிக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும் நோக்குடன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம்மிடம் இருந்த சங்க காலப் பாண்டிய நாட்டு நாணயத்தை சுத்தப்படுத்தி ஆய்வு செய்தார். 

அந்த நாணயத்தின் முன்புறம் கீழ் பகுதியில் யானை ஒன்று வலப்புறம் நோக்கி நிற்கிறது. யானையின் மேல் இடப்பக்கத்தில் மா என்ற மவுரிய பிராமி எழுத்து உள்ளது. அதற்கு அடுத்து தமிழ் பிராமி வகையை சேர்ந்த ற, ன் என்ற எழுத்துகளைச் சேர்ந்து மாறன் எனப் படிக்க முடிவதாகக் கூறியுள்ளார். நாணயத்தின் பின்புறம் நடுவில் வேலியிட்ட மரம் போன்ற சின்னமும், இதன் வலது பக்கத்தில் இரண்டு மரக்கிளைகளும், வலது பக்கத்தின் அடிமூலையில் ஆறு முகடுகளைக் கொண்ட மலை சின்னமும் உள்ளது. இதன் காலம் கி.மு. 5 ம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

இந்த நாணயம் இரண்டு தகடுகளில் தனித்தனியாக அச்சிடப்பட்டு ஈயத்தைப் பின் பகுதியில் ஊற்றி இரு தகடுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கொற்கைப் பாண்டியன் வெளியிட்டிருக்கலாம். (செய்தி: தினத்தந்தி 23.3.20216) 

திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சுத்தப்படுத்தி ஆய்வு செய்த பாண்டிய நாணயம் செம்பு உலோகத்தால் ஆனது. எடை 4.3 கிராம், 1.7 செ.மீ நீளமும், 1.5 செ.மீ அகலமும் அளவு கொண்டது. நாணயத்தின் முன்புற மத்தியில் சிதைந்த உருவம் ஒன்று உள்ளது. அதன்மேல் 2 தமிழ் பிராமி எழுத்துக்கள் தென்படுகின்றன. அதன் கீழ்பகுதியில் நீள்சதுர வடிவில் ஒரு தொட்டி உள்ளது. தொட்டியின் மேல் விளிம்பை இரண்டு ஆமைகள் தொட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று எதிர் நோக்கியுள்ளன. தொட்டியின் கீல்விளிம்னைத் தொட்டுக் கொண்டு இரண்டு ஆமைகள் உள்ளன. 

நாணயத்தின் விளிம்பை ஒட்டி வேலியிடப்பட்ட மரச்சின்னம் உள்ளது. நாணயத்தின் மேல் மூலைப் பகுதியில் தமிழ் பிராமி எழுத்தில் மாறன் என்று அச்சிடப்பட்டுள்ளது. நாணயத்தின் பின்புறம் கோட்டு வடிவ மீன் சின்னம் அழகாக உள்ளது. இரண்டு பெரிய மீன்கள் ஒன்றையொன்று எதிர் நோக்கி நின்ற நிலையில் உள்ளன. இந்த இரட்டை மீன்கள் சங்ககாலக் கொற்கைப் பாண்டியர்களின் சின்னம். இந்த நாணயத்தின் காலம் கி.மு. 3 ம் நூற்றாண்டாக இருக்கலாம். (தகவல்: தினத்தந்தி 30.8.2016) 

கொற்கைப் பாண்டியரின் செழியன் பெயர் பொறித்த வெள்ளி நாணயம் ஒன்றை 2 கிராம் எடையுடன் நீள் சதுரமாவும், ஒழுங்கற்றதாகவும் உள்ளது. 1.5 செ.மீ அகலமும் 1.6 நீளமும் கொண்டதாக உள்ளது. அந்த நாணயத்தின் முன்பகுதியின் வலப்பக்கம் மன்னர் தலையின் மேல் கீரிடம் உள்ளது. அந்த கீரிடத்தை அழகு செய்யும் ஒரு நீண்ட குஞ்சம் நெற்றியிலிருந்து பினோக்கி பின்னோக்கி பின்புறம் கழுத்து வரையில் உள்ளது. முகத்திற்கு எதிரே மேலேயிருந்து கீழாக நான்கு எழுத்துக்கள் தமிழ் பிராமி முறையில் செழியன் எனப் பொறிக்கப்பட்டுள்ளன. 

நாணயத்தின் நடுவில் ஒரு மனிதன் தலையைக் குனிந்து கொண்டு இருக்கிறான், அவன் முன்னங்காலுக்கு அருகில் யானை போன்ற ஒரு சின்னம் உள்ளது. அந்த மனிதன் இடுப்பிலிருந்து தோள்பட்டையின் கீழ் இரண்டு கைகளுக்கு இடையிலிருந்தும், கயிறுகள் மேல் நோக்கி செல்வது போலவும் அச்சாகி உள்ளது. இது முத்து சிப்பி சேகரிக்கும் நிகழ்வை ஒத்த்ப்படமாகும். 2300 ஆண்டுகளுக்கு முன் கொற்கைப் பாண்டியர்கள் கொற்கையில் முத்துக்குளித்த நிகழ்வினை நினைவுப்படுத்துகிறது. 

அசோக பேரரசன் தன் கல்வெட்டில் கூறியுள்ள தாம்ரபருணி நாடு கொற்கைப் பாண்டியர்களது நாடுதான் என்பதை வருங்காலக் கண்டுபிடிப்புகள் உறுதி செய்யும் காலம் வருகிறதோ எனக் கருதுகிறேன் என ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். (தகவல்: தினத்தந்தி 13.10.2016) மேற்குறிப்பிட்ட திரு.கிருஷ்ணமூர்த்தியின் மூன்று ஆய்வுத் தகவல்களையும் நோக்கும் பொழுது சங்ககாலக் கொற்கை பாண்டிய மன்னர்கள் மாறன். செழியன் என்றப் பெயர் கொண்டவர்கள் பரதவர்களே எனத் தெளிவாகத் தெரிகிறது. 

தலைநகர், மதுரைக்கு மாறிய பின் வெளியிட்ட நாணயங்களின் சின்னங்கள், கடல்படு பொருட்களையும், கடல்வாழ் உயிரினங்களையும் கொண்டிருக்காமல், வைணவ மதச்சின்னங்களைத் தாங்கி வந்துள்ளமையால் பிற்காலப் பாண்டிய மன்னர்கள் பரதவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளது. அந்த காலங்களில் பரதவர்கள் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள். 

மதுரைக்கு தலைநகர் மாறிய பின்பே கொற்கைப் பாண்டிய அரசர்கள், பரதவ சிற்றரசர்களாக நிலையில் தாழ்ந்து போயினர் என்பது தெளிவு. மூவேந்தர்கள் காலத்தில் பேரரசன் கீழ் சிற்றரசர்கள் அடங்கி திறை செலுத்தி தங்கள் பகுதியை ஆட்சி செய்தனர். நாயக்கர் அரச காலத்தில் பாளையக்காரர் முறை உருவாக்கியது. ஆங்கிலேயர்கள் காலத்தில் சமின்தாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இந்தியாவில் பத்து பெரிய சமஸ்தானங்களிலும், 601 சிற்றரசுகளும் இருந்ததாக பண்டித நேரு அவர்கள் தனது கண்டுணர்ந்த இந்தியா (Discovery of India) எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சரித்திர ஆய்வாளர் டாக்டர். சிகான் லரிப் எழுதிய முத்துகள் வரலாறு பாகம் 5 நூலில் குறிப்பிட்டுள்ளதாவது, வரலாற்று பேராசிரியர்களும் திராவிட இன ஆய்வாளர்களும் பாண்டிய தேசத்தின் பழமை வாய்ந்த அரசர்கள், பரதவ குலத்தைச் சேர்ந்தவர்கள் எனும் கருத்தை ஆதரிக்கின்றனர். 

இந்தக் கூற்றின்படி பரதவர்கள் அரச பரம்பரையினர் என்றும், கடலோடிகள் என்றும், தமிழகத்தில் போர்க்குணம் மிக்க இனம் என்றும் கருதப்படுகின்றனர். கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த பாண்டிய அரசை நிறுவியவர்கள் பரதவர்களே. இதனை இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சமும் உறுதிப்படுத்துகிறது என்று அந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் மதுரையில் களப்பிரர்கள் ஆட்சி வருமுன் வரை பாண்டிய பேரரசின் மன்னர்களாக இருந்தது பரதவர்களே என்பது தெளிவு.

- K. ஜேம்ஸ் பர்னாண்டோ 

நன்றி: பரவர் மலர் – டிசம்பர்- 2017 

அகநானூறில் பரதர்

அகநானூறில் இருந்து பரதர் பற்றிய வரலாற்று சான்றுகள்


300 நெய்தல்


நாள் வலை முகந்த கோள் வல் #பரதவர்

நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்,

பறி கொள் கொள்ளையர், மறுக உக்க

மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை,

5

எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர்,
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல்

செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி,

''செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை'' எனச்

சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து,

10

தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது,

நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப்

பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,

சேணின் வருநர் போலப் பேணா,

இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின்,

15

வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ,

''துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்

ஓதம் மல்கலின், மாறு ஆயினவே;

எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்'' என,

எமர் குறை கூறத் தங்கி, ஏமுற,

20

இளையரும் புரவியும் இன்புற, நீயும்


இல் உறை நல் விருந்து அயர்தல்

ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே.

பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார் மணி மிடை பவளம் முற்றும்நித்திலக் கோவை

தொல்புகழ் படைத்த, தொண்டித் துறைமுகம்..!

பல்வேறு வகை கடல்கள் உள்ளன. அவை மாக்கடல், வளைகுடா, விரிகுடா, நீரிணை (ஜலசந்தி) என பல்வேறு பெயர்களைப் பெற்றுள்ளன. தமிழகக் கடல்களில் இவை நான்கும் உள்ளன. தெற்கெல்லையில் கிடக்கும் இந்துமாக்கடல் மிகப் பெரும் நீர்பரப்பு. அதற்கு வடக்கில் கிடக்கும் மன்னார் வளைகுடா வளைவான குடாக்கடல். குடாக்கடலைத் தாண்டி ஆழமின்றி ஆர்ப்பரிப்பு இல்லாமல் படுத்துக்கிடப்பது பாக் ஜலசந்தி, ஜலசந்தியைத் தாண்டி வடக்கில் ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுப்பாடி அலையெழுப்பிக் கொண்டிருப்பது வங்காள விரிகுடா, இது சோழமண்டலக் கடற்கரை எனவும் கூறப்படுகிறது.

இந்த நான்கு கடல் சகோதரிகளின் கரையிலிருக்கும் முக்கியபட்டினங்கள் பழம்பெரும் வரலாறுகளைப் பேசாமல் பேசிக்கொண்டிருக்கின்றன. பல்லவர்களின் கோநகரான மாமல்லபுரம், சோழர்களின் முக்கிய பட்டினமான காவிரிப்பூம்பட்டினம், பாண்டியர்களின் பழம்பெரும் துறைமுகமான தொண்டிமாநகர், கொற்கை, காயல், சேரர்களின் கடற்கரைப் பட்டினங்களாகன குளச்சல், தேங்காய்ப்பட்டினம் எனத் தமிழகக் கடலோரங்கள் பல்லாயிரமாண்டுகளின் கதைகளைச் சுமந்து நிற்பவை.

இவற்றில் நாம் இப்போது தொண்டித் துறைமுகத்தைப் பற்றி அறிந்து கொள்ளவிருக்கிறோம். அது நம் கருத்தில் பதியவைக்கும் சங்கதிகளைப் பற்றி புரிந்துகொள்ள விருக்கிறோம். இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை வட்டத்திலுள்ள துறைமுகப் பட்டினமாகும் இது.

தொண்டி என்பதற்கு துறை, துவாரம் என்று பொருள். ஐம்பதாண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட துளையுள்ள காலணா நாணயத்தை வடமாவட்டங்களில் தொண்டிக் காலணா என்றனர். கடலுக்கு துவாரம் போல துறைமுகம் அமைந்ததால் அதை தொண்டி என்றனர். எனவே கடல் துறையை முகத்துவாரம் எனவும் அழைத்தனர்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கீர்த்தியோடு விளங்கிய கிழக்குக் கரையோரப்பட்டினங்களின் ராணி நகர் இது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் இங்கு சமண மதம் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தது. இலவோன் எனும் சமண மன்னன் தொண்டியைத் தலைநகராக்கி ஆண்டபோது மதுரையிலுள்ள மலைக்குகைகளில் சமணத் துறவிகளுக்கு படுக்கைகள் அமைத்துக் கொடுத்துள்ளான். இதைப் பற்றிய கல்வெட்டுகள் மதுரை கீழவளவு குகைப் பகுதியில் உள்ளன.

1800 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் தொண்டியைப் பற்றிய பதிவுகள் உள்ளன. அதிலுள்ள ஊர்காண் காதையில் காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த இந்திர விழாவிற்கு தொண்டியை ஆண்ட அரசரால் அகிற்கட்டைகளும் துணிமணிகளும் வாசனைப் பொருட்களும் மரக்கலங்களில் அனுப்பப்பட்ட சங்கதி பாடலாக பதிவாகியுள்ளது. ‘வங்க வீட்டத்து தொண்டியோரிட்ட அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்’ என்ற சொற்றொடர் தொண்டியின் பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

வரலாற்று ஏடுகளிலும் இலக்கிய ஏடுகளிலும் பதிவாகியுள்ள மிகப்பழமையான துறைமுகப்பட்டினமான தொண்டிமாநகர் ஒரு நல்ல பெண்ணின் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக கூறப்பட்டுள்ளது. எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையின் கீழ்க்கண்ட பாடலைப் பாருங்கள்.

“வான்கடல் பரப்பில் தூவதற்கு எதிரிய
மீன்கண் டன்ன மெல்லரும்பு ஊழ்த்த முடவுமுதிர் 
புன்னை தடவுநிலை மாச்சினைப்
புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப
நெய்தல் உன்கண் பைதல் கலுழப்
பிரிதல் எண்ணினை யாயின் நன்றும்
அரிது துற்றனையால் பெரும் உரிதினில்
கொண்டாங்குப் பெயர்தல் கொண்டலொடு
குரூ உத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர்
மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி
மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளங்கெழு தொண்டி யன்ன இவள் நலனே!”
(குறு, நெய்தல் – பா10)

புலவர் அம்மூவனார் கூறுகையில், அழகான உவமையைக் கையாண்டுள்ளார். அதாவது, தலைவியின் அழகுக்கு சிறுசிறு உவமைகள் கூறாமல், தொண்டி என்னும் ஊரின் மொத்த அழகையும் உவமிக்கிறார். இதன்மூலம் தலைவியின் அன்பு யாராலும் அளவிட முடியாத அளவு மிகப் பரந்துபட்டது என்பதை நுட்பமாகவும் மிக அழகாகவும் கூறியுள்ளார் (தினமணி). இது போன்ற உவமைகள் சங்கப் பாடல்களுக்கே உரிய சிறப்புகளாகும்.

பாடியவர் யாரெனத் தெரியாத நற்றினைப் பாடல் சொல்லும் தொண்டியின் சீர்த்தியைக் கேளுங்கள்.

‘கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி
நெல்அரி தொழுவர் கூர்வாள் உற்றென
பல்இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்’

’கல்’ என ஒலிக்கும் பறவைக் கூட்டத்தையுடைய கடற்கரைச் சோலையாற் சூழ்ந்தது தொண்டு எனும் ஊர். அவ்வூர் வயலிலே நெற்கதிர் அறுக்கும் உழவரின் கூர்மையான அரிவாளால் நெய்தல் மலரும் அறுபடும். இலக்கியங்களிலும் வரலாற்று நூல்களிலும் ஆங்காங்கு காணப்படும் சங்கதிகள் தொண்டிமாநகரை முதன்மையான பட்டினமாக நமக்குக் காட்டுகின்றன.

கிரேக்கர், ரோமர், யவனர் என மேலைநாட்டினரும் சீனர், சாவகர், சிங்களர் என கீழை நாட்டினரும் கால்பதித்த துறைமுகப்பட்டினம் தொண்டிமாநகர். இதன் கடற்கரைத் தெருவுக்குப் பெயர் ‘பன்னாட்டார் தெரு’ என்பதாகும். பல நாட்டவரும் வந்து தங்கி வணிகம் செய்த தெரு. வாசனைப் பொருட்களும் துணிமணிகளும் ஏற்றுமதியான தொண்டிச் சீமையில்தான் கீழைத்தேச பொருட்களும் தேக்கு மரங்களும் அரபுக் குதிரைகளும் வந்திறங்கியதாக வரலாறு கூறுகின்றது. ஆண்டொன்றுக்கு 25,000 குதிரைகள் வந்திறங்கியதாக ஆவணங்கள் கூறுகின்றன.

மிடுக்காக நடைபயிலும் பெண்ணை இன்றும் தஞ்சைப் பகுதியில் தொண்டிக் குதிரை போல் நடக்கிறாள் எனக் கூறும் பழக்கம் உண்டு. இங்கு வந்து கரையேறிய பர்மாவின் தேக்கு மரங்கள்தான் செட்டிநாட்டு பங்களாக்களை அரண்மனையாக்கியுள்ளன. தொண்டியிலிருந்து புறப்பட்ட மரக்கலங்கள் கிழக்கையும் மேற்கையும் இணைத்தன. 1940 – களில் இங்கிருந்து கப்பலில் இலங்கை செல்ல வெறும் இரண்டு ரூபாய் தான் கட்டணம். விடுதலை பெற்றபின் கள்ளத் தோணியில் பயணம் செய்ய இருபத்தைந்து ரூபாய்தான் கட்டணம். இலங்கையில் கள்ளத்தோணியருக்கு ‘மரக்கல மினுசு’ எனப் பெயர்.

தொண்டிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே முப்பது கல் தொலைவே உள்ளது. இவ்வூர் மக்கள் முற்காலத்தில் பாய்மரக்கப்பலேறி வைகறையில் சென்று வாணிபம் செய்து விட்டு மாலையில் ஊர் திரும்பி விடுவாராம். பயணக் கட்டணம் கால்ரூபாயாம். 1890 முதல் 1915 வரை தொண்டிக்கும் கொழும்புக்கும் நீராவிக் கப்பல் போக்குவரத்து இருந்ததாம்.

காலாதிகாலமாக இங்கு வந்து சென்று கொண்டிருந்த அரபுக்கள் இஸ்லாத்தின் வருகைக்குப் பின் – முஸ்லிம்களான பின் தொண்டித் துறைமுகத்தை வசிப்பிடமாகவும் கொண்டனர். இதை உறுதிப்படுத்துவது போல் அலைவாய்க்கரையை அடுத்து ஓடாவித் தெரு, சோனகர் தெரு, மரைக்காயர் தெரு, லெப்பைத் தெரு என தெருக்கள் பெயர் பெற்றுள்ளன. 2500 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாட்டினரின் விருப்பமுள்ள நகராக விளங்கிய தொண்டி மாநகரில் கால் வைத்துத்தான் பலரும் மதுரையை அடைந்துள்ளனர்.

பூர்வீகக் குடிகளின் கணக்கோடு இங்குள்ள மீனவப் படையாட்சிகளும் உள்ளனர். பனிரெண்டாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கு சோழ நாட்டுப் படைக்கும் சிங்களப் படைக்கும் போர் நடந்தனத ஆர்ப்பாக்கத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றால் அறியக்கிடைக்கிறது. போர் நடந்த போது சிங்களர் வந்து பாளையம் இறங்கிய இடமே பிற்காலத்தில் ‘புதுப்பட்டினம்’ ஆனது.

போராளிகளாய் படைகளில் ஆட்சி செய்த படையாட்சிகளே பிற்காலத்தில் போரில்லா காலத்தில் மீன்பிடித் தொழிலில் இறங்கியுள்ளனர். வாள் பிடித்த கைகள் வாள் போன்ற வாளை மீன் பிடித்துள்ளன. ஆதிக்குடிகளோடு கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் இங்கு குடியேறியவர்களை அவர்களின் வீட்டுப் பெயர்கள் அடையாளம் காட்டுகின்றன. எக்க குடியார் வீடு, தெக்கத்தியார் வீடு, சேர் வாய்க்கால் வீடு, கண்ணங்குடியார் வீடு, அனுமந்தங்குடியார் வீடு, குணங்குடியார் வீடு என ஊர்ப் பெயர்களை அடையாளம் காட்டும் வீட்டுப் பெயர்கள்.

குணங்குடி மஸ்தான் எனப் பேசப்படும் ஞானியின் தந்தையின் ஊர் குணங்குடி; தாயாரின் ஊர் தொண்டி. இங்கு பிறந்து வளர்ந்து கீழைக்கரை அரூஸியா மதரசாவில் ஓதியவரே குணங்குடி மஸ்தான் எனும் சுல்தான் அப்துல் காதர். தொண்டித் துறைமுகத்தின் விரிவான வரலாறு பதிவாகாமல் இருந்தாலும் துணுக்குகளாக பல சங்கதிகள் கிடைக்கின்றன. இங்கு வந்து குடியேறிய அரபிகளில் மொரோக்காவிலிருந்து வந்து குடியேறிய சையிது லப்பை குடும்பத்தினரைப் பற்றி பன்னூலாசிரியர் தம் இஸ்லாமியக் கலை களஞ்சியத்தில் பதிவு செய்துள்ளார்.

பல்வேறு கால கட்டங்களில் அரபு முஸ்லிம்கள் தொண்டியில் வந்து குடியேறியிருந்தாலும் 13 – ஆம் நூற்றாண்டில் அரபகத்திலிருந்து கப்பல் கப்பல்களாக கிழக்குக் கடற்கரைப் பட்டினங்களில் வந்து குடும்பங்களோடு குடியேறினர். அவற்றில் தொண்டியும் ஒன்று. இவர்களின் அடையாளத்தை நாம் நன்கறிவோம். இவர்கள் தம் மாப்பிள்ளைகளை வீட்டோடு வைத்துக் கொள்வர். சொத்துக்கள் யாவையும் பெண்களுக்கு மட்டும் உரியவை. பழவேற்காட்டிலிருந்து காயல்பட்டினம் வரை பனிரெண்டு பட்டினங்களில் இன்றும் அவர்கள் தனித்த அடையாளத்துடன் வாழ்கின்றனர்.

வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ள ஊர்களில் பர்மாக்காரர் வீடு, சிங்கப்பூரார் வீடு, பினாங்கார் வீடு, கொழும்பார் வீடு என குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். இவற்றில் ‘சீயத்தார் வீடு’ என வீட்டுப் பெயர் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தொண்டியில் சீயத்தார் வீடு என ஒரு குடும்பத்தார் உண்டு. அதென்ன சீயத்தார். சயாம்தான் சீயமாக மாறியுள்ளது. சயாம் நாட்டில் வணிகம் செய்தவர்கள் சீயத்தார் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். சயாமின் இன்றைய பெயர் தாய்லாந்து.

தொண்டித் துறைமுகத்திலிருந்து சென்று இலங்கை திருக்கோணமலை துறைமுகத்தில் தொழில் செய்த அலித் தம்பி மரைக்காயரின் மகன் சுல்தான் அபூபக்கர் அங்கு இரண்டு பள்ளிவாசல்களைன் நிர்மாணித்து வக்பு செய்துள்ளார். கி.பி.1770 – இல் இவர் கட்டிய பெரிய திருக்கோணமலை சோனகத் தெருவில் உள்ளது. 1781 – இல் கட்டிய சிறிய பள்ளி மரைக்காயர் பள்ளி எனும் பெயரில் என்.சி.சாலையில் உள்ளது. இரு பள்ளிகளுக்கும் வருவாய் பெற சில கடைகளையும் தோட்டங்களையும் வக்பு செய்துள்ளார். இவரின் மகன் சீனித் தம்பி மரைக்காயரும் மைத்துனர் முகம்மது அலீ மரைக்காயரும் பல நல்லறங்கள் செய்துள்ளனர். பல்வேறு பகுதி மக்கள் தொண்டியில் வந்து வாழ வழி வகுத்துள்ளனர்.

தொண்டியின் சகோதர ஊரான நம்புதாழையைச் சேர்ந்த கிதுர் முகம்மது எனும் நல்லத் தம்பிப் பாவலர் தொண்டி அரசும் பொது மருத்துவமனைக்கு எதிரில் பேரும் புகழோடு வாழ்ந்தார். இலங்கை கண்டியை அடுத்த கம்பளையில் பெரும் வணிகராகத் திகழ்ந்த பாவலர் ‘இசைத்தேன்’ எனும் இசைப்பாடல் நூலை வெளியிட்டுள்ளார். ‘இசைமுரசு’ நாகூர் அனிபா தன் முதலடிகளை இவர் மூலம்தான் வைத்துள்ளார். கம்பளை, மதுரை, தொண்டி, சென்னை என பாவலரின் வாரிசுகள் வாழ்கின்றனர். பாவலரின் புதல்வர்களில் இருவர் சென்னையில் டாக்டர்களாக உள்ளனர். அவர்கள் டாக்டர் காதர் மஸ்தான், டாக்டர் அக்பர் அலீ. பாவலரின் பேரர் லியாக்கத்தலி ‘பாவலர்’ என்ற பெயருடனேயே தொண்டியில் வாழ்கின்றார்.\

இன்றுள்ள மதுரை துணிக்கடைகளில் கணிசமானவை தொண்டிக்காரர்களுடையவை. தொண்டியின் ஊராட்சித் தலைவராக விளங்கிய ‘பாம்பாட்டி வீட்டு’ செய்யது அகமதுவின் புதல்வர்கள் துணி வணிகத்தில் பெரும் புள்ளிகள்.

குணங்குடி மஸ்தான் சாகிபின் மாமா கட்டை ஷைகின் கோரி இங்குள்ள வாழைத் தோப்பில் உள்ளது. இவர்களின் வழியில் தோன்றிய முகம்மது அப்துல் காதர் மதுரை ‘காஜியுல் குலாத்’ ஆக அரசால் நியமிக்கப்பட்டு அங்கேயே மறைந்தார். இவரின் மகன் முகம்மது இபுறாஹீம் சாகிபு தொண்டியில் காஜியாக இருந்தார். அடுத்தும் தொண்டிக்கு காஜியாக வந்தவர் முந்தைய காஜியின் புதல்வரான முகம்மது இஸ்மாயில் சாகிபே. இவர் மாபெரும் மார்க்க மேதையுமாவார்.

நாகூரை புலவர் கோட்டை என்பர். தொண்டி புலவர் பேட்டை. இங்கு பல்வேறு எழுத்தாளுமைகள் வாழ்ந்துள்ளனர்.உலக மாந்தர்கள் தம் பெயருக்கு முன் தந்தையின் பெயரிலுள்ள முதல் எழுத்தை விலாசமாக பதிவிடுகின்றனர். பிரான்ஸ் போன்ற சில நாடுகளில் தாயின் பெயரிலுள்ள முதல் எழுத்தைப் பதிவிடுகின்றனர். பெரும்பாலோர் ஓரெழுத்தையே பதிவிட நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் ஈரெழுத்தையும் சிலர் சித.கண.பழ. என மூன்று தலைமுறையையும் பதிவிடுகின்றனர். இவற்றைப் பின்னுக்கு கொண்டு போன ஒரு விலாசத்தை அண்மையில் நான் கண்டேன்

-சமூக நீதி முரசு

நற்றிணை காட்டும் கடல் பறவைகளும் அவற்றின் வாழிடச் சூழலமைவும்

சங்க இலக்கியப் பாடல்கள் மனித வாழ்வு சார்ந்த, சாராத உயிரினங்கள் பற்றிய செய்திகளைத் தமக்குள்ளே பதிவுசெய்து வைத்திருப்பவை. அவற்றில் காட்டுயிரிகளைப் பற்றியும் கடலுயிரிகளைப் பற்றியும் ஏராளமான பதிவுகள் காணப்படுகின்றன. நெய்தல் திணைக்குரிய கருப்பொருள்களுள் ஒன்றான கடல் பறவைகள் குறித்த சங்க இலக்கியச் செய்திகள் வியப்பிற்குரியவை. கடல் பறவைகள், அவற்றின் வாழிடச் சூழலமைவு பற்றிச் சங்கப் புலவர்கள் கூர்நோக்குத் திறனோடும் அறிவியல் நுட்பத்துடனும் எடுத்துரைப்பது ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. நற்றிணைப் பாடல்களைச் சான்றாகக் கொண்டு கடல் பறவைகள் பற்றிய சங்கத் தமிழரின் அறிவையும் பல்லுயிர்ப் பரவலுக்கு இடமளித்த கடற்கரைச் சூழலமைவையும் ஆராய இக்கட்டுரை முற்படுகிறது.


கடல் பறவைகள்

கடலையும் கடல் சார்ந்த நிலம், மரங்கள், கழிகள் ஆகியனவற்றையும் சார்ந்து வாழும் உயிரிகள் கடல்சார் உயிரிகள் ஆகும். கடற்கரைகளையும் கழிமுகங்களையும் இருப்பிடங்களாகக் கொண்டு இவை உயிர் வாழ்கின்றன. கடல் பறவைகள், நீர்நாய், நண்டுகள், ஆமைகள், தாவரங்கள் ஆகியவற்றைக் கடல்சார் உயிரிகளாகச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

இவற்றுள் நெய்தல் பாடல்களின் கருப்பொருளாகவும் அகப்பொருள் சுவைக்குச் சான்றாகவும் பாடப்பட்ட கடல் பறவைகள் பற்றிய செய்திகள், அவற்றின் வாழ்வியல் முறையை அறிந்து கொள்ளப் பெரிதும் துணை நிற்கின்றன. இவற்றை அறிய முற்படுவது, இன்றையச் சூழ்நிலையில் கடல் பறவைகளை இயற்கைச் சூழலோடு பாதுகாப்பதற்கும் அவற்றின் வாழிடச் சூழலை மேம்படுத்துவதற்கும் உதவும் என்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

நற்றிணையில் கடல் பறவைகள்

நற்றிணைப் பாடல்கள் குருகு, சிறுவெண்காக்கை, நாரை, அன்றில் என்னும் கடல் பறவைகளைப் பற்றிய செய்திகளை விரிவாகக் கூறுகின்றன. குருகு நீரில் வாழும் உயிரினங்களைத் தின்னும் பறவை. ‘கருங்கால் வெண்குருகு” 1 எனச் சங்கப் பாடல்கள் இதனைக் குறித்துக் கூறுகின்றன. சிறுவெண்காக்கை, ஆலாக்கள் (Terns) எனப்படும் நீர்ப்பறவையாகும். இவை நீர்நிலைகளில் கூட்டமாகக் காணப்படும். தலையும் வயிறும் வெண்ணிறமாகவும் உடல் சாம்பல் நிறத்திலும் இருக்கும். வெண்ணிறச் சிறகுத் தொகுதியும் கருநிற இறகுகளும் கொண்ட நீர் இறங்கு பறவை நாரை ஆகும். இவற்றின் கால்களும் அலகும் செந்நிறமானவை. சதுப்பு நிலங்கள், களிமண் நிலங்கள், நீர்நிலைகள் இவையே இவற்றின் வாழ்விடமாகும். அன்றில் பனைமரத்தில் கூடு கட்டி வாழும் பறவை. ஆணும் பெண்ணும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாது வாழும். இவை சதுப்பு நிலங்களில் கூட்டமாக இரை தேடக் கூடியவை.

இப்பறவைகள் உண்ணும் இரை, இரை தேடுதல், அவை தங்குமிடம், அவற்றின் வாழிடச் சூழல், வாழ்க்கை முறை, பிற உயிரினங்களுடனான அவற்றின் தொடர்பு ஆகிய செய்திகள் நற்றிணை வழி இங்கு விரிவாக ஆராயப்படுகின்றன.

உணவுச் சூழல்

’நெய்தல் திணை மண்டலம்’ என்பது கடலும் கடல் சார்ந்த பகுதியும் (coastal eco system) என்று இலக்கணப்படுத்தப்படுகிறது. இங்கு அதிக அளவில் கடலுடன் வண்டல் கலப்பு ஏற்படும். அத்துடன் உப்பு நீரும் நன்னீரும் இணையும். இந்த மாறுபட்ட சூழல் அமைப்பு வெப்ப மண்டலப் பகுதிகளில் அபரிமிதமான விளைச்சலைக் கொடுக்கிறது. வெப்ப மண்டல நெய்தல் நிலங்களில்தான் உலகத்தில் அதிக உற்பத்தித் திறன் வாய்ந்த அலையாத்திக் காடுகள், பவளத் திட்டுக்கள் காணப்படுகின்றன. இங்கு எண்ணற்ற மீன் இனங்கள் பல்கிப் பெருகுகின்றன. கடலின் உட்பகுதியில் அதிக அலையின் வேகமும் பிற உயிர்களின் தாக்குதலும் இருப்பதால் அலையாத்திக் காடுகள் உள்ள பகுதிகளில் மீன்கள் முதலிய கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் குஞ்சு பொரிக்கின்றன’2 என்கிறார் சூழலியல் எழுத்தாளர் பாமயன். இதனால் கடல் பறவைகளுக்கான உணவுச் சூழல் இப்பகுதிகளில் இயல்பாக அமைந்திருப்பதை அறியலாம். கடல் பறவைகள் பெரும்பாலும் மீனையே உணவாக உட்கொள்கின்றன. குறிப்பாக இறாமீனைக் குருகுகளும் நாரைகளும் சிறுவெண்காக்கைகளும் உணவாகக் கொள்வதை நற்றிணை கூறுகிறது.

‘இறவு ஆர் இனக் குருகு’- 131: 6

‘சேயிறா எறிந்த சிறுவெண்காக்கை’ – 31:2

‘…………………………..ஈர்ம் புற நாரை

இற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து’ – 127:1,2

இறா எனப்படும் இறால் மீன்கள் நன்னீரிலும் உவர் நீரிலும் காணப்படும் உயிரினம் ஆகும். இறால் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்பட்டு கடலோரங்களிலும் சதுப்பு நிலங்களிலும் ஒதுங்குகின்றன. இவ்விடங்களில் பறவைகள் இரைதேடி வருகின்றன. இதனை நற்றிணையும் எடுத்துரைக்கிறது.

‘………………………….இருங்கழி

இரை ஆர் குருகின் நிரை பறைத் தொகுதி’ – 123:1,2

‘சேயிறா எறிந்த சிறுவெண்காக்கை

பாயிரும் பனிக்கழி துழைஇ’ – 31:2,3


‘நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்

நெய்த்தலைக் கொழுமீன் அருந்த இனக்குருகு

குப்பை வெண்மணல் ஏறி’ – 291:1-3

இப்பாடலடிகள் கடல் பறவைகள் இரை தேடும் இடங்களான உப்பங்கழிகள், சதுப்பு நிலங்கள் பற்றிய குறிப்புகளைத் தருவதைக் காணலாம். மேலும் மீனவர் பிடித்து வரும் வலைகளில் உள்ள மீன்களையும் கடற்கரையில் உலர்த்தப்படும் மீன்களையும் இப்பறவைகள் உணவாகக் கொள்கின்றன.

‘முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவை

படுபுள் ஓப்பலின் பகல்

மாய்ந்தன்றே’ – 49:3,4


‘நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி

இனப்புள் ஓப்பும் எமக்கு’ – 45:6,7


கடல் பறவைகள் நாட்காலையிலும் பொழுது சாயும் வேளையிலும் இரை தேடும் செய்திகளை நற்றிணைப் புலவர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர்.


‘பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல்

சிறுவெண்காக்கை நாள் இரை பெறூஉம்’ – 358:8,9


‘எல்லை சென்ற பின் மலரும் கூம்பின

………………………………………

இரை நசை வருத்தம் வீட, மரமிசைப்

புள்ளும் பிள்ளையொடுவதிந்தன’ – 385:1-5


கடல் பறவைகள் கூட்டமாக இரைதேடி உண்பன. தவிர, தன் துணையோடும் இரை தேடுகின்றன.

‘வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ

…………………………………………..

கருங்கால் வெண்குருகு’ – 54:1-4


‘பாடு இமிழ் பனிக்கடல் துழைஇ பெடையொடு

உடங்கு இரை தேரும் தடந்தாள் நாரை’ – 91:3,4


இப்பாடலடிகள் வழி கடல் பறவைகளின் இரை, அவை இரை தேடும் இடங்கள், இரை தேடும் நேரம், இரை தேடும் முறை முதலிய உணவுச் சூழல் குறித்த செய்திகளை அறிய முடிகிறது.


வாழிடச் சூழல்

திணை என்ற தமிழ்ச் சொல்லுக்கு வாழிடம் என்பதோடு மட்டுமல்லாது ஒழுகலாறு என்ற மற்றோர் ஆழமான பொருளும் உள்ளது’3 எனக் கூறுகிறார் பாமயன். கடல் பறவைகள் கடலை ஒட்டிய கடற்கரைச் சோலைகளிலும் மரங்களிலும் தம் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன. இப்பறவைகள் கடற்பகுதியிலுள்ள புன்னை மரங்களிலும் பனை மரங்களிலும் கூடு கட்டி வாழ்வதை நற்றிணையின் பல பாடல்கள் எடுத்துரைக்கின்றன.


‘நீ உணர்ந்தனையே தோழீ வீ உகப்

புன்னைப் பூத்த இன் நிழல் உயர் கரைப்

பாடு இமிழ் பனிக்கடல் துழைஇ, பெடையோடு

உடங்கு இரை தேரும் தடந்தாள் நாரை

ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன்

மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை,

தாய்ப் பயிர் பிள்ளை வாய் படச் சொரியும்

கானல் அம் படப்பை’ – 91:1-8


இப்பாடல் கடற்கரைச் சோலையில் உள்ள புன்னை மரக் கிளையில் கூடுகட்டித் தன் பெடையோடும் குஞ்சுகளோடும் வாழிடச் சூழலை அமைத்துக் கொண்ட நாரை குறித்த செய்தியை அழகுற எடுத்துரைப்பதைக் காணலாம்.

‘இறவு அருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு

வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய

கருங்கோட்டுப் புன்னை இறை கொண்டனவே’ -67:3-5

என்னும் பாடல் வரிகளும் குருகுகள் புன்னை மரத்தில் தங்கிய செய்தியை எடுத்துரைக்கின்றன.

புன்னை மரம் ஒரு நெய்தல் நிலத் தாவரமாகும். இது ஆழ வேரூன்றி வளர்வது. சங்கத்தமிழர் கடல் அரிப்பைத் தடுக்கப் புன்னை மரங்களைக் கடற்கரைகளில் நட்டு வளர்த்தனர். அவை கடற்கரைச் சோலையாக இன்நிழலைத் தந்தன. பேரலைகளைத் தடுத்தன. இதனால் கடல் பறவைகள் புன்னை மரங்களில் இளைப்பாறியும் கூடுகள் கட்டியும் தம் வாழிடச் சூழலை அமைத்துக் கொண்டன.

புன்னை மரம் போலவே பனை மரமும் கடல் பறவைகளின் வாழிடமாக அமைந்திருப்பதை நற்றிணைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. பனை மரம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய தாவரம். வறண்ட நிலப்பகுதிகளிலும் கடலோரங்களிலும் இவை ஏராளமாகக் காணப்படுகின்றன. நீண்டு உயர்ந்த இம்மரங்களின் மடல்களில் குருகுகளும் நாரைகளும் காகங்களும் கூடு கட்டி வாழ்வதையும், குறிப்பாக அன்றில் பறவைகள் இம்மரங்களைத் தம் வாழ்விடமாகக் கொண்டிருப்பதையும் நற்றிணைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

‘ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை

வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு

நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி’ – 199:1-3


‘தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை

மன்றப் பெண்ணை வாங்கு மடல் குடம்பைத்

துணைபுணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்’ – 303:3-5

புன்னை, பனை தவிர கடற்கரைச் சோலையில் உள்ள மரங்களிலும் பறவைகள் தம் வாழ்விடத்தை அமைத்துக் கொள்கின்றன.


’வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன்

கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர’ – 117:3,4

கூடுகட்டி வாழும் கடல் பறவைகள் இரைதேடும் பொருட்டும் பகல் பொழுதில் இளைப்பாறவும் தாழை (நற்.131), கப்பலின் பாய்மரம் (நற்.258), வயல்வெளிகள் (நற்.263), மணல்மேடுகள் (நற்.272, 291) இவற்றை நாடுவதைச் சங்கப் புலவர்கள் உற்றுநோக்கிப் பாடியுள்ள திறம் வியத்தற்குரியது.

கூட்டம் கூட்டமாக ஒரே இடத்தில் கூடுகட்டும் வழக்கத்தைக் கொண்டிருப்பது நீர்ப்பறவைகளின் தனிப்பண்பாகும். கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய பாதுகாப்பான மரங்கள் இருக்கும் நீர்நிலைகளில் அவை ஆயிரக்கணக்கில் கூடுகின்றன.


‘நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை

கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி’– 159:3,4


‘பெருங் கடற் பரப்பின் இரும் புறம் தோய

சிறு வெண் காக்கை பலவுடன் ஆடும்

துறை புலம்பு உடைத்தே’ -231: 2,3

ஒரு சூழல் செழிப்பாக, உயிர் வளத்துடன் குன்றாத வளர்ச்சியைத் தரும் தன்மையுடன் இருக்கிறதா, மாசுபட்டிருக்கிறதா, சீர் கெட்டிருக்கிறதா என்பதை அறிய பறவைகள் சிறந்த அடையாளமாகும். சுற்றுச்சூழல் சீர்கேடு, வாழிடச் சூழலில் ஏற்படும் பாதகமான மாற்றங்கள் காரணமாக நீர்ப்பறவைகள் புதிய இடங்களைத் தேர்ந்தெடுப்பது உண்டு எனச் சுற்றுச்சூழலியலார் கூறுகின்றனர். நற்றிணைச் செய்திகளை ஆழ்ந்து நோக்கினால் சங்க காலக் கடல் சூழல் பல்லுயிரிப் பெருக்கத்திற்கும் வளத்திற்கும் சான்று பகருவதாகவே அமைந்துள்ளது எனலாம்.

சூல் கொண்ட பெண் நாரை சூலினால் ஏற்பட்ட வருத்தத்தால் நெய்தல் நிலத்தை விடுத்து மருத நிலத்தில் தங்கியதாகக் கூறப்படும் பாடல் (263:4,5) தவிரச் சூழல் சீர்கேடு காரணமாகப் பறவைகள் இடம் பெயர்ந்ததாகச் செய்திகள் ஏதும் நற்றிணையில் பதிவாகவில்லை என்பது பழந்தமிழகத்தின் கடல் சூழல் வளத்திற்குச் சான்று எனலாம்.

உறவுச் சூழல்

‘கருப்பொருள்கள் தங்களுக்குள் கொள்ளும் உறவு, தமது சுற்றத்துடன் கொள்ளும் உறவு, அதாவது உயிருள்ளவற்றோடு, உயிரற்றவற்றோடு கொண்டிருக்கும் உறவுதான் திணையம் என்பதாகும். இந்த உறவுகளை நுட்பமாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப சூழலில் இயங்கும் போது அனைத்து உயிர்களுக்கும் வாழ்வதற்கான உறுதிப்பாடு ஏற்படுகிறது’4.

பறவைகளுக்கும் மனிதனுக்குமான உறவு என்பது நாகரிக வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் மாற்றங்களைச் சந்தித்தே வந்துள்ளது எனலாம். ஒரு காலத்தில் பறவைகளுடன் இணக்கமாக இருந்த மனிதன் தற்போது பறவைகளை நுகர்வுப் பொருளாகவோ அல்லது தனக்குத் தொடர்பில்லாத ஓர் உயிரினமாகவோ பார்க்கத் தொடங்கி விட்டானோ என்ற ஐயம் எழுகிறது.

பறவைகள் இணையாக வாழ்பவை. கூடு கட்டி, முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரித்து, தம் குஞ்சுகளுக்கு இரை தேடித் தருபவை. இணையில் ஒன்று பறக்க இயலாத சூழலில் இருந்தால் அதற்கும் இரையைத் தேடித் தருபவை. சங்க அகப்பாடல்களில் தலைவன் தலைவியர் இணைந்து வாழ்வதற்கும் பிரிவுச் சூழலில் ஒருவரையொருவர் நினைத்து உருகுவதற்கும் பறவைகளின் வாழ்வியல் சூழல்களே சான்றாகக் காட்டப்படுகின்றன.

‘ஒன்று இல் வாழ்க்கை அன்றில் போலப்

புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை’ – 124:1,2


‘………………………………இரை வேட்டு

கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது

கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு

முடமுதிர் நாரை கடல் மீன் ஒய்யும்’ – 263:4-7



‘கடல் அம் காக்கைச் செவ்வாய்ச் சேவல்

‘……………………………கொடுங் கழி

இரை நசை வருத்தம் வீட, மரமிசைப்

புள்ளும் பிள்ளையொடு வதிந்தன’ – 385:3-5


இப்பாடல்களின் வரிகள் கடல் பறவைகள் தம் துணையோடும் குஞ்சுகளோடும் வாழ்ந்த உறவுச் சூழலை விளக்கி நிற்பனவாகும்.

பறவைகள் மரங்களோடும் உறவுச் சூழலைக் கொண்டிருப்பவை. இந்த உறவே பல்லுயிர்ப் பரவலுக்குக் காரணமாக அமைகிறது.


‘புது மணற் கானல் புன்னை நுண் தாது

கொண்டல் அசை வளி தூக்குதொறும் குருகின்

வெண்புறம் மொசிய வார்க்கும்’ – 74:7-9 


‘நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர

கோடு புனை குருகின் தோடு தலைப்

பெயரும்’ – 375:1,2

என்னும் பாடல் வரிகளில் கடல் பறவைகளால் மரங்களில் பூத்த பூக்களிலிருந்து மகரந்தத் தாதுக்கள் உதிரும் செய்தி கூறப்பட்டுள்ளதைக் காணலாம். இதனால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கான சூழல் உருவாவதை அறிய முடிகிறது. மகரந்தச் சேர்க்கை, மரங்களில் பூக்கள், பழங்கள், விதைகள் உருவாவதற்கும், மரங்கள் அதிக அளவில் தோற்றம் பெறுவதற்கும் அதனால் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் அடித்தளமாக அமைவதைக் காணலாம்.

கடற்கரைச் சூழலமைவு

நற்றிணை நெய்தல் திணைப் பாடல்கள் கடற்கரைச் சூழலமைவை அழகுறப் புலப்படுத்தி நிற்பனவாகும். கடற்கரைச் சூழலே கடல் பறவைகளின் வருகைக்கும் பெருக்கத்திற்கும் காரணமாக அமையக்கூடியது. பழந்தமிழகத்தில் இத்தகைய வளமான கடற்சூழல் இருந்ததைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.


‘……………………………தழையோர்

கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்

தெண் திரை மணிப்புறம் தைவரும்

கண்டல் வேலி நும் துறை

கிழவோற்கே’ – 54:8-11


நீர்த் திவலைகள் தடவும் ஞாழல் மரங்களும் தாழை மரங்களும் நிறைந்த கடற்கரை எனவும்,

‘கோட் சுறா வழங்கும் வாள் கேள் இருங்கழி

மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய

பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்

வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்’ – 78:1-4

சுறாமீன்கள் உலவும் உப்பங்கழியிடத்தே பூத்த நெய்தலின் மலர்கள் நிறையுமாறு புன்னையின் தாதுக்கள் உதிர்ந்து சிந்துவதும், விழுதுகள் தாழ்ந்த தாழையின் பூமணம் நிறைந்து விளங்குவதுமாகிய கடற்கரைச் சோலை எனவும் கடற்கரைச் சூழல் பற்றிய செய்திகளை நற்றிணைப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

இத்தகைய அழகிய சூழலை விளக்கும் பாடல்கள் சங்க இலக்கியம் எங்கும் நிரம்பிக் காணப்படுகின்றன. வளமான கடற்கரைச் சூழலைக் கண்டுகளித்த சங்கப் புலவர்களின் சிந்தையிலும் பாக்களிலும் அச்சூழல் இயல்பாகப் பதிந்து பாடுபொருளாக மாறியிருக்கக் கூடும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

இன்று கடற்கரைச் சோலைகளும் இல்லை. புன்னையும் தாழையும் ஞாழலும் பனைமரங்களும் கடற்கரையை அணி செய்யவும் இல்லை. கடற்கரைகள் கண்ணையும் மனத்தையும் கவரும் கேளிக்கை விளையாட்டுத் தலங்களாகவும் நட்சத்திர விடுதிகளாகவும் வானுயர்ந்த கட்டடங்களாகவும் உருமாறி வருகின்றன. பறவைகள் இடம்பெயர்ந்து சென்று விட்டன. பல்லுயிர்ப் பரவல் பழங்கதையாகி விட்டதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

சங்கத் தமிழரின் கூர்நோக்குத் திறனும் பல்லுயிர்ப் பரவலைப் பாடிக் களித்த விதமும் பறவைகளைக் கொண்டாடிய அறிவும் வியக்க வைக்கின்றன. இதில் நற்றிணை சிறிய சான்று. சங்க இலக்கியம் முழுமையும் ஆய்வுக்குட்படுத்தினால் பழந்தமிழகத்துப் பறவைகளின் வாழ்வியலையும் அவற்றைப் சங்கத்தமிழர் தம் வாழ்வியலோடு போற்றிப் பாராட்டிய தன்மையையும் தெளிவாக அறிய இயலும்.

இன்று அறிவியல் தொழில் நுட்பங்களாலும் ரசாயனக் கழிவுகளாலும் கடல் வளத்தையும் பல்லுயிர் வளத்தையும் இழந்து பெரும் மாறுதல்களைச் சந்தித்து வரும் கடற்கரைகளின் மீது கவனத்தைத் திருப்பி அவற்றைச் சோலைகளாகவும் மரங்கள் நிரம்பிய சிறு காடுகளாகவும் மாற்றியமைத்தால் கடல் பறவைகளோடு பல்லுயிர் வளமும் பெருகும் என்பதில் ஐயமில்லை.

******

அடிக்குறிப்புகள்

குறுந்தொகை, பா. 325

பாமயன், ‘நெய்தல் நில வேளாண்மை’, சூழலியல் கட்டுரை (நிலமும் வளமும்),

தி இந்து, நாள். 03.02.2018

பாமயன், திணையியல் கோட்பாடுகள், ப. 11

மேலது, ப. 27
******

முனைவர் இரா.சுதமதி

கட்டுரையாசிரியர்,

உதவிப் பேராசிரியர்

தமிழ்த்துறை

ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி

திருநெல்வேலி
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com