Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

அச்சும் பதிப்பும்


ஆசிரியர் ஐயா.மா.சு.சம்பந்தன் அவர்கள் எழுத்தில் ஏப்ரல்'1980 ல் தமிழர் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட "அச்சும் பதிப்பும்" நூலில் #பரதவர் பற்றி இவ்வாறு பதிவிட்டுள்ள தொகுப்பு.

"கடற்கரை யோரங்களில் மீன் பிடிக்கும் பகுதியில் வாழ்ந்த முத்துக்குளித்துறைப் பரவர்கள், முதல் அச்சகம் ஏற்பட நிதியுதவியளித்தனர்.

முத்துக்குளித்துறையில் வாழும் பரவ மக்களது பெருந்தன்மையால் 1577லேயே(15ம் நூற்றாண்டு) தமிழுக்கு அச்செழுத்துக்கள் வந்து விட்டன; அவை உலோகத்தினால் தயாரிக்கப் பட்டவையாகும்.

அந்நூலின் பெயரே "தம்பிரான் வணக்கம்"(Doctrina).

இந்திய நாட்டில் முதல் அச்சு கண்ட தமிழ் நூல் பரவ மக்களது உதவியால் கொல்லத்தில் அச்சிடப்பட்டு #புன்னைக்காயல் இல் 1557ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "தம்பிரான் வணக்கம்"(Doctrina) என்னும் நூலேயாகும்.

#பரவ_மக்கள் அச்சு அடிக்கப்பட்ட முதல் நூல்களைக் கண்டு வியப்புடன் பார்த்துக் களித்தனர்.

தமிழ் மொழி அச்சுக் கண்டதால், தமிழ் இனத்தவருக்கு உலகிலே பெரும்புகழ் உண்டாக்கியது.

இந்நூலின் படியொன்று 1579ஆம் ஆண்டு ரோம் நகருக்கு அனுப்பி வைக்கப்பெற்றது. இதன் மற்றொருபடி ஆஸ்திரியா நாட்டின் நூலகத்திற்குச் சென்றது. அந்நூலக நூல்கள் விற்கப்பட்டபோது, இந்த அரிய நூல் 1951ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள #ஹாவர்டு_பல்கலைக்கழக நூலகத்தினரால் விலைக்கு வாங்கப்பெற்று இன்றுவரை​ காப்பாற்றப் பட்டு வருகிறது.

Download Link - 1

Download Link - 2 

அகநானூறில் பரதவர்


அகநானூறில் பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள். 


30 நெய்தல்

நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,

கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,

துணை புணர் உவகையர் #பரத மாக்கள்

இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,


5
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்

ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,

அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,

பெருங் களம் தொகுத்த உழவர் போல,

இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,


10
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,

கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!

பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்

மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்

தண் நறுங் கானல் வந்து, ''நும்


15
வண்ணம் எவனோ?'' என்றனிர் செலினே?

பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

30 உரை

(சொ - ள்.) 1-11. நெடுங் கயிறு வலந்த குறுங்கண் அவ்வலை-நெடிய கயிறு கட்டப்பெற்ற குறிய கண்களையுடைய அழகிய வலையில், கடல் பாடு அழிய இனமீன் முகந்து - கடலின் பெருமை குன்ற இனமாகிய மீன்களை முகந்து, துணை புணர் உவகையர் பரத மாக்கள் இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி - துணையுடன் கூடிய மகிழச்சி யுடையராய் இளையரும் முதியருமாய நுளையர்கள் சுற்றத்துடன் நெருங்கி, உப்புஒய உமணர் அருந்துறை போக்கம் ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ - உப்பினைச் செலுத்தும் உப்பு வாணிகர் அரிய துறைகளிற் செலுத்தும் சகடுகளிற் பூட்டப்பெற்ற வலிய எருதுகளை யொப்பக் கூடி, அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி - நுண்மணல் செறிந்த பக்கத்துள்ள கரையில் ஆரவாரம் பெருக இழுத்து, பெருங் களம் தொகுத்த உழவர் போல - பெரிய களத்திலே நெல்லைத் தொகுத்த உழவர்களைப் போன்று, இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி - தம்மிடம் வந்து இரந்தோர்களுடைய வறிய கலன்கள் நிறைய அம் மீன்களைச் சொரிந்து, பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றி - எஞ்சிய வற்றைப் பல கூறுகளாகச் செய்து விலைகூறி விற்று, கோடு உயர்திணி மணல் துஞ்சும் துறைவ - கரை உயர்ந்த திண்ணிய மணற் பரப்பில் தூங்கும் துறைவனே;

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்காக ஓதுதல்


வேம்பாற்றில் காலம் காலமாக மரித்த விசுவாசிகளுக்காக நவம்பர் மாதம் ஒவ்வொரு திங்கள் கிழமை அன்றும் ஊர் கூடி வந்து ஊர் சுற்றி செபிக்கப்படும் செபம்....

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்காக ஓதுதல் 



நமதாண்டவராயிருக்கிற சேசுக் கிறிஸ்துவின் பேரில் பக்தி விசுவாசமுள்ள உத்தமக் கிறிஸ்தவர்களே! உத்தரிக்கிற ஸ்தலத்திலே இருக்கிற ஆத்துமாக்கள் அவதி குறைந்து நித்திய ஆறுதல் அடையத்தக்கதாகவும், கத்தோலிக்கு ரோமன் திருச்சபையானது கால காலத்திலும் வர்த்தித்து வரத்தக்கதாகவும், ஈனப் பசாசினுடைய சுவாமி துரோகத்திற்கு ஏதுவாயிருக்கிற நீசப்பாவிகள் பிரமையாகிற தங்கள் தப்பிதத்தை விட்டு ஆரோசித்து பரம ஞான சுகிர்த வழியிலே திரும்பத்தக்கதாகவும், அர்சிஷ்ட பாப்பானவருடைய சுகிர்த நற்கருத்துக்கள் நிறைவேறத்தக்கதாகவும், சுவாமியைப் பார்த்து மிகுந்த பக்தியோடே பரலோக மந்திரம் ஓதிக் கொள்வோம்..... (பரலோகத்தில்.........)

பாவிகளாயிருக்கிற நாமெல்லோரும் பாவத்தின் மயக்கமென்கிற நித்திரை செய்யாமலும் அந்த நித்திரை நேரத்தில் சாவானது நம்மைத் தெரிந்து கொள்ளாமலும், சர்ப்பன பயபக்தியாய் விழித்துக் காக்கக் கடவோம். அதேனென்றால் சாவு வருவது சத்தியம், ஆவி இருப்பது அசத்தியமாகுமே. ஐயையோ எனது பிறவிகளே இன்றைக்கோ இருக்கிறோம், நாளைக்கோ மரிக்கிறோம் என்று ஸ்திரமாக நினைத்துக் கொள்கிறது. ஆ! என் சர்வேஸ்ரா மோட்சமென்கின்ற சம்பாவனையும், நரகமென்கின்ற ஆக்கினையும் இவ்விரண்டும் சதாகாலத்திலும் அருதிகளுக்கு மாத்திரமே நிச்சயமாயிருக்கிறது. ஐயையோ, அந்நேரம் மகா கடினதோடும், உக்கிரமத்தோடும் சுமுத்திரையான கணக்குக் கேட்கும் திருநடுவிலே நீங்களும், நாங்களும் என்ன கணக்கு சொல்லப் போகிறோமோ என்றெண்ணி, இந்நேரமும், எந்நேரமும் முழுமனதோடு விதனப்பட்டு தபசு பண்ணக் கடவோம்.....

ஐயோ நீங்களும், ஐயோ நாங்களும் ஆண்டவருடைய திருநடுவிலே என்ன கணக்கு சொல்லப் போகிறோம்.....

சர்வேஸ்ரா சுவாமி, இரக்கமாக உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு நித்திய ஆறுதலைக் கொடுத்தருளும் சுவாமி.... 

சர்வேஸ்ரா சுவாமி, இரக்கமாக உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களின் வேதனை குறைய அனுகிரகம் செய்தருளும் சுவாமி......

சர்வேஸ்ரா சுவாமி, இரக்கமாக உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு நித்திய மோட்ச பாக்கியத்தைக் கொடுத்தருளும் சுவாமி.....

எங்கள் சிநேகிதரே! நீங்களாயினும் எங்கள் பேரிலே இரக்கமாயிருங்கோ.... இரக்கமாயிருங்கோ........ எப்போதும் எப்போதும் உள்ள ஆறுதலை, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களுக்கு கொடுத்தருளும் சுவாமி.......

புன்னைக்காயல் மருத்துவமனை

புன்னைக்காயல் என்னும் தென் தமிழகக் கடற்கரை ஊர் தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் என்றும் நிலைத்திருக்க வேண்டிய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். தமிழகத்தில் முதல் தமிழ்க் கல்லூரியும் (கி.பி. 1567) முதல் தமிழ் அச்சுக்கூடமும் (கி.பி. 1578) முதல் வேதியர் பயிற்சி நிலையமும் (கி.பி.1550) தோன்றியது இவ்வூரில் தான். அனைத்திற்கும் மேலாகத் தமிழகத்திலேயே மருத்துவப் பணிக்கென்று முதல் மருத்துவமனையை உருவாக்கியதே புன்னைக்காயல்தான்! அந்த வகையில் புன்னைக்காயலின் புகழ் தமிழகத்தில் மங்கி மறையாமல் என்றும் நிலைத்திருக்கும்.

தமிழகத்தின் முதல் மருத்துவ மனையை உருவாக்கித் தென்னிந்தியா முழுமைக்கும் மருத்துவப் பணிக்கு வழிகாட்டிய இப்புகழ்மிக்கப் புன்னைக்காயலில் தற்போது தமிழக முன்னணித் தொழிலதிபர் திரு A.ராஜா பிஞ்ஞேயிர அவர்கள் பெருந்தொகை செலவு செய்து கட்டியெழுப்பியுள்ள புதிய மருத்துவ மனையைத் தூத்துக்குடி முன்னாள் ஆயர் அருட்பெருந்தகை M.அம்புரோஸ் அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள். புன்னைக்காயலில் ஏறக்குறைய 455 ஆண்டுகளுக்கு முன்னால் சிறப்புடன் பணியாற்றி வந்த அந்தப் பழைய முதல் மருத்துவமனையை நம் நினைவுக்குக் கொண்டு வருவோம். இப்பழைய மருத்துவமனையின் தோற்றம், சிறப்பு, பணிகள் ஆகியவற்றை வரலாற்று ஆதாரங்களுடன் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

தோற்றம்

போர்த்துக்கீஸியரின் ஆதரவின் கீழ் கி.பி. 16-ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் இந்தியாவின் தென்பகுதிகளில் கிறிஸ்தவத் திருமறையைப் பரப்பி வந்த யேசு சபையினரின் அரிய முயற்சியினால் பல அற நிலையங்களும், அறிவாலயங்களும் இந்தியாவில் உருவாகின. இருப்பினும் அக்காலத்தில் இந்தியா முழுவதுமே இரண்டு பெரிய மருத்துவ மனைகளே இயங்கி வந்தன. ஒன்று சால்செட்டிலும், மற்றொன்று புன்னைக்காயலிலும் நிறுவப் பட்டிருந்தன. (1) 

அந்த வகையில் புன்னைக்காயல் மருத்துவமனை தமிழ்நாட்டில் உருவான முதல் மருத்துவமனை என்பதில் ஐயமில்லை. புனித சவேரியாருக்குப் பின் முத்துக்குளித்துறைப் பகுதியின் தலைமைக் குருவாகப் பணியாற்றி வந்த யேசு சபைக் குரு ஹென்றி ஹென்றிக்கஸ் என்பவரே இம்முதல் மருத்துவமனையை 1550-ஆம் ஆண்டு புன்னைக்காயலில் நிறுவினார். இது பற்றி அவர் உரோமையிலுள்ள யேசுசபைத் தலைவர் இல்லத்திற்கு 1551-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி எழுதிய மடலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.

"முத்துக்குளித்துறையிலும், உள்நாட்டுப் பகுதியிலும் பிணியுற்ற ஏழைமக்களின் நலனுக்காக அண்மையில் புன்னைக்காயலில் புதிதாக ஒரு மருத்துவமனையை உருவாக்கியுள்ளோம். இந்த மருத்துவமனையானது, இந்நாட்டிலேயே மிகவும் வியக்கத்தக்கப் புதுமையான ஒரு நிறுவனமாகும். இப்படிப்பட்ட ஒன்றை இப்பகுதியில் வாழும் மக்கள் இதுவரை அனுபவித்ததே இல்லை....... இம்மருத்துவமனையானது நமது (யேசு சபை) இல்லத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.(2) 

இம்மருத்துவ மனையில் சாதிமத வேறுபாடின்றி எல்லாப் பிணியுற்ற மக்களும் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இங்கு விளங்கிய கிறிஸ்தவப் பிறரன்பு பிறமத மக்களை மிகவும் கவர்ந்தது. "இத்தகைய அன்பு அவர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவம்! அதனால் கிறிஸ்தவத் திருமறையை அவர்கள் தங்களின் தாய் எனக்கருதினர். பலர் தங்களின் மரணப்படுக்கையில் திருநீராட்டுப் பெற்று இறந்தனர்."(3)

அக்காலத்தில் முத்துக்குளித்துறையில் போர்த்துக்கீசியத் தளபதியாகப் பணியாற்றி வந்த மனுவேல் ரொட்ரீகஸ் குட்டினோ என்பவர் புன்னைக்காயல் மருத்துவமனையைத் தனது சொந்த வீடாகவே கருதி அங்கேயே அவர் வாழ்ந்து வந்தார். அங்கிருந்த பிணியாளர்களையும் அவர் தனது சொந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே மதித்துப் பேணினார். ஏழைப் பிணியாளர்கள் மீது அவர் காட்டிய இரக்கமும், அன்பும் இன்னும் பல அதிகாரிகளையும் இம்மருத்துவமனையில் சேவை செய்யும்படித் தூண்டியது. (4)

மருத்துவர்:

புன்னைக்காயல் மருத்துவமனையில் முதல் தலைமை மருத்துவராக முத்துக்குளித்துறையைச் சேர்ந்த ஒருவரே பணியாற்றி வந்தார். இவரைப் பற்றி சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் 1551-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி யேசுசபைத் தலைமை இல்லத்திற்கு எழுதியதாவது:- "இம்மருத்துவ மனையில் தலைமை மருத்துவராக இப்பகுதியைச் சேர்ந்த ஒருவரே பணியாற்றி வருகிறார். இவர் முன்னர் இப்பகுதியிலுள்ள மக்களுக்கு மறைக்கல்வி போதித்தவர். சிறந்த பக்திமான். இவரும் இவரது மனைவியும்
ஆசீர்வதிக்கப்பட்ட புண்ணிய சீலர்கள். இறைவனின் அருளால் இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்த பிறகு, இருவருமே இப்போது பிரம்மச்சாரிகளாகக் கற்பு வாழ்க்கையை மேற்கொண்டு தங்களை இறைவன் சேவைக்கே அர்ப்பணித்துவிட்டனர். இறைவன் அவர்களை எந்நாளும் ஆசீர்வதிக்கட்டும்!"(5)

சில வேளைகளில் யேசு சபைச் சகோதரர்கள் ஒரு சிலரும் இம்மருத்துவமனையில் பணி புரிந்தனர். விசுவாச வாழ்விலும், பிறர் பணியிலும் ஆர்வமிக்கக் கிறிஸ்தவர்களுக்காக சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் 1572-ஆம் ஆண்டில் புன்னைக்காயலில் ஏற்படுத்தியிருந்த 'பிறரன்புச் சபை" (Confraternity of Charity)எனும் பக்திச் சபையிலிருந்து வாரந்தோறும் இரு ஊழியர்கள் இம்மருத்துவமனையில் பிணியாளர்களுக்குச் சேவை செய்தனர். 

ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் "பிறரன்புச் சபை" வாரக் கூட்டத்தில், அந்த வாரம் முழுவதும் மருத்துவமனையில் பணி செய்வதற்கென இருவர் நியமிக்கப் படுவர். (6). இவர்கள் பிணியாளர்களை அன்புடன் பராமரித்ததோடு, மரணப் படுக்கையிலிருந்தவர்களையும் தேற்றி, அவர்கள் நல்ல மரணமடையும்படி உதவினர். மேலும் ஏழைப் பிணியாளர்களுக்கு உணவும் குளிர்காலத்தில் உடையும் இலவசமாக வழங்கினர். (7)

புன்னைக்காயல் மருத்துவமனையில் கிறிஸ்தவர் மட்டுமின்றி, பிறமத மக்களும் சிகிச்சையோடு இலவச உணவும், உடையும் பெற்று வந்ததினால் அதன் பொருளாதாரம் பின் தங்கிய நிலையிலிருந்தது. இதற்காக வாரந்தோறும் அந்தப் பகுதியிலுள்ள கிறிஸ்தவ ஊர்களின் மக்களிடமிருந்து இம்மருத்துவமனையின் செலவுக்காக நன்கொடை வசூலிக்கப்பட்டது. (8) 

முத்துக்குளி நடக்கும் காலங்களில் கிறிஸ்தவர்கள் புன்னைக்காயல் மருத்துவமனைக்குப் பெருந்தொகையை நன்கொடையாகக் கொடுத்து வந்தனர். 1560- ஆம் ஆண்டு முத்துக்குளிப்பின் போது மட்டும் பெருமளவு நன்கொடை வழங்கினர். முத்துக்குளிப்புக் காலங்களில் பொதுமக்கள் இம்மருத்துவமனைக்குத் தாராள மனதுடன் நன்கொடை வழங்கினர். (9).

மேலும் முத்துக்குளித் துறைப் பகுதி வாழ் கிறிஸ்தவ மக்கள் செய்யும் குற்றங்களுக்குத் தண்டனையாக அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதப் பணமும் புன்னைக்காயல் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி போர்த்துக்கீஸியத் தளபதி ஏற்பாடு செய்திருந்தார். இது பற்றி வேம்பாறு ஊரைச் சேர்ந்த தியோகு டி மஸ்கித்தா என்பவர் 1583- ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தூத்துக்குடியில் கூறிய சாட்சியமாவது:

"ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக ஹென்றி குருக்கள் புன்னைக்காயலில் மருத்துவமனையொன்று நடத்தி வருகிறார். இம்மருத்துவமனையின் செலவுகள் மக்கள் வழங்கும் தர்மத்தைக் கொண்டும், முத்துக்குளியின்போது கிறிஸ்தவ மக்கள் வழங்கும் நன்கொடை கொண்டும், குற்றங்கள் புரிந்த கிறிஸ்தவர்களுக்கு இக்குருக்கள் விதிக்கும் அபராதப் பணமும் கொண்டு நடத்தி வருகின்றனர். " (11)

போர்த்துக்கீசியப் போர் வீரர்கள் இந்தியாவின் வெப்பத்தன்மையாலும், நலக்குறைவுள்ள உணவினாலும் பாதிக்கப்பட்டு அடிக்கடி நோயில் விழுந்தனர். பிணியுற்ற அவர்கள் தகுந்த உதவியின்றி கைவிடப்பட்ட நிலையில் மேலும் குறைந்த வருமானமுடைய அவர்கள் வறுமைக்குப் பலியாகித் தவித்தனர். இவ்வெளிய போர்த்துக்கீஸிய வீரர்கள் புன்னைக்காயலின் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் பிணியுற்றப் போர்த்துக்கீசிய வீரர்களுக்கெனப் புன்னைக்காயலில் ஒரு மருத்துவமனையை அவர் இருந்த ஆலயத்துக்கருகிலேயே 1551-ஆம் ஆண்டு நிறுவினார். இம்மருத்துவமனையின் கட்டிடச் செலவினைப் போர்த்துக்கல் நாட்டு மன்னரே ஏற்றுக் கொண்டார். (12) இப்போர்த்துக்கீசிய மருத்துவமனையின் நிரந்தரப் பொருளாதாரத்துக்கென்று, முத்துக்குளித்துறைத் தளபதி மனுவேல் குட்டினோ செய்த விண்ணப்பத்திற்கிணங்க, கோவை மேலாணையாளர் (Viceroy) ஆண்டுதோறும் 100 ஸ்குடி என்னும் தொகை அனுப்பி வைத்தார்.(13)

மருத்துவமனையின் மறைவு:

பொதுமக்களுக்காகவும் போர்த்துக்கீஸியருக்காகவும் புன்னைக்காயலில் ஏற்படுத்தப்பட்ட இவ்விரு முதல் மருத்துவமனைகளும் 1553-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எதிரிகள் (வடுகர்கள்) புன்னைக்காயல் மீது நடத்திய படையெடுப்பின் போது நெருப்புக்கு இரையாகி அழிந்து போயின என்று சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் புனித இஞ்ஞாசியருக்கு எழுதியுள்ள மடலிலிருந்து அறிகிறோம்.. (14) அதன் பிறகு யேசு சபைக் குருக்கள் மக்கள் தாராளமுடன் வழங்கிய நன்கொடையைக் கண்டு மீண்டும் ஒரு மருத்துவமனையைப் புன்னைக்காயலில் எழுப்பினார். இம்மருத்துவமனையில் மருத்துவர்களாகப் பணியாற்றியவர்களுக்குக் கிறிஸ்தவ மக்கள் வழங்கிய தர்மப் பணத்திலிருந்தே சம்பளம் வழங்கப்பட்டது. 

இந்த மருத்துவமனையானது 1590-ஆம் ஆண்டு வரை இயங்கி வந்ததற்குச் சான்றுகள் உள்ளன. (15) முத்துக்குளித் துறையில் 1579-ஆம் ஆண்டு வரை யேசு சபையின் தலைமை இல்லமாக விளங்கிய புன்னைக்காயலின் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்து யேசு சபையினர் தங்களின் தலைமை இல்லத்தைத் தூத்துக்குடிக்கு மாற்றிவிட்டனர். அது முதல் புன்னைக்காயல் மருத்துவமனையும் தனது பழைய மாண்பினை இழந்து விட்டது. (16). அடிக்கடிப் புன்னைக்காயல் மீது மதுரை நாயக்கனின் வடுகர் படையினர் நடத்தியத் தாக்குதலின் போது இம்மருத்துவமனையும் வலிமை இழந்து படிப்படியாக மறைந்திருக்க வேண்டும் என நம்பலாம்.

பிற மருத்துவ மனைகள்:

புன்னைக்காயல் மருத்துவமனையினால் மக்களுக்கும், கிறிஸ்தவ மறைக்கும் விளைந்த ஏராளமான நன்மைகளைப் பார்த்துவிட்டு முத்துக்குளித்துறையின் மற்ற முக்கிய ஊர்களிலும் மருத்துவமனைகள் அமைப்பதற்குச் சுவாமி ஹென்றி ஹென்றிக்கஸ் அரும்பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அதன்படி 1566-ஆம் ஆண்டு சில பெரிய மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டன. இம்மருத்துவமனைகளின் நிர்வாகப் பொறுப்பினை கிறிஸ்தவ மக்களிடமே அவர் ஒப்படைத்தார். 

மேலும் மருத்துவர்களாகவும் இப்பகுதியில் வாழும் மக்களையே நியமித்தார். ஒவ்வொரு கிறிஸ்தவ ஊரிலுமுள்ள பொதுமக்களிடமிருந்து உணவும், உடையும் தர்மமாகப்பெற்று இம்மருத்துவமனைகளிலுள்ள ஏழைப் பிணியாளர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார். தூத்துக்குடியில் கிறிஸ்தவத் தனவந்தர் ஒருவர் தனது சொந்த செலவிலேயே பெரிய மருத்துவமனையொன்றை நிறுவினார். 

முத்துக்குளிப்பு நடக்கும்போதெல்லாம் தூத்துக்குடி வாழ் கிறிஸ்தவ மக்கள் இம்மருத்துவமனைக்குத் தாராளமுடன் பொருளுதவி வழங்கினர் (17). தூத்துக்குடி மருத்துவமனையானது 1603-ஆம் ஆண்டு கயத்தாறு மன்னனும், மதுரை நாயகனும் சேர்ந்து தூத்துக்குடியின் மீது நடத்திய தாக்குதலின் போது நெருப்புக்கு இறையாகி அழிந்தது. (18)

1572-ஆம் ஆண்டின் யேசு சபைக் கணக்குப்படி, முத்துக்குளித்துறையில் மொத்தம் 27 கிறிஸ்தவ ஊர்களும், 20 கோயில்களும், 7 மருத்துவமனைகளும் இருந்தன. இவ்வேழு மருத்துவமனைகளும் கீழ்க்கண்ட ஊர்களில் இயங்கி வந்தன.

1. மணப்பாடு

2. வீரபாண்டியன்பட்டணம்

3. புன்னைக்காயல்

4. தூத்துக்குடி

5. வைப்பாறு

6. மன்னார்

மன்னாரில் போர்த்துக்கீஸியருக்கும் பொதுமக்களுக்கும் என்று இரு மருத்துவமனைகள் இருந்தன. இவ்வேழு மருத்துவமனைகளிலும் மிகப் பெரியதும், சிறப்பு மிக்கதும் புன்னைக்காயல் மருத்துவமனையே! (19) தமிழ்நாட்டின் மருத்துவப் பணிக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் விளங்கி, கிறிஸ்தவப் பிறரன்பை சாதிமத வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கி வந்த புன்னைக்காயலைத் தமிழக மக்கள் எளிதில் மறந்துவிட முடியாது.

(நன்றி:ஞானதூதன் 1977)


அருட்திரு. வெனான்சியுஸ்


வரலாற்று ஆய்வாளர், தூத்துக்குடி மறை மாவட்டம்

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ






நவ.22,2017. இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராகப் பணியாற்றிய, ஆயர் பிதேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னான்டோ (Fidelis Lionel Emmanuel Fernando) அவர்களை, இப்புதனன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1948ம் ஆண்டு மே 20ம் தேதி யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆயர் இம்மானுவேல் அவர்கள், கொழும்பு உயர் மறைமாவட்டத்திற்கென 1973ம் ஆண்டு சனவரி 6ம் நாள், முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால், அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர், 2011ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டு, 2012ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி, ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 

ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் பெற்றோர், தமிழகத்தின் தூத்துக்குடி மறைமாவட்டத்தைச் சேர்ந்த வேம்பார் என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர், கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியில் உயர்நிலைப் படிப்பை முடித்து, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புனித அலாய்சியஸ் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியில், மெய்யியலை முடித்த இவர், இறையியல் படிப்புக்காக உரோம் நகருக்கு அனுப்பப்பட்டார். உரோம் உர்பானியானம் பாப்பிறை கல்லூரியில் இறையியலை முடித்து, அறநெறியியலில் முதுகலை பட்டமும் பெற்றார். 

1981ம் ஆண்டு முதல், 1987ம் ஆண்டு வரை, கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய ஆயர் இம்மானுவேல் அவர்கள், பின்னர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் கத்தோலிக்க பல்கலைகழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். 

1981ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மன்னார் மறைமாவட்டத்தில், ஏறக்குறைய 85 ஆயிரம் கத்தோலிக்கர் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

Source

புறநானூறில் பரதவர்


புறநானூறில் இருந்து பரதவர் பற்றிய இன்னும் சில தகவல்கள்

புறநானூறு 378

சோழ வேந்தன் நாட்டை விரிவாக்கும் நோக்கத்தில் வஞ்சிப் பூச் சூடி, செருப்பாழி என்னும் கோட்டையை அழித்துத் தனதாக்கிக்கொண்டான். அந்த வஞ்சிப் போரைப் புலவர் பாடினார். அது கேட்ட வேந்தன் புலவர்க்கு அவர் அறிந்திராத அரிய அணிகலன்களை வழங்கிச் சிறப்பித்தான். 

தென்னாட்டுப் பரதவரின் கொட்டத்தை அடக்கி அவர்களை வேரோடு சாய்த்தான். வடநாட்டு வடுகரை வாட்போரில் வென்றான். அவன் தலையில் தொடுத்த கண்ணி. கையில் வேல்.அவன் குதிரையின் குளம்பு [வடிம்பு] எங்கும் பாவின.

அவன் அரண்மனை [கோயில்] தோரண மாலை, கள் ஆகியவற்றின் இருப்பிடம். மேற்குத் திசையில் தோன்றும் பிறை வடிவில் வெண்ணிறத்தில் அமந்திருந்தது. குளிரந்த நீர் கொண்ட குளம் போன்ற அகழியுடன் திகழ்ந்தது.
அந்தக் கோட்டை வாயிலில் நின்றுகொண்டு, தன் பெரிய கிணைப் பறையை முழக்கிக்கொண்டு, வேந்தனின் வஞ்சிப்போர் வெற்றியைப் பாடினார்.


அதனைக் கேட்ட வேந்தன் அரிய அணிகலச் செல்வத்தைப் பரிசாக வழங்கினான். அவை புலவருக்காகச் செய்யப்பட்டவை அல்ல. மேம்பட்ட சிறப்புடையவை. புலவர் தாங்கமுடியாத அளவு மிகுதியாக வழங்கினான்.


அதனைப் பார்த்த புலவரின் பெருஞ் சுற்றத்தார் விரலில் அணியவேண்டிய அணிகலனைக் காதில் மாட்டிக்கொண்டனர். காதில் அணிய வேண்டியவற்றை விரலில் மாட்டிக்கொண்டனர். இடுப்பில் அணிய வேண்டியவற்றைக் கழுத்தில் மாட்டிக்கொண்டனர். கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டியனவற்றை இடுப்பில் கட்டிக்கொண்டனர்.

இது எப்படியிருந்தது என்றால்,

கடுமையான போர்த்திறம் கொண்ட இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள் அணியுமிடம் தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது.


தென் #பரதவர் மிடல் சாய,

வட வடுகர் வாள் ஓட்டிய,

தொடை அமை கண்ணி, திருந்து வேல் தடக்கை,

கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்,

நல் தார், கள்ளின், சோழன் கோயில், 5

புதுப் பிறை அன்ன சுதை சேய் மாடத்து,

பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என்

அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி,

எஞ்சா மரபின் வஞ்சி பாட,




எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல, 10

மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை

தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு,





இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல்,

விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்,

செவித் தொடர் மரபின விரல்செறிக்குநரும், 15

அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,

மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்,

கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் 20

செம் முகப் பெருங் கிளை இழைப்பொலிந்தாஅங்கு,

அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே

இருங் கிளைத் தலைமை எய்தி,

அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே.


திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.

சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங் குடையார்பாடியது.

காலம் : கி.மு. இரண்டாம் நூற்றாண்டு

The Lord's Prayer into the Tamil language by Philippus Baldaeus - 1620


The Lord's Prayer into the Tamil language by Philippus Baldaeus - 1620

From the book:

A true and exact description of the most celebrated East-India coasts of Malabar and Coromandel. As also of the isle of Ceylon; with all the adjacent kingdoms, principalities, provinces, cities, chief harbours, structures, pagan temples, products, and living creatures: the manners, habits oeconomies and ceremonies of the inhabitants. As likewise the most remarkable warlike exploits, sieges, sea and field-engagements betwixt the Portuguese and Dutch; with their traffick and commerce. The whole adorned with new maps and draughts of the chief cities, forts, habits, living creatures, fruits, &c . of the product of the Indies, drawn to the life, and cut in copper plates. Also a most circumstantial and compleat account of the idolatry of the pagans in the East Indies, the Malabars, Benjans, Gentives, Brahmans, &c. Taken partly from their own Vedam, or law-book, and authentick manuscripts ...with the draughts of their idols, done after their originals.

By Philippus Baldaeus (1632-1672)
Translated fro the High Dutch by Awnsham Churchill in 1671
Printed for A. and J. Churchill, London -1703

அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் - 1938


வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில், சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரிலான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது.

அன்னபூரணி என்பது இமயமலையில் அமைந்திருக்கும் மலைச்சிகரங்களில் ஒன்றாகும். இன்றைய நேபாளத்தின் எல்லைக்குட்பட்ட இதன்உயரம் 26504 அடிகளாகும். அத்துடன் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி கொண்ட தெய்வமாக இந்துக்களால் ஆராதிக்கப்படும் பெண் தெய்வத்தின் பெயரும் அன்னபூரணியாகும். இப்பெயரே அன்னபூரணிஅம்மாளின் சுட்டுப் பெயராக பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

1936 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்த அமெரிக்கரான பிரபலகடலோடியான அமெரிக்கரான றொபின்சன் “Florence C. Robinson” அன்னபூரணியின் அழகால் கவரப்பட்டவராக அதனை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று விரும்பினார். அதனைக் கொள்வனவு செய்ததும், அன்னபூரணி அம்மாள் என்ற பெயரில் உள்ள அந்தக் கப்பலை “Florence.C.Robinson” என்ற தனது மனைவி யின் பெயருக்கு மாற்றிய பின்னரே அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார். வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் கொந்தளிக்கும் இராட்சச அலைகளையும் கடந்து சுயஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சாதனை இன்றும் உலகளாவிய ரீதியில் பேசப்படு கின்றது.

சூயெஸ் கால்வாயினூடாக மத்தியதரைக் கடலில் பயணம் செய்த போது, ஏற்பட்ட புயலில் சிக்கிய கப்பல் 250 கடல்மைல்கள் பின்புறமாக பெய்ரூத் வரை அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மைல்களையும், பல கடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 1938 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள குளோசெஸ்ரர் (Gloucester) துறைமுகத்தில் நிறைவடைந்தது. 

தெற்காசிய நாடொன்றில் உள்ள சின்னஞ்சிறிய தீவான இலங்கையில் உள்ள வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு காற்றின் துணையுடன் இயங்கும் கப்பலொன்று, இந்து சமுத்திரத்தைக் கடந்து ஐரோப்பாவின் ஊடாக மத்திய தரைக் கடலையும் கடந்து, அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஊடாக, அமெரிக்காவின் குளோசெஸ்ரர் துறைமுகம் வரை பயணம் செய்தது. உலக வரலாற்றில் இதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையுமாகும். இச்சாதனை நிறைந்த கடற்பயணத்தில், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிள்ளை (48 வயது) அவர்களின் தலைமையில், திரு.பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (29 வயது), திரு.தாமோதரம்பி;ளளை சபாரத்தினம் (28 வயது) திரு.சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை, (28 வயது)) திரு.ஐயாத்துரை இரத்தினசாமி (24 வயது) ஆகிய ஐந்து கடலோடிககளும் பயணத்தின் இறுதி இலக்கு வரை பங்கேற்றிருந்தனர். 

அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் நகருக்கு அண்மையில் உள்ள பால்ரிமோர் என்ற துறைமுகத்தில் தரித்து நின்றபொழுது எடுக்கப்பட்ட படத்தை அது தொடர்பான கட்டுரையுடன், பால்ரிமோரில் இருந்து வெளிவரும் “Baltimore Sun” என்ற செய்தித்தாள் பிரசுரித்திருந்தது. அன்னபூரணி அம்மாள் கப்பலை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லும் பொழுது கப்டன் மக்குயிஸ் என்பவரின் தலைமையில், வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் பயணம் செய்து குளோசெஸ்டர் துறை முகத்தைச் சென்றடைந்தது. அன்று குளோசெஸ்டர நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்கள் பிரசுரித்த கருத்துக்கள் மிகச் சிறந்த சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் விளங்கின.

அன்னபூரணி அம்மாளின் இந்த திகில் நிறைந்த பயணம் பற்றிய இலக்கியங்கள் நூல்களாகவும், பத்திரிகைகள், சஞ்சிகைகளில் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளமை அதன் சிறப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இச்சாதனைப் பயணம்பற்றிய விபரங்கள் 02 ஓகஸ்ட் 1938 வெளிவந்த The Boston Globe பத்திரிகையில் Voyage Ended By Brigantine . Barrows என்பவரால் விவரிக்கப் பட்டிருந்தது. மற்றும் அன்றைய நாளில் வெளிவந்த மற்றாரு தினசரியான 02.08.1938 அன்று வெளியிடப்பட்ட Gloucester Time பத்திரிகையில் Ceylon Brige Arrives After Long Voyage எனவும் மேற்படி அன்னபூரணியின் நீண்ட கடற்பயணம் அதன் முன்பக்க செய்தியாக வெளிவந்திருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட பின்வரும் செய்திக் குறிப்பினூடாக தமிழர்களின் கடல் ஆளுமைகளை பற்றி மேற்கத்தைய நாட்டவர்களின் உள்ளக் கிடக்கையையும் கருத்தையும் அறிய முடிகின்றது.

“வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட ஒன்பது பாய்களையும் விரித்தபடி கம்பீரமாக ஆடிஆடிப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் ஒன்று அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கடந்து அமெரிக்கக் கிழக்குக் கரையை அடைந்ததோர் நீண்ட கடல் பயணம் பற்றிய உண்மைக் கதை. இத்தகைய கப்பல்கள் வல்வெட்டித்துறையிலும், அதனை அடுத்துள்ள பருத்தித்துறையிலும் கட்டப்பட்டு வல்வெட்டித்துறைக் கடலோடிகளால் செலுத்தப்பட்டன. இவை தமிழ் நாட்டில் பணம் படைத்த செட்டிமாருக்காகவும், வல்வெட்டித்துறையை வதிவடமாகக் கொண்ட செட்டிமாருக்காகவும், வல்வெட்டித்துறை வணிகர்களுக்காகவும் இலங்கை வடக்கில் உள்ள வல்வெட்டித்துறை, பருத்தித்துறை மேஸ்திரிமார்களால் கட்டப்பட்டவை.”

அன்னபூரணி அம்மாளுடன் அமெரிக்கா சென்றடைந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் அங்கிருந்து திரும்பும்போது தம்முடன் எடுத்துவந்த இருபத்திரிகைக் குறிப்புகளே மேற்கண்டவையாகும்.

அமெரிக்கா சென்ற மூன்றாவது மாதத்தில் அன்னபூரணி 22 நவம்பர் 1938 இல் தென்பசிபிக் (South Pacific) சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவைநோக்கி ஒரு துணிகர பயணத்தை மேற்கொண்டது. இம்முறையும் மீண்டும் மூன்றுநாட்கள் கடும் புயலில் சிக்கிக்கொண்டது. அத்திலாந்திக்கடலில் 100மைல் வேகத்தில் வீசியகாற்றையும் 40 அடி உயரத்திற்கு எழுந்த அலைகளையும் அன்னபூரணி அனாசயமாக வெற்றிகொண்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தது. வல்வெட்டித்துறையின் உறுதியான வேப்பமர கட்டுமானமும் அதன் செய்வினைத் தொழில்நுட்பத்திறனும் இவ்வெற்றிக்கு காரணங்களாகின. இறுதியில் 8196 மைல்களைக் கடந்து 15 பெப்ரவரி 1939 இல் பசிபிக் சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவை அடைந்து தனது இரண்டாவது உலகசாதனைப் பயணத்தையும் வெற்றி கரமாக முடித்துக்கொண்டது.

அன்னபூரணியின் Tahiti பயணம்பற்றி Tahiti Bound மற்றும் Wandere எனும் இருநூல்கள் வெளிவந்துள்ளன. Florence C. Robinson இன் இப்பயணத்தின்போது அமெரிக்க தலைநகரான Washington நகருக்கு அண்மையில் உள்ள Baltimore துறைமுகத்திற்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் படத்தின் மூலம் தனது ஒன்பது பாய்களையும் முழுமையாக விரித்தபடி ஓடிவரும் இரட்டைப்பாய்மரக்கப்பலான அன்னபூரணியின் கண்ணைக்கவரும் கம்பீரத்தோற்றத்தை இதில் உள்ள புகைப்படத்தில் பார்க்கலாம்.

பொங்கியெழும் கடலின் இராட்சத அலைகளின் மத்தியில் துணிகரப் பயணத்தின் மூலம் சுயெஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்கு வல்வை மாலுமிகளால் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட அந்த வரலாற்றுச் சாதனை இன்றும் உலக மக்களால் பெருமையாகப் பேசப்படுகின்றது.

இவ்வளவு சாதனைகளையும் செய்து இந்துசமுத்திரம், அத்திலாந்திக்சமுத்திரம், பசுபிக்சமுத்திரம் என உலகத்தை சுற்றிய அன்னபூரணியின் பயணம் 1957 ஆம் ஆண்டு Tahiti யில் மூழ்கி தனது வாழ்வை முடித்துக் கொண்டது. ஆயினும் சாகசம் மிக்க கடற்பயணத்தை மேற்கொண்ட அன்னபூரணி என்ற அந்த இரட்டைப் பாய்க்கப்பல் வல்வெட்டித்துறையின் பெருமை மிக்க ஒரு முதுசொமாகும்.

அமெரிக்க மற்றும் ஸ்ரீலங்காப் படையினர் இணைந்து நடத்திய 'ஒப்ரேசன் பசுபிக் ஏஞ்சல்' நிகழ்விற்காக (15.08.2016) அமெரிக்க தூதுவரான அதுல்ஹேசப் (Atul Keshap) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். அங்கு அவர் தனதுரையில் 1813 இல் அமெரிக்க மிசனரியினர் ஏற்படுத்திய இலங்கைக்கான தொடர்பினை தாம் உருவாக்கிய அன்னபூரணி அம்மாள் என்ற பாய்க்கப்பலில் அமெரிக்காவின் குளோஸ்ரர்துறைமுகத்திற்கு வந்த வல்வெட்டித்துறை கடலோடிகள் மீளவும் தொடர்ந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டினார். அத்துடன் ஆச்சரியமிக்க அன்னபூரணியின் இக்கடல்வழிப் பயணம் சரித்திரபூர்வமானது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

இலங்கை மக்கள் அனைவரும் குறிப்பாக ஈழத்தமிழர்கள்கூட மறந்துவிட்ட ஒருநிகழ்வினை எழுபத்தைந்து வருடங்களின்பின் யாழ்ப்பாண மண்ணில் மீண்டும் ஓர் அமெரிக்கர் நினைவு கூர்ந்துள்ளார். இதுபோலவே 1987 மே மாதத்தில் வடமராட்சியை கைப்பற்றுவதற்காக அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா படையினரின் 'லிபரேசன் ஒப்பரேசன்' எனும்பெயரில் பெரும் தாக்குதலை தொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து உலகவங்கியைச் சேர்ந்த சில அதிகாரிகள் வல்வெட்டித்துறைக்கு விஜயம்செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் குறிப்பிட்ட அன்னபூரணி அம்மாளின் பயணம்பற்றி அன்று உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.வை.வேலும்மயிலும் அவர்களிடம் தெளிவாக உரையாடியிருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

75 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் நுட்பத்திறனும் அறிவியல் நுட்பங்களும் விரு;ததியடைந்திராத காலத்தில் உள்ளுர் வேப்ப மரங்களைக் கொண்டு பாயும் நீரையும் கிழித்துச் செல்லக்கூடிய பல கப்பல்களைத் தயாரித்த தமிழர்கள்அன்று அமெரிக்கா மட்டுமின்றி பர்மா, காக்கிநாடா, தூத்துக்குடி போன்ற பல துறைமுகங்களுக்குச் சென்று வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்தித் திரவியம் தேடி நமது நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள்.... ஆனால் காலத்திற்குக் காலம் தமிழ் அரசியல் தலைவர்களின் துணையுடன் பதவி ஏற்றுவரும் இலங்கை அரசுகளின் இனவாதப் போக்குகளின் காரணத்தால் தமிழ் மக்களின் கப்பல் கட்டும் தொழிலுக்கே சாவுமணி அடிக்கப்பட்டது. அன்றே அவர்களுடைய கப்பல் கட்டும் தொழில் இங்கையின் அரசுகளினால் அங்கீகரிக்கப்பட்டு கப்பல் பயணங்களினூடாக மேற்கொள்ள்பபட்டு வந்த ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தைச் சட்ட பூர்வமானதாக்கியிருந்தால் எமது நாட்டின் பொருளாதார வளமும் உயர்ந்திருக்கும், இலங்கையில் இனவாதமும், அதனால் எழுந்த யுத்தமும் தோனறியிருககாதல்லவா....

ஆனால் இன்றும் கூடத் தமிழர்களின் கண்களைத் தமிழர்களின் கைளினாலேயே குத்திக் காயப்படுத்த வைக்கின்ற செயலில் சிங்கள பேரினவாத அரசும், அதற்குத் துணைபோகின்ற இனவாதிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நாட்டில் சாந்தி, சமாதானம் ஏற்படுவதற்கு, இலங்கையில் ஒற’றுமையாகவே வாழ ஆசைப்படுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது........! விலைபோகாத நல்லதொரு தலைமைத்துவத்தைக் கொண்டு நிமிர்ந்து நின்ற எமது மக்களின் தலைவிதியென்றால் என்ன செய்வது....?





ஆதாரம்: வல்வையின் முதுசொம் வல்வை.ந.அனந்தராஜ்

அகநானூறில் பரதவர்


அகநானூறில் பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்

10 நெய்தல்

[இரவுக்குறிவந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது.]

வான்கடற் பரப்பில் தூவற் கெதிரிய

மீன்கண் டன்ன மெல்லரும் பூழ்த்த

முடிவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினைப்

புள்ளிறை கூறும் மெல்ல புலம்ப.நெய்தல் உண்கண் பைதல கலுழப்

பிரிதல் எண்ணினை யாயின் நன்றும்

அரிதுதுற் றனை யாற் பெரும உரிதினிற்

கொண்டாங்குப் பெயர்தல் வேண்டுங் கொண்டலொடு

குரூஉத்திரைப் புணரி உடைதரும் எக்கர்ப். 

பழந்திமில் கொன்ற புதுவலைப் #பரதவர்

மோட்டுமணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி 

மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்

வளங்கெழு தொண்டி யன்ன இவள் நலனே.

-அம்மூவனார்.

(சொ - ள்.) 1-4. வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய-பெரிய கடற்பரப்பில் எழும் திரைத் திவலைகளை ஏற்றுக் கொண்ட, மீன் கண்டன்ன - விண்மீனைக் கண்டாலொத்த, மெல் அருபு ஊழ்த்த - மெல்லிய அரும்புகள் மலர்ந்த, முடிவுமுதிர் புன்னை - முடம் பட்ட முதிர்ந்த புன்னைமரத்தின், தடவுநிலை மாசினை - பெரிய நிலையை


அகம், புறம் என்னும் பொருட் பாகுபாடு பற்றித் தொகுக்கப் பெற்றவை அகநானூறும் புறநானூறும். இவ் இரண்டும் அகவற் பாக்களினால் இயன்றவை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை அகப்பொருள் பற்றியவையே ஆயினும், எட்டுத்தொகை நூல்களுள் ‘அகம்’ என்னும் பெயரையே இத் தொகைநூல் பெற்றிருத்தல் இதன் சிறப்பு நோக்கி எழுந்தது போலும். இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் எட்டுத் தொகை நூல்களைக் கூறுமிடத்து, ‘நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு. . .’ என இந் நூலை முதலாவதாக எடுத்து ஓதுதலும் நோக்கத் தக்கது.

முதல் அச்சகம்


தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் ஒன்று புன்னைகாயல். தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள ஆத்தூரிலிருந்து கிழக்கே 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இக்கிராமம். கத்தோலிக்க மீனவர்கள் வசிக்கும் இக்கிராமம் தமிழக பண்பாட்டு வரலாற்றில் ஒரு சிறப்பிடத்தை பெற்றுள்ளது. தமிழ்மொழி முதன் முதலில் அச்சேறியதும், முதல் தமிழ் நூல் பிரசுரிக்கப்பட்டதும் இக்கடற்கரையோர கிராமத்தில் தான். .

16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர் தமிழகத்தின் சோழமண்டலக் கடற்கரையை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போது, முதலில் அவர்களின் தலைமையிடமாக இருந்தது புன்னைக்காயலே. எனவே போர்ச்சுக்கீசியரோடு வந்திருந்த கத்தோலிக்கப் பாதிரியார்களும் குறிப்பாக யேசு பாதிரியார்களும் இக்கிராமத்தையே தலைமையிடமாகக்  கொண்டிருந்தனர். ஏற்கனவே கடற்கரை ஓரங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்களைக் கத்தோலிக்க மறைக்குள் கொண்டு வந்திருந்த இப்பாதிரியார்களுக்கு, அவர்களுக்கு மறைகல்வி வழங்கிட சில நூல்கள் தேவைப்பட்டன. இச்சூழ்நிலையில் ஹென்ரிக்கஸ் என்ற போர்ச்சுகீசிய பாதிரியார் 1547 - ல் தமிழகம் வந்து சேர்ந்தார்

தமிழ்மொழியை கற்றதுடன், புன்னைகாயலில் 16-ம் நூற்றாண்டிலேயே ஒரு தமிழ் பல்கலைக்கழகத்தையும் உருவாக்கிய ஹென்ரிக்கஸ் அடிகளார் தமிழ் நூல் ஒன்றை அச்சிட முயன்று பெரும் வெற்றியை பெற்றார். அவரின் தொடக்க முயற்சிகள் தமிழகத்திற்கு வெளியேயும், பின்னர் தமிழகத்தில் புன்னைக்காயலிலும் நடைபெற்றன.

1578 அக்டோபர் 20ம் நாள் கேரளா மாநிலம் கொல்லத்தில் ”தம்பிரான் வணக்கம்” எனும் நூல் அச்சிடப்பட்டது. இது பதினாறு பக்கங்களை கொண்ட மறைகல்வி நூல். இந்நூல் மொழிபெயர்ப்பு நூலாகும். ஹென்ரிக்கஸ் அடிகளாரும், மனுவேல் பெட்ரோ எனும் பாதிரியாரும் இம்மொழிபெயர்ப்பு பணியைச் செய்திருந்தனர், பதினாறு பக்கங்களைக் கொண்ட இந்நூலே இந்திய மொழிகளில் பிரசுரமான, இந்தியாவிலேயே பிரசுரிக்கப்பட்ட முதல் நூல் எனும் பெருமையை கொண்டது. நூலின் முதல் பக்கத்தில் ஒரு படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது .

இதற்கு பின் 1579 நவம்பர் 14 ம் நாள் 122 பக்கங்களை கொண்ட " கிறிஸ்தியான் வண்க்கம்" எனும் நூல் கொச்சியிலிருந்து பிரசுரிக்கப்பட்டது. தமிழகம் தாய்மொழி தழிழைத் தன் மண்ணிலேயே அச்சேற்றுவதற்கு  இன்னும் ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

1586 –ல் அல்லது 1587-ல் புன்னைகாயலில் இருந்து "அடியார் வரலாறு" எனும் நூல் பிரசுரிக்கப்பட்டது. இந்நூல் 666 பக்கங்களை கொண்டிருந்தது. கல்வியறிவற்ற மீனவர்களின் உபயோகத்திற்கான நூல் இது என்பதால் மிக எளியநடையில் எழுதப்பட்டிருந்தது. தமிழறிஞர் தனிநாயகம் அடிகளார் குறிப்பிடுவது போல “கிறிஸ்துவச் சிந்தனைகளைத் தமிழ் மூலம் வெளிப்படுத்த 16 –ம் நூற்றாண்டு செய்த மிகப்பெரிய முயற்சி இது”.

இந்நூலை அச்சேற்றுவதற்காக தமிழ் அச்சு உருளையை உருவாக்கியவர் ஜோவா டி பரியா எனும் போர்ச்சுகீசிய பாதிரியார். இதுவே முதல் அச்சு உருளையும் ஆகும். இந்த அச்சு இயந்திரம் அமைப்பதற்க்கும், பிற செலவுகளுக்காகவும் கடற்கரையோரம் வாழும் மீனவப் பக்தர்கள் 400 குருசோடக்களை போர்ச்சுகீசிய நாணயங்களை வழங்கினர்.

இப்பிரசுரத்தின் மற்றொரு முக்கிய அம்சம் இதற்காக பயன்படுத்திய காகிதம் ஆகும். இந்நூலின் காகித கலவையில் மூங்கில் வார்ப்படத்தை விட துணி வார்ப்படமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே இக்காகிதம் சீனாவில் இருந்து பெறப்பட்டது என தீர்மானிக்கப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர் சீனத்தோடு கொண்டிருந்த வணிகம், அரேபிய சீன வணிகம் மலபார் கடற்கரை வழியாக நடைபெற்றுக் கொண்டிருந்தன என்பவை இக்கருத்தை வலியுறுத்துகிறது .

இவ்வாறு தமிழ் மொழி 16 ம் நூற்றாண்டிலேயே அச்சேற்றப்பட்டது என்பதும் முதலில் அச்சேறிய நூல்கள் கத்தோலிக்க மறைக்கல்வி நூல்கள் என்பதும் குறிப்ப்ட்டத்தக்கது. ஹென்ரிக்கஸ் அடிகளாரின் இந்த அரிய முயற்சிக்காக அவர் ”தமிழ் அச்சு தந்தை” என அழைக்கப்படுகிறார். சீகன் பால்கு அடிகளார் தமிழகத்திற்கு வருவதற்கு 126 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மொழி அச்சேற்றப்பட்டு தமிழ் நூல் ஒன்று வெளியானது. தமிழ் அச்சுக்கலை வரலாற்றை இன்னும் தொன்மையாக்குகிறது.

- முனைவர் பிரான்சிஸ் 

அகநானூறில் பரதர்


அகநானூறில் இருந்து பரதர் பற்றிய வரலாற்று சான்றுகள்


187 பாலை

தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,

5
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர்
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி,
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்


10
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்,
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து,
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி,
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன


15
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து
வேனில் வெற்பின் கானம் காய,
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை,
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து,


20
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி,
நாள் வேட்டு எழுந்த நயன் இல் #பரதவர்
வைகு கடல் அம்பியின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்

Map of Tutecoryn - 1670


From the book:

Thanks : Rare book Society of India




நெய்தல் நில தமிழ்


பரதவர் பயன்படுத்திய படகுகளின் பெயர்கள் மற்றும் தளவாடங்கள்

கப்பல் முதல் கட்டுமரம் வரை பரதவர்களே கட்டினார்கள்


ஒத்தை மரத்து வத்தை - ஒரே மரத்தால் ஆனது

வத்தை - ஒத்தை மரத்து வத்தையை விட கொஞ்சம் பெரிது

கட்டு மரம் - ஐந்து மரங்களை சேர்த்து கட்டி சொய்யும் படகு

திமில் அல்லது நீல்மரம் - இது 7 அல்லது 9 அளவில் பெரிய மரங்களை கொண்டு கட்டும் கட்டுமரம்

வள்ளம் - வத்தையை விட பெரிய அளவில் ஆன படகு

டிங்கி - பெருட்கள் கப்பலுக்கு ஏற்ற பயன் படும் வள்ளம். வள்ளத்தை விட அகலமானது

லைலா வள்ளம்- வள்ளத்திற்கும் நாவாய்க்கும் இடைப்பட்ட அளவு உள்ள வள்ளம்

தோணி - இரண்டு வகை

கரைவலை தோணி அல்லது வஞ்சி- கரையில் இருந்து இழுக்கும் வலையை எடுத்து செல்ல பயன்படும் படகு. வள்ளத்தை விட நீளமானது

தோணி - பொருட்களை கொண்டு செல்ல பயன் படும் படகு. இது பாய்மர கப்பலுக்கு இனையான அளவு உடையது 300டன் பொருட்களை கொண்டு செல்ல முடியும்

கப்பல் அல்லது பாய்மரகப்பல் - மக்கள் வசதியாக பயணம் செய்யமுடியும். 100டன் பொருட்களை எடுத்து செல்ல முடியும்

நாவாய் - பாய்மரகப்பலின் வடிவ அமைப்பு கொஞ்சம் வேறுபாடு கொண்டது . வேகமாகச் செல்லகூடியது

இவை இல்லாமல் இன்று நாங்கள் பயன்படுத்தும் படகுகள்

லாஞ்சி - இரும்பிலும் மரத்திலும் பைபரிலும்
மீன் பிடி கப்பல்
பைபர் படகுகள்

படகுகளின் மற்ற தமிழ் பெயர்கள் தற்போது இவை நெய்தல் மக்கள்  நாங்கள் பயன்படுத்துவது இல்லை

மிதவை
ஓடம்
தெப்பம்
பட்டுவா
வங்கம்
அம்பி
புணை
கலம், மரக்கலம்
படகு
கைப்பந்தல்


கடலில் வேலை சார்ந்த பதவிகள்
தண்டல் அல்லது தண்டையல் - கப்பல் தலைவன்

சுக்கானி அல்லது கம்மியர்-கப்பல் ஓட்டி

கடலோடி - கடல் பற்றிய அறிவு உடையவன்

மன்டாடி- கடல் நீர்வாடு பற்றிய அழ்ந்த அறிவு உள்ளவர்

கம்மாருகாரர் - மீன் பிடித்தலில் அரசன்



வள்ளம், கப்பல் பாகங்கள்

சுக்கான்

கானா கம்பு.

ஏரா - அடிப்பாகம்

அணியம்/முகரி/துரோதை - முன்பாகம்

அட்டி/அணிய துரோதை - பின்பாகம்

கூம்பு (பாய்மரத்தை கட்ட உதவும் தண்டு)

வாரி பலகை

ஓடுகை,

மீப்பாய் - பாய்மரப் பாய்

நங்கூரம்

வாரி நீக்கம்

சிந்தை உசத்தி

மணி தூக்கம்

மேல் கொடி

வரி நீக்கம்

அணியக் குச்சை

அட்டிட மடி

அட்டி சிந்தி உசத்தி

பருமல் அடி

இசுக்களா அடி

அணியத்துக் கச்சைவாரி

தட்டு உசத்தி

தலுக்காலு உசத்தி

கயிறு

மோசாவாரி - ஒட்டம் - படகின் நீளுக்கும் வங்குகளின் நுணியில் இணைக்கப்பட்டு இருக்கும் பலகை.

வங்கு - U வடிவில் படகின் அடிப்பாகத்தை உருவாக்கப் பயன்படும் திரட்சியான மரத்தில் வடிவமைக்கப்படும் பலகை.

கூத்துவாரி - படகின் நடுவில் குறுக்காக போடப்பட்டு இருக்கும் தடித்த பலகை. இதில் வட்டமாக வெட்டியெடுத்து அதற்குள்ளே பாய் மரக் கம்பை வைக்கலாம்.

பூவெச்சம் - பாய்மரக் கம்பின் அடியை தாங்கும் வண்ணம் வங்கில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் குழி.

கடையல் - வள்ளத்தின் பின்பக்கம்

மூக்கன்

பாய்மரம்

ஆஞ்சான் கயிறு

வடம்

பாவல்

வாறன் (கயிறு)

கடப்பாய்

கோர்ஸ்

தாமன்

நாளி

பாமரம்

பருமல் - பாய்மரம் நுணி

கடையால்பத்தி

கூத்துவாரி - படகின் நடுமையம்

வங்கு

யாளி

பாவல்

கடப்பாய்

கடப்பலகை

கடுசு - கண்னா- காற்றுக்கு ஏற்றாற்போல் சமன் செய்ய பயன்படுத்துவது

வடகாவி

வடசவரி

வடகூர்

வட மரம்

கலி மரம்

கலிச் சுற்று

கோசா

வங்குக்கால்

நூல் ஏணி

அணிய தண்டு

ஈயக்குண்டு

சட்டிமம்ம கெச்சண்

தொழவை

காமான்

பட்டை

ஞாப்பாரம்

படலம்

கட்டுக்கொடி

ஆஞ்சான் (கயிறு)

கூசா

புட்டரிசி

கிட்டங்கி

மகமை

ரேவடி

பத்தார்

உமல்

கச்சா

காவி

கம்பாவம்

போயா

வலை

தூண்டி

மண்டுக்

அட்டி பாரம்

கலபத்து

#கடல் அளவைகள்

பாவுகம்

ஆழம் அளக்க பயன்படும் கருவி தாத்தி



வள்ளம் கட்டப் பயன்படுத்தப்பட்ட கருவிகள்:


ரம்பம் - மரம் துண்டாட
உளி - மரம் செதுக்க
சுத்தியல் -உளி அடிக்க
ஒளதார் - மரத்தைத் துளையிட
பயன்படுத்தப்பட்ட மரங்கள்
வேம்பு
இலுப்பை
நாவல்
புன்னை
வெண் தேக்கு
தேக்கு

#துறைமுகங்கள்

துறைமுகம் - கப்பல்கள் நிறுத்துமிடம்.

முன்துறை - கழிமுகத்துக்கு வெளியே அதிக நிறையுள்ள பொருட்களை மட்டும் இறக்கும் இடம்.

பெருந்துறைமுகம் - கழிமுகத்துக்கு உள்ளே பண்டகசாலை போன்ற இடங்கள் உள்ள இடம்.
கழிமுகம்

உலர்துறை - கப்பல் கூடம்

சட்டிமம்-மாலுமி இல்லங்கள்

கட்டுமானத் தளம்

துறைமுகப்பட்டினம்


OUR CHURCH'S - 5


தூய சிந்தாயாத்திரை மாதா திருத்தலம், தூத்துக்குடி

முத்துநகர் தூத்துக்குடி அன்னை மரியாளின் பக்தி மணம் கமழும் அழகிய நந்தவனம். இந்நகரின் மக்கள் அன்னைக்குப் பல்வேறு ஆலயங்கள் எழுப்பி அவளைப் பல்லாண்டுகளாகப் பரிவோடும், பக்திப் பெருக்கோடும் வழிபட்டு வருகின்றனர். அன்னை மரியாளுக்குத் தமிழகத்திலேயே உருவான முதல் ஆலயம் முத்துநகரின் சொத்தான பனிமய அன்னையின் பேராலயமே (கி.பி. 1582). அதற்கு அடுத்தப்படியாக இங்கு தோன்றியதுதான் பழமைச் சிறப்புமிக்க சிந்தாத்திரை மாதா ஆலயம். “சிந்தாத்திரை” என்றாலே “வெற்றிப் பயணம்” என்றுதான் பொருள்.

பயணிகளின் ஆலயம்

ஆழ்கடலில் முத்தும், சங்கும் குளிக்கச் செல்லும் கடலோடி மக்கள், பயணத்தை ஆரம்பிக்குமுன், தங்களின் படகுகளைச் சிந்தாத்திரை மாதாவின் ஆலயத்திற்கு முன்னால் கடலில் நிறுத்தி, அன்னையிடம் வேண்டுதல் மற்றும் பொருத்தனைகள் செய்வது வழக்கம். அதுபோல வெளியிடங்களுக்குப் பயணம் செல்லும் தோணித் தொழிலாளர்களும், தோணிகளில் சரக்குகளை ஏற்றிய பின், சிந்தாத்திரை மாதாவின் ஆலயத்தில் கூடிவந்து, தங்களின் கடல் பயணம் வெற்றிப் பயணமாக அமைய வேண்டுதல் செய்வர். சாதாரண மீன்பிடித் தொழிலாளர்கள் முதலாய் இந்த அருமையான வழக்கத்தைப் பின்பற்றி வந்தனர்.

இன்றுகூட தூத்துக்குடியில் புதிதாகத் திருமணம் செய்து கொள்ளும் புதுமணத் தம்பதிகள், “வடக்கே செல்லுதல்” என்னும் சம்பிரதாயத்தை நிறைவேற்றும் வகையில், தூத்துக்குடிக்கு வடக்கே அமைந்துள்ள சிந்தாத்திரை மாதாவின் ஆலயத்தைத் தரிசித்து, தங்களின் இல்லற வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமாக அமைய அன்னையை மன்றாடி, விருந்துண்டு, மகிழ்ச்சியோடு இல்லம் திரும்புகின்றனர். இன்னும் தினசரி வாழ்க்கையின் சுமைகளால் சோர்வுற்றிருக்கும் மக்களும், அன்னையின் தாய்மடியில் தலை சாய்த்து, கடற்கரை மணலில் அமர்ந்து, இதமான தென்றல் காற்றில் இனிமை காணத் திரளாக வருகின்றனர். இக்காரணங்களுக்காகவே முத்துநகர் மக்களின் இத்திருத்தலம் சிந்தாத்திரை மாதா ஆலயம் என சிறப்பாக அழைக்கப்படுகிறது. பழமைச் சிறப்பு மிக்க சிந்தாத்திரை மாதா ஆலயத்தின் வரலாற்றை இங்கு தொகுத்தறிவோம்.

அன்னையின் முதல் ஆலயம்

முதல் ஆலயமான பனிமய மாதா ஆலயம், முத்துக்குளித்துறையின் யேசு சபை அதிபராக இருந்த சுவாமி தியோகு தி குணா என்பவரின் அரிய முயற்சியினால் 1582-ம் ஆண்டில் உருவானது. அது போர்த்துக்கீசியர் முத்துக்குளித்துறையில் ஆதிக்கம் செலுத்திய காலம். ஆனால் வணிக நோக்குடன் இந்தியாவுக்கு வந்த உலாந்தர்கள் என்னும் டச்சுக்காரர்கள் 1658-ம் ஆண்டில் போர்த்துக்கீசியரிடமிருந்து தூத்துக்குடியைக் கைப்பற்றினர். பின்னர் முத்துக்குளித்துறை முழுவதும் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் போர்த்துக்கீசியரின் ஆதிக்கமும்;, அவர்களுக்குப் பாப்பரசர் 6-ம் அலெக்ஸாண்டர் வழங்கியிருந்த ஞான அதிகாரச் சலுகையும் முத்துக்குளித் துறையில் வீழ்ச்சியுற்றன.

டச்சுக்காரர்கள் கத்தோலிக்க மறையின் எதிரிகள். ‘கால்வீனியம்’ என்னும் பதித மதத்தைப் பின்பற்றியவர்கள். கத்தோலிக்க மக்களின் நற்கருணை பக்தியையும், மாதா பக்தியையும் மிகத் தீவிரமாகக் கண்டனம் செய்தனர். கத்தோலிக்க ஆலயங்களை இடித்தனர் அல்லது தங்களின் வணிகக் கூடங்களாக மாற்றினர். தூத்துக்குடியிலிருந்த முதல் பனிமய மாதா ஆலயத்தையும் 1695-ம் ஆண்டில் இரவோடு இரவாக இடித்துத் தரைமட்டமாக்கினர். அங்கே தங்களின் இனத்தவரை அடக்கம் செய்ய “கிரகோப்” என்னும் கல்லறைத் தோட்டத்தை அமைத்தனர்.

ஆனால் டச்சுக்காரர்களின் இந்த மதவெறி முத்து நகரில் வெகுகாலம் நீடிக்கவில்லை. தங்களின் இலாபகரமான கடல் வணிகத்திற்குக் கத்தோலிக்கக் கடலோடி மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மிகவும் தேவை என்பதை உணர்ந்தனர். எனவே தங்களின் மதவெறியை விரைவில் மாற்றிக் கொண்டனர். மாதா பக்தியைப் பழித்துரைப்பதையும் நிறுத்திக் கொண்டனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு டச்சு ஆளுநரின் அனுமதி பெற்று அக்காலத்தில் தூத்துக்குடி புனித இராயப்பர் கோவில் பங்குக் குருவாக இருந்த யேசு சபையைச் சேர்ந்த சுவாமி விஜிலியுஸ் மான்சி என்பவர் கிரகோப் கல்லறைத் தோட்டத்திற்கு எதிரே பனிமய மாதாவுக்கு 1713-ம் ஆண்டில் புதியதோர் ஆலயத்தைக் கற்களால் எழுப்பினார்.

முதல் குடிசைக் கோவில்

பனிமய மாதாவுக்குப் புதிய ஆலயம் உருவான பின்னர், ஏறத்தாழ 1713-ம் ஆண்டில், முத்துநகரில் வாழ்ந்த கத்தோலிக்க மக்கள், அதிலும் குறிப்பாகக் கடலோடி மக்கள், தங்களின் கடற்பயணங்களில் அன்னையின் ஆதரவையும், ஆசியையும் வேண்டி மன்றாட, சிந்தாத்திரை மாதா பெயரால் ஓர் ஆலயத்தை உருவாக்க விரும்பினர். தூத்துக்குடிக்கு வடக்கே கடலோரத்திலிருந்த புறம்போக்கு நிலத்தில் களி மண்ணால் சுவரெழுப்பி, ஓலையால் கூரைவேய்ந்து சிந்தாத்திரை மாதாவின் முதல் ஆலயத்தைக் கடலோடி மக்களே கட்டியெழுப்பினர். அக்காலத்தில் பனிமய மாதா ஆலயத்தைத் தவிர வேறு ஆலயங்களைக் கற்களால் கட்டுவதற்கு டச்சு அதிகாரிகள் தடைவிதித்திருந்தனர். நாளடைவில் இக்குடிசைக் கோவிலைச் சுற்றிச் சில மீனவ குடும்பங்களும் குடிசைகள் அமைத்துக் குடியிருக்க ஆரம்பித்தனர். இவ்வகையில் சிந்தாத்திரை மாதா ஆலயம் ஆரம்ப முதல் முத்துநகர் மக்களுக்கெல்லாம் பொதுவான திருத்தலமாக விளங்கிற்று. இது டச்சுக்காரர்களின் காலத்தில் பனிமய மாதா பங்கினை நிர்வாகம் செய்து வந்த யேசு சபைக் குருக்களின் கண்காணிப்பிலிருந்தது.

1759-ம் ஆண்டு முதல் முத்துக்குளித் துறையிலும், இங்குள்ள ஆலயங்கள் பற்றிய ஞான அதிகாரத்திலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. வணிகத்திற்காக இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் தூத்துக்குடியைக் கைப்பற்றி, 1782-ம் ஆண்டில் முத்துக்குளித்துறை முழுவதும் டச்சுக்காரர்களின் பலத்தை முறியடித்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் கத்தோலிக்க மக்களின் மதவழிபாடுகளில் அவசியமின்றித் தலையிட விரும்பவில்லை. இச்சூழ்நிலையில் முத்துக்குளிப்பவர்களும், சங்கு பிடிப்பவாகளும், தங்களின் சொந்த முயற்சியால், சிந்தாத்திரை மாதாவின் பழைய குடிசைக் கோவிலை அகற்றிவிட்டு, கற்களால் சிறியதோர் ஆலயத்தை அமைத்தனர். இவ்வாலயம் கடலோடி மக்கள் தங்களின் சங்குகளைச் சேமித்து வைக்கும் பண்டக சாலைக்கு அருகிலேயே அமைந்திருந்தது.

காலப்போக்கில் சிந்தாத்திரை மாதாவின் சிற்றாலயம் புயலுக்கும், மழைக்கும் பலியாக சிதைவுற்றது. எனவே பழைய போர்த்துக்கீசிய மிஷனைச் சேர்ந்த தனவந்தரான திருவாளர் சேவியர் இஞ்ஞாசி குரூஸ் டிவோட்டா என்பவர் சிதைந்துபோன சிந்தாத்திரை மாதா சிற்றாலயத்தை மீண்டும் கற்களால் கட்டியெழுப்பினார். அவரது மரணத்திற்குப் பின், அவரது புதல்வன் திரு. அந்தோனி டிவோட்டா ஆலயத்தின் இரண்டாவது பகுதியைக் கட்டினார். இவரது மகன் பிலிப்பு கயித்தான் டிவோட்டா ஆயத்தின் மூன்றாவது (முகப்புப்) பகுதியைக் கட்டி முடித்தார். அவரது காலத்திற்குப் பிறகு, திரு. சூசை டிவோட்டா என்பவர் அன்னையின் ஆலயத்தைப் பழுது பார்த்துப் புதுப்பித்தார். 1900-ம் ஆண்டில் ஆலயத்தின் கூரையின் ஒரு பகுதி கீழே விழுந்துவிட்டது. அதனை ரூ. 500 செலவில் திரு. பவுல் இஞ்ஞாசி பெர்னாந்து 1903-ம் ஆண்டில் செப்பனிட்டு, மீண்டும் புதுப்பித்தார். இவ்வாறு ஆலயம் புதிதாக உருவான பின், சில ஆண்டுகளாக அன்னையின் ஆபரணங்களும், ஆலயத்திறவுகோலும், ஏனைய உடமைகளும் தூத்துக்குடி பரதர் குல சாதித் தலைவன் அவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தன. ஆலயத்திற்கு முன்னால் பெரியதோர் குருசடியும் கட்டப்பட்டது. அதன் உச்சியிலுள்ள மரச் சிலுவையை இன்றைக்கும் மக்கள் பக்திப் பெருக்கோடு வழிபட்டு வருகின்றனர். அதன் முன்பகுதியில், ஒரு கடற் பயணத்தின் போது இறந்த சைய மத்தேசியாள் என்ற இளம் பெண்மனியின் எளிமையான கல்லறை உள்ளது.

ஆலயத்தின் ஞான அதிகாரம்

1773-ம் ஆண்டு முதல் சிந்தாத்திரை மாதாவின் ஆலயத்தின் ஞான அதிகாரம் பற்றிய ஒரு குழப்பம் ஆரம்பமானது. அதுவரை தூத்துக்குடி மக்களுக்கெல்லாம் பனமய மாதா ஆலயமே புதிய பங்குக் கோவிலாக இருந்தது. யேசு சபைக் குருக்கள் பங்குப் பொறுப்பை ஏற்றிருந்தனர். தூத்துக்குடி மக்கள் ஒரே மந்தையாக ஒரே ஆயரின் கண்காணிப்பில் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். சிந்தாத்திரை மாதா சிற்றாலயம், பனிமய மாதா பங்கு ஆலயத்தின் ஓர் இணை ஆலயமாக இருந்தது.

சில அரசியல் காரணங்களுக்காகப் பாப்பரசர் 14-ம் கிளெமென்ட் என்பவர் 1773-ம் ஆண்டில் உலகமெங்கும் யேசு சபையைத் தடை செய்தார். அதனால் முத்துக்குளித்துறையில் பணியாற்றி வந்த யேசு சபைக் குருக்களும் தங்களின் கண்காணிப்பிலிருந்த ஆலயங்களையெல்லாம் விட்டு வெளியேறினர். அவர்களுக்குப் பதிலாக, விசுவாசப் பரம்புதல் சபையானது, பாரீஸ் வேத போதக சபைக் குருக்களிடம் முத்துக்குளித்துறை ஆலயங்களை ஒப்படைத்தது. ஆனால் இவ்வேத போதக சபையில் குருக்களின் பற்றாக்குறையினால் இந்த ஏற்பாடு வெற்றி பெறவில்லை.

இதற்கிடையில் போர்த்துக்கல் அரசாங்கமானது, முத்துக்குளித்துறை ஆலயங்கள் மீது முன்னொரு காலத்தில் பாப்பரசர் வழங்கியிருந்த ஞான அதிகாரச் சலுகையை, மீண்டும் நிலைநாட்ட விரும்பியது. எனவே இந்தியாவில் இன்னமும் தங்களின் அதிகாரத்திலிருந்த, கோவாவிலிருந்து சில சுதேச குருக்களை முத்துக்குளித்துறை ஆலயங்களைக் கண்காணிக்கும்படி அனுப்பி வைக்குமாறு கோவா மறைமாவட்ட போர்த்துக்கீசிய ஆயருக்கு ஆணை பிறப்பித்தது. அதன்படி பனிமய மாதா ஆலயமும், சிந்தாத்திரை மாதா ஆலயமும், முத்துக்குளித்துறையின் ஏனைய ஆலயங்களும் கோவா குருக்களின் நிர்வாகத்தின்கீழ் வந்தன. இதுவே “கோவா மிஷன்” என அழைக்கப்பட்டது. 

ஆனால் யேசு சபைக் குருக்களின் காலத்திலிருந்த ஒழுங்குமுறைகளும், நிர்வாகத் திறனும், ஆன்மீக வழிபாடுகளும் கோவா குருக்களின் கண்காணிப்பில் சிறப்பாக அமையவில்லை. மேலும் போர்த்துக்கல் அரசாங்கம் முத்துக்குளித்துறை ஆலயங்களுக்கு முன்னொரு காலத்தில் வழங்கி வந்த பொருளுதவியும் இப்போது அறவே நின்றுவிட்டது. எனவே, பல ஆலயங்கள் போதிய பராமரிப்பும், குருக்களுமின்றி கைவிடப்பட்டன. சில ஆலயங்கள் பாழடைந்து போயின, பழுதுற்றுக் கிடந்தன. முத்துக்குளித்துறை ஆலயங்களில் மயிலாப்பூர் போர்த்துக்கீசிய மறைமாவட்ட ஆயர் உரிமை கொண்டாட ஆரம்பித்தார். இக்காலக் கட்டத்தில் சிந்தாத்திரை மாதா ஆலயமும் பாழடைந்து போயிற்று.

நிர்வாகக் குழப்பம்

ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த யேசு சபையைப் பாப்பரசர் 7-ம் பத்திநாதர் 1814ம் ஆண்டில் மீண்டும் புதுப்பித்தார். அதனைச் தொடர்ந்து பாப்பரசர் 16ம் கிரகோரியார் 1836ம் ஆண்டில் மதுரை அப்போஸ்தலிக்க மறைமாநிலத்தை உருவாக்கி, முத்துக்குளித்துறை ஆலயங்களை மீண்டும் யேசு சபைக் குருக்களின் கண்காணிப்பில் ஒப்படைத்தார். இப்புதிய ஏற்பாட்டின்படி, பிரான்ஸ் நாட்டில் துளுஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெர்த்ராண்ட், மார்ட்டின், கார்னியர், லூயிஸ் ராங்கி ஆகிய நான்கு யேசு சபைக் குருக்கள் முத்துக்குளித்துறை ஆலயங்களைப் பராமரிக்கும்படி விசுவாசப் பரப்புதல் சபையால் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவே “பிரெஞ்சு மிஷன்” என வழங்கலாயிற்று.

இந்நிலையில் முத்துக்குளித்துறை மக்கள், அதிலும் குறிப்பாகத் தூத்துக்குடி மக்கள், இவ்விரு ஞான அதிகாரங்களால் குழப்பமடைந்தனர். விசுவாக வாழ்வில் தடுமாறினார். ஒரு சாரார் தூத்துக்குடி சாதித் தலைவனாரின் ஆலோசனையின்படி கோவா மிஷன் குருக்களை ஆதரித்தனர். மற்றொரு சாரார் பாப்பரசரின் ஆணையின்படி யேசு சபைக் குருக்களை ஆதரித்தனர். இதனால் தூத்துக்குடி மக்கள் இரு பிரிவினராகப் பிளவுபட்டனர். சாதித்தலைவனின் ஆதரவின் கீழ் கோவா குருக்கள் பனிமயமாதா ஆலயத்தையுமு;, சிந்தாத்திரை மாதா சிற்றாலயத்தையும் தங்களின் நிர்வாகத்தில் வைத்துக் கொண்டனர்.

பிரெஞ்சு மிஷன் ஆலயம்

1838-ம் ஆண்டில் பாப்பரசர் 16-ம் கிரகோரியார் ‘முல்த்தா பிரெக்ளாரே’ என்ற பத்திரத்தின் மூலம், கோவா நீங்கலாக இந்தியா முழுவதும், செயலற்றுப்போன பதுரவாதோ என்னும் போர்த்துக்கீசிய ஞான அதிகாரச் சலுகையைத் தடை செய்தார். இதனால் கோவா மிஷன் மக்களுக்கும் பிரெஞ்சு மிஷன் மக்களுக்குமிடையே பிரிவினையும், மோதல்களும் மேலும் அதிகரித்தன. பனிமய மாதா ஆலய நிர்வாகத்தை இழந்த யேசு சபைக் குருக்கள், தங்களை ஆதரித்த பிரெஞ்சு மிஷன் மக்களின் வழிபாட்டுக்கென்று பெரியதோர் தனி ஆலயம் தேவை என்பதை உணர்ந்தனர். திரு. மனுவேல் வியாகுல மோத்தா என்பவரிடமிருந்து குறைந்த விலையில் ஒரு நிலம் வாங்கி, அதிலே யேசுவின் திரு இருதயம், மரியாயின் மாசற்ற இருதயம் என்ற பெயரால் பெரியதோர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினர். இவ்வாலயம் 1849-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. ஆனால் சிந்தாத்திரை மாதா ஆலயம் இன்னமும் கோவா மிஷன் குருக்களின் நிர்வாகத்தில்தான் இருந்தது. இந்த ஞான அதிகாரக் குழப்பத்தின் போதுதான் பழைய சிந்தாத்திரை மாதா ஆலயம் படிப்படியாக மூன்று பகுதிகள் கொண்ட ஆலயமாகக் கட்டி முடிக்கப்பட்டது. இது அநேகமாக 1773-ம் ஆண்டு முதல் 1903-ம் ஆண்டுவரையுள்ள காலத்தில் கட்டப்பட்டதாக வரையறுக்கலாம்.

இரட்டை ஆட்சி

ஞான அதிகாரம் காரணமாக முத்துக்குளித்துறை மக்களிடையே தீவிரமடைந்து வரும் பிரிவினையையும், பதட்டத்தையும் நீக்கும்படியாகப் பாப்பரசர் 9-ம் பத்திநாதர் 1857-ம் ஆண்டில் போர்த்துக்கல் அரசுடன் புதியதோர் ஒப்பந்தம் செய்தார். அதன்படி முத்துக்குளித்துறை ஆலயங்களில், பங்குகளில், மேற்சொன்ன இரண்டு ஞான அதிகார நிர்வாகத்தையுமே பாப்பரசர் அங்கீகரித்தார். இதுவே “இரட்டை ஆட்சி” என வழங்கலாயிற்று. அதன்படி பனிமய மாதா ஆலயமும். அத்துடன் இணைந்த சிந்தாத்திரை மாதா ஆலயமும் கோவா மிஷனுக்கு உட்பட்டு, மயிலாப்பூர் மறைமாவட்ட ஆயரின் நிர்வாகத்திற்கு அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டன.

இருப்பினும் இரு பிரிவினருக்குமிடையே இன்னமும் பகையும், பிளவும் நீடிக்கத்தான் செய்தன. எனவே போர்த்துக்கல் அரசுடன் பாப்பரசர் 13-ம் சிங்கராயர் 1886-ம் ஆண்டில் மீண்டும் ஓர் ஒப்பந்தம் செய்தார். அதன்படி முத்துக்குளித்துறையைச் சேர்ந்த, பனிமய மாதா ஆலயம், கீழவைப்பாறு பரலோக மாதா ஆலயம், புன்னைக்காயல் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மணப்பாடு தூய ஆவி ஆலயம், கூடுதாழை மரியன்னை ஆலயம் ஆகிய ஐந்து பங்குகள் மட்டும் மயிலாப்பூர் மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டு, மற்ற ஆலயங்களும், பங்குகளும் யேசு சபைக் குருக்களின் பொறுப்பில் வைக்கப்பட்டன. இதனால் பனிமய மாதா பங்கோடு இணைந்த சிந்தாத்திரை மாதா ஆலயமும் ஆரம்பத்தில் மயிலாப்பூர் ஆயரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ஆனால் இவ்வாலயத்தின் மீதுள்ள ஞான அதிகாரம் இன்னமும் தெளிவற்ற நிலையிலிருந்தது. 

பாப்பரசர் 13-ம் சிங்கராயர் 1883-ம் ஆண்டில் “பிரெஞ்சு மிஷன்” பெயரால் திருச்சி மறைமாவட்டத்தை ஏற்படுத்தி, அதனை யேசு சபைக் குருக்களிடம் ஒப்படைத்தார். முத்துக்குளித்துறை முழுவதும் திருச்சி மறைமாவட்டத்தோடு சேர்க்கப்பட்டது. பாப்பரசரின் இந்தப் புதிய நிர்வாக அமைப்பினை செயல்படுத்தும் பொறுப்பு அக்காலத்தில் இந்தியாவில் பாப்பரசரின் பிரதிநிதியாக இருந்த மேதகு லடிஸ்லாஸ் செலஸ்கி ஆயருக்கு வழங்கப்பட்டது. அவருடைய ஆணையின்படி அன்று தூத்துக்குடிக்கு வடக்கே தனித்து நின்ற சிந்தாத்திரை மாதா ஆலயம் பனிமய மாதா பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு 1893-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி, திருச்சி மறைமாவட்டத்தைச் சேர்ந்த திரு இருதயங்களின் ஆலயப் பங்கோடு இணைக்கப்பட்டது. ஞான அதிகாரக் குழப்பத்தினால் தூத்துக்குடி மக்களிடையே பிளவு ஏற்படுவதற்கு முன்னால், சிந்தாத்திரை மாதா ஆலயம் தூத்துக்குடி மக்களுக்கெல்லாம் ஒரு பொது திருத்தலமாக விளங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இது கடலோடி மக்களாலேயே கட்டப்பட்ட ஆலயம்.

நீதிமன்றத்தில் வழக்கு

மேதகு லடிஸ்லாஸ் செலஸ்கி ஆண்டகையின் ஆணைப்படி சிந்தாத்திரை மாதா ஆலயம் தூத்துக்குடி திரு இருதய ஆலயப் பங்கோடு இணைந்ததை ஆரம்பத்தில் மயிலாப்பூர் மறைமாவட்ட ஆயர் மேதகு ரீட் தா சில்வா ஆண்டகையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் அவருடைய ஆளுகையிலிருந்த கோவா மிஷன் மக்கள் இந்த ஏற்பாட்டினை எதிர்த்தனர். அதன் காரணமாக ஆயர் ரீட் தா சில்வா தனது முடிவை விரைவில் மாற்றிக்கொண்டார். ஆனால் அன்று திரு இருதயங்களின் ஆலயப் பங்குக் குருவாக இருந்த யேசு சபைக் குரு ஹால் என்பவர் ஆயர் லடிஸ்லாஸ் செலஸ்கியின் ஆணையைப் பின்பற்றி, சிந்தாத்திரை மாதா ஆலயத்தை தனது நிர்வாகத்தில் வைத்துக்கொள்ளப் பெரிதும் முயன்றார். 

அவரது முயற்சியை முறியடிக்க, அன்றைய பனிமய மாதா ஆலயப் பங்குக் குருவாக இருந்த சுவாமி பெர்னார்டின் டி சூசா அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விவகாரங்கள் எல்லாம் விரைவில் விலக்கிக்கொள்ளப்பட்டன. சிந்தாத்திரை மாதா ஆலயத்தை முற்றிலும் திருச்சி மறைமாவட்ட ஆயருக்கே வழங்கிவிட மயிலாப்பூர் மறைமாவட்ட ஆயரும் முடிவு செய்தார். ஆனால் பனிமய மாதா ஆலயம் மட்டும், பாப்பரசர் 13-ம் சிங்கராயரின் முன்னைய ஒப்பந்தப்படி, இன்னமும் மயிலாப்பூர் ஆயரின் ஆளுகையின் கீழ்தான் இருந்தது.

குருஸ்புரம் பங்கின் இணை ஆலயம்

1923-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பாப்பரசர் 11-ம் பத்திநாதர், அதுவரை திருச்சி மறைமாவட்டத்தோடு இணைந்திருந்;த முத்துக்குளித்துறையையும், அதன் உள்நாட்டுப் பகுதிகளையும் தனியே பிரித்து தூத்துக்குடி மறைமாவட்டத்தை ஏற்படுத்தினார். மேதகு திபூர்சியுஸ் ரோச் ஆண்டகை அதன் முதல் ஆயரானார். அதுவரை மயிலாப்பூர் மறைமாவட்டத்தோடு இணைந்திருந்த முத்துக்குளித்துறையின் மேற்சொன்ன ஐந்து பங்குகளும் 1930-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி தூத்துக்குடி மறைமாவட்டத்தோடு முறைப்படி இணைந்தன. அதற்கு முன்பிருந்தே சிந்தாத்திரை மாதா ஆலயம் தூத்துக்குடி திரு இருதயங்களின் ஆலயப் பங்கின் இணை ஆலயமாக இருந்து வந்தது.

திரு இருதயங்களின் ஆலயத்தின் வட திசையில் அங்கும் இங்குமாக அமைந்திருந்த சில முக்கிய இணை ஆலயங்கள் நாளடைவில் தனிப் பங்குகளாக மாறின. அவ்வகையில் உருவானதுதான் குரூஸ்புரம் புனித சூசையப்பர் பங்கு. இப்பங்கு 1955-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி உதயமாயிற்று. அன்று முதல் இன்று வரை சிந்தாத்திரை மாதா ஆலயம் குரூஸ்புரம் பங்குத் தந்தையின் கண்காணிப்பில், முத்துக்குளித்துறை மக்களுக்கெல்லாம் அன்னை மரியாளின் அருட்கொடைகளை வாரி வழங்கும் திருத்தலமாக சிறப்புற்று விளங்குகிறது.

அன்னையின் புதிய ஆலயம்

பழுதடைந்து வந்து சிந்தாத்திரை மாதா ஆலயத்தை 1984-ம் ஆண்டில் குரூஸ்புரம் பங்குக் குருவாக பொறுப்பேற்ற சுவாமி ஜோசப் பென்சிகர் பழுது பார்த்துப் புதுப்பித்தார். ஆலயத்தின் சுவர்களை உயர்த்தி, பழைய கூரையை அகற்றிவிட்டு அஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்தார். அவர் ஆரம்பித்த வேலையை 1988-ம் ஆண்டில் குரூஸ்புரம் பங்குத்தந்தையாக இருந்த சுவாமி ளு.கபிரியேல் தொடர்ந்து முடித்தார். புதிய ஆலயத்தின் இருபுறமும் சூரிய தடுப்பு விதானம் அமைக்க திரு. லியோ மச்சாது என்பவர் பெரிதும் உதவினார். இவ்வாறு குரூஸ்புரம் பங்குக் குருக்களும், பொதுமக்களும் நல்கிய உழைப்பினாலும் பொருளுதவியாலும் புதுப்பொலிவுற்ற சிந்தாத்திரை மாதா ஆலயத்தை அன்றை ஆயர் மேதகு ளு.வு. அமல்நாதர் திருநிலைப்படுத்தித் திறந்துவைத்தார்.

அன்னை மரியாள் அருளும் வெற்றிப் பயணம் நமது கடலோடி மக்களுக்கும், ஆன்மீக நலம் நாடும் அனைத்து மக்களுக்கும் இன்று தொடர்கிறது என்பதின் அடையாளமாகத்தான் அழகுற விளங்குகிறது சிந்தாத்திரை மாதா திருத்தலம்.

இத்திருத்தலம் நம் வாழ்க்கைப் பயணத்தின் விடிவெள்ளி! 
கடற் பயணங்களில் இறைவன் தந்த பாதுகாப்பான நோவாவின் பெட்டகம்! துன்பக் கடலில் அமிழ்ந்து போகும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் கலங்கரை விளக்கம்! 
புதுமனத் தம்பதிகளுக்கு இன்ப வாழ்வுதரும் இனிய ஓடம்!

மொத்தத்தில் சிந்தாத்திரை மாதா திருத்தலம் அனைத்து மக்களுக்கும் அடைக்கலம் தரும் அற்புத துறைமுகம்.

அழிந்து வரும் தாழை மரம்

கடற்கரைப் பகுதிகளில் இயற்கையாக வளர்ந்து வரும் தாழை மரங்கள், பேரிடரைத் தடுக்க இயற்கை நமக்கு வழங்கிய கொடை. இலக்கியங்களில் நெய்தல் திணைக்குரிய மரமாகப் போற்றப்படும் தாழை, இராமேஸ்வரம் தீவு, மேலமுந்தல் தாழையடி ஏழுபிள்ளை காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல இடங்களில் காணப்படுகின்றன. மணமிக்க தாழம்பூ பூக்கும் குறுமரமான தாழையை ‘கைதை’ எனவும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அழிந்துவரும் இம்மரங்களை கடற்கரை முழுவதும் பயிரிட்டு வளர்க்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது, பாண்டேசி எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவித்திலைத் தாவரமான தாழையின் தாவரவியல் பெயர் பாண்டனஸ் டெக்டோரியஸ் (Pandanus tectorius). மணற்பாங்கான கடற்கரைப்பகுதிகள், நீர்நிலைகளின் கரையோரங்களில் இது அதிகளவில் வளர்கிறது. இம்மரம் 25 அடி வரை உயரமாக வளரும்.

இதன் இலையின் ஓரங்களில் முள் இருக்கும். அடிமரத்தில் விழுதுகள் இருக்கும். பூவில் ஆண் பெண் வேறுபாடு உள்ளது. ஆண் பூ தான் மணமிக்க தாழம்பூ. வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் இப்பூ மலர்ந்த ஒரே நாளில் கீழே விழுந்து விடும். ஆண்மலர் காய் காய்ப்பதில்லை. பெண் வகையில் பூவும், காயும் அன்னாசிப்பழம் போன்ற அமைப்பில் இருக்கும். இராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் கோயில் பகுதியில் பெண் மரம் அதிகளவில் காணப்படுகிறது.

தாழையின் சிறப்புகள்


தொடும்போது இலையில் இருக்கும் முள் கையை தைக்கும் என்பதால் இதை கைதை என்கிறார்கள். குறிஞ்சிப்பாட்டில் 83வது மலராகக் குறிப்பிடப்படும் கைதை, தாழையின் மலரான தாழம்பூ ஆகும். நம்புதாளை, வேதாளை, தாழையூத்து, பூந்தாழை, தாழைக்காடு, தாழையூர், கூடுதாழை, பெரியதாழை என பல ஊர்கள் தாழையின் பெயரால் உருவாகியுள்ளன. தாழம்பூ கைதகப் பூ என சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது.

இலக்கியங்களில் தாழை

குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் தாழை குறிப்பிடப்படுகிறது. தலைவிரித்த பேய் போல தாழையின் பச்சை மடல்கள் பரவி விரிந்துள்ளதாக அகநானூறில் வெங்கண்ணனார் கூறுகிறார். நாரை கோதுகின்ற சிறகுபோல, தாழையின் அரும்புகள் விரிந்து மலர்வதாக குறுந்தொகையும், அன்னப்பறவை போல மலர்வதாக சிறுபாணாற்றுப்படையும் கூறுகின்றன. 

இலையில் உள்ள முட்கள் சுறாமீனின் பற்கள் போலவும், சொரசொரப்பான தாழையின் அடிப்பகுதி இறால் மீனின் முதுகு போலவும், கூர்மையான முனை உள்ள இதன் மொட்டு யானையின் தந்தம் போலவும், மலர் முதிர்ந்து தலைசாய்த்து நிற்பது மான் தலை சாய்த்து நிற்பது போலவும், தாழம்பூ மலர்ந்து மணம் பரப்புவது, விழா நடைபெறும் இடத்தில் கமழும் தெய்வமணம் போலவும் உள்ளதாக நற்றிணையில் நக்கண்ணையார் கூறுகிறார்.
சிவனின் சாபம் பெற்றதால் பூஜையில் தாழம்பூவை சேர்க்கமாட்டார்கள். ஆனால் உத்தரகோசமங்கை கோயிலில் மட்டும் வழிபாட்டில் தாழம்பூ சேர்த்துக்கொள்ளப்படுகிறது. தாழையின் நறுமணமிக்க மகரந்தத்தூளை திருநீறு என்பர். நீறு பூசியும் சிவன் தலையில் அது இடம்பெறவில்லை என குமரகுருபரர் பாடுகிறார்.

எட்டாம் நூற்றாண்டில் இருந்த திருப்புல்லாணியின் சூழலை வருணிக்கும்போது வெளுத்த மடல்களையுடைய கைதை இங்கு இருந்ததாக திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார். ஆனால், தற்போது அங்கு இம்மரம் இல்லை.

பயன்கள்

மணமிக்க தாழம்பூ கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. அம்மைநோய் கண்ட வீட்டில் தாழம்பூவைக் கட்டித் தொங்க விடுவதால் அக்கிருமிகள் அழிகின்றன. ஓலைச் சுவடிகளை பூச்சி அரிக்காமல் பாதுகாக்க இப்பூ பயன்படும். இதன் காயை அழகுக்காக விழாப்பந்தலில் கட்டித் தொங்கவிடுவர். இதன் விழுது வீட்டிற்கு வெள்ளையடிக்கவும், நார் ஊஞ்சலாடவும் பயன்படுகிறது. இதன் ஓலையில் இருந்து தாழைப்பாய் உருவாகிறது. தாழம்பூவில் இருந்து வாசனை தைலம் எடுக்கப்படுகிறது.

பாரம்பரிய நிலம் சார்ந்த மரங்கள் அழிந்து வருவதால் இயல்பான இயற்கைச் சூழ்நிலை மாறிவருகிறது. மண்ணரிப்பு, சுனாமி, கடல்சீற்றம் ஆகிய பேரிடரைத் தடுக்கும் தாழை மரங்களை கடற்கரைப் பகுதிகள் முழுவதும் அடர்த்தியாக வளர்ப்பதன் மூலம் ஆபத்திலிருந்து மக்களையும், கடற்பகுதிகளையும் பாதுகாக்க முடியும் என அவர் கூறினார்.

- இரா.பகத்சிங்
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com