அச்சும் பதிப்பும்
ஆசிரியர் ஐயா.மா.சு.சம்பந்தன் அவர்கள் எழுத்தில் ஏப்ரல்'1980 ல் தமிழர் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட "அச்சும் பதிப்பும்" நூலில் #பரதவர் பற்றி இவ்வாறு பதிவிட்டுள்ள தொகுப்பு.

முத்துக்குளித்துறையில் வாழும் பரவ மக்களது பெருந்தன்மையால் 1577லேயே(15ம் நூற்றாண்டு) தமிழுக்கு அச்செழுத்துக்கள் வந்து விட்டன; அவை உலோகத்தினால் தயாரிக்கப் பட்டவையாகும்.
அந்நூலின் பெயரே "தம்பிரான் வணக்கம்"(Doctrina).
இந்திய நாட்டில் முதல் அச்சு கண்ட தமிழ் நூல் பரவ மக்களது உதவியால் கொல்லத்தில் அச்சிடப்பட்டு #புன்னைக்காயல் இல் 1557ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "தம்பிரான் வணக்கம்"(Doctrina) என்னும் நூலேயாகும்.
#பரவ_மக்கள் அச்சு அடிக்கப்பட்ட முதல் நூல்களைக் கண்டு வியப்புடன் பார்த்துக் களித்தனர்.
தமிழ் மொழி அச்சுக் கண்டதால், தமிழ் இனத்தவருக்கு உலகிலே பெரும்புகழ் உண்டாக்கியது.
இந்நூலின் படியொன்று 1579ஆம் ஆண்டு ரோம் நகருக்கு அனுப்பி வைக்கப்பெற்றது. இதன் மற்றொருபடி ஆஸ்திரியா நாட்டின் நூலகத்திற்குச் சென்றது. அந்நூலக நூல்கள் விற்கப்பட்டபோது, இந்த அரிய நூல் 1951ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள #ஹாவர்டு_பல்கலைக்கழக நூலகத்தினரால் விலைக்கு வாங்கப்பெற்று இன்றுவரை காப்பாற்றப் பட்டு வருகிறது.
Download Link - 1
Download Link - 2
Download Link - 1
Download Link - 2