Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

அதிரடிப்படை போலீஸ் அதிகாரி


ASP லயோலா இக்னேஷியஸ்.


வீரப்பன் தேடுதல் வேட்டையில் தலையை துளைத்த தோட்டாவுடன் வாழ்ந்து வரும் முன்னாள் போலீஸ் அதிகாரி. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத அதிகம் தேடப்பட்ட ஒருவராக இருந்த வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் ஒரு பெரும்படையே ஈடுபட்டிருந்தது. அந்தத் தேடுதல் வேட்டையின்போது, வீரப்பனை பிடித்தே தீருவோம் எனத் தமிழ்நாடு அதிரடிப்படையில் சேர்ந்திருந்த இளைஞர் பட்டாளம் ஒன்று 1996ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி, தமிழ்நாடு – கர்நாடக எல்லைப் பகுதியான ஓசுர் அருகே ரோந்துப் பணியில் இருந்தது.

அன்று மாலை சுமார் 5.30 மணியளவில், வீரப்பனின் கூட்டாளிகள் சிலர் ஓசுர் அருகே அரேபியாலயம் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக அதிரடிப் படையினருக்கு தகவல் கிடைக்க, அருகிலிருந்த அதிரடிப்படை வீரர்கள் சுமார் 10 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதிரடிப்படையினரைக் கண்ட வீரப்பனின் கூட்டாளிகள், போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவர் பலியாக, மற்றவர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். “பதினைந்து நபர்கள் மூன்று, நான்கு வகையான துப்பாக்கியுடன் இருந்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் என்னுடைய பின் தலையில் தோட்டா துளைத்தது. நான் இறந்துவிட்டதாக நினைத்தேன். எனக்கு சுயநினைவு இல்லை."

"கண்விழித்துப் பார்த்தபோது மைசூர் பசப்பா மருத்துவமனையில் இருந்தேன். சுயநினைவு வருவதற்கே மூன்று நாட்கள் ஆகிவிட்டது,” என அன்று நடந்ததை நினைவுகூர்கிறார் அந்த கமாண்டோ ஆபரேஷனில் இருந்த ஒய்வுபெற்ற காவல் அதிகாரி லயோலா இக்னேஷியஸ்.

திருமணம் ஆனவர்கள் பெரும்பாலும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையில் சேர விரும்பாத காலகட்டத்தில், திருமணமான சில ஆண்டுகளிலேயே தனது 32 வயதில் சிறப்பு அதிரடிப்படையில் சேர்ந்தார் லயோலா இக்னேஷியஸ். பிப்ரவரி 1997இல் நடந்த கமாண்டோ ஆப்ரேஷனில் தனது பின்புற தயைத் துளைத்த தூப்பாக்கியின் தோட்டாவுடன் இன்று வரை வாழ்ந்து வருகிறார் லயோலா.

“முதலில் நான் மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை. தலையில் அதிக வலி இருந்தது. மண்டை ஓட்டைத் துளைத்து மூளைக்கு அருகில் தோட்டா தங்கிவிட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் தோட்டாவை வெளியில் எடுப்பது ஆபத்து எனக் கூறினர்" என்கின்றார் லயோலா. "நான் ஒரு அதிஷ்டசாலியாகவே உணர்கிறேன். மருத்துவர்களும் மூளைக்கு பாதிப்பு இல்லாமல் தோட்டா தலையில் இருப்பதை வியப்பாகவே பார்த்தனர," என்று அப்போது நடந்த சம்பவத்தை விவரித்தார் லயோலா. இதுபோன்ற சம்பவங்களில் பிழைப்பது அரிது என்று மருத்துவர்கள் கூறியதாக அவர் நினைவுகூர்ந்தார்.

அந்த நேரத்தில் கையில் ஒன்றரை வயது குழந்தையுடன், மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி, செய்தித்தாளில் 'வீரப்பன் கூட்டாளி சுட்டு காவலர் மரணம்: எஸ்.ஐ. கவலைக்கிடம்' என்ற செய்தியைப் பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டதாக இக்னேஷியஸ் கூறுகிறார். செய்தியைப் பார்த்த அவரது மனைவி தகவல் கிடைக்கும் வரை காத்திருக்க முடியாமல் தன்னைத் தேடி நேராக சத்தியமங்கலத்திற்கு வந்துவிட்டதாக அவர் கூறினார்.

"என் மனைவி என்னைத் தேடி சத்தியமங்கலம் சென்றார். ஆனால், அங்கிருந்து மைசூர், பிறகு சென்னை என என்னைப் பார்பதற்கே ஹெலனுக்கு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. என்னைவிட ஹெலன் தான் இந்தச் சம்பவத்தால் அதிகம் பதிக்கப்பட்டார்," என்றார்.

வீரப்பன் தேடுதல் வேட்டை 1989இல் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான சிறப்பு அதிரடிப்படையை 1993ஆம் ஆண்டு வால்டர் தேவாரம் தலைமையில் அமைத்தது தமிழ்நாடு அரசு. இந்தச் சிறப்பு அதிரடிப்படையில் 1993ஆம் ஆண்டு சேர்ந்த லயோலா, 1996இல் விபத்து நடக்கும் வரை அதிரடிப்படையில் பணியாற்றினார்.

“அன்று நடந்த கமாண்டோ ஆபரேஷனில் கிரேடு 1 காவலர் செல்வராஜ் இறந்துவிட்டார். மேலும், எஸ்.பி. தமிழ் செல்வன், மோகன் நவாஸ், ரகுபதி, இளங்கோவன் உள்ளிட்ட காவலர்களும் காயமடைந்தனர். 

இந்தச் சம்பவம் நடந்த இடம் ஒரு கிராமம். அங்கிருந்து தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்வதே பெரும் சவாலாக இருந்தது. பிறகு மாதேசுவரன் மலையில் இருக்கும் கர்நாடகா தலைமையகத்தைத் தொடர்ப்பு கொண்டு மீட்புக் குழு வருவதற்கே மூன்று மணி நேரம் ஆகிவிட்டது," என்கிறார் லயோலா. "அன்று நடந்த மோதலில் என் பின்புற தலையில் தோட்டா மண்டை ஓட்டைத் துளைத்து மூளையின் பக்கமாகச் சென்று தங்கிவிட்டது. சுயநினைவு வருவதற்கு மூன்று நாட்கள் ஆனது.

மருத்துவமனையில் தீவர சிகிச்சை முடிந்து வீடு திரும்ப ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், நான் விரும்பம் தெரிவித்தும் என்னை மீண்டும் சிறப்பு அதிரடிப் படையில் இணைக்கவில்லை. பிறகு துணை காவல் ஆய்வாளராகப் பணியாற்றினேன்," என்று விவரித்தார் லயோலா.

பிறகு அவருக்கு, 2000ஆம் ஆண்டில் காவல் ஆய்வாளர், 2010இல் துணை காவல் கண்காணிப்பாளர், 2014இல் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு கிடைத்தது.

"1996 சம்பவத்தில் பணியாற்றிய காவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அது வழங்கப்படாமலே இருந்தது. மீண்டும் 2001ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி வந்தவுடன் சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கைகள் திவிரமடைந்தது."

"அதோடு வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவலர்களுக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டது. மேலும், 2004இல் வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு அதிரடிப் படையில் இருந்த காவலர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட்டு, பதவி உயர்வு மற்றும் வீட்டு மனையும் கொடுக்கப்பட்டது. வீரப்பனைப் பிடிக்கும்போது நான் அங்கு பணியாற்றாமல் போனாலும் எனக்கும் இந்த நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன," என்கிறார் லயோலா.

சிறப்பு அதிரடிப்படைக்குப் பிறகான தனது பணி குறித்துப் பேசிய அவர், 1997ஆம் ஆண்டு வரை அவ்வப்போது தலையில் வலி இருந்ததாகக் கூறுகிறார். அதற்கு பிறகு சாதாரணமாக தன் வாழ்க்கையை பார்க்க தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார்.

"அப்போதில் இருந்து எந்தவித வலியையும் இன்றளவும் உணரவில்லை. மருத்துவரின் பரிந்துரையின்படி 10 ஆண்டுகளுக்கு மருந்து எடுத்துக்கொண்டேன். அதன் பிறகு அதையும் நானாகவே நிறுத்திவிட்டேன்.நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றேன். சிறப்பு அதிரடிப்படையில் இருந்தபோது எனக்கு 32 வயது. அதிலிருந்து வெளியில் வந்து 26 ஆண்டுகள் திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, சென்னை, கிருஷ்ணகிரி எனப் பல பகுதிகளில் பணியாற்றி இருக்கிறேன். பணி ஓய்வு பெற்ற பிறகு திருநெல்வேலியில் என் குடும்பத்துடன் மனநிறைவுடன் இருக்கிறேன்."



வைகைக்கரை நாகரீகம்.


பொ.யு.மு. முதலாம் நூற்றாண்டு முதல் இன்று வரை.....சங்கு வளையல்கள்.

பொலந் தொடி தின்ற மயிர் வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து - நெடுநல்வாடை 141,142

பொன்வளையல்கள் கழன்றுவிட்டதால் வளையல் இருந்த அழுத்தம் தோளில் காணப்பட்டது.

முன்கையில் சங்கு-வளையலும்,
காப்புக்காகக் கட்டிய கடிகைநூலும் இருந்தன.

பாண்டிமாதேவி பொன் வளைகளோடு சங்கு வளையல்களும் அணிந்திருந்தார் என்பது தெரியவருகிறது.
 
நெடுநல்வாடை நூலைப் பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இது 10 பாட்டு நூல்களில் ஒன்று – காலம் கி.மு. முதல் நூற்றாண்டு.
அழகன்குளம் அகழ்வாராய்ச்சியில் சங்கு வளையல்கள் மற்றும் சங்குகள் பொ.யு.மு. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவை.





VELVIKUDI GRANT OF NEDUNJADAIYAN


The Sanskrit portion of the record commences with an invocation to Siva (verse 1) and goes on to refer in general terms to the Pandya kings and their race, of which the family priest was the sage Agastyal (vv. 2 and 3). At the end of the previous Kalpa, it is stated, there was a powerful king named Pāņdya who was ruling at the entrance into the sea (i.e., on the coast of a gulf) and that the very sa ne king at the beginning of the current Kalpa was born as Budha, the son of the Moon (v. 4). His son was Purūravas; and in his family, whose crest was a pair of fish, which shared with Indra, the lord of gods, half of his throne and his necklace and was a party in the puråņic churning of the milk ocean, was born king Märavarman, a patron of the learned (vv. 6 and
. His son was Raņadhira (v. 9) and his son Māravarman II Rājasimha (vv. 10 and 11) at whose presence the king P.llavamalla ran away from the battlefield (v. 12). This king Rajasimha married a Malava princess and by her begot king Jațile (v. 14), who was also called Parantaka (v. 17). Thus ends the short Sanskrit eulogy (prasasti) which was composed by the Sarvakratuyajin Varödaya-Bhatça (1. 30).

Epigraphia Indica Vol 17
Author : F W Thomas, H Krishna Sastri
Publisher :Archaeological Survey of India
Publication: Year 1923
Total Pages: 426
Language :English

தூத்துக்குடியின் நேதாஜி



தியாகி ஜே. பி. ரோட்ரிக்ஸ் 

1891ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்த இவர், 1921ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மதுரை ஆங்கிலேயக் கப்பல் கம்பெனியின் சுரண்டல்கள் நாளுக்குநாள் அதிகரித்த வேளை! உள்நாட்டுப் பொருட்களை தங்களின் சுப்பல்களில்தான் ஏற்றிச்செல்ல வேண்டும் என்ற ஆணையை வெள்ளை ஏகாதிபத்தியவாதிகள் விதித்து, அதைக் கொடுமையாகநடைமுறைப்படுத்திய, கடந்த நூற்றாண்டின் தொடக்கக் காலக்கட்டத்தில், சுதேசிக் கப்பல் போக்குவரத்து கொணர முயற்சி எடுத்த வ. உ.சிதம்பரனாருக்குத் தோள் கொடுத்தார் ஜே. பி. ரோட்ரிக்ஸ் .

அதற்கடுத்தும் அந்நியத் துணிகளைப் புறக்கணிக்கும் போராட்டத்திலும் மிகத் தீவிரமாகப் பங்கெடுத்தார். மக்களை ஒருங்கிணைத்து, பல இடங்களில் போராட்டங்களை நடத்தினார். கள்ளுக்கடை மறியலிலும் சேர்ந்து ஈடுபட்டு, தலைவராக உருவெடுத்து வந்தார். அவரின் ஈடுபாடு உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இன்னும் அதிகமாக இருந்தது.இந்த போராட்டங்களில் அவரது மனைவி ரோஸ்லினும் தீவிரமாக பங்கேற்றார்.

1930களின் தொடக்கத்தில் உச்சக்கட்டத்தில் இருந்தது. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கொடுமையான உப்பு வரியை எதிர்த்து நாடே கொந்தளித்துப் போயிருந்தது! உப்புச் சத்தியாக்கிரகத்தால் நாடு முழுவதும் போராட்டத்தில் மூழ்கியிருந்தது! நாடு விடுதலை வேட்கை உணர்வால் தூண்டப்பட்டிருந்தது! அத்தகைய விடுதலை உணர்வைத் தென்தமிழகத்தில் அதிகமாக்கி, ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திய முக்கியமான தலைவர்களில் ஜே.பி. ரோட்ரிக்ஸ் ஒருவர் என்றால் அது மிகையாகாது.


உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம்! கிராமப்புற அடித்தள மக்கள் பலருக்கும் பரவலாகக் கொண்டு செல்லும் அடித்தளத் தொண்டராக மட்டுமல்லாமல், பல இடங்களில் அப்போராட்டங்களை ஒன்றிணைக்கும் தலைவராகவும் விளங்கினார் ஜே. பி. ஜவஹர்லால் நேரு, காமராஜ், சத்தியமூர்த்தி, இந்திரா காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்களுடன் ஜே.பி ரோட்ரிக்ஸ் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஜே.பி. ரோட்ரிக்ஸ் நேருவுடன் கொண்டிருந்த நல்லுறவு, அவருடன் சிலோனில் இருந்து கப்பலில் பயணம் செய்த நேரு, தூத்துக்குடிக்கு விஜயம் செய்ய அவரது அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

நேருவின் தூத்துக்குடி விஜயத்தின் போது, ரோட்ரிக்ஸ் அவருக்கு பிரமாண்டமான மற்றும் ஈர்க்கக்கூடிய வரவேற்பை ஏற்பாடு செய்தார். காந்தியின் அழைப்பை ஏற்று, மாவட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அவரின் விடுதலை வேட்கையைப் புரிந்துகொண்ட காங்கிரஸ், பின்னாளில் அவரை அனைத்து இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினமாக்கியது. எல்லாம் அவரின் தியாகத்திற்கும் அர்ப்பணமிக்க ஈடுபாட்டிற்கும் கிடைத்த அங்கீகாரமே!

சுதேசி கப்பல் கழகத்தை ஆரம்பிக்கவும் நடத்தவும் தீவிரமாக வ. உ. சி.யுடன் சேர்ந்து செயல்பட்டார். ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான தொடர் பரப்புரைகளை எடுப்பதிலும் மக்களிடம் சுதேசப் போராட்டத்தைக் கொண்டுசென்று நிதி சேகரிப்பதிலும் முதன்மையானவராகச் செயல்பட்டார். அதேபோல ஜே.பி. ரோட்ரிக்ஸ் அவர்களும் மிகத் தீவிரமானவர்.அனைத்துச் செயல்பாடுகளிலும் தியாகி மாசிலாமணியுடன் இணைந்து செயல்பட்டுக் கிறித்தவ மக்களை சுதேசிப் பக்கம் இணைத்தார்.

பல போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார். "வானம் பொழிகிறது; பூமி விளைகிறது; வெள்ளையனுக்கு எதற்கு வரி கட்ட வேண்டும் ? -" என்று கொப்பளிக்கும் கோபத்துடன் கேள்விக் கணைகளை வினவியதாகக் கூறப்படும் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டப்பொம்மனைப் போல, ஜே.பி. ரோட்ரிக்ஸ்ம் உப்புக்கு இட்ட வரியை எதிர்த்துக் கேள்விகளைத் தொடுத்தார்.

“கடல்நீர் தரும் உப்புக்கு வரியா? நெய்தல் நிலம் கொடுக்கும் உப்புக்கு எதற்கு வரி? நெய்தல் நிலத் தமிழர்களான பரதவ குல மக்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, உழைத்து உருவாக்கும் உப்புக்கு ஏன் வரி கட்டவேண்டும் ? இது என்ன அக்கிரமம்?..." என்று பொங்கினார். ஏகாதிபத்தியம் திணித்த உப்பு வரியை எதிர்த்துப் போராடத் திட்டம் தீட்டினார். இயக்கமாக வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தார்.

ஜே. பி. ரோட்ரிக்ஸ் தனது விடுதலைக் கருத்துகளை வெளிப்படுத்தவும், அதன் வழியாக இளைஞர்களைச் சுதந்திரப் போராட்டத்தில் ஒன்றிணைக்கவும் ஓர் இதழையும் நடத்தினார். தமிழ் இளைஞர்களுக்கு கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற தீவிரமான அறிவுரைகள் அந்த இதழில் ஒளிபரப்பப்பட்டது மற்றும் அவர்கள் வெளிப்படுத்திய உறுதியான பதிலால் கவலையடைந்த பிரிட்டிஷ் அரசாங்கம், பத்திரிகை மற்றும் அதன் நிறுவனர் ஜே. பி. ரோட்ரிக்ஸ் மீது பயங்கர அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. அவரது அச்சகம் சோதனையிடப்பட்டு, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தேசத்துரோக நடவடிக்கைகளுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பத்திரிகை தடை செய்யப்பட்டு மூடப்பட்டது. மேலும், ஆங்கிலேயர்கள் அவரது 2.5 லட்சம் சொத்துக்களை பறிமுதல் செய்தனர். இந்த அடக்குமுறைகள் அனைத்திலும் மனம் தளராத ஜேபி சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்களிப்பைத் தொடர்ந்தார்

போராட்டத்திற்காக வீரபாண்டியப்பட்டினத்தைச் சேர்ந்த வலேரியன் பெர்னாண்டோ என்பவரின் உதவியால், “தேசிய கிறித்தவத் தொண்டர் படை" (National Christian Volunteers Army) என்ற அமைப்பு ஒன்றை நிறுவினார். அதற்காக அண்டை நாடான இலங்கையிலுள்ள கொழும்பிற்குச் சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். 

சுபாஷ் சந்திரபோஸ் இந்தியத் தேசிய படையை நிறுவ ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியதுபோல! இலங்கையிலுள்ள கிறித்தவ மீனவர்களை அந்த அமைப்பில் சேர்த்து போராடத் தூண்டினார். எந்த நாளில் காந்தி உப்புச் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தாரோ, அதே நாள் ஜே.பி. ரோட்ரிகுவஸ் தூத்துக்குடியிலிருந்து ஏழு மைல்களுக்கு அப்பால் உள்ள தருவை குளத்திற்குத் தனது தொண்டர்களுடன் நடந்துசென்று ஊர்வலமாக தூத்துக்குடிக்கு வந்து, அங்கு கடல்நீர் எடுத்து உப்புக் காய்ச்சி ஏகாதிபத்திய ஆணையை மீறி உப்பு தயாரித்தார்.
.
அடக்குமுறையைத் தனக்குள் கொண்ட ஏகாதிபத்தியம் விட்டுவிடுமா? மக்கள் நல அரசு என்று கூறிக்கொள்ளும் இன்றைய சனநாயக அரசே தன்னை விமர்சிக்கும் தலைவர்கள்மீது தடா, பொடா போன்ற மனிதாபிமானமற்ற கடுமையான சட்டங்களைப் பிரயோகிக்கும்போது ஏகாதிபத்திய அரசு சும்மா இருக்குமா? போராளிகளைக் கைது செய்தது. அப்போராட்டத்தை ஒருங்கிணைத்ததற்காக ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. 200 அபராதமும் விதித்தது. வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அதே சிறையில்தான் சத்தியமூர்த்தி, ராஜாஜி, காமராஜ், டி. பிரகாசம், பட்டாபி சீத்தாராமையா போன்ற தலைவர்களும் அடைக்கப்பட்டிருந்தார்கள். சிறையில் ஓராண்டு காலம் நாட்டிற்காக அவதிப்பட்டார்.

பிறகு, அவர் சிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார், அங்கு அவர் காலச்சக்ரம் என்ற வார இதழைத் தொடங்கினார். 1941 ஆம் ஆண்டு, தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக மீண்டும் கைது செய்யப்பட்டார். "என் உடலில் உள்ள கடைசி துளி ரத்தம் வரை என் தாய்நாட்டின் விடுதலைக்காக நான் போராடுவேன்" என்பது அவரது பிரபலமான வாசகம். சில வருடங்கள் கொழும்பிலும் ஹட்டனிலும் கடை வைத்திருந்த பிறகு, இந்தியாவுக்குத் திரும்பி 1943 இல் சென்னையில் குடியேறி தினமணியில் சேர்ந்தார். சென்னையில் குடியேறினாலும், அவர் அடிக்கடி தூத்துக்குடிக்கு வந்து இந்தியா சுதந்திரம் அடையும் வரை சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

என்னே அவரின் நாட்டுப்பற்று! அவரின் சுதந்திர தாகம்! எத்தகைய ஆழமான சுதந்திர வேட்கையும் அடிமைத்தனத்தின்மீது வெறுப்பும் இருந்திருந்தால், கடல் கடந்து சென்று அண்டை நாட்டிலிருந்து அர்ப்பணிப்புள்ள இளைஞர்களை அழைத்துவந்து போராட்டத்தில் பங்கெடுக்கச் செய்திருப்பார்! மெய்சிலிர்க்கிறது - அவரின் போராட்ட உணர்வை நினைத்து! அவரின் சுதந்திர தாகத்தை நினைத்து!

பின் குறிப்பு : பிரபல நடிகர் ஜே.பி சந்திரபாபுவின் தந்தையாவார் . ஜே.பி. ரோட்ரிக்ஸ் 

Source
https://cmsadmin.amritmahotsav.nic.in/unsung-heroes...
https://globalparavar.org/j-p-rodriguez-the-thoothukudi.../
இந்திய சுதந்திர போராட்டமும் கிறிஸ்தவர்களும் - முனைவர் எம் ஏ சேவியர்.


பண்பாட்டில் சிறந்த பரதவர் 5


Joseph Anselm Vaz
Flying Officer, Indian Air Force


'1938 இல் என் சித்தப்பா எம்.ஜோசப் நார்பர்ட் வாஸ் திருமணம் நடக்க இருந்தது... நாங்கள் சிப்பிக்குளத்தைச் சேர்ந்தவர்கள். மணமகள் பேபி கிரேஸ் குடும்பம் பழையகாயல். சிப்பிகுளம் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மணமகன் குடும்ப உறுப்பினர்கள் திருமணத்தில் கலந்துக் கொள்ள இருந்தனர். அந்த நாட்களில் தொலைதூர இடங்களுக்குச் செல்வதற்கு போதுமான பஸ் வசதிகள் கிடையாது. அப்போது சில தனியார் நிறுவனங்கள் மட்டுமே போக்குவரத்தை இயக்கி வந்தன. கடலோர கிராமங்களுக்கு போக்குவரத்து பற்றி நாங்கள் கனவிலும் நினைக்க முடியாது. என் அப்பா இக்னேஷியஸ் வாஸ் மொத்த குடும்பத்தை கொண்டு செல்வதற்கு எட்டு மாட்டு வண்டிகளை ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு மாட்டு வண்டியிலும் இரண்டு வாழைப்பழ குலைகள் தொங்கிக் கொண்டு இருந்தது.' இவ்வாறாக எனது பெரியம்மாவை அவரது சித்தப்பாவிற்கு மணம் முடிக்க வந்த கதையை கூறுகின்றார் அண்ணன் கலாபன் வாஸ்.

பழைய காயல் - சிப்பிகுளம் சம்பந்தங்கள் ஏராளமாக உண்டு. காரணம் இரு ஊர்க்காரர்களும் பண்பாட்டில் சிறந்தவர்கள். உபசரிப்பில் உயர்ந்தவர்கள். இவ்வாறாக நமக்கு மிகவும் நெருக்கமானவர் அண்ணன் கலாபன் வாஸ். அவர்களுடைய சிறப்புகளை பற்றி பரதவ/ கத்தோலிக்க திருச்சபையில் அனைவரும் அறிந்து இருந்தாலும் அவரது நீண்டகால அனுபவங்கள் குறி்த்து எழுதாவிடில் எனது எழுத்து முழுமை பெறாது.

கலாபம் என்பது வர்ணஜாலத்தைக் குறிக்கும்;
மயிலின் தோகையைக் குறிக்கும்;
மயிலிறகின் ஸ்பரிசத்தைக் குறிக்கும்!

சிறுவயதில் புத்தகத்தின் நடுவே மயிலிறகை வைத்து குட்டி போடும் என்று காத்திருந்தாரோ என்னவோ அவரது சாதனை பட்டியல் மிகவும் நீண்டது. மணல்பாடும் மணப்பாட்டிலும், முத்து நகரிலும், சண்டீகர் விமான படைதளத்திலும் சிறந்த மாணவராக விளங்கினார். விமான படையில் அவர் பல போர் சூழ்ந்த காலங்களில் வீரமுடன் பணி செய்தார். 1962 சீனாவுடனான போரிலும், 1965 மற்றும் 1971 பாகிஸ்தானுடனான போர்களில் தீரமுடன் பணி செய்தார்.
1968 ல் சுக்காய் 7 போர்விமானத்திற்கான தொழில்நுட்ப பயிற்சிக்காக USSR (ஒன்றுபட்ட ரஷ்ய வல்லரசு) சென்று வந்தார். 1979 ல் ஜாகுவார் விமான தொழில்நுட்ப பயிற்சியில் இங்கிலாந்தில் ஈடுபட்டார்...என்பது அவரது நீண்டகால தாய் நாட்டின் பாதுகாப்பு பணியில் ஓர் சாதனை. கலாபன் வாஸ் அவர்களும் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவும் விமான படையில் நண்பர்களாக இருந்தார்கள் என்பது சிறப்பு. பல ஒலிம்பிக் வீரர்களும் அவருடன் பணி செய்தார்கள்.

1986 புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் சென்னை வருகையின்போது அவரை வரவேற்று முதல் சல்யூட் கொடுத்ததும், திரும்ப செல்லும்போது விமான படை சார்பில் அருகில் நின்று வழியனுப்பியதும் தனது வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியூட்டும் தருணங்களாக எண்ணி மகிழ்கின்றார். கலைஞரைப் போன்று இளம் வயதிலேயே நாடகங்கள்,கதைகள், கட்டுரைகள், செய்திகள் எழுத ஆரம்பித்து விட்டார் அன்செல்ம்.

ஓவியங்கள் வரைவதிலும் வல்லவர். அவர் இளைஞராக சிப்பிகுளத்தில் எழுதி,நடித்த நாடகத்தை தூத்துக்குடி மறை மாவட்ட முதல் ஆயர் திபுர்சியூஸ் ரோச் அவர்கள் கண்டு மகிழ்ந்து பாராட்டினார். விகடன், கல்கி, தீபம், முத்தாரம், நம்வாழ்வு உட்பட ஏராளமான பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. பல கிறிஸ்தவ பத்திரிகையில் ஆசிரியராக, இணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக ஞான தூதன் பத்திரிகையில் இவரது பங்களிப்பு அளவிட முடியாதது. அருள்தந்தையர்கள் தூதனின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளுக்குசற்றும் சளைக்காத வகையில் திரு. கலாபன் வாஸ் அவர்களும் தனது தன்னலமற்ற உழைப்பை கொடுத்துள்ளார்.

திரு. கலாபன் வாஸ், 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற தூதன் பவளவிழாவில் “ஞானதூதன் விருது” வழங்கி, கௌரவிக்கப்பட்டார். சிப்பிக்குளம் மண்ணின் மைந்தரான அருட்தந்தை ஜே. எக்ஸ். பூபால ராயர் அடிகளாரை முதல் ஆசிரியராகக் கொண்டு, 1928 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் மறைமாவட்டத்தின் முதல் ஆயரான மேதகு ரோச் ஆண்டகை அவர்களால் தொடங்கப்பட்டது. “அர்ச். சவேரியார் ஞானதூதன்“ என்ற பெயரில் வெளிவரத் தொடங்கிய ஞான தூதன் பத்திரிகை.

தூதனின் மிகப் பழமையான பிரதியாக 1944 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இதழ் தம்மிடம் இருப்பதாக, 20 ஆண்டுகளுக்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஞானதூதனின் பவளவிழா மலரில் திரு. கலாபன் வாஸ் ஆவணப்படுத்தியுள்ளார். மறைமாவட்டத்தில் அடிப்படை கிறித்தவ சமூகங்களை உருவாக்குவதற்கு 1989 ஆம் ஆண்டில் ஆயர். அமலநாதர் அவர்கள் அருள்தந்தை. லியோ செயசீலன், திரு. கலாபன் வாஸ், ஆகியோரை மதுரையில் நடைபெற்ற 'புதுவாழ்வு' பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்.

இப்பயிற்சிகளுக்குப் பின் புதுவாழ்வு இயக்குனராக பணி. ஆர்தர் ஜேம்ஸ் அவர்களும், இணை இயக்குனராக திரு. கலாபன் வாஸ் அவர்களும் ஆயர் அவர்களால் பணி நியமனம் பெற்று பொதுநிலையினர் பணியகத்தில் இருந்து ‘புதுவாழ்வு’ பணிகளைத் துவங்கினர். கோட்டாறு மறைமாவட்டத்தில் அருள்தந்தை எட்வின் அடிகளார் 'அன்பியம் 'என்று இக்குழுக்களுக்குப் பெயரிட்டார். அதை அடியொற்றி தமிழகத்தில் புதுவாழ்வுக் குழுக்கள் 'அன்பியம்' என்று அழைக்கப்படலாயிற்று.

மேலும் பல மறைமாவட்டங்களுக்கும் சென்று பயிற்சியளிக்க உருவாக்கப்பட்ட தமிழக குழுவில் திரு. கலாபன் வாஸ் அவர்கள் இடம் பெற்று குருக்கள், அருள்சகோதரிகள் ஆகியோருக்குப் பயிற்சியளித்தார் என்பது பொதுநிலையினர் ஒவ்வொருவருக்கும் ஒரு தூண்டுகோலாக அமைகிறது. அன்னை தெரசாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட பிறகு, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் நடந்த ஒரு வரவேற்பு நிகழ்வில் அன்னையின் அருகிலிருந்து கலந்து கொண்டதை தன் வாழ்வின் பாக்கியமாக கருதுகின்றார்.

தூத்துக்குடி மறைமாவட்டத்தில் திருமண தயாரிப்பு வகுப்புகளை வாரம் தோறும் நடத்தி வருகின்றார். இயற்கை முறை குடும்ப கட்டுப்பாடு மற்றும் ஆண்/பெண் குழந்தைகள் உருவாகவும் ஆலோசனை வழங்குகிறார். அமெரிக்க டல்லாஸ் நகரில் நடந்த 'இதயத் துடிப்பு' குடும்ப நலன் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய மருத்துவர் அல்லாதவர் என்பது பெருமைப்பட வேண்டிய செய்தி.

ஒரு நூலை எழுதி வெளியிடுவதே பிரசவத்தை போன்று மிகவும் கடினமானது... ஆனால் கலாபன் வாஸ் ஏறக்குறைய இருபது நூல்களை எழுதி சாதனை படைத்துள்ளார். மென்மையான பேச்சும், மேன்மையான செயல்களும் கொண்டவர்... கலாபன் வாஸ் என்கிற அன்செல்ம் வாஸ்... கடலோர கத்தோலிக்க வரலாற்று சகாப்தம்.

தேன்வளன் @ Joemel Fernando

விடுதலைவீரர் வலேரியன்

போராட்டம் என்றால் முதல் ஆளாகப் போய் நின்றுவிட்டு, போராட்டம் வெற்றியைத் தந்தவுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில்  தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் காயங்களுடன் ஒதுங்கிக் கொண்டு,   தன் நலனை முன்னிறுத்திக் கொள்ளத் தெரியாத ஒரு விடுதலை வீரரை இன்று நினைவு கூறலாம்.

வீரபாண்டியன் பட்டினம் வலேரியன் பர்னாந்து அப்படிப்பட்டவர் தான்.

1909ல் வீரபாண்டியன் பட்டினத்தில் பிறந்த அவர் 1922ல் இலங்கை பள்ளியில் படிக்கச் செல்கிறார். நான்கு வருடம் கழித்து இந்தியா திரும்பிய அவர் தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு மீண்டும் இலங்கை செல்கிறார். 1930 மே மாதத்தில் தொழிற்சங்கத் தலைவி மீனாட்சியம்மையாரின் எழுச்சி மிகுந்த சொற்பெருக்கொன்றை வலேரியன் பர்னாந்து கேட்கிறார். விடுதலைக்காகப் போராட யாரெல்லாம் தயார் என்று மீனாட்சி அம்மையார் கேட்டதும் வலேரியன் பர்னாந்து முதல் ஆளாகச் சென்று தன்னைப் போராட்ட களத்திற்கு ஒப்புவிக்கிறார். வலேரியன் பர்னாந்துடன் அவருடைய நண்பர்கள் சிலரும் மீனாட்சி அம்மையாரின் தலைமையை ஏற்றுக் கொண்டு,அடுத்த மாதமே அவருடன் இந்தியா வருகிறார்கள்.

ஊர் ஊராகச் சென்று  வலேரியன் எழுச்சிமிக்க சொற்பொழிவு ஆற்றுகிறார். 1930 ஜூலையில் காந்தியடிகள் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை அறிவித்தவுடன் மதுரையில் களம் காண்கின்றனர் வலேரியனும் நண்பர்களும்.  போராட்டத்தில் வன்முறை வெடிக்க வலேரியன் கைது செய்யப்பட்டு முதலில் மதுரை சிறையிலும் பிறகு திருச்சி சிறையிலும் அடைக்கப்படுகிறார்.

வலேரியனின் நண்பர்கள் டன்ஸ்டன் எம்.டிவோட்டாவும் மற்றவர்களும்  மதுரை போராட்டத்தில் பங்கேற்று விட்டு திருச்சி சென்று அங்கும் போராட்டம் நடத்துகிறார்கள் அங்கு ரகசிய இடத்தில் தங்கியிருந்த போது போலீசாரால் கைது செய்யப்படுகிறார்கள்.

டன்ஸ்டன் டிவோட்டா திருச்சி சிறையில் ஆறு மாதம் அடைக்கப்படுகிறார். புன்னக்காயலைச் சேர்ந்த  ஜெர்மியா பெர்னாண்டஸ் அலிகார் சிறையிலும், எரோமியர் பர்னாந்து கடலூர் திருச்சி பெல்லாரி சிறைகளில் அடுத்தடுத்தும் அடைக்கப்படுகின்றனர்.. இதே போல் மாசிலாமணி ஃபர்னான்டஸ்  முதலில் கடலூரிலும் பிறகு அலிப்புரம் சிறையிலும் அடைக்கப்படுகிறார். செல்லியா பெர்னாந்து அலிகார் சிறையில் அடைக்கப்படுகிறார். இவரும் புன்னக்காயலைச் சேர்ந்தவரே.

இந்த சமயத்தில் வலேரியனின் தாயார் காலமாகிவிட, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூட வலேரியனுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஐந்து மாத தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் வலேரியன் மதுரை வைத்தியநாத  அய்யர் வழிகாட்டுதல்படி வரிகொடா இயக்கம், அந்நிய துணி புறக்கணிப்பு முதலிய போராட்டங்களில் தீவிரமாக ஈடுபடுகிறார்.

 திருச்செந்தூரில் நடைபெற்ற கள்ளுக்கடை ஏலத்தின் போது எதிர்ப்பு முழக்கமிட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு வலேரியன் திருச்செந்தூர் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கிருந்து விடுதலையான பிறகு இலங்கை சென்று ஜே.பி.ரொட்ரீக்ஸ் ஆரம்பித்த தேசிய கிறித்துவ தொண்டர் படையில் இணைந்து பணியாற்றுகிறார். 

வீரபாண்டியன் பட்டினத்தில் பிறந்து வளர்ந்த அவர் தொழிலோ வியாபாரமோ புரிவதில் நாட்டமில்லாதவராகவே இருந்திருக்கிறார்.  இலங்கை வாலிபர் சங்கத்தில் இணைந்து பணியாற்றி வந்த அவர் ஒருநாள்  கோவில் விழாவுக்குப் பூக்கள் வாங்கப் போன வழியில் அரசியல் உரை கேட்டு விடுதலைப் போரில் உடனே இணைந்து இந்தியா வந்து சிறை புகுந்து பின் மீண்டும் இலங்கைக்கே திரும்பி இருக்கிறார்.

நேருஜியின் 1936 இலங்கை சுற்றுப்பயணத்தில் ஜே.பி.ரொட்ரீக்ஸுடன் இணைந்து தொண்டர் படைத் தலைவராகப் பணியாற்றுகிறார். வலேரியன் பெர்னாந்துவின் உணர்ச்சிமிகு உரைகளைக் கேட்டு நேரு அவரைப் பாராட்டுகிறார். அதன் பிறகு நேருவைப் போன்று நீள் கோட்டு அணிய ஆரம்பிக்கிறார் வலேரியன். இவர்கள் இருவரும் ஒருமுறை நேருவுடன் தோணியில் பயணம் செய்த போது தூத்துக்குடிக்கு வருமாறு ரோட்டரிக்ஸ் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்ட நேருஜி பின்னர் தூத்துக்குடி வருகிறார்.

வலேரியன்  இந்தியா திரும்பிய பிறகு ஜீவா தலைமையில் சாத்தான்குளத்தில் முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். பிறகு ஏரலிலும் மாநாட்டை நடத்துகிறார். ஒரு முறை போலீஸாரால் தாக்கப்பட்டு ஒரு பள்ளத்தில் வீசப்பட்டும், முன்னை விட வீரியமானவராக மீண்டும் எழுந்து வருகிறார். 
(தொடரும்)

 முத்துக்குமார் சங்கரன் 

விடுதலைவீரர் வலேரியன் 2

இலங்கையிலும் தமிழ்நாட்டிலுமாக  மாறி மாறி தேசிய இயக்கப் பணிகளிலும், தொழிற்சங்க அமைப்புப் பணிகளிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த . வலேரியன் பர்னாந்து 1933 - 1940  காலகட்டத்தில் திருச்செந்தூர், ஆத்தூர், பழையகாயல், தூத்துக்குடி, தருவைக்குளம், வேப்பலோடை ஆகிய பகுதிகளில் வலேரியன் ‘தன்பாடு உப்புப் பாத்தி’கள் அமைத்து சுமார் 7000 தொழிலாளர்களுக்கு சுயவேலை வாய்ப்பிற்கும் ‘அண்டா சாப்பாடு’ முறையில் உணவுக்கும் வகை செய்கிறார். 

பாரி கம்பெனியாரின் மூடப்பட்ட குலசேகரம் பட்டினம் ஆலையில் பணி புரிந்த தொழிலாளர்களையும், ஆலை மூடப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்த மக்களையும், இரயில்வேயில் பணியாற்றியவர்களையும்  ஒருங்கிணைத்து அமைப்பாகத் திரட்டி இருக்கிறார். பாரி நிறுவனத்தாரின் தொழிலாளர் விரோத அடக்குமுறைக்கு எதிராகப் போராடி,  ஒரு உடன்படிக்கை வலேரியனால் ஏற்படுத்தப்படுகிறது. வாக்கு மீறும் கம்பெனிக் காரன்  இவரையும் மக்களையும் எளிதாக ஏமாற்றுகிறான்.வேலைநிறுத்தம் நடத்துகிறார் வலேரியன். 
 
வருவாயின்றித் துயருற்ற தொழிலாளர் குடும்பங்ளுக்குத் தன் உடைமைகளை விற்று உணவளிக்கிறார். கையில் மெகாஃபோனை வைத்துக்கொண்டு  கிராமம் கிராமமாகப் போய் தேசபக்தி பிரச்சாரம் செய்திருக்கிறார்.  மூடப்பட்ட ஆலையை, கிராமமக்களின் ஆதரவோடு மீண்டும் இயக்கும் முயற்சியில் கூட ஈடுபட்டிருக்கிறார். விதவிதமாகப் போராடியும் விடிவு வரவில்லை.

1941 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஜெபமணிஅம்மாள்  பங்கேற்று கைதானதற்கு  முன்பாகவே மாசிலாமணி பிள்ளை தான் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாக விரும்பி, காந்தியடிகளிடம்  சிறப்பு அனுமதி பெற்று இருந்தார். அப்போது தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில்,  “ அந்தப் போராட்டத்தில் காவல் அதிகாரிகளால் ஏதும் வன்முறை நிகழ்ந்தால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என வலேரியன் பர்னாந்து சவால் விட்டுப் பேசியதால் கைது ஆணை (Arrest Warrant) பிறப்பிக்கப் பெறுகிறது. ஆனால் போலிசாரால் கைது செய்ய முடியவில்லை . வலேரியன் தப்பி விடுகிறார். 

காவல்துறைக்கு சவால் விட்டுவிட்டு தப்பி ஓடிய வலேரியன் பர்னாந்து எங்கேயும் போய் ஒளிந்து கொண்டாரா? இல்லையே. தன் மீது பிறப்பிக்கப்பட்ட கைது ஆணை யிலிருந்து தப்பித்த பிறகான தலைமறைவு வாழ்விலும் பல அரசியல் கூட்டங்களில் தோன்றி உரையாற்றுகிறார் வலேரியன்.  கிட்டத்தட்ட 70 நாட்கள் போலீசாருக்கு போக்கு காட்டிய பின்னர் 1941 பிப்ரவரியில்  தூத்துக்குடியில் கைது செய்யப்படுகிறார். 

கடும் கோபத்தில் இருந்த  காவலர்களால்  வன்மையாகத் தாக்கப் படுகிறார். ஐந்து நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பின்னரே விசாரிக்கப்பட்டு தண்டிக்கப் படுகிறார். ஆறு  மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப் பெற்று அலிப்புரம் கிளையில் அடைக்கப் படுகிறார். மிகுந்த சித்திரவதைகள் நிறைந்த வெஞ்சிறை வாசத்துக்குப் பிறகு  1941 ஆகஸ்ட் 5 ஆம் நாள் விடுதலை ஆகிறார். 

விடுதலை ஆனால் என்ன? ஒரு காந்தியவாதி வேறு எங்கு போவார் ஏரல், ஆறுமுகநேரி யிலுள்ள காதி வஸ்திராலய நிர்வாகியாகப் பணியாற்ற ஆரம்பித்தார். வீரபாண்டியன் பட்டனம் உட்பட சுற்றுவட்டார கிராமங்களில் மாதர் சங்கங்கள் அமைத்து முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும்,  ஆண்களுக்கும் கை இராட்டைகள்  வழங்கி கதர் நூல் நெய்யப் பயிற்றுவிக்கிறார். சுமார் 3000 இராட்டைகள் பகிர்ந்தளிக்கப் படுகின்றன,. 

ஆயிரம் சுற்று நுால் கொண்ட நூல் கண்டுக்கு, ஒரு 'சிட்டம்' எனப் பெயர்.  ஒருவர் அதிகபட்சமாக தினசரி மூன்று சிட்டங்கள்  நுால் உற்பத்தி செய்யலாமாம். பஞ்சு நிறுவனத்தால் வழங்கப்பட்டு நுாலும் அவர்களாலேயே கொள்முதல் செய்யப்படும். ஒரு சிட்டம் நுால் உற்பத்திக்கு கூலியாக  நான்கு அணா வழங்கப்பட்டது. ஒவ்வொரு கிராமத்திலிருந்து சுமார் 1000 சிட்டங்கள்  கதர்நூல் சேகரிக்கப் பட்டிருக்கிறது

இந்த உற்பத்தியில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும், இராட்டைகளைப் பழுது நீக்கவும், நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளரை 'தறி வாத்தியார்' என்று பொதுமக்கள் அழைத்தனர். ஆமாம்! வலேரியன் பர்னாந்து  இப்போது வாத்தியார் . 

( மாசில்லாமணி பிள்ளை
ஜெபமணி அம்மாள் தம்பதி
)
இவ்வாறாக பஞ்சு கொடுப்பதிலும், நூற்ற நூலைச் சேகரிப்பதிலும் வலேரியன் பர்னாந்துவின் நாட்கள் ஓடிக் கொண்டிருந்த போது, ஒருநாள் மணப்பாடு செல்லும் வழியில் வலேரியன் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார். விலங்கிடப் பட்டு,  குலசேகரன் பட்டனம் கிளைச் சிறையில் ஒருநாள் அடைக்கப் பட்டார். காரணம் அந்தப் பகுதியில் உப்பு ஆய்வாளர் வில்ஃப்ரட் லோன்  என்ற ஆங்கிலேய அதிகாரி போராட்டக் காரர்களால் கொலை செய்யப் பட்டிருந்தார். இந்தக் கொலைக் குற்றவாளிகளை வெறி கொண்டு தேடிய  போலீசாரிடம் தான்,  நூல் சிட்டம் சேகரிக்கப் போன   தறிவாத்தியார்  சிக்கிச் சிறை சென்று, மறுநாள் விடுதலையானார்.
(தொடரும்) 

- முத்துக்குமார் சங்கரன் 

பண்பாட்டில்_ சிறந்த பரதவர்-5



Professor. MICHAEL BONAVENTURE DEMEL 

மெட்ராஸ் பிரசிடென்சி  என்பது பிரிட்டிஷ் இந்தியாவின் நிர்வாக உட்பிரிவாகும். அதில் மிகப் பெரிய அளவில், இந்திய மாநிலங்களான ஒடிசா, கேரளா, கர்நாடகா மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகள் உட்பட தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகள்  அடங்கும்.

1923 ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழக சட்டம் இயற்றப்பட்டது.இந்த நேரத்தில், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் பிராந்திய எல்லை ஒரிசாவின் பெர்ஹாம்பூரை உள்ளடக்கியது மற்றும் வடக்கில் ஆந்திராவின் ஹைதராபாத், தென்மேற்கில் கேரளாவின் திருவனந்தபுரம், மேற்கில் கர்நாடகாவின் மைசூர், பெங்களூர் மற்றும் மங்களூர் ஆகிவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

இவ்வளவு இடங்களையும் உள்ளடக்கிய  மெட்ராஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பொருளாதாரப் பாடத்தில் மாகாணத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றவர்  பழைய காயல் கிராமத்தில் உதித்த பரதவ மாணவன் என்றால் ஆச்சரியமாக இருக்கும். திருச்சி தூய வளனார் கல்லூரியில் பயின்ற மிக்கேல் பொனவந்தூர் டிமெல் தான் அந்த சூப்பரான மாணவர். அதுமட்டுமல்ல அவர் முதுகலைப்பட்டத்தின் அனைத்து பாடங்களையும் ஒரே ஆண்டில் எழுதி மெட்ராஸ் மாகாணத்தின் முதல் மாணவராக வெற்றி பெற்றார்.  வரலாற்று பாடத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அதற்கு முன் தனது இளங்களைப் படிப்பை  தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டையில் பயின்றார்.  அங்கும்  பி.ஏ படிப்பில் முதல் மாணவராக தேர்வு பெற்று  தங்கப்பதக்கம் வென்றார்.  அவருக்கு ஆறு கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.  இவரது தந்தை பூரண சந்தியாகு டிமெல்  ஆங்கிலேயர் ஆட்சியில் போஸ்ட் மாஸ்டராக பணி செய்து வந்தார். பிற்காலத்தில் பழைய காயல் பஞ்சாயத்து தலைவராகவும் பணியாற்றினார்.

அந்தக்காலத்தில் நான்காம் வகுப்பிற்கே பொதுத்தேர்வு நடந்ததாக அறிகிறோம். பொனவந்தூர் டிமெல் பழைய காயலில் மூன்றாம் வகுப்புவரை பயின்ற பின்னர் நான்காம் வகுப்பு படிக்க தூய சவேரியார் பள்ளி, பாளையங்கோட்டை சென்றார். அவரும்,  தந்தையும் போக்கு வரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் பழைய காயலில் இருந்து 36 மைல்கள் நடந்தே சென்றார்கள் என அறிகின்றோம்.

பழைய காயலில் படிக்கும்போதே படிப்பில் படுசுட்டியாக இருந்த பொனவந்தூர் டிமெல் தனது பள்ளிக்கல்வி முழுவதையும் தூய சவேரியார் பள்ளி, பாளையங்கோட்டையில் விடுதியில் தங்கி பயின்றார்.  1920-30  ஆண்டுகளில் இப்படி ஊரைவிட்டு வந்து படிப்பது எவ்வளவு கடினமான காரியம் என்பதை வாசிப்பவர்களின் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். ஆனால் ஊரெங்கும் ஒரே மகிழ்ச்சி... காரணம் அவர்தான்  ஊரில் முதல் பட்டதாரி. எனவே அனைவரும் அவரை 'எம்.ஏ வாத்தியார் ' என்றே அழைப்பார்கள். அது அவரது பெயராகவே நிலைத்து விட்டது. பாளையங்கோட்டையில் படிக்கும் போது பொனவந்தூர் டிமெல் தனது குருவை சந்திக்கிறார். அவர்தான் பரதேசி பீட்டர்  என்று அழைக்கப்பட்ட பேராசிரியர்/ இறையடியார் பீட்டர் ரெட்டி. 

பரதேசி பீட்டர் ரெட்டியைப்பற்றி அறிந்தவர்கள் இப்போது அரிதாகவே இருப்பார்கள். சுருக்கமாக சொன்னால்  அவர் ஆசிரியர்,  கல்லூரி பேராசிரியர்  என்று பணி செய்தாலும் அவர் இறை ஊழியத்திற்கு தன்னை அற்பணித்தவர்.  தனது வருமானத்தை ஏழைகளுக்கு  கொடுத்து விட்டு  திருவோட்டில் பிச்சை எடுத்து சாப்பிடுவார்.

பொனவந்தூர் டிமெல் தனது  எம்.ஏ படிப்பை முடித்த பி்ன்னர்  மங்களூரில் பேராசிரியராக பணி செய்து வந்தார். பீட்டர் ரெட்டி தன்னை இறை பணிக்கு முழுமையாக அர்ப்பணிக்க தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் பணியை துறந்தார்,  மேலும் அப்பணியை தனது மாணவராக இருந்த பொனவந்தூர் டிமெல்லுக்கு அளிக்கும்படி பரிந்துரைத்தார். 

1944 ஆம் ஆண்டு பொனவந்தூர் டிமெல் , தூய சவேரியார் கல்லூரி பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.  இவரிடம் கல்லூரியில் பயின்றவர்கள் பல்வேறு உயர் பதவிகளில் அமர்ந்தார்கள்.  குருக்களும் இதில் அடங்குவர். மறைந்த அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்ட் மற்றும் வைகோ இவரது மாணவர்கள். 

சில ஆண்டுகளுக்கு முன்பு லயோலா கல்லூரியில் உறையாற்றிய வைகோ பின் வருமாறு கூறினார் ' பேராசிரியர் டிமெல்லை ப்போன்ற பண்பான, அன்பான ஒருவரை நான் மீண்டும் சந்திக்க முடியாது... அவரது கற்பிக்கும் திறனையும் காண இயலாது.  அறுபது ஆண்டுகளுக்கு  பின்னும் அவர் என் நினைவில் இருக்கிறார்' என்று புகழ்ந்து பேசினார். பொனவந்தூர் டிமெல் கல்லூரி மாணவர்களுக்காக, பல்கலைக்கழக வேண்டுகோளுக்கு இணங்க பல்வேறு பொருளாதார நூல்களை  எழுதினார். Home to Rome என்ற பிரபலமான சமய நூலையும் எழுதினார். 

பொனவந்தூர் டிமெல் மேடைப் பேச்சிலும் சிறந்து விளங்கினார்.  'மனுக்குலத்தை பெருக்குங்கள்' என்று அவரது பேச்சில் குறிப்பிடுவார்.  இறைவனின் கொடை மக்கட்பேறு அதை மறுக்கக்கூடாது என்ற நல்ல கருத்துடையவர்.  தனது வாழ்விலும் அதை நிருபித்தவர். 

13 முத்துக்களை பெற்றார்.  இளம் வயதில் ஒரு குழந்தையை இழந்தாலும் மீதமுள்ள 12 பிள்ளைகளையும்  சிறப்பாக வளர்த்தார்.  கடவுள் அவரிடம் ஒப்படைத்த  ஒவ்வொரு குழந்தையையும் சீருடனும்,  சிறப்புடனும் வளர்த்தார். பொறியாளராக, ஆசிரியர்களாக, மத்திய அரசு மற்றும் வங்கி அதிகாரிகளாக அவருடைய பிள்ளைகள் உயர்ந்தார்கள். மகன் பூரணம் டிமெல் SJ குருவானவராகவும்,  மகள் சிஸ்டர். பிலோமினா டிமெல்  கன்னியராகவும் உயர்ந்தனர். பொனவந்தூர் டிமெல் அவர்களின் துணைவியார் சிறிய புஷ்பம் , சீரிய மனைவியாக இருந்து குடும்பத்தை நடத்தினார். பிள்ளைகளை ஆளாக்கினார். 

இவர்களது பேரப்பிள்ளைகளும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.  எல்லோரும் தொழில் முனைவோர்களாகவும், அதிகாரிகளாவும், பொறியியல் வல்லுனர்களாகவும்,  மகன் அல்போன்ஸ் - விஜயா இவர்களின் புதல்வர்  மைக்கேல் புகழேந்தி SJ குருவானவராகவும் உள்ளார். 

பரதேசி பீட்டர் பாளையங்கோட்டையில் இருக்கும்போது தனது சிஷ்யரான பொனவந்தூர் டிமெல் வீட்டில்தான் தங்குவார். சில ஆண்டுகள் அவர் கேரளா சென்று தனது மிஷினரி பணியை  செய்தார்.  அப்போது அவர் உடல்நலம் கெட்டு படுத்த படுக்கையாக விட்டார்.  தனது மாணவரை பார்க்க  ஆசைப்பட்டார்... உடனே பொனவந்தூர் டிமெல் விரைந்து சென்று அவரை ஒரு வேனில் ஏற்றி அழைத்து வந்தார்... அருட் தநதை. சேவியர் இருதயராஜ் சே.ச எழுதிய 'மூன்று சாட்சிகள் நூலில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது...

"பேராசிரியர் பீட்டர் பரதேசி மிகச்சிறந்த அறிவாளியும், பண்பாளருமான பேராசிரியர் டிமெல் வீட்டில் தங்கினார். டிமெல் பீட்டருக்கு மகனாய், தொண்டனாய்,துணைவனாய்,  பக்தனாய் இருந்து இரவு பகலாக பணிவிடை செய்தார்கள். தூக்கி நெஞ்சில் சாய்த்து வைத்து உணவு ஊட்டுவார்கள். பேராசிரியர் டிமெல் அவர்களின் குருபக்தி அபூர்வமானது "

தனது குருவான பீட்டர் பரதேசி மறைவுக்குப் பின் பொனவந்தூர் டிமெல் 'தூய நெஞ்ச கல்லூரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தில் பேராசிரியராக பணியாற்றி, மறைந்து, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். 

நன்றி : ஜூலி டிமெல் மற்றும் விஜயா அல்போன்ஸ்.

தேன்வளன்@ Joemel Fernando

விடுதலைவீரர் வலேரியன் 3

கதர் கல்யாணம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அந்தக் கால சீர்திருத்தத் திருமணம் அது. வலேரியன் பர்னாந்துவுக்கும் பழைய காயல் மகத்துவம் மச்சாடோவுக்கும் 1942 பிப்ரவரி 13 ஆம் நாள்  கதர் கல்யாணம் தான் நடந்தது.  மணப் பெண்ணுக்கு  ஒரு கதர் புடவையும், மணமகனுக்கு  கதர் வேட்டியும் மட்டுமே செலவு. பூமாலைக்குப் பதில் கதர் நூல் மாலை மாற்றிக் கொள்வார்கள். இந்த  எளிய முறை திருமணத்துக்குப் பின்னர் இவர் மீண்டும் இலங்கை சென்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சேவையாற்றுகிறார். 

சுதந்திரம் அடைந்த நாளன்று வலேரியன் பர்னாந்து இலங்கையில் தான் இருந்திருக்கிறார். கொழும்பு கண்ணாரத் தெருத் திடலில் நடைபெற்ற விழாவில்  அந்நாளைய இலங்கைக்கான இந்திய தூதர் வி.வி.கிரி தலைமையேற்க வலேரியனுக்கு இந்திய தேசியக் கொடியேற்றும் சிறப்பளிக்கப் படுகிறது.

தேசிய கட்சி ஒன்றின் முழு நேர ஊழியராகவே செயல்பட்டு, எதற்காக இவ்வளவு பெரிய தியாகங்களை செய்து போராடினாரோ அந்த சுதந்திரம் கிடைத்து விட்டது. யார் வாய்மொழியை மந்திரமாக ஏற்றுக் கொண்டார்களோ, அவர் சுட்டுக் கொல்லப்பட்டு சுதந்திர தேசிய அரங்கில் இருந்து அகற்றப்பட்டார்.. 

தான் பிறந்த தேசத்தை விடுதலை செய்யப் பெரும் படை திரட்டிக் கொண்டு அணிவகுத்து வந்த தலைவர் என்ன ஆனார் என்று தெரியாமலே காணாமல் போனார். பொன்னுலகம் நோக்கி அழைத்துச் சென்றவர்கள் சட்டென்று விடை பெற்றுக் கொண்டதால் பின்னால் வந்தவர்களில் பலர் திகைத்துப் போய் தெவங்கி நின்றார்கள். சிலர் உறுதியாக முன்னேறி முக்கியமான தளங்களில் தம்மை வசதியாக நிலை நிறுத்திக் கொண்டார்கள்.

தூத்துக்குடியில் இவர் தலைவராக மதித்திருந்த மாசிலாமணி பிள்ளை காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்தலில் நிற்கவே வாய்ப்பு மறுக்கப் பட்டார். சுதந்திரம் அடைந்த பின் மாகாண சட்ட மேலவைத்  தேர்தலில் சுயேச்சையாக நின்று தோற்றே போனார். 

1950 ஆம் ஆண்டில் தாயகம் திரும்பிய வலேரியன் தெவங்கித் தான் போனார். வீரபாண்டியன் பட்டனம் தாமஸ் நடுநிலைப் பள்ளியில் நூற்பு நெசவு ஆசிரியராக  சில ஆண்டுகள் பணியாற்றுகிறார் வலேரியன். பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரமுயர்த்தும் முயற்சியில் ஊர் பெரியவர்களுடன் சேர்ந்து ஈடுபட்டு வெற்றி பெறுகிறார். அதன்பின் கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் நூற்பு ஆசிரியராகவும், ஹரிஜன நல இலாகாவில் தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுக்காகவும் பணியாற்றுகிறார். 

1960 ஆம் ஆண்டில் வினோபா பாவே,விமலா டக்கர் ஆகியோர் பின்னே வலேரியன் பய்னாந்து ஒரு தொண்டராகிறார். 1966 முதல் 1969 வரை வினோபா பாவேவின் சீடர் குட்டி அவர்களோடு பாதயாத்திரை ஊழியராக  இணைந்து காந்தியடிகளின் கிராமராஜ்ய கனவை நனவாக்கச் சேவையாற்றுகிறார் வலேரியன்.

இந்தியா முழுவதும்  40 லட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று விட்டதாக அறிவிக்கிறார் வினோபா பாவே.. ஒன்றுக்கும் உதவாத வறண்ட நிலங்களையும் தூர்ந்து போன  ஏரி கண்மாய்களையும் நிலக்கிழார்கள் வாரி வழங்கிய துயர நாடகம் அது.

இந்த காலகட்டத்தில்  மூத்தமகள் தேவியின் திருமணத்தை. மதுரையில் கதர் கல்யாணமாக  நடத்தி வைக்கிறார் வலேரியன். தன் மொத்த வாழ்வையும் தேசத்துக்காகத் தொலைத்துவிட்டு தன் குடும்பத்தோடு பரிதாபமாகத் திண்டாடுகிறார் வலேரியன்.1967 இல் அண்ணா முதல்வரான பின்னர் மாநில அரசின் சார்பில் விடுதலை வீரர்களுக்கான ஓய்வூதியம் 22.06.1967 முதல் மாதம் ரூபாய் 50 தரப் படுகிறது.  தியாகி வலேரியன் பர்னாந்துவின் குடும்பம் திருச்செந்தூரிலிருந்து மனைவியின் ஊரான பழையகாயலுக்கு குடிபெயர்கிறது.

அங்கும் வலேரியன் பர்னாந்து சும்மா இருக்கவில்லை.  கிராமசபை அமைத்துக் காரியதரிசியாக சேவையாற்றுகிறார். சிறிது காலத்திற்குப் பின்னர், இளைய மகள் சுதந்தராவுக்கு   வேலை கிடைத்ததன் காரணமாக குடும்பம் தூத்துக்குடிக்கு குடிவருகிறது. 

வலேரியன் பர்னாந்து  01.03.1970 முதல்  11.05.1972 வரை நெல்லை வண்ணாரப் பேட்டை தினமலர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அறுபது வயதைக் கடந்த ஒரு பெரியவருக்கு அவர்கள் என்ன வேலை கொடுத்திருப்பார்கள்? பாவம் கடும் உழைப்பாளியும் நேர்மையாளருமான பெரியவர் என்ன வேலை செய்திருப்பார்? அந்த வயதில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு வேலை செய்து பொருள் ஈட்ட போய் வந்த போது  அவர் மனம் என்ன பாடு பட்டிருக்கும் ? 

சுதந்திர வெள்ளி விழா கொண்டாட்டத்திற்குப் பின் நடுவண் அரசிடமிருந்து தியாகி ஓய்வூதியம்  மாதம் ரூபாய் 1250 வர ஆரம்பிக்கிறது. ஒரு வழியாக இவரைத் தியாகியாக அங்கீகரித்து விட்டது மத்திய அரசு.1973ஆம் ஆண்டு குடியரசுதின விழாவில் மாவட்ட ஆட்சியரால் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வலேரியன் பர்னாந்துவுக்கு சுதந்திரப் போராட்ட தியாகி என்பதற்கான தாமிரபட்டயம் வழங்கப் படுகிறது.

1980 இல் இளைய மகள் சுதந்தராவுக்கும் மணம் முடித்து  வைக்கிறார் வலேரியன். குறை ஒன்றும் இல்லை என்று சொல்லி நிறைவாழ்வு வாழ்ந்த வலேரியன் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் தனது நீண்ட ஓட்டத்தை நிறைவு செய்து கொள்கிறார்.

நம் நாட்டின் விடுதலை என்பது வெறுமனே ராட்டையில் நூற்று எடுக்கப்பட்டதில்லை என்பதையும், ஒவ்வொரு ஊரிலும் இப்போது அறியப்பட்டிருக்கும் ஒன்றிரண்டு பேர் மட்டுமே விடுதலைப் போராட்ட வீரர்கள் இல்லை என்பதையும். இன்னும் பல நூறு தியாகிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சாதாரணர்களாக வாழ்ந்து மறைந்து விட்டார்கள் என்பதையும் நாம் ஒவ்வொருவரும் நம் நெஞ்சில் இருத்த வேண்டும்.
-முத்துக்குமார் சங்கரன் 

The legend of ‘our lady of snows’


CHENNAI: The 53-foot golden chariot stands majestically at the Basilica, its resting spot after a procession through the streets of Tuticorin, one of the largest, rarest and most celebrated events in the coastal city, as crowds 10,000-strong throng each day to catch a glimpse. At the centre of the chariot is the five-foot tall statue of ‘Our Lady of Snows’, mother god of the mariners of the region. The lower deck has carved figurines of mermaids and mermen, symbolising the seafaring tradition of the paravar community that worships her. Since February 2, 1806, when it was first rolled out, the chariot has graced the streets only 16 times, the last being in 2013. It made its way through the streets a week ago in a ten-day festival and will remain on view at the Basilica until September 8.

What is the enchanting tale behind ‘Our Lady of the Snows’ and why has she come to be the guardian angel of the fisher community?

Locally, ‘Our Lady of Snows’ (Mother Mary) is referred to as ‘Divya Santha Maria Dasnavis Matha’ (both Tamil and Portuguese) and is the reigning deity of this coastal city. There is a reference to her everywhere, from fishing crafts and buildings to people’s names. The unflagging devotion has a story dating to 1532AD and finds its roots in the element of ‘mother worship’ among the seafaring communities.

In the 15th and 16th centuries, the paravar community, who claimed to be descendants of Pandya kings and lived along the pearl fishery coast, were under attack from local rulers. The Portuguese, who were trying to make inroads into the area, agreed to protect them if they converted to Catholicism. Members of the community converted in 1532 AD.

A decade later, Jesuit missionaries from Portugal sent Francis Xavier over to strengthen the Catholic presence. The locals hailed him ‘Periya Thagappan’ (Godfather). “He understood that the community was traditionally into worship of a mother goddess and needed a ‘motherly’ deity to hold on to. He wanted the statue sent over from the Philippines,” says Joe D’ Cruz, who documented 100 years of Tuticorin in his Sahitya Academy award-winning book ‘Korkai’. The veneration of Mother Mary in the Catholic sect struck a chord with the mariners, more so as she was hailed the ‘Morning Star’ (for just as the morning star guides mariners, she guided souls to heaven). There is also a small ‘mother figure’ Sinthayathirai Matha (Mother of Good Voyage), near the seashore in Tuticorin, which came up in 1713 AD, and which fishermen flock to before venturing into sea. The statue arrived in 1555 AD and from then on came to be seen as the protector. She is also called ‘Ezhukadalthuraiyin Yega Adaikala Thai’ (Mother of refuge for seven ports) indicating the villages of Vembar, Vaippar, Manapadu, Tuticorin, Punnakayal, Veerapandianpattinam and Tiruchendur. Over centuries, Tuticorin’s history has been influenced by the Portuguese, Dutch, and British. The paravar community, though, remained resolute in their faith. “Except for the Portuguese, the other colonists practiced Protestantism, which only had a crucifix as a symbol. People could not relate to it,” says D’Cruz.

The Our Lady of Snows statue is adorned with a golden crown, which appeals to the community that traces its roots to Pandya kings. The golden chariot was introduced by pandiyapathi (community leader) Don Gabriel De Cruz Vas Gomas Parathavarma Pandian in 1806 AD. He was affectionately called Thermaran for introducing the golden chariot like the one in Tiruchendur Murugan temple.

“The tradition of rolling a golden chariot through the streets is what attracts people from all faiths, especially Hindus because they are accustomed to car processions,” says A Sivasubramanian, a professor of folklore.

Though they have embraced Catholicism, some elements of their ancestry, remain. “The head of a parrot, for example, is placed on top of the four pillars in the chariot. The parrot is associated with Goddess Meenakshi and found a place in the symbols of Pandya kings,” says Subash Fernando, a local community leader.

Though the teachings of the Catholic Church say Mother Mary is not worshipped as a deity, but rather venerated above all saints and given a place as Mother of God, people from the paravar community, especially from these coastal villages consider her their Mother Goddess. “People from all paravar villages make a pilgrimage to see the golden chariot,” says V Raja, who travelled from Manapadu with his family.

பண்பாட்டில் சிறந்த பரதவர் 4

 

மாண்புமிகு திரு. நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா
சென்னை உயர் நீதிமன்றம் 

கருணை உள்ளம் கொண்ட, நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா,  சட்டப் படிப்பு  பயிற்சி மாணவி  ஒருவருக்கு சிறப்பு இருக்கை வழங்கிய நெகிழ்ச்சியான நிகழ்வு...

மாற்றுத் திறனாளியான காயத்திரி, நீதிபதி ஜெகதீஷ் சந்திராவின் அலுவலகத்தில் சட்டப் படிப்பு பயிற்சிக்காக  சேர்ந்தார். அன்று, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையில், நீதிபதி அவளிடம் நடவடிக்கைகளை கவனிக்க முடிகிறதா என்று கேட்டார். நீதிமன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் அவள் சிரமப்படுகிறாள் என்பதை அறிந்ததும், நீதிபதி அவளுக்கு நீதிமன்ற ஊழியர்களுக்கு அருகில் ஒரு சிறப்பு இருக்கையை அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய நீதிபதி சந்திரா, காயத்ரி ஒரு சிறந்த மாணவி மற்றும் நன்கு படிப்பவர் என்று கூறினார். "காயத்ரி மிகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண். அவள் மிகவும் புத்திசாலி. அவளும் யுபிஎஸ்சிக்கு தயாராகி வருகிறாள்.  பொதுவாக சட்ட நடவடிக்கைகளைப்பற்றி பற்றி படிக்க யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் காயத்திரி எப்பொழுதும் நன்றாக படித்து விஷயங்களில் தயாராக இருக்கிறார்", என்று நீதிபதி கூறினார்.

காயத்ரிக்கு அவரது தோழியும் சக பயிற்சியாளருமான ஹபீசா ஹலீம் அளித்த உதவியையும் நீதிபதி பாராட்டினார். காயத்திரி மற்றும் ஹபீசா இருவரும் தனது அறையில் ஒன்றாக இணைந்ததாகவும், காயத்திரிக்கு ஹபீசா எப்படி எப்போதும் ஆதரவாக இருந்ததை தான் அவதானித்ததாகவும் அவர் கூறினார். "இந்த நாட்களில் பல குழந்தைகள் மிகவும் உதவியாகவும், தன்னலமற்றவர்களாகவும் இல்லை, ஹபீசா ஒரு சிறந்த நண்பர்", என்று அவர் கூறினார்.

நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அவர்கள் தனது பணிச்சுமைகளுக்கு இடையில் இப்படிப்பட்ட  விடயங்களையும் உன்னிப்பாக கவனிக்கிறார் என்கிற போது அவர் உண்மையில் பண்பில் சிறந்தவர் என்பதை நாம் அறிகின்றோம். சில வருடங்களுக்கு முன்னர் Don Bosco, Egmore பள்ளியின் ஆண்டு விழாவுக்கு Chief Guest  ஆக அவரை அழைத்திருந்தோம்.  அப்போது அவர் உயர்நீதிமன்ற நீதிபதி  என்கிற பந்தாவெல்லாம் இல்லாமல் மிகவு‌ம் அன்புடன் பழகினார்... மாணவரகளிடம்  மிகவும் வேடிக்கையாக, ஜோக்கடித்து பேசி அவர்களை கவர்ந்தார்.  

நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அவர்களும், எங்களது பள்ளியின் முதல்வர் ஜெரால்டு மிராண்டா அவர்களும் வீரபாண்டிய பட்டினத்தில் ஒன்றாக படித்தவர்கள், பால்ய நண்பர்கள். 

அவரை நான் மீண்டும் ஒருமுறை மற்றொறு நிகழ்ச்சியில் சந்தித்த போதும் மறவாமல் நலம் விசாரித்து  பேசினார்.  தமது தீர்ப்புகளில் செல்வந்தர்கள்/ கார்ப்ரேட்டுகள்  என்று பாரபட்சம் காட்டாமல் வன்மையாக கண்டிக்க கூடியவர். பல்வேறு வங்கிகளில் ரூ.10,000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் சுரானா குழும நிறுவனங்களின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரிக்கு ஜாமீன் தர மறுத்தார். 

'வெள்ளைக் காலர்' குற்றங்கள் சமூகத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை என்று சென்னை உயர் நீதிமன்றம்  நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா சமீபத்தில் குறிப்பிட்டார், ஏனெனில் அவை நன்கு படித்தவர்களால் செய்யப்படுகிறது. மேலும் வெள்ளை காலர் குற்றங்கள் திடீர் தூண்டுதலால் செய்யப்படவில்லை, ஆனால் விளைவுகளை நன்றாகப் புரிந்து கொண்டே செய்கிறார்கள் என்றார். மற்றுமொரு  வழக்கில் குற்றவாளிகளாக நிருபிக்க படாதவர்களை சிறையில் அடைத்து தண்டிப்பது  தவறு என்று குறிப்பிட்டு ஜாமீன் வழங்கினார்...

விழுப்புரம் மாவட்டத்தில் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்காக சட்டவிரோதமான மற்றும் அங்கீகரிக்கப்படாத இல்லத்தை நடத்தியதாகவும், கைதிகளை மனித கடத்தல் மற்றும் உறுப்பு வர்த்தகத்திற்காக பயன்படுத்தியதாகவும் தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 ஜாமீன் வழங்கி அளித்த தீர்ப்பில்:-

நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, “மனுதாரர்கள் கடந்த 20 ஆண்டுகளாக எந்தக் களங்கமும் இல்லாமல் சமூகத்திற்கு சேவை செய்து வருகின்றனர். கடுமையான குற்றச்சாட்டுக்களில் அவர்கள் ஈடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகத்தின் சோதனையை நாங்கள் இப்போது எதிர்கொள்கிறோம்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகும் இந்த விவகாரத்தில் உறுதியான ஆதாரம் எதையும் காவல்துறையால் கொண்டு வர முடியவில்லை என்றும் அவர் கூறினார். அவர்கள் நீதிமன்றக் காவலில் இருந்தபோதும், காவல்துறையோ அல்லது சிபிசிஐடியோ குற்றச்சாட்டுகளை நிரூபிக்க உறுதியான ஆதாரங்களை சேகரிக்க முடியவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. நீதிபதி சந்திரா, அரசியல் சாசனம் வழங்கிய தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் பலமுறை வலியுறுத்தியதை சந்தேகத்தின் அடிப்படையில் மனுதாரர்களுக்கு மறுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

இவை அவர் தனது நீதி இருக்கையில் இருந்து சாலமன் அரசரைப் போன்று  ஞானமுடன் செயல்படுகிறார் என்பதை அறியலாம். நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியப்பட்டினம் கிராமத்தில் 15.02.1966 அன்று பிறந்தார். இவரது தந்தை மறைந்த பேராசிரியர் தாசன் பெர்னாண்டோ திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறையின் துணை முதல்வராகவும், தலைவராகவும் இருந்தார். தாய் திருமதி.மெடில்டா தாசன் ஒரு ஹோம் மேக்கர் ஆவார், அவர் சிறுவயதிலேயே தந்தையின் மறைவுக்குப் பிறகு குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றார். 

அவரது மனைவி திருமதி சியாரா ஜெகதீஷ் தனது எம்.ஏ (பொது நிர்வாகம்) மற்றும் எம்.எஸ்சி (ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்) படித்திருக்கிறார். மிகவும் தாழ்ச்சியான, அன்பான குணக்குன்று. திரு. நீதியரசர் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முதலில் மதுரை சட்டக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாலும், பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டு டாக்டர்.அம்பேத்கர் அரசில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார். சட்டக் கல்லூரி, சென்னை மற்றும் 1989 ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 

ஆரம்பத்தில் அவர் கிங் மற்றும் பார்ட்ரிட்ஜ் ஜூனியர் வழக்கறிஞராக (1989-91) பின்னர் திரு.பி.பெப்பின் பெர்னாண்டோவின் அலுவலகத்தில் ஜூனியர் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார், இரண்டு அலுவலகங்களிலும் அவர் சிவில் வழக்குகளில் ஆஜராகினார்.  பின்னர் அவரது தாய் மாமன் திரு. G R Edmund அவர்களின் சட்ட அலுவலகத்தில்  'விசாரணை மற்றும் மேல்முறையீட்டு' பக்கங்களில் குற்றவியல் தரப்புகளில் விரிவாக பயிற்சி பெற்றார். அவர் 1997 ஆம் ஆண்டில் தனது தனிப்பட்ட பயிற்சியைத் தொடங்கினார். 

சிவில், குற்றவியல் விஷயங்களில், நுகர்வோர் மற்றும் பிற கமிஷன்கள் மற்றும் ரிட் அதிகார வரம்புகளில் விசாரணை மற்றும் மேல்முறையீடு ஆகிய இரண்டிலும் பயிற்சி பெற்றார். அவர் 2010 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார், மேலும் அவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் குழு ஆலோசகராகவும், சென்னை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் கெளரவ சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். 

லா ஜர்னல்-சென்னை லா டைம்ஸ் (கிரிமினல்) இதழின் கெளரவ இணை ஆசிரியராக இருந்தார். 2016-ம் ஆண்டு கட்ட பஞ்சாயத்து விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவ அமிக்கஸ் கியூரியாக நியமிக்கப்பட்டார். ஜூன் 29, 2017 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 

அவர் மேன்மேலும் உயர்ந்து  உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர வாழ்த்துக்கள்!

தேன்வளன் @ Joemel Fernando

பண்பாட்டில் சிறந்த பரதவர் 3

 

DGP A.X.Alexander IPS


உளவுப்பிரிவு DGP ஆக அவர் பணியாற்றிய போது , 1994 ஆம் ஆண்டு , ஜனவரி 20 ம் நாள்  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.  சற்றும் எதிர்பாராத நிலையில் மறுமுனையில் அன்னை தெரசா பேசினார்... ' தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் உடனடியாக பார்க்க முடியுமா?' என்று அன்னை வினவினார். அலெக்ஸாண்டர் அவர்கள் மீண்டும் அழைப்பதாக கூறிவிட்டு திகைத்து நின்றார்...

அது ஏறக்குறைய மதிய வேளை. முதல்வர் வீட்டில் உணவுக்குப்பின் ஓய்வெடுக்கலாம் என்பதால்  சற்று தயங்கியவாறே  முதல்வருக்கு போன் செய்தார்...மறுமுனையில் ஜெயலலிதா  'என்ன மிஸ்டர் அலெக்ஸாண்டர்' எனக் கேட்டார்.  அன்னையிடம் இருந்து போன் வந்த விபரத்தை கூறினார் DGP.

என்ன சொல்கிறீர்கள்?  உடனடியாகவா? தலைமைச் செயலகத்திலா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.  அலெக்சாண்டர் அன்னை ஜெயலலிதாவை அவர் வீட்டிற்கு வந்து சந்திக்க  விரும்புவதாக கூறினார். 'ஜெ ' யால் நம்ப முடியவில்லை... மிகவும் exited ஆகி கொஞ்ச நேரம் கொடுங்க ரெடியாகி விடுகிறேன் என்று சம்மதித்தார். அன்னை  போயஸ் கார்டன் வந்தார். ஜெயலலிதாவின் வீட்டில் ஒரே பரபரப்பாக இருந்தது.

முதல்வர் அன்னையை  மிகவும் உற்சாகமாக  குழந்தையைப் போல மகிழ்ச்சியுடன் வரவேற்றார்... ஆசீர் வாங்கினார்.  சிறு பிள்ளையாக மாறி அன்னையின் கரங்களைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார்... அன்னையின் கோரிக்கையான அனாதை இல்லத்திற்கு இடம் ஒதுக்க உத்தரவிட்டார். 

மற்றொரு கோரிக்கையான அவரது சகோதரிகளின் வாகனங்களுக்கு மாநில வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை "உடனே பரிசீலிப்பதாக" ஜெயலலிதா உறுதியளித்தார். அரை மணிநேர சந்திப்பு ஒருமணி நேரத்தையும் தாண்டியது... அன்னையை தனது வீட்டின் வாசல்வரை வந்து வழியனுப்பினார் ஜெயலலிதா. 

வீட்டின் உள்ளே சென்றபின் அலெக்ஸாண்டரிடம்' அன்னை உள்ளே வந்தபோது  நீங்கள் முழந்தாள் படியிட்டு அவர் கையில் முத்தம் கொடுத்தீர்களே, என்னிடமும் சொல்லியிருந்தால் அவ்வாறே நானும் செய்திருப்பேன்', என்றார் இரும்பு பெண்... அலெக்சாண்டர் திகைத்து நின்றார்!

கமுதியில் பிறந்த அலெக்ஸாண்டர்,  செயின்ட் ஜோசப் கல்லூரி,  திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்தார். IPS படித்து அலெக்சாண்டர், 1970-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். உளவுத்துறையின் புலி என்று வர்ணிக்கப்படும் அலெக்ஸாண்டர்,  அதிமுக ஆட்சியில் உளவுப் பிரிவின் தலைவராகஇருந்தார். தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு டிஜிபியாக  இதுவரை உளவுப்பிரிவை ஏடிஜிபி மட்டத்திலான அதிகாரிகளே கவனித்து வந்தனர். இவர்தான்  முதல் முறையாக உளவுப் பிரிவின் தலைவர் பதவியில் டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நெருங்கிய கூட்டம் இவருக்கு எதிராக பற்ற வைத்தனர். இதனால் மண்டபம் அகதிகள் முகாம் இன்சார்ஜ் ஆக நியமிக்கப்பட்டு, வெறும் ஜீப் மற்றும் 10 போலீஸ்காரகளுடன் பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் அலெக்ஸாண்டருக்கு 8 மீண்டும் முக்கியத்துவம் தந்து அழைத்தார்  ஜெயலலிதா.

தமிழக குற்றப்பிரிவு டிஜிபியாக அவரை நியமித்தார். மேலும் சீருடைப் பணியாளர் (போலீஸ் செலக்ஷன்) தேர்வு வாரியத்தின்தலைவராகவும் ஆக்கினார். இந்தப் பணிகளைச் செய்து கொண்டே முதல்வருக்கு முக்கியமான ஆலோசனைகளையும் வழங்கிவந்தார் அலெக்ஸாண்டர். இந் நிலையில் அவரை உளவுப் பிரிவின் டிஜிபியாக நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதற்கான உத்தரவை உள்துறைச்செயலாளர் ஷீலாராணி சுங்கத்  பிறப்பித்தார். 

உள்துறைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத்தைப் போலவே சங்கராச்சாரியார் விவகாரத்தில் டிஜிபி கோவிந்தின் ஒத்துழைப்பும் அரசுக்குப்பரிபூரணமாகக் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சுங்கத்துடன் சேர்த்து கோவிந்தும் மாற்றப்பட்டார். சங்கராச்சாரியார் விவகாரத்தைக் கையாளும் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் படிப்படியாக கழற்றிவிடப்பட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று ஒரே நாளில் உள்துறைச் செயலாளரும், மாநில காவல்துறைத் தலைவரும் (டிஜிபி) அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட்டது கோட்டை வட்டாரத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குப் பின்னரே அவர் மீண்டும் உளவுப்பிரிவுத் தலைவராக நியமனமானார். இப்போது மாநில டிஜிபியாகிவிட்டார்.

இவரது விசாரனை காலத்தில் சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் சங்கர மடம் மீதான புகார்களில் சிக்கினோரிடம் விசாரணை நடத்துவதற்குபுதிய பங்களா ஒன்றை காஞ்சிபுரம் போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர். சங்கரராமன் கொலை வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதவிர சங்கர மடத்தில் நடந்தபல மர்ம சாவுகள் குறித்த புகார்களும் வெளிக் கிளம்பி வருகின்றன. இதேபோல பாலியல் புகார்களும் வெளியாகின.

மத்திய அரசின் அழுத்தம் அதிகமாக இருந்தபோதும் முதல்வரின் ஆலோசனை பெற்று  சிறப்பாக செயல்பட்டார்.  நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்றார். ஓய்வுபெற்ற பின் DGP நடராஜை தொடர்ந்து இவரும் அ தி மு க வில் சேர்ந்தார்.  ஆனால் ஜெயலலிதா இறந்து விட்டதால் அரசியலில் அக்கறை காட்டவில்லை. 

இலவசமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான இறுதி தேர்வான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வது எப்படி? என்ற மாதிரி interview நடத்தி பயிற்சி அளிக்கிறார். முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் தனது ஒவ்வொரு விலைமதிப்பற்ற பேனாவைப் பற்றியும் சில சுவாரஸ்யமான கதைகளை விவரிப்பார். அவர் தனது சேகரிப்பின் எண்ணிக்கையை உண்மையில் வைத்திருக்கவில்லை என்றாலும், ஒரு பேனா எப்போது காணாமல் போகிறது என்பது அவருக்குத் தெரியும். 

"நான் வீட்டை தலைகீழாக மாற்றுகிறேன்," என்று அலெக்சாண்டர் சிரிக்கிறார். பார்க்கர் 51, ஷீஃபர், கிராஸ், வாட்டர்மேன் மற்றும் ST டுபான்ட் ஆகியவை அவரது மதிப்புமிக்க உடைமைகளில் சிலவற்றை உள்ளடக்கிய வழக்குகளில் அடங்கும் - மேலும் அவை அனைத்தும் அவரது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன.

பார்க்கர் 51 பேனாக்கள் மீதான அவரது மோகத்தைத் தூண்டியபோது அவருக்கு ஐந்து வயது. “எனது தந்தை கொழும்பிலிருந்து ஒரு பேனாவைக் கொண்டுவந்தார், அதை நான் இழுத்து திறக்க முயற்சித்தேன். நான் தவறுதலாக அதை முறுக்கிவிட்டு, சுத்த பயத்தில் உடனடியாக அதை திரும்பப் போட்டேன். என் தந்தை கண்டுபிடித்தார், நான் ஒரு சத்தம் பெற்றேன், ”என்று அவர் நினைவு கூர்ந்தார். ஆனால், பரீட்சைகளின் ஊடாகவும், பொலிஸ் சேவையில் நுழைந்தபோதும் அவருடன் இணைந்து கொண்டது இந்தப் பேனாதான். "இது எனக்கு விசேஷமாக இருந்தது...என்று 1970-பேட்ச் டாப்பர் கூறுகிறார்.

இவரது துணவியார் சென்னையில் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர்.டாக்டர். சிந்தியா அலெக்சாண்டர் குழந்தை பாக்கியம் எளிதில் கிட்டாதவர்கள் இவரது ஆலோசனை பெற்று  மக்கட் செல்வம் கிடைக்க பெருகின்றனர்.

- தேன்வளன்@ Joemel Fernando

பண்பாட்டில் சிறந்த பரதவர் 2


ஓவியர் தாமஸ் ஜெயராஜ் பெர்னாண்டோ 


அது, 1974-ம் வருஷம். சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு என் மனைவி, பிள்ளைகளோட கிளம்பிப் போனேன். ட்ரெயின் மணியாச்சி ஜங்ஷன்ல கொஞ்ச நேரம் நின்னுச்சு. அந்த நேரத்துல ட்ரெயின்ல இருந்து இறங்கி, என் பசங்களை நான் புகைப்படம் எடுத்தேன். 

அப்போ அடுத்த ட்ராக்குல ஒரு ட்ரெயின் போய்க்கிட்டிருந்துச்சு. போன ட்ரெயின் கொஞ்ச நேரத்துல சட்டுனு நின்னுடுச்சு. அந்த ட்ரெயின்ல இருந்து ஒரு மிலிட்டரி ஜவான் இறங்கி நேரா என்கிட்ட வந்தார். என் கையைப் பிடிச்சு இழுத்துக்கிட்டுப் போனார். நான், `எங்கே கூப்பிடுறியோ வர்றேன். முதல்ல கையை எடு'னு ஆங்கிலத்துல சொன்னேன்.

நான் பேசின ஆங்கில வார்த்தைங்க அந்த ஜவானுக்கு உறைச்சிருக்கணும். கையை எடுத்துட்டார். அப்போதான் கவனிச்சேன். அது ராணுவ வீரர்கள், தளவாடங்களை ஏத்திக்கிட்டுப் போற பிரத்யேக ட்ரெயின்கிறதை. ஜவான், நேரா கமாண்டர்கிட்ட என்னைக் கூட்டிட்டுப் போனார். அவர் கேமராவை வாங்கி, அதுல இருந்த ஃபிலிம் ரோலை மட்டும் எடுத்துக்கிட்டு, கேமராவை கொடுத்துப் போகச் சொல்லிட்டார். குழந்தைங்களைப் படம் எடுக்குற ஆர்வத்துல மிலிட்டரி ட்ரெயின் போனதை நான் கவனிக்கலைனு அவர் புரிஞ்சிக்கிட்டார்.

இந்தச் சம்பவத்துல ஜவானைத் தோளிலிருந்து கையை எடுக்கச் சொன்னபோது வந்த கோபம்... கமாண்டர் ஃபிலிம் ரோலைப் பிடுங்கும்போது, `வேற என்ன பண்ண முடியும்'கிற ஒரு நிதானம். இந்த மனப்பான்மை கடவுள் கொடுத்தது. இத்தனை களேபரங்களும் முடிஞ்சு, நான் என் கூபேக்கு வந்தா ட்ரெயின் அதுவரைக்கும் நின்னுக்கிட்டு இருந்துச்சு. அதுக்குக் காரணம் `காளி மார்க் சோடா கம்பெனி'யின் அதிபர் ராஜேந்திரன்தான். அவர் என் ஓவியங்களின் ரசிகர். `ஓவியர் ஜெயராஜை மிலிட்டரிகாரங்க அழைச்சிக்கிட்டுப் போறாங்க...  அவர் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுங்க’னு கார்டுகிட்ட சொல்லியிருக்கார். கார்டோ, `நானும் அவர் ஓவியங்களின் ரசிகர்தான் சார்’னு சொல்லியிருக்கார். இப்படி நமக்கு நெருக்கடியான நேரங்கள்ல எங்கிருந்தோ உதவி கிடைக்குமில்லே? அப்போல்லாம் இறைவனுக்கு நன்றி சொல்லிப் பழகிக்குவேன். அதுதான் என்னை இவ்வளவு உயரத்துக்குக் கொண்டு வந்ததுனு நினைக்கிறேன்.  

பிறப்பால் நான் கிறிஸ்துவன். சென்னையில ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாமல்  சர்ச்சுக்குப் போவேன். தூத்துக்குடி போனா, பனிமய மாதா கோயிலுக்கும், திரு இருதய ஆண்டவர் கோயிலுக்கும் போகாம வர மாட்டேன். எப்போ சர்ச்சுக்குப் போய் ஜெபம் பண்ணினாலும், ஒரே ஜெபம்தான், `எல்லாரும் நல்லாயிருக்கணும்'னு வேண்டிக்குவேன். நேத்திக்கு இன்னிக்குன்னு கிடையாது... என்னிக்குமே ஒரே பிரேயர்தான்.

எல்லாரும் `நீங்க ஏன் உங்களுக்குனு எதையும் கேட்க மாட்டேங்கிறீங்க?’னு கேட்பாங்க. `எல்லாரும் நல்லா இருந்தா, நிச்சயம் நாமும் நல்லா இருப்போம்ங்கிற நம்பிக்கைதான்’னு சொல்லிடுவேன். மத்தபடி பைபிளெல்லாம் அதிகம் படிச்சது கிடையாது. ஆனா, பைபிள்ல சொல்லி இருக்கிறபடி நடக்கணும்னு என்னால முடிஞ்ச அளவு முயற்சி செய்யுறேன். என்று தனது கடவுள் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். நம்ம ஊரு ஜெ...

நான் பிறந்தது தூத்துக்குடி. படிச்சது வளர்ந்ததெல்லாம் மதுரையில. அமெரிக்கன் காலேஜ்ல பி.ஏ பொருளாதாரத்தை 1958-ம் வருஷம் படிச்சு முடிச்சேன். சின்ன வயசுல இருந்தே படம் வரைவேன்.  எப்போது என்று சொன்னால் நான் மிகைப்படுத்துவது போல இருக்கும். மூன்று வயதிலேயே நான் படம் வரைய ஆரம்பித்து விட்டேன். சுவரில், காகிதத்தில் கார், பஸ், பொம்மை என்று ஏதாவது வரைவேன். என் அப்பா அதைப் பார்த்துவிட்டு, பையன் ஏதோ கிறுக்கியிருக்கான் என்றில்லாமல் ஊக்குவிப்பார். இப்படி இருந்தா நல்லா இருக்கும், இப்படி வரை என்றெல்லாம் சொல்வார். வீட்டுக்கு வருபவர்களிடம் காட்டுவார். என்னுடைய வளர்ச்சியில் அவருடைய பங்கை மறக்க முடியாது. 

பின் மதுரை சேதுபதி ஹைஸ்கூல், அமெரிக்கன் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும்போது ஓவியப் போட்டிகளில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். நண்பர்களோடு சேர்ந்து ‘சிற்பி’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தியிருக்கிறேன். அதில் நிறையச் சிரிப்பு வெடிகள், படங்கள் வரைந்திருக்கிறேன்.

அப்பாவுக்கு மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றலானது. குடும்பத்தோடு சென்னைக்குப் போனோம். நான் படித்துவிட்டு வேலை தேடும் முயற்சியில் இருந்தேன். அப்பா என்னை கூப்பிட்டு, "நீ குமுதம், விகடன் பத்திரிகைகளைப் போய்ப் பார். உன் படத்தையெல்லாம் கையோடு எடுத்துக் கொண்டு போய்க் காட்டு. வாய்ப்புக் கிடைக்கும்" என்றார். அங்கேயெல்லாம் என்னை உள்ளே விடுவார்களா என்றே எனக்குத் தயக்கமாக இருந்தது. "இதோ பார், முடியும் என்று நினைத்தால் எதுவும் முடியும். முடியாது என்றால் முடியாது. மதுரையைவிட இங்கு வாய்ப்புகள் நிறைய. முயற்சி செய்" என்றார். 

நான் குமுதம் பத்திரிகைக்கு ஓவியங்களை எடுத்துக் கொண்டு போனேன். எஸ்.ஏ.பி., ரா.கி.ரங்கராஜன் இருவரையும் பார்த்தேன். எஸ்.ஏ.பி என்னிடம் "ரஃப் ஸ்கெட்ச்ன்னு சொல்றீங்க. ஆனா பத்திரிகைக்குன்னு வரைஞ்ச மாதிரி நல்ல க்வாலிட்டியா இருக்கே" என்றார். பின் ரா.கி. ரங்கராஜனிடம் "இவர்ட்ட நாம நேத்து பேசிட்டிருந்தோமே உங்களோட அந்த சிறுகதையைக் கொடுத்து வரையச் சொல்லுங்க" என்றார்.

ரங்கராஜனுக்கு ஒரே சந்தோஷம். அவருக்குச் சிரித்த முகம். ரொம்பப் பெருந்தன்மையான மனிதர். ஒளிவு மறைவு இல்லாதவர். அவர் பேச்சில் ஒரு நகைச்சுவை இருக்கும். பிறரை ஊக்குவிப்பதில் ரொம்ப ஆசை கொண்டவர். சிறுகதையைக் கொடுத்தார். நானும் வரைந்து கொடுத்தேன். கோட்டோவியம் தான். அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

அக்டோபர் 10, 1958 இதழில் அந்த ஓவியம் வெளியானது. என் முதல் ஓவியமே ரா.கி. ரங்கராஜன் சார் கதைக்கு அமைஞ்சதில் எனக்கு ரொம்பப் பெருமை. பத்திரிகைகளுக்கு நான் வரைவேன் என்றோ, என்னால் முடியும் என்றோ நான் நினைத்தே பார்த்ததில்லை. 22 வயதில் தொடங்கிய அந்தப் பயணம் இன்றும் தொடர்கிறது. 

ஒருமுறை காஞ்சிப் பெரியவர் என்னை வரச் சொல்லி மகாபாரதத்துலேருந்து, அஞ்சு காட்சிகளைப் படம் வரையச் சொன்னார். வரைஞ்சு கொடுத்துட்டு வந்தேன். அதுக்காக என்னைப் பாராட்டி ஒரு தங்கக்காசும், ருத்ராட்ச மாலையும் கொடுத்தார். அந்த மாலையைத்தான் எங்க வீட்டு வேளாங்கண்ணி மகதா சிலைக்கு அணிவிச்சிருக்கேன். அந்தச் சிலை எங்க குடும்ப நண்பர் டைரக்டர் மகேந்திரன் வேளாங்கண்ணி போயிட்டு வந்தபோது அன்போட பரிசா கொடுத்தது. 

மகேந்திரன் சாருக்கு என் ஓவியங்கள் ரொம்பப் பிடிக்கும். அவரும் என்னை மாதிரியே மதுரை அமெரிக்கன் காலேஜ்ல படிச்சவர். அவர் `நண்டு'னு ஒரு படம் டைரக்ட் பண்ணினார். அப்போ அவரோட குழந்தைகளை எங்க வீட்டுலதான் விட்டுட்டுப் போனார். அவர் குழந்தைகளும் எங்க குழந்தைகளும் நல்ல ஃபிரெண்ட்ஸ். பசங்களைக் கூட்டிக்கிட்டு அவர் காரை எடுத்துக்கிட்டு பீச், மகாபலிபுரம்னு போயிட்டு வருவோம். என்னோட மாருதி சின்ன கார்ங்கிறதால அவரோட அம்பாஸிடர்ல சுத்தி வருவோம். 

இயக்குநர் மகேந்திரன் என்னிடம் நான் ஒரு படம் எடுக்கப் போகிறேன். கதாநாயகிக்குப் புதுமுகத்தைப் போடலாம்னு நெனக்கிறேன். எந்த முகம் சரியானதாக இருக்கும் என்று சொல்ல்லுங்கள் என்று கூட்டிச் சென்றார். ஏவி.எம். ஸ்டூடியோவில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கமல்ஹாசனைச் சந்திக்க சுஹாஸினி வந்திருந்தார். அவர் கமலுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த நான், யார், யாரையோ நாயகியாக்குவதை விட இந்தப் பெண் பொருத்தமானவராக இருப்பார் என்று மகேந்திரனிடம் சொன்னேன். மஹேந்திரனும் ஒப்புக் கொண்டார். 

அப்போது சுஹாசினி கேமரா அசிஸ்டெண்டாக இருந்தார் என்று நினைவு. மகேந்திரன் பேசி அவரைச் சம்மதிக்க வைத்தார். நான் அதில் காஸ்ட்யூம் டிசைனர். அதில் சுஹாசினி அணிந்த காஸ்ட்யூம் எல்லாம் என் மகள் ஹில்டா போடுவதின் மாடல்கள்தான். அந்தப் படம் நல்ல வெற்றி. அதேபோல ரஜினி நடித்த ‘ஜானி’ படத்திலும் காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றினேன். ரஜினியைச் சந்தித்த மகேந்திரன், "இவர்தான் உங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனர், ஓவியர் ஜெயராஜ்" என்று அறிமுகப்படுத்தினார்.

 அதற்கு ரஜினி, "நல்லது சார். மத்தவங்களவிட ஒரு ஓவியருக்கு நல்லா காஸ்ட்யூம் டிசைன் செய்யத் தெரியும். ஓவிய அனுபவமும் நிறைய இருக்கும். இவரையே வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார். ரஜினி அணிந்த ஆடைகளில் "Music the life giver" என்று நான் போட்டிருந்தது எல்லாருக்கும் பிடிச்சிருச்சு. அது இசை சம்பந்தப்பட்ட படம்.

ஜெயராஜ்... 50 ஆண்டுகால தமிழ்ப் பத்திரிகையுலகில் தவிர்க்க முடியாத பெயர். நட்சத்திர ஓவியர். ஒரு கட்டத்தில் இவர் வரைந்த ஓவியங்கள் 47 பத்திரிகைகளில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த அளவுக்கு ஓவியங்களை வரைந்து தள்ளியிருக்கிறார். `கறுப்பு வெள்ளை ஓவியம்' என்றால் வரைவதற்கு அரை மணி நேரமும், `வண்ண ஓவியம்' என்றால் முக்கால் மணி நேரமும் ஆகுமாம். சின்னக் குண்டூசி முதல் பெரிய பெரிய பொருள்கள்வரை அத்தனையையும் செய்நேர்த்தியோடு வீட்டில் அழகுற வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள், இவரும் இவரது துணைவியார் ரெஜினாவும். 

இந்தப் பேனா, இந்த மேஜை, இந்தத் தூரிகை, இந்த வண்ணங்கள் யாவும் கடவுளின் கருவிகள் என்றுதான் நினைக்கிறேன். என்று கூறினார் தமிழ் பத்திரிகை? உலகின் ஜாம்பவான் ஓவியர் ஜெ... யார் மனதையும் புண்படுத்தாதவர், எப்போதும் புன்சிரிப்போடு இருப்பார், ஜெயராஜ்.  புது வகை சித்திரங்களை அறிமுகப்படுத்திய ஜெயராஜ் வரைய ஆரம்பித்து 60 வருடங்கள் நிறைந்துவிட்டன. பத்து லட்சத்திற்கும் மேல் ஓவியங்கள், ஏராளமான விருதுகள்... பத்திரிகைகளை வாங்கும் தமிழர் இல்லங்களில் ஜெ... ஓர் அடையாளம்.

இன்னொரு அற்புதமான விஷயம், கலைஞரைச் சென்று பார்த்தை பற்றி கூறுகிறார் : அவர் மாதிரி கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்க முடியாது. என்னை நண்பன் மாதிரி பக்கத்தில் உட்காரவைத்து, எழுதப்போகிற வரலாற்றுத்தொடருக்கு எப்படி படம் புலி பண்டாரக வன்னியன்’, ‘குறளோவியம்’, ‘தொல்காப்பியம்’, ‘ரோமாபுரிப் பாண்டியன்’ என அனைத்து தொடர்களுக்கும் வரையச் சொன்னார். பாராட்டி தட்டிக்கொடுத்தார். 1962ல் எங்களுக்குத் திருமணம் நடந்தது. ரெஜினா என் வாழ்வில் கிடைத்த பாக்கியம். அவள் அன்பை பெரிதாக வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

வரைந்து காட்டவும் முடியாது. எனக்கு அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என பெரும் சொந்தமுண்டு.  ஒருவரிடமும் சிறு பிணக்கில்லை. என்னை விடவும் ரெஜினா அவர்களை அன்பில் நனைப்பாள். அவளுக்கு அன்பு செலுத்துவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. எங்கள் அன்பிற்கு சாட்சியங்களாக ஹில்டா, டிஸ்னி இருக்கிறார்கள்.

திருமணம் ஆன புதிதில் அவளைப் பார்க்க தூத்துக்குடி போவேன். நான் தெரு முனையில் சூட்கேஸுடன் வரும்போதே ஓடிவந்து நடுரோட்டில் என் கழுத்தைக் கட்டிக் கொள்வாள். ‘என்னடா நடக்குது இங்கே’ என்பதுபோல அனைவரும் பார்ப்பார்கள். எனது எல்லா வெற்றிக்கும் காரணம் என் மனைவிதான். எனக்கு உதவியாக இருப்பது, பிரஷ் எடுத்துத் தருவது, தேவையானதை வாங்கி வைப்பது, கதைகளை படித்துக் காட்டுவது, எதை எப்போது, எந்த இதழுக்கு அனுப்புவது என்று ஒழுங்குபடுத்துவது என்று எல்லாப் பணிகளையும் செய்வார்.

 அதுமட்டுமல்ல; நான் வரையும் ஓவியங்களைச் சரிபார்த்து, "இது இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும்;" "இது அதிக கவர்ச்சியாக இருக்கிறது. சரியில்லை; இதைக் கொஞ்சம் மாற்றினால் இன்னும் பெட்டராக இருக்கும்" என்றெல்லாம் ஆலோசனை சொல்வார். நானும் உடனே மாற்றி விடுவேன்.  இவளுக்கென்ன தெரியும். இவள் ஆர்டிஸ்ட்டான நம்மைக் குறை சொல்வதாவது என்றெல்லாம் நான் நினைத்திருந்தால் அன்றே நான் தோற்றுப் போயிருப்பேன். ஆலோசனை கூறும் மனைவியின் கருத்துக்கு, ஒரு ரசிகையின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டதால்தான் நான் இன்று நாலு பேர் பாராட்டும் அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறேன்.

ஜெயராஜ் எந்தக் கல்லூரியிலும் போய் ஓவியம் கற்கவில்லை. இவர்தான் குரு என்று சொல்லிக் கொள்கிற மாதிரி யாரும் இல்லை. ஒற்றைச் சொல்லில் சொன்னால் ‘சுயம்பு’. தினத்தந்தி, ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், அமுத சுரபி, குங்குமம், சாவி, ராணிமுத்து, தென்றல் போன்ற பிரபல இதழ்களுக்கும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கில மொழிகளிலும் வெளிவந்த 200க்கும் மேற்பட்ட பத்திரிகைகளுக்கும் மூச்சு விட நேரமில்லாமல் 60, 70களில் வரைந்து கொடுத்து ரெக்கார்டு ஏற்படுத்தியவர்.

தமிழ்நாடு பாட நூல்கள், ஓரியண்ட் லாங்மென், ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி, அறிவொளி இயக்கம், குடும்பக் கட்டுப்பாடு, எய்ட்ஸ் விழிப்பணர்வு, சாம்பா பப்ளிகேஷன்ஸ் பாட நூல்கள், ஒய்.ஆர்.ஜி.கேர் போன்ற மக்கள் விழிப்புணர்வு ஓவியங்கள் என கணக்கில்லாமல் தீட்டியவர்.

அகிலன், லட்சுமி, கவிஞர் கண்ணதாசன், கலைஞர், சுஜாதா, சிவசங்கரி, புஷ்பா தங்கதுரை, இந்துமதி, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திரகுமார் போன்ற 400க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளுக்குத் தன் ஓவியங்கள் மூலம் உயிர் கொடுத்தவர்.

சிறுவர்களுக்காக நான் வரைந்ததில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது Oxford Dictionary for Children. அதற்குப் படம் வரைந்து 30 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல இடங்களில் அது நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. 

ஓரியண்ட் லாங்க்மனுக்கு வரைந்திருக்கிறேன். குமுதத்தில் சுஜாதா எழுதிய ‘நடுவானத்தில்’ என்ற சித்திரக்கதைத் தொடருக்கு நான் வரைந்ததைப் பலரும் பாராட்டினர். ஃபாரின் ஸ்டேண்டர்டுக்கு இருக்கிறது என்றார்கள். ஒரு எழுத்தாளனுக்கு, ஓவியனுக்கு முதன்முதலில் பாராட்டு விழா நடத்தியதே சாவிதான். சோழா ஷெரட்டனில் என்னையும் சுஜாதாவையும் அவர் கௌரவப்படுத்தினார். அதை என்னால் மறக்கவே முடியாது.

சாவி அவர்களோடு இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், அமெரிக்கா, ஜெர்மனி எனப் பல நாடுகளுக்குப் போயிருக்கிறேன். ஒருமுறை பிரான்ஸ் செல்வதற்காக விசா நேர்காணலுக்குப் போயிருந்தோம். விசா அதிகாரி ஒரு மாதிரி ரஃப் அண்ட் டஃப் ஆக இருந்தார். விசா கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது. அவரோடு நான் பேசிக் கொண்டிருந்தபோதே கீழே மேசைமீது அவரது உருவத்தை வரைந்து கொண்டிருந்தேன். 

"நான் உன்னோடு பேசிக் கொண்டிருக்கிறேன். நீ கீழே ஏதோ செய்து கொண்டிருக்கிறாயே" என்று கோபத்தில் கத்திவிட்டு அதை வாங்கிப் பார்த்த அவர் சிரித்து விட்டார். சூழ்நிலை மாறியது. எங்களுக்கு விசாவும் கிடைத்தது. அந்த ஓவியத்தை அந்த அதிகாரியிடமே கொடுத்துவிட்டேன். சாவிக்கு இதில் ஒரே சந்தோஷம். ஓவியனால் முடியாத ஒன்று, அவன் ஓவியத்தால் முடிந்ததே என்று எனக்கும் சந்தோஷம்தான்.

ஜெயராஜுக்கு ஒரு விபத்தில் வலது கை எலும்பு முறிந்து விட்டதால் சிலகாலம் இடது கையால் படம் போட்டிருக்கிறார். கொஞ்சம்கூட வித்தியாசம் தெரியாமல் இருக்கும் அந்த நேர்த்தியை சாவி மிகவும் பாராட்டியிருக்கிறார். குங்குமம் இதழுக்காக ஒருமுறை காலாலேயே படம் வரைந்திருக்கிறார். மௌத் ஆர்கன் வாசிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். 

• கலைஞரின் முரசொலி அறக்கட்டளை பொற்கிழி தந்துள்ளது.

• மலேசியாவில் தூரிகை மன்னன் பட்டம்

• விஜிபி விருது, வாஷிங்டன் டி.சி.,யில் ஓவியச் செம்மல் பட்டம்

• சீதாப்பாட்டி- அப்புசாமி அறக்கட்டளை விருது.

• தூத்துக்குடி நகர மக்கள் இவருக்கு ‘ஓவியச் சக்கரவர்த்தி’ என்ற சிறப்புப் பட்டம் தந்துள்ளனர்.

(பல்வேறு பத்திரிகை பேட்டிகளில் இருந்து தொகுக்கப்பட்டது.)

தேன் வளன் என்கிற ஜோமெல்
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com