Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

தொலைக்காட்சியில் வேம்பாறு

வரும் சனிக்கிழமை 2.4.2016 அன்று இரவு 9.00 மணியளவில் வசந்த் தொலைக்காட்சியின் மண் பேசும் சரித்திரம் நிகழ்ச்சியில் கைவிடப்பட்டு சிதைந்து போன மீனாட்சி அம்மையின் ஆலயம், மண்ணில் புதைந்த சப்பரமடத்தின் கதை, வேம்பாற்றின் முதல் கத்தோலிக்க ஆலயம், பண்டைய வேம்பாற்றின் புனித சவேரியார் மற்றும் தமிழின் அச்சுத் தந்தை ஹென்றிக் ஹென்றிக்கஸ் பாதிரியாரின் பணிகள், 300 ஆண்டுகளுக்கு முன் முத்து சலாபத்திற்காக மன்னார் சென்று அங்கு பலுகி பெருகிய கதை எனப் பல அரும் பெரும் வரலாற்று பதிவுகள் ஒளிபரப்பப்படுவதாக இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ச்சி ஒளிபரப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.... வேம்பாறு குறித்த வரலாற்றுப்பதிவுகள் அடுத்த வாரம் (9.4.2016)  ஒளிபரப்பப்படுகிறது...... தவறாமல் கண்டு நம் வரலாற்றை அறிவோம்.... பெருமிதம் கொள்வோம் .....நாமும் வேம்பாத்தான் என்று.....


Ancient and Medieval ports of the Gulf of Mannar Coast


Article

Ancient and Medieval ports of the Gulf of Mannar Coast,  East coast India and their Maritime Connections across Indian Ocean Countries.

Prepared By: 

N. Athiyaman
Department of Maritime History and Marine Archaeology,
Tamil University
Thanjavur 613010, India

நீச்சலின் பயன்கள் :


1. நீச்சல் என்பது ஒரு வகையான கலை மட்டுமலல நல்ல உடற்பயிற்சியும் தான்.
2. தினமும் 1 மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்தால் உடலில் உள்ள ஊளைச் சதைகள் குறையும்.
3. கை, கால் மற்றும் தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறும்.
4. நன்கு பசி எடுக்கும். கை, காலை குடைச்சல் மற்றும் மூட்டு வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
5. இரத்த ஓட்டம் சீராகிறது.
6. நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.
7. நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.
8. சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.
9. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க நீச்சல் உதவுகிறது.
10. ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப்பகுதிகளும் இயங்குகிறது.

நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க முடியும்

நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது. மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.

வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

1. தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

2. நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.

3. நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கைகால் களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

எனது வேண்டுகோள் :

குழந்தைகள் படிக்கும்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கண்டிப்பாக கற்றுத்தரவேண்டும். நீச்சல் கற்றுத்தருவதன் மூலம் உடல் நலம் நலன்பெறும்.
நன்றி:சதீஷ்,சங்கவி.

சிலாவத்துறை முத்துக்குளித்தல் வரலாறு


முத்துக்குளித்தல்(Pearl hunting) அல்லதுமுத்தெடுத்தல் அல்லது முத்து வேட்டை என்பது கடலின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் முத்துச் சிப்பி மெல்லுடலிகளிலிருந்து முறையான மூழ்குதல் பயிற்சி மூலம் முத்தினை எடுத்து கடலின்மேற்பரப்பிற்குக் கொண்டு சேர்க்கும் முறையாகும்.இவ்வாறு சேகரிக்கப்படும் இயற்கை முத்துகள் விலை மதிப்பு மிக்க ஒன்பது இரத்தினங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

சிலாவத்துறை முத்துக்குளித்தல் வரலாறு

அல்லிராணி கோட்டை 
எகிப்தியப்; பேரழகியும், அரசியும் ஆகிய ‘கிளியோப்பட்ரா காதினிலே’ அணிந்திருந்த காதணியில் முசலிக் கடலில் இருந்து பெறப்பட்ட முத்து பதிக்கப்பட்டிருந்ததாக வரலாறு கூறுகின்றது. இதனால் எமது முசலி பிராந்தியத்திற்கு ஒரு பெரும் புகழாக இருந்தது. போக் 1888 என்பவரின் கருத்தின்படி ஒல்லாந்தரால் 1661, 1667, 1746, 1748, 1749, 1753, 1754, 1768ம் ஆண்டுகளில் இங்கு முத்துக்குளிப்பு இடம் பெற்றுள்ளது.

கௌடில்யரின் கருத்துப்படி கி.மு 3ம் நூற்றாண்டுகளில் இங்கிருந்து பெறப்பட்ட முத்துக்கள் இந்தியாவில் கொடிகட்டிப் பறந்த மகரப் பேரரசுப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏனைய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன என்று அறிய முடிகிறது.13ம் நூற்றாண்டில் காயல் பட்டினம் சிறந்த பொருளாதார சிறப்புடன் விளங்கியுள்ளது. 

மன்னாரில் பெறப்பட்ட முத்துக்கள் இங்கு கொண்டு செல்லப்பட்டு ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. வெனிசிய அறிஞர் மார்க்கோபோலோ சொல்கிறார் 14ம் நூற்றாண்டில் மலையாளக் கரையில் உள்ள யூர்பட்டினம் சிறந்து விளங்கியது. இங்கு அதிகமாக மன்னார் முத்துக்கள் விற்கப்பட்டுள்ளதாக இவர் கூறியுள்ளார்.

மொறோக்கோ யாத்திரிகர் இபுனு பதூதா, தான் இலங்கையில் கரை இறங்கிய போது ஆரியச் சக்கரவர்த்தியின் கட்டுப்பாட்டில் இருந்த முத்துச் சலாபத்திற்கு அண்மையில் உள்ள ‘பட்டாள’ நகரில் மரத்தால் செய்யப்பட்ட அடுக்கு மாளிகையில் தான் தங்கியதாகவும், அண்மையில் முத்துக்கள் குவிக்கப்பட்டிருந்ததையும் அதை அதிகாரிகள் தரம் பிரித்ததையும் , கண்டதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் வளைகுடாவினது முத்துப்படுக்கைகள் (முத்துச்சிப்பிக்கள் காணப்படுகின்ற இடங்கள்) தொடர்பாக கி.பி. 6ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலுள்;ள வரலாற்றுப் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியா, பேர்ஸியா மற்றும் அரபியா ஆகிய நாடுகளிலிருந்துவந்த வர்த்தகர்கள் இந்த முத்துப்படுக்கைகளை உடைமை கொள்வதற்காக சண்டையிட்டும் உள்ளனர்.

1294ஆம் ஆண்டு மார்க்கோ போலோ மன்னார் வளைகுடாவுக்கும் வந்துள்ளதுடன், அறுவடைக்காலத்தில் அங்கு கிட்டத்தட்ட 500 கப்பல்களும் படகுகளும் சுழியோடிகள் மற்றும் வர்த்தகர்களுடன் முத்துக்களைத் தேடி வந்திருந்தாக குறிப்புக்கள் கூறுகின்றன. தாம் உழைத்துக்கொண்டதிலிருந்து 10 சதவீதத்தினை மன்னனுக்கு செலுத்த வேண்டியும் இருந்தது.

காலனித்துவக் காலப்பகுதியின்போது 16ஆம் நூற்றண்டு தொடக்கம் அரசாங்கத்துக்குச் சொந்தமான முத்துப்படுக்கைகள் சுழியோடிகளுக்கும் வாத்தகர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. ஆயினும் 1881ஆம் ஆண்டளவில் முத்து அகழ்வுத்தொழில் 67 வருடங்களாக வெற்றிகரமாக இருந்துவந்தபோதிலும் அடுத்த வருடம் விநியோகிப்பதற்கு சிப்பிகள் இல்லாமல் போனதை அரசாங்கம் அவதானித்திருந்தது. 

1924ஆம் ஆண்டளவில் முத்து அகழ்வுத்தொழிலை ஒழுங்குபடுத்துகின்ற சட்டமொன்றை அமுலுக்கு கொண்டுவந்தது. இருப்பினும் அங்கு முத்துச் சிப்பிகள் எதுவுமே இல்லாதபோது அச்சட்டம் மிகவும் தாமதமானதாகவே வந்திருந்தது.

பிரித்தானியர் மார்ச் 1828 – மே 1832, 1796 – 1887 வரை பாரிய முத்துக்குளிப்பில் ஈடுபட்டனர். (30 தடவை) இதன் ஊடாக 4372985 ஸ்ரேலிங் பவுன் வருமானம் பெற்றுக் கொண்டனர். இதனாலேயே பிற்காலத்தில் முத்துக்குளித்தல் துறை பாதிக்கப்பட்டது.

புரித்தானியரின் வருமானத்திற்கு முத்து பாரிய பங்களிப்பைச் செய்தமையால் அத்தொழிலைக் கண்காணிப்பதற்காகவும், வரி அறவிடுவதற்காகவும் பிரித்தானிய பிரதமரின் மகன் ஆளுனர் ப்ரெட்றிக் நோத் அவர்களால் ‘டொரிக்’ எனப்படும் 3மாடிக் கட்டிடம் சிலாபத்துறை அரிப்பு வீதியில் களிமண் ஓடைக்கு மேற்காகவும், வீதிக்கு தெற்கிலும் கடற்கரைப்பக்கமாக அமைக்கப்பட்டது. இக்கட்டிடம் அமைக்கும் போது கடல் தூரத்தில் இருந்ததாக அறிய முடிகின்றது. இன்று இக்கட்டிடம் கடல் அலையால் மோதப்பட்டுக் கொண்டு அழிவின் விளிம்பில் உள்ளது.

இக்கட்டிடத்தை இப்பிரதேச மக்கள் அல்லிராணிக் கோட்டை எனவும் அழைக்கின்றனர். இக்கட்டிட ஆரம்ப வைபவத்தில் இவரும் குடை பிடித்த வண்ணம் காட்சி தருவதை அங்கு நடப்பட்டுள்ள புகைப்படத்தில் காணக்கூடியதாகவுள்ளது. இக்கட்டிடத்தின் சாயல் கிரேக்க கட்டிட அமைப்பில் உள்ளது.

1960ல் சிலாபத்துறையில் நோர்த் ஸ்டார், கனேடியன் ஆகிய படகுகள் மூலம் இலங்கை அரசு முத்துக்குளித்தலில் ஈடுபட்டது. இதுவே, முசலிப்பிரதேச இறுதி முத்துக்குளிப்பாகும்.

முத்துடன் இப்பிரதேச மக்களுக்கு இருந்த பரிட்சயத்தின் காரணமாக முத்து என்ற சொல் இப்பிரதேச மக்களின் பெயர்களுடனும், கிராமப்பெயருடனும் இணைத்திருப்பதைக் காணமுடிகின்றது. (உ-ம்) தங்கமுத்து, பாத்துமுத்து, , முத்துக்குட்டிவிதானையார், முத்து மரைக்கார், முத்து, முத்துச்சிலாபம், முத்தரிப்புத்துறை என்பதனைக் காணலாம்.

முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்த மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, பாலைக்குழி, கொண்டச்சி, சிலாவத்துறை, பொற்கேணி, வேப்பங்குளம், பூநொச்சி, நாலாம் கட்டை, இலந்தைக்குளம், பண்டாரவெளி, மணக்குளம் போன்ற பிரதேசங்களில் உள்ள முஸ்லீம்களில் குறிப்பிட்ட சிலர் கடலுடன் தொடர்புபட்ட அட்டை பிடித்தல்,சங்கு குளித்தல் போன்ற நிகழ்வுகளில் இன்றும் ஈடுபட்டிருப்பதையும் அறியக் கூடியதாக உள்ளது. இதனைப்பார்க்கும் போது அன்று செல்வம் கொளிக்கும் தொழிலாக இருந்த முசலிப்பிரதேச முத்துக்குளித்தல் நிகழ்வு மனக்கண் முன் வருகிறது. 

முத்துக் குளிக்கும் பார்கள் மன்னாரில் மேற்குக் கரைகளில் அதிகம் இருந்து உள்ளன. உதாரணம்: மறிச்சுக்கட்டிபார், கொண்டச்சிபார், அரிப்புபார் சிலாபத்துறைபார். முசலிப் பிரசேத்தில் வருடாவருடம் சித்திரை, வைகாசி மாதங்களில் முத்துக் குளித்தல் நடைபெற்றுள்ளது. இதற்குரிய ஆயத்தங்கள் பெப்ரவரி மாதம் முதல் செய்யப்படுவது வழக்கம். 

இதில்; இத்தொழிலுடன் தொடர்புபட்ட அடிப்படைவசதிகளான மருத்துவ வசதிகள், வாடிகள், ஓய்வு விடுதிகள், களஞ்சிய அறையமைப்பு,கடைகள் இங்கு நடை பெறும் முத்துக்குளிக்கும் அழகிய கைத்தொழிலைப் பார்வையிட உள்ளுர், வெளியூர் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் போன்றோர் குடும்பம் குடும்பமாக வருகை தந்து பார்வையிட்டுள்ளாக அறியக் கிடைக்கிறது.

முத்துச் சேகரித்தல் 

முத்துச் சிப்பிகளுக்கு நான்கு வயதாக இருக்கும் போது பெறப்படுவனவற்றிலேயே அதிசிறந்த முத்துக்கள் காணப்படும். நல்ல தரமான அரிய வகையான மூன்று அல்லது நான்கு முத்துகளை பெறுவதற்கு கிட்டத்தட்ட ஒரு டன் சிப்பிகள் சேகரிக்கப்பட வேண்டும். வருடத்தில் எல்லா மாதங்களிலும் முத்துக் குளித்தல் நடைபெறுவதில்லை. மார்ச் திங்களே இதற்கு உகந்ததாகக் கருதப்படுகின்றது.

முத்தெடுக்கும் முறை 

சிப்பிகளைச் சேரிப்பதற்காக இடுப்பைச் சுற்றி பையொன்றைக் கட்டிக்கொள்வார்கள். நீரில் மூழ்கும் போது சரியான இடம் தென்பட்டதும் பரபரப்பாக முத்துக் களைச் சேகரித்து இடுப்பில் கட்டிச் சென்ற பை போன்ற வலையினுள் போடப்படும். அதேவேளை தோணியில் இருப்பவர் முத்துக் குளிப்பவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.மேலே வந்தவர் தோணியில் இருப்பவரிடம் தான் சேகரித்த முத்துச் சிப்பிகளை ஒப்படைத்து விட்டு சிறிது ஓய்வு எடுத்தபின் மீண்டும் முத்துக் குளிக்கக் குதித்துவிடுவார். முத்துக் குளிக்கும் பணிமுடிவுற்றதும் சிப்பிகளைக் கடற்கரையில் கொட்டி ஏலத்தில் விற்பனை செய்வார்கள். சில நாட்களின் பின்பு சிப்பிகளை ஒவ்வொன்றாகத் திறந்து நன்றாகக் கழுவி முத்துக்களை வெளியில்எடுப்பார்கள்.

முத்தின்வகைகள்:

1. ஆணி,2. கனதாரி, 3. மக்கை, 4. மடக்கு, 5. குறவில்,6. களிப்பு, 7. பீசல், 8. குறல் 9. தூள் 10. ஓட்டு முத்து.

இன்றைய நிலை:

இயற்கைச் சுற்றாடலை சாதாரணமாக மிக அதிகமாகவே மனிதன் பயன்படுத்துகிறான். விலங்கினங்களும் தாவரங்களும் வளரவும் பெருகவும் வேண்டும். ஆயினும்; சிலவேளைகளில் இத்தகைய விலங்கினங்களும் தாவரங்களும் பெருகவும் வளரவும் சந்தர்ப்பமளிக்கப்படாமல் மனிதனால் பிடிக்கப்பட்டு அல்லது அறுவடை செய்யப்பட்டு விடுகின்றன. இவ்வாறு தொடர்ந்து நடைபெறும்போது, அடுத்த தடவை பிடிப்பதற்கோ அல்லது அறுவடை செய்யவோ போதுமானளவுக்கு அவை கிடைக்காதுபோகின்றன. 

இவ்வாறாக நீண்ட காலத்துக்கு மிக அதிகமானளவுக்கு இவை எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தால் இறுதி விளைவாக எதுவுமே எஞ்சியிராமல் அல்லது சொற்ப அளவே எஞ்சியிருக்கும். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக மன்னார் வளைகுடாவின் முத்து அகழ்வுகள் மிக அதிகமானளவுக்கு நடைபெறுவதனை கூறலாம்.

அறிவோடு கூடிய கடல் தொழில்


எந்தவொரு திரைப்படத்திலும் நம்மவர்களின் கடற்புறத்து வாழ்க்கையையும், நம் கடற்தொழிலையும் சரியாக சொன்னதே கிடையாது. எந்த படத்தை எடுத்தாலும் ஏதோ ஆற்றில் மீன் பிடிப்பதை போல ஒரு மணி வலையை எடுத்துக் கொண்டு அதை வீசி மீன் பிடிப்பதை தான் காட்டுகிறார்கள்.

ஆனால் நம் தொழில் எத்துணை சிரமம் மிகுந்தது, அதற்கு எப்படிப்பட்ட அறிவு, திறன் வேண்டும் என்பதை யாருமே சிந்திப்பதில்லை.

எந்த ஒரு நிறுவனத்தை எடுத்தாலும் அவர்கள் செய்து முடிக்க வேண்டிய வேலையை சரியான கால அவகாசம் எடுத்து அதற்கென தனி அட்டவணை தயார் செய்து அதன்படி, திட்டமிட்டு முடிப்பார்கள்.

ஆனால் முன்கூட்டிய திட்டமிடல் எதுவும் இல்லாமல் ஆபத்துகளை எதிர்கொள்ளும் போதே திட்டங்களை உடனுக்குடன் வகுத்து செய்யப்படும் தொழில் எம் கடற்தொழில்.

1. முழுக்கவனம்

கட்டுமரத்தை கடலில் செலுத்தும் போதும் சரி, கரையில் செலுத்தும் போதும் சரி... கடலில் இருக்கும் போது நம் முழுக்கவனமும் நம் கட்டுமரத்தையும் நம்மையும் காப்பாற்றும் வண்ணமே இருக்க வேண்டும்...

உதாரணமாக நள்ளிரவில் கடலுக்கு செல்லும் போது, அலைகள் எழும்பி வருவது அந்தளவுக்கு தெரியாது. அப்படி தெரியாமல் வரும் அலைகளை கவனிக்காமல் சென்றால் மரம் உருட்டி பெரும் சீரழிவை சந்திக்க நேரிடும்..

இந்த நேரத்தில் யாரைப் போய் உதவிக்கு அழைப்பது? எப்படி அழைப்பது? ஆண்டவர் புண்ணியத்தில் கடலுக்கு வரும் மற்ற மரக்காரர்களின் கண்ணில் அகப்பட்டால் மட்டுமே, அவர்களிடம் இருந்து ஓரளவு உதவியைப் பெற முடியும். இல்லையென்றால், அனைத்து சீரழிவையும் தனித்திருந்தே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதோகதிதான்...

இதில் அனுபவமும் கை கொடுக்கும். ஏனெனில் அனுபவசாலிகளுக்கு, எந்த நேரத்தில் எந்த இடத்தில் அலைகள் கிளம்பும் என்று தெரியும். சிலர் அலைகள் கிளம்பாத இடத்தை நோக்கிச் செல்வர். சிலர் ஆழியை எதிர்த்து செல்வர். எது எப்படி இருந்தாலும் முழுக்கவனம் தேவை.. ஏனெனில் எங்கள் படகில் இருக்கும் உபகரணங்களும் உடைமைகளும் பல லட்சங்களை தாண்டும்.

2. திட்டமிடல்

வலை வீசும் (எலக்கும்) இடத்திற்கு (கடலுக்கு) வந்தவுடன் மேலாமறி, கரைமறி பார்த்தவுடன் வலை வீச ஆரம்பிப்பர்.

நாம் வீசும் வலைக்கு எந்த வலையும் குறுக்கிடாதவாறு கண்ணும் கருத்துமாக வலை வீசும் கடலை சீராக பார்த்த உடனே கொடுக்கு பாேயா(முதல் போயா) கடலில் எறியப்படும்.

எச்ச வலையை பொறுத்தவரை முன்பெல்லாம் 50 போயா எச்சவலை தான் அனைவரும் சராசரியாக எடுத்து செல்வர். ஆனால் தற்போதைய மீன்பாட்டின் காரணமாக அது 80 போயா 100 போயா என அதிகரித்துள்ளது.

முதல் போயாவை கடலில் எறியும் போதே 100 வது போயாவுக்கு வரும் இடையூறுகளை சிந்திக்க தொடங்கிவிடுவான் பாரம்பரிய கடலோடி.

100 போயா வலை என்பது சராசரியாக 3 கி.மீ வரை செல்ல கூடியது. வலையை வீசிக் கொண்டு செல்லும் போது திடீரென வேறு வலைகள் குறுக்கிட்டால் பட்டென யோசித்து நீவாட்டுக்கும் காற்றுக்கும் ஏற்றவாறு எந்த வலைக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணம் தன் வலையை மாற்றியமைப்பான். உதாரணமாக நேர்திசையில் வலை வீசிக் கொண்டு செல்லும் போது குறுக்கிடும் வலையை பார்த்தவுடன் உடனே கரைய அல்லது வெலங்க என திசை மாற்றி வலை வீசுவான்.

இந்த திட்டமிடல் என்பது, ஏதோ குருட்டாம்போக்கில் சொல்வதோ அல்லது 3 நாள் கடலுக்கு சென்றவன் 4 வது நாள் சொல்லுவதோ அல்ல. கடலில் ஊறி, கடலை கரைத்துக் குடித்தவனால்தான் மிகச்சரியாக திட்டமிட முடியும்.

குறுக்கிடும் வலையை பார்த்தவுடனே அவனது மூளை நீவாட்டையும், காற்றையும் கணித்து,

அந்த வலை எந்த திசை நோக்கி வீசப்பட்டுள்ளது?

அதன் முதல் போயா எங்கு உள்ளது?

அதன் கடைசிப் போயா எங்கு இருக்கும்?

நமது வலையை எந்த திசையில் போட்டால் அந்த வலை பக்கம் போகாது?

அப்படியே போனாலும் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும்?

அப்படியே விளைவுகள் ஏற்பட்டாலும் அதை நம்மால் சமாளிக்க முடியுமா?

என்று பல கோணங்களில் ஆராயப்பட்டு சரியான கணிப்பு படி வலையானது மேற்கொண்டு வீசப்படும்.

இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால், இத்தகைய ஆராய்ச்சிகளும், கணிப்புகளும் சில வினாடிகளுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

சரியான திட்டமிடல் தான் வலைகளுக்கு சரியான பாதுகாப்பு...

3) உறங்காது அசைபோடுதல்

நாம் நல்ல தெளிவாக நம் வலையை வீசியிருந்தாலும் நமக்கு அடுத்ததாக வீசுபவர்கள் எந்த கோணத்தில் யோசித்து எப்படி வலை வீசுவார்கள் என்று தெரியாது.

நமது வலை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், நாம்தான் அவ்வப்போது குரல் கொடுத்து எச்சரிக்க வேண்டும்.

பொதுவாக நமது இடங்களில் விசைப்படகுகளின் தொல்லை பெரும் தொல்லையாக உள்ளது. கரைக்கடல் என்றும் பாராமல், மண், பாறை என்றும் நினைக்காமல் அப்படியே மடி வைத்து அனைத்தையும் இடித்துத் தள்ளி சேதப்படுத்தி விடுவார்கள்.

இதற்கு விழிப்போடு இருந்து குரல் கொடுத்தால் மட்டும் போதாது.

நமது வலை விசைப்படகு மடியால் அடிபடும் என்று சந்தேகித்த உடனே அவன் பக்கம் சென்று பார்த்து உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு எந்நேரமும் விழிப்போடு இருந்தால் தான் நாம் வீசிய வலையை நம்மால் திரும்ப மீட்கமுடியும்.

4) செயலாக்கம்

செயலாக்கம் என்பது வீசிய வலைகளை வாங்குவது.

அன்றைய நாள் தொழிலை நிர்ணயிக்கும் பகுதி.

கடலுக்கு ஆட்கள் குறைவாக சென்றிருந்தால் காற்று, நீவாடு வலுவாக இருக்கும் சமயங்களில் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் ஐந்து பேர் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு பேர் இருந்தாலும் வீசிய வலையை வாங்காமல் வந்ததாக சரித்திரம் கிடையாது.

ஏனென்றால் "உயிரை விட மானம் பெரிதென வாழ்பவர்கள்"..

வீசிய வலையை வாங்க வக்கற்றவன் என்று உலகம் பழிபோடக் கூடாதல்லவா???

எந்த வலையாக இருந்தாலும் நான்கு பேர் சென்றால் கொஞ்சம் அம்சமாக இருக்கும்.

திட்டமிடாமல் வீசப்பட்ட வலைகள் ஏற்படுத்தும் விளைவுகளை எதிர்கொள்ளும் பகுதி இதுதான்.

சில நீவாட்டுக்கு வலைகள் நன்றாக முறுக்கி கொண்டு வரும்.

சில நீவாட்டுக்கு நமது வலை மற்ற வலையுடன் சேர்ந்து முறுக்கி கொண்டு வரும்.

சில நீவாட்டுக்கு நாம் சரியான கடலில் வலை வீசியிருந்தாலும், வலைகளை பாறைகள் உள்ள கடலுக்கு கொண்டு போய் கிழித்து நாசமாக்கி விடும்.

கடலின் மிக ஆழமான பகுதியில் நீவாடு நன்றாக வலுத்தால், ஒன்றாக போடப்பட்ட வலையை இரு துண்டுகளாக வாங்க கூடிய சூழ்நிலையும் ஏற்படும்.

மொத்தத்தில் கடல் தொழிலை பொறுத்தவரை, நிர்ணயித்த வருமானம் என்று எதையும் சொல்ல முடியாது.

5) ஒழுங்குபடுத்துதல்

சேதப்படுத்தப்பட்ட வலைகளை சீரமைத்து நல்ல நிலைக்கு கொண்டு வருதல்.

கடலில் நீவாடு, நண்டு மற்றும் பேத்தா போன்றவற்றால் பாதிக்கப்பட்ட வலைகளை சரிசெய்து மறுநாள் கடலுக்கு கொண்டு செல்ல தயார்படுத்த வேண்டும்.

இதிலும் மூளையை பயன்படுத்த வேண்டும். கிழிந்த பீத்தலை ( பொத்தல், ஓட்டை) பார்த்து எந்த வகையில் கட்டினால் அதை சீக்கிரம் முடிக்க முடியும் என்றும் ஆராய வேண்டும்.

பீத்தலை மொத்தமாக வெட்டி புது மால்(வலை) வைக்கலாமா?

புது மால் வைப்பதற்குள் இதை கட்டி விடலாமா?

எந்தக் கண்ணியில் இருந்து வெட்ட ஆரம்பிப்பது?

என எதற்கெடுத்தாலும் மூளையை குடைந்து, சிந்தித்து தான் செயல்படுத்த வேண்டும். சும்மா ஏனோதானோ என்று வெட்ட ஆரம்பித்தால் 2 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலை 4 மணி நேரம் எடுக்கும்.

இப்படியாக 30 மணி நேர வேலையை 24 மணி நேரத்திற்குள் முடித்து, அதற்குள் ஓய்வும் உறக்கமும் எடுத்து தொடர்ந்து தொழில் செய்கிறோம்.

கடற்தொழிலுக்கு வலிமையான உடலமைப்பும், நெஞ்சில் உரமும், நல்ல பலமும் இருந்தால் போதாது. கூடவே யோசிக்கும் அறிவும் சிந்திக்கும் திறனும் நிறையவே வேண்டும்.

கடலில் வலுவாேடு இருந்தால் மட்டும் போதாது. அதைப் பற்றிய அறிவோடு இருக்க வேண்டும். அதில் நல்ல தெளிவாடு இருக்க வேண்டும். இவை அனைத்தின் மொத்த புரிதல் தான் எங்கள் தொழிலோடு இருக்கும்.

நாங்கள் வலுவானவர்கள் மட்டுமல்ல....
அறிவானவர்களும் கூட....


பரதவரின் வானியல்


அறிவியல் சார்ந்த நிலையிலேயே பண்டைத் தமிழர் தம் வாழ்க்கை நெறிமுறைகளையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும், மொழியையும் தோற்றி, சீர்படுத்தி, நிலைப்படுத்திப் போற்றி வந்துள்ளனர் என்பதைத் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

எடுத்துக்காட்டாக, பண்டைத் தமிழர் விண்ணியல் (வானவியல்) பற்றி அறிந்து தெளிந்திருந்தனர் என்பதைத் தமிழில் வழங்கும் விண்ணியல் சார்ந்த சில பெயர்களைக்கொண்டே மெய்ப்பிக்கலாம்! அவற்றுள் ஓரிரு சொற்களைக் காண்போம்.

இருள் - இரவு, கருமை; இருளின் கருமையால் எப்பொருளையும் பார்க்க இயலாது. என்ன பொருளென்று அறிய முடியாத பொருள் மயக்கத்தைத் தரும். அந்த இருளையும், மயக்கத்தையும் குறிக்கும் சொல் "மால்'.

வானத்தில் உள்ள முகிலும் அத்தன்மையதே. ஆதலால், "மால்' என்னும் சொல் முகிலையும் குறிக்கும் வகையில் தமிழர் ஆக்கிக்கொண்டனர். அச்சொல்லே வளர்ச்சியுற்று, மால் - மான் - மானம் என்றாகிப் பின் "வானம்' ஆனது. மானம் உலக வழக்கு; வானம் இலக்கிய வழக்கு.

வானம் - கரு முகில்; "ஒல்லாது வானம் பெயல்' (குறள்: 559). கருமுகில் மழையைப் பெய்வதால், அதுவே "மழை'க்கும் பெயரானது. வானம் - மழை; "வானம் வாய்க்க மண்வளம் பெருகுக' இவை சார்ந்த இடத்திற்கு "வானம்' பெயரானது. (மணிமேகலை: 19:149)

வானத்தில் உள்ள நாள்மீன்களையும், கோள்மீன்களையும் பலப்பல ஆண்டுகளாய் உற்று நோக்கியும், நுண்ணறிவால் உண்மை அறிந்தும், தெளிந்தும் வாழ்ந்த தமிழ்ப் புல அறிஞர்கள் ஏழு கோள்களின் பெயரால் ஏழு நாள்களையும், பன்னிரண்டு ஓரை (இராசி) களின் பெயரால் பன்னிரு மாதங்களையும் உலகின் பிற நாட்டாரும் மொழியாரும் வைப்பதற்கு முன்னே வைத்து வானவியல் அறிவைப் புலப்படுத்தியுள்ளனர்

சோதிடம் என்பதற்கும், முந்தையது வானவியல் இது பற்றித் பரவர்களுக்கு நிறையத் தெரிந்திருக்கிறது.

COMPUS எனும் திசைக்காட்டிக் கருவி கண்டு பிடிப்பதற்கு வெகு காலம் முன்பிருந்தே பரவர்கள் மிகவும் பிரபலமான கடலோடிகளாக வணிகர்களாக இருந்து கலங்களை உருவாக்கி உலகம் முழுவதும் சென்று பண்ட மாற்றம் செய்து வந்தனர். அவர்களுக்கு கடல் தாய் போன்றவள்.எப்படி எந்த மரத்தில் கப்பல் கட்டுவது? அதன் பாய்களில் எத்தனை விதம்? பாய்கள் எவ்வாறு அமைப்பது? காற்றின் போக்கும் வேகமும் என்ன? திக்குத் தெரியாத நடுக்கடலில் திசை காண்பது எப்படி? எப்போது புயல் வரும்? எங்கெங்கே சுழல்களும் நீரோங்களும் உள்ளன? எங்கிருந்து எந்த நட்சத்திரத்தில் கிளம்பினால் எப்போது எங்கு சென்றடைய முடியும்? எங்கெங்கு நல்ல குடி நீர் கிடைக்கும்? எத்தனை நாள் பயணத்துக்குப் பிறகு எந்த தீவினை அடையலாம்? என்பதனைத்தையும் வானவியல் துணை கொண்டு தான் கண்டு பிடித்தனர். கப்பல் சாத்திரம், நாவாய் சாத்திரம் என்றெல்லாம் ஒலைச் சவடிகள் நூலாக வெளி வந்துள்ளன. 

“வளி தொழில்”என்பது பரதவரின் கடல் மேலாண்மையைக் குறிப்பது. வளி என்றால் காற்று. எனவே தான் தை மாதத்தின் தொடக்கத்தில் காற்றில் ஏற்படும் மாறுபாடு அவர்களின் மரக்கலங்களை கடலில் கீழை நாடுகளை நோக்கி இயக்க வழிவகை செய்கிறது. இதன் காரணமாகவே தை பிறந்தால் வளி பிறக்கும் என்பது கடலோடிகளுக்கு உரிய சொற்றொடராகத் திகழ்கிறது......





மதுரை மீனாட்சி அம்மன் போற்றி 108

மதுரை மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்தில் பிரார்த்தனைக்காக பதியப் பெற்றிருக்கும் அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள்:

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
பரதவரின் முத்து மகுடத்துடன்
காட்சி தரும் அன்னை மீனாட்சி 
ஓம் அமுதநாயகியே போற்றி
ஓம் அருந்தவநாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி 10

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி 20.

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி 30.

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி 40.

ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி 50.

ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்தவல்லியே போற்றி
ஓம் சிங்காரவல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத்தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி 60.

ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி 70.

ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி 80.

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி 90.

ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மழலைக்கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி 100.

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகு அம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி 108.



வர்ண குல மரபு


சேனையூரின் மத்தியில் அமைந்திருக்கும் வர்ணகுலப் பிள்ளையார் ஆலயம், ஒரு குல மரபின் சாட்சியாய் தலை நிமிர்ந்து நிற்கிறது. மனித குல வரலாறு இன்று குல மரபுக் கதைகளுக்கும் இன வரை முறைகளுக்கும், குடி வழி முறைமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு வருகிறது. வரலாறு குறித்த வரையறைகள் இன்று மாறியுள்ளன.பொதுமைப் படுத்தப் பட்டு எழுதப் பட்ட முறைமை மாறி குழுக்களின் வரலாறு வட்டார வரலாறு என வகைமைகள் மாறியுள்ளன.வட்டார வரலாறு முக்கியப் பட்டுள்ள இன்றய சூழலில் மானிடவியலாளர் பக்கவத்சலப் பாரதி இப்படி கூறுவார்.

''வட்டார வரலாறுஎன்பது குறிப்பிட்ட புவியியல் பரப்பு சார்ந்தபிராந்தியத்துக்கான வரலாற்றை குறிக்கும்.இதில் எண்ணற்ற வரலாற்று கூறுகள் அடங்கியுள்ளன. இத்தகய வரலாறு இடம் பற்றியதாக இருக்கலாம், முக்கியத்துவம் கொண்ட ஆறு மலை குளம் பற்றியதாக அமையலாம், அப்பிரந்தியத்தின் சமூகங்கள் பற்றியதாக இருக்கலாம், சமூக நாயகர்கள் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள், விடுதலை வீரர்கள், மதகுருமார்கள் பற்றியதாக அமையலாம். கோயில் விழாக்கள் சாமிகள், வழிபாட்டு மரபுகள், வீர விளையாட்டுகள்பிற பண்பாட்டு நிகழ்வுகள் பற்றியதாகவும் இருக்கலாம்''

எல்லோரும் தங்கள் மூல வேர்களை தேடி அறிவதில் ஆவலாய் இருப்பர்.அதன் வழியே வர்ணகுலம் பற்றி அறிய முற்ப்பட்ட போது ஆச்சரியத் தக்க தகவல்கள் கிடைத்தன.சேனையூரின் பிரதான குல மரபாக நாம் இனம் காண்பது வர்ண குல மரபே ஆகவே நாம் வர்ணகுல மரபின் மூலத்தை தேடிப் பயணிக்க வேண்டியவர்களாய் உள்ளோம்.

வர்ணகுலம் குருகுலம், பரதவர், கரையார், பரவர், பெளரவர், கரவா, பரதர் என வரும் பெயர்கள் ஒரே குலத்தினரை குறிப்பதாகவே உள்ளது என பல்வேறு ஆரச்சியாளர்களின் முடிவாக உள்ளது எம் .டி.ராகவன் போன்ற தொல்லியலாளர்கள் இதனையே நிறுவுகின்றனர்.

வித்துவான் சோ.க..இராமநாதபிள்ளை எழுதிய ''பரத வம்ச விலாசம்'' என்கிற நூல் வற்ணகுலம் பற்றிய பல தகவல் களை இதிகாசங்களுடனும் புராணங்களுடனும் தொடர்பு படுத்தி சொல்கிறது. ''பூர்வ காலத்தில் அஸ்தினாபுரியை ஆண்ட சந்தரவம்ச அரசர்களில் புரூருவன் என்பவரை முதல் தலைமுறையாகக் கொண்டு இருபதாவது தலைமுறையில் தோன்றிய துக்ஷ்யந்த ராஜனிடம் பரதன் என்ற அரசன் தோன்றினான்.

பாகவத புராணம் முதற்பகுதி அத்தியாயம் 21-ம் செய்யுளில், பரதனுக்கு இணையாக இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் என்ற முக்காலத்திலும் மனுநூல் ஆட்சிசெய்த மன்னர் எவருமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே பரதனின் ஆட்சி காலத்திலிருந்து சந்திர வம்சமானது “ பரதவம்சம் ” என்றும், பரதனின் குலத்தவர் “ பரதவர் ” என்றும் அழைக்கப்படலாயினர்

உவின்சலன்துரை அகராதியில், “பரதவர் நெய்த நில மக்களாகிய மீன்பிடி குலத்தவர், பரதன் என்ற அரசனால் இந்தப் பெயர் வழங்கலாயிற்று,” என்று காணப்படுகிறது. 

வீராமுனிவரின் சதுரகராதி, “ பரதவர் நெய்தல் நில மக்கள், ” என்று கூறுகிறது. இலங்கை சுமங்கல சுவாமிகள் இயற்றிய “ ஹித்தியாச வருணநாவ ” என்ற நூலில் பரதர் வம்சத்தினருக்குப் “ “ “ பரவர் ” என்னும் மற்றொரு பெயர் உண்டு என்றும், புதன் மகன் புரூருவனால் “ பெளரவர் ” என்றப் பெயர் பெற்று, வடமொழிச் சொல்லான “ பெளரவ ” என்பதின் தமிழ் வடிவமே “ பரவர் ” என்றும் கூறப்பட்டுள்ளது.

பரதரது பூர்வ சரித்திரம் பாரத இதிகாசத்தில் விஸ்தாரமாய் விவரிக்கப்பட்டுள்ளது. அவ்வம்சத்தின் பாரம்பரிய சரித்திரத்தின் சுருக்கமான வரலாறு கீழ்வருமாறு:

“முதலில் சந்திரன் என்பவன் புதனைப் பெற்றான். புதன் புரூருவனைப் பெற்றான். புரூருவன் ஊர்வசியுடன் கூடி ஆயு என்பவனைப் பெற்றான். ஆயுவுக்கு நகுடன் பிறந்தான். இந்த நகுடன் அரசாண்ட போது பெற்ற மூன்று ஆண் மக்களில் மூத்த புதல்வன் யயாதி ஆட்சி உரிமை பெற்றான். இந்த யயாதி முதல் துக்ஷ்யந்தன் வரையுள்ள 11 தலைமுறை முறையே:

யயாதி – புரூருவன் – ஜனனேஜயன் – பிரசாவன் – சாயதி – சார்வபெளமன் – அரிசிகன் – மதிவான் – திடன் – நீலன் – துக்ஷ்யந்தன்.

துக்ஷ்யந்தன் மகாராஜனுக்குச் சகுந்தலையிடம் பரதன் பிறந்தான். பரதனின் மகன் பெளமன், இவன் மகன் சுகோத்திரன்; இவன் மகன் அஸ்தன். இந்த அரசனால் ஏற்பட்ட நகரத்துக்கு அஸ்தினாபுரம் என்று பெயர். இவனுக்கு நிகும்பன் பிறந்தான். அவனிடம் அரசமீளி பிறந்தான். அவனுக்கு வருணன் பிறந்தான். வருணனிடம் குரு உற்பவித்தான். இந்தக் குரு அரசனால் பரத வம்சத்தினர் “ கெளரவர் ” என்ற பெயர் பெற்றனர். இவன் யாகஞ் செய்த இடத்திற்கும், அரசாண்ட நாட்டிற்கும், குருக்ஷேத்திரம் என்ற பெயர் வந்தது.

குரு அரசனுக்கு பிரதீபனும், அவனிடம் பிறந்த தேவாபி, சந்தனு என்ற இரு மக்களில் மூத்தவன் தேவாபி காட்டில் தவம் செய்யச் சென்றதால், இளையவன் சந்தனு அரசாள உரிமைப் பெற்றான்.

சந்தனு அரசன் முதலில் கங்கை என்ற பெண்ணை மணந்து பீக்ஷ்மன் என்பவனைப் பெற்றான். பின்னர் பரதவம்சத்தின் திலகனாய் விளங்கிய தாசராஜன் புதல்வியும், வியாசரது தாயுமாகிய சத்தியவதியை மணந்து, சித்திராங்கதன் – சித்திரவீரியன் என்ற இரு புதல்வர்களைப் பெற்றான். சித்திராங்கதன் இளமையிலேயே இறந்ததால், சித்திரவீரியனுக்கு காசிராஜனின் இரு புதல்விகளையும் திருமணம் செய்விக்கப்பட்டு முடியுஞ் சூட்டப்பட்டது. இவன் மக்கட்பேறு இல்லாது இறக்கவே, இவனது மனைவிகளிடம் வியாசர் கூடி திருதராக்ஷடிரன் – பாண்டு என்று இரு புதல்வர்களைப் பெற்றார். திருதராக்ஷடிரனுக்கு துரியோதனன் முதலிய நூற்றுவர் பிள்ளைகளாவர். பாண்டுவுக்கு யுதிக்ஷ்டிரன் முதலிய வர் பிள்ளைகளாவர்.

இந்த நூற்றுவர் மற்றுமஅவர் காலத்தில்தான் மகாபாரத யுத்தம் நடந்தது. கூர்ச்சாத்து அரசனான கிருக்ஷ்ணன் பாண்டவர்கட்கு உதவி செய்ததால், பாண்டவரே யுத்தத்தில் வென்றனர்.

கிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ 4400 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது தான் இந்த மகாபாரத யுத்தம். இதற்கு பிறகும் , சில காலம் பரத அரசாட்சி அஸ்தினாபுரத்தில் நிலைத்து வந்தது''.
''மேற்கூறிய சந்திர வம்சத்தினரான பரதரும், மதுராபுரியை ஆண்டு வந்த பாண்டியரும் ஒரே வம்சத்தினர் என்று ,வில்லிபாரதம் கன்னபருவம் 17-ம் நாள் போர்புரிச் சுருக்கம் 106-ம் செய்யுளில் கூறப்பட்டுள்ளது.

பரதரின் தலைநகரான அஸ்தினாபுரியிலிருந்து பாண்டுவின் புதல்வர்கள் வரில் அருச்சுனன் தீர்த்தயாத்திரை செய்தபோது, மதுக்கரை (மதுரை) க்கு அடுத்த பூழி என்ற மணலிபுரத்தை அடைந்து, அங்க ஆட்சி செய்த சித்திரவாகு பாண்டியனின் ஏக புதல்வியை கண்டு அவளை மணங்கொள்ள விரும்பினான். மன்னன் பாண்டியன் தன் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தையை மதுரை அரசாட்சிக்கு உரியதாக்கும் பட்சத்தில், அருச்சுனன் விருப்பத்திற்கு உடன்பாடு தெரிவித்தான். அருச்சுனன் சித்திரவாகு பாண்டியன் மகள் சித்திராங்கதையை மணந்து, பப்புருவாகனன் என்ற மகனை பெற்றுப் பாண்டியனிடம் ஒப்படைத்து, மனைவி சித்திரங்காதையுடன் சென்றான்.”

கி.பி.1735-ம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட வேத அகராதியில், பூரு என்னும் அரசன் முதல் கூன் பாண்டியன் வரை மொத்தம் 364 பாண்டியர்கள் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது.

அருணாசலப் புராணம் வச்சிராங்கத பாண்டியன் சருக்கம் 411-ம் செய்யுளில் கூறப்பட்டது போல, பரத வம்சமும் பாண்டிய வம்சமும் ஒன்று என எவர்க்கும் நன்கு புலப்படும்.

காசி செட்டித்துரை எழுதிய கெஜற்றியர் என்ற ஆங்கில நூலிலும் இதுதான் கூறப்பட்டுள்ளது.

பரத குலத்தவர்க்கு உரிய கொடிகள் 21-ல் மீன் கொடியும் ஒன்று. பாண்டியனுக்கு உரிய கொடியும் மீன் கொடியாகையால், பரதவரே பாண்டியர் என்று அவர்களது துவஜம் (அதாவது, கொடி) சாட்சி பகருகின்றது.
நெய்தல் நிலத் தலைவனே கடற்சேர்ப்பன் என்றும், அவனே பாண்டியன் என்றும், அவனது குலத்தவரே பரதவர் என்றும் சூடாமணி நிகண்டு மக்கட் பெயர்த் தொகுதியிலும் , நாலடியார் – பழமொழி முதலிய சங்கச் செய்யுட்களிலும் கூறப்படுகின்றது.

வீரமாமுனிவர், வின்ஸ்லோ துரை இவர்களின் அகராதிகளில் , நெய்தல் நில மக்களைப் பரதர் என்று காணப்படுகின்றது. எனவே, பரத குலமே பாண்டிய குலமென மயக்கமின்றி தெளிவாகும்.

பரத வம்சத்தைப் பற்றிய மற்றொரு வரலாறு, பதினெட்டுப் புராணத்தில் ஒன்றான பிரமபுராணத்தின் மூன்றாவது காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. அது:

“சக்கரபுரிப் பட்டணத்தில் அரசாண்டு வந்த சுரா பாண்டியன் என்பவனின் புதல்வன் அமிர்தபாண்டியன். இவனுக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளில் மூத்தவன் காந்தவீரிய பாண்டியன். இந்த அரசன் தனது சகோதரர்களுடன் வேட்டையாட காட்டிற்குச் சென்றபோது களைப்புற்றதால், தனது தம்பியான குலசேகர பாண்டியனை தாகத்திற்கு தண்ணீர் கொண்டுவரப் பணித்தான். தண்ணீர் கொணர்வதில் கால தாமதஞ் செய்த தம்பிமீது சினங்கொண்டு, அவனை தங்களை விட்டு நீங்குமாறு கட்டளையிட்டான்.

அக்கட்டளையின்படி, குலசேகர பாண்டியன் தென் பகுதியில் மணவூர் என்னும் இடத்தில் உள்ள சமணராஜன் நகரில் மீன் பிடித்து விற்று ஜீவனம் செய்து வந்தான். இதையறிந்த சமணராஜன் தனது புதல்வி சுலோதையம்மாளை குலசேகர பாண்டியனுக்கு மணமுடித்து, ஆண் சந்ததியில்லாத தனது ராச்சியத்தையும் அவனுக்கே அளித்து ராஜபட்டம் சூட்டுவித்தான். குலசேகர பாண்டியன் மீன்பிடி தொழில் புரிந்தமையால், மீன்கொடி கட்டிச் சந்திர குலத்திற்கு அரசனாய் இருந்து, தனது வம்சத்திற்குரிய பாண்டியன் என்ற பெயர் பெற்று விளங்கினான்.”

மானிடவியல் அறிஞர் *எட்கர் தர்ஸ்டன்* அவர்கள் தான் எழுதிய *“தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்”* (”Castes and Tribes of South India”-(Edgar Thurston – 1909))என்ற ஆய்வு நூலில், *“பரவன்”* (Paravan) என்ற குலத்திற்குரிய மானுட வாழ்வின் பிறப்பு, இறப்பு, கல்வி, வழிபாட்டுச் சடங்குகள், திருமணம், ஆட்சியியல் நிலை ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து விளக்கியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக நூலகக் குழுவின் தலைவரான எட்கர் தர்ஸ்டன், 1885-ல் சென்னை அருங்காட்சியகப் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். மேற்கூறிய நூலின் தமிழாக்கம், தென் கிழக்குக் கடற்கரையைச் சார்ந்த “பரவர்”, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கடற்கரையில் உள்ள துறைமுகப் பட்டணங்களிலும் இலங்கையின் வடமேற்குக் கடற்கரை மாநிலங்களிலும் காணப்படுகின்றனர்.

பரவரின் தோற்றம் பற்றி வழங்கிவரும் வரலாறுகள், *சைமன் காசி செட்டி* எழுதிய *“பரவர்களின் தோற்றமும் வரலாறும்”* என்ற கட்டுரையில் (Origin and History of the Paravars by Simon Casie Chitty – 1873 Journal Roy.As.Soc.IV) கீழ் கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

1) 1735-ல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட *“கிறிஸ்தவ திருச்சபையின் வரலாற்றின்“* ( The Historia Ecclesiastica) ஆசிரியர், பரவர்களை மறைநூல்களில் கூறப்பட்டுள்ள பர்வையம்கள் (Parvaim of the Scriptures) என்று வகைப்படுத்துகிறார். மேலும் பரவர்கள் , சாலமன் அரசர்(King Solomon) காலத்தில் கடற்பயணங்கள் மேற்கொள்வதில் புகழ் பெற்றவர்கள் என்றும் கூறுகிறார்.

2) பரவர்கள் தங்களை *அயோத்தி*யினைச் (Ayodhya) சேர்ந்தவர்கள் எனவும் , மகாபாரதப் போர் நிகழ்வதற்கு முன்னர் யமுனைக் கரையில் வாழ்ந்து வந்ததாகவும் கூறிக்கொள்வார்கள்.

3) பரவர்களிடையே அவர்களது தோற்றம் பற்றிய பல வரலாறுகள் புராணக் கதைகளோடு தொடர்புடையனவாக காணப்படுகிறது.

பரவர்கள் தங்களைக் கடல் தெய்வமான *வருணனின்* வழிவந்தவர்கள் எனக் கூறிக்கொள்வதோடு, சிவன் அசுரர்களை வெல்லப் போர்க்கடவுளான கார்த்திகேயனைப் படைத்தபொழுது சரவணப்பொய்கையிலிருந்து அவனுடன் கூடத் தோன்றிய கார்த்திகைப் பெண்களால் அவனைப் போலவே வளர்க்கப்பட்டவர்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள். கடந்த யுகத்தின் முடிவில் உலகம் முழுவதும் நீரால் மூடப்பட்டு மூழ்கிய போது பரவர்கள் ஒரு தோணியினைக் கட்டியதாகவும், அதில் ஏறிக்கொண்டு பேரழிவிலிருந்து தப்பியதாகவும், பின்னர் நீர்வற்றி மீண்டும் நிலம் புலப்பட்டு தங்களது தோணி தரைதட்டியபோது, அந்த இடத்தில் குடியமர்ந்து அதற்கு *தோணிபுரம்* எனப் பெயரிட்டதாகவும் கூறப்படுகின்றன.

4) பரவர்கள் ஒரு காலத்தில் செல்வாக்கு உடையவர்களாகவும், கடற்பயணம் பற்றிய தங்களது அறிவின்காரணமாக மற்றச் சாதியர் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்களுள் *“ஆதியரசன்”* என்ற பட்டப்பெயர் கொண்ட அரச வம்சம் இருந்துள்ளதாகவும், அதில் சிலர் *“மங்கை”* என்ற பெயருள்ள நகரிலிருந்து ஆண்டதாகவும், இந்நாளில் அது *“உத்தரகோசமங்கை”* என்ற பெயருடன் இராமநாதபுரம் அருகே விளங்குவதாகவும் கூறப்படுகின்றது.

5) *“வலைவீசு புராணம்”* என்ற புராணத்தில் பின்வரும் கதை கூறப்பட்டுள்ளது. சிவனின் மனைவி பார்வதியும் மகன் கார்த்திகேயனும் சொல்லக்கூடாத சில இரகசியங்களை வெளியிட்டதால் தேவலோகத்திலிருந்து வெளியேறும்படி பணிக்கப்பட்டனர். அவர்கள் பல மானிட பிறவிகள் எடுத்த பிறகே மீண்டும் தேவலோகத்தில் அனுமதிக்கப்படலாம் எனச் சாபம் பெற்றனர். பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்கிய சிவன், அவர்கள் குற்றத்திற்கு தண்டனையாக ஒரு மானிட பிறவி மட்டும் எடுத்தால் போதுமானது என்று அவர்களுக்கான தண்டனையைக் குறைத்தார்.

இந்த வேளையில் பரவனின் அரசன் *திரியம்பகனும்* (Triambaka) அவனது மனைவி *வருணவள்ளியும்* (Varuna Valli) புத்திரப்பாக்கியத்திற்காக தவம் புரிந்து கொண்டிருந்த படியால், பார்வதி அவர்களுடைய மகளாகப் பிறந்து திரைசேர்மடந்தை (Tiryser Madente) என்று பெயரிடப்பட்டாள். கார்த்திகேயன் ஒரு மீனாக உருவெடுத்தான்.

வடகடலில் மீனாகத் திரிந்துகொண்டிருந்த கார்த்திகேயன், மிகப்பெரிய மீனாக வளர்ந்து தென் கடலுக்கு வந்து, பரவர்களின் மீன்பிடிக் கலங்களையெல்லாம் தாக்கி வந்தான். பரவர்களின் தொழில் சீரழிந்து வருவதை பரவர்களின் அரசன் *“திரியம்பகனன்”* , அந்த மீனைப் பிடிப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்குத் தனது மகளை மணம்முடித்துத் தருவதாக அறிக்கையிட்டார்.

அப்போது சிவன், ஒரு பரவனாக உருவெடுத்து அந்த மீனைப் பிடித்து, அரசனின் மகள் *“திரைசேர்மடந்தை”* என்ற பெயரில் உள்ள தனது மனைவியான பார்வதியை மணந்துகொண்டான்.

6) மகாபாரதத்தின் *“ஆதிபருவம்”* (Adiparva) என்ற பகுதியில் , பரவனின் அரசன் யமுனைக் கரையில் அரசாண்டதாகவும் ஒரு மீனின் வயிற்றிலிருந்து ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்ததாகவும் , அவளுக்கு “மச்சகந்தி” (Machchakindi) எனப் பெயரிட்டு தனது மகளாக வளர்த்ததாகவும், அவள் பருவம் அடைந்தபின் குலவழக்கப்படி பரவப் பெண்களோடு சேர்ந்து ஆற்றின் குறுக்கே பரிசலோட்டிப் பயணிகளை மறுகரை சேர்க்கும் பணியினை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒருநாள் *“பராசர முனிவர்”* (Parasara Sage) பரிசல் துறையில் மச்சகந்தியை கண்டு காதல் கொள்ள, அவள் கறுவுற்று ஈன்ற குழந்தைதான் புராணங்கள் பலவற்றை இயற்றிய புகழ்பெற்ற *“வியாசர்”* (Viyasar)ஆவார். பின்னர் மச்சகந்தியின் அழகில் மோகங்கொண்ட சந்திர குல மன்னனான *“சந்தனு”* (King Santanu of Lunar Race) அவளை தன் மனைவியாக ஏற்று, பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் மூதாதையான *“விசித்திரவீரியனை”* (Vichitravirya) பெற்றெடுத்தாள். அஸ்தினாபுர அரசுக்கு உரிமை கொண்டாட நடத்தப்பட்ட பெரும் போரே மகாபாரத இதிகாசத்தின் மூலக் கருவாகும். இதனால்தான் பரவர்கள் தங்களைச் *“சந்திர குலத்தவர்”* என்று கூறிக்கொள்வார்கள். மேலும் தங்களது திருமண விருந்தினில் சந்திர குலச் சின்னங்களையும் கொடிகளையும் காட்சிப்பொருளாக ஏற்றி வைக்கின்றனர்

7) இலங்கையின் வடமேற்குக் கரையில் உள்ள *“குதிரைமலை”* (Kudremalle)யில் அரசாண்ட *“அல்லியரசாணி”* (Alliarasany) பற்றி நடத்தப்படும் நாடகத்தில் , பரவர்கள் ஒரு முதன்மைப் பாத்திரத்தில் பங்கெடுக்கின்றனர். கடற்கரையில் முத்தெடுக்க பரவர்களை அந்த அரசி பணியில் அமர்த்தியதாகவும், ஒவ்வொரு முத்துக்குளிப்பிலும் பத்துக்கலம் முத்தினை அரசிக்கு பரவர்கள் தரவேண்டும் என்ற விதிமுறை கொண்டிருந்ததாகவும் நாடகத்தில் கூறப்படுகின்றது.

8) *1871 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை*யின் படி “பரவர்கள் மதுரை, திருநெல்வேலிக் கடற்கரைச் சார்ந்த மீனவர்கள் ஆவார்கள். இவர்கள் போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தபோது முகமதியர்களின் அடக்கு முறையில் சிக்கித்தவித்தனர். இதனைக் கண்ட போர்த்துக்கீசியர் இவர்கள் கிறிஸ்த்தவர்களாக மதம் மாறினால் அவர்களுக்கு உதவுவதாகக் கூறியதால், அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் தென்கிழக்குக் கடற்கரையினைச் சேர்ந்தவர்களில் பலர் ரோமன கிறிஸ்த்தவர்களாக மதம்மாற காரணமானது.”

அதே அறிக்கையில், *திரு. எஸ். பி. றைஸ்* (S.P. Rice – Occasional Essays on Native South Indian Life, 1901) இந்த மீனவர்களைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

”தென் கோடியில் வாழும் இந்த மீனவர்கள் மிகவும் பக்தியுள்ள கத்தோலிக்கர்கள் ஆவார்கள். இவர்கள் தங்களது முன்னோர்கள் மதம் மாறிய போது அவர்களுக்கு வைக்கப்பட்ட போர்த்துக்கீசிய *“ஜோஸ்ப் பர்னான்டோ மற்றும் மரிய சந்தியாகு”* (Jose Fernandez and Maria Santiago)போன்ற பெயர்களை இன்றும் தாங்கியவர்களாக இருந்தாலும், நேரில் காணும்போது இடையில் கழுத்தில் கன்னி மேரியின் படங்கொண்ட உத்தரியம் அணிந்தவர்களாக காட்சியளித்து பழங்கால முறைப்படி மீன்பிடிக்கும் சாமானியர்கள், என்பது ஒப்புக் கொள்ளமுடியாத ஒரு செய்தியாகும்.”

9) *1901 சென்னை மாநிலக் கணக்கெடுப்பு அறிக்கை* (Madras Census Report 1901) பரவர்களைப் பற்றி கூறுவதாவது

”பரவன் என்ற பெயருக்குரியனவாக முறையே தமிழ், மலையாளம், கன்னடம் பேசும் மூன்று சாதிகள் உள்ளன. இந்த மூன்று பிரிவினருமே தமிழ் பேசும் *பரவன் அல்லது பரதவர்களின்* வழித்தோன்றல்களாக இருக்கலாம்.

*தமிழ் பரவர்கள்* கடற்கரையோர மீனவர்களாகும். இவர்களின் தலைமையிடம் தூத்துக்குடி. தலைவன் என்றொருவன் அவர்களை ஆட்சிப்புரிவான். இவர்களில் பெரும்பாலோர் பாரம்பரியக் கிறிஸ்த்தவர்கள். தங்களைப் பாண்டியர் குலத்தைச் சேர்ந்த *சத்திரியர்* எனக் கூறிக்கொள்ளும் இவர்கள் பிராமணர்கள் இல்லத்தில் மட்டுமே உணவு உண்பர்.

*மலையாளப் பரவர்கள்* கிளிஞ்சல் பொறுக்குதல், சுண்ணாம்புக் காளவாய் போடுதல், உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபடுவார்கள்; இவர்கள் வீட்டுப் பெண்கள் மகப்பேறு பார்க்கும் மருத்துவச்சிகளாக இருப்பார்கள். இவர்களின் பட்டப்பெயர்கள் *குருப்பு, வாரக்குருப்பு, நூறன் குருப்பு* (Kurup, Varakurup, Nurankurup)ஆகியவனாகும்.

*கன்னடப் பரவர்கள்* குடைகட்டிகளாகத் தொழில் செய்வதோடு பூத ஆட்டக்காரர்களாகவும் விளங்குகின்றனர்.

மேலும் மேற்குக் கடற்கரையில் வாழும் பரவர்கள், முகமதியரின் கொடுமைகளிலிருந்து தப்பிக்க திருநெல்வேலியிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

10) *மன்னார் வளைகுடாவில் இந்தியர்கள் முத்துக்குளித்தல் தொடர்பான அறிக்கையில்* (Report of the Indian Pearl Fisheries in the gulf of manner 1905) திரு. ஜெ. ஹெர்னெல்(J.Hornell), மன்னார் வளைகுடாவின் இந்தியக் கடற்கரை சார்ந்து வாழ்கின்ற பரவர்களின் வரலாறு பற்றியும், முத்துக்குளித்தலோடு அவர்கள் கொண்ட தொடர்பு பற்றியும் பல தகவல்களை தந்துள்ளார். 

அவை:

“ முத்துக்குளிக்கும் தொழில் நினைவுக்கு எட்டாத காலந்தொட்டு, பரவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாக வழக்குவரலாறு தெரிவிக்கின்றது. கி.மு. முதல் ஆண்டுகள் தொடர்ந்து மதுரை,திருநெல்வேலி மாவட்டங்கள் என்று இன்று வழங்கப்படும் பகுதி தமிழர்களுக்குரிய பாண்டியப் பேரரசாக இருந்து வந்திருக்கின்றது என்பது தெரிந்த செய்தியாகும். பழைய தமிழ் நூலான *‘கல்வேடு’* (kalvedu) என்ற நூலில், பாண்டிய மன்னனுக்கும் முத்துக்குளிக்கும் பரவர்களுக்கும் இடையேயான உறவு பற்றிய குறிப்பு கீழ்க்கண்டவாறு காணப்படுகின்றது

*வேதநாராயணன் செட்டியும்* (VidanarayanenCheddi) முத்துக்குளிக்கும் பரவர்களும் மதுரையை ஆண்டுவந்த *பாண்டியன்* மகளான *அல்லியரசாணிக்கு* (Alliyarasani) கப்பம் செலுத்தி வந்தனர். அவள் கடலில் பயணம்போன போது அவர்களது கப்பல் புயலில் அகப்பட்டு, இலங்கையின் கரையில் ஒதுங்க, அங்கு அவர்கள் *கரைநேர்கை, குதிரைமலை* (Karainerkai and Kutiraimalai) ஆகிய இடங்களைக் கண்டனர். வேதநாராயணன் செட்டி தனது கப்பலில் இருந்த செல்வம் முழுவதையும் அங்கேகொண்டு சேர்க்க பரவர் உதவியை நாடினார்.கடலிகிலபம்,கல்லக்கிலபம்(Kadalihilapam,Kallachihilapam) ஆகிய துறைகளில் பரவர்கள் முத்துக்குளிக்க ஏற்பாடுகள் செய்வதோடு, இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதத்திற்கு உதவும் மரங்களையும் அங்கிருந்து கொண்டுவந்தான்

கொற்கையில்(Korkai) பரவர்கள் மிகுந்த செல்வாக்கு உடையவர்களாக விளங்கினர் என்று மதுரைக்காஞ்சி(Madurai Kanchi) தெரிவிக்கின்றது. மீனை உணவாகக் கொள்ளும் பரவர்கள் வில்லையேந்தி கூட்டமாகத் திரிந்து, பகைவர்களைத் தங்களுடைய புறங்காட்டாத வீரச்செயல்களால் அச்சுறுத்தி வந்தனர். பரவர் நாட்டின் முக்கியப் பட்டணம் கொற்கை என்றும், அங்கு முத்துக்குளிப்பவர்களும் சங்கு அறுப்பவர்களுமே பெறும் அளவில் வாழ்கின்றனர் என்றும் , மதுரைக்காஞ்சி தெரிவிக்கின்றது.

பாண்டியர் அரசு வலிமைவாய்ந்ததாக இருந்த காலத்தில், பரவர்கள் அரசரிடமிருந்து பாதுகாப்பினையும் வரிவிலக்கினையும் பெற்று வந்தனர்.”
மேற்கூறியன அனைத்தும் பரவர்களின் தோற்றம் பற்றி வழங்கி வரும் பதிவுகளாகும் ஆகும். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருந்தாலும் வர்ணகுலம் பற்றிய தொன்மையயையும் அதன் தொடர்ச்சியயையும் நமக்கு உணர்த்தி நிற்கிறது.

வர்ணகுலம் வர்ணகுலத்தான் குருகுலத்தான் எனவரும் தொடர்களும் மீகமன் பற்றிய குறிப்புகளும்வெடியரசன் பற்றிய நம்பிக்கைகளும் இம் மரபினரின் தொடர்ச்சியான இருப்பையும் நீட்சியயயும் வலியுறுத்துகின்றன. சிலப்பதிகாரத்தின் வழிவந்த ‘’கண்ணகி வழக்குரை’’ காவியம் மீகாமன் பற்றிய செய்திகளை தருகிறது. கண்ணகியின் காற்சிலம்பில் பதிக்க கூடிய நாகமணியயை தென் திசையில்தென் திசையில் உள்ள நாகத்தீவிலிருந்து கொண்டு வரக் கூடியவன் மீகாமனே என சொல்கிறது.

‘’கூட்டி வந்தார் வருணர் தமை குறையறுத்து கரை நீளும்
வாட்டமற வைத்த நாளின் வளங்கிய பேர் கரையார் காண்
பாட்டிலவர் தம் பெருமை பகரவினித் தொலையாது
மீட்டு புகழ் மீகாமன்சிறந்த மரபென உரைத்தார்’’
இது போலவே பரதர் குலத் தெருவில் வசித்து வந்தமீகாமனை அழைத்து வந்த செய்தியில்

‘’எல்லையிலா புகழ் பரதர் இருக்குமந்த தெரு புகுந்து
மல்லையொத்த புயத்தானே வர்ணகுலத்துதித்தோனே'' 
என மீகாமனின் வீரத்தை குறிப்பிடுகிறது.

கண்ணகி குளிர்த்தியில்
‘’மீகாமனுக்கு மிகுந்த வரம் கொடுத்து
நாகமணி வாங்கவெண்று நயந்தாய் குளிர்ந்தருள்வாய்’’'
என வரும் வரிகளும் மீகாமன் பற்றிய செய்தியயை நமக்கு தருகிறது.

திருகோணமலியின் வரலாற்றையும் வளமைகளையும் கூறும் கோணேசர் கல்வெட்டு கொட்டியாரத்தில் கோணேசர் ஆலயத்துக்காக கொடுக்கப் படும் பொருட்கள் கெவுளிமுனையிலுள்ள மீகாமனிடம் சேர்ப்பிகப் படவேண்டும் எனக் குறிப்பிடப்பிடுகிறது இங்கு மீகாமன் ஒரு தலைவனாக காட்டப் படுவதை காணலாம்.

கோணெசர் கல் வெட்டு வேறு ஒரு தகவலையும் நமக்கு தருகிறது கொட்டியாரத்தில் கூட்டப்பட்ட தேசத்தார் கூட்டத்தில் ஏழூர் அடப்பன் பற்றிய குறிப்பு வருகிறது. அடப்பன் அடப்பனார் என்ற பெயர்கள் ஒல்லாந்தர் கால குறிப்புகளின் படி குருகுலத்தவருக்குரிய தலைமைக் காரரின் பெயர் என விளங்கிக் கொள்ள முடிகிறது.இப்படிப் பார்க்கும் போது கோணெசர் கல்வெட்டு கூறும் காலப் பகுதியில் கொட்டியாரத்தின் ஏழு ஊர்கள் குருகுலத்தவர்களுக்கு உரியதாக இருந்திருக்கிறது என புலனாகிறது.

‘’முக்கறு கற்றன’’ எனும் சிங்கள ஏட்டுச் சுவடீப்படியொரு குறிப்பை தருகிறது.’’7740 வீரர்கள் கொண்டகரவ சேனை கொர மண்டலம் என அழைக்கப் படும்காஞ்சிபுரம் ,காவிரிப் பூம் பட்டினம்,கீழைக் கரைஆகிய குருகுலப் பிரதேசங்களிலிருந்து வந்ததையும்,முக்குவரையும் துலுக்கரையும் போராடி வென்றனர் என்பதயும்விபரிக்கிறது.கோட்டை இராசதானியின் 6ம் பராக்கிரம பாகுவே(1412-1467)இவர்களை அழைத்தான் என்றுமவர்களுக்கு பல வீதிகளையும் வசிப்பிடங்களையும் 18துறைமுகங்களையும் வரியின்றி கொடுத்தான் என பிறிற்றோவின் யாழ்ப்ப்பாண சரித்திரம் கூறுகிறது’’

சோழப் பேரரசன் இராசேந்திர சோழன் இலங்கை மீதான படையெடுப்பை கூறும் திருமுருக கூடல் கல் வெட்டில்சிங்கள இராணுவத்தின் வீழ்ச்சியயயுமதில் தங்க கால்வளை அணிந்த குருகுலத்தராயன் வீழ்ந்து மடிந்ததும் கூறப் பட்டுள்ளது.

குருகுல மக்கள் வீரம் செறிந்தவர்களாகவும்போர்த்திறன் மிக்கவர்களாகவும் இருந்தமைக்கான சான்றுகள்பரவிக் கிடக்கின்றன வர்ணகுலத்தவர் பற்றிய புராணக்கதையொன்று “ஜலப் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்து நீரால் நிறைந்த போது மீகாமன் தோணி மட்டுமே வெள்ளத்தில் மிதந்ததாகவும் சிவபெருமானும் வெள்ளத்தில் தத்தளிக்க சிவன் தன்னை ஓடத்தில் ஏற்றும் படி கேட்க சிவனை கைதூக்கி விடாமல் வள்ளத்தை ஒருக்கணித்து ஏற இடமளித்த போது “உள்ளமும் கரயான் உகத்திலும் கரையான்’’ என கூறியதாக இப்படி சொல்கிறது.

வர்ணகுலத்தாரின் கொடி மகரம் மகரக் கொடி. மகரம் என்பது யானையின் தந்தத்தையும் சிங்கத்தின் கால்களையும்,பன்றியின் காதையும்,மீனின் உடலையும்,வெளித்தெரியும் பற்களையும்,குரங்கின் கண்களையும் அழகான தோகையயையும் கொண்ட கடற் பிராணியாகும்.அது பிரபஞ்சம் தழுவிய குறியீடாக அடையாளப் படுத்தப் படுகிறது.

வட இந்தியாவின் குருகுல வம்சத்தோடுஉறவு கொண்ட பாண்டிய அரசர்கள் மகரத்தை தமது அடையாள சின்னமாக கொண்டனர் என நம்பப் படுகிறது.மகரம் எங்கள் குருகுல வம்சத்தின் அடையாளம் என வலைவீசு புராணம் சொல்கிறது.

கெறாஸ் அடிகளாரின் ஒரு கூற்றையும் கவனத்தில் கொள்ளலாம்"மொகஞ்சதாரோ களி மண் முத்திரையில் காணப்படும் மீன்களும் சந்திரனும் அவர்களது மூதாதயரான பாண்டிய மன்னனையும்கரையோரப் பரவ மக்களையும்குறிப்பதாகுமங்கு காணப்படும் எட்டு நட்சத்திர அடையாளங்களுள் நண்டு இரு சோடி மீன்கள்,மகரம் ஆகியன இடம் பெறுகின்றன.''

திருகோணமலை கோட்டை வாசலில் பொறிக்கப் பட்டுள்ள மீன் லச்சினைகளையும் இதனுடன் பொருத்திப் பார்க்கமுடியும். இன்றும் சேனையூர் மக்களின் வம்சக் கொடியாக மகரமே பயன் பாட்டில் உள்ளது. மாடுகளுக்கு சுடப்படும் குறி அடயாளமாக மகரமும் ஈர்க்கிலையும் பொறிக்கப் படுகிறது.மரண வீட்டில் செய்யப் படும் தேரில் மகரக் கொடியே பறக்க விடப் படுகிறது .

திருகோனமலை மாவட்டத்தில் தென்னமரவாடி, திரியாய், குச்சவெளி, கும்புறுபிட்டி, நிலாவெளி, சாம்பல்தீவு, சல்லி, தம்பலகாமம் ,கந்தளாய், ஆலங்கேணி, திருகோனமலை நகரும் நகரை அண்டிய சூழலும், மூதூர், சேனையூர், கட்டைபறிச்சான், கடற்கரைச்சேனை, கெவுளிமுனை, சூடைக்குடா ஆகிய இடங்களில் வர்ண குல மரபினரின் படர்ச்சி காணப்படுகிறது.

எங்கோ தொடங்கிய ஒரு வேர் சேனையூர் வரை தொடர்கிறது.கிழக்கு மாகாணத்தில் தென்னமரவாடி தொடக்கம் திருக் கோவில் வரை வர்ணகுல மரபும் மீகாம பரம்பரை தொடர்ச்சியும் நீண்டு செல்கிறது.

பலநூல்கலிலிருந்து பெறப் பட்ட தகவல்களையும் என் மூதாதயர் வழி வந்த குறிப்புகளையும் இணைத்து இந்த கட்டுரை எழுதப் பட்டுள்ளது.ஒரு குல மரபின் தொடர்ச்சியென்பது வரலாற்றின் வழியே வருகிரது என்பது நிருபணமாகிறது..
பாலசுகுமார்,
முன்னாள் கலை கலாசார பீடாதிபதி,
கிழக்குப் பல்கலைக்கழகம்

Thanks : eezanaddiyam

The paars of Mannar


The divers were predominantly Tamils or Arabs. Some plunged headfirst from springboards; some descended in an upright position, carried down rapidly by a stone or lead weight. They worked in pairs; one diver remained on the surface, along with an assistant or munduck who watched over the ropes attached to the weight and the basket in which the oysters were collected. When ready to descend, the Tamil diver pinched his nostrils shut, while the Arab diver used a horn clip.

Of the world’s great pearl fisheries, none can compare with the fishery of the Gulf of Mannar. Over 3000 years ago, pearls were one of the principal sources of revenue of the Tamil kings. In ancient Rome, the author and philosopher Pliny referred to this fishery as the world’s most productive. The Greeks, Venetians and Genoese all sought the beautiful specimens harvested in these waters. The Pearl Banks (paars) stretch from the island of Mannar, off the northwestern tip of modern-day Sri Lanka, south to Chilaw, at depths ranging from five to 15 fathoms. The shallow undersea plateau on which the banks are located varies from 32 kilometres wide in the north to six km in the south. Traditionally, each of the 50 or so banks bore a unique name, the most productive being the Cheval and the Moderagam.

Pearl fishing was such an important industry that it was a government monopoly from the earliest times. There were two distinct fisheries – one on the South Indian coast, the other on the Sri Lankan coast, in Mannar. However, the fishery off Mannar was considered the most important. Megasthenes, the Grecian ambassador to the court of Chandra Gupta in the third century BC, asserted that this fishery produced larger, better quality pearls.

In colonial times, divers did their work from 15-ton dhows from the Persian Gulf, which carried a crew of 14, along with ten divers. The fleet, often numbering 400 boats, left for the Pearl Banks in the early hours of the morning. ‘The boatpeople are raised from their slumbers by the noise of horns and tom-toms, and the firing of a field-piece,’ remarks one James Cordiner in A Description of Ceylon (1807). After going through what Cordiner describes as ‘various ablutions and incantations’, the pearl divers set sail for the Pearl Banks, guided by pilot boats. By sunrise, the fleet was anchored in position around a barque carrying a government ‘inspector’ of the Pearl Banks. An hour after sunrise a gun was fired, which gave the signal for diving to commence.

On reaching the bottom, the diver slipped the noose of the basket over his head, and swam over the bank collecting the oysters. After about a minute, the diver below gave a tug on the basket rope. Instantly, two munducks hauled up the rope, along with the diver. Upon being brought into the boat, the divers would discharge water – and, sometimes, blood – from their mouth, ears and nostrils. After a few minutes of rest and the diver was ready to descend again, and would only let his comrade take his place when he had completed eight descents. In this manner, a single diver could gather 3000 oysters in a single day.

Sharks represented the main danger to the divers. Being superstitious, they always consulted ‘shark-charmers’ or ‘shark-binders’ before commencing work. Indeed, the divers would not venture into the sea until they had received assurance that ‘the mouths of the sharks would close at their command’. As the shark-charmers belonged to a certain family, they were able to monopolise the business, and there were at least two or three shark-charmers in attendance at every fishery. One would go to sea in the head pilot’s boat, while the others would perform rites on the shore. One such required the shark-charmer to strip naked and shut himself in a closed room. There, he would sit before a brass basin full of water obtained from a secret well on a distant island, in which were placed silver replicas of a male and female shark. If a shark attack was going to take place, it was believed, one shark in the basin would bite the other. Sometimes the charmers indulged in toddy until they could no longer stand. Nevertheless, they were considered so indispensable to the success of the fishery that they were paid by the government in addition to receiving a daily tithe of oysters from each boat.

After a midday signal, work was ceased and the boats headed for Silavatturai, in northwest Sri Lanka. There, the divers carried their catch into the kottu, or oyster store, and deposited it in three equal heaps inside a compartment. The colonial superintendent then chose two of the heaps as the government’s share, leaving the remaining one for the diver. (The government shares were put up to auction.) The oysters were then placed in pits by the sea, where they were allowed to decompose for ten days, after which the remains were rinsed and the pearls picked out and graded, and finally drilled. The bulk of Ceylon pearls, which were valued for their golden hue, found their way to Bombay. There, most were strung onto ropes and thereafter sent to brokers and dealers, especially in London and Paris.

Cosmopolitan shores

Day on the dhow: An image of a pearl fishery published in 'The Graphic', 1887


In Sri Lanka, the pearl fishery was first mentioned in ancient chronicles such as the Mahavamsa, which records the gift of pearls to the king of Madurai. From the Rajavali, we learn that, in what appears to have been a third-century tsunami, ‘100,000 seaports, 970 fishers’ villages, 400 villages inhabited by pearl fishers, making altogether eleven-twelfths of the territory, which belonged to Calany, were swallowed up by the sea.’

On Marco Polo’s return journey to Venice, in 1284 he landed in the port city of Puttalam, also on the edge of the Gulf of Mannar. There, he met with Arya Chakravarti, the ruler of the area, which included a pearl fishery. Odoric, a Franciscan who visited the island sometime between 1316 and 1330, wrote, ‘In this Island are found as great a store of pearls as in any part of the world. And the king of that country weareth round his neck a string of 300 very big pearls, for that he maketh to his gods daily 300 prayers.’ The Moroccan explorer Ibn Battuta also had an audience with Arya Chakravarti at Puttalam, in 1344. He writes:

I entered his presence one day when he had by him a quantity of pearls which had been brought from the fishery in his dominions … [He] took up some pearls and added, ‘Are there at that island any pearls equal to these?’ I said, ‘I have seen none so good!’‘

Under the British administration of the 19th century, the inspector of the Pearl Banks examined the coastal stretch from Mannar to Chilaw twice a year, in order to identify the fishable oyster beds. If the pearls were sufficiently numerous, a fishery was proclaimed for the following spring, February through April. Until 1889, the fishery headquarters were located at Silavatturai – ‘the port of the pearl fishery’ – in normal times a lonely place on the coast south of Mannar. But once a fishery was established, a town arose from the windswept sands, with official buildings built along thoroughfares known by such names as Main Street, Tank Street and New Street.

Countless divers, traders and shopkeepers set up huts on the peripheries of this town, which by then boasted a cosmopolitan population of 50,000. In An Account of the Island of Ceylon (1803), Robert Percival writes of how a ‘desert and barren spot’ was ‘converted into a scene which exceeds, in novelty and variety.’ Residents of the town, Percival noted, were ‘of different colours, countries, castes and occupations’. A traveller could chance upon ‘jugglers and vagabonds of every description practising their tricks’ in one corner of town, while in another, ‘he may observe Fakeers, Brahmins, Priests, Pandorams [pandaram], and devotees of every sect.’

The Portuguese took control of the pearl fishery in 1524 by entering into a pact with the Parawas, a caste of sea-going Tamils who had managed the harvesting for the kings of South India from time immemorial. The revenue generated by pearls was considerable during the 16th century. When the Dutch expelled the Portuguese in 1658, they set out with characteristic thoroughness to develop the commercial resources of the island. As a result, the pearl fishery was resumed in 1666, reportedly employing some 200,000 persons. Although the income from pearls became second only to cinnamon during Dutch rule, imperfect prospecting resulted in lengthy intervals between fisheries. In 1746, after only eight successful harvests, the governor of Ceylon decided that the fishery would be improved if it were rented out to private interests. This system proved so satisfactory that it was employed until a few years after the British ousted the Dutch in 1796.

While rich pearl harvests characterised the early period of British rule, from 1809 a series of failures occurred, in spite of better appliances, charts and methods of inspection. Subsequently, in 1900, the decision was made to revert to the system introduced by the Dutch, so from 1907 the fishery was leased to the Ceylon Company of Pearl Fishers. The lease experiment proved unsuccessful, as the supply of oysters failed. This misfortune, coupled with the 1920s introduction of the cultured pearl by Mikimoto Kokichi, a Japanese entrepreneur, dealt a mortal blow to the industry. Still, fishing continued until the late 1950s, when traditional methods were abandoned and dredges used instead. Since then, however, the Pearl Banks have remained largely undisturbed, especially during Sri Lanka’s civil conflict.

There is little physical evidence left to indicate that the fisheries were held for centuries along this desolate yet beautiful coast. However, under certain conditions – in the right light and with the sun at a low angle – the long shore apparently still glitters with ancient, abandoned shards of mother-of-pearl.

By Richard Boyle

பெரிய‌ப‌ட்டின‌ம் வரலாறு


கடந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் வரை தமிழர்கள், கடல் வழி வாணிபத்தில் உயர்ந்து நின்ற பாங்கிளை வரலாறும், இலக்கியங்களும் எடுத்து இயம்புகின்றன. தமிழகத்தின் நீண்ட நெடுங்கரையை மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே, நத்தி நமக்கினய பொருள் கொணர்ந்து நம்மருள் வேண்டிநின்ற பட்டினங்கள் காலத்தின் போர விளையாட்டில் சிற்றீல் போல் நிறைந்த செய்திகள் பல உண்டு. பிற நாட்டுப் பயணிகளின் குறிப்புகளில் பெருமையுடன் பேசப்பட்ட அந்தப் பட்டினங்கள் இன்று எட்டிக் காட்ட இயலாத நிலையில், சுவடு இல்லாமல் மறைந்து விட்டன. கடற்கோளுக்கும், அடற்புயலுக்கும் இளக்காகிக் காலத்தின் கரங்களாற் கவரப்பட் பிறகும், மறைந்த அந்த மாநாகரங்களை, மனத்திரையில் நினைவுபடுத்த, பெயரளவில் எஞ்சி நிற்கும் சில பட்டினங்களும் இன்றும் உள்ளன.

குறிப்பாக காவேரிப்பூம்பட்டினம்., தொண்டிப்பட்டினம், காயல்பட்டினம் ஆகியவைகளுடன் இணைத்து எண்ணத்தக்கதுதான் பாண்டிய நாட்டு பாராக்கிரமப் பட்டினமுமாகும். இந்த பராக்கிரமப் பட்டினம், இராமநாதபுரம் நகருக்கு தொன் கிழக்கே பத்து மைல் தொலைவில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. பராக்கிரமப்பட்டினம் காலப்போக்கில் பௌத்திர மாணிக்கப்பட்டினமாகி, இன்று பெரிய பட்டினம் என வழக்கில் இருந்து வருகிறது. பாண்டிய மன்னர்களில் ஒருவராக பராக்கிரமன் என்பாரது நினைவாக எழுந்த ஊரே இந்தப்பட்டினம். பாண்டியர் வரலாற்றிலே பல பராக்கிரம பாண்டியர்கள்குறிப்பிடப்படுகின்றனர். பாண்டியன் சடாவர்மன் என்ற பராக்கிமபாண்டிய தேவன்

 திரிபுவனச் சக்கரவர்த்திபராக்கிரம பாண்டிய தேவன்

பராக்கிரம பாண்டியன் கல்லணை...

பராக்கிரம பாண்டியன் கட்டளை..

தென்னன் பராக்கிரம பாண்டிய தேவனது ஒன்பதாவது ஆண்டு

பரராசர் நாளும் பணியும் பராக்கிரம பாண்டியனே

என்ற தொடர்களுடன் அடைவு படுத்திப்பார்க்கும் இந்த ஊர் எந்த பராக்கிரம பாண்டியனது பெயரில் எப்பொழுது எழுந்தது என்பதை அறுதியிட்டுச் சொல்ல இயலவில்லை.

வரலாற்றில்:

வரவாற்றின் குறிப்புகளை வகைப்படுத்தி நுணுகி நோக்கும் பொழுது, முதன் முறையாகத் தமிழகத்தில் பாண்டியன் உரிமைப் போரில் சடையவர்மன் குலசேகரப் பாண்டியனுக்கு

எதிராக பராக்கிரம பாண்டியன் பக்கலில் போரிட ஈழப்படைகள் இலங்கைத் தண்டநாயகன் தலைiயில் கி.பி 1170ல் நுழைந்தது. கடல்வழியாக இராமேசுரத் தீவைக் கைப்பற்றி எதிர்கரையில் கரை இறங்கிய பொழுது, இந்தப்பட்டினம் மூன்று சுற்றுக்கோட்டை மதில்களையும் பன்னிரென்டு வாயில்களையும் பெற்ற பெருநகராக விளங்கியதாகவும், அதைக் கைப்பற்றிப் பலப்படுத்தியதாகவும், இலங்கை நாட்டு வரலாறு விவரிக்கிறது 

அடுத்து சீனத்திலிருந்து ஈழம் வழியாக கி.பி. 1293ல் இந்தியா போத்து ...லாப் பயணி மார்க்கோபோலோவும், இபுன்பதூதாவும் இந்தக் கடற்கரையில் தான் கரை இறங்கினர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தின் வரலாற்றில், இந்தப்பெருநகரம் அரேபிய நாட்டுப் பயணியான திமிஷ்கி, பாரசீக நாட்டு வஸ்ஸப், தூனிஷிய நாட்டு இபன்பதூதா போன்ற உலகப் பயிகளாலும், இந்திய வரலாற்று ஆசிரியர்களான அமீர் குஸ்ரு, பரிஷ்கா ஆகியவர்களாலும் பத்தன், பத்னி எனவும் அரபி வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது 

பட்டினம் என்ற தமிழ்ச் சொல்லின் மாற்று வடிவம் பத்தன் ஆகும். அதே சொல் விகாரமடைந்து விரிந்து தமிழில் பெரியபட்டினமாகியுள்ளது. இங்ஙனம், பராக்கிரம பட்டினமாகவும், பௌத்திர மாணிக்கபட்டினமாகவும், பத்தனாகவும் குறிக்கப்பட்டுள்ள பெருநகரம், இன்றைய சிற்றூரான பெரியப்பட்டினம் தானா என்ற வியப்பூட்டும் வினாவிற்கு விளக்கம் பெறுவதுதான் இந்த ஆய்வு.

ஆதாரங்கள்:

தென்னகமும் முஸ்லிம் ஆட்சியாளர்களும் என்ற ஆங்கில நூலில், இலங்கைத் தண்டநாயகன் ஜகத் விஜயன் தலைமையில் ஈழத்துப் பெரும்படையொன்று மாந்தோட்டம் என்ற ஊரின் கண் அணி சேர்க்கப்பட்டு, கி.பி. 1170ல் இராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே இரண்டு கல் தொலைவில் கரை இறங்கியதாகவும், அங்கிருந்து பாம்பன், குந்துகால் ஆகிய ஊர்களைக் கைப்பற்றி எதிர்கரையில் உள்ள பராக்கிரமப்பட்டினக்கோட்டையைப் பலப்படுத்தியதாகவும் குறிப்பிடபட்டுள்ளது 

மீண்டும் அந்தக் கோட்டையைக் கைப்பற்ற முயன்ற பாண்டியன் குலசேகரனது தளபதி அழகன் பெருமாள் போரில் கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து நில, நீர் மார்க்கமாக பாண்டியன் குலசேகரனது தலையையில் வந்த பெரும் படை படு தோல்யுற, பாண்டியன் புறமுதுகிட்டு ஓடியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் போர் பராக்கிரம பட்டினத்திற்கு அண்மையில் வேதாளை என்ற இடத்தில் நடைபெற்றதாகவும் ஈழப்படைகள் தொடர்ந்து முன்னேறி, தேவிப்பட்டினம், சிறுவயல், தொண்டி ஆகிய ஊர்களையும் கைப்பற்றிதாகவும் இலங்கை வரலாற்றை மேற்கோளாகச் சுட்டி வரையப்பட்டுள்ளது.

இந்த வட்டாரத்தில் உள்ள ஈழக்காடு, இலங்காமணி, இலங்கையர் மேடு, ஈழம்படல், ஈழவனூர், ஈழவன் கோட்டை ஆகிய சிற்றூர்கள் அந்த ஈழப்படையெடுப்பை இன்னும் நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன. பெரியப்பட்டினத்தின் தென்மேற்குப் பகுதியில் இன்னும் கோட்டைச் சுவரின் அதிமானம் தென்படுகிறது. வேறு கோட்டைகள் இந்தப் பகுதியில் இருந்ததாக வரலாறு இல்லையாலின் மூன்று சுற்று மதிலுடன் அமைந்த நகரம் என இலங்கை மகாவம்சம் குறிப்பிடுவது இந்தப்பட்டினத்தையேயாகும்.

பன்னிரென்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வலிவும் பொலிவுமிழந்த பாண்டிய நாடு ஐந்து பகுதிகளாகப் பாண்டிய இளவல்களால் ஆட்சி செலுத்தப்பட்டது. அவர்கள் பேரரசர்களைப் போலத் தங்கள் பெயரால் கல்வெட்டுகளும், மெய்க்கீர்த்திகளும் வரைந்துள்ளனர் 

விட்ட கண்டெழ மீனவர் ஐவருங் கெட்ட கேட்டினை கேட்டிலை போலுநீ என்று பரணி பாடுவதும் இவர்களைத்தான் 

இன்றைய திருநெல்வேலிச் சீமையில் ஒருவரும், மதுரை, தஞ்சைப் பகுதியில் இருவரும், கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் ஒருவருமாக இந்தப் பஞ்ச பாண்டியர்கள் இருந்திருக்க வேண்டும். கி.பி. 1188ல் மதினத்திலிருந்து (அரேபியா) காயல்பட்டினம் வந்து சேர்ந்த சுல்தான் சையது இபுறாகிம் அவர்களது வரலாறும் மார்க்கோ போலே, வஸ்ஸாப் பயணக்குறிப்புகளும் பாண்டிய நாட்டில் ஒருவருக்கு மேற்பட்ட பாண்டியர்களது ஆட்சியை உறுதிப்படுத்துகின்றன. 

சமயப் பணிக்காகத் தமிழகம் வந்த சுல்தான் சையது இபுறாகிம் காயலில் இருந்த பாண்டியன் குலசேகரனுடன் நட்புரிமை பாராட்டியதையும் அவனது கோருதலின்படி மதுரையில் அப்பொழுது அரியணையிலிருந்த திருப்பாண்டியனையும், பவுத்திர மாணிக்கப் பட்டினத்தை ஆண்ட விக்கிரம பாண்டியனைத் தோல்வியுறச் செய்ததையும் வரலாறு கூறுகிறது. சுல்தானின் ஆட்சி கி.பி. 1199 வரை பவுத்திர மாணிக்கப் பட்டினத்தில் நீடித்தாகவும் தெரிகிறது.

செய்யது சுல்தான் ஒலியுல்லா தர்ஹா.. பெரியபட்டினம்.
சுல்தான் சையது இபுறாகீம் வாழ்க்கையை இலக்கியமாகத் தமிழ்க் காப்பியத்தில் வடித்த மீசுல் வண்ணக் களஞ்சியப்புலவர் பௌத்திர மாணிக்கப்பட்டினம் மதுரை, மூதூரையும் விஞ்சிய வளமுடையதாக விளங்கியதாக பாடியுள்ளர்.

அதனை கோநகராகக் கொண்டிருந்த விக்கிரமபாண்டியன் பெயரில் விக்கிரமபாண்டியபுரம் என்ற தனிக்கிராமம் உள்ளது (முதுகுளத்தூர் வட்டம்) விக்கிரமபாண்டியன் பெருஞ்தெரு என்ற தொடர் ஒன்று அருப்புக்போட்டைக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

(விக்கிரமபாண்டியனை அடுத்து அரியணயேறிய சுந்தரபாண்டியனது கி.பி. 1216வது வருடத்திய கல்வெட்டு) இதைப்போலவே பௌத்திரமாணிக்கப்பட்டினம் பற்றிய தொடர்கள் உள்ள ஒரு கல்வெட்டும் உள்ளது. திருநெல்வேலி மாவட்ட மாறமங்கலம் சந்திரசேகர ஈஸ்வரசுவாமி கோவிலில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் முடித்தலைக் கொண்ட மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரது இருபத்து எட்டாவது ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டது. அங்கு சென்று இருந்த பவித்திர மாணிக்கப்பட்டின வியாபாரிகளது கொடை சம்பந்தப்பட்டது. இது தஞ்சை மாவட்ட திட்டைகுடி சுகாஷன பெருமாள் கோவிலுக்குக் கீரனூர் கிராமத்தை திருவிடையாட்டக் காணியாக காமன் சொக்கன் என்ற பவுத்திர மாணிக்க வேளாளன் என்பவன், குலோத்துங்க சோழ தேவரது முப்பதாவது ஆண்டு ஆட்சிக் காலத்தில் நீர்வார்த்து கொடுத்து அதனைப் பவித்தரமாணிக்க நல்லூர் எனப் பேரிட்டு வழங்கிய செய்தியைப் படிக்கும் பொழுது பவத்திரமாணிக்க நல்லூர் என்ற பெயர்கள் அதே காலத்தில் வழக்கில் இருந்தமையும் தெரிய வருகிறது. 

பவித்திரமாணிக்கம் என்பது சிலப்பதிகாரம் சொல்லுகின்ற 

..காக பேதமும் களங்கமும் விந்தவும்
ஏகையும் நீங்கி இயல்பு குன்றாத...
பன்னிரு ரூணமும் பெற்று பதினாறு குற்றமுந் நீங்கிய மாணிக்கம் என்பதும்,

தூயகலத் துகில் விரித்துத் தெய்வமாணிக்கம் நடுவே வைத்து...
என்று பரஞ்சோதி முனிவர் குறிப்பிட்டுள்ள பவித்திரமான தெய்வீகமான மாணிக்கம் என்பதே பொருள் 

இத்தகைய மாணிக்கம் நிறைந்த வளமைமிக்க பட்டினம் என்பதுதான் இந்த ஊரின் பெயருக்கான காரணமாக இருக்கலாம். மேலும் இந்த ஊரில் தென்பகுதியில் மேற்கே உள்ள தரவை இன்றும் பவளக்கால் தரவை என்றே வழங்கப்பட்டு வருகிறது. முன்பு இந்தப் பகுதியில் பவளம் மிகுதியாக விளைந்ததாக வரலாறு கூறுகிறது. பவளமும் ஒருவகையான மாணிக்கம் என உத்பலபரிமளம் என்ற நூலிலும் அக்னி புராணத்திலும் வரையறுத்துச் சொல்லப்படுள்ளது. 

இதே கடற்கரையில் சில கல் தொலைவில் அமைந்துள்ள கோவில் மாரியூரில் (கோனேரின்மை கொண்டான் திருபுவனச் சக்கரவர்த்தியான சுந்தர பாண்டிய தேவனது பெருங்கொடை பெற்ற பழமையான கோவிலாகும்) எழுந்தருளியுள்ள அம்பிகைக்கு பவளநிறவல்லி என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பதுவும் இந்தப் பகுதியுடன் பவள விளைவையுதம் இணைத்துச் சிந்திப்பதற்குப் பொருத்தமுடையதாக உள்ளது.

மேலும், பவித்திரம் என்ற சொல்லுக்குத் தமிழ் லெக்சிகன் பேரகராதி (பக்கம் 2543) யில் தருப்பை என்ற பொருள் சூட்டப்பட்டு சீவக சிந்தாமணியும், சூடாமணி நிகண்டும் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது. இராமாயணக் காலந்தொட்டு இந்தப் பகுதியில் தருப்பைப் புல் நிறைந்து இருந்ததை புல்லாரண்யம் திருப்புல்லணை என்ற பெயரும், இந்தத் திருப்புல்லணைத் தலத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமானது தருப்பாசன அழகியார் என்ற திருப்பெயரும் இன்றளவும் நினைவூட்டுவனாக உள்ளன. அத்துடன் திருப்புல்லணைக்குப் பக்கத்தில் உள்ள கோரைக் (தருப்பை) குட்டம் என்ற சிற்றூரும் இதற்குச் சான்று வழங்குவதாக அமைந்துள்ளது.

பொருள் நயந்து நன்னூல் நெறியடுக்கிய புல்லில்
கருணையங் கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி..
தருப்பை மீதினுலுவந்து திருக்கண் மேவிய தேவை நினைவீரே 
என்ற இலக்கியத் தொடர்களும்,
பார் தந்த பாதம் பரல் உறைப்புன்ன வெம்பாலையெல்லாம்
பேர்தந்து புல்லைப் பரப்பிக் கிடந்த பெருந்தகைக்கு தேர் தந்தனன்...
என்ற முகவை மகாவித்வான் ரா. ராகவனாரது தனிப்பாடலும் இதே உண்மையினை வலியுறுத்துவனவாக அமைந்துள்ளன.

மற்றும், வீரமாமுனிவரது சதுர் அகராதியில் மௌத்திகம் என்ற சொல்லுக்கு முத்து, நித்திலம் எனப் பொருள் விவரிக்கபட்டுள்ளது. திருப்புல்லணையிலிருந்து இராமேசுவரம் வரையான கடற்கரையில் பவளம் மட்டுமின்றி முத்தும் சங்கும் வளங்கொழித்து விளங்கியதை இலக்கியச் சான்றுகளும் எடுத்து இயம்புகின்றன. திருபுல்லணையை மங்களாசாஸனம் செய்து மனம் மகிழ்ந்த திருமங்கை ஆழ்வார்.
பொருது முந்நீர்க்கரைக்கே மணி உந்து புல்லாணியே..
புணரி ஓதம் பணிலம் மணி உத்து புல்லாணியே..
என்றும்,

இலங்கி மத்தும், பவளக் கொழுந்தும், எழில் தாமரைப் புலங்கள் மற்றும்பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணி எனவும் வாய்நிறைய வர்ணித்துள்ளார். அவரையடுத்து வந்த கம்பநாடர் இதே கடற்கரையில் நவரத்தினங்களில் சிறந்த முத்தும் பவளமும் மிக்க இருந்ததைத் தனது இராம காதையில் கடல்காண் படலத்திலும், விபீடணன் அடைக்கலப் படத்திலும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

தூய மலர்போல நுரைத்தொகையும் முந்தும் சிந்தி புடைசுருட்டி
பாயல் உதறிப் படுப்பதே ஒத்த திரையின் பரப்ப அம்மா 
தரளமும் பவளமும் தரங்கமும் ஈட்டிய தரன்மணிக் குப்பையும்
கனக தீரமும் புரள நெடுந்திரைகளும் புரிந்து நோக்கினான்
என்ற தொடர்களும், இந்தப் பகுதியின் ஏக சக்கரவர்த்தியாக விளங்கிய ரகுநாத சேதுபதியை ஏற்றிப் போற்றிய அழகிய சிற்றம்பலக் கவிராயர் வாக்கில்,

முந்நீர் சொரிமுத்த மாணிக்க ராசி முகந்தருளி
நன்னீர் சொரி கந்தமானதனத்தான் ரகுநாதன்...
திரை வந்த முத்தும் வரைவந்த பொன்னும் தெவ்வேந்தர் தந்து
நிரை வந்து பொற்றும் ரகுநாதன்..
எனப் பாராட்டியிருப்பதிலிருந்தும், 

சேதுபதிகளுக்குரிய விருதாவளியில் செரிமுத்து வன்னியன் என்ற தொடர் பயன்படுத்தப்பட்டதிலிருந்தும், இந்தப் பகுதியில் முத்து மிகுத்து இருந்தது புலப்படுகிறது. அத்துடன் முத்து மாணிக்கப்பட்டினமான மௌத்திக மாணிக்கம் மருவி பௌத்திர மாணிக்கப்பட்டினமாக வழங்கி இருந்திருக்கலாம் எனத் துணியவும் இடமுளது.

இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள திருப்புல்லாணித்திரக்கோயில் கல்வெட்டு ஒன்று. இந்த பவித்திரமபணிக்கப்பட்டினம் எங்கு உள்ளது என்பதைச் சற்று விளக்கமாகச் சுட்டுகிறது. கி.பி.1251 முதல் 1271 வரை மதுரையை ஆண்ட கோனேரின்மை கொண்டான் திரிபுவனச் சக்கரவர்த்தி முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியத் தேவன் பவித்திர மாணிக்கப்பட்டினத்தில் உள்ள சோனக நமாந்தப் பள்ளிக்கு இறையிலியாக மருதூர், ஆம்புத்தூர் என்ற கிராமங்களை வழங்கி உத்திரவிடுவதாகும்.

அந்தக் கல்வெட்டில் கீழ்ச்செம்பி நாட்டு பவித்திரமாணிக்கப்பட்டின கீழ்பால்... என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருப்பதிலிருந்தும், திருப்புல்லாணி கோவில் கீழ்ச்செம்பி நாட்டில் இருப்பதாலும் இன்றை பெரியப்பட்டினம் அந்தக் கோவிலிருந்து கிழக்கே நான்கு மைல் தொலைவில் இருப்பதாலும் பவித்திரமாணிக்கப்பட்டினம் திருப்புல்லாணிக்க வெகு அண்மையில் அமைந்து இருத்தல் வேண்டும் என்பதும் உறுதியாகிறது.

அடுத்து, மார்கோபோலோவின் குறிப்புகளில் தாம் இலங்கைத் தீவிலிருந்து மேற்குத் திசையில் அறுபது மைலுக்கு மேல் கடற்பணம் செய்து மாபார் (பாண்டிய நாட்டு ...
நிலத்தை அடைந்ததாகவும் இதனை ஐந்து ...
ஆட்சி புரிந்து வந்தனர் என்றும், இந்த ...

பகுதியில் மிகவும் நேர்த்தியான பெரிய முத்துக்கள் கிடைக்கின்றன. இலங்கைத் தீவிற்கும், இந்த நாட்டிற்கும் இடையில் விளைகுடா ஒன்று உள்ளது, ஆழமற்ற அந்த குடாவில் 10 அல்லது 12 பாதம்ஸ் (கஜங்கள்) மேலே ஆழம் இல்லை. முத்துக்குளிப்பவர்கள், பெரிதும் சிறிதுமான கப்பல்களில் இந்தக் குடாப் பகுதிக்குச் சென்று ஏப்ரல் துவக்கத்திலிருந்து மே மாதம் இறுதிப்பகுதி வரை தாமதித்து முத்துக் குளிக்கின்றனர்...

முத்துக் குளிக்க செல்லும் படகுகள் முதலில் பத்தலாறு என்ற இடத்தில் ஒரு சேரக் கூடி அங்கிருந்து 60 மைல் தொலைவு வரை கடலில் முத்துக் குளிக்கின்றன. அன்றைய நாளில் முத்துக் குளித்தலைப்பற்றி மிகவும் விவரமாக மார்க்கோபோலோ குறித்துள்ளார். நமது ஆய்வுக்குரிய பொருளக்கு வரும் பொழுது மார்க்கோபோலோ கரையிறங்கிய இடம் பாண்டி மண்டலத்தின் (மாபாரில்) கீழ்க்கோடி என்பதும், இலங்கைக்கு மேற்கே அறபது மைல் தொலைவில் உள்ள பாண்டிய நாட்டுக் கரையென்பதும் அமைதியான வளைகுடாப் பகுதியென்பதும் புலனாகிறது. 

மார்க்கோபோலோ, காயலைப் பற்றியும் அதனை ஆட்சி புரிந்த பாண்டிய சகோதரர்களில் மூத்தவராக குலசேகர பாண்டியனையும் தனது குறிப்புகளில் தனியாகக் குறிப்பிடுவாஸ்ரீதால் அவர் கரையிறங்கியது காயல்பட்டினம் பகுதியல்ல என்பது நிரூபணம் மற்றும் அவர் குறிப்பிட்டுள்ள பத்தலாறு என்ற இடம் இன்னும் பெரியபட்டினம் கிராமத்தின் தென்கிழக்கே கடற்கரைலயொட்டிய நீண்ட கழிப்பகுதியாக உள்ளது. அதனை கப்பலாற் (கப்பலபாறு) என மக்கள் வழங்கி வருகின்றனர். 

அத்துடன் மன்னார் வளைகுடாவில் பாம்பனுக்கு தெற்கே பெரிய பட்டினத்திற்கு வடகிழக்கு வரை கடல் ஆழமற்று இருப்பதைக் காணலாம். இதற்கெல்லாம் மேலாக மன்னார் வளைகுடாவில் இலங்கைக் கரையிலும், பாண்டிய நாட்டுக் கரையிலும்தான் பன்னூற்றாண்டு காலமாக முத்துக் குளித்தல் நடைபெற்றது என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

குறிப்பாக, 

மார்க்கோபோலோ விவரிக்கின்ற முத்துக் குளித்தல் மன்னார் வளைகுடாவில் இலங்கைக் கரையில் அல்லாமல் பாண்டிய நாட்டுக் கரையில் பத்தன் பகுதியில்தான் நடைபெற்றது என்பதற்கு முக்கியமான ஆதாரம் மார்க்கோபோலோவிற்கு முந்தைய நூற்றாண்டில் வந்த ஆல்பருனி என்பவரது பயணக்குறிப்புகள்தான்  இலங்கைக் கரையில் முத்துக் குளிப்பது இலாபகரமாக இல்லையாததால் அங்கு முத்துக் குளித்தல் நிறுத்தப்பட்டு பாண்டிய நாட்டுக்கரையில் முத்துக்கள் எடுக்கப்பட்டதாக அவர் குறித்துள்ளார். 

மார்க்கோபோலோவின் காலத்திறகுப் பிந்தைய நாளில் இந்த முத்துக்குளிப்பில் இராமேசுவரம், திருபுல்லணை திருக்கோயில்களுக்கும் முதலுரிமை இருந்து வந்துள்ள செய்திகள் பட்டயங்களில் உள்ளன. சேதுபதிகளுக்கும் நாயக்க மன்னர்களுக்கும், சேதுபதிகளுக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையில் நிறைவேறிய உடன்படிக்கைகள் இந்தப் பகுதியில் தொடர்ந்து முத்துக் குளிக்கப்பட்ட உண்மைகளை உணர்த்துகின்றன. 

இராமேசுவரத்தில் இன்றும் முத்துச்சாவடி என்ற பகுதி இருந்து வருவதும், பெரியபட்டினத்தின் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை என்ற ஊர் இன்றளவும் இருந்து வருவதும், மன்னார் விளைகுடாவில் குளிக்கப்பட்ட முத்துக்களில் விற்பனை நிலையம் அங்கு அமைத்து இருந்ததை நினைவூட்டுகின்றன. கள்ளிக்கோட்டை துறைமுகத்தில் இருந்து மேனாடுகளுக்குக் கப்பலில் அனுப்பட்ட பலவகையான பொருள்களின் பட்டியலில் இராமேசுவரம் நன்முத்துக்கள் இடம் பெற்றிருந்ததை ஆசிரியர் கெர்ர் என்பவர் சுட்டிக்காட்டியுள்ளார்,

இந்தக் கடற்கரை ஊர்களில் வாழும் முஸ்லிம் முதியவர்களை முத்துவாப்பா என்று (பாட்டனார் என்ற பொருளில்) செல்லமாக அழைத்து வருவதிலிருந்து இந்தப் பகுதி முஸ்லிம்கள், முத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்ததையும் அறியலாம். தமிழகத்தில் வேறு எந்த ஊரிலும் இல்லாத அளவில் பெரியப்பட்டினம் கிராமத்தில் முத்து, சங்கு குளிக்கும் முஸ்லிம் தொழிலாளிகள் தொகுதியாக வாழ்ந்துவருவதும் மார்கோபோலோவின் குறிப்புகளை உறுதிபடுத்துகின்றன.

மார்க்கோபோலோவின் காலத்திலேயே பாண்டிய நாட்டிற்கு வருகை தந்த வஸ்ஸாப என்ற பாரசீக வரலாற்றாசிரியர் இந்தத்துறைகளில் வந்து இறங்கி அரபிக்குதிரை வணிகத்தை மேற்பார்வையிட தனியான அமைப்பு ஒன்று சுல்தான் ஜாத்தியுத்தீன் தலைமையில் இயங்கியதாக வரைந்துள்ளார். கி.பி.111ல் தென்னாட்டில் படைபெடுத்து வந்த டில்லி சுல்தான் தளபதி குஸ்ருகான் பத்தன் நகரில் இருந்த அரபி தனவந்தர் சுல்தான் ஸராஜூதீனைக் கைது செய்து, அவரது உடமைகளைக் கொள்ளையிட்டு அவரையும் கொன்றதாகத் தெரிய வருகிறது. 

மேலும் அந்தப் பெரும் வணிகரது பேரழகியான மகளைத் திருமணம் செய்து வைக்குமாறு பலவந்தப் படுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த அந்தத் தனவந்தர் விஷமருந்தித் தற்கொலை செய்து கொண்டதாகவும் கவிதை பாடியுள்ளார், பார்சிக் கவிஞர் இஸாமி.

இதே பத்தனைப் பற்றி கி.பி. 1344ல் உலகப் பயணி இபுன் பதூதா, மதுரை மன்னன் சுல்தான் அஹ்ஷன் ஷாவின் அகதியாக மூன்ற மாதங்கள் பத்தனில் தங்கி இருந்ததாகவும், அங்கிருந்து ஏமன் நாட்டுக்குப்புற்பட்ட கப்பல் ஒன்றில் கொல்லம் சென்றதாகவும் பயணக்குறிப்புகளில் வரைந்துள்ளார்.

பட்டினம் என்ற தமிழச் சொல்லுக்குரிய இந்த பத்தன் அவருடைய குறிப்புகளில் இருந்து மதுரையிலிருந்து எளிதாகச் சென்று அடையக் கூடிய தொலைவில் இருந்து இருப்பதால், இந்தத்துறைமுகம் சோழநாட்டுக் கடற்கரையில் உள்ளது அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. அப்படியானால் அப்பொழுது பிரபலமாகி இருந்த தேவிப்பட்டினமாகவோ (மாலிபத்தன்) அல்லது ராமேஸ்வர பட்டினமாகவோ இந்த பத்தன் இருக்கலாமோ என்ற ஐயத்திற்கு இல்லையென்ற விடைதான் உள்ளது. 

இப்னது பதூதா வர்ணனை செய்யும் அளவிற்கு அந்தத்துறைமுகங்கள் பதினான்காம் நூற்றாண்டில் சிறப்புற்று விளங்கியதற்கான செய்திகள் எதுவும் இல்லை. இந்தக் காரணத்தினால்தான் இன்றைய கீழக்கரையும் அன்றைய பத்தன் இல்லையென உறுதியாகச் சொல்ல முடிகிறது. மேலும் மார்க்கோபோலோவின் பயணக் குறிப்புகளை புதிப்பித்துள்ள ஆசிரியர் யூல் பத்தன் இராமநாதபுரத்திறகு மிக அண்மையில் இருந்து இருக்க வேண்டுமென்ற முடிவிற்கு வந்துள்ளார். 

ஆசிரியர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் வஸ்ஸப், இஸன்பதூதா ஆகியோர்களது குறிப்புகளைத் தொடர்புபடுத்திப் படித்தால், பத்தன் மதுரை அரசின் துறைமுகம் என்பதும் மதுரைச் சீமைக்குள் நுழைபவர்களோ அல்லது அங்கிருந்து வெளியேறுபவர்களோ, இந்த துறைமுகம் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பது புலனாவதாகவும் மார்க்கோபோலோவும் இங்குதான் கரையிறங்கி இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை என்றும் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

மேலும் அவர் பத்தன், இன்றைய வேதாளை, மரைக்காயர் பட்டினம், பெரியபட்டினம் ஆகிய ஊர்களில் ஒன்றாக இருக்கவேண்டும் என 1928ல் ஊகித்துள்ளார். அவரது ஊகம் மார்க்கோபோலோ, இபுனு பதூதா ஆகியோர்களின் பயணக் குறிப்புகளை மட்டும் ஆதராமாகக் கொண்டது. அவைகளுடன் பிற உண்மைகளையும் அகழ்வாராய்வுத் தடயங்களையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்கும் பொழுதுதான் பெரிய பட்டினத்தின் தொண்மையும் வரலாற்றுத் தொடர்பும் உறுதிப்படுத்துகிறது.

இன்றைய பெரியபட்டினம் கிராமம் மன்னார் வளைகுடாவில் கடற்கரையிலிருந்து ஒரு கல் தொலைவில் உள்ளது. கடற்கரையையும் கிராமத்தையும், தென் பகுதியில் கப்பலாறு இணைக்கிறது. மழைக்காலங்களில் மட்டும் கடலுடன் இணைந்து காட்சியளிக்கிறது. பத்தனின் பெருமைக்கு நிலைகளனாக இருந்த இந்தப் பகுதியைக் கற்பனையில்தான் சித்ததரித்துப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. பட்டினப் பாலையைப் படித்துவிட்டுப் பூம்புகாரை நினைவில் கொள்வதுபோல, உலகப் பயணி இபின் பதூதாவின் குறிப்புகளைப் படித்துவிட்டுக் கப்பலாறைப் பற்றிய கற்பனையில் ஈடுபடலாம்.

கடற்கரையில் அமைந்துள்ள அழகிய பெரிய நகரம், புகழத் தக்க துறைமுகம். அங்கே முழுவதும் மரத்திலான அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. உறுதியான தூண்களினால் தாங்கி நின்ற இந்த அரங்கத்திற்குச் செல்வதற்கு மூடு வழி ஒன்று இருந்தது. அதுவும் மரத்திலானது, எதிரி நுழைந்தால், துறைமுகத்தில் உள்ள கப்பல்கள் அனைத்தும் இந்த அரங்கத்துடன் பிணைக்கபட்டுவிடும். வில்லேந்திய வீரர்கள் இந்த அரங்கத்தின் மேல் நின்று தாக்குதலுக்குத் தயாராகி விடுவர். எதிரியினால், இந்த வீரர்களைத் தாக்கி எவ்விதக் காயமும் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. ஏமன் நாட்டுக்குச் செல்லக்கூடிய எட்டுக் கப்பல்களும் நின்று கொண்டிருந்தன.

அடுத்து இந்த ஊரில் உள்ள கல்லாலான பள்ளி ஒன்று உள்ளது. இதனைப் பற்றி இபன் பதூதா குறிப்பிடுகிறார், இந்த ஊரில் அழகிய தொழுகைப்பள்ளி ஒன்று உள்ளது. முழுவதும் கல்லாலானது. இங்கே பூஜ்யர், ஷேக் முகம்மது மஜ்தூபி என்ற புனிதரைக் சந்தித்தேன், அவருடன் முப்பது இறையடியார்களும் இருந்தனர். அவர்களில் மோன நிலையில் இருந்த ஒருவர் தன்னுடன் சிங்கம் ஒன்றை வைத்திருந்தார். மற்றொருவர் புள்ளிமான் ஒன்றும் வைத்து இருந்தார். அவை இரண்டும் ஒரே இடத்தில் இருந்தன. எவ்வித முரண்பாடும் இல்லாமல் தற்பொழுது முகப்பு மட்டும் மாற்றம் பெற்று அப்படியே இருக்கிறது, இந்தப் பள்ளிவாசல்.

இந்தப் பள்ளியின் முகப்பில் இரண்டு கபுறுஸ்தானிகள் (புதைகுழிகள்) உள்ளன. இவைகளில் தலைப்புக் கற்களில் (மீஸான்) ஒன்றில் குடையும் பிறிதில் நான்கு இதழ்கள் கொண்ட மலரின் வடிவம் பொறிக்கப்பட்டு அரபி எழுத்துகளுடன் காணப்படுகின்றன. கி.பி. 1921ல் இவைகளை ஆராய்ந்த அரபி ஆராய்ச்சியாளர்கள் ஒருவர், திருக்குர்ஆனின் திருவசனங்களுடன் (55:26) ஒரு பெண்ணின் தியாகத்தையும் குறிப்பிடுவதாகவும் வரைந்துள்ளார் .

அடுத்து இந்தப் பள்ளியிலிருந்து கடற்கரை செல்லும் வழியில் புஞ்சை ஒன்றில் இரண்டு நீண்ட கற்தூண்கள் பூமியில் புதையுண்டு இருக்கின்றன. இந்த இடத்தை கோட்டை வாசல் என இந்த ஊர் மக்கள் வழங்குகின்றனர். அவைகளுக்கு அண்மையில் மற்றும் மூன்று கற்கள் ஆய்தப் புள்ளி போல நடப்பட்டு உள்ளன. மார்க்கோபோலோ, கரை இறங்கிய பட்டினத்தில் ஒரு ஸ்தூபி நாட்டப்பட்டு இருந்ததாகக் குறிப்பிட்பட்டுள்ளது மற்றும் கி.பி. 1340ல் ஹொய்ராள மன்னனான வீரபல்லாள தேவர், மதுரை சுல்தான்களை வெற்றி கொண்ட நினைவாக சேது மூலத்தில் வெற்றித்தூண் ஒன்றை எழுப்பியதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இங்கிருந்து சேது அணை இரண்டு கல் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது). இந்த இரண்டு ஜயஸ்தம் பங்களின் சிதைவாக இந்தக் கல்தூண்கள் இருக்கலாம் என்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. முழுமையான அகழ்வு ஒன்றினால்தான் இதனை நிரூபிக்க முடியும்.

மேலும், இந்தக் கிராமத்தின் தெற்கு தென்மேற்குப் பகுதிகள் மேடாக உள்ளன. கிராமத்திற்கும், கிராமத்தை யொட்டியும் அறுபதுக்கு மேற்பட்ட குளங்கள் உளளன, வேறு எந்தக் கிராமத்திலும் இந்த அளவில் குளங்கள் இருப்பதில்லை காலப் போக்கில் மண் மேடிட்டு நிலை குலைந்த பேரூரின் தாழ்வான பகுதிகள் இங்ஙனம் குளங்களாக அமைந்து விட்டன போலும். பொதுவாக இந்த ஊரில் பெலும்பாலான இடங்களில் தோப்பு, கிணறு அமைப்பதற்கு நிலத்தைத் தோண்டும் பொழுது, நல்ல கற்களினாலான கட்டுமானம் தென்படுகிறது, அவைகளை உடைத்துக் கற்களை வீடுகள் கட்டுவதற்கு இன்றளவும் இந்த ஊர் மக்கள்பயன்படுத்தி வருகின்றனர். இத்துடன் அவ்வபொழுது பழங்கால பொருட்களும் கிடைக்கின்றன.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் கிராமத்தில் ஆராய்ந்து எடுக்கப்பட்ட பல வகையான நாணயங்களைப் பற்றிய விவரங்கள் ஈண்டு கொடுக்கப்பட்டுளன. அந்த நாணயங்களை வகைப்படுத்தி ஆய்வு செய்ததில் மிகவும் பழமையான சங்ககாலச் செப்பு நாணயம் ஒன்றும் எந்த ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டது என இனம் கண்டு கொள்ள இயலாத மூன்று சிறிய தங்கக் காசுகளும் கிடைத்துள்ளன. சங்க காலச் செப்புக் காசு நீண்ட சதுர வடிவில் ஒரு புறம் மட்டும் யானை இலச்சினையுடலும் திரிசூலத்தூடனும், சந்திரனுடனும் காணப்படுகிறது. தங்கக் காசுகளில் ஒரு புறம் மூன்று வரிசையில் பதினொரு புள்ளிகளைத் தாங்கிய ........திகளும் மறு புறத்தில் ஒன்பது புள்ளி......மேல ஆரம் போன்ற யோடும் .........தனிப்புள்ளியொன்றும் அதனையடுத்த வளை.. புள்ளி யொன்றுமாகக் காட்சியளிக்கிறது.

பல்லவர் காசு:
இங்கு கிடைத்துள்ள ஒரே ஒரு காசு பல்லவர் ஆட்சியைக் குறிப்பது. ஒரு புறம் எருதும், சந்திரனும் பொறிக்கபட்டது.

சோழர் காலக் காசுகள்:
இங்கு கிடைத்துள்ள காசுகள் அனைத்தும் செப்புக்காசுகள் இவை பெரும்பாலும் நின்ற நிலையிவட மனிதன் ஒருவன் நிற்பது போன்றும் அருகில் திரிசூலம், தண்டம் ஆகியவை ஒரு புறமம், மறுபுறத்தில் அமர்ந்த நிலையில் உள்ள மனிதனது உருவமும் உடையதாக இருக்கின்றன. இந்தக் காசுகளை காலக் காசு என இங்குள்ள மக்கள் சொல்லுகின்றனர். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டைப் பராமரித்த இலங்கைத் தண்டநாயகன் கொற்கையிலிருந்து வெளியிட்ட ஈழக்காசுகள் தான் அவை. 

மீண்டும் பாண்டிய நாடு சோழர் பிடியில் வந்தபொழுது இதே காசுகளை சிறு மாற்றங்களுடன் வெளியிட்டதாகத் தெரிய வருகிறது. ராஜ ராஜ ஸ்ரீ என்ற சொற்கள் தேவநாகரி லிபியுடன் காணப்டுகின்றன. அவைகளில் ராஜராஜ சோழனது, பாண்டியனது மீன்களும், புலியும் ஒரு சேரப் பொறிக்கப்பட்ட செப்புக் காசு ஒன்றும் கிடைத்துள்ளது.

பாண்டிய காசு:
இந்தக் காசுகள் அனைத்தும் பன்னிரெண்டாம் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சோழர்களது காசுகளைவிடச் சிறியதாகவும் நிறையில் குறைவாகவும் உள்ளன. இவற்றில் சுந்தர பாண்டியனது செப்புக்காசுகள் நிறைய உள்ளன. அவனது எல்லாத்த தலையானான பூதல கச்சி வழங்கிய பெருமானட் சுப என்ற தொடர்களுடன் வெளியிடப்பட்டவை. இவைகளைத் தவிர பிற்காலப் பாண்டியர்களது, புவனே வீரன் சமரகோலா கலன் ஆகியோர்களது காசுகளும் இங்கே கிடைத்துள்ளன. இவை அனைத்திலும் இரண்டு மீன்களும் அமர்ந்த நிலையில் உள்ள மனித உருவமும் பொறிக்கபட்டுள்ளன. சில காசுகளில் மட்டும் சிறு சிறுமாற்றங்கள் உள்ளன.

மதுரை சுல்தான்கள்:
டில்லிப் பேரரசிலிருந்து தன்னுரிமை பெற்று 1333 முதல் 1378 வரை மதுரையைக் கோநகராகக் கொண்டு மதுரை இராமநாதபுரம் சீமைகளையும் தஞ்சை, திருச்சி மாவட்டப் பகுதிகளையும் ஆண்ட மதுரை சுல்தான்கள் அறுவரில் மூவருடைய காசுகள் கிடைத்துள்ளன. முகம்மது அஹ்ஷன் ஷா, சுல்தான் முபாரக்ஷா, பக்ருதீன் அஹமது ஆகியோர் வெளியிட்டவை. இவை தவிர இவர்களது காலத்தில் டில்லியில் ஆட்சி புரிந்த முகம்மது பின் துக்ளக்கின் வெள்ளிக் காசு ஒன்றும், செப்புக்கதாசுகளம் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அக்பர் சக்கரவர்த்தியின் சமசதுர வடிவத்திலான வெள்ளிக்காசு ஒன்றும் (வேலைப்பாடு மிக்கவை) கிடைத்துள்ளன).

பிற மன்னர் காசுகள்:
இந்தக் காசுகளைத் தவிர பிற்கால விஜயநகர மன்னர்கள், தளவாங்களது 16 வர் 17 வது நூற்றாண்டைச் சேர்ந்தவையும், வடிவில் மிகவும் சிறியவையுமான செப்புக்காசுகள் பலவும் இங்கு அகழ்ந்து எடுக்கபட்டு இருக்கின்றன. இவைகளில் கிருஷ்னன், அனுமன் ஆகிய கடவுள் வடிவங்களும் ஸ்ரீசக்கரம் போன்ற பிற சின்னங்களும் உள்ளன. மற்றும், இந்தப் பகுதியயை ஆண்ட சேது மன்னர்களது செப்புக் காசுகளும் கிடைத்துள்ளன. இவைகளில் ஒரு புறம் சேதுபதி என்ற எழுத்துக்களும், மறுபுறத்தில் கணபதியின் வடிவம் பொறிக்கப்பட்டுள்ன. தொடர்ந்து இந்தப்பகுதியில் 17வது நூற்றாண்டின் இறுதியில் வியாபாரச் செல்வாக்குடன் விளங்கிய டச்சுக்காரர்கள் தங்கள் அரச இலச்சினையுடன் கி.பி. 1704, 1750, 1760 வருடங்களில் வெளியிட்ட செப்புக் காசுகளும் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் தராசுக் சின்னத்துடன் அரவி, ஆங்கிலச் சொற்களுடன் வெளியிட்ட செப்புக் காசுகள் சிலவும் அகழ்ந்து எடுக்கபட்டு இருக்கின்றன.

மேலும், இந்த சிற்றூரை கடந்து விட்ட பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொடர்பு படுத்தி நினைவு படுத்தும் ராஜபாட்டையும், அதில் அமைந்துள்ள பழமையான வட்டக் கிணறும் உள்ளன. இந்தக் கிணறு சோழ வளநாட்டு புலியூர்க் கூற்றத்தைச் சேர்ந்த சிறுத் தொண்டன் என்பவரால் அமைக்கப்பட்ட தர்மம் என்பதை அந்தக் கிணற்றின் உட்புறத்தில் உள்ள சிதைந்த கல்வெட்டு சுட்டுகிறது. கல்வெட்டில் கையாளப்படுள்ள எழுத்துகளின் வடிவத்திலிருந்து இந்தக் கல்வெட்டுக் கிணறு பன்னிரென்டாவது நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை அறுதியிட முடிகிறது. வலுவிழந்த பாண்டிய நாடு பத்து, பதினொன்று, பன்னிரென்டாவது நூற்றாண்டுகளில் சோழர்களது நேரடியான ஆட்சியிலும், பிடிப்பிலும் இருந்து வந்தக் காலை, சோழர் நாட்டு பிரதிநிதியான சிறுத்தொண்டன் என்பவர் அந்தக் கிணற்றையும் இந்தக் கிணற்றையொட்டிய இடத்தில் இருந்து அழிந்து விட்ட அன்ன சத்திரத்தையும், இராமேசுவர தலயாத்திரை செல்லும் யாத்ரீகர்களது பயனுக்காக அமைத்திருந்ததார் எனக் கொள்வது பொருத்தமுடையதாக இருக்கிறது. இதனைக் தொடர்ந்து கோவில் ஒன்று அமைந்து இருந்து அழிந்து விட்டதாகவும் அதனை ஈஸ்வரன் கோவில் என இன்றும் மக்களால் வழங்கபட்டு வருகிறது. இன்றும் சற்று தொலைவில் உள்ள ஊரின் வடகிழக்கின் பகுதியில் டச்சசுக்காரர்களால் அமைக்கப்பட்ட சர்வேஸ்வரன் தேவலாயம் முத்துப்பேட்டைஎன்ற பகுதியில் உள்ளது. சேது மன்னரது தன்னறியில் வளர்ந்த அந்த ஆலயம் இன்று நன்கு பராமரிக்கபட்டு வருகிறது. முந்தைய நாளங்காடியாக விளங்கிய இந்தப் பகுதியல் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

இங்ஙனம் தொண்மையை தொடர்பு படுத்திச் சொல்லும் நூல்களுக்கு ஆதாரமாக நாணயங்களும், கல்வெட்டு போன்ற தடயங்களும் மன்னார் வளைகுடாவில் உள்ள தொண்டி, தேவிப்பட்டினம், வேதாளை, மரைக்காயர் பட்டினம், கீழக்கரை ஆகிய பழம்பதிகளில் இதுவரை அகழ்ந்து எடுக்கப்படவில்லை. பிற ஆதாரங்களும் வெளிபபடுத்தப்படவில்லை. ஆதலின், மேலே சுட்டிக் காட்டப்பட்ட சான்றுகளை பொருத்தமுடைய, சரியான ஆதாரங்களாகக் கொள்ளும் பொழுது, பன்னிரென்டாம் நூறாறாண்டில் பராக்கிரம பட்டினமாகவும், பவித்திர மாணிக்கபட்டினமாகவும் பதின்மூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் பத்தன் பத்னி எனவும் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ள பெருநகர் இன்றைய பெரியபட்டினம் என்று தீர்க்கமான முடிவிற்கு வருவது எளிதாகியுள்ளது.

பிரபல வரலாற்றாசிரியா் டாக்டா் முகவை எஸ்.எம் கமால்

பிற நாடுகளில் தமிழகத் தொடர்பு:
தமிழகம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கடல் வழியாக வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தது என்பது சங்க இலக்கியங்களாலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களாலும், அரிக்கமேடு முதல் கொடுமணல் ஈறாகப் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்வுகளாலும் தெளிவாக்கபட்டுள்ளது.

சீனம், கிழக்காசிய நாடுகள், இலங்கை, யவனம் முதலிய நாடுகளுடன் சங்ககாலத் தொடர்புகள் தமிழகத்தில் பல இடங்களில் கிடைத்தாலும் வெளிநாடுகளில் பிற்காலத் தொடர்புச் சன்னங்கள் கிடைத்தனவே அன்றி முற்காலச் சின்னங்கள் இதுவரை கிடைக்கப் பெறாமலிருந்தன.

அந்நிலை இன்று ஓரளவு மாறித் தமிழகப் பண்டைச் சின்னங்களும் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. எகிப்து நாட்டு நைல் நதிக்கரையில் 'கேணன்', 'சாதன்' எனத் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பனை ஓடுகளை அமெரிக்கத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதைத் தமிழ் அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

அண்மையில் ஜப்பான் நாட்டுத் தென்கிழக்கு ஆசிய ஆய்வு நிறுவன ஆதரவில் வரலாற்று ஆய்வாளர்கள் மலேசியக் கடலாய்விலும், தாய்லாந்திலும் கன ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் தாய்லாந்தில் சங்ககாலச் சோழரின் சதுரப் புலிக் காசினையும், 'பெரும்பதன் கல்' என்று தமிழி எழுத்துப் பொறிக்கப்ட்ட சிறு கல்லையும் கண்டறிந்து வந்துள்ளனர். இது தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் செய்தியாகும்.

துறைமுகங்கள்:
பல்லவர் கால முதலே தமிழகக் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் செயல்படத் தொடங்கின. சோழர்கள் காலத்தில் அலைகடல் நடுவுகள் பலகலம் செலுத்திய அத்துறைமுகங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்;கின. பிற்காலத்திலும் 19ஆம் நூற்றாண்டு வரை கடல் வாணிகம் நடைபெற்றமைக்குப் பல சான்றுகள் உள்ளன.

துறைமுகங்கள் 'கரைதுறை' என அழைக்கப்பட்டன, பட்டினங்கள் எனவும் அழைக்கபட்டன. அவை நாகப்பட்டினம், ஜயங்கொண்ட சோழப்பட்டினம், வீரசோழன் பட்டினம்;, சாளுவ நாயக்கன் பட்டினம், பாசிப்பட்டினம், சுந்தர பாண்டியன் பட்டினம், கண்கொள்ளான் பட்டினம், தொண்டிப் பட்டினம், உலகமாதேவிப்பட்டினம், முடிவீரன் பட்டினம், மரைக்காயர் பட்டினம், இராமேசுவரப் பட்டினம், பெரியப் பட்டினம், சீவல்லப்ப பட்டினம், குலசேகரப் பட்டினம் என்பவைகளாகும். 

அரிக்கமேட்டிலும் அழகன்குளத்திலும் ரோமானியத் தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூம்புகார், கொற்கை, அழகன்குளம், அரிக்கமேடு, வசவசமுத்திரம், மாமல்லை ஆகியனவும் கீழக்கடல் பகுதியில் உள்ள முக்கிய நகரங்களாகும். இத்துறைமுககங்கிளல் 'ஏறுவன இறங்குவன' என்றும் 'ஏறுசாத்து' 'இறங்குசாத்து' என்றும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருள்கள் குறிக்கப்பட்டன. அப்பொருட்களை ஒரு கல்வெட்டு எடுப்பன, நிறுப்பன, விரிப்பன, பிடிப்பன, அளப்பன, முகப்பன, அழுகல் சரக்கு எனவும் அழைக்கிறது.

பேட்டை சந்தை முதலிய வாணிகத் தலங்கள் பெருகின, பேட்டைகள் பொது வணிக இடமாக இருந்தவை ஆட்டுப்பேட்டை, நெல்லுப்பேட்டை எனத் தனி வணிக இடங்களாகவும் மாறின. தொழிற்கூடங்கள் 'பட்டை' என்று அழைக்கபட்டன. பதினெட்டுப் பட்டடை என்பது வழக்கு. கடற்கரையில் அமைக்கப்பட்ட இத்தொழிற்கூடங்கள் (குயஉவழசநைள) 'பெத்திரி வீடு' எனப்பட்டன.

பொருள் சேமிப்பிடங்கள் கிட்டங்கி, கிடங்கு, கட்டியம் என அழைக்கபட்டன. தானியங்கள் பொதி, சுமை, கண்டி, கரிசு, மூட்டை, பாக்கம் என்ற அளவுகளில் குறிக்கப்பட்டன. நிறுக்கப்பட்ட பொருள்கள் துலை, கட்டி, பாரம் எனவும், எண்ணெய் முதலிய தரவப் பொருட்கள் ஆடம், காணம் எனவும், துணிகள் கட்டு, சிப்பம் என்ற அளவுகளிலும் குறிக்கப்பட்டன.

துறைமுகங்களில் பொக்குவரத்துக் கப்பல், பாறு, படகு, தோணி, சுரிப்பு ஆகியவை பயன்படுத்தப்பட்ன.

பெரியப்பட்டினம்:
கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களில் இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம் பெரியப்பட்டினம் மிக முக்கியமான துறைமுகம் ஆகும். மார்க்கோபோலோ, இபின் படுடா போன்றவர்கள் ஃபக்தன் அல்லது பத்தன் எனக் குறிப்பிட்டது இவ்வூரையேயாகும். பாண்டிய மன்னர்கள் பெயரால் 10 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் பராக்கிரம பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் பவித்திர மாணிக்கப்பட்டினம் எனச் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. 14 ஆம் நூற்றாண்டு சீன நூல் ஒன்றில் (வுயi-i-உhih-டரஉh) 'தா பத்தன்' எனக் குறிக்கப்பட்டுள்ளது. தா என்றால் பெரிய என்று பொருள். தாபத்தன்-பெரியபட்டினம் ஆகும். அமிர்குஸ்ரு, பரிஷ்கா போன்ற ஆசிரியர்களும் பெரியபட்டினத்தைப் பத்தன், பத்னி எனவும் அழைத்தனர்.

மகாவம்சத்தில்:
பாண்டியர் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கைப் படைத் தலைவன் ஜகத்விஜயத் தண்டநாயகன் 1170-ல் தமிழ் நாட்டின் மீது படைகொண்டு வந்தான். குலசேகர பாண்டியனுக்கு எதிராகப் பராக்கிரம பாண்டியனுக்கு ஆதரவாக இராமேசுவரம் தீவைக் கைப்பற்றி எதிர்கரையில் இறங்கியபோது கண்ட பெரியப்பட்டினம் நகர வருணனை இலங்கை மகாவம்சத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

பராக்கிரம பட்டினம் மூன்று சுற்றுக் கோட்டை மதில்களையும், பன்னிரண்டு வாயில்களையும் உடையது என்று கூறப்படுகிறது. பெருநகரான அப்பட்டினத்தைக் கைப்பற்றிப் பலப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் இலங்காமணி, ஈழக்காடு, ஈழம்படல், இலங்கைர் மேடு, ஈழவனூர், ஈழவன் கோட்டை என்ற பெயர்களில் இன்றும் ஊர்கள் இருப்பது இலங்கைத் தொடர்பை நினைவூட்டுகிறது.

1293-ல் சீனத்திலிருந்து இலங்கை வழியாகத் தமிழகம் வந்த உலகப் பயணி மார்க்கோபோலோவும், இபின் படுடாவும் பெரியபட்டினக் கரையில்தான் தரை இறங்கினர்.

அரேபிய சுல்தான் ஆட்சி:
கி.பி. 1188-ல் மதினத்திலிருந்து காயல்பட்டினத்திற்குச் சமயப் பணிக்காக வந்த சுல்தான் செயது இபுறாகீம் பவித்திர மாணிக்கப்பட்டினத்தில் ஆட்சிபுரிந்த விக்கிரம பாண்டியனைக் குலசேகரனுடன் நட்புரிமை பாராட்டி 1199 வரை இங்கு ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது.

சுல்தான் சையது இபுறாகீம் வாழ்க்கையைத் தமிழ்க் காப்பியமாகச் செய்த வண்ணக்களஞ்சியப் புலவர் பவித்திர மாணிக்கப்பட்டினம் மதுரை மூதூரையும் விஞ்சிய வளமுடையதாகக் குறிக்கிறார்.

திருப்புல்லாணிக் கல்வெட்டில்:
இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள திருப்புல்லாணிக் கல்வெட்டு ஒன்று பவித்திரமாணிக்கப்பட்டினம் எங்குள்ளது என்பதை விளக்குகிறது. 1251 முதல் 1271 வரை மதுரையை ஆட்சிபுரிந்த சடையவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டில் பவித்திரமாணிக்கப் பட்டினத்தில் உள்ள சோனச் சாமந்தப் பள்ளிக்கு இறையிலியாக மருதூர், ஆம்புத்தூர் ஆகிய ஊர்களை வழங்கினான். 'கீழ்ச்செம்பிநாட்டு பவித்திர மாணிக்கப்பட்டினக் கீழ்ப்பால்' என்று குறிக்கப்படுகிறது. திருப்புல்லாணிக் கோயிலிலிருந்து நான்கு மைல் தொலைவில் கிழக்கே அமைந்திருப்பதும் இன்றைய பெரியப்பட்டினமும், பவித்திரமாணிக்கப்பட்டினமும் ஒன்றே என்பதை உறுதிப்படுத்துகிறது.

வெளிநாட்டார் குறிப்புகளில்:
மன்னார் வளைகுடாவில் பெரியப்பட்டினம் பகுதியில் முத்துக் குளிப்பதைப் பற்றி மார்க்கோபோலோ விரிவாக எழுதியுள்ளார். முத்துக் குளிக்கச் செல்லும் படகுகள் 'பத்தலாறு' என்ற இடத்தில் ஒன்று கூடுகின்றன. அந்தப் பத்தலாற்றைப் பெரியபட்டினம் அருகே உள்ள 'கப்பலாறு' என்று ஆய்வாளர் எஸ். எம். கமால் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்.

இராமேசுவரம், திருப்புல்லாணி போன்று பெரியப்பட்டினம் அருகேயுள்ள கொயில்கட்கு முத்துக் குளித்தலில் ஒரு பங்கு கொடையாகக் கொடுக்க வேண்டும் என்று செப்பேடுகள் கூறுகின்றன. உள்ளிக் கோட்டையில் ஏற்றுமதியாகும் பொருள்களில் இராமேசுவரம் பகுதி நன்முத்துக்கள் இடம் பெற்றிருந்தன. பெரியப்பட்டினத்தின் ஒரு பகுதிக்கு முத்தப்பேட்டை என்றே பெயர்.

பெரியப்பட்டினத்தில் அரேபியக் குதிரைகள் வ்நது இறங்கியுள்ளன. அவைகளைக் கண்காணிக்கக் குழு ஒன்றும் இயங்கியது. இபின் படுடா 1344-ஆம் ஆண்டு பத்தனில் மூன்று மாதங்கள் மதுரை சுல்தானின் விருந்தாளியாகத் தங்கியிருந்தார். பெரிய பட்டினத்தை அழகிய பெரிய நனரம் என்றும், சிறந்த துறைமுகம் என்றும், மரத்தலால் செய்ய்பட்ட அரங்கமும் மூடுவழியும் இருந்ததென்றும், போர் வீரர்கள் காத்திருந்தனர் என்றும் ஏமன் நாட்டுக்குச் செல்ல எட்டுக் கப்பல்கள் நின்றன என்றும் இபின் படுடா கூறிளள்ளார்.

இங்க கல்லால் கட்டப்பட்ட தொழுகைப் பள்ளியைப் பற்றி அவர் குறிப்படகிறார். அத்தொழுகைப் பள்ளி இன்றும் உள்ளது.

அகழாய்வு:
வரலாற்றுச் சறப்புமிக் உலகப் பயணிகள், உயர்வாக்குறித்த பெரியபட்டினத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கலவெட்டியல் துறையினர் அகழாய்வு நடத்தினர். அ;குள்ள் நத்தமேடு, களிமண் குண்டு ஆகிய மேட்டுப்பகுதிகள் கண்டறியப்பட்டன. அவை முறையே 25, 40 ஏக்கர் பரப்புள்ளவை, இவ்விரு பகுதிகளும் பெரியபட்டினத்திற்கு மேல் எல்லையில் உள்ளன.

இங்க நடத்தப்பட்ட அகழாய்வில் சீனநாட்டு உயர் ரகப்பீங்கான் துண்டுகள் (ஊநடயனழn றுயசந) மிக அதிகமாகக் கடைத்தன. மதுரைப் பாண்டியர், சுல்தான், சோழர் காசுகளுடன் சீனக் காசும் கிடைத்துள்ளது. இது வட்டக்காசில் நடுவே சதுரமான துவாரம் உள்ள காசாகும். சீனப் பெலுட்கள் கி.பி. 9 அம் நூற்றாண்டிற்கும் 14 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டவை.

உறை கிணறுகள் சில கண்டறியப்பட்டன. இங்குள்ள மூன்று தூண்களைக் கோட்டை வாசல் என அழைக்கின்றனர். இங்கு கிடத்த சீனப் பீங்கான்கள் தென் கிழக்காசிய நாடுகளிலும் இலங்கையிலும், கிழக்கு ஆப்பிரிக்க கரைப் பகுதிகளிலும் கிடைத்துள்ளன.

சோழர்கட்கும் சீன நாட்டுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன. சீனாவில் தமிழ்க் கல்வெட்டு கண்முடுபிடிக்கப்பட்டுள்ளது. பாண்டியர் சார்பில் தூதுவர்கள் சீனம் சென்றுள்ளனர். கிழக்கு - மேற்கு நாடுகளின் கடல்வழிப் பயணத்தில் பெரிய பட்டினம் மிகவும் முக்கிய நகராக விளங்கிளுள்ளது என்பதில் ஐயமில்லை.

ஜப்பான் பேராசிரியர் நொபுரு கராஷிமா அவர்கள் 1987 ஆம் ஆண்டு கொலாலாம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெரியபட்டினம் அகழாய்வு குறித்துச் சிறப்புரை ஒன்றை நிகழ்த்தினார்.

தமிழ்ப் பல்கலைக்கழகக் கலவெட்டில் முறை பெரியபட்டினத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபொது நொபுரு கராஷிமா, யோஜி ஒயாகி, ஈஜி நிட்டா பொன்ற ஜப்பான் நாட்டுப் பேராசிரியர்களும், சென்னைப் பேராசிhயர் டாக்டர் கே.வி. இராமன் அவர்களும் வருகை பரிந்து ஆலோசனை வழங்கினா. டாக்டர் ஒங். சுப்பராயலு, டாக்டர் கே. ராஜன் ஆகியோர் நாகப்பட்டினம் வரை கழக்குக் கடற்கரையில் பல பகுதிகளில் கள ஆய்வை மேற்கொண்டனர். 

About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com