Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

ஆமை புகுந்த வீடு உருப்படாது காரணம்

சனி கிரகம் மெதுவாக சுற்றி செல்வதால் அதற்கு ஆமை என்று தமிழில் வழக்கு உண்டு, குறிப்பாக நான் சந்தித்த மீனவர்களிடம் 

மெதுவாக சுற்றி செல்லும் கிரகத்தை குறிக்கும் சமஸ்க்ரித சொல், மெதுவாக செல்லும் ஆமைக்கும் குறிப்பாக இரண்டிற்கும் பொதுவாக உள்ளதால் ஆமைக்கு அவ பெயர் வந்ததோ என்னோவோ, எது எப்படி இருந்தாலும் 

புத்த மதத்தில் சனி தண்டம் ஏந்தியவராய், ஆமை வாகனம் கொண்டவராகவும் பார்க்க படுகிறார்.  வைணவர்களுக்கு கூரம் அவதாராகவும் உள்ள ஆமையை உலக கடற்கரை மக்கள் ஆமையை தெய்வமாக வணங்கியும், புலன்களை அடக்க ஆமையை வள்ளுவர் உதாரணம் காட்ட, சித்தர்கள் ஆமைகள் போல் சுவாசித்தால் நீண்ட நாள் உயிரோடு இருக்கலாம் என்ற சொல்ல 

கடல் தூதுவன், (ஆமைகளும், வாத்துகளும், முதலைகளும், பென்குயன் போன்றவை நிலத்திற்கும் கடலுக்கும் உள்ள தொடர்பு உள்ளவைகள் என்று கருதபட்டாலும் ஆமைகள் தனது இனபெருக்கதை நிலத்தில் செய்வதால் மற்றும் தாய்மையின் அடையாளமான ஆமையை செல்வம் என்று பல கடற்கரை மக்கள் கருதுவதால் கடல்ஆமைகளைக் கடல் தூதுவன் என கூறுவர் ) கடல் துப்புரவாளன், கடல் வழிகாட்டி என்ற பல நல்ல காரணிகள் இருந்து வருவதால் ஆமைகளை உணவிற்காக உண்பவர்களையும்,  ஆமைகள் அபசகுனம் என்று சொல்லி மக்களிடம் பணம் பறிக்கும் ஜோதிடர்களையும், ஆமைகள் இருந்தால் அபசகுனம் என்று சொல்லி சென்னை தேசிய விலங்கியல் அருங்காட்சியகத்தில் ஆமைகள் வைக்காத அதிகாரிகளையும் திருத்தி, மூட நம்பிக்கைகளை திருத்தி மனிதர்கள் வாழும் உலகத்தில் இயற்கையின் அங்கமான புவியின் மூத்த இனமான ஆமைகளை பாதுகாப்பது நம்மை போன்ற பலரின் செயலாகும்.


The word shani also denotes the seventh day or Saturday in most Indian languages.

The word shani(शनि) comes from Śanayē Kramati Saḥ (शनये क्रमति सः), the one who moves slowly, because Saturn takes about 30 years to revolve around the Sun.
source http://en.wikipedia.org/wiki/Shani

சிவ பாலசுப்ரமணி 
ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவம்

பன்மீன் கூட்டம் - திருக்கை


உழுவை

(முக்கோண வடிவ கொம்பு உடையது)

1. கூன் உழுவை

2. கச்சி உழுவை

3. பூந்தி உழுவை

4. பால் உழுவை (படங்கன்)

5. புள்ளி உழுவை

6. கள் உழுவை (பண்டகள்)

7. மான் உழுவை

8. மட்டி உழுவை (மட்டி மிக்க) (இதன் உடல் முழுவதும் முள்ளாக இருக்கும்)

9. வெளிச்சி ( தும்பிலி)


திருக்கை

10. மணத்திருக்கை

11. புள்ளித்திருக்கை (வழுவாடி)

12. கட்டித் திருக்கை

13. ஒலைவாலன் திருக்கை

14. மணிவாலன் திருக்கை

15. சங்குவாயன் திருக்கை ( புள்ளி சங்குவாயன் திருக்கை)

16. யானைத் திருக்கை

17. வட்டத் திருக்கை

18. செந்திருக்கை

19. முண்டக்கண்ணன் திருக்கை

20. அம்மணத் திருக்கை

21. அடல் திருக்கை

22. செம்மண் திருக்கை

23. களித் திருக்கை(பெரிய திருக்கை)

24. அட்டணைத் திருக்கை பெருந்திருக்கை)

25. பேய்த் திருக்கை

26. அழுக்குத் திருக்கை

27. சுண்ணாம்புத் திருக்கை

28. கழக்குத் திருக்கை

29. பூவாளித் திருக்கை

30. பூவாரித் திருக்கை

31. கொம்புத் திருக்கை

32. குருவித் திருக்கை

33. வல்வடித் திருக்கை

34. கொட்டுவா திருக்கை

35. சுருள் திருக்கை

36. புளியன் திருக்கை (புள்ளியன் திருக்கை)

37. கள்ளத் திருக்கை

38. வருக்கை

39. தப்பாக்குழி

40. சோனகத் திருக்கை

41. கருவால் திருக்கை (கருவாலன்) சதை கருப்பாக பஞ்சு போல இருக்கும்.

42. ஓட்டைத் திருக்கை

43. கோட்டான் திருக்கை

44. பஞ்சாடுத் திருக்கை

45. மட்டத் திருக்கை

46. சப்பைத் திருக்கை

47. செப்பத் திருக்கை

48. நெய் திருக்கை

49. களுவாய்

50. சீமான் திருக்கை

51. ஆடாத்திருக்கை (ஆடாமவுலித் திருக்கை)

52. உள்ளான் திருக்கை

53. கண்டாங்கி

54. ஊழித் திருக்கை

55. பூவாலித் திருக்கை

56. செம்மூக்கன் திருக்கை

57. கூண்டத் திருக்கை

58. சமன் திருக்கை

59. சவுக்குத் திருக்கை

60. தடங்கான் திருக்கை

61. வண்ணாத்தித் திருக்கை

62. பாஞ்சாலன் திருக்கை

63. கொப்புத் திருக்கை

64. சங்கோசான் திருக்கை

65. கட்டுத் திருக்கை

66. கண்ணாமுழித் திருக்கை

67. முள்ளுத் திருக்கை

திரச்சி

68. கண்ணந் திரச்சி

69. அரத் திரச்சி

70. தும்பத் திரச்சி

உலுக்கு (மின்சாரத் திருக்கை)



71. புள்ளி உலுக்கு (பெரியது)

72. மான் உலுக்கு

73. தவிட்டு உலுக்கு, (குட்டி உலுக்குத்தான் அதிக மின் அதிர்வைக் கொடுக்கும்)
– மோகன ரூபன்

இரத்த பூமி - பாகம் 2


1540 களில் போர்த்துகீசியரின் ஆளுமைக்கு உட்பட்ட தென் தமிழக கடற்கரை காமரின் கோஸ்ட் என அழைக்கப்பட்டது. சவேரியாரின் பதவியேற்பின் போது சேசுசபயின் தலைமை இடமாக இருந்த கன்னியாகுமரி வடக்கே மன்னார் வரை உள்ள பரதவர்களின் ஆன்மீக தேவை மற்றும் பாதுகாவல் கருதி மணப்பாடுக்கு இடம் பெயர்ந்தது. ஏற்கனவே பன்னெடுங்காலமாக பரதவ பாண்டியரின் தலைமை இடமான கொற்கை மணல் மூடிய பின் பழையகாயல் தலைமை இடமாகி, பின்னர் புதிய துறையான புன்னக்காயல் பாண்டியம் பதியாக விளங்கியது.

அங்கிருந்து மேலாக தாமிரபரணிஆற்றின் வழி படகு சரக்கு போக்குவரத்து பரதவரின் உரிமையாய் இருந்தது. இன்றைய திருவைகுண்டம் அணை உருவானதற்கு முன்பே ஏரல் பகுதியில் குறுக்கப்பட்ட தாமிரபரணியில் மதகும் மரப்பாலமும் அமைந்திருந்தது. கொற்கை குரும்பூர், ஏரல், ஆழ்வார் திருநகரி, கருங்குளம், செய்துங்கநல்லூர், நெல்லை, வீரவநல்லூர், என தாமிரபரணி கரையில் பரதவர்கள் உள்நாட்டிலே மீன்சந்தை படுத்துதல் வணிகம் என மறவர்களோடு பங்காளிகளாக வாழ்ந்து வந்தனர்.

தாமிரபரணி ஆற்றுப்படுகை கப்பல் போக்குவரத்து கப்பல் படைதளம் போன்ற நிர்வாக காரணங்களுக்கு உகந்ததாக இருந்ததனால் 1550 களில் சேசுசபைக்கும் போர்த்துகீசியருக்கும் பாண்டியம் பதியும் வாழ்ந்து வந்த புன்னக்காயல் தலைமையிடமாக மாறியது. மேற்கிலிருந்து பாய்ந்து வரும் தாமிரபரணி கிழக்கே இன்றைய ஆத்தூர் கழிந்து இரு கூறாக வடக்கு தெற்காக பிரிந்து கடலை அடைந்தது.

நடுவே உருவான தீவுத்திடலே அன்றைய புன்னக்காயல். தீவான புன்னைக்காயலில் போர்த்துகீசியர் செங்கல் மற்றும் களிமண்ணாலான ஒரு கோட்டையை கட்டி இருந்தனர். கோட்டையை சுற்றி பரதவர்கள் அடர்த்தியாய் அமைவிடம் அமைத்து காவலாய் இருந்தனர்.

கோட்டைக்கு மூன்று வாசல். கிழக்கு வாசல் போர்த்துகீசியருக்கும், தெற்கு வாசல் சேசு சபையினருக்கும், வடக்கு வாசல் பாண்டியம்பதிக்குமாக இருந்தது . மேற்கே வாசல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் கோட்டை சுவரை பின்புலமாக கொண்டு மேற்கு பகுதியில் பரதவர்கள் வீடுகட்டி வாழ்ந்து வந்தனர். உள்ளே பாண்டியம்பதியின் அரண்மனை, போர்ச்சுகலின் மன்னார் தலைமை அலுவலகம், இராணுவ செயலகம், சேசுசபை தலைமையகம், பரதவர்களுக்கான ஏசு சபை ஆலயம் மற்றும் போர்ச்சுகல் இராணுவ கிடங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது.

இங்கே மன்னார் கேப்டன் மனுவேல் ரொட்ரிக்கஸ் கொட்டின் கோ குடும்பத்தினர், சவேரியாரின் மாற்று பொறுப்பாளரான சேசுசபை ஹென்ரிக் ஹென்ரிக்கஸ் அடிகளார் மற்றும் போர்த்துகீசிய தலைமையாளர்கள் , வீரர்கள் அனைவரும் இங்கே வாழ்ந்து வந்தனர். 1553 ஏப்ரல் மாதத்தின் 29 ஆம் நாள் மாலை மயங்கிய வேளையில் தாமிரபரணியின் வடகிளை ஆற்றிலே தறிக்கெட்டு பாய்ந்து வந்த படகொன்று புன்னைக்காயல் போர்த்துகீசிய கோட்டை பாண்டியம்பதியின் வடக்கு வாசலில் கரை ஏறி நின்றது.

படகிலிருந்து துள்ளி குதித்த பரதவ ஏரலர் சிலர் பதட்டத்துடன் பாண்டியம்பதியின் அரண்மணைக்குள் புகுந்தனர். சில மணி நேரங்களில் பல பாய்மர படகுகள் பரணி கரையிலிருந்து கடலுக்குள் பாய்ந்தன இருட்டிலே பரவின. கோட்டை காவலில் இருந்த போர்த்துகீசிய படைவீரர்களுக்கு இது வழக்கமான நிகழ்வென்று காணாதிருந்தனர்.

அதே நேரம் கோட்டைக்குள் இருந்த யேசு சபையின் ஆலயத்துக்குள்ளே. சபை பொறுப்பாளர் தந்தை ஹென்ரிக் ஹென்ரிக்கஸுடன் பரதவ தலைவர் விக்ரமாதித்ய பாண்டியரின் தனயன் கொற்கை கோ பாண்டியன் வரவிருக்கும் ஆபத்தினை விவரித்த போது அடிகளார் ஆடிப்போனார். யேசுவின் சிலுவையின் கீழ் நின்றவரின் கண்களில் நீர்.

காரணம், கோட்டையில் போதிய பாதுகாப்புக்கு படைகள் இல்லை. மதுரை நாயக்க அரசனை சந்திக்க வெடலைத்துறை வந்திறங்கும் கொச்சி தலைமையின் பாதுகாப்புக்காக முக்கால் பகுதி படை வெடலைக்கு போய் விட்டது. மதம் மாறிய பரத குலம் ஏற்கனவே பாதியாய் குறைந்து போன நிலையில் தீவுகளிலும் கடலிலும் வாழ்ந்து உயிர் பிழைத்த இந்த கூட்டம் இப்போது தான் நிம்மதியாக தொழில் செய்து வாழ்கின்றனர்.

மீண்டும் கொலைக்களமா..?

பரிதவித்த உண்மை ஆன்மீக தந்தை தனது பரதவ பிள்ளைகளின் உயிரைக் காக்க தேவனிடம் பித்து பிடித்தவராய் புலம்ப ஆரம்பித்தார். அப்போது தனது சகாக்கள் சிலரோடு வேகமாக உள்ளே நுழைந்து கேப்டன் கொட்டின் கோ ஆவேசமாக கேட்டார், பாண்டியம்பதி எங்கேவென, படைதிரட்ட பாய்மரத்திலே என அழுத்த விடை பகர்ந்தார் கொற்கை கோ பாண்டியன்.

ஏன் எதற்கு .... இது கட்டுக்கதை... வீண் குழப்பத்தை உருவாக்காதீர்கள் நாளை மதுரையில் மறு ஒப்பந்தம் ஏற்கனவே கொச்சின் தலைமை மதுரை சென்றடைந்து விட்டது. நாளை மறுநாள் பிரகடனம், என பாடம் நடத்துவதை கேட்க பொறுக்காத இளம் தலைவன் சீறினார். கேப்டன் கதையாக இருந்தால் நல்லது தான் வினையாகிப் போனால் விலை கொடுக்கப்படுவது எம் பரதவகுடி தானே பாதுகாப்புக்காக மதம் மாறிய நாங்கள் உங்களை பாதுகாக்க வேண்டியதாய் உள்ளது. 

இனி இம்மண்ணிலே பரதவனின் ஒரு துளி உதிரம் உதிர்ந்தாலும் எவனுக்கும் உயிர் இருக்காது என வெடிக்க, கொற்கை யாரிடம் பேசுகிறாய் மன்னார் கேப்டனிடம் என்பதனை மறந்து விடாதே என கேப்டன் கோட்டின்ஹோ கூச்சலிட ஆலயமே அலறியது. விவாதம் வழக்காக மாறுவதை உணர்ந்த தூய தந்தை கண்ணீர் வடிய இடை புகுந்து கேப்டன் நடக்காது இருந்தால் கர்த்தருக்கு மகிமை நடந்து போனால் ......?

நம் அனைவருக்குமே சிலுவை தான் கொற்கை கோ சொல்லுவதை கேளுங்கள். பிறகு முடிவு செய்யுங்கள். எப்படியாவது என் மக்களை காப்பாற்றுங்கள். கடவுளின் நாமத்தை ஏற்று நரகப்படும் பாமரனை காப்பாற்றுங்கள் என ஓலமிட்டு அழுதார்.

தூயத்தந்தை ஹென்ரிக் ஹென்ரிக்கஸ ஆலயம் அமைதியானது. சில நிமிடத்தில் மௌனம் கலைத்த இளம் தலைவர் தன் தந்தை பாண்டியபதிக்கு கிடைத்த எதிரிகளின் தாக்குதல் தொடர்பான உறுதி செய்யப்பட்ட விவரங்கள் பகைவர் படையின் ஊடுருவல் பற்றிய வழித்தட வரைவு தகவல்கள் அதை தடுக்க இரண்டு மணி நேரத்துக்குள் எவரையும் நாடாமல் கேட்காமல் போர்த்துகீசிய கோட்டைக்குள்ளே பாண்டியம்பதி செய்து முடித்த அலுவல்கள் அனைத்தையும் விவரமாய் சொல்ல சொல்ல அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் போர்த்துகீசியர்கள்.

சற்று முன்பு மன்னார் கேப்டன் என மார்தட்டியவர் எல்லாமே கைமீறி போனதை அறிந்து இயலாமையோடு கொற்கை கோ வின் அடுத்த திட்டம் பற்றி கேட்க சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அதே நேரம் நாயக்க படைகள் ஏரலில் மதகை அடைக்க ஆரம்பித்தனர்.

திருச்செந்தூரிலே இருந்து நாயக்க படை ஒன்று வடக்காக நகர்ந்து கொண்டிருந்தது. தூத்துக்குடியிலிருந்து நாயக்க படை ஒன்று தெற்காக நகர்ந்து கொண்டிருந்தது. புன்னக்காயலின் கிழக்கே ஆழி கடல் நடுவே பரதவரை அடித்தொழிக்க அவலட்சண புயல் ஒன்று ஆவேசமிட்டு கிளம்பி புன்னக்காயலின் கரை நோக்கி வந்து கொண்டிருந்தது.

நாற்புரமும் பகை சூழ நிர்கதியாய் நிற்கும் பரதவரை ஆண்டவர் காப்பாற்றுவாரா......இல்லை பரதவரை ஆண்டவன் காப்பாற்றுவாரா..

கொஞ்சம் பொறுத்திருப்போம் ....! படை வரட்டும் காத்திருப்போம் .....!!

(தொடரும்)
கடற்புறத்தான் 


மன்னார் வளைகுடாவின் உயிரினங்கள்

இந்திய பெருங்கடலில் 18000 வகை கடல் உயிரினங்கள் உள்ளன. மன்னார் வளைகுடாவில் மற்றும்

  • 117 வகை பவள உயிர்கள் 
  • 12 வகை கடல் புற்கள் 
  • 14 வகை கடற்கோரைகள் 
  • 10 வகை சதுப்பு நிலத் தாவரங்கள் 
  • 147 வகை பாசிகள் 
  • 280 வகை கடற்காளான் 
  • 22 வகை கடல் விசிறிகள் 
  • 103 வகை (கடல் அட்டை போன்ற) முட்தோலி உயிர்கள்  
  • 17 வகை கணவாய்கள் 
  • 450 வகை மீன்கள் 
  • 150 வகை வண்ண மீன்கள் 
  • 35 வகை இறால்கள் 
  • 7 வகை சிங்கி இறால்கள் 
  • 17 வகை நண்டினங்கள் 
  • 5 வகை கடல் ஆமைகள் 
  • 6 வகை திமிங்கிலங்கள் 
  • 1 வகை கடல்பசு (அவுலியா)
  • 70 வகை கணுக்காலிகள் 
  • 260 வகை சங்கு, சிப்பிகள் 
  • 47 வகை கடல் பாம்புகள் வாழ்கின்றன 


தேர்ஸ்


திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருவிழா நவநாட்களின் போது "தேர்ஸ்" என்ற வழிபாடு நடைபெறுவது வழக்கம். மதியம் மூன்று மணிக்கு ஆரம்பிக்கும் இவ்வழிபாடு செபமாலை, தஸ்நேவிஸ் மாதா மன்றாட்டு, நற்செய்தி, மறையுரை மற்றும் அருளிக்க ஆசீருடன் நிறைவுபெறும்.

தேர்ஸ்-ன் பொருளை பலரிடம் கேட்ட போது, இது "நீண்ட மறையுரையின் பெயர்", "செபமாலை, மன்றாட்டின் பெயர்" என்று பலரும் பற்பல பொருளை கூறினார்கள். ஆனால் எதுவும் பொருந்துவதாக தெரியவில்லை.

தேர்ஸ்-ன் பொருள் இவ்வழிபாட்டின் மூன்று விடயங்களை உற்று நோக்குகையில் புலப்படுகிறது. அவை,

1) செபமாலையில் தியானிக்கப்படும் தேவரகசியம் - இந்த வழிபாட்டின்போது அனைத்து கிழமைகளிலும் தியானிக்கப்படுவது துக்கதேவரகசியம். பிறசெபமாலையில் செபிக்கபடுவது போல் அல்லாமல், தேர்ஸ்-ல் தேவரகசியம் வியாகுலமாதா பிராத்தனையாகப் பாடப்படுகிறது.

2) ஆசீர்வாதத்திற்கு பயன்படுத்தப்படும் அருளிக்கம் - திருசிலுவை அருளிக்கம்.

3) வழிபாடு தொடங்கும் நேரம் - நண்பகலுக்கு பின் மூன்று மணிக்கு வழிபாடு தொடங்குகிறது.

ஆதி கிறிஸ்தவர்கள் ஒரு நாளை பகல், இரவாக பிரித்தார்கள். அதை மேலும் ஒவ்வொரு மூன்று மணி நேரத்தை ஒரு பகுதியாக கணக்கிட்டார்கள். இவற்றில் பகல் மூன்றாவது (Terce -காலை 9 மணி) , ஆறாவது (Sext - நண்பகல் 12 மணி) மற்றும் ஒன்பதாவது (None - மதியம் 3 மணி) மணி நேரத்தில் செபிக்கும் பழக்கம் 2 ஆம் நூற்றாண்டு முதல் வழக்கத்தில் உள்ளது. பின்னர் பல்வேறு திருத்தந்தையரால், புனிதர்களால் இந்த குறிப்பிட்ட மணி நேரத்தில் செபிக்கும் பழக்கம் மாற்றியமைக்கப்பட்டு இன்றளவும் துறவரத்தவர்களால் பின்பற்றப்படுகிறது. இதில் ஒன்பதாவது (மதியம் 3 மணி) மணி நேரம் இயேசு கிறிஸ்து மரித்த நேரம் என்பதால், பாடுகளை தியானித்து மனம்வருந்தி ஒப்புரவாகும் வழிபாடாக "தேர்ஸ்" திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் அன்னையின் ஆலயத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். இவ்வழிபாடு எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கான வரலாற்று சான்றுகள் இல்லையெனினும், தேர்ஸ் என்ற இவ்வழிபாடு பாடுகளை தியானித்து மனம்வருந்தி ஒப்புரவாகும் வழிபாடு என்பதற்கு மேற்குறிய 1, 2 விடயங்கள் வலுவான சான்றாகிறது.

எண் மூன்றுக்கான போர்த்துகீசிய சொல் Três (தெரேஸ்) இதுவே மருவி தேர்ஸ்-ஆக மாறி இருக்கவேண்டும். எவ்வாறு பெயர் மருவியதோ அவ்வாறே வழிபாடும் மருவிவிட்டது. தேர்ஸ்-ன் இன்றைய வடிவம் 1904ஆம் ஆண்டு பண்டிதர் எம். எக்ஸ். ரூபீன் வர்மா அவர்களால் இயற்றப்பட்ட செபம், வியகுலமாதா பிராத்தனை (துக்க தேவரகசியதிற்கு பதிலாக செபமாலையில் தியானிக்கபடுவது), தஸ்நேவிஸ் மாதா மன்றாட்டு, மற்றும் நற்செய்தி மறையுரை அருளிக்க ஆசீருடன் தஸ்நேவிஸ் மாதா விருத்தம் பாடி நிறைவு செய்யப்படுகிறது.

- வாசு 

இரத்த பூமி


கடற்புறத்தானின் இரப்பாளி! பரதர் சமூக வழிகாட்டி மாத இதழிலும், நமது வலைத்தளத்திலும் ' இரத்த பூமி ' என்ற பெயரில் தொடராக ........


பரத சமுகமே

இரப்பாளி என்றும், ஈன இரப்பாளி என்றும் சாதரண‌மாக கொச்சை த‌மிழில் நாம் பேசும் வார்த்தை, பேராசை பிடித்தவனை கேவலமாக சித்தரிக்கும் வார்த்தையாகும்.  இந்த வார்த்தையின் வரலாறு நமக்குத் தெரியுமா..? இவ்வரலாற்றை  அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும். 

இரப்பாளி.......

1530 களில் பரத சமுகம் தன்னை தற்காத்துக் கொள்ள பாரம்பரியத்தை காத்துக் கொள்ள அன்றைய அறிவியல் வளர்ச்சியான துப்பாக்கியையும் வெடிகுண்டையும் பெற்று கொள்வதற்காக போர்துகீசியரை நாடிய போது போர்துகீசியரால் பரதவருக்கு பல விதிமுறைகள் விதிக்கப்பட்டன.

பாண்டியர்களின் எச்சமாய் இருந்த பரதவ பாண்டியர் தன் தமிழ் பழங்குடி இன குழுவை மீட்டெடுப்பதற்காகவும் எவருக்கும் அடி பணியாத தன் பாரம்பரியத்தை நிலை நாட்டவும், எடுத்த மகத்தான முடிவு அது. போர்துகீசிய பாதுகாப்பு பெறுவதற்க்காக போர்துகீசிய குடிமகனாக மாறி கிருத்துவத்தை தழுவியது தன்னை தனிமைபடுத்தி தற்காத்து கொண்டது.

2000 களில் உலகம் புதுபிக்கபட்டாலும் ஆழி கடல் வழி தோன்றிய தாய் தமிழ் பரத சமுகம் தன் இரத்த நாளங்களில் இனக் கலப்பில்லாத தன் மரபணுக்களில் தமிழ் பரதவ பாரம்பரியத்தை கடத்தி வந்து சேர்த்திருக்கிறது – என்பதனை அறிவார்ந்த பரத சமுக இளைய தலைமுறை நினைத்து கொண்டாட வேண்டிய சிதம்பர ரகசியம் இது.

1530 களில் போர்துகீசிய குடிமக்கள் ஆன பிறகு, நாயக்கர்களாலும் மூர் இனத்தவர்களாலும் திருவிதாங்கூர் இந்து நாயர்களாலும் சுற்றி வளைத்து சூரையாடப் பட்டதுதான் பரத இனம். போர்துகீசியரை அழிப்பதாக சொல்லிக் கொண்டு தமிழ் மண்ணின் உண்மை வந்தேறிகளும் இந்துத்துவா இஸ்லாமியர்களும் இணைந்து கொண்டு புத்தம் புது கிருத்துவத்தை மண்ணில் புதைக்க போர்துகீசியரின் குடிமக்களான இம்மண்ணின் பாரம்பரிய நிஜ வித்துகளான பரதவரை நிருமூலமாக்கிட கொடுஞ்செயல்கள் பல புரிந்துனர். பரதவ இனத்தையே அழித்து ஒழித்தனர்.

கடல் தாயின் பிள்ளைகளான பரதவ இனம் தரையில் உள்ள இனப் பகைவரிடம் இருந்து தப்பி பிழைத்து கடலுக்குள்ளும் கடல் தீவுகளிலும் உயிர் வாழ்ந்து மீண்டும் தன் உரிமையை நிலை நாட்ட தன் அரசு உடமைய பெற்று கொள்ள உயிரை பாதுகாத்துக் கொண்டனர்.

கடலையே கட்டிக் கொண்டு வாழும் பரதவ பாண்டியர்களை; நாயக்கரின் பாளைய பிரகடனத்தைபரிகசிக்கும் பரதவரை; புதிதாய் உதித்த போர்ச்சுகல் குடிமக்களை; மதம் மாறிய கிருத்தவர்களை; நிர்மூலமாக்க துணிந்த பரதவ எதிரிகளால் உருவாக்கப்பட்டது தான் வெடலை போர்க்களம் வெடலையில் பரதவர் வென்றதை ஏற்றுக் கொள்ள முடியாத நாயக்கர் பாண்டிய பெயர் தாங்கிய பல் இனக் குழுக்களை தமதாக்கி கொண்டனர்.

தரையினில் உள்ள தரங்கெட்ட தெலுங்கு நாயக்கன் தமிழ் பரத பாண்டியர்களை அடிமைபடுத்தவும் ஆட்சி செய்யவும் அனுப்பி வைத்தான் விதாலன் எனும் நாயக்க தளபதியை அழிக்க அழிக்க குறையாது இன்னும் இன்னும் எதிர்த்து வரும் பரதவ இனம் ஆழிக்கடலுக்குள் தப்பி செல்வதை ஆய்ந்து அறிந்தவன் பரத இனக் குழுவான மரைக்கயர்களை கொண்டு மரக்கலங்கள் செய்து முடிந்த வரை போராடினான்.

துப்பாக்கி பீரங்கி குண்டு இவற்றோடு சிலுவையும் வைத்திருந்த போர்துகீசியரோடு இளைந்தோடிய பரத சமுகம் தனது ஞான குரு தனது பாதுகாவலன் பரதவ‌ புனிதர் சவேரியாரால் போர்துகிசீயருக்கே பாதுகாப்பாய் பரதவ இனம் அமைந்தது தான் வரலாற்றின் திருப்புமுனை. சுவடில்லாமல் சுத்தமாய் துடைத்து ஒழித்தாலும் அலையின் நுரையிலிருந்து ஆர்ப்பரித்து எழும் ஆழி தமிழ் பரதவரின் அதிசயம் கண்டு அதிர்சியுற்ற விதாலன் பரதவ பகைவரின் பட்டியலை பரிசோதித்து பற்றி எடுத்தான். ஒர் பெயரை வெடலை போர்களத்தின் சூத்திரதாரி பரதவரின் பாரம்பரிய வைரி கோழிக்கோடு சமாரியன்.

தம்மவர் இனம் செழிக்க பொது எதிரி பரதவனின் கதை முடிக்க ஓரணியாய் நின்று ஓராயிரம் ஆலோசனை செய்து பெர்சியாவில் இருந்து கொண்டு வந்தார் ஒர் கடற் மாமிச பட்சி கடல் காட்டுமிராண்டி..... அவன் தான் இரக்கம் இல்லாத இரப்பாளி...........?

சங்க காலம் தொட்டே- திரைக்கடல் செல்வத்தாலும், துறைமுக நகரங்களாலும், சேர சோழ பாண்டிய அரசுகள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கின. உழைக்கும் மற்ற வர்க்கத்தைக் காட்டினாலும் அளப்பரிய செல்வம் பரதவர்களிடமே இருந்தது காரணம்..... பாண்டி பரதவ முத்துக்கள் ..!

உலக பேரழகி கிளியோபாட்ரா கூட ஜூலியஸ் சீசர் பரதவ கண்டத்திலிருந்து வருவித்து பரிசளித்த, விலை மதிப்பற்ற கொற்கை முத்துக்களை உடலிலும், உடையிலும், உணவிலும் கூட பயன்படுத்தியதாக ரோமானியம் கூட பறைசாற்றுகிறது..!

இன்றய உலக பொருளாதார சந்தையை தங்க விலை கட்டுப்படுத்துவது போல..... அன்றய உலக பொருளாதார சந்தையில் பரதவரின் முத்துக்கள் கோலோச்சின.....!

விவசாய மக்கள் வருடம் முழுமைக்கும் பாடுபட்டாலும் இரண்டு, மூன்று அறுவடையில் மட்டுமே பலன் கிடைக்கும். அதிலும் - அரசாங்கத்துக்கு கிடைப்பது மிக சொற்பமே....... ஆனால் பரதவர்களின் அன்னை கடல் வயலில் நித்தமும் அறுவடை அதனாலே நித்தமும் குவியும் அரசுக்கு நன்கொடை......!

அந்நாட்களில்..... அரசாங்கத்துக்கு ஏற்றுமதி, இறக்குமதி, வரி செலுத்திய வியாபாரிகள் எனப்படுபவர் துறைமுக பட்டினங்களை சார்ந்தவர்களே. சாத்துவான், செட்டி, உமணர் போன்ற யாவருமே பரதவர்கள் என சிலப்பதிகாரம் பகர்கின்றது.......! 

இவ்விதமாக - பழந் தமிழ் பரத சமூகம் வழித்தோன்றிய அரசுக்கெல்லாம் இணையாயிருந்து இறைத்து கொடுத்தது, கடற் படை கொண்டு காவலாயும் நின்றது. அதனாலேயே அரசாங்கங்கள் பரதவரை மதித்து பட்டம், பதவிகள் தந்து இணையாக்கி கொண்டது. அவர்களுக்கான தனித்தலைமை, தனி சட்டம், கடல் உரிமை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிலப்பதிகாரத்து பாடல் வரி சொல்லும் மன்னவர் முறையோ; பரதவர் முறையோ; எனும் ஒற்றை சான்று மட்டுமே மேற் கூறியவற்றிற்கு போதுமானது....!

அணைத்தால் அன்பின் அடிமையாகவும்; அடித்தால் அழிக்கும் அசூரனாகவும்; பயணப்பட்ட பரதவர் வாழ்வு கடல் உரிமையை, தன்மான உணர்வினை, மீட்டெடுக்க மதம் மாறிய பிறகு, தென் தமிழகத்து அரசியலே நிலைகுலைந்தது....?

பரதவரின்; போர்த்துகீசிய தலைமையின் கை ஓங்கியது; பெரும்பான்மை வருவாயை இழந்த நாயக்க அரசு செய்வதறியாது விழித்தது.....? பதட்டத்தோடு பரதவரை சூறையாட துடித்தது, தனது வடுகர்களை கடலோர பரதவர்கள் மீது ஏவி விட்டு வதைத்தது...... பரதவ கிராமங்களை அடிக்கடி தாக்கி கொள்ளையடிப்பதை வடுகற்களும், மூர்களும் வாடிக்கையாக்கி கொண்டனர், நாயக்க அரசே நாயக்க அரசின் அங்கீகரிக்கப்பட்ட கொள்ளைக்கூட்டத்தை உருவாக்கிய கால கொடுமை இது.....?

கள நிலைமையை உணர்ந்த பரத சமூகம் அசுர பலம் கொண்டு எதிர்த்தாடியது. இந்த நிலையில்தான் நாயக்க தளபதி விதாலன் பரதவரின் திரை செல்வத்தை திரையாக வாரியாக கப்பமாக அபகரிக்க போர்ச்சுகல் காவலை உடைத்து கடல் வழியாக உள்ளே நுழைந்து கடலோரத்தை கைப்பற்ற தீர்மானித்தான். முதற்கட்டமாக மன்னார் பரதவர்கள் போர்துகீசியருக்கு அளிக்கின்ற அத்தனை நிதி மற்றும் வரிகளுக்கும் இணையாக நாயக்க அரசுக்கு மாதத்தில் இரு நாட்கள் உழைப்பை தெறிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கையிட்டான்.

இது போர்துகீசியருக்கும் மதுரை நாயக்க அரசாங்கத்துக்கும் இடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதை கண்டு கொள்ளாத தளபதி விதாலன் தன் குரோத சூட்சியின்படி கோழிக்கோடு சமாரியனின் மூர் படைகளை இரப்பாளி தலைமையில் கூட்டி கடல் வழி தாக்குதல் நடத்திடவும் நாயக்க படை கொண்டு தரை வழி தாக்குதல் தொடர்ந்திடவும் இடைப்பட்ட பரதவர்களை அடிமையாக்கி கடலோரத்தை கைப்பற்றிடலாம் என வெடலையில் பரவரும் மறவரும் காட்டிய போர் தந்திரத்தை அவர்களிடமே திருப்பி காட்ட துடிதுடித்தான். 

விதாலனின் அறிக்கை போர்துகீசியருக்கும் நாயக்க அரசாங்கத்துக்கும் இடையே ஆன ஒப்பந்தத்துக்கு எதிரானது என்று போர்துகீசிய தலைமை நாயக்க மன்னர் மதுரை பேச்சுவார்த்தை என்று அல்லாடி கொண்டிருந்தது ........ ஆனால் விதாலனின் விஷமத்தனத்தின் வாசனை பரதவ தலைவன் விக்ரம ஆதித்ய பாண்டியனாருக்கு எட்டியது. 

ஆனால் பரதவ வைரிகளின் அதிரடி தாக்குதல் என்று எங்கே எப்போது என்பது மட்டும் பரம ரகசியமாய் இருந்தது.........?  
(தொடரும்)

கடற்புறத்தான்

நண்டு பிடிக்கும் போது பாடும் பாடல்

கொந்தான் போட்டு நண்டு பிடிக்கும் போது மீனவச் சிறுவர்கள் பாடும் பாடல்:

இப்பாடல் வளைக்கு வளை இடம் மாறும் நண்டை தன் இரையைக் கடிக்க அழைப்பதாக உள்ளது.இது இடிந்தகரையில் பாடப் படுகிறது.பிற கடற்கரை கிராமங்களில் இப்பாடல் உள்ளதா என்பது தெரியவில்லை.


"ரேகு வாழ்ரே கூழ்ரே
வளையா வளையாளத்தான்
வளைக்கு வளை தோமாவுளே
தோமால் தோமால்தான்
நல்ல கடுக்காய் தான்
நீ நல்லிரையும் தின்றிடுவாய்
ஒத்தைக் கால் பிறைக்கு மகனே
நீ அடிக் காலாய் நுனிக்காலாய்
இரட்டைக்காலாய் ஒத்தைக் காலாய் ஆகிடுவாய்
ரேகு வாழ்ரே கூழ்ரே"

THE PRINTING PRESS IN INDIA

Rare Book Collection
THE PRINTING PRESS IN INDIA ITS BEGINNINGS AND EARLY DEVELOPMENT 

திரை அணைப் பாறை

திருவணைப் பாறை
தீந்தமிழ் நாட்டின் தென் எல்லை பதாகை...!
அமிழ்ந்து போன அமிழ்துலகின் 
அழியாத மிச்ச பருக்கை...,
நாலாம் திணை பரதவர் வாழ்வோடு
நடந்து வந்த வரலாற்று உயர்திணை...!

கடலோடு கடல்மறவர் யாம் - இந்த
கரை தொட்ட நாள் முதலே....
குமரி பரதவர் எம்மை
சூறாவளியென்ன...?சுனாமியென்ன...?
கல்லணையாய் காத்து நிற்க்கும்
எங்கள் திருவணை...!

எந்தையும் 
என் பாட்டனும், – அவர்தமது மூதாதையரும். 
மீன் பிடித்து, வலை உலர்த்தி, 
மூச்சு நிறுத்தி முத்துக் குளித்து,
சிப்பி பறித்து, மூரை உடைத்து,
உண்டு களித்து, உறங்கிய இடம்...!
இங்கேதான்....... 

மலை உடைக்கும் அலை எதிர்த்து - நானும்
மடிக்கு வாரேன் என மல்லுக்கட்டும் பரதவன் மகனை
திருவணைக்கு நீந்திக் காட்டு என
தகுதித் திறம் வளர்த்த....குமரி பரதவரின்
பாரம்பரிய பயிற்சிக் கள மைதானம்.
இதுவேதான்......

பரதவர் எம் விழாக் காலங்களில்....
உறவுகளோடு கடலோடி; இந்த
பாறையில் ஏறி விளையாடி;
சமைத்து உண்டு உரையாடி;
மகிழ்ந்து கிடந்தோம் உறவாடி.

இது மட்டுமல்ல......? 
இந்த திருவணைப் பாறைதான் - குமரி
கிருத்துவ பரதரின் கல்வாரிப் பாறை....?
கிருத்துவம் அழிக்க வந்த,
படுகரின் படை எதிர்த்து - வதைபட்ட
பரதவரின் குருதி கலந்த பாறை இது;

அலைவாய் நடுவே சிறைப் பட்டு;
அன்னம், தண்ணி, ஆகாரமின்றி;
பசியாலும், பட்டினியாலும், பரிதவித்து;
அலறி புலம்பிய பரத்திகளின்,
அழுத கண்ணீர் ஆற்றாலே....
கழுவப்பட்ட பாறை இது;

அவலச் செய்தி கேட்டு, 
அலை கிழித்து சீறி பாய்ந்து
பரதவரின் புனிதர் சவேரியாரும்,
பரதவ தலைவரும், பட்டங்கட்டிகளும்;
பாய்மர படையோடு பாறையில் இறங்கினர்;
பரதவர் நிலை கண்டு கலங்கித் துடித்தனர்....?

ஆன்மீகத்தால் பரதவரை அடக்கிய புனிதரே......!
ஆத்திரம் கொண்டே ஆணையிட்டார் – இந்த
திருவணைப் பாறையில் நின்றே........

ஆன்மீகத்தால் பரதவரை அடக்கிய புனிதரே......!
ஆத்திரம் கொண்டே ஆணையிட்டார் – இந்த
திருவணைப் பாறையில் நின்றே........?

புனிதரே புயலாய் மாறிய போது....?
வாளெடுத்த பரதர் கூட்டம்
வடுகரை விரட்டி, விரட்டி, வேட்டையாடியது;
ஆரல் கணவாயில் வைத்து,
சுற்றி வளைத்து சூறையாடியது;
பாதக படுகரின் தலைகளை கொய்து வந்து.....
பரத்திகளின் பாதங்களுக்கு காணிக்கை ஆக்கியது.....!

இவ்விதம்... 
படுகரின் பகைக்கு முடிவுரை எழுதி,
பரதவரின் ஒற்றுமைக்கு தெளிவுரை காட்டி,
பரதவர் என்ற உயிர் பயத்தை 
பகைவருக்கு மீண்டும் விளக்கமாக்கி,
பகை வென்றாடிய பரதவரின் பாறை இது....!

அதனாலே...! அன்றே...! அப்போதே...! திருவணையில் 
திருச்சிலுவையை சவேரியார் நாட்டி வைக்க -அன்றிருந்து
சிலுவை பாறையாய் திருவணை காட்சி தந்தது....!
புனித வெள்ளி துக்கத்திலும்,
இயேசு பிறப்பு கொண்டாட்டத்திலும்,
திருவணைப்பாறை ஓர் அங்கமானது...!

அப்படியொரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில்
பரதவரோடு படகிலேறி பாறைக்கு சென்ற ஓர் துறவி
பாறைக்கு சொந்தக்காரர் என
பின்னாளில் அரசாங்கமே ஆணையிட்டு சொன்னது
அப்போதுதான் குமரி பரதவர் எமக்கு தெரிந்தது - இது
விவேகானந்தரின் பாறையாம் என்று

மீன்பாடு வற்றிய காலத்திலும் - எம்
வயித்துபாடுக்கு வகை செய்த பாறை;
படுகரிடமிருந்து பாதுகாத்து எம்
பரம்பரையை வளர்த்த பாறை; - எங்கள்
வாழ்வோடும், வளமோடும்;
இன்பத்தோடும், துன்பத்தோடும்;
ஒன்றர கலந்து உறவான பாறை...!

இந்த திருவணை என்னும் பரதவரின்
பாரம்பரிய சுவட்டின் நினைவுகளை;
கல்லை கட்டி கடலில் ஆழ்த்தி,
புதிய வரலாறாய் அதன் மீது
வீர துறவியாம் விவேகானந்தருக்கும்,
தெய்வ புலவர் வள்ளுவனாருக்கும்,
நினைவுச் சின்னங்களை எழுப்பி விட்டார்

இன்று எங்கள் திருவணைக்கு நித்தம்
ஓராயிரம் பேர் வந்து போனாலும்...?
அதன் மடி பிள்ளைகள் நாங்கள்
கனவாய் போன உறவை எண்ணி
கனத்துப் போன இதயத்தோடு
தூரத்தே நின்று தரிசிக்கின்றோம்.......

.......................................கடற் புரத்தான்...............................

NOTE (1)Letters of Xavier, June 16, 1544, p. 84

My dearest Brother in Jesus Christ, 

On Tuesday last I came back to Munahpaud, and God our Lord knows what I have gone through in my voyage. I had set off with twenty tones to comfort the Christians whom the Badages have driven into flight, who, as I was told, were dying miserably of hunger and thirst amongst the rocks which bound the shores of Cape Comorin ; 

but I met with strong winds from the opposite quarter, and neither by rowing nor by towing could we make head against the sea, and I was not able once to get a single vessel to the Cape. If these winds fall, I shall go there again to take what relief I can to these poor creatures in their extreme distress ; for a man must be harder than iron if he could give up making all efforts in his power to relieve the miserable case of these people, who are our brethren in the worship of Christ a case I really think the most calamitous that can be found anywhere. Many of the fugitives arrive every day at Munahpaud without clothing, nearly dead with hunger, and destitute of everything. I am writing to the Patangatins of Combutur, of Punical, and of Tuticorin, to collect for them some little alms, and get them sent to us : but bidding them, however, to exact nothing from the poor, but simply to ask the captains of vessels, and others who have some means, of their own free will to contribute to so pious a work.
(2)Vivekananda Rock Memorial (From Wikipedia,)

In January 1962, on the occasion of Swami Vivekananda’s birth centenary, a group of people formed the Kanyakumari Committee whose objective was to put up a memorial on the rock and a pedestrian bridge leading to the rock. Almost simultaneously, the Ramakrishna Mission in Madras planned about this memorial

However, this news was not taken in good taste by a sizable population of the local Catholic fishermen. They put up a big Cross on the Rock, visible from the shore.

This led to protests by the Hindu population who said the Rock was a place of worship for Hindus. A judicial probe ordered by the Madras (now Tamil Nadu) government stated in unequivocal terms that the rock was Vivekananda Rock, and that the Cross was a trespass. Amid all this acrimony, the Cross was removed secretly in the night. The situation turned volatile and the Rock was declared a prohibited area with armed guards patrolling it.

The Government realised that the Rock was turning into an area of dispute with Hindus claiming it to be the Vivekananda Rock and Christians that it was St. Xavier’s Rock. It decreed that although the rock was Vivekananda Rock, there would be no memorial constructed on it. The then Chief Minister of Tamil Nadu, 

Shri M. Bhaktavatsalam, said that only a tablet declaring that the rock was associated with Swami Vivekananda could be put up, and nothing else. With government permission, the tablet was installed on the Rock on 17 January 1963.

வேம்பாற்றில் தமிழ் பயின்ற அன்றிக் பாதிரியார்

தமிழ் மொழியின் அச்சுத் தந்தை என தமிழ் கூறும் நல்லுலகினால் அழைக்கப்படும் அன்றிக் பாதிரியார் 1520 ஆம் ஆண்டு போர்த்துகல் நாட்டின் “வில்லா விசியோ” என்ற ஊரில் பிறந்தார். 1546 ஆம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதே ஆண்டு முத்துக்குளித்துறையில் புதிதாக கத்தோலிக்கம் தழுவிய பரதவர்களுக்கு தேவையான ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுமாறு புனித சவேரியார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முத்துக்குளித்துறை வந்து சேர்ந்தார். 

1548 ஆம் ஆண்டில் வணக்கத்திற்குரிய அந்தோணி கிருமினாலி அடிகள் முத்துக்குளித்துறையின் சேசுசபை தலைமைக் குருவாய் பணியாற்றி வந்தார். புன்னைகாயல் வந்திறங்கிய ஹென்றிக் ஹென்றிக்ஸ் அடிகளாரை புன்னைக்காயல், தூத்துக்குடி, வைப்பாறு, வேம்பாறு ஆகிய ஊர்களில் மறைபரப்புப் பணிகளை பார்த்துக் கொள்ளுமாறு கிருமினாலி கேட்டுக் கொண்டார். இதனிடையில் 1549 ஆம் ஆண்டு வேதாளையில் நடைபெற்ற போரில் வடுகப் படையினரால் அந்தோணி கிருமினாலி அடிகள் கொல்லப்பட்டார். இதனையடுத்து ஹென்றிக்ஸ் அடிகளார் முத்துகுளித்துறையின் தலைமைக் குருவாய் தேர்வு செய்யப்பட்டார். 

முத்துக்குளித்துறை பரதவர்களுக்கு மத போதகம் செய்யவும், அவர்களுடன் கலந்து பழகவும் வேண்டுமெனில் அவர்கள் தாய் மொழியாகிய தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தார். அதன்படி தமிழ் மொழியை பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் முறையாகப் பயின்றார். முதன்முதலாகத் தமிழ் மொழியை முறையாகவும், இலக்கண வரம்போடும் கற்ற ஐரோப்பியர் இவர் ஒருவரே. 

ஹென்றிக்ஸ் அடிகளார் தாம் தமிழ் மொழியை பயின்ற விதத்தை வேம்பாற்றிலிருந்து 1548 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி, உரோமையில் இருந்த சேசு சபையின் அதிபரான அர்ச். லொயலா இஞ்ஞாசியாருக்கு எழுதிய மடலில் பின்வருமாறு கூறுகிறார்....

“........ முத்துக்குளித்துறைக்கு வந்தவுடன் இந்த மொழியை பேசவும், படிக்கவும், பழகவும் முயன்றேன். ஆனால் அது எவ்வளவு கடினமாக இருந்ததென்றால், அதை நான் ஒருக்காலும் படிக்கப்போவதில்லை என்று தளர்ச்சியுற்று கைவிட்டுவிட்டேன். எனவே எப்போதும் ஒரு தொப்பாசியை (மொழிபெயர்ப்பவன்) பயன்படுத்தி வந்தேன். சவேரியார் மொலுக்கஸ் நாட்டிலிருந்து 1548 ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் திரும்பி வந்த போது, எனக்கு இரண்டு தமிழ் சொற்களுக்கு மேல் தெரியாது. அப்போது எனது தொப்பாசி வேறொரு வேலை காரணமாக சென்றுவிட்ட படியால், தமிழ்மொழியை கற்கத் தீர்மானித்து, இராப்பகலாக இவ்வேலையில் ஈடுபட்டேன். முதலில் தமிழ் இலக்கணத்தைப் புரிந்து கொள்ள தீர்மானித்தேன். அதன்படி இறந்தகாலம், எதிர்காலம், வினையெச்சம் போன்ற இலக்கணக்குறிப்புகளை முதலில் கற்றேன். மிகக் குறுகிய காலத்தில் பேசவும், எழுதவும், படிக்கவும், கற்றிருக்கிறேன். நான் இந்த மக்களோடு, தமிழ் மொழியில் பேசும் போது அவர்கள் மிகவும் வியப்படைகிறார்கள். 

மொலுக்கசிலிருந்து சவேரியார் திரும்பி வந்த போது எல்லோரிலும் மூத்த இந்தியக் குருவானவர் ஒருவரை எனக்குக் கொடுத்து, தாம் போர்த்துக்கல் மொழியில் எழுதியிருந்த விசுவாசக் கோட்பாடுகளை, தமிழில் மொழி பெயர்க்கும்படி சொன்னார். சிலநாட்களுக்கு முன்னால் அவ்வேலை முடிந்துவிட்டது. தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விசுவாசக் கோட்பாடுகள் எல்லாக் கோவில்களிலும் வாசிக்கப்பட வேண்டுமென்று சவேரியார் கட்டளையிட்டிருந்தார். தற்போது நான் தங்கி இருக்கும் இடத்தில் அந்தக் கோட்பாடுகளை ஆறு, ஏழு ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கி வந்திருக்கிறேன். இது எனக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிறது. ஏனெனில் நான் சொல்வது அவர்களுக்கு விளங்குகிறது. தமிழில் உள்ள அந்த ஓலையை நமது எழுத்துகளில் எழுதி இதை ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்கும் மேல் அமைக்க கடவுள் அருளால் எண்ணியிருக்கிறேன். கோவிலில் அது வாசிக்கப்படும் போது அங்கிருக்கும் குருவானவர், என்ன வாசிக்கப்படுகிறது என்று இந்த எழுத்து முறையால் கண்டுபிடிக்க முடியும். 


குருக்கள் அனைவரும் தமிழ்மொழியை எளிதில் கற்றுக்கொள்ளும் வண்ணம், சவேரியாரின் வேண்டுகோளுக்கிணங்க, ஓர் இலக்கணம் கடவுளின் அருளால் செய்யப்போகிறேன். சென்ற இரண்டு, மூன்று மாதங்களாக நான் தங்கியிருக்கும் இந்த ஊரும், பக்கத்தில் உள்ள வேறொரு சிற்றூரும் என் பார்வையில் இருக்கின்றன. இம்மொழியைப் பயில்வதற்கு இங்கு மிகுந்த நேரம் கிடைக்கிறது........” 

இவ்வாறு ஹென்றிக்ஸ் அடிகளார் தமது கடிதத்தில் இந்த ஊர் என நமது தாய்பதியாம் வேம்பாற்றையும், வேறொரு சிற்றூர் என வைப்பாற்றையும் குறிப்பிடுகிறார். ஹென்றிக்ஸ் அடிகளாரின் கடிதத்தின் அடிப்படையில் அவர் தமிழ் பயின்றது வேம்பாற்றிலே என்பதை  மட்டுமல்லாது அவர் தமிழ்படுத்திய விசுவாசக் கோட்பாடுகளை முதன் முதலாக வாசித்தது நமது திவ்ய இஸ்பிரித்து சாந்து சர்வேஸ்வரன் ஆலயத்திலே என்பது மிகவும் நமக்கு மிகவும் ஆனந்தமான செய்தியே ....

- நி. தேவ் ஆனந்த் பர்னாந்து 

பன்மீன் கூட்டம் – சுறா


கடல் மீன்கள் - சுறா வகைகள் 

1. திருவாளியன் சுறா – அதிர்ஷ்ட சுறா. இதைக் கட்டுமரத்தில் அணியத்தில் தொங்க விட்டால் அதிர்ஷ்டம் வரும் என்பது நம்பிக்கை.)

2. ஓலைச்சுறா

3. பால் சுறா

4. குண்டன் சுறா (தடியன் சுறா)

5. குமரிச் சுறா

6. வழுக்குச் சுறா

7. கோரச் சுறா

8. அடுக்குபால் சுறா

9. குறுங்கன் சுறா

10. குரங்கன் சுறா

11. செஞ்சுறா

12. கொம்பன் சுறா

13. வெள்ளைச் சுறா

14. மட்டிச் சுறா

15. மணிச் சுறா

16. கோலாச் சுறா

17. காலன் சுறா

18. ஆரணிச் சுறா

19. மேயும் சுறா

20. படுவாய் சுறா

21. வடுவன் சுறா

22. புள்ளிச் சுறா

23. வெண்ணெய் சுறா

24. நெளிஞ் சுறா

25. பேய் சுறா

26. புடுக்கன் சுறா

27. பறங்கிச் சுறா

28. நண்டு தின்னிச் சுறா

29. நண்டு பொறக்கிச் சுறா

30. ஆத்துவாய் சுறா, ஆத்து சுறா

31. கட்ட சுறா (பிள்ளைச் சுறா) (காட்டச் சுறா)

32. பெருந்தலைச் சுறா (பெருஞ் சுறா)

33. நெடுந்தலைச் சுறா

34. கருமுடிச் சுறா (கரமுடிச் சுறா)

35. புல்லிச் சுறா

36. வல்லுலன் சுறா

37. பில்லைச் சுறா

38. திரவிமூக்குச் சுறா

39. கொப்புள் சுறா

40. கூரச் சுறா

41. முள்ளன் (குமரி மாவட்ட சுறா, வால் பெரியது)

42. கீரிப்பல்லன் சுறா

43. கோச் சுறா

44. கணவாய் சுறா

45. பஞ்சுறா (மஞ்சள் நிறம், வயிற்றுப் பக்கம் வெள்ளை) பஞ்சல் சுறா

46. குட்டிச் சுறா

47. நெளியன் சுறா

48. இனபத்திச் சுறா (பெரிய அளவிலான மீன் )

49. மண்டையன் சுறா

50. ஒற்றைக் கொம்பன் சுறா

51. வெள்ளைக் கொம்பன் சுறா

52. வரிப்புலியன்

53. வரிக்குரங்கு சுறா

54. கொம்புளிச் சுறா

55. மடையன் சுறா

56. மம்மட்டிச் சுறா

57. மானச் சுறா

58. முருகவுருட்டி சுறா

59. தாழைச் சுறா

60. துப்புச் சுறா

61. வெள்ளுடும்பன் (இதன் முட்டையை கத்தியால் வெட்ட முடியாது)

62. உழுவன் சுறா

63. அச்சாணி சுறா

64. மஞ்சள் சுறா ( பிள்ளை பெற்ற அன்னைகளுக்கு பால் சுரக்க இதைக் கொடுப்பர்.)

65. கம்பம் சுறா (வெலங்கு தண்ணீரில் உள்ள சுறா)

66. அம்மணி உழுவை (பெட்டிச் சுறா ) உலகின் மிகப்பெரிய மீன் இனம் இது.

67. இழுப்பா

68. வேளா (கலக்கு வேளா)


-  மோகன ரூபன் 

No longer 'Others'


The Bharathas of Sri Lanka were recognised as a separate community for the first time in the Census carried out in July this year

Pearls lured them across the sea. They came from such areas as Tuticorin in India first to trade in pearls in Mannar and then even took to diving. They liked this land so much that they fanned out, along the maritime belt specializing in trade, especially coconut, real estate development and arrack renting. Some of them also moved inland settling in areas like Kandy and Kurunegala.

Pearl banks of the Gulf of Mannar
The earliest records about the waves of migration are buried in the dim mists of time. Legend also connects them to the time of King Parakrama Bahu VI of Kotte way back in 1415, indicating that they came from Mohenjadaro led by eight Aryan warriors and 16 lieutenants whose objective as per the Royal Charter was to "drive away the Mukkuwars (Arab horse dealers) who were entrenched in Puttalam and were a threat to the King". The King overjoyed at the repulsion of the Mukkuwars allowed them to make their homes along the west coast, from Mannar to Moratuwa.

Many, many centuries later, how and when they came seem irrelevant, for they have well and truly integrated themselves into Sri Lankan society, while at the same time retaining their distinct culture and identity. Yes, they have carved a niche for themselves– the Bharathas of Sri Lanka, who have been recognized as a separate community, without being lumped as 'Others' for the first time in the Census carried out in July this year. 

Coonghe, Pinghe, Moraes, Croos, Dabrera, Soza, some Fernandos, some Rodrigos, Paldano, also Feldano, Figuarado, Mirando, Paiva, Victoria and Raj Chandra, all are proud to be Bharathas. 

Their names also link them immediately to the Portuguese and Catholicism. Though their ancestors were Hindus, they became staunch Catholics when Portuguese missionaries came to Ceylon, and were bestowed Portuguese names. 

But vestiges of Hindu culture still remain, for they tie the thali round the bride's neck during the marriage ceremony with the older generations speaking mostly Tamil.

Agitation, done diplomatically and with finesse, for recognition as a community started in 1937 by the Negombo Bharatha Association. 

"Its minutes of November 1937 indicate that a memorandum had been submitted by a delegation of the association who had gone before the Royal Commission where the existence of the community called the Bharathas was accepted," says active member and former President Selvam Croos Moraes. Then Ceylon was under British rule.

It didn't end there. A letter dated October 9, 1971 from the then Registrar-General to J.E. John Rodrigo, Appointed Member of Parliament talks of circular no. 49/1491 of October 5 where all Registrars of Marriages, Births and Deaths had been advised that, "the government has since 1940 recognised the Bharatha or in other words 'Parawara' as a race". The Registrar-General's letter had come after Mr. Rodrigo, who represented the interests of the Bharatha community in Parliament, informed him that some Registrars were reluctant to accept "Ceylon Bharatha" as an adequate entry in the 'race' cage of the forms used by his department.

And the Bharatha aspirations to be identified as a distinct ethnic group reached fruition when they along with the Sri Lankan Chetties got their community in print on the recent Census forms, under the category of ethnicity. 

They deserve recognition not only for blending so well into the Sri Lankan mosaic but also for the philanthropy, which has been an integral part of their lifestyles. The spirit of giving of the Bharathas is evident all over Negombo — large tracts of land for churches, cemeteries, schools including Maris Stella College, homes for the homeless, a Paupers' Palace, now a convent, are there for anyone to see. Did you know that the chapel of St. Bridget's Convent too had been donated by a Bharatha?

Even the Dutch government had recognised the Bharathas for their commitment. The story is told of Bastian De Croos whose diligence was so appreciated by the Dutch that he was named 'Bazaar Mestri' and given the keys to the Negombo Fort. Another who is mentioned is N.E. De Croos who had donated land to the Ceylon Government Railway when a railtrack connecting Colombo and Negombo was mooted. "In appreciation of his gesture the colonial government invited him to cut the first sod when the foundation was laid for the Negombo Railway Station," records say.

Many are also the physical monuments such as De Croos Road in the heart of bustling Negombo town and, of course, the famous 'Coppera Handiya'." In the olden days they would bring the coppera by bullock cart to the junction where Maris Stella is now located and then send it to Colombo and other places using the good canal network," says Mr. Croos Moraes. "Still to this day, we call it that."

Handed down from generation to generation are also the many stories of charity. How John Leo De Croos left a thousand acres in a trust so that the income from the land could be used to give dowries to poor girls, irrespective of caste, creed and community. Another had donated baths for the use of the public in Kochchikade, known as Lin Hathara.

What of the Bharathas now? They are active members of the Catholic church, but have moved away from the traditional businesses of land owning and renting. "More and more youth are taking to professions and have moved away from their ancestral lands. There are priests, doctors, engineers and other professionals. Some have married from other communities. The young ones are also very fluent in Sinhala. Things have changed," says Mr. Croos Moraes adding that the Negombo Bharathas are believed to have come from Northern India.

Adds the present President of the Negombo Bharatha Association, Chervon De Croos, "We are still a very close-knit community and the association has about 200 families, but would like to have closer links with Bharathas all over the country. Then we can preserve our identity while at the same time contributing much to the growth of the country."

Provisional estimates of the Census indicate there are about 1,773 Bharathas across the country, excluding the north and the east. So the well-organised Negombo Association with a recorded history of over 75 years has a starting point, with the areas identified, to become a unifying force for the pockets of Bharathas scattered all over the country.
Tending buried generations

The plots are neat and well-tended. There is an air of tranquillity and reverence. This is all thanks to 71-year-old Canisius de Croos, who takes pleasure and pride in what he does. 

What does he do? He's a retired local government servant who did his duty at the Negombo Municipality, but now has a speciality he learnt from his father — he is the keeper of the Negombo Bharatha Association's private cemetery. He knows his job because his childhood was spent among the graves of the Negombo General Cemetery run by the Municipality, for his father was the keeper there for 19 long years. 

That was a five-acre plot and his father had eight labourers under him, with the family living in a bungalow in the cemetery. His father kept a register of burials and ensured that the cemetery was maintained well.

Canisius loves his voluntary job and does the same. "You must respect the dead," he adds.
Traditional goodies

"We cook our roast pork, a must for any festive occasion, in toddy instead of vinegar," says charming Lavinia Croos Moraes making our mouths water. "It does give a better flavour."

Explaining the recipes handed down from her grandmother, she says they also have a special 'moju' rice-puller (pickle) made of prawns or dried fish. "Unlike other communities we use equal quantities of onion and maldive fish in our seeni sambol to make it really crunchy," she says.

Out come the family cutlery and crockery _ a beautiful rice plate, large rice spoon and other utensils _ preserved for posterity by her grandparents and in-laws. "Profegi was a sweet fried in oil, like a cutlet and chatti dosi was one made with rulang, ghee, sugar, cadju and raisins. We also made all those Portuguese sweetmeats like bibikkan and kavun," she says relating a marriage custom connected to food.

Three days before a marriage, all the relatives would get together and cook kavun, but not take a single bite until the wedding was over. Another custom was to join three athiraha together to ensure a blissful life for the couple. If the athiraha got separated, the belief was that the marriage was not right.

Would the wedding be called off? "Oh no, the womenfolk would hide that and cook three more," Lavinia chuckles.

By Kumudini Hettiarachchi


கடல் எலி..'உறல்'


கடற்கரையோரம் கடல் மண்ணுக்குள் இருந்து ஒரு வினோத உயிரினம் அடிக்கடி வெளிப்படும். யாராவது பார்த்துவிட்டால் நொடிப்பொழுதில் குழிதோண்டி மறைந்து கொள்கிறது. அடுத்தடுத்து கடல் அலைகள் கடற்கரை மணலில் மோதி மீண்டும் கடல் நீர் கடலுக்குள் செல்லும் சமயங்களில் கூட்டமாக வெளிப்படும் இந்த உயிரினம், சாதுர்யமாக இரையை பிடித்துக் கொண்டு மீண்டும் மண்ணுக்குள் மறைந்து கொள்கின்றன. நிலத்தில் உள்ள எலி போல் தோற்றமளிக்கும் இந்த வினோத கடல் உயிரினம்.

இந்த உயிரினம் நண்டு வகையை சேர்ந்த மச்ச நண்டு ஆகும். இதன் அறிவியல் பெயர் "எமிரிட்டா ஆசியாடிக்கா'. இது,"ஹிப்பாய்டியே' குடும்பத்தை சேர்ந்தது. உள்நாட்டு மீனவர்கள் இதை "கடல் எலி' என்று அழைக்கின்றனர். இவற்றுக்கு ஐந்து இணை கால்கள் இருந்தாலும், நண்டுகளைப் போல் வெட்டு கொடுக்குகள் இல்லை. இவை பக்கவாட்டில் நகராது. பின்னோக்கி நகரும் தன்மை கொண்டவை.

நேரில் பார்த்தால் அப்படி தெரியாது. கடற்பறவைகள், இவற்றை கண்டால் குஷியாகி பிடித்து தின்று விடும். கடற்பறவைகளிடம் இருந்து தப்பிக்க, அலை அடிக்கும் அரிப்பள்ளம் அருகே மச்ச நண்டுகள் வலை தோண்டி மறைந்து கொண்டு வாழும். இந்த மச்ச நண்டுகளுக்கு இரண்டு நீண்ட உணர்வு தண்டுகள் முகப் பகுதியில் உள்ளன. கடல் நீர் ஏற்றத்தையும் வற்றலையும் தெரிந்து கொள்ள இந்த உணர்வு தண்டுகள் உதவுகின்றன. மற்ற நண்டுகளைப் போல் இதன் ஓடுகள் தோலுரிக்கும் தன்மை உடையது.

இவற்றில் ஆண், பெண் உண்டு. சில ஆண் மச்ச நண்டுகள் ஓட்டின் அளவு 3.5 மி.மீட்டர் வளர்ந்த பிறகு, ஆண் தன்மை மறைந்து, பெண் இனமாக மாறும். அதே நேரத்தில், அது முழு வளர்ச்சி பெற்ற பெண்ணாகவும் இருக்காது. பின்பக்க பகுதியில் சினை முட்டைகள் காணப்படும். கடல் அலை கரையைத் தொட்டு திரும்பும் நேரத்தில், கடல் நீரிலுள்ள மிதவை உயிர் பொருள், மற்றும் சிறு உயிரிகளை உண்டு இவை உயிர் வாழும். மீனவர்கள் தூண்டில்களில் மீன் பிடிக்க இரையாக பயன்படுத்துகின்றனர்.

பழந்தமிழரின் நீரோட்ட அறிவு


பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா..?! தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய.. தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீரோட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.

இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான்.

கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.

உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார். சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான். போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான் உண்மை!

கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன் தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்றுதான்!

ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு. தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும். தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு.

தமிழர் கப்பற்கலை கலைச்சொற்கள்

துறைசார்ந்தோர்

  • கடலோடி
  • தண்டையல் - captain
  • கம்மியர்
  • கப்பல் ஓட்டி
  • கப்பல் கட்டும் மேசுதிரி
  • திமிலர்
  • பரதவர்

கப்பல் வகை வாரியாகப் பாகங்கள்
  • சுக்கான்
பெரிய கப்பல்
  • ஏரா - அடிப்பாகம்
  • முகரி/துரோதை - முன்பாகம்
  • அணிய துரோதை - பின்பாகம்
  • தளம்
  • கூம்பு (பாய்மரத்தை கட்ட உதவும் தண்டு)
  • ஓடுகை, மீப்பாய் - பாய்மரப் பாய்
  • நங்கூரம்
  • வாரி நீக்கம்
  • சிந்தை உசத்தி
  • மணி தூக்கம்
  • மேல் கொடி
  • வரி நீக்கம்
  • அணியக் குச்சை
  • அட்டிட மடி
  • அட்டி சிந்தி உசத்தி
  • பருமல் அடி
  • இசுக்களா அடி
  • அணியத்துக் கச்சைவாரி
  • தட்டு உசத்தி
  • தலுக்காலு உசத்தி
  • கயிறு
  • வள்ளம்
பின்வரும் கலைச்சொற்கள் ஈழத்தில் குருநகர் பகுதியில் பயன்படுத்தப்படுவன. தமிழ்நாட்டில், ஈழத்தின் பிற பகுதிகளில் இவை வேறுபடலாம்.

  • அணியம் - வள்ளத்தின் முன்பக்கம்
  • மோசாவாரி -
  • ஒட்டம் - படகின் நீளுக்கும் வங்குகளின் நுணியில் இணைக்கப்பட்டு இருக்கும் பலகை.
  • வங்கு - U வடிவில் படகின் அடிப்பாகத்தை உருவாக்கப் பயன்படும் திரட்சியான மரத்தில் வடிவமைக்கப்படும் பலகை.
  • கூத்துவாரி - படகின் நடுவில் குறுக்காக போடப்பட்டு இருக்கும் தடித்த பலகை. இதில் வட்டமாக வெட்டியெடுத்து அதற்குள்ளே பாய் மரக் கம்பை வைக்கலாம்.
  • பூவெச்சம் - பாய்மரக் கம்பின் அடியை தாங்கும் வண்ணம் வங்கில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் குழி.
  • கடையல் - வள்ளத்தின் பின்பக்கம்
  • பாய்ப்படகு
  • மூக்கன்
  • பாய்மரம்
  • ஆஞ்சான் கயிறு
  • வடம்
  • பாவல்
  • வாறன் (கயிறு)
  • கடப்பாய்
  • கோர்ஸ்
  • தாமன்
  • நாளி
  • பருமல் - பாய்மரம் நுணி
  • கடையால்பத்தி
  • கூத்துவாரி - படகின் நடுமையம்
  • வங்கு
  • யாளி
  • பாவல்
  • கடப்பாய்
  • அளவைகள்

பார்க்க: தமிழர் கப்பல் அளவைகள்

கட்டப் பயன்படுத்தப்பட்ட கருவிகள்:

  • ரம்பம் - மரம் துண்டாட
  • உளி - மரம் செதுக்க
  • சுத்தியல் -உளி அடிக்க
  • ஒளதார் - மரத்தைத் துளையிட
பயன்படுத்தப்பட்ட மரங்கள்
  • வேம்பு
  • இலுப்பை
  • நாவல்
  • புன்னை
  • வெண் தேக்கு
  • தேக்கு
துறைமுகங்கள்
  • துறைமுகம் - கப்பல்கள் நிறுத்துமிடம்.
  • முன்துறை - கழிமுகத்துக்கு வெளியே அதிக நிறையுள்ள பொருட்களை மட்டும் இறக்கும் இடம்.
  • பெருந்துறைமுகம் - கழிமுகத்துக்கு உள்ளே பண்டகசாலை போன்ற இடங்கள் உள்ள இடம்.
  • கழிமுகம்
  • உலர்துறை - dry docks
  • கப்பல் கூடம்
  • மாலுமி இல்லங்கள் - sailor's home
  • சட்டிமம் - Saxtant
  • கட்டுமானத் தளம்
  • துறைமுகப்பட்டினம்
கப்பல், கடல் கலங்கள் வகைகள்


இதர சொற்கள்:
  • வடகாவி
  • வடசவரி
  • வடகூர்
  • வட மரம்
  • கலி மரம்
  • கலிச் சுற்று
  • கோசா
  • வங்குக்கால்
  • நூல் ஏணி
  • அணிய தண்டு
  • ஈயக்குண்டு
  • சட்டிமம்ம கெச்சண்
  • காமான்
  • ஞாப்பாரம்
  • படலம்
  • கட்டுக்கொடி
  • கூசா
  • புட்டரிசி
  • கிட்டங்கி
  • மகமை
  • ரேவடி
  • திண்ணை
நன்றி: www.ta.wikipedia.org

ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் வெள்ளாங் குருகுப் பத்து பாடல்கள் தொகுப்பு


நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள வெள்ளாங் குருகுப் பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.


151.தலைவி கூற்று


வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

மிதிப்ப நக்க கண்போல் நெய்தல்
கள்கமழ்பு ஆனாத் துறைவற்கு
நெக்க நெஞ்சம் நேர்கல் லேனே.


152.தலைவி கூற்று


வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

கையறுபு இரற்றும் கானலம் புலம்பம்
துறைவன் வரையும் என்ப
அறவன் போலும் அருளுமார் அதுவே.


153.தோழி கூற்று


வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

உளர ஒழிந்த தூவி குவவுமணல்
போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை
நன்னெடும் கூந்தல் நாடுமோ மற்றே.


154.தலைவி கூற்று


வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

கானல் சேக்கும் துறைவனொடு
யான்எவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே.

155.தலைவி கூற்று


வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடு பெயரும் துறைவற்குப்
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே.


156.தோழி கூற்று


வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி
தெண்கழிப் பரக்கும் துறைவன்
எனக்கோ காதலன் அனைக்கோ வேறே.


157.தலைவி கூற்று


வெள்ளாங் குருகுன் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

காலை இருந்து மாலைச் சேக்கும்
தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனன் எம் காத லோனே.


158.தோழி கூற்று


வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்
தண்ணம் துறைவன் கண்டிகும்
அம்மா மேனியெம் தோழியது துயரே.

159.தோழி கூற்று


வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப
நின்ஒன்று இரக்குவென் அல்லேன்
தந்தனை சென்மோ கொண்டஇவள் நலனே.


160.தலைவி கூற்று


வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை

நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ
பண்டையின் மிகப் பெரிது இனைஇ
முயங்குமதி பெரும மயங்கினள் பெரிதே.

About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com