ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் வெள்ளாங் குருகுப் பத்து பாடல்கள் தொகுப்பு

ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள வெள்ளாங் குருகுப் பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.
151.தலைவி கூற்று
வெள்ளாங் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய சென்ற மடநடை
நாரை
மிதிப்ப நக்க கண்போல்
நெய்தல்
கள்கமழ்பு ஆனாத் துறைவற்கு
நெக்க நெஞ்சம் நேர்கல்
லேனே.
152.தலைவி கூற்று
வெள்ளாங் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய சென்ற மடநடை
நாரை
கையறுபு இரற்றும் கானலம்
புலம்பம்
துறைவன் வரையும் என்ப
அறவன் போலும் அருளுமார்
அதுவே.
153.தோழி கூற்று
வெள்ளாங் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய சென்ற மடநடை
நாரை
உளர ஒழிந்த தூவி
குவவுமணல்
போர்வில் பெறூஉம் துறைவன்
கேண்மை
நன்னெடும் கூந்தல் நாடுமோ
மற்றே.
154.தலைவி கூற்று
வெள்ளாங் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய சென்ற மடநடை
நாரை
கானல் சேக்கும் துறைவனொடு
யான்எவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே.
155.தலைவி கூற்று
வெள்ளாங் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய சென்ற மடநடை
நாரை
பதைப்பத் ததைந்த நெய்தல்
கழிய
ஓதமொடு பெயரும் துறைவற்குப்
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென்
யானே.
156.தோழி கூற்று
வெள்ளாங் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய சென்ற மடநடை
நாரை
பதைப்ப ஒழிந்த செம்மறுத்
தூவி
தெண்கழிப் பரக்கும் துறைவன்
எனக்கோ காதலன் அனைக்கோ
வேறே.
157.தலைவி கூற்று
வெள்ளாங் குருகுன் பிள்ளை
செத்தெனக்
காணிய சென்ற மடநடை
நாரை
காலை இருந்து மாலைச்
சேக்கும்
தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனன் எம்
காத லோனே.
158.தோழி கூற்று
வெள்ளாங் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய சென்ற மடநடை
நாரை
கானலம் பெருந்துறைத் துணையொடு
கொட்கும்
தண்ணம் துறைவன் கண்டிகும்
அம்மா மேனியெம் தோழியது
துயரே.
159.தோழி கூற்று
வெள்ளாங் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய சென்ற மடநடை
நாரை
பசிதின அல்கும் பனிநீர்ச்
சேர்ப்ப
நின்ஒன்று இரக்குவென் அல்லேன்
தந்தனை சென்மோ கொண்டஇவள்
நலனே.
160.தலைவி கூற்று
வெள்ளாங் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய சென்ற மடநடை
நாரை
நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ
பண்டையின் மிகப் பெரிது
இனைஇ
முயங்குமதி பெரும மயங்கினள்
பெரிதே.