பனிமய நாயகியின் பெருவிழா அழைப்பிதழ்

11 நாட்கள் நடைபெறும் விழா நிகழ்வுகளில் தினமும் சிறப்புத் திருப்பலிகளும், மாலை 3.00 மணியளவில் தேர்ஸ்ஸும் நடைபெறும். 31.07.2016 அன்று மாலை 5.00 மணியளவில் எழு கடற்றுறை வாழ் பரதகுல மக்களுக்கென சிறப்புத் திருப்பலியும், 02.08.2016 அன்று மாலை 5.30 மணியளவில் கப்பல் மாலுமிகளுக்கென சிறப்புத் திருப்பலியும், 03.08.2016 அன்று காலை 11.00 மணியளவில் மீன்பிடித் தொழிலாளர்களுக்கான திருப்பலியும் நடைபெறுகிறது.
தொடர்ந்து 31.07.2016 அன்று மாலை 6.15 மணியளவில் திவ்ய நற்கருணைப் பவனியும், 04.08.2016 அன்று மாலை 7.00 மணியளவில் பெருவிழா மாலை ஆராதனையும் 05.08.2015 அன்று காலை 5.30 மணி, 7.30 மணி, 12.00 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு சிறப்பு மகா ஆடம்பர பெருவிழா திருப்பலிகளும், அன்று 7.00 மணியளவில் நகர வீதிகளில் நாயகியின் மகோற்சவ பவனியும் வெகு விமரிசையாக நடைபெறும்.
06.08.2016 அன்று காலை 6.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் பெருவிழா நிகழ்வுகள் நிறைவு பெறுகின்றன. அனைவரும் பெருவிழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு பரதர் மாதவாம் பனிமய நாயகியின் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.