Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

சேர்ப்பன்



சேர்ப்பன்- என்று சங்க இலக்கியத்தில் அழைத்த பரதகுல தலைவர்

முகத்துவாரம் அதாவது கடலும் ஆறும் சேரும் இடத்தில் (கழிமுகப்பகுதி) வாழ்த பரதவர் ஊர் தலைவர் தான் சேர்ப்பன்.

வேம்பாறு, வைப்பாறு, கடலூர், புன்னைக்காயல் போன்ற பரதகுல ஊர் தலைவர்களுக்கு உரிய பரதகுல பட்டம். இவை பரதகுல மக்கள் அனைவரும் அறிவோம் இதை உலகம் தெரிந்து கொள்ள இந்த பதிவு.

இன்றளவும் வேம்பாற்றில் பாடப்படும் வேம்பார் பெயர் காரணப் பாடலில் 'வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லுரே வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லுரே' என்ற வரிகள் இப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன.

சேர்ப்பன் என்றால் பரதவர் படை தலைவன் என்றும் கொள்ளலாம். இது  இரண்டு அர்த்தம் கொண்டது. சேர்ப்பன் தேரில் தான் பயணிப்பார். சங்க இலக்கிய சான்றுகள் பல உள்ளன.

சான்று-1

குறுந்தொகை

49-நெய்தல் - தலைவி கூற்று

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து 
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப 
இம்மை மாறி மறுமை யாயினும் 
நீயா கியரென் கணவனை 
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 
-அம்மூவனார்.

சான்று-2

குறுந்தொகை

51-நெய்தல் - தோழி கூற்று

கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர் 
நூலறு முத்திற் காலொடு பாறித் 
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை 
யானும் காதலென் யாயுநனி வெய்யள் 
எந்தையுங் கொடீஇயர் வேண்டும் 
அம்ப லூரும் அவனொடு மொழிமே. 
-குன்றியனார்.

சான்று-3

குறுந்தொகை

145-நெய்தல் - தலைவி கூற்று

உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி 
கானலஞ் சேர்ப்பன் கொடுமை ஏற்றி 
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள் 
துஞ்சா துறைநரொ டுசாவாத் 
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே. 
-கொல்லனழிசியார்.

சான்று-4

குறுந்தொகை

175-நெய்தல் - தலைவி கூற்று

பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி 
உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை 
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் 
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற் 
கிரங்கேன் தோழியீங் கென்கொ லென்று 
பிறர்பிறர் அறியக் கூறல் 
அமைந்தாங் கமைக அம்பலஃ தெவனே. 
-உலோச்சனார்.

சான்று-5

குறுந்தொகை

205-நெய்தல் - தலைவி கூற்று

மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க 
விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப் 
பொலம்படைப் பொலிந்த வெண்டேர் ஏறிக் 
கலங்குகடல் துவலை ஆழி நனைப்ப 
இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன் 
யாங்கறிந் தன்றுகொல் தோழியென் 
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே. 
-உலோச்சனார்.

சான்று-6

குறுந்தொகை

219-நெய்தல் - தலைவி கூற்று

பயப்பென் மேனி யதுவே நயப்பவர் 
நாரில் நெஞ்சத் தாரிடை யதுவே 
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே 
ஆங்கட் செல்கம் எழுகென வீங்கே 
வல்லா கூறியிருக்கு முள்ளிலைத் 
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க் 
கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே. 
-வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்.

சான்று-7

குறுந்தொகை

226-நெய்தல் - தலைவி கூற்று

பூவொடு புரையுங் கண்ணும் வேயென 
விறல்வனப் பெய்திய தோளும் பிறையென 
மதிமயக் குறூஉ நுதலு நன்றும் 
நல்லமன் வாழி தோழி அல்கலும் 
தயங்குதிரை பொருத தாழை வெண்பூக் 
குருகென மலரும் பெருந்துறை 
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே. 
-மதுரை எழுத்தாளனார் சேந்தம்பூதனார்.

சான்று-8

குறுந்தொகை

236-நெய்தல் - தோழி கூற்று

விட்டென விடுக்குநாள் வருக அதுநீ 
நேர்ந்தனை யாயின் தந்தனை சென்மோ 
குன்றத் தன்ன குவவுமணல் அடைகரை 
நின்ற புன்னை நிலந்தோய் படுசினை 
வம்ப நாரை சேக்கும் 
தண்கடற் சேர்ப்பநீ உண்டவென் னலனே. 
-நரிவெரூஉத் தலையார்.

சான்று-9

குறுந்தொகை

243-நெய்தல் - தலைவி கூற்று

மானடி யன்ன கவட்டிலை அடும்பின் 
தார்மணி யன்ன ஒண்பூக் கொழுதி 
ஒண்தொடி மகளிர் வண்ட லயரும் 
புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை 
உள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே. 
-நம்பி குட்டுவனார்.

சான்று-10

குறுந்தொகை

269-நெய்தல் - தலைவி கூற்று

சேயாறு சென்று துனைபரி யசாவா 
துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல 
வயச்சுறா எறிந்த புண்தணிந் தெந்தையும் 
நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும் 
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய 
உப்புவிளை கழனிச் சென்றனள் இதனால் 
பனியிரும் மரப்பிற் சேர்ப்பற் 
கினிவரி னௌியள் என்னும் தூதே. 
-கல்லாடனார்.

சான்று-11

குறுந்தொகை

306-நெய்தல் - தலைவி கூற்று

மெல்லிய இனிய மேவரு தகுந 
இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ 
மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன் 
காமர் மாஅத்துத் தாதமர் பூவின் 
வண்டுவீழ் பயருங் கானல் 
தண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே. 
-அம்மூவனார்.

சான்று-12

குறுந்தொகை

334-நெய்தல் - தலைவி கூற்று

சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ 
டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப் 
பனிபுலந் துறையும் பல்பூங் கானல் 
விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம் 
இன்னுயி ரல்லது பிறிதொன் 
றெவனோ தோழி நாமிழப் பதுவே. 
-இளம்பூதனார்.

சான்று-13

குறுந்தொகை

349-நெய்தல் - தலைவி கூற்று

அடும்பவிழ் அணிமலர் சிதைஇமீன் அருந்தும் 
தடந்தாள் நாரை இருக்கும் எக்கர்த் 
தண்ணந் துறைவற் றொடுத்து நந்நலம் 
கொள்வாம் என்றி தோழி கொள்வாம் 
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய 
கொடுத்தவை தாவென் சொல்லினும் 
இன்னா தோநம் இன்னுயிர் இழப்பே. 
-சாத்தனார்.

சான்று-14

குறுந்தொகை

351-நெய்தல் - தோழி கூற்று

வளையோய் உவந்திசின் விரைவுறு கொடுந்தாள் 
அளைவாழ் அலவன் கூருகிர் வரித்த 
ஈர்மணல் மலிர்நெறி சிதைய இழுமென 
உருமிசைப் புணரி உடைதரும் துறைவர்க்கு 
உரிமை செப்பினர் நமரே விரியலர்ப் 
புன்னை ஓங்கிய புலாலஞ் சேரி 
இன்னகை ஆயத் தாரோடு 
இன்னும் அற்றோஇவ் வழுங்க லூரே. 
-அம்மூவனார்.

சான்று-15

குறுந்தொகை

397-நெய்தல் - தோழி கூற்று

நனைமுதிர் ஞாழற் தினைமருள் திரள்வீ 
நெய்தல் மாமலர்ப் பெய்தல் போல 
ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப 
தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட் 
டன்னா வென்னுங் குழவி போல 
இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும் 
நின்வரைப் பினளென் தோழி 
தன்னுறு விழுமங் களைஞரோ இலளே. 
-அம்மூவனார்.

சான்று-16

ஐங்குறுநூறு

நெய்தல் பத்து 3

கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
குறும்பொறை நாடன் நல்வய லூரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே.

சான்று-17

ஐங்குறுநூறு

தாய்க்குரைத்த பத்து 108

அன்னை வாழிவேண் டன்னை கழிய
முண்டக மலரும் தண்கடற் சேர்ப்பன்
எந்தோள் துறந்தனன் ஆயின்
எவன்கொல் மற்றவன் நயந்த தோளே.

சான்று-18

ஐங்குறுநூறு

தோழிக்குரைத்த பத்து -112

அம்ம வாழி தோழி பாசிலைச்
செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்
தான்வரக் காண்குவம் நாமே
மற்ந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே.

சான்று-19

ஐங்குறுநூறு

தோழிக்குரைத்த பத்து -117

அம்ம வாழி தோழி நலனே
இன்ன தாகுதல் கொடிதே புன்னை
யணிமலர் துறைதொறும் வரிக்கும்
மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே.

மீன் வைத்தியம்










சங்க கால வளையல்


திணை: பாலை
பாடியவர்: மாமூலனார் பாடல்


பாடல் பகுதிஅரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய,
எவன் ஆய்ந்தனர் கொல் தோழி!
அகநானூறு - 349
பொருள்:

சங்கை அரத்தால் அறுத்துச் செய்த வைளையல் அணிந்த என் கையைப் பற்றித் திருமணம் செய்துகொண்டவர் அந்தக் கையின் அழகு தொலைய விட்டுவிட்டு நன்னன் ஆளும் ஏழில் குன்றம் கடந்து வேற்று மொழி பேசும் நாட்டுக்குப் பொருளீட்டச் சென்றுவிட்டாரே! என்ன செய்வது? தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

வேம்பாறும் பாண்டியரும்


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பரத குல மக்கள் நுழைவதற்கான வடக்கு வாசல் சாவி வேம்பார் பரதகுல மக்களிடம் இருந்ததாக வாய்வழி வரலாறு உள்ளது என்பது உண்மையா....

மேற்கண்ட தகவலுக்கு விடை காணும் முன் வேம்பாற்றின் பரத குலத்தோருக்கும் பாண்டியருக்குமான உறவைப் பற்றி காண்பது அவசியம்..... 

1. வேம்பாறு என்பதன் பெயர் காரணத்தை அறிய முற்படும் போதே பாண்டியருடனான உறவை அறிய முடியும். பெரும்பாலான ஊர்களின் பெயர்கள் பாண்டியரின் பெயரையே கொண்டு அமைந்திருக்கும். ஆனால் வேம்பாறோ நேரடியாக பாண்டியனைக் குறிப்பதாகவே அமைந்துள்ளது. பாண்டியனின் அடையாள மாலை வேப்பம்பூவினால் ஆனது. வேம்பாற்றிக்கு வருகை தந்த பாண்டிய மன்னனுக்கு வேம்பாற்று பரதவ தலைவர் வேப்பம்பூவினால் ஆரம் (மாலை) தயாரித்து சூட்டியதால் வேம்பாரம் என அழைக்கப்பட்டு, பின்னர் வேப்ப மரங்கள் சூழ்ந்த இவ்வூரின் வழியே ஓடி கடலில் கலக்கும் வேம்பு + ஆறு = வேம்பாறு என்ற பெயரில் அழைக்கப்பட்டு  ஆங்கில உச்சரிப்பில் வேம்பார் என மாறியது என்பர் இவ்வூர் பெரியோர். இதில் வேம்பன் என்ற சொல்லுக்கு பாண்டியன் என்ற பொருள்படுகிறது. ஆக வேம்பனின் ஊர் வேம்பார் எனவும் கொள்ளலாம். வேம்பாற்றில் பாடப்படும் பழம் பாடல் ஒன்றில் 'வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே.... வேம்பாறெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே' என்னும் வரிகள் காணப்படுவதும் சிறப்புமிக்கது.

2. வேம்பாறு ஊரினை பரத குலத்தோர் நிம்பநகர் என அன்று முதல் இன்று வரை அழைத்து வருகிறார்கள். இதில் நிம்பன் என்பதும் பாண்டியனைக் குறிக்கும் சொல்லாகும். எனவே தான் வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனை நிம்பதாரோன் என அழைப்பர். எனவே நிம்பனின் நகர் நிம்பநகர் ஆகும். நிம்ப என்ற தமிழ் சொல்லிலிருந்தே வேப்பமரத்தை குறிக்கும் NEEM என்ற ஆங்கில சொல் உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட காரணங்களின் மூலம் நேரடியாகவே பாண்டியருடன் வேம்பாற்றின் தொடர்பினை அறிய முடிகிறது. எனவேதான் முத்துக்குளித்துறை (தூத்துக்குடி) மறைமாவட்ட முதல் ஆயர் மேதகு. ரோச் ஆண்டகை அவர்கள் பெயரிலே சிறந்தது வேம்பாறு எனக் கூறுவார். 

3. அடுத்ததாக இன்று மழைக் காலங்களில் அருப்புக்கோட்டை பகுதியில் பெய்யும் மழையால் கரை புரண்டு ஓடி கடலில் கலக்கும் வேம்பாறு ஆறு. தற்காலத்தில் மழைகாலங்களில் மட்டுமே ஓடும் இந்த ஆறு முற்காலத்தில் தமிழகத்தின் வற்றாத ஆறுகளில் ஒன்றாக விளங்கி மதுரையில் ஓடிய வைகை ஆற்றின் கிளை ஆறாகும். கூடுதல் தகவலாக வைகை ஆறு மதுரையிலிருந்து ஓடி வந்து முதன் முதலாக மன்னார் வளைகுடா கடலில் கலப்பது வேம்பாறு ஊரின் முகத்துவாரத்திலே. அப்படியானால் வேம்பாறு துறைமுகத்தில் நடைபெற்ற வணிகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட ஆற்றுவழிப் பாதை நேரடியாகவே மதுரையோடு தொடர்பு கொண்டிருந்ததும் முக்கியத்துவம் மிக்கது. அக்காலத்தில் தரை வழிப் பயணங்களை விட ஆற்று வழிப் பயணமே பாதுகாப்பானதாகவும், எளிமையானதாகவும் இருந்தது. 

4. இதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆற்று வழிப்பாதையில் அமைந்துள்ள ஊரான திருமாலுகந்தன்கோட்டையில் காணப்படும் முருகன் கோயில் கல்வெட்டில் அப்பகுதியில் கடல் வணிகம் செய்த வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் எறிவீரர்கள் அடங்கிய குழுக்கள் அவ்வூரில் தங்கி இருந்ததாக தெரிவிக்கிறது. இக்கல்வெட்டின் காலம் 13 ஆம் நூற்றாண்டு. அக்காலத்தில் இப்பகுதியில் வேம்பாற்றைத் தவிர வேறெங்கும் கடல் வணிகம் நடைபெறவில்லை. வேறேதும் இயற்கைத் துறைமுகம் இப்பகுதியில் அமைந்திருக்கவில்லை. வேம்பாறு ஆறே துறைமுகமாக செயல்பட்டது. இன்றும் கூட மழைகாலங்களில் ஆற்று ஓரங்களில் அக்காலத்தில் நடைபெற்ற வணிகத்தின் சாட்சிகளாய் பாண்டியர் கால நாணயங்கள் கிடைப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. வேம்பாறு ஊரின் பழம் குடிகளான பரத குலத்தோரின் குடியிருப்புகள் அனைத்தும் மற்ற கடற்கரைப் பட்டினங்களைப் போலல்லாமல் ஆற்றை நோக்கியே அமைந்திருப்பதும் கண்கூடு. இலங்கையின் மன்னார் தீவுப் பகுதிகளில் நடைபெறும் முத்துக்குளித்தலை நிகழ்த்த வேம்பாற்றிலிருந்து செல்வது மிகவும் எளிது. வேம்பாற்றுத் துறைமுகமானது கொற்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாய் இருந்தது. 

5. வேம்பாற்றில் நடைபெற்ற முத்து வணிகத்திற்கும், கடல் வணிகத்திற்கும் வருகை தந்த அரச குலத்தோரும், பெரும் வணிகர்களும், அரச ஊழியர்களும் தங்கும் இடமாக சேதுபாதையில் அமைந்திருக்கும் சர்ப்ப மடமாகும். இதற்கு சுந்தர தோழர் சத்திரம் எனவும் பெயருண்டு. இதில் குறிப்பிடப்படும் சுந்தர தோழர் என்பவர் சுந்தர பாண்டியனாக இருக்க மிகவும் வாய்ப்புள்ளது. இம்மடத்தில் எந்த கல்வெட்டும் காணப்படவில்லை. ஆனால் இதில் காணப்படும் புடைப்பு சிற்பங்களை வைத்து இதன் காலம் 13 ஆம் நூற்றாண்டு என அறிய முடிகிறது. தற்போது சிதிலமடைந்து வரும் இக்கட்டிடமானது முற்காலத்தில் பிரமாண்டமான அளவில் இருந்து அழிந்து போனதாகவும், மணல் மூடி மண்ணில் புதைந்து போனதாகவும், பிற்காலத்தில் யாரும் செல்லாமல் போனாதால் பாம்புகள் அதிகமாக காணப்பட்டதால் சர்ப்பமடம் என்றும் பெயர் பெற்றதாகவும் கூறுவர். 

6. தமிழ் வளர்த்த பாண்டிய பேரரசின் தலைநகருடன் நேரடித் தொடர்பில் இருந்ததால் இவ்வூரில் பேசப்படும் தமிழ் மொழியானது மற்ற கடற்கரைப் பட்டினங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழின் அச்சுத் தந்தை அன்றிக் பாதிரியார் தொடங்கி தமிழ் வளர்த்த வீரமாமுனிவர், முதலான பல்வேறு கிறிஸ்தவ துறவிகள் வேம்பாற்றில் தமிழ் பயின்றுள்ளனர். உலகத் தமிழ் மாநாடு கண்ட தனிநாயகம் அடிகள் வேம்பாற்றில் அதிக நாள் தங்கி தம் தமிழை செம்மைப்படுத்திய வரலாற்றையும் இவ்வூர் பெரியவர் கூறுவர். 

7. இவை அனைத்தையும் விட முத்தாய்ப்பாய் மதுரையை ஆண்ட மீனாட்சிக்கு மதுரையில் கோயில் எழுப்பியது போல வேம்பனின் நகராம் வேம்பாற்றிலும் பாண்டியர்கள் மீனாட்சிக்கு கோயில் எழுப்பினர். இக்கோயிலானது தற்போதைய சர்ப்பமடத்திற்கு அருகிலேயே அமையப் பெற்றிருந்தது. அங்கு மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் அனைத்துப் பூஜைகளும் வேம்பாற்றிலும் நடைபெற்றது. குறிப்பாக அன்று வேம்பாற்றில் நடைபெற்ற மீனாட்சி அன்னைக்கு வேப்பம்பூமாலை அணிவிக்கும் நிகழ்வு இன்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழா காலங்களில் மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டும் விழாவில் வேப்பம்பூ மாலை அணிவது வழக்கமாக உள்ளது. 1536 ஆம் ஆண்டு வேம்பாற்று பரதர்கள் கிறிஸ்தவ மறையைத் தழுவிய பின்னர் இக்கோயில் கைவிடப்பட்டது. எனவே இங்கிருந்த இரு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிலைகளில் ஒன்று மேல்மாந்தைக்கும் மற்றது விளாத்திகுளத்திற்கும் எடுத்து செல்லப்பட்டு வேம்பாற்றிலிருந்த கோயில் கற்களைக் கொண்டு கோயிலும் எழுப்பப்பட்டுள்ளது. 

8. இதன் காரணமாக இக்கோயில் கல்வெட்டுகள் அனைத்தும் அழிந்து போனது. பல்வேறு கல்வெட்டு பதிவுகள் கிடைக்காமல் போயின. கிறிஸ்தவம் தழுவிய பின்னர் வேம்பாற்று பரத குலத்தவர்கள் தங்களின் புதிய ஆலயத்தில் நடுநாயகமாக மேரி மாதாவை கொலுவேற்றினர். அம்மேரி மாதாவின் கரங்களில் செங்கோல் ஏந்திய வண்ணம் அமைத்து ‘மரிய செங்கோல் அரசி’ என அழைத்தனர். இந்த அமைப்பு முறை முந்தைய வழிபாட்டின் தொடக்கமாக அமைந்தது. 

1870ல் மொட்டைக்கோபுரமாக திகழ்ந்த,
வடக்கு கோபுரத்தின் தோற்றம் 
9. இவ்வாறு வேம்பாற்றிக்கும் பாண்டியருக்குமான தொடர்பானது மிக நெருக்கமாக அமைந்திருந்ததன் காரணமாக மதுரை மீனாட்சி அம்மனின் வடக்கு வாசல் சாவியும் இங்கு இருந்திருக்க மிக அதிக வாய்ப்பும் உள்ளது. இது குறித்த நேரடியான ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் இது குறித்த வாய்வழி மரபு செய்திகளை வேம்பாற்றுப் பெரியவர்கள் கூறுவதுண்டு. இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் வேம்பாற்றினை பூர்வீகமாகக் கொண்ட வடக்கு வீட்டு சீதாதி வம்சத்தோர் என்ற வம்சத்தோர் வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தகுந்தது. இதில் சீதாதி என்பது பரத குல பதவிகளில் ஒன்றாகும். இக்குடும்பத்தினர் வசமே இந்த சாவி இருந்திருந்தபடியால் இவர்கள் வடக்கு வீட்டு வம்சத்தோர் என அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. இன்றும் கூட சில கடற்கரை பட்டணங்களில் சில இடங்களில் கோயில் சாவிகள் ஊர் நிர்வாகி ஒருவர் வசம் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் வேம்பாற்றில் பரத குலத்தோர் வாழும் பகுதி வடக்குத் தெரு என்றே அழைக்கப்படுவதும் இங்கு கவனத்திற்குரியது.

சீனிச்சம்பல்

தேவையான பொருட்கள்:
2 கிலோ பெரிய வெங்காயம்
4 தேக்கரண்டி நொருக்கிய வத்தல் மிளகாய் தூள்
50 கிராம் மாசிக்கருவாட்டுத்தூள்- சைவமாக செய்ய விரும்புபவர்கள் மாசிக்கருவாட்டை தவிர்க்கவும்.
3 மேகரண்டி சீனி
1 துண்டு கறுவாப்பட்டை 
15 ஏலக்காய்
10 கராம்பு 
கருவேப்பிலை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
150 மில்லி எண்ணை


செய்முறை:

வெங்காயத்தை தோல்நீக்கி கழுவி மெல்லிய வளையங்களாக வெட்டி தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். 

ஏலக்காயின் தோலை நீக்கி கறுவா, கராம்பு இவற்றுடன் சேர்த்து தூளாக்கி வைக்கவும்.

ஒரு பெரிய சட்டியில் 100 மில்லி எண்ணையை விட்டு சூடாக்கி அதனுள் வெட்டிய வெங்காயத்தைப் போட்டு மெல்லிய சூட்டில் வதக்கவும். அடிக்கடி வெங்காயத்தை கிளறி விடவேண்டும். 

சிறிது நேரம் 5 நிமிடம் அளவில் பாத்திரத்திரத்தை மூடி போட்டு மூடி வைத்து வெங்காயத்தை வதங்கி அவிய விடவும். பின்பு மூடியை அகற்றிவிடவும். அப்பொழுது வெங்காயத்தின் நடுவில் தண்ணீர் சிறிது சேர்ந்து இருக்கும். அந்த நீர் வற்றும்வரை அடிக்கடி வெங்காயத்தைக் கிளறி வதங்கவிடவும். 

தண்ணீர் இல்லாமல் வதங்கிய பின்பு அதனுள் முதலில் 4 தேக்கரண்டி நொருக்கிய செத்தல் தூள், கறுவா, ஏலம் கலந்த தூள் இவற்றைச் சேர்த்து வதங்கவிட்டு பின்பு மாசிக்கருவாட்டுத்தூள். மீதமுள்ள 50 மி.லி எண்ணை இவற்றைச் சேர்த்துக்கலந்து வதங்கவிடவும்.

வெங்காயத்தில் உள்ள நீர்த்தன்மை குறைந்து நன்றாக பொரிந்து வரும் பொழுது 3 தேக்கரண்டி சீனியையும் பின்பு கருவேப்பிலையையும் சேர்த்துக் கலந்து நன்றாக வதங்கவிடவும். நன்றாக வெங்காயம் அவிந்து வதங்கிய பின்பு அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட்டு போத்தலில் போட்டு அடைத்து வைத்துப் பாவிக்கவும்.

பெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்


தமிழரின் கடல் வாணிப வரலாற்றில் எனக்கிருக்கும் ஆர்வத்தை அறிந்த நண்பர் ஒருவர், அந்தத் தகவலைச் சொன்னார். ‘தெக்க, ஒரு பெருமாள் கோயில்ல பழங்கால கப்பல் படம் வரைஞ்சிருக்கும். அங்க குஞ்சாலி மரைக்காயரை சனங்க கும்புடுறாங்க’. தமிழ் இனக் குழுக்களில் 14-ம் நூற்றாண்டு முதல் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியவர்கள் மரைக்காயர்கள். 16 -ம் நூற்றாண்டில் போர்த்துகீசியரை எதிர்த்துப் போரிட்டு வீர மரணமடைந்த குஞ்சாலி மரைக்காயர்கள் குறித்த நூல்கள், திரைப்படங்கள் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருந்த எனக்கு, அது புதிய செய்தி.

மிதமான வெயிலடித்துக்கொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில், அந்தப் பெருமாள் கோயிலைத் தேடி, தூத்துக்குடி மாவட்டத்தில், மணப்பாடு அருகில் உள்ள மாதவன்குறிச்சியைச் சென்றடைந்தேன். கண்ணில் பட்ட ஓரிரண்டு பெண்கள் அப்படி ஒரு கோயிலே ஊரில் இல்லை என்று சாதித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த நடுத்தர வயதுப் பெண், "எங்க குலக் கோயில்தான் அது, வாங்க" என்று என்னை ஆர்வத்துடன் அழைத்துச் சென்றார். கோயிலின் இரும்புக் கேட்டை தள்ளியவுடன் உடனடியாகக் கண்ணில் பட்டது, மண்டப முகப்பில் வரையப்பட்டிருந்த, பழங்காலத்து பாய்மரக் கப்பலின் படம். மண்டபத்தினுள்ளே பல கிராம தெய்வங்களுடன் கட்டம் போட்ட வெள்ளை கைலியும், பச்சை நிறச் சட்டையும், வெள்ளை துருக்கி குல்லாவும் அணிந்தவாறு, தாடியுடன், குஞ்சாலி மரைக்காயர் அழகிய ஓவியமாகக் காட்சியளித்தார்.

ஒரு நூற்றாண்டு யுத்தம்

இந்தியப் பெருங்கடலில், 16-ம் நூற்றாண்டு வரையில் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தங்குதடையின்றி நடந்துகொண்டிருந்த கடல் வணிகத்தை, குறிப்பாக நறுமணப் பொருள் வணிகத்தைத் தங்களுக்கு மட்டுமே உரியது என்று ஏகபோக உரிமை கொண்டாட ஆரம்பித்தனர் ஐரோப்பிய போர்த்துக்கீசியர். அக்காலத்தில் இந்திய மன்னர்களுக்குக் கடற்படையென்று தனியாக எதுவும் கிடையாது. வணிகக் கப்பலில் செல்லும் பாதுகாப்புப் படைகளே கடற்கொள்ளையர்களைச் சமாளித்துக் கொண்டன.

அப்போது, தமிழகக் கடல் வணிகம் என்பது பெரும்பாலும் தென்னக முஸ்லிம்கள் வசம் இருந்ததால், போர்த்துக்கீசியரை எதிர்த்து நிற்க வேண்டிய பொறுப்பும் அவர்களையே சார்ந்திருந்தது. கோழிக்கோடை ஆண்டுவந்த சாமுத்ரி, முக்குவ மீனவக் குடும்பத்தில், வீட்டுக்கு ஒருவர் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என்று உத்தரவிட்டான். இவ்வாறு பலப்படுத்தப்பட்ட கடற்படையைக் கொச்சியைச் சார்ந்த குஞ்சாலிகள் தலைமையேற்று, கேரள, தமிழக, இலங்கைக் கடற்கரைகளில் போர்த்துக்கீசியரோடு சண்டையிட்டனர். கோழிக்கோடு, பொன்னானி, கொல்லம், கொச்சி, காயல்பட்டினம், தூத்துக்குடி, கீழக்கரை, வேதாளை என்று பல்வேறு இடங்களில் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் சண்டைகள் நடைபெற்றன.

பீரங்கி பொருத்தப்பட்ட ‘காரவல்’ என்ற போர்த்துக்கீசிய பெரும் கப்பல்களோடு மோதுவது சிரமம். ஆனால், அக்கப்பல்களை உடனுக்குடன் திசை திருப்புவது எளிதல்ல என்பதோடு, அவை கடலில் விரைந்து செல்ல வேகமான காற்றின் உதவியும் தேவை. எனவே, குஞ்சாலிகள் பெரும் கப்பல்கள் புக முடியாத ஆற்று முகத்துவாரங்கள் போன்ற குறுகிய இடங்களில் மறைந்திருந்து, சிறு படகுகளில் விரைந்து, துடுப்பைப் போட்டு காரவல்களைத் தாக்கிவிட்டுத் திரும்பும் உத்தியைக் கையாண்டு, வெற்றியும் பெற்றனர். சிறிய படகுகள் என்பதால், போர்த்துக்கீசிய பீரங்கிகளுக்கு அவை எளிதாகச் சிக்கவில்லை. வரலாற்று ஆய்வாளர்

கே.கே.என்.குறுப்பு ‘இந்தியாவின் கடற்படை மரபுகள்: குஞ்சாலி மரைக்காயர்களின் பங்கு’ என்ற நூலில் ‘இது போன்ற பல படகுகளை ஆற்றின் முகத்துவாரத்தில், குறுகிய நீர்ப் பரப்பிலும் குஞ்சாலிகள் மறைத்துவைத்திருந்தனர். அவை ஒன்றுசேர்ந்து போர்த்துக்கீசிய காரவல்களைத் தாக்கி, அவற்றின் பாய்மரங்களைத் தீயிட்டு செயலிழக்கச் செய்தன’ என்கிறார்.

மரைக்காயர்களின் போர்த் தந்திரத்துக்கு ஏற்றவாறு மாதவன்குறிச்சி அருகில் கடலில் கலக்கும் ஆற்று முகத்துவாரம் அமைந்துள்ளது. குஞ்சாலிகள் என்னதான் திறம்பட சண்டையிட்டு சில வெற்றிகளை அடைந்திருந்தாலும், போர்த்துக்கீசியரின் உயர்ரக ஆயுதத் தொழில்நுட்பத்துக்கு முன்னர், முடிவில் தோல்வியையே தழுவினர். மணப்பாடு போர்த்துக்கீசியர் கைவசமிருந்தது. குஞ்சாலி மரைக்காயர்களில் ஒருவர் அல்லது அவர்களது தளபதிகளில் ஒருவர் மாதவன்குறிச்சி அருகில் போரிட்டு வீர மரணம் அடைந்திருப்பாரோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஏனென்றால், போரில் மரணத்தைத் தழுவியோரைத் தெய்வமாக்கிக் கௌரவிப்பது இம்மண்ணின் கலாச்சாரம்.

ஆணியில்லாத கப்பல்

மரைக்காயர் வழிபாட்டுக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் ஒவ்வொருவர் சொல்லும் கதையும் சற்று மாறினாலும், பெரும்பாலானவை வரலாற்றுச் சம்பவங்களுடன் ஒத்துப்போகின்றன. நம் நெடிய பாரம்பரியத்தில் தொலைந்துபோய்விட்டவற்றின் பதிவுகளாகவும் அந்தக் கதைகள் அமைந்துள்ளன. உதாரணமாக, புரட்டாசி மாதம் கோயில் கொடையின் போது நடைபெறும் வில்லுப்பாட்டில் ‘நம்ம மரைக்காயருக்கு 999 கப்பல் இருந்துச்சு. அவுக ஆயிரமாவது கப்பல, ஆணியில்லாத கப்பலா இருக்கணுமுன்னு முடிவு பண்ணுனாக...’ என்று சேர்ம சுந்தரி தாமோதரன் குரலை உயர்த்தி, இழுத்துப் பாடும் போது, ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் தமிழர்களின் கப்பல்களை ஆணிகள் பயன்படுத்தாமல் வலுவாகக் கட்டும் திறன் பெற்றிருந்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

மரைக்காயரின் ஓவியத்துக்கு முன்னே உள்ள சிறு மேடையில் அமர்ந்தவாறு, தனது வில்லுப்பாட்டினைத் தொடரும் சேர்ம சுந்தரி குழுவினர், ஆணியில்லாத கப்பலை உருவாக்குவதற்காகக் காட்டுக்குள் சென்ற மரைக்காயரும், விஸ்வகர்மாக்களும் கபாலசாமி குடியிருந்த மரத்தை விவரம் தெரியாமல் எதேச்சையாக வெட்டுவதிலிருந்து, மரைக்காயர் கடல் போரில் மரணமடைந்தது, பூசைக்குத் தகுதிபெற்றது வரை விவரிக்க, இதனூடே பெருமாள் கோயில் கொடை நடைபெறுகிறது. வில்லுப்பாட்டில் சகோதரர்களாக வர்ணிக்கப்படும் குன்னாலி, குட்டி அலி என்ற பெயர்கள் குஞ்சாலி மரைக்காயர்களின் வரலாற்றுடன் வரும் மரைக்காயர் பெயர்களுடன் ஒத்துப்போகின்றது. கேரளக் கடற்கரையில் ஆரம்பித்த மரைக்காயர்களின் கடற்பயணம் மணப்பாடு அருகே சோக முடிவை அடைந்ததையும் வில்லுப் பாட்டு விவரிக்கின்றது. இந்தச் சம்பவம் சுமார் 400-லிருந்து 500 வருடங்களுக்குள் நடந்திருக்கலாம் என்று அனைவரும் கருதுகின்றனர்.

தொன்மங்களின் பொருள் விளக்கம்

இவ்வாறு பல்வேறு நிகழ்வுகள் கேரளத்து குஞ்சாலி மரைக்காயர் வரலாற்றுடன் ஒத்துப்போனாலும், வில்லுப்பாட்டு அவர்களை ராமநாதபுரம் அருகில் உள்ள கீழக்கரையின் அரசர்களாகச் சித்தரிக்கின்றது. 400 வருடங்களுக்கும் மேலான வரலாறு, காலப்போக்கில் அவரவர் புரிதலுக்கு ஏற்ப மாறியிருக்கிறது என்று இதை எடுத்துக்கொள்ளலாம். ஆயிரமாவது கப்பலை ஆணியில்லாத கப்பலாக்குவதில் மரைக்காயர் காட்டும் ஈடுபாடு, இழந்த தமிழர் கடல் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் கருதலாம். 

ஐரோப்பிய காலனியத்துக்கு எதிராக, போர்த்துக்கீசியருடன் போரிட்டு வீர மரணமடைந்த குஞ்சாலி மரைக்காயர்களின் நினைவாக, சுதந்திர இந்தியா, 1954-ல் ‘ஐ.என்.எஸ் குஞ்சாலி’ என்ற இந்திய கடற்படைத் தளத்தை நிறுவிக் கௌரவித்தது. குஞ்சாலிகள் மறைவுக்குப் பின்னர் பெரும் வீழ்ச்சியைக் கண்ட தமிழகத்தின் கடல் வணிகப் பாரம்பரியம் கிட்டத்தட்ட நம் நினைவுகளிலிருந்து அடியோடு அகன்றுவிட்டது என்றே கூறலாம். கேரளா தவிர்த்து, தமிழகத்தில் குஞ்சாலிகள் பெரிதும் மறக்கப்பட்ட நிலையில், தென் தமிழ்நாட்டில் வருடா வருடம், மாதவன்குறிச்சி பெருமாள் கோயில் கொடை விழாவில் தொடர்ந்து உரிய மரியாதை செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

- கோம்பை எஸ்.அன்வர்,
வரலாற்று ஆய்வாளர்.

(தமிழ் முஸ்லிம்களின் வேர்களைப் பதிவு செய்த ‘யாதும்’ எனும் ஆவணப்படத்தை இயக்கியவர்)



தென் பரதவரின் வழக்காற்றுச் சொற்கள் சில

தென்பாண்டிக் கடலோர மக்கள் "பைய" என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார்கள், அந்த சொல்லுக்கு "மெதுவாக" என்று பொருள். சைக்கிள் எடுத்து ஊர் சுற்ற கிளம்பி விட்டால் "ஏல பைய பாத்துப்போயிட்டு வா என்னா" என அடுப்பங்கரையில் இருந்து அம்மாவின் குரல் ஒலிக்கும்.

திருவள்ளுவர் காமத்துபாலில் ஒரு குறளில் பைய என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். காதலனும் காதலியும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது காதலி காதலனைப் பார்த்து மெதுவாக சிரிக்கிறாள். இந்த சூழ்நிலையை வள்ளுவர் சொல்கிறார்

"அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்."

இரண்டாவது அடியில் தலைவி மெதுவாக சிரிக்கிறாள் என்பதை "பைய நகும்" என்கிறார் வள்ளுவர். அட, 2000 ஆயிரம் வருடதிற்கு முன் திருவள்ளுவர் பயன்படுத்திய வார்த்தையை இன்னும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். 

மேலும் சில சொற்கள்:

• ஏல, ஏக்கி -

• ஆச்சி : வயதான பெண்மணி - Elderly Women;. தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள். .

• பைதா - சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!)

• கொண்டி - தாழ்ப்பாள்

• பைய - மெதுவாக

• சாரம் - லுங்கி

• கோட்டி - மனநிலை சரியில்லாதவர்.

• வளவு - முடுக்கு,சந்து

• வேசடை - தொந்தரவு

• சிறை - தொந்தரவு

• சேக்காளி - நண்பன்

• தொரவா - சாவி

• மச்சி - மாடி

• கொடை - திருவிழா

• கசம் - ஆழமான பகுதி

• ஆக்கங்கெட்டது - not constructive (a bad omen)

• துஷ்டி - எழவு (funeral)

• சவுட்டு - குறைந்த

• கிடா - பெரிய ஆடு (male)

• செத்த நேரம் - கொஞ்ச நேரம்

• குறுக்க சாய்த்தல் - படுத்தல்

• பூடம் - பலி பீடம்

• அந்தானி - அப்பொழுது

• வாரியல் - துடைப்பம்

• கூவை - ஆந்தை an owl (bird of bad omen)

• இடும்பு - திமிறு (arrogance)

• சீக்கு - நோய்

• சீனி - சர்க்கரை (Sugar)

• ஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 8 செண்ட் நிலம்

• நொம்பலம் - வலி

• கொட்டாரம் - அரண்மனை

• திட்டு - மேடு

• சிரிப்பாணி - சிரிப்பு

• திரியாவரம் - குசும்புத்தனம்

• பாட்டம் - குத்தகை

• பொறத்தால - பின்னாலே

• மாப்பு - மன்னிப்பு

• ராத்தல் - அரை கிலோ

• சோலி – வேலை

• சங்கு – கழுத்து

• செவி – காது

• மண்டை – தலை

• செவிடு – கன்னம்

• சாவி – மணியில்லாத நெல், பதர்

• மூடு – மரத்து அடி

• குறுக்கு – முதுகு

• வெக்க - சூடு, அனல் காற்று

• வேக்காடு - வியர்வை

தமிழ் பிறந்த இடம் பொதிகை என்றும், தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதி மக்களின் வார்த்தைகளில் இன்னும் ஆதித் தமிழ் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

நம் வாழ்வியலோடு கலந்த மொழியை சரளமாகவும், இயல்பாகவும் பேசினாலே அதன் அழிவினை நம்மால்  தடுக்கலாம்.
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com