Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

மாமல்லை



இன்று மாமல்லபுரம் என்று அழைக்கப்படும் பல்லவரின் துறைமுகப் பட்டினத்தின் வரலாற்றைக்  கூறும்  நூல் 




Download link 

விடிந்தகரை 2.00


வீர மிக்கவரும், விவேகமிக்கவருமான

பரதவ பாண்டியனின் பாரம்பரிய

வீரியத்து விளைநில மண் ... அது...!

பரந்து பட்ட பல்லுயிர் வரலாற்றுகளில் புதைந்து

காணாமல் போய் கிடக்கும் பூமி ... அது...! ஆனாலும்

அந்த பழமையான நகரம் கால ஓட்டத்தில் களையிழந்து

1600 களிலும் இப்படிதான் இருந்தது.


அது ஒரு புரட்டாசி மாதம் தமிழர் ஆண்டு 777 விஜய வருடம்

1602 கன்னியாகுமரி அம்மையின் பரிவேட்டைக்கு போய்

பனைப்பெட்டி நிறைய பலகாரங்களும்,

பண்டங்களும் வாங்கிக் கொண்டு

கட்டுமரத்து வழியாக திரும்பி வந்த அந்தக் கூட்டம்,

அந்த நள்ளிரவு வேளையிலே சலசலப்பு ஏதும் இல்லாது

மரத்தைத் தூக்கி கரை வைத்து விட்டு தனி தனியாக

கடற்கரை இருளோடு கலந்தது.


ஆனாலும்....... தூரத்து மணல் மேட்டில்

முண்டாசு கட்டி அமர்ந்திருந்த அந்த உருவம்

அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தது


அப்போதும்

தாவிலிருந்து கரை தாவி அடிக்கும் கடல் அலைக்கும்

சிறு காத்து உரச காதைக் கிழிக்கும் பனை ஓலைக்கும்

இன்று வரை தொடரும் அந்த சண்டை

அந்த இரவிலும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.



சிறிய நேரத்திற் கெல்லாம்

அங்கொன்றும் இங்கொன்றுமாக

தொழிலுக்குப் போக பரதவர்கள் கடற்புறத்தில் நடமாட

உவரி என்னும் அந்த பரதவக் கடற்கரை

உதய சூரியனின் உதயத்தால் விழித்து எழுந்தது.



அன்றைய உவரி,

மணல் மேடுகளின் இடையே ஆங்காங்கே

பனை ஓலை குடிசைகளும்,

அந்த காலத்து நவீன முறையான

தென்னை ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகளும்

அக்கிராமத்தில் நிறைந்து இருந்தன.

கிராமத்தின் நடுநாயகமாக பெரும் மணல் திரட்டின் இடையே

புதிதாக ஒரு கட்டிடம் எழும்பி கூரை வேலை நடந்து கொண்டிருந்தது.

அதன் அருகிலேயே தான்

அந்த கிராமத்தின் தலைவன்

சந்தானப் பட்டங்கட்டியின் அரண்மனையும் இருந்தது.


காளைகள் பூட்டிய வண்டி ஒன்று

சந்தானப் பட்டங்கட்டியாரின் வீட்டு வாசலிலே

அவரின் வருகைக்காகக் காத்துக் கிடந்தது.


(இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால்

அந்த காளைகள் சந்தனபிள்ளை எனும்

தொல்தமிழ் காளைமாட்டு வகை சார்ந்தவை.)


சந்தானப் பட்டங்கட்டி தனது தினக் கடனை முடித்துவிட்டு

கடற்துறைக்கோ கரைக்காட்டுவிளைக்கோ போவதற்கு முன்பு

தனது மாமனாரை வணங்கிச் செல்வது வழக்கம்.


சந்தானப் பட்டங்கட்டியின் மாமனார்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்

பிள்ளைதோப்பு நாஞ்சிப் பிள்ளை.

அவரது மனைவி அதாவது பட்டங்கட்டியின் அத்தை

சாதி தலைவனாரின் மகள்.

1552 ராஜாக்கமங்கலம் கலவரத்தின் போது

நம்பூதிரிகளால் மனைவி பிள்ளைகள்

சொத்து சுகங்களை இழந்து அனாதையாக்கப்பட்டவர்.

மருமகனை தேடி வந்து அடைக்கலமானவர்.


கண்ணிழந்த மாமனாரை கண் போல்

காத்து வருபவர்தான் நமது பட்டங்கட்டி.

ஆனாலும் மாமனாரின் வரலாற்று செரிவுகளையும்,

நிகழ்வுகளையும்,சிந்தனைகளையும்

அவ்வப்போது கேட்டு கேட்டு சந்தானப் பட்டங்கட்டியும்

பரத இனத்தின் வரலாற்றை தனக்குள்ளே பதித்துக் கொண்டார்.


இதைவிட சந்தானப் பட்டங்கட்டியின் மகன் முத்தையா வாஸ்

நாஞ்சிப்பிள்ளையின் பேரன் அவர் மடியிலே இருந்து

கதை கதையாய்க் கேட்டு தன் இன வரலாற்றையும்,

மூதாதையர் வரலாற்றையும் அறிந்து கொண்டவன்.


பட்டங்கட்டி தன் அறையிலிருந்து

வெளியேறுவதை தன் குறிப்பால் உணர்ந்த மாமனார்,

“பட்டங்கட்டி ஐயா, ஏதோ மனசு சரி இல்லை,

பார்த்து பக்குவமாய் போயிட்டு வாங்கைய்யா” என்று

வழக்கத்திற்கு மாறாக கூறினாலும் வயதானவர்

தன் பொருட்டு உள்ள அக்கறையில் கூறுகிறார் என்கின்ற

அன்பை நினைத்தவாறே அவர் காலைத் தொட்டு வணங்கி

வெளியேறினார் பட்டங்கட்டி.


அவசர அவசரமாக அடுக்களை வழியாக

அடுத்த தெருவிற்குப் போய் மீண்டும் குட நீருடன்

காளை மாட்டு வண்டிக்கு எதிராக நடந்து வந்தார்

பட்டங்கட்டியார் பொஞ்சாதி மீனாச்சியம்மை


மீனாச்சியம்மை ஆத்தாள் அவர்களது ஆத்தாள்

வள்ளி நாச்சியார் போல ஒளியாய் இருந்தார்.

பட்டங்கட்டியை வழியனுப்ப மட்டுமே

வீட்டைவிட்டு வெளியே வருவார் மீனாட்சியம்மை,

கனத்த காசிப்பட்டு உடுத்தி

கைவரை நீண்ட ரவிக்கை அணிந்திருந்தார் மீனாட்சியம்மை

நெற்றியை அடைத்த அளவுக்கு நிலா போன்ற வடிவில்

குங்குமத்தை இட்டிருந்தார்கள்.

அப்போதுதான் பரதவகுலம் மதம் மாறி போயிருந்தாலும்

தன் பழமை சடங்குகளை மறுக்க முடியாமல்

பரிதவித்து வந்தவர்கள் மீனாட்சியம்மை

மகன் முத்தையா வாஸூக்கு இது பிடிக்கது. ஆனாலும்

சந்தானம் பட்டங்கட்டி தனது

இனத்து தலைவனார் பேத்தியை

தலையில் வைத்து கொண்டாடியதால்

இது பற்றி எதுவுமே சொல்வதில்லை


ஆண் பிள்ளை பிறந்து தொழிலுக்கு போனாலோ

பெண் பிள்ளை பிறந்து ருதுவானாலோ

பாம்படம் அணிவது அந்த காலத்து

பாண்டி பரத்தியரின் வழக்கம்.

முத்தையா வாஸுக்கு 22 வயது ஆயிருந்தாலும்

மீனாட்சியம்மையின் பாம்படம் பூட்டிய

காது மட்டும் இன்னும் வடியவேயில்லை.

அவருடைய கூந்தலின் நீளம்

அவரது பாதம் வரை படிந்திருந்தது.


பொதுவாக மீனாச்சியம்மை வெளியே வரும் போதும்

சந்தானப் பட்டங்கட்டி வெளியே கிளம்பும் போதும்

யாரும் வராமல் பார்த்துக் கொள்வது

வண்டிக்காரன் சுயம்பு வின் வேலை அவன்

ஆங்காங்கே கைகாட்டி அனைவரையும்

வீட்டிற்குள் போக சொல்லி, சைகை செய்து கொண்டிருந்தான்.

கதவைத் திறந்து வெளியே வந்த பட்டங்கட்டியார்

முறுக்கு மீசையும், படுதா பாய்ச்சின வெட்டியும், துண்டையும்

உடுத்தியிருந்த பட்டங்கட்டி, சுருண்ட மயிரை சுருட்டி

கொண்டையாய்ப் பின்னியிருந்தார்.

காதில் கடுக்கனும், மூக்குத்தியும் போட்டிருந்த

சந்தானம் பட்டங்கட்டி தன் விரிந்த, வெற்று மார்பிற்கு

சந்தனமும் தடவியிருந்தார்.

ஆனாலும் அவரது தோளுக்கும், இடுப்பிற்கும்

இடையே வெள்ளிக் கொடி ஒன்று ஆடிக் கிடந்தது.


வயது அறுபதை நெருங்கினாலும்

மாட்டு வண்டியிலே அவர் துள்ளிக் குதித்து

உட்கார்ந்த லாவகம் பார்க்க பரவசமாய் இருந்தது.

அவர் முரட்டுக் காளைகளின் மூக்கணாங்கயிற்றை கையிலேற்றி

திறிபுரி நாரெடுத்து சந்தனபிள்ளை காளைகளை அடிக்க

முரட்டுக் காளைகள் புயலாக காற்றைக் கிழித்து

மணல் மேட்டைக் கடந்து முன்னேறிப் போய்க் கொண்டிருந்தது.

மாட்டோடு மாடாக சுயம்பும்

வண்டியின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான்.


அந்த பனை ஓலைக் காட்டிலே பட்டங்கட்டி குடுவையில்

தன் குடும்பத்தோடு தங்கியிருந்த கருக்கு,

பட்டங்கட்டியை எண்ணி சிலாகித்தபடியே

பனை மரத்து மேலிருந்து பாடிக் கொண்டிருந்தான்.


கருக்கு, தன் எசமான் சந்தானப் பட்டங்கட்டிகாக

நெஞ்சு உரச பனை பனையாய் ஏறி

பனை மொந்தையை கலயம் கலயமாக இறக்கி வைத்து விட்டு

இறுதியாக தூரத்தில் ஒத்தை முனிப் பனையில் ஏறி இருந்தான்.

முனி கதைகளை பலர் பேசக் கேட்ட

அவனுக்கு வந்த பயத்தைப் போக்கவே

சந்தானப் பட்டங்கட்டியின் பாடலை

இவ்வாறாகப் பாடிக்கொண்டிருந்தான்.


சடையாண்டி மலையாண்டி

சுடுக்காட்டு கோலாண்டி

அவந்தாண்டி சிவன் தாண்டி

அவன் மகன் ……..

கடலாண்டி வேலாண்டி

ஆறுமலை படையாண்டி

ஆண்டியவன் சொந்தத்து

பாண்டிமார் வம்சத்து

வழிவழியாய் வந்தவராம் எங்க‌

உவரியூர் பட்டங்கட்டி

கடலையும் கடைவாரம்

மலையையும் உடைப்பாராம்

பேயரசி கூட்டத்துக்கெல்லாம்

பெருவிருந்து வைப்பாராம்

பனங்காட்டு முனியையும்

வேளாகொம்புகொண்டு உதைப்பாராம் ………

இன்னும் இன்னும் ஏதேதோ பாடிகொண்டிருந்தான்.


இது பனங்காடு இருந்தாலும் பரதவரின் உல்லாசக் கூடு.

வாடையிலும், கோடையிலும் பாடுபட்டு வரும்

பரதவர்கள் களைப்புத் தீர பனங்கள்ளை உண்டு

சுட்ட மீன் கூட்டோடு கிழங்கைத் தின்று

மணல் மேட்டிலே அசதியை களிப்பார்கள் என்பது

சங்க காலத்திலிருந்தே உருவாக்கப்பட்ட நியதி.

அதுவே இந்த கிராமத்திலும் தொடர்கிறது.


ஆனாலும் சந்தானம் பட்டங்கட்டியின் காட்டுக்குள்ளே

கள்ளு குடிக்க வரக்கூடிய பரவமார் யாரும்

காசு கொடுக்க வேண்டியதில்லை.

அங்கிருக்க கூடிய பட்டங்கட்டியாருடைய பங்காளிகள் தான்

பரதவருடைய வியாபாரிகள்.


எவர் எத்தனை கலயங்கள் குடித்தாலும்

பார்வைக்காரன் கருக்கு பனை ஓலையிலே

கோடு கோடாக எழுதி வைத்து விடுவான்.

கள்ளுக்குடி கணக்கெல்லாம்

கருவாட்டுக் கணக்கோடு சேர்ந்து விடும்

அதனாலேயே தான் அந்த பனைமரக் காடு

பரதவரின் கேளிக்கைக் கூடமாக இருந்தது.


தூரத்தில் மாட்டுவண்டி சத்தம் கேட்டதுமே

பதை பதைத்த‌ கருக்கு பனையிலிருந்து ஒரே தாவாக தாவி

மணலில் குதித்து பட்டங்கட்டியின்

சரட்டு மாட்டு வண்டி நோக்கி ஓடி வந்தான்.

கருக்குவின் குடுவையின் முன்பு

பட்டங்கட்டியார் வண்டியை நிறுத்தவும்,

கருக்கு ஓடிப் போய் சேரவும் சரியாய் இருந்தது.


மூச்சிரைக்க ஓடி வந்து குனிந்து கிடந்த கருக்குவை பார்த்து,

‘ஏய்யா கருக்கு, இன்னிக்கு கள்ளுக் கணக்கு எப்படி இருக்கு?

ஏதாவது வில்லங்கம் உண்டா?

ஒழுங்கா எல்லாரும் குடிச்சானுவளா? இல்ல

மாறி மாறி அடிச் சானுவளா? என கேட்டபடி

சாரட்டிலிருந்து இறங்க, குனிந்தபடி இருந்த கருக்கு,


நாச்சியார் ஐயா ஒன்னுமில்லையா!

ஒத்த ஊட்டுக்காரன் மட்டும் தான்

சாவளை வெல குறைஞ்சி போச்சுன்னு

எதோ புலம்பிக்கிட்டு இருந்தான்.

வேற ஒண்ணுமில்லய்யா என

மிகப் பவ்வியமாகக் பதில் சொன்னான்.

உண்மையிலேயே

கள்ளுக்குடிக்க வந்த மடிகாரமாரு

இரண்டாம் கலயம் குடித்துவிட்டு முடிக்கும் போதே

கொழும்பு சந்தையையும், கொல்லம் சந்தையையும்

அலசி ஆராஞ்சி, பட்டிமன்றமே நடத்தியதை

ஏனோ கருக்கு மறைத்துவிட்டான்.


கருக்கு குடிசையின் பக்கத்திலேயே

பனை ஓலை பந்தலின் கீழே

கிடந்த கயிற்றுக்கட்டிலை நோக்கி நடந்துபோயி

பட்டங்கட்டி ஆற அமர உக்கார்ந்தபடி,

வேறென்ன விஷேசம் கருக்கு? எனக் கேட்க


கருக்குக்கு மனசுக்குள்

சொல்லவே சொல்லக் கூடாது என்ற எண்ணம் ஓடினாலும்

அவனது வாய் பொய் சொல்லத் தெரியாமல்

மேல விளையில் போட்ட கருவாடு என்று

இழுத்து இழுத்து எதோ சொல்ல,

சந்தானம் பட்டங்கட்டி,


‘ஏல, கருவாட வழக்கம் போல

எவனாச்சும் தூக்கிட்டு போய்டானுவலா?

சொல்லுல என அதட்ட...


நாச்சியார் ஐயா ரெண்டு பயலுவ

ஒரு குதிரைல ஒருத்தரக் கூட்டிட்டு வந்து

பெருமாள் பாளையக்காரன் ஆளுக நாங்க தான்.

கருவாடு வேணும்ன்னு கேட்டணுவ.

நாச்சியார் ஐயா கிட்ட கேட்டுட்டு

நாளைய பொழுது எடுத்துட்டு போங்க அப்படின்னு சொன்னேன்.

உங்க சந்தானம் பட்டங்கட்டியும், உங்க சாமிமாரும்

இதுவரைக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காம

ஏமாத்துர கோவத்துல பாளைய பெருமாள் இருக்காரு.

மரியாதையா அவ்வளவு கருவாட்டையும் கொடுன்னு சொல்லி

என்னைய அடிச்சுபுட்டாணுவ ... அதுக்குள்ள

மூணு நாலு பேரு குதிரையில வந்து அம்புட்டுக் கருவாட்டையும்

ஒமல் ஓமலா அள்ளிட்டு போயிட்டானுக...

கேட்டதும் முகம் சிவந்து கோவமுற்ற பட்டங்கட்டி,

‘ஏல, நாயே... தகவல் சொல்லுறதுக்கு உன்னைய வச்சிருக்கேனா...

அவனுக கேட்டனுகன்னா நீ அள்ளிக் கொடுத்திடுவியா?’

நீ உடனே என் கரகாட்டுக்கு வரவேண்டியது தான?

யார் யாருல அவனுக? உனக்குத் தெரியாமல் இருக்காது சொல்லுல என

கோவத்தில் கருக்குவை எட்டி மிதித்தார்.

பயந்து போன கருக்கு வந்தவர்களைப் பற்றிய

அடையாளங்களை திக்கித் திணறி சொல்லும் போதே

பட்டங்கட்டியின் மண்டைக்குள் சாமிப்பிள்ளையின்

மீதான குரோதம் வெடித்து கிளம்பியது

யார் அந்த சாமிப்பிள்ளை………?

பட்டங்கட்டிக்கும் அவருக்கும் என்ன விரோதம்…?



தொடரும் ...... 



கடல் புரத்தான் ......

"மீனாட்சியம்மை கலிவெண்பா” - 2



"மீனாட்சியம்மை கலிவெண்பா” -2 [31 முதல் 60 வரை]
[பங்குனியில் ஒரு நவராத்திரி-4]
‘திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்தது!’



நெற்றிதனிற் கண்ணாகி நிட்களரூபப் பொருளாய்
உற்றவெளி யாகிநின்ற வுத்தமியே - பத்திநிரை

ஆகாயத் தின்னொளியாய் அந்தரத்தின் ரூபமாய்
மேகாதிக் குள்ளே விளைபொருளாய் - வாகாம்

இடைபிங் கலையாய் இரண்டுக்கும் எட்டாக்
கடையுஞ் சுழிமுனையாய்க் காலாய் - மடலவிழ்ந்த

மூலாதா ரத்தொளியாய் மும்மண் டலங்கடந்து
மேலாதா ரத்திருந்த வெண்மதியாய்ப் - பாலூறல்

உண்ணுஞ் சிவயோக வுத்தமியே மெய்த்தவமே
பண்ணுமறை வேதப் பழம்பொருளே - எண்ணரிய

மெய்ஞ்ஞான வித்தே விளக்கொளியே மெய்ச்சுடரே
அஞ்ஞான மேயகற்றும் அம்மையே - பைந்நாகம்

பூண்டசிவ னாரிடத்துப் பூங்கொடியே பாங்குடனே
தாண்டவமா டப்பவுரி தாளமொத்தி - ஆண்டியுடன்

ஆடுங்கூத் தாடிச்சி யம்மனைபந் தாடிச்சி
தேடியும்மால் காணாச் சிவசக்தி - நாடியுனைப்

போற்றும்அடி யார்கள் வினைபோக்கியே அஞ்சலென்று
தேற்றுகின்ற அம்மை துடியிடைச்சி - சாற்றறிய

பச்சை நிறத்தி பவளக் கொடியிடைச்சி
கச்சைப் பொருமுலைச்சி கைவளைச்சி - கொச்சை [40]

மலையரையன் பெற்ற மலைச்சி கலைச்சி
நிலையறிவே தாந்த நிலைச்சி - அலையாத

அன்ன நடைச்சி யருமறைச்சி யாண்டிச்சி
கன்னல் மொழிச்சி கருணைச்சி - பன்னுதமிழ்

வாய்ச்சி சடைச்சி வடிவுடைய மங்கைச்சி
பேய்ச்சி இளமுலைச்சி பேதைச்சி - காய்ச்சியபால்

வெண்ணெய் மொழிச்சி வெளிச்சி வெளியிடைச்சி
அண்ணுபுரந் தீயிட்ட அம்படைச்சி - நண்ணிலரும்

கொப்புக் குழைச்சி குவளைப் பொருவிழிச்சி
அப்புச் சடைச்சி சிவகாமச்சி - மெய்ப்பாங்

கருப்புச் சிலைச்சி கலைச்சி வலைச்சி
மருப்புத் தனத்திமவு நத்தி - பொருப்பிடத்தி

தாமப் புயத்தி சமர்த்தி தருமத்தி
நாமச் சிவபுரத்தி நாரணத்தி - தேமருவுங்

காரணத்தி பூத கணத்தி தனபார
வாரணத்தி அட்டதிக்கு மாரணத்தி - பூரணத்தி

பாத பரிபுரத்தி பங்கயத்தி செங்கரத்தி
சோதி மணிநிறத்தி சொப்பனத்தி - பாதிமதி

சூடுகின்ற சொக்கருடன் துய்யபுலித் தோலுடுத்திக்
காடுதனில் வீற்றிருக்கும் காரணியே - நாடறியுஞ் [50]

சேணிச்சி நல்ல சிறுத்தொண்டன் பிள்ளையறுத்
தூணிச்சி நஞ்சமுதாம் ஊணிச்சி - பாணிச்சி

பாசாங்கு சக்தி பரத்தி பருப்பதத்தி
காசாம்பூ மேனிக் கனதனத்தி - மாசிலா

அம்பரத்தி ஐம்புலத்தி யானதொரு வேதாந்த
உம்பருக்கும் எட்டாத வுத்தமத்தி - செம்பொன்வளைச்

செட்டிச்சி வைகைதனிற் சென்றுவெட்டி மண்சுமந்த
ஒட்டச்சி பூதியணி யுத்தளத்தி - அட்டதிக்கு

மின்னே விளக்கே விலையில்லாச் சீவரத்னப்
பொன்னே நவமணியே பூங்கிளியே - இன்னமுதே

மாணிக்க வல்லியே மாமரக தப்பணியே
ஆணிக் கனகத் தரும் பொருளே - மாணுற்ற

சிங்கார வல்லியே செம்பொற் சிலைவளைத்த
கங்காளற் கன்பான கண்மணியே - மங்காத

தெய்வக் குலக்கொழுந்தே செம்பட் டுடைத்திருவே
ஐவருக்குந் தாயாய் அமர்ந்தவளே மெய்யருக்குச்

சித்தி கொடுக்குஞ் சிவானந்தி அன்பருக்கு
முத்திகொடுக் குஞ்ஞான மூர்த்தியே - எத்திசைக்கும்

தாயகமாய்ச் சூழ்தா வரசங்க மம்விளக்குந்
தூயசுடர் மூன்றான சூக்குமமே - வேயீன்ற [60]


********************************

அருஞ்சொற்பொருள்:


31. நிட்களம்-குற்றமற்ற தன்மை; வெளி-சிதாகாசம்; உத்தமி-சிறந்த இலக்கணமுடையவள்; பத்தி-வரிசை.

32. ஒளி- சுடர்; அந்தரம்-ஞானாகாசம்; ரூபம்-வடிவு; விளை பொருள்-உண்டாகும் உயிர்ச்சத்து; மேகம்-மழை; வாகு-அழகு.

33. இடை- இடைகலை, இடதுபக்க நாசி மூச்சுக்காற்று; பிங்கலை- வலதுபக்க நாசியில் வரும் மூச்சுக்காற்று; கடை- இறுதியானது; சுழிமுனை-இடைகலையும், பிங்கலையும் சேரும் இடம்; கால்-காற்று; மடல்-இதழ்கள்; அவிழ்ந்த-மலர்ந்த.

34. மூலாதாரம்- ஆறு ஆதாரங்களில் முதன்மையானது, மும் மண்டலம்- சூரிய, சந்திர, அக்கினி எனும் 3 மண்டலங்கள்; கடந்து- சென்று; மேல் ஆதாரம்-உச்சி இடத்துக்கும் மேல்நிலை; ஊறல்- சுரக்கும்[அமுதம்].

35. எண்-நினைத்தல்; அரிய-முடியாத.

36. மெய்ஞ்ஞானம்-உண்மை அறிவு; அஞ்ஞானம்-அறியாமை; பைந்நாகம்-படத்தைப் பெற்ற பாம்பு.

37. பாங்கு-முறை; ஆண்டி-பிச்சாண்டி.

38. கூத்தாடிச்சி- கூத்தாடியின் பெண்பால்; அம்மனை- ஏழாங்காய் ஆட்டம்; பந்தாடிச்சி-பந்தாட்டம் ஆடுபவள்; மால்-விஷ்ணு.

39. வினை-நல்வினை, தீவினை இரண்டும்; அஞ்சல்-பயப்படாதே; தோற்றுதல்-தரிசனம் தருதல்; துடி-உடுக்கை; இடைச்சி-இடுப்பை உடையவள்; ஏத்து-துதித்தல்.

40. நிறத்தி-நிறம் உடையவள்; கச்சு-இரவிக்கை; பொரு-முட்டுகின்ற; முலைச்சி-தனங்களை உடையவள்; வளைச்சி-வளையல்களை அணிந்தவள்; கொச்சை-மழலைப் பேச்சு.

41. மலையரையன் - மலை அரசன் மலையத்வஜன். மலைச்சி- குறிஞ்சி நிலப் பெண்; கலைச்சி- பல கலைகளையும் அறிந்தவள், சிறந்த ஆடைகளை அணிந்தவள்;மேகலை என்னும் ஒட்டியாணத்தை அணிந்தவள்[[மே]கலைச்சி என்பது முதற் குறைந்து வந்தது]; நிலை- உண்மைத் தன்மை; நிலைச்சி- நிலை பெற்றுள்ளவள்;அலையாத-அசையாத.

42.நடைச்சி-நடையை உடையவள்; மறைச்சி- வேதங்களால் புகழ்ந்து கூறப்படுபவள், வேதங்களுக்குள் மறைந்து காணப்பெறும் உட்பொருளாய் இருப்பவள்; ஆண்டிச்சி-எல்லாவற்றையும்ஆளும் தகுதி பெற்றவள்; கன்னல்-கரும்பு; மொழிச்சி-இனிய சொற்களை உடையவள்; கருணைச்சி- உயிர்களிடம் இரக்கம் உள்ளவள்.

43.வாய்ச்சி- இன்சொல்லுடையவள்; சடைச்சி-சடையை உடையவள்; மங்கைச்சி-இளம்பெண்; பேய்ச்சி- பேய்களால் சூழப் பெற்றவள்;அச்சம் தரத் தக்கவள்; இளமுலைச்சி- பிறரால் சுவைக்கப் பெறாத இளமையான தனங்களை உடையவள்; பேதைச்சி-ஒன்றும் அறியாப் பருவத்தை உடையவள்.

44. மொழிச்சி- சொற்களை உடையவள்; வெளிச்சி-வெட்டவெளியை இருப்பிடமாகக் கொண்டவள்; வஞ்சம் அற்ற வெளிப்படையான குணமுடையவள்; வெளி இடைச்சி- வெட்டவெளியின் நடுவே தோன்றாது இருப்பவள்; அண்ணுபுரம்- நெருங்கிய முப்புரம்; படைச்சி-நகை[சிரிப்பு] என்னும் போர்க்கருவியை உடையவள்; நண்னில்-எளிதில் அடையமுடியாத; அரும்-விலையுயர்ந்த.

45. கொப்பு-மேல் காதில் அணியும் கொப்பு என்னும் அணி; குழைச்சி-கீழ்க் காதில் அணியும் குழை என்னும் நகையணியை உடையவள்; பொரு-போன்ற, வென்ற; விழிச்சி-கண்களை உடையவள்; அப்பு-[கங்கை]நீர்; சிவாகமச்சி- சைவ ஆகமத்தின் தலைவி; மெய்ப்பு ஆம்- உண்மை ஆகிய.

46. கருப்பு-கரும்பாகிய; சிலைச்சி-வில்லை உடையவள்; கலைச்சி-கலைகளின் தலைவி; வலைச்சி-மீனவர் குலத்தில் பிறந்த உமை.;மருப்பு-யானைக்கொம்பு; மவுனத்தி-மோன நிலையில் இருக்கும் பரமேஸ்வரி; பொருப்பு-[இமய]மலை.

47. தாமம்-மாலை; சமர்த்தி-சாமர்த்தியமானவள்; தருமத்தி- அறம் வளர்த்த அரசி; நாமம்-புகழ் வாய்ந்த; சிவபுரத்தி-மதுரையைத் தன்இருப்பிடமாக உடையவள்; நாரணத்தி- நாராயணன் தங்கையான வைஷ்ணவி; தே-தெய்வீகத் தன்மை.

48. காரணத்தி-எல்லாவற்றுக்கும் மூல காரணமாயுள்ளவள்; கணத்தி-கூட்டமாக இருப்பவள்; வாரணத்தி-பெண்யானை போன்ற நடையையுள்ளவள்; மாரணத்தி-அனைத்துக்கும் இறுதி தரக் கூடிய வல்லமையுள்ளவள்; [ஆரணத்தி எனப் பிரித்து வேதங்களுக்குத் தலைவியானவள் எனவும் பொருள் கொள்ளலாம்; பூரணத்தி-எங்கும், எதிலும் நிறைந்தவள்.

49. பரிபுரத்தி-பரிபுரம் என்னும் சிலம்பினை அணிந்தவள்; பங்கயத்தி-அடியார்களின் இதய கமலத்தில் அமர்ந்திருப்பவள்; செங்கரத்தி-செம்மை வாய்ந்த கைத்தலங்களை உடையவள்; சொப்பனத்தி-கனவிலும் வந்து அருள் சுரப்பவள்; பாதிமதி- அரைச் சந்திரன்.[பறைச் சந்திரன் எனவும் கொள்ளலாம்]

50. துய்ய-தூய்மையான; காரனி-உலகின் மூல காரணமாக உள்ள தலைவி.

51. சேணிச்சி-நிலையாதார்க்கு எட்டாத தூரத்தில் இருப்பவள்;[ஆடை நெய்யும் குலத்தில் பிறந்தவள், சொர்க்கத்தை விரும்பும் அடியார்க்கு கொடுத்து அருள்பவள் எனவும் கொள்ளலாம்];ஊணிச்சி- நல்ல உணவை விரும்புபவள், உண்டவள்; பாணிச்சி-செங்கரங்களை உடையவள்;விறகு விற்ற படலத்தில் பாணனாக வந்த சிவனின் தலைவி].

52. பாசம்-பாசக் கயிறு; அங்குசம்- யானையை அடக்கப் பயன்படும் ஈட்டி; பரத்தி-மேலான பிராட்டி, பரதர் குலத்தில் பிறந்த பெண்; பருப்பதத்தி-மலை நாட்டில் பிறந்தவள்; மேலான பதத்தைத் தர வல்லவள்; காசாம் பூ- நீலோத்பல மலர்.

53. அம்பரத்தி- குற்றமற்ற சேலையை உடுத்தியவள்; ஆகாயத்தை உருவாக உடையவள்; ஐம்புலத்தி-சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களின் ஆதாரமாயிருப்பவள்; குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்களின் தலைவி; ஒரு-ஒப்பற்ற;உம்பர்-தேவர்; உத்தமத்தி-மேலான இலக்கணங்களையுடைய செல்வி.

54. செட்டிச்சி-செட்டி குலப்பெண்; ஒட்டச்சி-மண் வேலை செய்பவள் [சிவனார் மண் சுமந்த படலம் அறிக.] பூதி-திருநீறு; உத்தளத்தி-உடல் முழுதும் பூசியிருப்பவள்.

55. மின் -மின்னலைப் போன்ற பிரகாசம் உடையவள்; விளக்கு-அஞ்ஞான இருளைப் போக்கும் பிரகாசம்போன்றவள்; சீவ ரத்தினம்-ஐந்தலை நாகத்தின் மணி போன்ற; பொன் -அழகிய இலக்குமி.

56. பணி-ஆபரணங்கள் அணிந்தவள்; ஆணிக் கனகம்- பொன்னால் ஆன ஆபரணம்; மாண்-சிறப்பு.

57. சிங்காரம்-அலங்காரம்; சிலை-மலை; கங்காளர்-எலும்பு மாலை அணிந்த சிவபிரான்; மங்காத-ஒளி குறையாத.

58. கொழுந்து-இளந்தளிர் போன்றவள்; திரு-தெய்வத்தன்மை நிறைந்தவள்; ஐவர்-பிரமன். விஷ்ணு,உருத்திரன், மகேஸ்வரன்,சதாசிவன் எனும் 5 கடவுளர்.தாய்-ஆதி சக்தி;மெய்யர்-உண்மை அடியார்கள்.

59. சிவானந்தி- சிவானுபவம் பெற்றொளிரும் பிராட்டி; மூர்த்தி-தலைவி.

60. தாயகம்-பிறப்பிடம்; தாவரம்-நிலைபொருள்; சங்கமம்-இயங்கு பொருள்; சுடர் மூன்று-தீபச் சுடர்கள் மூன்று[சூரிய,சந்திர,அக்கினி];சங்கமம்-நுண்ணிய பொருள்; வேய்-மூங்கில்.

******************************

ராஜ கன்னி மரியை நோக்கி விருத்தப்பா

விருத்தாப்பா 


திரிவனாதி அருள் பரமநற் சாேதியால்
தெரிந்திடும் அமலேஸ்வரி

திவ்விய குல தவிதிறை ஒவ்வுநவ மணியென
ஜெ ன்மித்த ராஜேஸ்வரி
நிறை கற்பரசியாம் மறையவர் சிரசியம்
நேசி தேக ப்ரகாசி
நீளலகை நாசியாம் வாழ்தாசர் ராகசியாம்
நித்ய சம்பன்ன வாசி
சுரரடி தாெழுநாரி சூசைமாமுனி பாரி
சுவக்கீன் அருள்குமாரி
தாேஷமறு காரணி வாசமிகு பூரணி
சுகந்த மலர் ஆரணியுமாய்
அரிய கிரணாம்பரி மதி சரணாம்பரி
அருணாேத யாம்பரியுமாய்
அன்னையாய் ஜெகமேத்து கன்னியாம்
பன்னிரு உடு சென்னியம்
சர்வ உயிர்காட் (கு) அனுகூலியாம் வேலியம்
தத்துவக் கலை நூலியாம்
சதா சுவிசேஷணி பூசணி வாசனி
தவநிலை ஆசனியுமாய்
சுருதி மறையாரேணி ஜெபமாலை இராக்கினி
தூய கன்னியான தாயின்
சாெ ல்லரிய திருநாளை நல்லவிதம் காெண்டாடிடவே
துவக்குவதற்கினிதான நாள்
இரட்சணியம் இரண்டாயிரத்துப் பன்னிஏழாம் ஆண்டு
அரியதாேர் செப்டம்பரில்
இருபத்து எட்டுனும் தேதி குரு வாரமதில்
அருள்பெருகு காெடியேற்றியே
தாயகமாக பரிசுத்த அன்னையின் ஆலயம்
தன்னிலே ஆசரிக்க
தக்க கடன் உங்களுக்(கு) எப்பாே துமாகவே
சாற்றினாேம் அறிகுவீர




அன்னை மரியாவுக்கு இராஜகன்னி என்னும் பெயரைச் சூட்டியவர் புன்னைக்காயலின் முதல் பங்குத்தந்தை எனப் போற்றப்பெறும் அண்டிறீக்கி அடிகள் அவர்களே. அவர்கள்தாம் salve Regina எனத் தொடங்கும் மந்திரத்தைத் தமிழில் மொழிபெயர்த்தபோது Regina என்னும் சொல்லுக்கு ஈடாக இராஜகன்னி என்னும் தொடரைப் பயன்படுத்தினார் இன்று கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற இராக்கினியே என இராக்கினி என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறோம் இராக்கினி என்னும் சொல்லுக்கும் Regina என்னும் சொல்லுக்கும் அரசி என்று தான் பொருள்.

பெரியதம்பி மரைக்காயர்


17-ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்கள் வலிமை குன்றிய பின்னர், இவர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினர். இராமநாதபுரம் கடற்கரைப் பகுதியில், தொண்டி, இரமேஸ்வரம் எனத் துறைமுகங்கள் இருந்தமையால், சேதுபதிகளின் ஆட்சிப் பரப்பில் கடல் வாணிபம் தழைத்து வளர்ந்தது. முத்துக்குளித்தலும், சங்கு குளித்தலும் இங்கு நிகழ்ந்தன. அத்துடன், முத்தும் சங்கும் முக்கிய ஏற்றுமதிப் பொருளாகவும் விளங்கின. இதன் அடிப்படையில் வாணிபத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், குறிப்பிடத்தக்க அளவில் இராமநாதபுரம் பகுதியில் குடியேறினர். 

இவ்வாறு குடியேறிய இஸ்லாமிய வணிகர்களில் பெரியதம்பி மரைக்காயர் சிறப்புமிக்கவராய் விளங்கினார். தனக்கும், சேதுபதி மன்னருக்கும் உரிமையான மரக்கலங்கள் வாயிலாக, வங்காளத்திற்கு சங்குகளை அனுப்பும் வணிகத்தில் இவர் ஈடுபட்டு வந்தார். அத்துடன், இக்கால கட்டத்தில் முக்கியத் துறைமுகங்களாக விளங்கிய நாகப்பட்டினம், திருமுல்லைவாசல், பரங்கிப்பேட்டை ஆகிய உள்நாட்டுத் துறைமுகங்களுடன், மலாக்கா, அச்சின் ஆகிய வெளிநாட்டுத் துறைமுகங்களுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார். 16-ஆவது நூற்றாண்டில் இராமேஸ்வரம் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான முத்துக்குளித்துறைப் பகுதிகளில் போர்ச்சுக்கீசியர்கள் தம் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியிருந்தனர். 

கி.பி.1658-இல் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடியை டச்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். நெசவாளர்களை உள்நாட்டிலிருந்து அழைத்து வந்து தூத்துக்குடியில் குடியமர்த்தி, அவர்கள் நெய்த, கச்சைத் துணிகளை இலங்கைக்கும் வேறு சில நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தனர். நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, பழவேற்காடு ஆகிய கடற்கரை ஊர்களிலும், மதுரையிலும் பண்டகசாலைகளை நிறுவினர். இவ்வாறு டச்சுக்காரர்கள், தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் காலூன்றிய பின்னர், பெரிய தம்பி மரைக்காயர் போன்ற இந்திய வணிகர்களின் வாணிப நலன் பாதிப்படையத் தொடங்கியது. 

பெரிய தம்பி மரைக்காயர், இலங்கைக்கு துணி ஏற்றுமதி செய்து வந்தார். இலங்கையின் மேற்குப் பகுதித் துறைமுகங்களுக்குச் சென்ற அவரது மரக்கலங்கள் துணிகளை இறக்கிவிட்டு ‘பாக்கு’ ஏற்றி வந்தன. இலங்கையின் கல்பட்டிப் பகுதியில் நடந்து வந்த பாக்கு ஏற்றுமதி வாணிபமானது கி.பி. 1684- வாக்கில் பெரியதம்பி மரைக்காயர் மற்றும் இரண்டு இந்தியர் வசம் இருந்தது. தன் நாட்டில் விளையும் பாக்கு அனைத்தையும் பெரியதம்பி மரைக்காயரிடம் விற்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டிருந்தது. இதை, டச்சுக்காரர்கள் விரும்பவில்லை. 

கேரளத்தில் கொள்முதல் செய்யப்படும் மிளகு, முத்துக் குளித்துறையின் கடற்கரைப் பகுதியில் எடுக்கப்படும் சங்கு, முத்து, உற்பத்தி செய்யப்படும் துணி ஆகியன தொடர்பான வாணிபத்தில் ஏகபோக உரிமையுடன் இருக்க அவர்கள் விரும்பினர். டச்சுக்காரர்களின் இத்தகைய ஏகபோக வேட்கைக்கு எதிராகப் பெரியதம்பி மரைக்காயர் செயல்பட்டார். மன்னர் பகுதிக்கும், இலங்கையின் புத்தளம் பகுதிக்கும் இடையிலான கடற்கரைப் பகுதி ஆழமற்றது. எனவே டச்சுக்காரர்களின் பார்வையிலிருந்து தப்பிக்கும் வழிமுறையாக, சிறு படகுகளின் வாயிலாகத் தமது கடல் வாணிபத்தை, பெரிய தம்பி மரைக்காயர் நடத்தினார். 

அத்துடன் டச்சுக்காரர்களின் ஏகபோகத்தை விரும்பாத, இலங்கையின் கண்டிப் பகுதி வாணிகர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். வங்கக் கடலில் ஆதிக்கம் செலுத்திய டச்சு நாட்டினர் இப்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு அனுமதிச் சீட்டு முறையை அறிமுகப்படுத்தினர். அவர்களது அனுமதிச் சீட்டுப் பெற்ற மரக்கலங்கள் மட்டுமே, வலிமை வாய்ந்த டச்சுக் கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகவில்லை. இவ்வாறு அனுமதிச் சீட்டு வழங்கும்போது தம்முடைய நலனைப் பாதுகாக்கும் வகையில், மரக்கலங்கள் சுமந்துசெல்லும் பொருள்கள், அவற்றின் அளவு ஆகியன குறித்து, சில கட்டுப்பாடுகளை டச்சுக்காரர்கள் விதித்தனர். 

இதை எதிர்கொள்ளும் வகையில், ஆங்கில மற்றும் பிரெஞ்சு நாடுகளின் அனுமதிச் சீட்டுக்களை பெரியதம்பி மரைக்காயர் பயன்படுத்தத் தொடங்கினார். இவ்விரு நாடுகளையும் தமது ஆட்சிப் பகுதியில் வாணிப நிலையங்களை நிறுவும்படி சேதுபதி அழைப்பு விடுத்தார். இதன் வாயிலாக டச்சுக்காரர்களின் வாணிப ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தலாம் என்பது அவரது நோக்கம். ஆனால் அவரது நோக்கம் வெற்றி பெறவில்லை. ஆயினும் பாக்கு, சங்கு, முத்து, துணி ஆகியவற்றை சேதுபதியின் ஆட்சிப் பகுதியில் கொள்முதல் செய்வதில் இவ்விரு நாடுகளும் ஆர்வம் காட்டின.

மதுரை நாயக்கர்கள் வலுக்குன்றியதைப் பயன்படுத்தி கி..பி.1682-இல் இராமேஸ்வரம் தொடங்கி தூத்துக்குடி வரையிலான கடற்கரைப் பகுதியில், வரிவாங்கும் அதிகாரியாக, பெரியதம்பி மரைக்காயரை சேதுபதி மன்னர் நியமித்தார். இக்கடற்கரைப் பகுதியின் முக்கியக் குடிகளான பரதவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையே ஏற்கனவே பகை இருந்தமையால் இஸ்லாமிய அதிகாரிகளைப் பரதவர் எதிர்த்தனர். டச்சுக்காரர்கள் பரதவர்களின் பக்கம் நின்றனர். அத்துடன் திம்மராசா என்பவரை சேதுபதியிடம் தூதனுப்பினார். 

இதையறிந்த பெரியதம்பி மரைக்காயர் திம்மராசா வீட்டினைத் தாக்கிக் கொள்ளையடிக்கச் செய்தார். எனினும் டச்சுக்காரர்கள் நிர்பந்தம் காரணமாக பரதவர் வாழும் பகுதிகளிலிருந்து இஸ்லாமிய அதிகாரிகளை, சேதுபதி திருப்பியழைத்துக் கொண்டார். அத்துடன் டச்சுக்காரர்கள் 1685-இல் சேதுபதியுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி பெரியதம்பி மரைக்காயர், அவரது இரு மகன்கள், அவரது சகோதரர்கள், இவர்களுடன் தொடர்புடைய இஸ்லாமிய அதிகாரிகள் ஆகியோர் கோடிக்கரை தொடங்கி கன்னியாகுமரி வரையிலான கடற்பகுதியில் அதிகாரம் செலுத்துவதலிருந்து நீக்கப்பட்டனர். 

மீண்டும் 1609-இல் ஏற்பட்ட ஒப்பந்தத்திலும் இந்நிபந்தனை இடம்பெற்றுள்ளதால் இது நிறைவேற்றப்படவில்லை என்று கருத இடமுள்ளது. 1697-இல் தூத்துக்குடியில் நிகழ்ந்த முத்துக்குளிப்பின் போது சேதுபதியின் பிரதிநிதியாய், பெரியதம்பி மரைக்காயர் செயல்பட்டு, டச்சுக்காரர்கள் ஆதாயத்தை மட்டுப்படுத்தினார். இதனால் ஆத்திரமுற்ற டச்சுக்காரர்கள் தூத்துக்குடி, புத்தளம், மன்னார் ஆகிய பகுதிகளிலுள்ள பெரியதம்பி மரைக்காயரின் மரக்கலங்களைக் கைப்பற்றினர். ஆனால் பாட்வியாவில் இருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் அவற்றை விடுவிக்கும்படி உத்தரவிட்டனர். 

இவ்வாறு டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி வாணிப ஏகபோகத்தை எதிர்ப்பவராக பெரியதம்பி மரைக்காயர் விளங்கியுள்ளார். பேராசிரியர் S. அரசரத்தினம் எழுதிய ‘A Note on periathamby Marikkar a 17th century Commercial Magnate என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டே பெரியதம்பி மரைக்காயர் தொடர்பான இச்செய்திகள் எழுதப்பட்டுள்ளன.* * * *இத்தகைய சிறப்பு வாய்ந்த பெரியதம்பி மரைக்காயர் குறித்த இந்தியத் தொல்பொருள் துறையின் ஆண்டறிக்கையில் (A.R.E. 1993-94:5) அவரைக் குறித்த தவறான பதிவு இடம் பெற்றுள்ளது.

பெரியதம்பி மரைக்காயரின் மகன் சேகு இப்ராஹிம் மரைக்காயர் என்பவர் கி.பி.1687இல் இறந்து போனார். இவரது உடல் இராமநாதபுரம் மாவட்டம், ‘வேதாளை’ ஊரிலுள்ள ஜும்மா பள்ளிவாசலை அடுத்த மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரை அடக்கம் செய்த இடத்தில் கல்வெட்டு ஒன்றுள்ளது. அக்கல்வெட்டில் அவரது தந்தை பெரிய தம்பி மரைக்காயரின் சிறப்பு,“. . . நசுருக்கள் ஏழுகரை துறைக் கோவில்சுட்டு இடிச்சுக் கீர்த்தியும்மிக விருதும் பெற்ற பெரிய தம்பி”என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு அக்காலத்திய சமயச் சகிப்பின்மையை வெளிப்படுத்துவதாகக் கூறி, “ஏழு கரை நாட்டிலுள்ள ஏராளமானக் கோவில்களை அழித்தும், எரித்தும் இடித்ததாகப் புகழ்கிறது” என்று இந்திய அரசின் தொல்பொருள் துறையினர் குறிப்பெழுதியுள்ளனர். 

ஆனால் இக்குறிப்பு முற்றிலும் தவறானது. இக்கல்வெட்டை “வேதாளைக் கூறைப் பள்ளிக் கல்வெட்டு” என்ற தலைப்பில் “ஆவணம்” நான்காவது இதழில் (1994 : 50) ஆய்வாளர் கமால், பதிப்பித்துள்ளார். இக்கல்வெட்டில் இடம்பெறும் “நசுருக்கள்” என்பதற்குக் ‘கிறித்தவர்கள்’ என்று அவர் பொருள் கொண்டுள்ளார். இதுவே சரியான பொருளாகும். தோமையர் (தாமஸ்) காலக் கிறித்தவர்களை, “நசுரேயனிஸ்’ என்றே அழைத்ததாகக் குரோனின் (Cronin) என்பவர் குறிப்பிட்டுள்ளார். 

கி.பி.1554இல் கோவாவில் அச்சிடப்பட்ட “கார்த்தியா” என்ற நூல், கத்தோலிக்கச் சமயத்தின் அடிப்படை மந்திரங்களையும், கத்தோலிக்கர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைச் சமய உண்மைகளையும் கூறுவதாகும். இந்நூலின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ள கேள்வி பதில் வருமாறு:நீ நசரானியோ?தம்பிரானடே நன்னியால் (நன்றியால்): ஆம்நசரானிக்குள்ள அடையாளம் எது?எனவே நசுருக்கள் என்பது கிறிஸ்தவர்களை, குறிப்பாகக் கத்தோலிக்கர்களைக் குறிப்பது என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாகும். இயேசு கிறிஸ்து, நாசரேத் என்ற ஊரில் பிறந்தமையால் நசரேன் என்றும், அவரைப் பின்பற்றியவர்கள் நசரேனியர்கள் என்றும் குறிப்பிடப்பட்டனர். 

திருக்குர்ஆனிலும் கிறிஸ்தவர்கள் நஸ்ரானிகள் என்றே குறிப்பிடப் படுகின்றனர். நசரேனியர் என்ற சொல்லே நசுருக்கள் என்று இக்கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. இராமேஸ்வரத்திற்கு தெற்கில் உள்ள வேம்பாறு, வைப்பாறு, தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டிணம், ஆலந்தலை, மணப்பாடு ஆகிய ஏழு கடற்கரை ஊர்களும் “ஏழு கடல் துறை” என்று அழைக்கப்பட்டன. இவ்வூரில் வாழ்ந்த பரதவர்கள் அனைவரும் கத்தோலிக்கர்கள், போர்ச்சுக்கீசிரியரின் பாதுகாப்பைப் பெற்றவர்கள். சேதுபதி மன்னர் இப்பகுதிகளில் வரிவாங்கும் உரிமையை, பெரியதம்பி மரைக்காயருக்கு அளித்த போது, பரதவர்கள் எதிர்த்ததை மேலே குறிப்பிட்டோம். 

போர்ச்சுக்கீசியப் பாதிரியார்களின் பாதுகாப்பில் இருந்த கத்தோலிக்கப் பரதவர்களுடன் ஏற்பட்டப் பகையுணர்வின் வெளிப்பாடாகவே, கத்தோலிக்கத் தேவாலயங்களை, பெரியதம்பி மரைக்காயர் அழித்துள்ளார் என்பது தெளிவு. இது அரசியல் பகையுணர்வின் அடிப்படையில் நிகழ்ந்ததே அன்றி சமயப் பகையுணர்வில் நிகழ்ந்ததல்ல.‘இஸ்லாமியர்கள் இந்துக் கோவிலை இடித்தவர்கள்’, என்ற கருத்து ஆதிக்கம் செலுத்தியதின் விளைவாக, மேற்கூறிய கல்வெட்டு ஆண்டறிக்கையைத் தயாரித்தவர் தவறான விளக்கத்தைத் தந்துள்ளார். நசுருக்கள் யார்? ஏழுகடல் துறை என்பது எது? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியில் அவர் ஈடுபடவில்லை.

(கட்டுரையாளர் நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் வரலாறு ஆகிய அறிவுத் துறைகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு கட்டுரைகளும், நூல்களும் எழுதிவருபவர்.)

 - ஆ. சிவசுப்பிரமணியன்

சமயத்தில் சங்கமித்த சமூகம் - 5

பழமை வாய்ந்த புண்ணியத் திருத்தலமான ராமேஸ்வரம் திருக்கோயிலில் ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் இங்கே வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம்! ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் இராமேஸ்வரம் என்று பெயர் ஆனது.  இங்கு கடல் நடுவே கோயில் கொண்டுள்ள பர்வதவர்த்தினி அம்மையின் பெயர் பரதவரை நினைவு கூர்வதாக அமைந்துள்ளதும் கவனத்திற்குரியது.


விஷ்ணுவின் தசாவதாரங்களில் முதல் மூன்று அவதாரங்களும் கடலுடன் மிக நெருங்கிய தொடர்புடையவை. மச்ச அவதாரம் திருமாலின் முதல் அவதாரமாகும். மச்சம் என்ற சமஸ்கிருத சொல், தமிழ் மொழியில் மீன் எனப்பொருள் தரும். இந்த அவதாரத்தில் திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.

கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி விஷ்ணு எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்). வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.

மேலும் விஷ்ணுவின் உறைவிடமே பாற்கடல் ஆகும். அவ்வகையில் காரைக்காலை அடுத்த திருமலைராயன் பட்டணத்தைச் சேர்ந்த செம்படவ தலைவரின் மகளான பத்மினி நாச்சியாராக திருமகள் பிறக்க, பெருமாளே அவரை திருமணம் செய்து கொண்டதாக தொன்மம் கொண்டு அம்மக்கள் சௌரிராஜப்பெருமாளை மாப்பிள்ளை சாமியாக நினைத்து விழா எடுத்து மகிழ்ந்து வருவதும் நடைமுறையிலிருந்து உள்ளது. 

திருமலைராயன் பட்டினத்தில் மாசிமக நன்னாளில் தீர்த்தவாரி திருவிழா வெகு பிரசித்தம். தங்கள் பகுதிக்கு வரும் இவர்களை காரைக்கால் பகுதியை சார்ந்த திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள், நிரவி ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், தென்னங்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர், ஆகிய எழு பெருமாள்கள் எதிர் கொண்டு கடற் கரைக்குஅழைத்துச் செல்கின்றனர்.

திருமலைராயன் பட்டினத்திற்கு செல்லும் வழியில் உள்ள பட்டினஞ்சேரி என்ற கடற்கரைக் கிராமத்தில் உள்ள மீனவ இன மக்கள் ஊர் எல்லையில்பெருமாளை பட்டும், மாலைகளும் ஏந்தி எதிர் கொண்டு அழைக்கின்றனர். தங்கள் மாப்பிள்ளையை, நெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரிராஜப்பெருமாளை ஏழப்பண்ணி தங்கள் தோள்களில் தூக்கி வைத்துக் கொண்டு மாப்ளே! மாப்ளே! என்று கூப்பிட்டவாறே சௌரிராஜப்பெருமாளை மாப்பிள்ளை என வரவேற்று மகிழ்கின்றனர்.

கடற்கரைக்கு வந்த பெருமாள் கடலில் இறங்கி தீர்த்தம் கொடுத்தருளுகின்றார். பின்னர் கரையில் கட்டு மரங்களால் அமைக்கப்பட்டு, மீன் வலை கொண்டு விதானம் கட்டபட்ட பந்தலில் மீன் காய வைக்கும் பாயை ரத்ன கம்பளமாக விரிக்கின்றனர். அன்று பெருமாள் நெற்கதிர்களால் எழிலாக அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரி முடியுடன் தங்க கருட வாகனத்தில் சேவை சாதித்து அருளுகின்றார். மற்ற எட்டு பெருமாள்களும் தோளுக்கினியானில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர்.

ஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் தங்கள் கிராமத்திற்கு எழுந்தருளுவதை ஒட்டி இந்த மீனவர்கள் முதல் நாளும், மாசிமகத்தன்றும் மறு நாளும் கடலுக்கு மீன் பீடிக்க செல்வதில்லை. புலால் உணவு உண்பதையும் தவிர்க்கின்றனர். பெருமாள் தங்கள் சேரிக்குள் நுழையும் போது, அந்த மீனவக்குலப் பெண்கள் நேராக வந்து வணங்குவதில்லை. மருமகனுக்கு முன்னால் வந்து பெண்கள் நிற்கக் கூடாது என்பது மரபாம். மீனவர்களுக்கு அதாவது பெண் வீட்டாருக்கு வெற்றிலை, பாக்கு துளசி மாலை ஆகியவற்றுடன் பத்து தோசைகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இத்தலத்தில் வருடத்தில் ஒரு நாள் இந்த மீனவர் குலத்தினருக்காக ஆண்டுக்கொரு முறை விசேஷ பூஜைகள் ஆராதணைகள் செய்யப்படுகின்றன. 

பட்டினஞ்சேரி மீனவர்கள் பாற்கடலில் பிறந்த லெட்சுமியை விஷ்ணு திருமணம் செய்ததை நினைவு கூர்ந்து மாசி மகத்தன்று வீட்டு மருமகனாக எண்ணி வணங்கி வருகிறார்கள். இதன் மூலம் நெய்தல் மக்களிடையே வைணவம் சேர்ந்து கொண்டதை அறிய முடிகிறது.

இராவண மகுடம்

மீனாட்சியின்
முத்து மகுடம் 
மகரம் என்றால் சுறாமீன், முதலை என்ற இரண்டு பொருள் இருந்தும் சுறாமீன் என்ற அர்த்தத்திலேயே ஆபரணங்களில், அணிகலன்களில் பயன்படுத்தப்படுகிறது. ராவணன் இப்படி சுறாமீன் வடிவ அல்லது சுறாமீன் பொறித்த ஒரு நீண்ட கிரீடத்தை அணிந்து வந்தான் என்று கம்பன் போகிறபோக்கில் (சுந்தர காண்டம்) சொல்லி விடுகிறான். இது ஒரு அதிசயமான விஷயம். ஏனெனில் இப்படிப்பட்ட மணிமுடி பற்றிய குறிப்பு வேறு எங்கும் இல்லை.

“வளர்ந்த காதலர் மகரிகை நெடுமுடி
அரக்கரை வரக் காணார்
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட
உயிரொடு தடுமாறி
களம் தவா நெடுங்கருவியில்கைகளில்
செயிரியர் கலைக் கண்ணால்
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவிபுக
அலமரலுறுகின்றார்”
பொருள்:

“ராவணன் மீது நாள்தோறும் வளரும் காதலை உடைய வித்தியாதர மகளிர் சிலர், சுறாமீன் வடிவு பொறித்த நீண்ட மகுடத்தைப் பூண்ட ராவவணன், தம்மிடம் வருவதைக் காணவில்லை. அதனால் தளர்ந்த மனம், இடையைக் காட்டிலும் அதிகமாமகத் துடித்தது. அவர்கள் தடுமாறினர். இசைக் கலைஞர்கள் கருவிகளை இசைத்து கண்களால் அவற்றை அளந்து பாடிய பாடல்கள் காதுக்குள் பாம்பு புகுந்தது போலப் புகவே அவர்கள் துன்புற்றனர்.”

உலகில் பல பண்பாடுகளில் மகர தோரணங்கள் உண்டு; மகர மோதிரங்கள் உண்டு; மகர காதணிகள், கை வளையங்கள் உண்டு; ஆனால் மகர வடிவில் கிரீடம் கிடையாது; மகரம் பொறித்த கிரீடமும் இல்லை. ராவணன் ஏன், எப்படி இப்படி ஒரு கிரீடம் அணிந்தான் என்பதற்கான விளக்கமும் இல்லை. உலகில் வேறு எங்குமில்லாத அளவுக்கு ஐரோப்பியர்கள் மட்டும் மன்னரின் மணி முடிளை அப்படியே சேகரித்து வைத்துள்ளனர். அதிலும் கூட இப்படி ஒரு கிரீடம் இல்லை.

நம்முடைய மன்னர்களின் கிரீடங்கள் அழிக்கப்பட்டு, நகைகளாகவும் சங்கிலிகளாகவும் செய்யப்பட்டு விட்டன. ஆயினும் எல்லாக் கோவில்களிலும் சுவாமிக்கும் அம்மனுக்கும் உள்ள கிரீடங்கள் ஓரளவுக்கு நம்முடைய பழம்பெரும் கலாசாரத்தைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. அங்கும் இப்படி இருப்பதாகத் தெரியவில்லை.எங்கேயாவது சுறாமீன் கிரீடத்தின் சிலையோ படமோ கிடைக்கிறதா என்று ஆராய்வது நமது கடமை.

கடல் பாசி

கடல் பாசி என்றதும் காலை வழுக்கிவிடும் ஈரப் பரப்புதான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். உண்மையில், பாசியைக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. அவற்றைப் பற்றி வகைகள் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம். 

கடல் பாசி என்பது மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. RED, BROWN, Green Algae என்று பிரிக்கப்படுகிறது. இதில் சிகப்பு பாசியில் இருந்து உணவுக்கு பதபடுத்தல் தேவையான பொருட்களான  Jelly, அகர் அகர் மற்றும் Carageenan என்னும் பொருள்கள் தயாரிக்கப் படுகிறது.
 
NORI என்னும் பாசி ஜப்பான் மக்கள் மத்தியில் மிகவும் அன்றடம் உணவாக எடுக்கப் படுகிறது (நமது நாட்டில் கீரை போல). சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு WHO நடத்திய ஆய்வில் கடல் கரையில் மற்றும் சமவெளி மக்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் புற்றுநோய் பாதிப்பு சமவெளி மக்கள் மத்தியில் அதிகமா இருப்பதையும் கடல் கரையில் வாழும் மக்கள் மத்தியில் புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருப்பதையும் ஆய்வுகள் முடிவுகள் சொல்லுகிறது. இதற்கு காரணம் என்ன என்பதை அறியும் போது கடல் கரையில் வாழும் மக்கள் தங்கள் உணவில் NORI என்னும் கடல் பாசியை தங்கள் உணவில் தினமும் உட்கொள்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க பட்டது.  

இந்தியா மற்றும் சீனா மருத்துவத்துறையில் கடல் பாசி பற்றி நன்கு அறிந்திருந்தனர். ஆனால் இந்தியாவில் அதன் மகத்துவம் நாம் மக்கள் மத்தியில் சென்று அடையாமல் இடைகாலத்தில் நின்று விட்டது. அதனால் பலவிதமான cancer மற்றும் thyroid நோயின் பாதிப்புக்குள் சென்று அடைகின்றனர். நமது நாட்டில் கடல் பாசி உணவை மக்கள் தினமும் உட்கொண்டால cancer மற்றும் thyroid பிரச்சனைகள் இருந்து விடுபடலாம். 

மேலும் தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்.. http://www.seaweed.ie/medicine/seaweedcancer.php

பன்மீன் கூட்டம் - பாகம் 10

நண்டு இனம் 

சிங்கி நண்டு
ஆமை நண்டு
ஆத்து நண்டு
முக்கண்ணன் நண்டு
முன்று புள்ளி நண்டு  (வெட்டுக் காவாலி)
தொப்பி நண்டு
செம்மண் நண்டு
புளிய முத்து நண்டு
தவிட்டு நண்டு
கொட்ட நண்டு
நீலக்கால் நண்டு ( பெண் நண்டு சாம்பல் நிறமானது)
நீலநண்டு
குருசு நண்டு ( சிலுவைநண்டு)
பச்சை நண்டு
பஞ்சு நண்டு
பார் நண்டு
பாசி நண்டு
கோரப்பாசி நண்டு
ஒட்டு நண்டு
செங்கால் நண்டு
கிளி நண்டு
கல் நண்டு
முக்கு நண்டு
உள்ளி நண்டு
கடுக்காய் நண்டு
கழி நண்டு
கருவாலி நண்டு  ( பா நண்டு )
ஓலைக் காவாலி
நட்டுவாக்காலி நண்டு
கொழுக்கட்டை நண்டு
குழி நண்டு
சிப்பி நண்டு
சிவப்பு நண்டு
சீனி நண்டு
பொட்டை நண்டு
துறவி நண்டு  (முனிவன் நண்டு)
செம்பாறை நண்டு
பேய் நண்டு

- மோகன ரூபன் 

விடிந்தகரை 1.2


அது ஒரு புரட்டாசி மாதம் விஜய வருடம் 
1602 கன்னியாகுமரி அம்மையின் பரிவேட்டைக்கு போய்
பனைப்பெட்டி நிறைய பலகாரங்களும், 
பண்டங்களும் வாங்கிக் கொண்டு
கட்டுமரத்து வழியாக திரும்பி வந்த அந்தக் கூட்டம்,
............................
சந்தானப் பட்டங்கட்டியின் மாமனார்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்
பிள்ளைதோப்பு நாஞ்சிப் பிள்ளை.
.............................
ஆண் பிள்ளை பிறந்து தொழிலுக்கு போனாலோ
பெண் பிள்ளை பிறந்து ருதுவானாலோ
பாம்படம் அணிவது அந்த காலத்து
பாண்டி பரத்தியரின் வழக்கம்.
....... ......... ...........
உவரியூர் பட்டங்கட்டி
கடலையே கடைவாரம்
பனைமலையையே உடைப்பாராம்
பேயரசி கூட்டத்துக்கெல்லாம் 


பெருவிருந்து வைப்பாராம்
பனங்காட்டு முனியையும்
வேளாகொம்புகொண்டு உதைப்பாராம்
........ ......... ...........
பட்டங்கட்டியின் மண்டைக்குள் சாமிப்பிள்ளையின்
மீதான குரோதம் வெடித்து கிளம்பியது
யார் அந்த சாமிப்பிள்ளை………?
பட்டங்கட்டிக்கும் அவருக்கும் என்ன விரோதம்…?


தொடரும் ...... கடல் புரத்தான்

கண்ணகி வழக்குரை


Rare Book Collection

கண்ணகி வழக்குரை

ஆசிரியர்:
மட்டகளப்பு வித்துவான் பண்டித வீ. சீ. கந்தையா


Download Link

புனிதர் பாதையில் பாக்கியநாதர் சுவாமிகள்.......

கத்தோலிக்க விசுவாசத்தில் தழைத்தோங்கி இருந்த பரதவர்களுக்கு டச்சுக்காரர்களின் வருகை பெருத்த அடியாக இருந்தது. அவர்கள் கல்வீனிய கிறஸ்தவ பிரிவை சார்ந்தவர்களாக இருந்த கத்தோலிக்க வழிபாடுகளை செய்ய பெரிதும் தடையாக இருந்தனர். உச்சகட்டமாக வேம்பாறு, தூத்துக்குடி, புன்னைக்காயல், மணப்பாடு ஆகிய ஊர்களில் இருந்த கத்தோலிக்க ஆலயங்களை இடித்ததுடன் அவற்றை தங்கள் வணிகக் கூடமாகவும், ஆயுதக் கிடங்காகவும் மாற்றினர்.

டச்சுக்காரர்களால்  போர்த்துக்கீசிய சேசுசபைக் குருக்கள் அகற்றப்பட்டபின் 1776 ஆம் ஆண்டு பாப்பரசர் ஆறாம் பத்திநாதர் அவர்களின் ஆணைப்படி முத்துக்குளிதுறைப் பகுதி பாரிஸ் வேத போதக சபையினரிடம் (Paris Foreign Mission Society) ஒப்படைக்கப்பட்டது. இதன் காராணமாக பிரான்ஸ் நாட்டின் தூலுஸ் மாநிலத்தைச் சேர்ந்த சேசு சபையோர் முத்துக்குளித்துறைக்கு மறைப்பணியாற்ற வருகை புரிந்தனர்.

இந்த ஆணைப்படி வந்த முதல் இரு குருக்களில் ஒருவரே சுவாமி பாக்கியநாதர் ஆவார். இவர் பிரெஞ்சு நாட்டினைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் யூசுபியுஸ் டி மொன்ட் ( USEBIUS DE MONT) . யூசுபியுஸ் என்பதற்கு பக்திமான் என்பது பொருளாக அமைகிறது. இவர் தூலுஸ் நகரை தனது பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. 

சங். பாக்கியநாதர் சுவாமிகள் தூத்துக்குடிப் பகுதிக்கு வந்த போது இவ்விரு குருக்கள் தவிர வேற குருக்கள் இல்லாத நிலையில்  இவர் வேம்பாற்றை மையமாகக் கொண்டு கடினமான மறைப்பணியாற்றினார். வந்த இரு ஆண்டுகளுக்குள் வேம்பாற்று பரதவர்களால் பனையூர் என அழைக்கப்பட்டதும், பின்னாளில் கட்டமீன்கள் அதிகம் கிடைக்கும் இடமான கட்டாப்பாடு என அழைக்கப்பட்டதுமான வேம்பாற்றிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தற்போது பெரியசாமிபுரம் என்ற இடத்தில் மறைப்பணியாற்றும்போது காலரா நோயால் பாதிக்கப்பட்டு 1858 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி அன்று தனது 44 ஆம் வயதில் இறையடி சேர்ந்தார். 

வெள்ளைக்கார சுவாமிகள் என அழைக்கப்பட்ட இவர்  வேம்பார் தூய ஆவி ஆலயப் பங்குத்தளத்தில் பணியாற்றி மரித்ததால் இவரது உடலை கட்டாப்பாடிலிருந்து பக்தி சிரத்தையுடன் வேம்பாற்றில் அப்போதிருந்த பரிசுத்த ஆவி ஆலயத்தின் முன் பகுதியில் இவரை அடக்கம் செய்தனர். கட்டாப்பாடில் சங். பாக்கியநாதர் சுவாமிகள் மரித்த இடத்தில் குருசடி கட்டப்பட்டு மக்களால் இன்று வரை வேண்டுதல்கள் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறே கட்டாப்பாட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இன்றளவும் பாக்கியம் என்ற பெயரை சூட்டி சங். பாக்கியநாதர் சுவாமிகளை நினைவு கூர்ந்து வருவதும் குறிப்பிடத்தகுந்தது.

வேம்பாற்றின் இரண்டாவது ஆலயம் சிதைவுற்றதும் மூன்றாவது புதிய ஆலயம் 1915 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.  அவ்வாலயத்தின் உட்புறத்தில் திருப்பலி பீடத்திலிருந்து வலப்புறத்தில் 2 அடி தொலைவில் இவரது கல்லறை மாற்றி அமைக்கப்பட்டது. இவரது கல்லறையின் மேலுள்ள கல்வெட்டின் பின்புறம் டச்சுப் பட்டாலியன் ஒருவரின் மனைவியின் கல்லறைக் கல்வெட்டு இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.  

இவரது கல்லறைக் கல்வெட்டில் பின்வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.....

P. EUSUBIOS DEMONT .S.J
OBIIT 25. DECEMB.1858
AN. AETATIS SUAE. 44
R.I.P
எனக் குறிக்கப்பட்டுள்ளது.

தகவல்: தம்பி ஐயா பர்னாந்து 

கடலோடிய மூத்தகுடி எம் தமிழ்க்குடி!


“வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்- அடி

மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்”.

-மகாகவி பாரதியார்.

5000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் மிகமூத்த கடலோடி இனமாக நாடுகடந்து வணிகம் செய்த தமிழினத்தின் பெருமைமிக்க வரலாற்றைப் பதிவு செய்கையில் மகாகவியின் இந்த எழுச்சிமிகு வரியுடன் துவங்குவதுதான் பொருத்தமாகும்.

‘NAVY’ என்ற ஆங்கில வார்த்தை ‘நாவாய்’ என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பிறந்ததுதான் என்பதையே தமிழினம்தான் கடலோடி வணிகத்தின் தொல்குடி என்பதற்கான முதற் சான்றாக முன்வைக்கிறேன். ‘நாவாய்’ என்றால் கப்பல். இன்றும் தென் அமெரிக்க இஸ்பானியப் பழங்குடியினர் கூடக் கப்பலை ‘நாவாய்’ என்றே அழைக்கின்றனர்.
தென்மேற்குப் பருவமழைக் காலமான ஆடிமாதம் ரோமிலிருந்து கிளம்பி சேரநாட்டின் துறைமுக நகரமான தொண்டியில் வந்து சேர்வார்கள். அதேபோல் தை மற்றும் மாசி மாதத்தில் பருவமழை ஓய்ந்ததும் காற்றின் விசை மாறிய பிறகு இங்கிருந்து அங்கு செல்வார்கள் படம் – ncbs.res.in
பழந்தமிழர்கள் மேற்கே கிரீஸ் (கிரேக்கம்), ரோமாபுரி, எகிப்து முதல் கிழக்கே சீனா வரையிலும் மற்றும் பாலஸ்தீனம், மொசப்பத்தேமியா, பாபிலோனியா போன்ற நாடுகளுடனும் வாணிபத் தொடர்புகொண்டு கடலோடிப் பிழைத்தார்கள். தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவற்றிற்கு மேற்கு ஆசிய நாடுகளில் மிகுந்த தேவை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்ட பழந்தமிழர்கள் இவற்றை அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். பருவமழைக் காலத்தை சாதகமாகக் கொண்டு தமிழர்கள் மேற்கொண்ட கடல்வழிப் பாதையே (SEA ROUTE) உலகின் மிகப் பழமையான கடல்வழி வணிகப் பாதையாகக் கருதப்படுகிறது.

தென்மேற்குப் பருவமழைக் காலமான ஆடிமாதம் ரோமிலிருந்து கிளம்பி சேரநாட்டின் துறைமுக நகரமான தொண்டியில் வந்து சேர்வார்கள். அதேபோல் தை மற்றும் மாசி மாதத்தில் பருவமழை ஓய்ந்ததும் காற்றின் விசை மாறிய பிறகு இங்கிருந்து அங்கு செல்வார்கள். இன்றும் தை, மாசி மாதங்களை எகிப்தியர்கள் TAIRUS, MAUSHIR என்றுதான் அழைக்கிறார்கள். கொற்கை முத்துகள், சேர நாட்டின் புகழ்பெற்ற மிளகுகள், யானைத் தந்தங்கள், தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை இங்கிருந்து எகிப்து மற்றும் ரோமாபுரி தேசங்களுக்கு ஏற்றுமதி செய்ததையும், ஈரோடு மாவட்டம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகின் மிகப் பழமையான இரும்புத் தொழிற்சாலையாக விளங்கியதாக அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டதோடு, கொடுமணலிலிருந்து பொருட்கள் அங்கே எடுத்துச் செல்லப்பட்டதையும் எகிப்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.

யூதர்களின் ஆதி சமயத் தலைவர் மோசஸ் (Moses) என்பவர், தாம் நிகழ்த்தி வந்த இறைவழிபாட்டில் ஏலக்காயைப் பயன்படுத்தினார் என்று பழைய ஏற்பாடு (Old Testament) கூறுகிறது. மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்தது கி.மு. 1490இல் என்பர். தென் அரேபியா நாட்டு அரசி ஷேபா (Sheba), இஸ்ரேல் நாட்டின் மன்னன் சாலமன் (Solomon) என்பவனைக் காணச் சென்றபோது, அவனுக்குப் பரிசுப்பொருள்களாக ஏலக்காய், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களைக் கொண்டு போனதாகப் பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்புக் காணப்படுகிறது. சாலமன் ஆண்ட காலம் கி.மு.1000 என்பர். சாலமனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சேரநாட்டுத் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் மயில் தோகை, அகில் மரங்கள், யானைத் தந்தம், குரங்குகள், வெள்ளி போன்ற பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன என்ற குறிப்பும் கல்வெட்டிலிருந்து அறியப்படுகிறது.
தென் அரேபியா நாட்டு அரசி ஷேபா (Sheba), இஸ்ரேல் நாட்டின் மன்னன் சாலமன் (Solomon) என்பவனைக் காணச் சென்றபோது, அவனுக்குப் பரிசுப்பொருள்களாக ஏலக்காய், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களைக் கொண்டு போனதாகப் பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்புக் காணப்படுகிறது. படம்- infrakshun.files.wordpress.com

கிரேக்கம், ரோமாபுரி ஆகிய நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வந்த வணிகர்களை யவனர் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கிரேக்கர்கள் தங்கள் நாட்டையும், மொழியையும் ‘அயோனெஸ்’ (aones) என்று கூறிக் கொள்வராம். அதுவே தமிழில் ‘யவனர்’ எனத் திரிந்தது என்பர். ஆனால் அச்சொல் கிரேக்கர்களையும், ரோமர்களையும் ஒரு சேரக் குறிப்பதாக விளங்குகிறது. யவனர்களோடு வாணிபம் செய்த தமிழர்கள் முசிறி துறைமுகம் வழியாகத் தங்கத்தையும், மதுவையும் இறக்குமதி செய்து மிளகினை ஏற்றுமதி செய்தனர். இதை


“யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

வளங்கெழு முசிறி”

-அகநானூறு, 149

என்ற பாடல் மூலம் அறியலாம்.

யவனர்கள் வாணிபர்களாக மட்டுமன்றி, தமிழக மன்னர்களின் அரண்மனையில் கைவினைக் கம்மியராகவும் (கம்மியர்- உலோக வேலை செய்பவர்), காவல்காரர்களாகவும் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள பெரிய துறைமுகப்பட்டினங்களில் யவனர்களுக்குத் தனி இருப்பிடங்கள் இருந்தன.

தொண்டிப்பட்டினம் சேரநாட்டை ஆண்ட பொறையர்களின் ஆட்சியில் இருந்தது. இந்த தொண்டி துறைமுகப் பகுதியை அடுத்து வருவதே முசிறி. அந்தக் காலத்தில் கடல் வழியாக கப்பல்களில் வணிகம் நடந்த இந்தியத் துறைமுகங்களிலேயே பெரியது மேற்கே சேரநாட்டின் தொண்டியும், முசிறியும், கிழக்கே சோழநாட்டின் காவிரிப் பூம்பட்டினமும் மட்டுமே. சரியாகச் சொன்னால் பெரியாறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள துறைமுகம்தான் முசிறி.

புறநானூற்றுப் புலவர் பரணர் முசிறியைக் குறித்துப் பாடுகையில்


“மீன் நொடுத்து நெல் குவைஇ

மிசை யம்பியின் மனைமறுக் குந்து!

மனைக் கவைஇய கறிமூ டையால்.

கலிச் சும்மைய கரைகலக் குறுந்து

கலந் தந்த பொற் பரிசம்

கழித் தொணியான் கரைசேர்க் குந்து;

மலைத் தாரமும் கடல் தாரமும்

தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்

புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்

முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன…”


இதிலிருந்து குவித்து வைக்கப்பட்ட (மீனை விற்று வந்த பொருளால்) மிளகு மூட்டைகள், மற்றும் யவனர்கள் கப்பலில் கொண்டுவந்த பொற்காசுகள் முதலியவற்றைக் குறித்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும் இன்று பார்ஜ் (BARGE) என்று சொல்லக்கூடிய சிறு கப்பல்கள் மூலம் சரக்குகள் கப்பலிலிருந்து வருவதும், போவதுமாய் இருந்தது புலனாகிறது.

இந்தத் துறைமுகங்களைப் பற்றி கிரேக்க மாலுமி சோஃப் வில்ஃப்ரெட் எழுதிய பழங்கால நூலான ‘செங்கடல் வழிகாட்டி’ (Periplus of the Erythrean Sea) இவ்வாறு கூறுகிறது:

“திண்டிஸ், செரொபாத்ராவின் அரசில் உள்ளது. அது கடலினின்றும் சாதாரணமாய்க் காணக் கூடியது. முசிரிஸ் இதே அரசனிடம் உள்ளது. அரேபியாவிலிருந்து வந்துள்ள கப்பல்களால் இது நிறைந்திருக்கும். இது நதியில் உள்ளது. இது நதியில் உள்ளது. திண்டிசிலிருந்து கடல் நதி வழியாக ஐந்நூறு ஸ்டேடியா தூரத்தில் உள்ளது”. கி.பி 215இல் அலெக்சாண்டரியாவில் நடந்த குரூர நிகழ்ச்சிக்குப் பின் இவ்வணிகம் தடைபட்டுப் போனது.

இருப்பினும் உலகத்தரம் வாய்ந்த துறைமுகத்தைக்கொண்ட காவிரிப் பூம்பட்டினம் தொடர்ந்து கடல்வழி வணிகம் செய்து வந்தது. புகார், பூம்புகார், பட்டினம், காவிரிப்பூம்பட்டினம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இத்துறைமுக நகரம் காவிரி ஆறு வங்கக் கடலில் புகுகின்ற இடத்தில் அமைந்ததால் இப்பெயர்களைப் பெற்றது. இந்நகர் பற்றி பெரிப்ளூசு, ‘கமரா’ எனவும், தாலமி, கபேரிஸ் எம்போரியான் (Kaberis Emporion) எனவும் குறிப்பிடுகின்றனர்.

கி.பி. 5ஆம் நூற்றாண்டில் புத்தர் இங்கிருந்த புத்தவிகாரையில் தங்கியிருந்து பிராகிருத மொழியில் அபிதம்மவதாரம் என்னும் இலக்கியத்தை இயற்றியதாகக் கருதப்படுகிறது. இதில் இவ்வூர் கவேரபட்டினம் எனக் குறிப்பிடப்படுவதோடு இதன் எழில்மிகு தோற்றம், அமைப்பு, அங்கு வாழ்ந்த உயர்குடி மக்கள் மற்றும் அரிய வைரக்கற்கள் முதல்கொண்டு விற்கப்பட்ட பெரிய கடைத்தெருக்கள் வரை பேசுவதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

காவிரிப்பூம்பட்டினத்தின் நகரமைப்பு மற்றும் துறைமுகச் சிறப்புகளை பட்டினப்பாலையும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. யவனர்கள் தங்கியிருந்த இடத்தை யவன இருக்கை எனச் சிலப்பதிகாரம் சுட்டுகிறது. வெள்ளையன் இருப்பு எனும் ஒரு பகுதி காவிரிப்பூம்பட்டினத்தில் இன்றும் காணப்படுகிறது. சோழர்களின் சிறப்புமிகு இத்துறைமுக நகரை உருவாக்க யவனத்தச்சர் என அழைக்கப்பட்ட ரோமானிய நாட்டுச் சிற்பிகள் பயன்படுத்தப்பட்டதை மணிமேகலை (19) காட்டுகிறது. வெவ்வேறு நாடுகளில் இருந்து நீரின் வழியாக இத்துறைமுகத்திற்கு வந்து இறங்கிய பொருட்கள் குறித்தும் அதன் சிறப்புப் பற்றியும் பின்வரும் பாடல் மிகத் தெளிவாக விவரிக்கிறது.


‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென்கடல் முத்தும் குணகடற் றுகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்

ஈழத் துணவும் காழகத் தாக்கமும்

அரியவும் பெரியவும் நெரிய வீண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு’

-பட்டினப்பாலை 185-193

அதாவது நீரின் வழியாக வரப்பெற்ற உயர்வகை குதிரைகள், நிலவழியாகக் கொண்டு வரப்பட்ட மிளகு, வடக்கு மலைகளிலிருந்து தருவிக்கப்பட்ட அரிய வைரக்கற்கள் மற்றும் பொன், மேற்கு மலைகளில் கிடைக்கின்ற சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருள்கள் தென்கடல் முத்து, கீழைக் கடல் பகுதியிலிருந்து பெறப்படும் பவளம், கங்கை மற்றும் காவிரியின் வளத்தால் பெறப்பட்ட பொருள்கள், ஈழத்திலிருந்து உணவு வகைகள், காழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை (பெரும்பாலும், உலோகப்பொருளாக இருக்க வேண்டும்), பிற இடங்களிலிருந்து வந்து இறங்கிய அரிய மற்றும் பெரிய பொருள்களும் இத்துறைமுகம் வந்து சென்றதை அறிவதிலிருந்து இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகச் செயல்பாடுகள் உச்சநிலை பெற்றிருந்ததை அறியமுடிகிறது. இத்துறைமுகத்திற்கு இரவு நேரங்களில் வந்துசேரும் கப்பல்களுக்குத் திசையினை உணர்த்த கலங்கரை விளக்கம் இருந்ததை, “இலங்கு நீர் விரைப்பிற் கலங்கரை விளக்கமும்” என்ற சிலப்பதிகாரப் பாடல் மூலம் அறியலாம்.

இந்தத் துறைமுகத்தில் வந்து தங்கிய நாவாய்கள் (கப்பல்) கம்பங்களில் கட்டப்பட்ட யானைகள் அசைந்து கொண்டிருப்பது போல துறைமுகத்தில் அசைந்துகொண்டிருந்தன என்பதைப் பின்வரும் பாடல் மூலம் அறியலாம்.


‘வெளில் இளக்கும் களிறு போலத்

தீம்புகார்த் திரை முன் றுறைத்

தூங்கு நாவாய்த் துவன் றிருக்கை

மிசைக் கூம்பின் அசைக் கொடியும்’

-பட்டினப்பாலையில் (172-175 அடி)

புகார் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சிறப்பாக நடைபெற்றதையும், இப்பொருட்களுக்குச் சுங்கம் வசூலிக்கப்பட்டதையும், இதற்கு அடையாளமாக அப்பொருட்களின் மேல் சோழ அரசின் புலி முத்திரை இடப்பெற்றதையும்


“நீரினின்று நிலத்தேற்றவும்

நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்

அளந்தறியாப் பலபண்டம்

வரம்பறியாமை வந்தீண்டி

அருங்கடிப் பெருங்காப்பின்

வெளில் இளக்கும் களிறு போலத்

தீம்புகார்த் திரை முன் றுறைத்

தூங்கு நாவாய்த் துவன் றிருக்கை

மிசைக் கூம்பின் அசைக் கொடியும்”

-பட்டினப்பாலை (167-175)

என்ற பாடல் வரிகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன. எனவே இத்துறைமுகத்திலிருந்து அரசுக்கு நிறைய வருவாய் வரப்பெற்றதோடு வாணிபம் வளர்ச்சியடைந்திருந்ததால் புகார் நகரமும் செல்வச் செழிப்போடு காணப்பட்டது என்பதையும் உணரமுடிகிறது.


“மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது

புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்

இடைப்புலப் பெருவழிச் சொரியும்

கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே”

– புறநானூறு (30)

என்னும் வரிகள் பாய்மரத்தில் (mast) கட்டப்பட்டிருந்த பாய்கள் களையாமல் (இறக்கப்படாமல்) பெரிய கலங்கள் (ships) புகார் துறைமுகத்திற்குள் வந்து சென்றதைக் காட்டுவதிலிருந்து இத்துறைமுகச் செயல்பாடுகள் மிகச் சுறுசுறுப்புடன் இருந்ததை உணர முடிகிறது.

1960 ஆம் ஆண்டு எஸ்.பரமசிவன் என்பவர் இக்கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட காந்த அளவியல் (magnetic survey) ஆய்வில் இங்கு கட்டடப் பகுதிகள் புதையுண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இந்தியத் தொல்லியல் துறை 1962ஆம் ஆண்டு இக்கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட மேற்பரப்பாய்வு மற்றும் அகழ்வாய்வுகள் சிறப்புக்குரியவையாகும் (Indian Archaeology-A Review, 1962-1967).

மேற்பரப்பாய்வில் (exploration) வானகிரி, கீழையூர் ஆகிய இடங்களில் கருப்பு-சிவப்பு மண்கலச் சில்லுகளுடன் ஒருபக்கம் புலி மறுபக்கம் யானை பொறிக்கப்பட்ட சோழர்காலச் செப்புக்காசு, யவனர் தொடர்புக்குரிய ரூலெட்டட் பானை ஓடுகள், அரிய கல்வகைகளினாலான மணிகள் (beads) மற்றும் வெள்ளையன் இருப்பு என்ற இடத்தில் ரோமானிய நாணயம் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.

அகழாய்வில் இத்துறைமுகத்தின் உலகளாவிய வரலாற்றுச் சிறப்புகளைக் காட்டும் பல அரிய கண்டுபிடிப்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கீழையூரில் பெரிய செங்கற்களால் உருவாக்கப்பட்ட சுவர்களுடன் கூடிய கட்டடப் பகுதியும் அச்சுவர்களின் மேல் இருந்த மரத்தினாலான கம்பங்களும் (wooden – posts) கண்டுபிடிக்கப்பட்டன.

இக்கட்டடப் பகுதி ஏற்றுமதி இறக்குமதிக்குப் பயன்படுத்தப்பட்ட துறைமுகப் பகுதியின் படகுத் துறையாக (wharf) அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மரக்கம்பங்கள் துறைமுகத்தில் கப்பல்களைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கரிப்பகுப்பாய்வு (Carnbon 14 Dating) காலக்கணிப்பு முறையில் இக்கம்பங்கள் கி.பி. 3ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தவையாகக் கணிக்கப்பட்டுள்ளமை இத்துறைமுகத்தின் தொன்மைக்கு அறிவியல் பூர்வமான சிறப்பைச் சேர்ப்பதோடு பட்டினப்பாலை காட்டும் இத்துறைமுகச் சிறப்பும் இதன்வழி மெய்ப்பிக்கப்படுகிறது. இக்கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களின் நீளம், அகலம், கணம் முறையே 60×40×7 செ.மீ அளவு கொண்டதாக மிகப்பெரிய செங்கற்களாகக் காணப்படுகின்றன.

தமிழக அரசு தொல்லியல் துறையினர் 1998 ஆம் ஆண்டு இங்கு மேற்கொண்ட அகழாய்வில் யவனருடன் தொடர்புடைய அம்பொரா மண்ஜாடிகளின் சில்லுகளும், பிராமி எழுத்தில் ‘அபிமகததோ’ எனப் பொறிக்கப்பட்ட மண்கலச் சில்லும் கிடைத்துள்ளன.

திரைகடல் ஓடி திரவியம் தேடிய தொல்குடியின் வழித் தோன்றல்கள் என்ற எண்ணமே தொடர்ந்து நம்மை வழிநடத்திச் செல்லும்.

உசாத்துணைகள் :
Sangam literatures –அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், பட்டினப் பாலை
Periplus of the erythrean sea- Schoff Wilfred
(K.V.Raman, Excavation at Poompuhar, II International Tamil Conference, 1968)
Trade and trade routes in Ancient India –Moti Chandra
Indian Shipping a Historical Survey —Baldeo Sahai
”History of Ancient Geography”- Dr. E.H.Bunbury
“Oxford History of India” – Vincent Smith
- பிரபு தமிழன் 
Thanks: roar.media

கணவாய் மீன் தொக்கு



தேவையான பொருட்கள் :


கணவாய் மீன் – அரை கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகதூள் – 2 ஸ்பூன்
எண்ணெய்
கடுகு உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை, கொத்துமல்லி தழை.

செய்முறை :

* கணவா மீனை சுத்தமாக ஆய்ந்து கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிகொள்ளுங்கள்.

* ஒரு வாணலில் கணவா மீனை போட்டு அதனுடன் கொஞ்சம் உப்பு, கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விடாமல் அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும்.

* கணவா தலைகள் வேகும் போதே அதிகமாக நீரை வெளியிடும். இந்த நீரை வடிகட்டி கீழே கொட்டிவிடவும். இப்படிக் கொட்டிவிடுவதால் கணவா மீனின் கவுச்சி வாடை கிட்டத்தட்ட முற்றிலுமாக போய்விடும். இப்போது அதை தனியாக வைத்து கொள்ளவும்.

* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தபின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

* பின் அதில் வேக வைத்த கணவா மீனை சேர்த்து சிறிது வதக்கிய பின், மிளகாய்த்துாள், சீரகப்பொடி, சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வேகவிட வேண்டும். இந்த நேரத்தில் ருசி பார்த்து காரம் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம். அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிட வேண்டும்.

* நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் கொத்துமல்லி தழை தூவி இறக்கி விட வேண்டும்.

* கணவாய் மீன் வறுவல் ரெடி!

* இதை சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம்.

OUR CHURCH'S - 2


Sacred Hearts Cathedral, Tuticorin, Tamil Nadu





 Apart from Tuticorin's famous Snows church (covered in my earlier blog), I’d like to highligh another prominent church in Tuticorin, "Sacred Hearts Cathedral".

Sacred Hearts cathedral is not related to St. Francis Xavier or the Portuguese architecture of the early 16th century. This church was built long after the Snows church in Tuticorin and this has a “French connection”. This cathedral acts as the Tuticorin diocese headquarters, having the Tuticorin Bishop’s residence. Most of the coastal villages surrounding Tuticorin (Vembar, Alanthalai, Vaipar, Veerapandiapatinam, Manappad etc.) fall under Tuticorin diocese. Let’s look at the history and finer details of this beautiful church:

Why is it called "Chinna Koil”?

Till independence there were only 2 parishes that existed in Tuticorin – “Our Lady of Snows” and “Sacred Hearts”. Sacred Hearts cathedral is much bigger than Our Lady of Snows Basilica, but ironically this church is called as the "Chinna Koil" (meaning small church in Tamil). Snows church is called as the "Periya Koil" (big church in Tamil). The naming came because Snows was built much ahead of Sacred Hearts and it received a wider recognition from the people. In order to distinguish between these 2 popular churches people started calling the earlier one (Snows church) as big church and the latter one (Sacred Hearts) as small church. In no way this term depicts the size of the churches.

Though Tuticorin town has several churches, Snows church and Sacred Hearts church are the 2 most famous. We should note that the first church is elevated to the status of “Basilica” and the second to the status of “Cathedral” by Roman Catholicism.

On 12th June 1923 when Tuticorin diocese was created, Sacred Hearts church was elevated to the status of "Cathedral". This church became the headquarters for Tuticorin diocese and in 1923 Rev. Roche became the first Bishop for this diocese. Subsequently Sacred Hearts cathedral was established as the Bishop House of the diocese.

History of the church

Goa Mission vs. French Mission

Going back to the early 16th century when Christianity spread in India there were only 4 dioceses in India. These dioceses were under the direct control of Portuguese kingdom. The Portuguese king with Pope's permission had established these 4 dioceses in India. These 4 were Goa (Headquarters), Cochin (Kerala), Cranganore (Kerala) and Mylapore (Tamil Nadu). The coastal villages which I’m referring in Tamil Nadu came under the diocese of Cochin.

In 1658 Dutch had conquered Tuticorin and other villages by defeating the Portuguese. Years passed and all the churches in and around this area were governed by Jesuit (Society of Jesus) priests. On July 21 1773 Pope Clement XIV "de-recognised" or "suppressed" the Society of Jesus. The Jesuits took over again after the "Society of Jesus" was restored by Pope Pius VII on 7th August 1814. On the 8th of July 1836, Pope Gregory XVI made Madurai an Apostolic Province. Madurai became the centre of Christianity in Tamil Nadu and was handed over to Jesuit priests from France. Pearl fishery coast (all coastal villages from Vembar to Kanyakumari) came under this new province and was entrusted to the Jesuit Missionaries of Toulouse Province in France. So this was also called as the "French Mission".

The French mission tried to get back all the parishes that were under the influence of Goan priests (Portuguese supported) which caused riots and confusion. Portuguese influence never left coastal towns and villages of Tamil Nadu. Two factions namely “Goa Mission” (Padroado priests) and “French Mission” (Jesuit priests) prevailed during that time. The fight between the priests of Portuguese mission and French mission grew to a fight between two nations, Portugal and France. In view of solving this problem, Pope Leo XIII in 1886, made a concordat (agreement) with the Portugal government, and put the dioceses of Goa and Mylapore under Padroado. At the same time Tiruchirapalli (Tamil Nadu) was declared a separate diocese and the Pearl Fishery Coast came under this. 

Church’s construction

In 1839 when Tuticorin was controlled by Madurai mission (Jesuits from France) the local villagers supported the establishment of Goa Mission (Portuguese mission). For this the head of villages ousted the Jesuit priest Fr. Martin from Our Lady of Snows and handed it to the Goa mission. Since Jesuit priests in Madurai mission lost control over the snows church they wanted to construct a separate church in Tuticorin. After waiting for nearly 9 years the Jesuit priests in Madurai decided to construct a church in Tuticorin. The construction of Chinna Koil started in 1848 under the supervision of Jesuit priests from Madurai.
The construction began in 1848 by Fr. Piccinelli and a small church was blessed open on January 5th of 1849. Rev. Fr. Kanos who was the bishop of Madurai Apostolic Province blessed the new church. Construction of a bigger church was going on simultaneously around this small church which was completed after 15 years in 1864.

After 45 years in 1909 the church's side wings were extended. The towers which we see in the front were built in 1948 and were considered to be a great achievement during those times. Limestone was used to build these towers which were churned by the bulls during those times. Today this church stands as one of the finest French architectural church in India.

Tamil Nadu has several churches which need to be visited. Portuguese and French have imprinted their beautiful architecture. By looking at some of the old churches we can distinguish if it follows the French or Portuguese architecture.

Why "Sacred Hearts”?

In 1849 when this church's construction was completed it was dedicated to the sacred hearts of both Jesus and mother Mary. Hence this church is called as "Sacred Hearts" rather than "Sacred Heart" church which we usually come across. 

Tuticorin Diocese

Separated from the diocese of Tiruchirapalli, Tuticorin was created as a diocese and entrusted to the diocesan clergy in 1923. St. Francis Xavier and St. Theresa of Child Jesus were held as the patron saints of the diocese. On April 4, 1930 the five parishes of Kooduthalai, Manapad (Holy Ghost Church), Punnaikayal, Tuticorin (Our Lady of Snows Church) and Vaippar were amalgamated into the diocese.

Today Tuticorin, Vallioor, Kallikulam, Uvari, Manapad, Alanthalai, Vadakankulam, Idinthakarai, Kootapuli, Vembar, Virapandiapatinam etc. fall in the Tuticorin diocese. 

Grottos in the parish

There are 4 Grottos ("Keby") in this church's premise, they are:

Our Lady of Lourdes
St. Joseph
St. Theresa
St. Francis Xavier

Special features of the church

Inner wooden architecture and paintings in stained glasses reflect the French architecture.

There is a statue of Jesus Christ in the cross wherein one of his hands embraces St. Francis of Assisi.

Finest wooden crafts, not just in the altar but everywhere around the church.

The Eucharistic tabernacle is designed as a Pearl, symbolizing Pearly city Tuticorin.

The inside of central dome has paintings depicting Jesus Christ, Mother Mary, Angels etc.

When you get time kindly visit these churches around coastal Tamilnadu. Each church has it's own architectural speciality..

- Anton Niresh Vaz
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com