Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

வேம்பாற்றுப் பரதவரும் ஆப்பநாட்டு மறவரும்

பண்டைய துறைமுக நகரமான வேம்பாற்றின் பூர்வீகக் குடிகள் பரதவர்களும், மரைக்காயர்களும், வலையர்களும் ஆவர். தற்காலத்தில் மரைக்காயர்கள் முழுவதுமாக வேம்பாரினை விட்டு புலம் பெயர்ந்து சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வாழந்து வருகிறார்கள். பெரும்பாலான பரதவர்களும் இலங்கை, சென்னை உட்பட உலகின் பல்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். எனினும் பெரும்பான்மையானோர் பரதவர்களே உள்ளனர். 

இவர்களில் வலையர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வசித்து வருகிறார்கள். அவர்களுடன் மறவர்களும், நெசவு வேலை செய்யும் கோழியர் என அழைக்கப்பட்ட வாதிரியர்களும் வாழ்ந்து வருகின்றனர். இது தவிர ஆச்சாரிகள் உட்பட அனைத்து இனத்தவரும் வேம்பாற்றில் தற்காலத்தில் வாழ்கின்றனர். 

இவர்கள் பல இனத்தவராக இருப்பினும் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதர பண்புடனும் மிகுந்து வாழ்கின்றனர். குறிப்பாக பெரும்பான்மைமிக்க பரதவருடன் தொழில் ரீதியாக வலையரும், பழங்காலத்தில் பரதவரின் மரக்கலங்களுக்கு பாய்கள் அமைத்துக் கொடுத்த வாதிரியர்களும், மரக்கலங்களை வடிவமைத்த ஆச்சாரிகளும் தொழில் ரீதியாக சுமூக உறவு கொண்டிருப்பது இயல்பே.

இவர்களுக்கு சரிநிகராக மறவர்கள் பரதவருடன் நட்பு பாராட்டுவதும், உறவு பேணுவதும் மிகவும் ஆச்சரியத்திற்குரியதே!!! வேம்பாற்றில் வாழும் இவ்விரு இனங்களுக்கிடையே காணப்படும் சமூக உறவினை கூர்நோக்கிப் பார்ப்பது மிகவும் அவசியமாகும். 

இந்த உறவு இன்று நேற்று உருவானதாக தெரியவில்லை மாறாக பன்னெடும் காலம் தொட்டே நிலவி வருகிறது. கடல் தொழில் சார்ந்த கிராமமான வேம்பாற்றில் தொழில் ரீதியாக எவ்வித தொடர்பும் இன்றி வாழும் இந்த மறவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? என்ற கேள்விக்கு பதிலாய் அமைவது ஓர் சமூக நினைவு. 

அக்காலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் நாடு என்ற உட்பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. இன்று அரசின் வருவாய்த் துறையின் ஆவணங்களில் நாடு என்ற பிரிவு இடம் பெறாவிட்டாலும் நடைமுறையில் ‘நாடு’ என்ற பிரிவு அதிகார மையமாக இன்றும் விளங்கி வருகிறது. இத்தகைய ‘நாடு’ என்ற அமைப்பில் ஒன்றாக ஆப்பநாடு இருந்தது. ஆப்ப நாட்டு மறவர் தலைவரின் மகளைச் சிறையெடுக்க இராமநாதபுரம் ஜமீன்தார் விரும்பியபோது ஆப்ப நாட்டு மறவர்களின் தலைவர் அதற்கு உடன்படவில்லை.

ஜமீன்தாரின் சிறையெடுப்பிலிருந்து காப்பாற்றும் வழிமுறையாக தென்திசையில் சற்றுத் தொலைவிலுள்ள வேம்பாறு என்ற கடற்கரைச் சிற்றூருக்குத் தன் மகளை அவர் அனுப்பிவிட்டார். அங்கு வாழ்ந்து வந்த பரதவர் சாதியினரின் தலைவரான அவரது நண்பர் வீட்டில் அடைக்கலமாக அப்பெண் ஒன்றிரண்டு உறவினர்களுடன் தங்கியிருந்தாள். பெண்ணை அழைத்துப்போக வந்த ஜமீன் ஆட்களிடம் பெண் எங்கோ ஓடிப்போய்விட்ட தாக கூறிவிட்டார்கள். அங்கு பெண்ணைத் தேடிக் கிடைக்காமல், விடாது தேடி, வேம்பாறு பரதவர் தலைவர் வீட்டில் அப்பெண் இருப்பதை அறிந்து அவளைச் சிறையெடுக்கப் புறப்பட்டு வந்தனர்.

இதை அறிந்த பரதவர் தலைவர் இக்கட்டான நிலைக்கு ஆளானார். அவர்களை எதிர்க்க வலிமையான படை அவரிடமில்லை. அதேநேரத்தில் தம்மிடம் அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றியாக வேண்டும். இறுதியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி ஆப்பநாட்டு மறவர்களின் முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விட்டார். கன்னிப் பெண்ணை, சிறையெடுக்க வந்தவர்கள் ஏமாந்து திரும்பிச் சென்றனர். இச்செய்தியையும் ஒரு வாய்மொழிக் கதையாகக் கொள்ள முடியும்.

இந்த சமூக நினைவை உறவுச்சொல் ஒன்று, இன்றும் மறக்கவிடாமல் வைத்துள்ளது. ஆப்பநாட்டு மறவர் தலைவரின் பெண்ணுக்கு திருமணம் செய்வித்த தன் வாயிலாக தந்தையின் கடமையை வேம்பார் பரதவர்களின் சாதித்தலைவர் செய்துள்ளார். இவ்வுதவியின் வாயிலாக, தம் குலமானத்தைக் காத்ததாக ஆப்பநாட்டு மறவர் சமூகம், இன்றளவும் கருதி வருகிறது. இதன் வெளிப்பாடாக ‘அப்பச்சி’ என்ற உறவுச் சொல்லால் வேம்பார் பரதவ சமூகத்தினரை அழைத்து வருகின்றனர்.

வேம்பாரில் வாழும் பரதவ சமூகத்தினர் உள்ளூர் மறவர்களை ஆப்பநாட்டு தலைவர் மகளின் வாரிசுகளாக கருதுகின்றனர். அதனால் உள்ளுரில் வாழும் மறவர் சமூகத்தினர் பரதவ சமூகத்தினருடன் மாமா, மச்சான் உறவை பேணி வருகிறார்கள். எனவே மறவர்களின் குடியிருப்புகள் பரதவரின் குடியிருப்புகளுக்குள் உள்ளடக்கியே அமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் உற்றுநோக்குதல் வேண்டும்.

தொடரும் .....

நி. தேவ் ஆனந்த் 


திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல்


வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின் 

எழுத்தோவியத்தில் உருவாகிய திவ்ய பாலனின் பேரில் புகழ் பாடல் 





ஆரிராரோ - ஆரிராரோ

ஆவை மாமரி தருபாலா



சரிகம பதநிசவெனவே

சங்கீத இசையெழத்தான் துயிலுவீர்

தூறும் பனியின் குளிரின் கொடுமை

ஆரும் நடுங்கச் செய்யும் இரவில்



வெல்லை மலைவாழ் ஆயர்குடிலில்

விரும்பிப் பிறந்தாய் புவிமீது

பொன்றா மகிமைக்குரிய உன் உடலைப்

போர்த்தவும் தகுந்தவோர் துகில் இல்லாது

பிள்ளை எனவே பள்ளி கொள்ளுமோ

வல்ல கடவுளே கண் துயிலாய்



எமையாளும் தயைக் கடலே ஞானம்

எரியும் சுடரார் மதியே பரனே

இமையோர் இறைஞ்சும் பவநோய் மருந்தே

எழில்சேர் தவமே இறையோர் குலமே

எழிலோ டினிதாய் பழிபாவமற

விழியே துயில்கொண்டிடு எம் பரனே!

முத்தின் மருத்துவ குணங்கள்:



முத்துக்களை ஆண்கள்- பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.




முத்து அணிந்தால் உடலில் உரசி கரையும். அப்போது உடல் சூடு தணியும் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

முத்தில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து உள் ளது. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்துகளில் முத்து பயன்படுத்தப் படுகிறது. 

முத்துக்களை பல்வேறு மூலிகைச் சாறுகளால் பாடம் செய்து பொடியாக்கி பல்வேறு மருந்துகள்தயாரிக்கப் படுகிறது.

அழகு சாதனங்கள், பற்பசை கள் தயாரிக்க முத்து பயன்படு கிறது.

நெஞ்சு எரிச்சல், மூலநோய், கண் எரிச்சல், இழுப்பு, தலை வலி போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதில் முத்து முக்கிய இடம் வகிக்கிறது.



"Cael Velho", "Calepatanão" and "Punicale"

Rare Collection

"Cael Velho", "Calepatanão" and "Punicale". 
The Portuguese and the Tambraparni Ports in the Sixteenth Century. 

By: Jorge Manuel Flores -1995

Année 1995  Volume 82  Numéro 1  pp. 9-26

களியலாட்டப்பாடல்-2





 
திவ்ய பாலனின் புகழ் பாட, வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின் எழுத்தோவியத்தில் உருவாகி, காலம் காலமாக வேம்பாற்று இளைஞர்களால் களியலாட்டம் மூலம் நினைவு கூறப்படும் பாடல் வரிகள் ...... 


மானுடவதாரமாயினார்
திரு மரியன்னை இடமுயர்
குருபரன் தேவசுதன் - (மானுட)


மானுடவதாரமானார் - மாட்சி சேர் பரம கோனார்
மண்டல லங்கிர்தனங்கள் - மனங்கள் சேர்வங்கிஷ
துதித்த எங்கள் - இங்கித மிகுந்த எங்கள்
ஆரணி காரணி சீரணி பூரணி
மாட்சி சேர் அன்னை மரியின் - மீட்சி மைந்தனார் தரையில் - (மானுட)

அண்டல விண்டலமெங்கும்
தொண்டர்களே வந்து - வந்து
தொண்டர்கள் மகிழ்ந்தன்பாக
எண்டிசை முழுதும் ஏக
சுடர் விடரடவியில் - அடரிடையர்கள் கண்டு
நடுநடுங்கிட - அருடரு திருமொழி நாதனைத் தூதர்கள்
நன்றே துதிப் பாடிட - பாடிட
போதினில் - போதினில்
பால்தயிரோடவர் - நாடிட - நாடிட
நலம் தரும்படி பெலம் புறந்தனில்
பெத்திலேனா வெற்றிகொளு
நற்றிட மாயுற்றிடு குணத்திசையி லுற்றவளர்
மூவர் நாமம் கொண்டு மனங்களி தெண்டனிடும்படி
கோத்திரத்தில் ஈன்றவரும் - பார்த்திபர்க் குயர்ந்ததுரை

யார் திருப்பொன் தூபம் மீரை
நேர்த்திகள் கொணர்ந்து மலர்
சீர்த்தி சேர் சரணம் வைத்து
தோத்திரம் புரிந்து பாட
பாதகப் பசாசு அறிய - பாதளம் எரிய
விம்மியே எரிய - எரிய
வெற்றிக்கபாடம் திறக்க - திறக்க
வெற்றிக்கொடிகள் பறக்க - பறக்க
மூதுரையா தெனில் - முதுவினை மாறிடப்போம்
வேத நாமம் கீத நாமம் பெத்தலேமில் அர்த்த சாமம்
சீதம் வந்து - வந்து வீச - ஓது வெல்லை மலைதனில்
வேசரியோடாடுமாடு - தாவிடும் குடிலைத் தேடி
மேவிடும் திரவியங்கள்
மாசில்லக் கன்னிமரியின்
காசினி புகழ்ந்திடும் சன்சூசையும் கைத்தாதை யாகத்தான்
தாம் தக தட்சண - திமிகிடத்தீம்
தீம் திக திட்சண - திமிகிடப்போம் - போம்
திருப்பாலகன் பாதம் தொழும் - உந்தன் செயல்
தம்பிப்பிள்ளை - ஐய்யா தம்பி கீதம் பாட - (மானுட)

Journal of the Dutch Burgher Union of Ceylon

Rare Collection

Journal of the Dutch Burgher 
Union of Ceylon 

Vol -IX - 1916


Printed by : Albion Press
Light House Street, Fort, Galle

Download Link

Loyola fete on birth centenary of savant

The yearlong birth centenary of Tamil savant, Fr. Xavier Thaninayagam was inaugurated in Loyola College, Chennai, on Saturday, 16th February.

Fr Thaninayagam, a Ceylon Catholic priest, born in 1913, was seconded to Tuticorin diocese from where he was sent to Rome for higher religious studies. He profitably utilised his period and mastered Greek, Latin, Italian, French, German, Spanish and Portuguese.

On his return to Tuticorin diocese, he was posted to Vembar and later to Vadakkankulam where he had to teach Tamil. To perfect his Tamil, he employed a Tamil pundit and learnt Tamil grammar, prosody, language and literature. He found Tamil so absorbing that he enrolled himself in Annamalai University to study the language and wrote the thesis ‘The landscape in Tamil Sangam literature’.

Consequently, he became a teacher in Tamil in Colombo University, and later in the University of Malaysia.

While at Annamalai University, he felt it was his calling to spread the greatness of Tamil world over. He became a roving ambassador for Tamil cause and toured the world between 1949 and 1951 and delivered lectures in various universities and was visiting professor to Naples and Paris universities. His lectures enthused Indologists in various universities to establish Tamil chairs and launch into research.

Realising that research papers on Tamil should be in English to win world attention, he brought out an international quarterly, Tamil Culture.

In 1964, in the World Conference of Orientalists at New Delhi, it was Fr Thaninayagam who mooted the idea of forming an ‘International Association for Tamil Research’ and realised it with the assistance of professors like V.I. Subramaniyam, T.P. Meeenakshisundaram, Mu. Varadarasanar and other scholars. This international body conducted eight international world conferences, including in Chennai, Madurai and Thanjavur.

Fr Thaninayagam was instrumental in organising the International Institute of Tamil Studies by effectively coordinating with UNESCO and said with authority that Tamil was the “language of bhakthi”.

During his tours of Europe, promoting Tamil studies, he had the opportunity to visit various libraries and unearth and cause reprint of forgotten, old Tamil works. Prof R.E. Asher, University of Edinburgh, and Prof C.R. Boxer of the University of London paid rich tributes and called him “truly a citizen of the world”.

The organising committee of the centenary celebrations, headed by Fr. Amudan, Vel­anganni, Naga­pattinam district, would conduct seminars on Fr. Thanin­ayagam’s contribution to Tamil studies, instal chairs and bring out his complete works.

- A.X. Alexander 

(The writer is a former Director General of Tamil Nadu Police) 

தூத்துக்குடி வாழைப்பழ இனிப்பு


தேவையான பொருட்கள்:
  • வாழைப்பழம் 50
  • சீனி 1.5 - 2 கிலோ

உபகரணங்கைள் :
  • விறகு அடுப்பு
  • கரண்டிபெரியது
  • சட்டிபெரியது

செயல் முறை:
  • வாழைப்பழத்தை நன்கு பிசையவும்.
  • வாழைப்பழ விதைகளை எடுத்து விடவும்.
  • வாழைப்பழச் சதையினையும் சீனியையும் நன்கு கலந்து பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்து விடாமல் கிண்டவும்.
  • அடி பிடிக்காமல் இருக்க வெண்டுமளவு பட்டர் பொடவும்.
  • பந்து போல் உருண்டையாக வரும் வேளையில் ஒரு தட்டில் பட்டர் தடவி, அதில் ஊற்றி தட்டவேண்டும்.
  • பிறகு கத்தியால் தேவையான அளவு துண்டு போடவும், உண்ணவும்.

A Christian Caste in Hindu Society: Religious Leadership and Social Conflict among the Paravas of Southern Tamilnadu

Rare Book Collection 

A Christian Caste in Hindu Society: Religious Leadership and Social Conflict among the Paravas of Southern Tamilnadu


By: S. B. Kaufmann
Modern Asian Studies
Vol. 15, No. 2 (1981), pp. 203-234
Stable URL: http://www.jstor.org/stable/312091
Download Link

வேம்பாற்றில் வாசிக்கப்பட்ட நமது திவ்விய இரட்சகராகிய ஆண்டவர் பிறந்த திருநாள் கட்டளை

திரிபுவனம் விதித்து திரிவர்க்கப் பிராணிகளை வகுத்துத் திரிலோக சமஸ்தானமனைத்தையும் புரந்தாளுகின்ற தேவாதி தேவ பரம்பொருளான பிதா, சுதன், இஸ்பிரித்து சாந்துவெனும் தேவ திரித்துவத்தின், கற்பனையை மீறி நமது ஆதி தாய் தந்தையாகிய ஆதனும், ஏவையும் விலக்கின மரத்தின் கனியைப் புசித்ததினாலே, அவர்களும், அவர்கள் சந்ததியராகிய நாமும் நரக மரணத்திற்கேதுவாயிருந்த கனமான பாவதோஷத்தை நிவர்த்தி செய்து மோட்சபாக்கியத்திற்கு நம்மை உரித்தாளி யாக்கிறதற்காக 

ஆதிய நாதி யனந்தாதிபரனும்
சுயம் சுயம் ஸ்திதிமூலனும்
வித்தியாங்க ஞானக்கியான தருமகிரம மூலனும்
ஜனனோற்பவ சர்வமூலானு மூலனும்
அருரூப ரூபஞான சொரூப
அப்பிரமாண, பிரமாண
அப்பரியந்த, பரியந்த
அசமசமானனும்
ஓயாஜோதிப் பிரதாப
ஒளியா மோட்சதியாக
திரிகால நிதானன்,
திரிலோகாதர, சர்வஸ்தான ஸ்தாபித
சர்வாதீஸ்பர சர்வேஸ்பரன்
திரித்துவத்தின் இரண்டாம் பெயரென்னும்
சுதனாகிய சர்வேஸ்பரன்
பூலோகத்தின் சகல மனுஜன்மங்களுக்குள்ளும்
யூதர்வம்சத்தின் தேவராஜனாகவும்
யாக்கோப்பின் சந்ததியில் அரியகன்னிகையின்
திருவயிற்றில் மாசிலாத மனுமகனாக
உற்பவிப்பாரென்று ஆதியிலே
இசையாஸ், எரேமியாஸ், இசக்கியாஸ், தானியேலென்ற
தீர்க்கதரிசிகள் நால்வர் முதல் இன்னும்
பன்னிருவர்களாலும்
பூர்வீகத்தில் எழுதிய
தீர்க்க வாக்கியங்களின் பிரகாரம்
எப்போதும் கன்னியாஸ்திரியாயிருக்கிற
பரிசுத்த மரியநாயகியின் திருஉதரத்திலே
மெய்யான தேவனும், மெய்யான மனுஷனும்
ஒன்றானவராய், உற்பவித்த ஒன்பதாம்மாதம்
பெத்லகேம் நகரில், வெல்லைமலைச் சார்பில்
இரண்டு மிருகங்களுக்கிடையில் திவ்வியமனுகோல
பாலனாகப் பிறந்த மகோற்சவத் திருநாள்
25ம்  தேதியில் சுத்தமாய் கொண்டாடப்படும்...
                                                                                     - தெதெயும்

















வநதவர் மொழியா? செந்தமிழ் செல்வமா?

பரதர், பாரதர், பாரதம், பரதன்

இந் நான்கு சொற்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை தூய தமிழ்ச் சொற்களே யாதலால் இங்கு விரித்துரைக்கப்படும். தொல்காப்பியம் அகத்திணை இயல் 20ஆம் நூற்பாவின் உரையின் பகுதி வருமாறு;-- நால்வகை நிலத்துக்கும் மருவிய குலப் பெயர் ஆவன. முல்லைக்குக் கோவலர், இடையர், ஆயர், பொதுவர், இடைத்தியர், கோவித்தியர், ஆயத்தியர், பொதுவியர். 

நெய்தற்கு நுளையர், திமிலர், பரதவர், நுளைத்தியர், பரத்தியர்.இதனால் நாம் அறிய ண்டுவது என்னவெனில் பரதவர் அஃதாவது பரதர் என்ற பெயர் தொல்காப்பிய காலத்திலேயே, தமிழில் வழங்கியது என்பதாகும்.

மீனெறி பரதவர் மடமகள்
மானேர் நோக்கம் காணா ஊங்கே
என்ற நற்றிணையிலும் காண்க.


இதில் வரும் பரதவர்தானா பரதவர் எனின் ஆம் என்க. பரதவர் என்பதன் பெண்பால் பரத்தியர் என வருதலை நோக்குக.


இனி, பரதர் என்று தமிழ் நூலில் வரும் பெயர்தான் பரதர்---பரதன், பாரதர், பாரதம் என வந்ததா எனின் ஆம் ஆம் என்று கூறி, மறைமலையடிகளார் சொல்லியருளிய விளக்கத்தையும் இங்கு சுருக்கி எழுதுவோம்.

தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் என்ற திருமந்திரச் செய்யுள்--பஞ்ச திராவிடராகிய தமிழரின் மேம்பாட்டைக் குறிக்கின்றது. இத் தமிழர் தாம், முதன்முதலில் கடவுளைத் தீ வடிவில் வைத்து வழிபடலாயினர்.

இவ் வைவகைத் தமிழ் மரபினர்க்கு தலைவராயிருந்து அந்நாளில், அரசு புரிந்த பரதன் என்னும் தமிழ் வேந்தன் வழியில் வந்தவர் பரதர்கள் என்று சொல்லப்பட்டனர்.

பாரத மரபினரான தேவசிரவர், தேவபரதர் என்னும் இருவரும் பயன்மிகுந்த தீயை மிக்க வலிமையோடும் தேய்த்து உயிர்ப்பித்தனர். (இருக்கு 3--23--2)
ஓ நெருப்பே, வலிய படைவீரர்களுடைய பழைய பரதர்கள் தமக்குப் பேரின்பம் வேண்டி நின்னையே இரந்தனர். (இருக்கு 16-6-4)

இவ்வாறு இருக்கு மறையில் பல இடத்தில் காணப்படுகின்றன. இதனால் தமிழ் மக்கட்குத் தலைவரான பரதர்களே முதன் முதலில் தீ யெழுப்பினர், தீயின் பயன் கண்டனர். தீயே கடவுள் என்று வழிபட்டனர் என்று அறிய வேண்டும். தீயைப் பரதன் என்று சொல்லுகிறது இருக்கு மறை இரண்டாம் மண்டிலத்து ஏழாம் பதிகம்!

அன்றியும் செந்நிறக் கடவுள் எனக் காரணப் பெயரான உருத்திரன் என்ற தமிழ் பெயருடைய கடவுளுக்கும், பரதன் என்று பெயரிட்டழைக்கிறது, மேற்படி இரண்டாம் மண்டிலத்து முப்பத்தாறாம் பதிகம். தென்னாட்டவர் கண்டறிந்தது தீக்கடவுள் என்பதுனாலன்றோ வடநூல்களில் நெருப்புக்குத் தென்றிசையங்கி தக்ஷிணாக்கிளி என்று சொல்லப்படுகிறது. இங்ஙனமாக இறைவனை நெருப்பொளியில் வைத்து வழிபடும் முறையை உணர்ந்த பரதர், பண்டை நாளில், இந்த நாவலந்தீவு முழுதும் ஒருங்கு செங்கோல் ஓச்சினராதலின், அவர் பெயரால் அது (இந்தியா) பரத கண்டம் எனப் பெயர் பெறுவதாயிற்று. இப் பரதர்கள் முதன் முதல் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் கண் இருந்து, அதன் கண் பட்டினங்கள் அமைத்து நாகரிகத்திற் சிறந்து வாழ்ந்தாராதலின் அந் நெய்தல் நிலத்து மக்கள் பரதர், பரத்தியர் எனப் பெயர் பெறலாயினர்.

வடக்கிருந்து வந்து இந்திய நாட்டின் வடமேற்கு எல்லையில் குடியேறிய ஆரியர், நாகரிகம் இல்லாதவராய் உயிர்க்கொலை புரிந்த வரைதுறையின்றி ஊனுண்டும் கட்குடித்தும் மகளிர்ப் புணர்ந்தும் தமிழர் அருவருக்குமாறு ஒழுகினமையால் அவர்களை இந்நாட்டில் நுழையாதபடி அக்காலத்தில், எதிர்த்து நிறுத்தினர் என்று இருக்கு மூன்றாம் மண்டிலத்து 33ம் பதிகம்    கூறுகிறது.

இன்னும் இதை விவரிக்க வேண்டாம். இங்கு கூறியவற்றால் அறியலானவை எவை?

ஆரியர் வருமுன்னரே தமிழர் நல்ல நாகரிகத்துடன் இந் நாவலந் தீவில் எங்கணும் பரவி இருந்தனர். அக்கால், தமிழே இருந்தது. அக்கால தமிழ்ப் பெயர்களே எப்பொருட்கும் அமைந்திருந்தன. இன்றும் பண்டைய நூல்களில் காணப்படும் பரதர், என்பதே அக்காலத்தில் பரதன், பாரதன், பாரதம், பரதகண்டம் என விரிந்தது. பரதன், பரதவர் முதலிய அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களே என்பனவாம்.

பாரதகண்டம் என்பதில் கண்டம் தமிழா என ஐயுற வேண்டாம். கண்டம் தூய தமிழ்ச் சொல்லே. அஃதேயுமன்றி காண்டம் என்பதும் தூய தமிழ்ச் சொல்லே. கண்டம், காண்டம் என்பன பிரிவு என்பது. கண்டம் நிலப்பிரிவு, காண்டம் நூற்பிரிவு என்க.

(குயில்: குரல்: 1, இசை: 18, 30----09-19--58)

முத்துக்களை பாதுகாக்கும் முத்தான வழிகள்…


அழகிய ஆபரணங்களில் முத்துக்கு முக்கிய இடமுண்டு. தங்க நகைகளைப் போலவே முத்துக்களை விரும்பி அணிபவர்கள் ஏராளம். நம் பண்பாட்டில் பன்னெடும் காலம் தொட்டே ஆழ்கடலில் மூழ்கி முத்துகளை சேகரிக்கும் வழக்கமும், முத்து நகை அணியும் வழக்கமும் தமிழரிடையே இருந்து  வந்துள்ளதை சங்கநூல்கள் இவ்வுலகிற்கு  தெளிவுபட எடுத்தியம்புகின்றன.

  • முத்துக்கள் ஒன்றுடன் ஒன்று உரசாமல் வைக்க வேண்டும்.
  • தங்க நகை அல்லது மற்ற ஆபரணங்களோடு முத்து நகைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி வைத்தால் முத்துக்களில் கீறல் விழும்.
  • காற்றுப் புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டாம்.
  • சென்ட், ஸ்பிரே மற்றும் வாசனைத் திரவியம், பொருட்களுடன் முத்து மாலைகளை வைக்கக்கூடாது. ஏனெனில் ரசாயனங்கள் முத்துக்களின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
  • முத்துமாலையை அணிவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தி துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.
  • காகிதம் மற்றும் சாயம் போகும் துணியில் முத்துநகைகளை பொதிந்து வைக்கக்கூடாது. இவற்றைப் பயன்படுத்தி முத்து நகைகளை துடைக்கவும் கூடாது.
  • அமிலங்கள், ரசாயனப் பொருட்களுக்கு அருகே முத்துக்களை வைக்க வேண்டாம்.
  • நகைகளை கைகளால் எடுப்பதற்குப் பதில் ஹேர்பின், குச்சிகளைக் கொண்டு இழுக்கவோ, தரையில் உரசியபடி இழுப்பதையோ தவிர்க்க வேண்டும்.
  • நகைப் பெட்டியில் துணிமெத்தையில் முத்துநகைகளை வைத்துப் பயன்படுத்துவதே சரியான முறை.
  • பசுவின் சிறுநீர்,புளிப்புவகை காடி,பழச்சாறு ஆகியவற்றில் சுத்தி செய்து பசும்பாலில் சுத்தம் செய்ய வேண்டும். 
  • குண்டலி பரு ரசம்,புவியின் ரசம்,பொன்னங்காய் ரசம் ஆகிய வற்றில் மூன்று நாட்கள் ஊற வைத்தும் முத்தை சுத்தம் செய்யலாம்.

PEARL CULTURE TRAINING

Rare Book Collection

PEARL CULTURE TRAINING

LONG-TERM AND SHORT-TERM COURSES


Prepared by:

Central Marine Fisheries Research Institute
P.B. 1912, COCHIN-682018, INDIA
Indian Council of Agricultural Research

Download Link

திராட்சை வைன்

தேவையான பொருட்கள்:-
  • திராட்சை - 5 கிலோ 
  • சுடுதண்ணீர் - 6 1/2 லிட்டர் 
  • சீனி - 6 1/2 கிலோ
  • ஈஸ்ட்தேவைக்கு ஏற்ப
  • முளை கட்டிய கோதுமை தேவைக்கு ஏற்ப

செயல் முறை:

  • 6 1/2 லிட்டர் தண்ணீரை சுடாக்க வேண்டும்.
  •  திராட்சைப் பழத்தினை நன்கு கழுவி சுத்தமான மெல்லிய துணியில் , ஈரம் நீக்கி துடைக்கவும்.
  • ஒரு ஜாடியை சுத்தப்படுத்தி நன்கு உலர்ந்த திராட்சை பழத்தை அதனுள் போட்டு மத்து வைத்து நன்கு நசுக்கி விடவேண்டும்.
  • அதில் ஆற வைத்த தண்ணீறையும், சினியையும் ஒரு துணியில பட்டை கிரம்பு சிறு பொட்டலமாக கட்டி போடவும்.
  • நான்கு நாள் கழித்து ஈஸ்ட் சேர்க்கவும்.
  • முளை கட்டிய கோதுமை சிறிதளவு சேர்க்கவும்.
  • திரும்பவும் மத்து போட்டு கிளறவும்.
  • 30 நாட்கள் கழித்து மிண்டும் கிளறவும்.
  • 45 நாட்கள் கழித்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றவும்.

The Mughals, the Portuguese and the Indian Ocean

The Mughals, the Portuguese and the Indian Ocean
Changing Imageries of Maritime India

Price: 850

This book explores the changing meanings that 'maritime India' acquired during the early modern period as a result of the frequent efforts of the Mughals and the Portuguese, from two different fronts, to control its vast, resourceful enclaves and profit-yielding neighbourhoods. By analysing the highly nuanced socioeconomic processes of these regions and addressing themes that have as yet remained unexplored, this volume creates a new framework to understand the varying nature of maritime India.    Some of the issues explored here focus on the political implications of the religious dialogues between Akbar and Jesuits; the attempts of the Portuguese to create a supportive social group out of the Paravas in the Pearl Fishery Coast; the creation of parallel circuits to Ottoman markets in the eastern Mediterranean as an alternative to the Cape Route trade of the Portuguese; the multiple strands of trade between coastal western India and the markets of East Africa; the economic and political processes that prompted the shifting of the Mughal capital from the hinterland to the vicinity of the major maritime trading centres of northern Konkan; voices of dissent in Christianity and discourses on early nationalism; the changing perceptions of Portuguese enclaves in Bengal and aspects of the ethnic mutation of the Luso-Indians as well as the social manoeuvrings of the English.
    The Mughals, the Portuguese and the Indian Ocean: Changing Imageries of Maritime India will be of interest to students and scholars of early modern history of India in general and those studying transitions in maritime India in particular.

The Author
Pius Malekandathil is currently Professor at the Centre for Historical Studies, Jawaharlal Nehru University, New Delhi.



மீன் பக்கோடா


தேவையானப் பொருட்கள்

  • பொடியாக அரிந்த வெங்காயம் – ஒரு கப்
  • மல்லித்தூள் – ஒரு மேசைக்கரண்டி
  • மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – அரைத் தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கின பச்சை மிளகாய் – 2 தேக்கரண்டி
  • முள் இல்லாத சதைப்பற்றான மீன் துண்டுகள் – முக்கால் கிலோ
  • பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை – அரை கப்
  • கடலை மாவு – ஒரு கப்
  • முட்டை – ஒன்று
  • தண்ணீர் – 7 மேசைக்கரண்டி
  • மைதா மாவு – ஒரு தேக்கரண்டி
  • சோள மாவு – ஒரு தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை


எல்லா மாவுகளையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், தேவையான உப்பு, தண்ணீரை ஊற்றிக் கலந்து சுமார் அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி 3 தேக்கரண்டி எண்ணெய் விடவும். அது சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு மீதியுள்ள தூள்களைச் சேர்த்து சிறிது வதக்கி மீன் துண்டங்களையும் சேர்த்து 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிடவும்.

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, மீன் கலவையை ஆற வைத்து, அத்துடன் கொத்தமல்லித் தழையைச் சேர்த்து நன்கு மசிக்கவும்.

இந்த கலவையை கடலை மாவு கரைசலில் சேர்த்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கி, ஒவ்வொரு தேக்கரண்டியாக ஊற்றி, பக்கோடாக்களாக பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.



MANUAL ON PEARL OYSTER SEED PRODUCTION, FARMING AND PEARL CULTURE


Rare Book Collection

MANUAL ON PEARL OYSTER SEED
PRODUCTION, FARMING
AND PEARL CULTURE

Prepared by

CENTRAL MARINE FISHERIES RESEARCH INSTITUTE
INDIAN COUNCIL OF AGRICULTURAL RESEARCH
POST BOX NO. 1603, COCHIN - 682014, INDIA

Download Link

The Portuguese in the Creole Indian Ocean Essays in Historical Cosmopolitanism

The Portuguese in the Creole Indian Ocean

Essays in Historical Cosmopolitanism


When the Portuguese first entered the Indian Ocean centuries ago, they intruded upon an ancient creole and cosmopolitan world. Also, they entered a world with age-old connections to the Mediterranean. This book explores some of the intriguing interstices of colonial and other spaces in the ocean, through a scrutiny of personages, texts, and authors between the sixteenth and twenty-first centuries, in a variety of locales, namely, Goa (India), Macau (China), Malabar (Kerala, India), and Melaka (Malaysia). As the narrative goes back and forth between the ethnographic present and the past, it unearths the traces of old connected histories, such as those that link South and Southeast Asia. Furthermore, it explores similarities and differences with the Atlantic, especially in what concerns creolization and cosmopolitanism. It is an attempt by a Brazilian scholar to apply perspectives developed in the Atlantic  - in particular, creolization  - to Indian Ocean spaces and themes

by: Fernando Rosa Ribeiro

நெத்திலிக் கருவாட்டுக் கறி


* நெத்திலிக் கருவாடு – 200 கிராம்
* கத்திரிக்காய் – 75 – 100 கிராம்
* பச்சை மிளகாய் – 2
* வெங்காயம் – 30 கிராம்* எலுமிச்சை – பாதி
* பூண்டு – 4 – 5 பற்கள்
* கறித்தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
* கறிவேப்பிலை – 2 நெட்டுக்கள்
* நல்லெண்ணெய் – 5 மேசைக்கரண்டி
* உப்பு – ஒரு தேக்கரண்டி

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
step 1
கருவாட்டை கொதிநீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் எடுத்து கழுவிக் கொள்ளவும். கத்திரிக்காய், வெங்காயம், பச்சை
மிளகாய் மற்றும் பூண்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். (இதற்கு சின்ன வெங்காயம் உபயோகிப்பது நல்லது, தோலை நீக்கி  விட்டு பாதியாக நறுக்கி போட்டால் போதும்)
step 2
ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் கருவாடு, கத்திரிக்காய், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும்.
step 3
அதன் மேல் எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.

step 4
எல்லாம் சேர்ந்து நன்கு வெந்ததும் கறித்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு போட்டு பிரட்டி விடவும். (பெரும்பாலும் நெத்திலி கருவாட்டில் உப்பு இருப்பதில்லை அதனால் கருவாட்டை சுவை பார்த்து உப்பு சேர்க்கவும்.)
step 5
நன்கு எல்லாம் ஒன்றாக சேர்ந்து பிரட்டல் ஆனதும் இறக்கி வைத்து எலுமிச்சை பழம் பிழியவும்.
step 6
சுவையான நெத்திலி கருவாட்டு கறி ரெடி. 

சுட்ட மீனும் சுறாபுட்டும்


நமக்கு இல்லாத பழக்கங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. பொதுவாக நமக்கு விளங்காதவைகளை நாம் வெறுக்கவே செய்கிறோம். நம் மூளை செய்யும் வேலை அது. ஒருவருக்கு தெய்வீகமாகப்படும் விஷயங்கள்கூட மற்றவருக்கு அருவறுப்பகத் தோன்றுகிறது. நாம் சிறு வயது முதல் பழக்கப்பட்டு வந்தவைகள்தான் உயர்ந்தது என நமக்கு எண்ணத்தோன்றுகிறது. மதம், ஜாதி சார்ந்த நம் தீவிர (fanatic) மனப்பாங்குகளும் இதைப்போலத்தான்.

பலநேரங்களில் ஒரு மனிதனை மதிப்பிட அவரின் பழக்கவழக்கங்களை நாம் உபயோகிகின்றோம். இவையாவும் (அவருக்கு) கற்பிக்கபட்டவையே என்பதை நாம் பொதுவாக எண்ணி பார்ப்பதில்லை.

நம்மில் இருக்கும் பல பழக்கங்கள் யாரோ நமக்கு சொல்லித்தந்தது அல்லது யாரை பார்த்தோ நாம் கற்றுக்கொண்டது. மதங்களும, ஜாதி பற்றிய கொள்கைகளும்கூட யாரோ நமக்கு ஊட்டிய பால்தான். ஏதோ அவை நாமே உருவாக்கியது போல சில நேரங்களில் நடந்துகொள்கிறோம்.

ஜப்பானில் பல ஜந்துக்களை ருசித்து உண்கின்றனர். அமெரிக்காவில் மாட்டிறச்சியை சுட்டு சாப்பிடுகின்றனர், இதெல்லாம் நம்மில் பலருக்கு வியப்பளிப்பது போலவே நாம் பட்டை இலவஙத்தைப் போட்டு குழம்பு வைத்து அதை சோறில் ஊற்றி சாப்பிடுவது அமெரிக்கர்களுக்கு வியப்பளிக்கிறது. பட்டை மணம் மெற்கு நாடுகளில் இனிப்புகளில் (மட்டும்?) பயன்படுத்தப் படுகின்றது.

பச்சை மீனை சுட்டு உண்பதை மீன் உண்பவர்கள்கூட புரிந்து கொள்வதில்லை. கடல்புறங்களில் பேர்போன ஒரு பழக்கம் அது. காலப் பயணமாக பின் சென்று நம் முன்னோர்கள்போல வாழும் ஒர் அரிய அனுபவம். இதன் சுவை பற்றி கவிதைகள் வரையலாம். மாமிசம்/மீன் உண்ணாதவர்கள் சில கிழங்கு வகைகளை சுட்டு உண்டு பார்க்கவும். மற்றவர்கள் இந்த அனுபவத்தை பெறுவார்களாக.

சுடுவதற்கு ஐஸ் மீன் உகந்ததல்ல. கடற்கரையில் கிடைக்கும் வாடாத மீன்களைச் சுடுவதே நல்லது. எல்லா வகை மீன்களும் சுட்டால் ருசிப்பதில்லை. அதற்கென்று சில மீன் வகைகள் உள்ளன. சாளை(மத்தி), அயிலை, போன்ற மீன்கள் பெயர்போனவை. முட்டத்தின் கள்ளுக்கடைகளில் சுட்ட பச்சை மீன் மிகப் பிரபலம்.

அவித்த மரச்சீனி(மரவள்ளி) கிழங்கும் சுட்ட பச்சை மீனும் நிகரில்லா இணைகள். இதற்கு மாற்று மரவள்ளிக் கிழங்கும் அவித்த தோடும். தோடு (mussel) என்பது ஒருவகைச் சிப்பி. ஒரு பருவத்தில் முட்டம் மற்றும் கடியப்பட்டிணத்தின் பாறைகளில் அதீதமாக விளையும் இந்தத் தோடுகள். இதைக் கழுவி உப்பு கூட போடாமல் அவிக்கலாம். உப்பு அதிலேயே இருக்கும். மரச்சீனிக் கிழங்குக்கும் இந்த தோடுக்கும் அப்படி ஒரு சம்பந்தம். கள்ளுண்ன சிறந்த கூட்டு.

இந்த அவித்த தோடுகள் அமெரிக்காவின் சீன பஃபேக்களில்(buffet) கிடைக்கின்றன.

எச்சரிக்கை: சென்னை அடுக்கு மாடி வீடுகளில் மீன்சுடுவது உங்கள் பின்புலனை பறைசாற்றுவது போலாகும். மகாபலிபுரம் போன்ற கடற்கரைகளுக்கு சிற்றுலா(picnic) போகும்போது இதை செய்து பார்க்கவும்.

மரவள்ளிக்கிழங்கை, மசாலாவுடன் நெத்திலி போன்ற சிறிய மீன்களைப் போட்டு மசிய அவித்தால் ‘கிழங்குக் களி’. சரவணாபவனின் முதல் மாமிச உணவாக இதை சேர்க்கலாம். மிகச் சத்தான உணவு. இந்தக் கிழங்கை துண்டுகளாக வெட்டி காயப்போட்டால் ‘வெட்டுக் கிழங்கு’. இதுவும் இடித்துக் களியாக்கப்படும்.

‘கூனி’ எனப்படும் சிறிய இரால் வகை ஒன்றை காயவைத்து அதை மிளகு, மசாலாவுடன் இடித்து பொடிசெய்வார்கள். நெத்திலி கருவாடும் இவ்வாறு பொடி செய்யப் படும்.

கடற்கரையின் இட்லி பொடி இது. தேனீர் தவிர வேறெந்தெ உணவுக்கும் சுவை சேர்க்கும். நான் இதை அமெரிக்கவிற்கு அனுமதியின்றி இறக்குமதி செய்திருக்கின்றேன், எனக்கு மட்டுமாக.

கடல்புறங்களில் ஊருக்கு ஊர் மீன்குளம்பு வேறுபடும். மணம் நிறம் குணம் மாறும். எனக்கு சிறிது புளிப்பு தூக்கலக பச்சை மிளகாய் போட்டு வைத்த குளம்பு பிடிக்கும். வேலு மிலிட்ரி போல பூண்டு போட்டு மீன் குளம்பு வைப்பதில்லை.(அதையும் ரசித்து ருசித்திருக்கிறேன்).

மூரை எனப்படுவது கடல் பாறைகளில் ஒட்டி வளரும். மெல்லிய, மண்டையோட்டின் மேற்புரம் போன்ற கூட்டின்மேல், முள் போன்ற குச்சிகள் நீண்டு நிற்கும். காய்ந்த இதன் குச்சிகளை சிலேட்களில் எழுதப் பயன்படுத்துவதுண்டு.

மூரையை உடைத்தால் மஞ்சள் நிறத்தில் ஒர் இளந்திடப்(semi solid) பொருள் இருக்கும். இதை சமைக்காமல் பச்சையாக உண்ணலாம். பாறையிலிருந்து எடுத்து சில மணி நேரங்களுக்குள் இவற்றை உண்ண வேண்டும். முட்டத்தில் பாறைகள் அதிகமானதால் மூரைகளும் அதிகம். எல்லா நேரங்களிலும் இவை கிடைப்பதில்லை. டிசம்பரில் கட்டாயம் கிடைக்கும். மூரைகள் எனக்குப் பிரியம்.வேறெந்த மீனையும் சமைக்காமல் உண்பதில்லை.

குமரிமாவட்டத்தில் அநேகமாக எல்லா பதார்த்தங்களிலும் தேங்காய் சேர்ந்திருக்கும். தலைக்கு தினமும் தேங்கய் எண்ணைதான், சமையலுக்கும். மீன்குழம்புகள் இந்த விதிக்கு விலக்கல்ல.
தேங்காய் இல்லாமல் சமைக்கும் ‘மஞ்சள் தண்ணி’ எங்கள் வீட்டில் பிரசித்தம், தூண்டிலில் பிடித்த மரத்து மீன்களே இதற்கு சிறந்தவை.

சின்ன வெங்காயம் (குமரியில் ‘உள்ளி’), மஞ்சள், புளி, சின்ன சீரகம் சேர்த்து அரைத்து கூட்டப்படும் குளம்பு. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நம் வீட்டின் சமையலை வெளிப்படுதும் குளம்புகளில் இதுவொன்று. மற்றது நண்டுக்கறி.

பழைய சோற்றிற்கு மஞசள் தண்ணி அசாத்திய சுவை சேற்கும். சுடு சோற்றை நன்கு ஆறவைத்தால்தான் மஞசள் தண்ணியின் குணம் தெரியும்.

தேங்காய் இல்லாமல், மாங்காய் போட்டு அவியல் என்று ஒன்று. இரண்டு மூன்று நாட்கள் கெடாமல் இருக்கும். மீன்போட்ட புளிக்காய்ச்சல் இது.

சுறாபுட்டு அதிகமாகப் புழங்கவில்லை. எப்போதாவது சின்ன சுறா மீன்கள் கிடைத்தால் அதை அவித்து, உதிர்த்து, வறுத்து புட்டு செய்வதுண்டு. இந்தப்புட்டை வடைபோல உருட்டி முட்டையில் தோய்த்து பொரிப்பார்கள் சிலர். சைவம் உண்பவர்கள் ஏமாந்து போகுமளவுக்கு இருக்கும். சுறா மீன்களில் மசாலா எளிதில் பிடிபதில்லை அதனால் குளம்பை விட அவியல் அல்லது புட்டுக்குத்தான் அது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது, திருக்கையும் அதுபோலத்தான்.

சுறா மட்டுமன்றி வாளை மீனிலும் புட்டு நன்றாக வரும். இதில் சதைக்குள் முள் அதிகமிருக்கும் ‘துப்பு வாளை’ புட்டுக்குச் சிறப்பு. சாப்பிடும்போது, முள்ளை, துப்பிக்கொண்டே சாப்பிடவேண்டும். உதிர்த்து விடுவதால் புட்டில் முள் இருப்பதில்லை.

பாம்புபோல நீளமாக, ஆனால் தட்டையாக வெள்ளி பூசிய பட்டை போலிருக்கும் வாளை மீன். முதுகுப்புறத்தில் பச்சை கலந்த நீல நிறம்.

துப்பு வாளை அல்லாத வாளையில் நெய் சுரக்கும். நெய்மீனை விட சுவையாக இருக்கும் அதன் குளம்பு. வாளைக் குளம்பை சுடச்சுட சாப்பிட்டால் மட்டனை மறக்க நேரிடும்.

மீனவர்கள் தட்டு நிறைய சோறு போட்டு சாப்பிடுவது வியப்பாக இருக்கலாம். அத்தனை உடலுழைப்புக்குப் பிறகு அது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல தேவையானதும்கூட. மீன் இல்லமல் சாப்பாடு இறங்குவதில்லை கடலோர மக்களுக்கு. மீன்பிடிக்கச்செல்லாத நாட்களில் கருவாடு அல்லது இறைச்சிக் குழம்பு கட்டாயம் இருக்கும்.

மீனை பொரித்து உண்பது ஒரு சிறப்பு உணவு. கருவாட்டைப் பற்றி வர்ணிக்கத்தேவயில்லை திரைப்படப் பாடல்களே சான்று.

பெரிய மீன்களை பக்கவாட்டில் இரண்டாய்க் கீறி உப்பு, சில நேரம் மஞ்சள், தடவி காய வைப்பது ஒருவகை, நெத்திலி மீன் போன்ற சிறிய மீன்களை அப்படியே காயப்போட்டு எடுப்பது இன்னொரு வகை. சில பருவங்களில் ஊர் முழுவதும் மீன்கள் காயும். அந்த நேரங்களில் சளி பிடித்திருப்பது நல்லது. கருவாடாகும்வரைதான் இந்த ஊர் மணக்கும் நிலை.

நெத்திலி கருவாடு வீட்டின் அறைகள் முழுக்க, காற்றும் புக முடியாதபடி நிரப்பி வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். காயப் போட்ட மீன் மீது பஸ் ஏற்றிச் சென்று அடி/திட்டு வாங்கிய ஓட்டுனர்கள் பலர்.

கருவாட்டுக்கு இடம் விட்டுவிட்டு ரோடு போட்டிருக்கலாமோ?

by: Cyril Alex

ஓடாவி



தொண்டியில் ஓடாவி தெரு என்று ஒரு தெரு இருக்கிறது. அப்படியானால் இந்தப் பகுதியில் ஓடாவிகள் இருந்திருக்க வேண்டும். ஓடாவி என்பது ஒரு இனத்தின் பெயரோ அல்லது ஜாதியின் பெயரோ அல்ல. ஓடாவி என்றால் தச்சன் என்று பொருள். இவர்கள் அணைத்து விதமான மரவேளைகளையும் செய்யும் தச்சர்கள் அல்ல. மாறாக மரக்கலம் செய்யும் தச்சர்கள். 

இலங்கையில் ஓடாவி என்று ஒரு இனக் குழு உள்ளது. இவர்கள் இன்று சிங்களவர்களாக இலங்கை இனப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அனால் இவர்களது தொழில் மரக்கலம் செப்பனிடுதல் சார்ந்த தொழிலாகும். தொழில் அடிப்படையில் இணைத்துப் பார்த்தால் ஒரு காலத்தில் மரக்கலம் செய்த தமிழர்களாக இவர்கள் இருந்திருக்க வேண்டும்.

இந்த மரக்கலம் செய்யும் தச்சர்கள் பயன்படுத்தும் ஒரு கருவியின் பெயர் ஓடாவி என்பதாகும். ஓடவிகளை கையாள தெரிந்தவர்கள் ஓடாவியார். இவர்கள் மென்மையான மரங்களையோ பலகைகளையோ கையாள்வதில்லை. மரச்சட்டங்கள் செய்து வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மர வேலைபாடுகள் நிறைந்த காட்சி பொருளை செய்கின்ற சிற்ப தச்சு வேலையோ தெரிந்தவர்கள் அல்ல. மாறாக மரத் தடிகளை கையாளுபவர்கள். 
இவர்கள் கையாளும் இந்த ஓடாவி கருவிகள் மரக்கலங்களின் பாகங்களைப் பொறுத்து அமைப்பிலும் அளவிலும் மாறுபடுகிறது,

தோணி, மஞ்சு, கொட்டியா, வத்தை, வல்லம், கட்டுமரம் என்று எந்த வகை மரக்கலமாக இருந்தாலும் அதனை மனக்கனக்கினால் துல்லியமாக அளவிட்டு, ஒரு வெள்ளை அடிக்கப்பட்ட சுவர் மீது அல்லது கதவு பலகை மீது எரிந்த விறகு கரித் துண்டைக் கொண்டு கட்சிதமாக வரைபடம் வரைந்து வேலையை தொடங்கி விடுவார்கள். 

ஒவ்வொரு பாகம் வடிவமைக்கப் படுகிற போதும் அதற்கேற்ப துணை வரைபடங்கள் மாறிக் கொண்டே இருக்கும். பாகம் பாகமாக இந்த மரக்கலங்களின் பகுதிகள் தனித் தனியே சிறிய அளவில் செய்யப்பட்டு தனியே வடியிமைக்கப் பட்ட பெருங் கூட்டுடன் பூட்டப்படுகின்றன. மரக்கலங்களின் வைகேற்ப்ப மரங்களை தெரிவு செய்வதிலும் இவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினர்.

- அன்றோ ரூபன் 

வேம்பாத்து அக்கரை புனித சவேரியார் கோயில்


புனித சவேரியார் முத்துக்குளித்துறையின் ஊர்கள் தோறும் சுற்றித் திரிந்து கத்தோலிக்க வேதத்தில் பரதவர்களை உறுதிப் படுத்தினார் என்பது வரலாறு. அந்த காலக்கட்டத்தில் இரவு நேரங்களில் குடியிருப்புகளைக் கடந்து தனிமையில் ஒரு குடிசையில் தங்கி செபத்திலும், தியானத்திலும் செலவிட்டார் எனக் குறிப்புகள் உள்ளன. அவ்வாறு வேம்பாறு வந்து தனது வேத போதக பணிகளில் ஈடுபட்ட பின்னர் இரவில் தங்க வேம்பாறு ஆற்றின் அக்கரையில் ஒரு குடிசை அமைத்து தங்கினார். அந்த இடத்தில் புனித சவேரியார் வருகையின் நினைவாக புனித சவேரியார் பெயரில் குடிசைக் கோயில் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

அக்காலத்தில் வேம்பாறு பரிசுத்த ஆவி ஆலயப் பங்கின் கீழ் இருந்த இந்த நினைவுச் சிற்றாலயத்திற்கு பங்கு மக்கள் திருமணம் செய்த புதுமணத் தம்பதியரை ‘வடக்கே செல்லுதல்’ எனும் முதல் பயண சடங்கிற்கு தங்கள் குடும்பத்தினருடன் அழைத்து வந்து, ஆலயத்தில் ஜெபித்து, நன்றி செலுத்தி சிற்றுண்டி அருந்தி வீடு திரும்புவது வழக்கம். (இன்றும் இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது.)

வேம்பாறு ஊரில் ‘முதலாளி’ என அனைவராலும் அழைக்கப்பட்ட திரு. ச.அ. அய்யாதம்பி தமேல் அவர்களுக்கு சொந்தமாயிருந்த இப்பகுதி பனைமரங்களை குத்தகைக்கு (பாட்டம்) எடுத்து இவ்விடத்தில் குடியிருந்த ‘பொத்தச்சி’ என்று அழைக்கப்பட்ட அந்தோணியம்மாள் அவர்கள் புனித சவேரியார் தங்கிய இடத்தில் இருந்த ஆலயத்தை பராமரித்து வந்தார். 

1947 ஆம் ஆண்டில் வேம்பாறு தூய ஆவி ஆலய பங்கின் துணைப் பங்கான புனித தோமையார் ஆலயம் தனிபங்காக மாறியது. புனித சவேரியார் ஆலயம் இருந்த பகுதியில் புனித தோமையார் ஆலய பங்கு மக்கள் வாழ்ந்து வந்ததால் புனித சவேரியார் ஆலயம் புனித தோமையார் பங்குடன் இணைக்கப்பட்டு பரிசுத்த ஆவி பங்கிலிருந்து விடுபட்டது. 

காலப் போக்கில் சிதிலமடைந்த இவ்வாலயத்தை அந்தோணியம்மாள் அவர்களின் வழிமரபினர்கள் இன்று புனித சவேரியார் தங்கிய இடத்திலே தற்போது புதிதாக சிற்றாலயம் கட்டி இவ்வாலயத்தை புதுப்பித்து பாராமரித்து வருகிறார்கள். இவ்வாலயம் புனித தோமையார் பங்குடன் இணைக்கப்படாமல் தனியாக இக்குடும்பத்தினரால் நிர்வகிக்கப் படுகிறது. இச்சிற்றாலயத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த பழங்கால புனித சவேரியார் புதுமைக் கிணறு இன்றும் காணப்படுகிறது.

அவ்வாலயம் சிதிலமடைந்த காலத்தில் அப்பகுதியில் குடியேறிய மக்களுக்கு பலவித கடும் நோய்களும், பேய்களின் தொல்லைகளும் ஏற்பட அப்பகுதியில் மீண்டும் புனித சவேரியாருக்கு ஆலயம் அமைக்க எண்ணி பரிசுத்த ஆவி பங்கினை சேர்ந்த திரு. கோயில்பிள்ளை விக்டோரியா அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் பழைய ஆலயத்திற்கு நேர் எதிரில் மண் சுவரில் ஓடுகளால் வேயப்பட்ட கோயில் கட்டப்பட்டது. 

இதனிடையே இக்கோவிலை கற்கோவிலாக மாற்றும் முயற்சியில் இப்பங்கு மக்கள் ஈடுபட்டனர். இறுதியில் 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 3 தேதி அன்று கோவில் கட்டி முடிக்கப்பட்டு முத்துக்குளித்துறை மறைமாவட்டத்தின் நான்காம் ஆயர் மேதகு. அமலநாதர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

- நி. தேவ் ஆனந்த் பர்னாந்து 

Ancient and Medieval ports of the Gulf of Mannar Coast, East coast India and their Maritime Connections across Indian Ocean Countries

Ancient and Medieval ports of the Gulf of Mannar Coast, East coast India and their Maritime Connections across Indian Ocean Countries


The Gulf of Mannar lies in the south-eastern corner of India, bordered by Sri Lanka on the  south  east.  It  covers  the  coast  of Tamil  Nadu  from  the  island  of  Rameswaram  to Kanniyakumari.  This  region  witnessed  extensive  long  distance maritime  activities  from the  Early  Historic  period;  from  500 BCE  to  500  CE. 

by: N. Athiyaman

Download Link

மூவேந்தரில் ஒருவர் பாண்டியர்


மூவேந்தரில் ஒருவர் பாண்டியர்

பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர்.

பாண்டிய நாடு :

இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது. இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது. இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது. இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.

பாண்டியரின் தோற்றம் :

சேர,சோழர்கள் போன்ற பேரரசுக்களைக் காட்டிலும் மூத்த குடியினர் பாண்டியரே ஆவர். இவர்களின் தோற்றம் கூற முடியாத அளவிற்குத் தொன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.குமரிக் கண்டத்தில் தோன்றிய ஆதி மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து.பாண்டியர்களின் தோற்றத்திற்குச் சான்றாக கி.மு 7000 ஆண்டளவில் உருப்பெற்றதனக் கருதப்படும் தொல்காப்பியத்தில் கூறியபடி

"முன்னீர் விழவின் நெடியோன்

நன்னீர் மணலினும் பலவே" —(புறம் - 9)

அதாவது குமரிநாடானது முதற் கடற்கோளால் அழிவுற்ற வேளை "அங்கு பஃறுளி ஆற்றை வெட்டுவித்துக் கடல் தெய்வங்களிற்கு விழா எடுத்தவர் பாண்டியர்" என விளக்குகின்றது இப்பாடல் வரிகள்.மேலும் இச்செய்தியைக் கூறும் தொல்காப்பியம் பாண்டிய மன்னர்களால் தலைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் கடைச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது எனவும் பொதுவான கருத்து நிலவுகின்றது. பாண்டியர்கள் மீன் கொடியினைகொண்டு ஆண்டதால் மீனவர் என்றும்,பின்னாட்களில் பரத கண்டம் என்று அழைக்கப்பட்டதாலும், பாண்டியர் கடல் சார்ந்த ஆளுகை கொண்டிருந்ததாலும் பரதவர் எனும் இனத்தவராக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

பாண்டியரைப் பற்றிய பதிவுகள் :

இராமாயணத்தில் :

பாண்டிய மன்னர்களின் தலைநகர் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முத்து, பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது இவ்வாறு இராமாயணத்தில் உள்ளது.

மகாபாரதத்தில் :

திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை உண்டு. திருப்பாண்டி கொடுமுடிதான் விராடநாடு. பாண்டவர் கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர். மேலும் அர்ச்சுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளை மணந்தான் எனவும் உள்ளது.

அசோகனின் கல்வெட்டுக்களில் :

மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள். மௌரிய அரசன் அசோகன் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.

மகாவம்சத்தில் :

இலங்கையை ஆண்ட விஜயன் தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான்.அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று மகாவம்சம் கூறுகின்றது.

பிற நாட்டவர் பதிவுகள் :

கி.மு மூன்றாம் நூற்றாண்டு சந்திரகுப்தன் ஆண்ட காலமான கடைச்சங்க காலத்தின் துவக்கம் 'மெகஸ்தனீஸ்' என்ற யவன நாட்டுத் தூதுவன் பாண்டிய நாட்டிற்கு வந்ததாகக் கருதப்படுகின்றது மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. கொக்கிளிசுக்குப் 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள். அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான். அதில் 350 ஊர்கள் இருந்தன. நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 9 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் 'பிளைனி' என்ற மேனாட்டான் தமிழகத்தைக் காண வந்தான்.அவனது பயண நூலில் பாண்டிய அரசி பற்றி "இந்தியாவின் தெற்கில் 'பண்டோ' என்ற ஒரு சாதி மக்கள் இருந்தனர். பெண் அரசு புரியும் நிலை உண்டு.கொக்கிளிசுக்கு ஒரு பெண் பிறந்தாள். அவளுக்கு அன்போடு பெரிய நாட்டை ஆளும் உரிமை கொடுத்தான். முந்நூறு ஊர்கள் அவளது ஆட்சியில் இருந்தது. பெருஞ்சேனை வைத்திருந்தாள். அவளது மரபினர் தொடர்ந்து ஆண்டனர் என குறித்துள்ளார் பிளைனி.

சங்க காலப் பதிவுகள் :

பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும். வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் பாண்டியன் தென்னவன், மீனவன், மாறன், கடலன் வழுதி, பரதவன் மற்றும் முத்தரையன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டான் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.

இமயம்வரை பாண்டியரின் ஆட்சி :

மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி, இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது. சோமசுந்தரப் பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார். இவர் மதுரை மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள். இவளது வழிமுறையினரே மௌரியர்கள். அந்த வழியில் சித்திராங்கதன் வந்தான் என்பதும் அவன் மகளே சித்திராங்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்கள் :

மானாபரணன், வீரகேரள பாண்டியன், சுந்தர பாண்டியன்,விக்கிரம பாண்டியன், வீரபாண்டியன் ஆகிய ஜந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர். மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில் தோற்று முல்லையூரில் ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன் ஈழ நாட்டிற்குத் தப்பி ஓடினான். வீரபாண்டியன் கி.பி. 1048 ஆம் ஆண்டளவில் கொல்லப்பட்டான். கோலார் மிண்டிக்கல் கல்வெட்டு மற்றும் இராசாதிராசன் திருக்களச் செப்பேடு போன்றனவற்றில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாண்டியர் ஆட்சி இயல் :

நாட்டியல் :

தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது. மேற்கே சேர நாடும், மலை நாடும், கிழக்கே கடல், வடக்கே சோழ நாடும் ,கொங்கு நாடும், தெற்கே கடலும், குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன.இன்றைய மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம்.சங்க காலத்தில் ஊர், கூற்றம், மண்டலம், நாடு என்ற பிரிவில் அமைந்திருந்தன.

"முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு" —(புறம்-110)

"வல்வேல் சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே" —(புறம்-242)

என்ற புறப் பாடல்கள் ஊரும், நாடும் எனக் கூறும். இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக விளங்குகின்றது. ஊர்கள், கூற்றங்கள், வளநாடுகள், மண்டலம் என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது.

குடும்ப இயல் :

அரசன், அரசி, இளவரசன், பட்டத்தரசி என்ற முறையில் குடும்பம் அமைந்தது. பட்டத்தரசி பாண்டிமாதேவி எனப்பட்டாள். பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர் சில பாண்டிய அரசர்கள். பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு போரும் செய்திருக்கின்றனர். அரசனின் மூத்த மகனே பட்டம் பெற முடியும். இளவரசு பட்டம் பெற இயலும். மாற்றாந்தாய் மக்களுடன் பகைமை வருதலும் உண்டு. உதாரணமாக வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் போன்றவர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.

கொற்கை பாண்டியரது துறைமுகம், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஊழ்வினையால், கண்ணகி நீதி கேட்டதால் இறந்தான். அச்சமயம் இளவரசனாக கொற்கையில் இருந்த வெற்றுவேற்செழியன் மதுரைக்கு வந்து முடிசூடினான். ஜந்து பேர் ஒரே சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது.ஆட்சியின் காரணமாக அண்ணன், தம்பி, தந்தை, மகன் சண்டைகள் வந்தன மேலும் ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற சம்பவங்களும் பாண்டியரின் குடும்பவியலில் இருந்தன குறிப்பிடத்தக்கது.

அரசியல் ஆட்சி இயல் :

பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்கள். அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள், படைத் தலைவர்கள் இருந்தனர். அரையர், நாடுவகை செய்வோர். வரியிலார், புரவுவரித் திணைக்களத்தார், திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.

1-அரையர் உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் ஆவார்கள். இவர்கள் நாட்டைச் சுற்றி வந்து, குடிமக்கள் குறை கேட்டு நீதி வழங்குவர்.

2-நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர்.

3-வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள்.

4-புரவு வரித்திணைக் களத்தார் வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.

அரசின் வரி :

பாண்டியர் காலத்தில் வரியை இறை என்றழைத்தனர். இறை பெறுதல் முறை என்பது வழக்கத்திலிருந்து வந்தது. குடிகள் அரசனுக்கு நிலவரி கொடுத்தனர். விளைநெல், காசு, பொன் வரியாகக் கொடுத்தனர். ஊர்த் தலைவர்கள் மக்களிடம் பெற்று அரசிடம் அளித்தனர். தளியிறை, செக்கிறை, தட்டார்ப் பட்டம், இடைவரி சான்று வரி, பாடிகாவல், மனையிறை, உல்கு முதலான வரி முறைகள் இருந்தன. இறை, பாட்டம் என்பன வரியினை உணர்த்தும் சொற்களாகத் திகழ்ந்தன. தட்டார்ப் பாட்டம் கம்மாளரின் வரியாகும். நாடு காவலையே பாடி காவல் என்றழைக்கப்பெற்றது. ஊர்க்காவலிற்கு வாங்கிய வரியே இப்பெயர்பெற்றது. பாண்டிய அரசர்களுள் சில அரசர்களும் ஊர்க்காவலிற்குச் சென்றனர். பொற்கைப்பாண்டியன் இதற்குச் சான்றாக விளங்குகின்றான். வீட்டு வரியினை மனை இறை என்றழைத்தனர். கலத்தினும், காலினும் வரும் பொருள்களுக்கு வாங்கும் வரியே சுங்க வரி எனப்படும். உல்குவின் பொருள் இதுவேயாகும்.

நில அளவியல் :

ஊர்தோறும் உள்ள நிலங்களை அளந்து வரி விதிக்கப்பட்டது. பாண்டிய நாடு முழுவதும் அளக்கப்பட்டது. நாடு வகை செய்வோர் அளந்தனர். நிலத்தினை அளக்கும் கோல் 'சுந்தர பாண்டியன் கோல்' என்ற பெயரைக் கொண்டிருந்தது. 24 அடி கொண்ட தடியாகும் இக்கோல்.குடிதாங்கிக் கோலும் அளவு கோலாக புழக்கத்தில் இருந்தது. நிலங்களை குழி,மா,வேலி என்று பெயரிட்டு அளந்தனர். அளந்த நிலத்திற்கு எல்லைக் கல் நாட்டனர். இக்கற்களே புள்ளடிக் கற்களாகும். சிவன் கோயில்களிற்கு இடப்பட்ட நிலத்திற்கு திரிசூலக்கல் நடப்பட்டது. திருமால் கோயிலுக்கு இடப்பட்ட நிலத்திற்கு திருவாழிக்கல் நடப்பட்டது .நீர் நிலம் நன்செய் எனவும், மேட்டு நிலம் புன்செய் என அழைக்கப்பட்டது. நத்தம், தோட்டம் என்ற வழக்கும் புழக்கத்தில் இருந்தது.

இறையிலி :

இறைவன் கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை இறையிலி என அழைக்கப்பட்டது. சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலி தேவதானம் என அழைக்கப்பெற்று திருமால் கோயிலுக்கு அளிக்கப்பட்ட இறையிலிக்கு திருவிடையாட்டம் என்று பெயர். சைன, பௌத்த கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடை பள்ளிச்சந்தம் என அழைக்கப்பட்டது. அந்தணர்களுக்கு வழங்கப்பட்டது பிரமதேயம், பட்டவிருத்தி எனவும், மடங்களுக்கு வழங்கப்பட்டது மடப்புறம் எனவும் புலவர்களுக்கு முற்றூட்டும், சோதிடர்களுக்கு கணிமுற்றூட்டும் எனவும் கொடைகள் அழைக்கப்பட்டன.

அளவை இயல் :

எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய நான்கு அளவைகள் பாண்டியர் ஆட்சியிக் காலங்களில் புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன. எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும். பொன், வெள்ளி, கழஞ்சு, காணம் ஆகிய நிறை கற்களால் நிறுத்தனர், சர்க்கரை, காய்கறிகள், புளி ஆகியவற்றை துலாம், பலம் என்பவற்றால் நிறுத்தனர். சேர் மற்றும் மணங்காலும் நிறுக்கப்பட்டன. நெல், அரிசி, உப்பு, நெய், பால், தயிர், மிளகு, சீரகம், கடுகு ஆகியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி போன்ற முகக்கும் கருவிகளால் அளக்கப்பட்டன்.

நாணய இயல் :

பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் மன்னர்களின் பெயராலும், சிறப்புப் பெயராலும் நாணயங்கள் வெளியிடப்பட்டன. பொன், செம்பால் செய்யபட்ட காசுகள் புழக்கத்தில் இருந்தன. மீன் சின்னம் பொருத்தப் பட்டதாக வெளியிடப்பட்டது பாண்டியர் ஆட்சிக் கால நாணயங்கள்.

சீமாறன் சீவல்லபவன் - அவனிப சேகரன் கோளலிக என்ற பெயரில் நாணயம் வெளியிட்டான். இதற்குச் சான்றாக சிற்றண்ண வாசல் கல்வெட்டு விளங்குகின்றது. முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோணாடு கொண்டான் நாணயம் வெளியிட்டான் சீவல்லபன் "அவனிப சேகரன் கோளகை" என்ற பெயரில் வெளியிட்டான். 1253 ஆம் ஆண்டில் வீரபாண்டியன் "வாளால் வழி திறந்தான் குளிகை" என்ற பெயரில் நாணயத்தினை வெளியிட்டான். காசு என்பது ஒரு கழஞ்சு எடை உடையது 10 பொன் கொண்டது ஒரு காசு 10 காணம் - 1 கழஞ்சு ஒரு காணம் 4 குன்றி 'காசும் பொன்னும் கலந்து தூவியும்' என்ற தொடர் இதனை உணர்த்துகின்றது.காணம், கழஞ்சு, காசு, பொன் புறத்திலே வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

படை இயல் :

யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தேர்ப்படை போன்ற நால்வகைப் படைகளினையும் வைத்திருந்தனர் பாண்டியர். கொற்கை, தொண்டி துறைமுகங்களில் வெளிநாட்டுக் குதிரைகள் ஆண்டுதோறும் வந்திறங்கியது. ஆண்டுக்கு பதினாராயிரம் குதிரைகள் வந்தன என 'வாசப்' கூறியுள்ளான். மார்க்கோபோலோ "குதிரைகள் வாங்க மிகுதியான பொருளைச் செலவிடுகின்றனர்" என்று பாண்டியர்களைப் பற்றிக் குறித்துள்ளார். வாட்போர்வல்ல பெரிய காலாட்படை இருந்தது பாண்டியர் ஆட்சிக்காலத்தில்."பெரும் படையோம்"எனக் கையெழுத்திடும் குழு பாண்டி நாட்டில் இருந்தது. 'முனையெதிர் மோகர்' 'தென்னவன் ஆபத்துதவிகள்' போன்ற படைகளும் இருந்தன என கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

"கடி மதில் வாயிற் காவலிற் சிறந்த அடல்வாள் யவணர்"

சிலப்பதிகாரத்தில் வரும் இப்பாடல் வரியிலிருந்து உரோமாபுரிப் போர்ப் படை வீரர்கள் மதுரைக் கோட்டையைக் காத்திருந்தனர் என்று கூறுவதற்கிணைய அத்தகு வலிமையுடன் சிறப்புற்றிருந்தது பாண்டியர் படை என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகவியலும் தொழிலியலும் :

* பாண்டிய நாட்டில் கடைச்சங்க நாளிலேயே வணிகமும் தொழிலும் மிகச்சிறப்பாக இருந்தன. மதுரை, கொற்கை முதலான நகரங்களில் கிடைத்துள்ள உரோமாபுரி நாணயங்களே இதற்குச் சான்றாகும்.

* வெளிநாட்டு வணிகங்கள் சிறப்புற்றும் உள்நாட்டில் பண்டங்களை எடுத்துச் செல்வதற்கேற்ற பெருவழித் தடங்களும் இருந்தன. நாடு முழுதும் இச்சாலைகள் அமைந்திருந்தன.

* வணிகர்கள் கோவேறு கழுதை, மாட்டு வண்டிகளில் பண்டங்களை ஏற்றிச் சென்றனர். வழியில் களவு போகாமல் இருக்க காவற்படைகள் இருந்தன. வணிகர்கள் கூட்டமாகச் செல்வதனை வணிகச்சாத்து என அழைத்தனர். வணிகரில் சிறந்தோர் 'எட்டி' என்றழைக்கப்பட்டனர்.

* பாண்டி நாட்டு கொற்கைப் பெருந்துறையில் முத்துக்களும், சங்குகளும் பெருவாரியாகக் கிடைத்தன. கொற்கை முத்து உலகெங்கும் சென்றதும் குறிப்பிடத்தக்கது. இதற்குச் சான்றாக

"மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும்

கொற்கையம் பெருந்துறை முத்து" —(அகம்-27)

"பாண்டியன் - புகழ்மலி சிறப்பில் கொற்கை முன்துறை

அவர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து" —(அகம்-201)

இவ்விரு அகநானூற்றுப் பாடல்களும் கொற்கை முத்து பற்றிக் கூறுகின்றன. மேலும் மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும் இவ்வகைச்செய்திகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்வகைத் தொழில்கள் :

பாண்டிய நாட்டில் முத்துக் குளித்தல், சங்கறுத்தல், வளையல் செய்தல், உப்பு விளைவித்தல், நூல் நூற்றல், ஆடை நெய்தல், வேளாண்மை செய்தல், ஆடு, மாடு மேய்த்தல் போன்ற பல தொழில்களும் செய்து வந்தனர். மதுரையில் நுண்ணிய பருத்தி நூலினாலும், எலி மயிரினாலும், பட்டு நூலினாலும் ஆடைகள் நெய்யப்பட்டன எனச் சிலப்பதிகாரப் பாடல்வரிகளான இவ்வரி விளக்கும்.

"நூலினும்,மயிரினும்,நுழைநூற் பட்டினும்

பால்வகை தெரியாப் பன்னூல் அடுக்கத்து

நறும்படி செறிந்த அறுவை வீதியும்" —(சிலப்பதிகாரம் -ஊர்-205,207)

முத்து, பவளம், மிளகு, பலவகை பட்டாடைகள் மேனாடுகளுக்கு அனுப்பப்பட்டன. மேனாடுகளிருந்து குதிரைகளும், மது வகைகளும், கண்ணாடிப் பொருள்களும் கொற்கைத் துறைமுகத்திற்கு வந்திறங்கின. சுங்க வரியினால் ஆண்டுதோறும் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது. கப்பல்கள் திசைமாறாமல் இருக்க துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டு வணிகர்களும் யவனர்களும் (கிரேக்கர்களும்,உரோமர்களும்), சோனகரும் (அரேபியர்கள்), பாண்டிய நாட்டு மக்களுன் அன்புடன் பழகினர் என்பது குறிப்பிடத்தக்கது. வணிகத்திலும், கைத்தொழிலிலும் சிறந்து விளங்கிற்று பாண்டிய நாடு. பண்டைக் காலத்தில் தமிழகத்தின் பாண்டி நாட்டில் தான் வணிகமும்,வெளிநாட்டார் தொடர்பும் சிறப்புற்று இருந்தது.
 
கல்வி இயல் :

பாண்டிய நாடு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமையைப் பெற்றிருந்தது. புலமை நலம் சான்ற முடிமன்னர்களும் இருந்தனர். ஆண், பெண் இருபாலரும் கல்வி கற்றனர். கல்வியின் சிறப்பை நெடுஞ்செழியன் போல் யாரும் பாண்டியராட்சியில் கூறியதில்லை எனலாம் அதற்கு எடுத்துக்காட்டாக

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!

ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன்வருக என்னாது அவருள்

அறிவுடையோன் ஆறுஅரசும் செல்லும்!" —(புறநானூறு)

என்று புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்,

"பலர் புகழ்சிறப்பின் புலவர் பாடாது வளர்க என் நிலவரை"

என்று புறப்பாட்டில் பாடியுள்ளார்.

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக!"

என்றும்,

"கண்ணெனப் படுவது வாழும் உயிர்க்கு கல்வியே!"

என்றும் வள்ளுவர் கூறினார்.இவை அரங்கேற்றமானது பாண்டியரின் தமிழ்ச்சங்கத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. உடன்கட்டை ஏறிய பாண்டிமாதேவி புறம்பாடிவளாவாள். செல்வமும் ஒருங்கே பெற்ற இவள் பூத பாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு ஆவாள். பல்சான்றீரே என்ற புறப்பாடல் (246) அவள் புலமை காட்டும்.

"நகுதக்கனரே நாடுமீக் கூறுநர்" —(புறம்-72)

என்று பாடிய நெடுஞ்செழியன் கல்வியில் வல்லமை பெற்று விளங்கியிருந்தான். அகநானூறு தொகுப்பித்த உக்கிரப்பெருவழுதி குறிஞ்சி, வருதம் பாடுவதில் வல்லவனாக விளங்கினான். சங்க காலப் புலவர்களிலும் மேலாக கவிதை பாடிய பாண்டிய மன்னர்களும் ஆட்சி புரிந்தவர்கள் என்பதனை இவர்கள் மூலம் அறியலாம். பாண்டியர்களும் மதுரைத் தமிழ்ச் சங்கமும் தலைச்சங்கம் தொடங்கி கடைச்சங்கம்வரை தமிழ் எழுச்சியும், வளர்ச்சியும் பெற்றது. இன்றைய மதுரையில் பாண்டியர் கடைச்சங்கம் வைத்து தமிழை வளர்த்தனர்.

"கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடமர்ந்து

பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந்தமிழ்"

என்னும் பாடல் சான்றாகும். சிவனே பாண்டிய மன்னந்தான்,மீனாட்சியும் பாண்டியன் மகள் தான். "பாண்டிய நின் நாட்டுடைத்து நல்லதமிழ்" என்று அவ்வையார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. "வியாத தமிழுடையான் பல்வேல் கடல்தானைப் பாண்டியன்" என யாப்பருங்கல விருத்தி (229) கூறுகின்றது.

நல்லூர் நத்ததனார்,

"தமிழ்நிலை பெற்ற தாங்கருமரபின்

மகிழ்நனை மறுகின் மதுரை" —(சிறுபா-66-67)
என்று பாடியுள்ளார்.

"தமிழ் வையத் தண்ணம் புனல்" —(பரிபாடல் - 6 - வரி - 60)

என்று பரிபாடல் (பாடல்-6-வரி-60) கூறுகின்றது. செந்தமிழ்நாடு என்று பாண்டிய நாட்டை மட்டுமே இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பர் ஆகியோர் கூறியுள்ளனர். தொல்காப்பியம், திருக்குறள் அரங்கேற்றப்பட்டது இங்கென்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த்தொண்டெனில் அது பாண்டி மண்டலந்தானாகவிருந்தது. பாலாசிருயர், கணக்காயர் தமிழ் கற்பித்தனர். ஆசிரியர் புலவராகவும் இருந்தனர். குருவே தெய்வம் என்றனர். பாண்டிய நாட்டில் குலவேறுபாடு இன்றி கல்வி கற்றனர். கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது பாண்டிய நாட்டில் நிலவியது.

ஆன்மீக இயல் :

உமையாள் மதுரை மீனாட்சியாக வந்து பாண்டியன் மகளாகப் பிறந்தாள் என்றும் பின்னர் சோமசுந்தரப் பெருமானை மணந்தாள் என்றும் பாண்டி நாட்டை சோமசுந்தரர் ஆண்டார் என்று புராணங்கள் கூறும். பாண்டிய வரலாற்றினைக் கூறும் இலக்கிய நூற்களிலும் இவ்வாறு ஆட்சி செய்தார்கள் எனச் சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாண்டியர் ஆட்சியில் சைவ சமயமே தழைத்தோங்கியிருந்தது. ஆனாலும் வைணவம், சமணம், புத்த மதம் போன்ற பிற மதங்களும் இருந்தன. சிவன் கோயிலில் விண்ணகரங்கள், அருகன் கோட்டங்கள், புத்த பள்ளிகள் போன்றனவையும் அடங்கியிருந்தன. அனைத்து மதத்திற்கும் மதிப்பளிக்கப்பட்டிருந்தன. கோயில்களுக்கு நிபந்தங்கள், இறையிலிகள் விடப்பட்டன. பாண்டிய அரசர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், மேற்பார்வையில் கோயில்கள் கட்டப்பெற்றன. சங்க காலத்தில் சமயப் பூசல்கள் தோற்றம் பெறவில்லை. 17 ஆம் நூற்றாண்டு கால கட்டத்தில் சமயப் பூசல்கள் தோற்றம் பெற்றன. மன்னர்களும், அமைச்சர் மற்றும் அதிகாரிகளும் பிறந்த நாளில் கோயில்களில் விழா எடுத்து மகிழ்ந்தனர். அதற்கென நிலம் அளிக்கப்பட்டன. தேவாரம், திருவாய் மொழிகள் போன்றன ஓதப்பட்டன. இயல், இசை, நடனம், கூத்து முதலியன நடைபெற்றன. செங்கற் கோயில்கள், கற்றளிகள், செப்புத் திருமேனிகள் கல்படிமங்கள், அமைக்கப்பட்டு அணிகலன்களினை வழிபாடு செய்யத் தானம் செய்தனர். கோயில் வழிபாட்டுத் தலமாக அன்றி பொருள், பணம் சேர்த்து வைக்கும் இடமாகவும் விளங்கியது. கோயிலின் பொதுப்பணம் மக்களுக்குக் கடனாகக் கொடுக்கப்பட்டது. தினமும் கோயில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. புத்தகசாலைகள் கோயில்களில் அமைக்கப்பெற்றிருந்தன. கோயில் காரியங்களை ஊர் அவையோரும் அதிகாரிகளும் செய்தனர். கோயில் மற்றும் அறநிலையங்கள் திட்டப்படி நடக்கின்றனவா என கவனிக்கப்பட்டன. தவறுகள் இழைப்போர் தண்டனையும் பெற்றனர்.கோயிலில் அமைந்த கல்வெட்டுக்கள் வரலாற்று ஏடுகளாக அமைந்திருந்தன. கோயில் புதுப்பிக்கும் சமயம் படியெடுத்து வைத்துப் புதுப்பித்தனர். மீண்டும் அவை பொறிக்கப்பட்டன.

பாண்டியர் பழக்க வழக்கங்கள் :

மன்னன் மகன், பெயரன் என்ற முறையில் முடிசூடினர். சிங்காதனங்களுக்கு மழவராயன், காலிங்கராயன், முனையதரையன், தமிழ்ப் பல்லவராயன் என்று பெயரிடப்பட்டனர். அரசன் பிறப்பிக்கும் ஆணை திருமுகம், ஓலை மூலம் மக்களுக்கு அனுப்பப்படும். அரசர்கள் பிறந்த நாள் விழா நடத்தினர். போரில் இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதிரப்பட்டி என்ற இறையிலி நிலம் அளிக்கப்பட்டது. உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்துவந்தது. பாடிய புலவர்களுக்குப் பொன்னும், பொருளும் பரிசாக அளிக்கப்பட்டன. நீதி தவறாது செங்கோல் முறை கோடாது வழங்கப்பட்டன. நீதியை நிலைநாட்ட கை குறைத்தும், உயிர் கொடுத்தும் காத்தனர் சில பாண்டியர்கள். நீதி காக்க பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் கொடுத்தான். பொற்கைப் பாண்டியன் நீதிக்குத் தன் கையை வெட்டிக் கொண்டான். தினமும் மக்கள் குறைகேட்கும் வழக்கம் இருந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், பாராட்டும் செய்யப்பட்டன். காசுகள் வெளியிடப்பட்டன. பிறவிப் பெருங்கடல் நீந்த நாளும் இறைவனை வழிபட்டனர்.அறம் ஈகையாக, நீதியாகக் காக்கப்பட்டது. "மழை வளம் சிறக்க!மண்ணுயிர் வாழ்க! மன்னனும் வாழ்க!" என்று வாழ்த்தும் வழக்கமும் இருந்து வந்தது. இடுவதும், சுடுவதும் இறந்தோர்க்கு உண்டு!முன்னோடு வழிபடும் வடிக்கமும் இருந்திருந்தன. பாண்டியர் பண்பாட்டில்

"பன்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்"

என்று இலக்கணத்தினைக் கூறும் கலித்தொகை. பாண்டிய மன்னர்கள் பண்புடையவர்களாகவிருந்தனர் இதனை விளக்கும் சான்றாக

"பண்பட்டமென்மொழிப் பைந்தொடி மகளிர்"

எனச் சுந்தரபாண்டியனின் மெய்க்கீர்த்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்"

எனப் பாண்டிய மன்னன் ஒருவன் கூறுகின்றான்.இப்பாடல் வரிகளானது உதவி செய்தல் ஈதல் அறஞ்செய்தல் எல்லாம் பண்பாட்டின் கூறுகள் என விளக்குகின்றது.

"அவரவர் வேண்டிய அவரவர்க்கு அருளியவன்"

பராக்கிரம பாண்டியன் என அவன் மெய்க்கீர்த்திகள் கூறும் அளவிற்குப் பண்புடையவனாக இருந்தான்.இவ்வாறான பல நல்ல பண்புகளையுடைவர்களாக பல பாண்டிய மன்னர்கள் திகழ்ந்திருந்தனர்.

நன்றி : விக்கிபீடியா., தேவர் தளம் 


கணவா முருங்கைக்கீரைப் பொரியல்


தேவையானப் பொருட்கள்:

  • கணவா மீன் – 4
  • முருங்கைக்கீரை – கால் கப்
  • சோம்பு – அரை தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – அரை மேசைக்கரண்டி
  • உப்பு – அரை தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய் – 3 மேசைக்கரண்டி


செய்முறை:

கீரையை ஆய்ந்து சுத்தம் செய்துக் கொள்ளவும். கணவாவை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள்

அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பை போட்டு பொரிய விடவும்.


சோம்பு பொரிந்ததும் சுத்தம் செய்து வைத்திருக்கும் கணவாவை போட்டு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து 30 நொடிகள் வதக்கவும்.


பிறகு அதனுடன் ஆய்ந்து வைத்திருக்கும் முருங்கைக்கீரை, மிளகாய் தூள் மற்றும் உப்பு போட்டு 2 நிமிடங்கள் பிரட்டி விடவும்.


அதன் பின்னர் 2 நிமிடங்கள் கழித்து ஒரு தட்டை வைத்து மூடி 5 நிமிடங்கள் வேக வைக்கவும். இடையில் ஒரு முறை திறந்து கிளறி விட்டு மீண்டும் மூடி 8

நிமிடங்கள் வேக விடவும். மூடாமல் செய்தால் கணவா வெடிக்கும்.


8 நிமிடம் கழித்து கணவா பொரிந்ததும் ஒரு முறை கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.


இப்போது கணவா முருங்கைக்கீரை பொரியல் தயார்.
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com