ஓடாவி
தொண்டியில் ஓடாவி தெரு என்று ஒரு தெரு இருக்கிறது. அப்படியானால் இந்தப் பகுதியில் ஓடாவிகள் இருந்திருக்க வேண்டும். ஓடாவி என்பது ஒரு இனத்தின் பெயரோ அல்லது ஜாதியின் பெயரோ அல்ல. ஓடாவி என்றால் தச்சன் என்று பொருள். இவர்கள் அணைத்து விதமான மரவேளைகளையும் செய்யும் தச்சர்கள் அல்ல. மாறாக மரக்கலம் செய்யும் தச்சர்கள்.

இந்த மரக்கலம் செய்யும் தச்சர்கள் பயன்படுத்தும் ஒரு கருவியின் பெயர் ஓடாவி என்பதாகும். ஓடவிகளை கையாள தெரிந்தவர்கள் ஓடாவியார். இவர்கள் மென்மையான மரங்களையோ பலகைகளையோ கையாள்வதில்லை. மரச்சட்டங்கள் செய்து வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மர வேலைபாடுகள் நிறைந்த காட்சி பொருளை செய்கின்ற சிற்ப தச்சு வேலையோ தெரிந்தவர்கள் அல்ல. மாறாக மரத் தடிகளை கையாளுபவர்கள்.
இவர்கள் கையாளும் இந்த ஓடாவி கருவிகள் மரக்கலங்களின் பாகங்களைப் பொறுத்து அமைப்பிலும் அளவிலும் மாறுபடுகிறது,

ஒவ்வொரு பாகம் வடிவமைக்கப் படுகிற போதும் அதற்கேற்ப துணை வரைபடங்கள் மாறிக் கொண்டே இருக்கும். பாகம் பாகமாக இந்த மரக்கலங்களின் பகுதிகள் தனித் தனியே சிறிய அளவில் செய்யப்பட்டு தனியே வடியிமைக்கப் பட்ட பெருங் கூட்டுடன் பூட்டப்படுகின்றன. மரக்கலங்களின் வைகேற்ப்ப மரங்களை தெரிவு செய்வதிலும் இவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினர்.
- அன்றோ ரூபன்