Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Cottalango Leon, another Indian-origin technician, wins Oscar

The 44-year-old technician of Indian roots Cottalango Leon has been chosen for this year's Oscar for scientific and technical achievement.
The Indian-American has won the award under the 'Scientific and Technical Achievements' category for the design, engineering and continuous development of Sony Pictures Imageworks.
The academy award recognises the collaborative tool he and his two team members developed for Sony. Dubbed as "itview" the software makes review of movie segments by artists at various levels a lot easier during film making.
"It feels good. We started in 1996 and I was the main contributor for eight years. Often actors used to tell us they loved our product though commercial software is available," Mr Cottalango, a software engineer, told NDTV from Los Angeles.
Born in Tamil Nadu's Tuticorin district and belongs to bhararhar community, Mr Cottalango grew up in Coimbatore. He moved to the US to pursue his Masters in 1994.
There's excitement at his hometown Coimbatore. His mother L Rajam, a retired teacher, said: "It's a proud moment for us when the world recognises my son's contribution. We are ordinary people. Both me and my late husband were teachers."
Unlike the regular academy awards for films, awardees in this category would receive just a certificate.
The Academy of Motion Picture Arts and Sciences will present 10 scientific and technical achievements during its annual Scientific and Technical Awards Presentation on February 13.
The main Oscar Award ceremony will take place on February 28, 2016.

- Anto Ruban D'Almaida

கூரப்பாய்


பண்டைக் காலங்களில் இருந்தே காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தியே கடலோடிகள் கட்டுமரங்களை பாய் என்ற சாதனம் மூலம் கடலில் செலுத்தி மீன்பிடித்து வந்தனர்.இடிந்தகரை கடலோடிகள் பாயை "கூரப்பாய்" என்று அழைக்கின்றனர்.

பாய் தடித்த உறுதியான 21 மீட்டர் நீளமுள்ள மல் துணியை குறிப்பிட்ட வடிவில் வெட்டி தைக்கப்பட்டு செய்யப்பட்டது. இது கிட்டத்தட்ட முக்கோண வடிவில் இருக்கும்.இந்த துணியின் உறுதியை அதிகரிப்பதற்கும் அதிலுள்ள நுண் துளைகளை அடைத்து காற்றின் உந்து சக்தியை அதிகரிக்கவும் வாரம் தவறாமல் துவர்த் தண்ணீரில் ஊற வைப்பர்.


துவர்த் தண்ணீர் என்பது புளியங்கொட்டையின் மேல் தோடுகளை ஒரு பெரிய பானையில் நீரில் கொதிக்க வைத்து காய்ச்சி எடுத்த பழுப்பு நிற அடர்வு மிக்க திரவமாகும்.இந்த திரவத்தை ஆமை ஓடு அல்லது பெரிய பாத்திரத்தில் ஊற்றி மீன் பிடிக்கச் செல்லாத நாளில் ஓர் இரவு முழுவதும் பாய்த் துணியை ஊற வைப்பர்.

மறுநாள் அதனை வெயிலில் உலர்த்தி, பாயின் ஓரங்களில் பிறையப்பட்டிருக்கும் கண்ணிகளை வலுவான கயிறு கொண்டு பருமல் எனப்படும் மூங்கில் அல்லது தேக்கு களையில் கட்டி கட்டுமரத்தின் அணியத்தில் உள்ள வாரிக்கலில் பொருத்தி பயன்படுத்துவர்.இப்படி கட்டப்படும் கூரப்பாய் காற்றைத் தடுத்து,காற்றின் திசைக்கேற்ப கட்டுமரத்தை ஓடச் செய்கிறது

தற்போதைய பிளாஸ்டிக் கட்டுமரங்களில் மல் துணிப்பாய்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் இழைகளினாலான பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. துணிப் பாய்களைப் போன்று இவற்றை துவர்த் தண்ணீரில் ஊறவைக்க வேண்டிய தேவை இல்லை.

சுறா மீன் சிப்ஸ்

தேவையானவை:

  • உருளைகிழங்கு--4
  • ஆலிவ் ஆயில்-2
  • உப்பு
  • மிளகு பொடி
  • 500கிராம் சுறா மீன்
  • எண்ணெய்

செய்முறை:




  • முதலில் உருளைகிழங்கை நீளவாக்கில் தடிமனாக வெட்டிகொள்ள வேண்டும்

  • அதன் மீது ஆலிவ் ஆயிலை தடவ வேண்டும்.உப்பு மற்றும் மிளகு பொடியை உருளைகிழங்கின் மீது தூவ வேண்டும்
  • எலுமிச்சை பழத்தை சாறு வெளியில் விழும்படி கட் பண்ணி வைத்து கொள்ள வேண்டும்
  • சுறா மீனை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் எண்ணெய் விட்டு மீனையும் உருளைகிழங்குகளையும் சேர்த்து வறுத்து சாப்பிடால் சுவையாக இருக்கும்.
  • எலுமிச்சை சாறு விட்டு சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.

THE BATTLES OF VEDHALAI – Fr . ANTHONY CRIMINALI S.J. —THE PARAVA CONNECTION.


Vedhalai , for the information of those who do not know its location, is situated West of Mandapam camp and North East of Kilakkarai in the Gulf of Mannar on the main road from Madurai to Rameshwaram. It is a very small coastal village, with considerable Muslim population. It has a central school mostly for the children of the officials of CMFRI, Coast Guard, Indian Navy and locals. It has a vast stretch of beautiful white sanded beach – still unexplored commercially by any charlatan. The village is also a house for ponies and horses and some of the horses dance to the tunes of latest cine music. I used to wonder, how on earth horses came to this arid piece of land. I used to muse that these must have been distant descendents of the Arabian horses brought by the Moors for the Vijayanagar empire. May be correct also.

The Portuguese in the sixteenth century selected Vedhalai as a check post –as it was a strategic point for them– to keep a watch over the ships that would carry commercial goods to Siam, Bengal, Ceylon, Coramandal coast, and Pegu. They would not allow anyone to pass Vedhalai without paying taxes to them as they had introduced the system of CARTAZES – a sort of passport for any vessel to sail past. To station their troops and servants they with the permission of Paramakudi Nayak established a temporary mud Fort. Perhaps this was the first Fort of the Portuguese in the Tamil coast.
The presence and authority they exercised over the seas and the vessals were not to the liking of sailors of Kilakkarai and they in the company of Zamorin of the western coast murdered Joa Floares, the Portuguese captain who was friendly to the Paramakudi Nayak.

Their second attempt to divest the Portuguese of their control of Vedhalai was with the help of Zamorin and this was foiled by Alphonso de’souza the Portuguese captain in January 1538.

The Zamorin who could not brook the defeat of his forces at the hands of Portuguese who were after all aliens in this land, sent a formidable force along with the forces from Ceylon; and the massive forces were given a severe drubbing by Alphonso once again on 28 th February 1538 .

Having established firmly at Vedhalai and having vanquished the Kilakkarai rivals and their western and southern supporters, the Portuguese virtually became the lord of the Vedhalai seas and paid no tax or obeisance to the Vijayanagar empire, the ruling empire of those days.

The Vijayanagar empire did not take this defiance lightly. To cut them to size, they sent a very strong army of more than 6000 soldiers and attacked the Vedhalai settlement in 1549. There were only fifteen Portuguese when they came down like wolf on the fold, the rest having fled.

In 1553, again the Kilakkarai rivals of Portuguese, to wrest control of the sea and its passage , attacked the Portuguese stationed at Vedhalai. The Portuguese forces under the fleet commander of Kochi Gill Fernandez de Carvalho attacked the Kilakkarai rivals at Kilakkarai itself and in a fierce battle defeated them . In the attempts of the Portuguese to keep the Kilakkarai rivals under subjugation solid support was given by Thumbichhy Nayak of Paramakudi who himself was a rebellious vassal of Vjayanagar empire. He was divested of his Seemai by the Empire for this act of betrayal.

With the deprivation of Paramakudi Seemai, and with its re- assignment to a votary, the tax imposed and collected from sea was sent to Vijayanagar empire. But the Portuguese who collected Tax by their system of Cartaaz demurred. This considerably irritated the Vijayanagar empire and its local governor at Madurai.

Further the Portuguese started demanding tax from the pilgrims to the Ramanathaswamy temple. The demand for the tax imposed on the pilgrims along with the irritating presence of the Portuguese on the way to the temple considerably reduced the number of pilgrims affecting the income to the temple priest who made complaints to the Governor of the Vijayanagar empire at Madurai about the tax.

The Governor who felt offended by this act ordered Vithalaya Naik to march on Vedhalai and decimate the encampment. The Kilakkarai rivals also joined them .
The Portuguese could not sustain themselves against this attack. They went and took shelter in Vallai Tivu and Anaibar islands. The fort was razed to the ground and the trenches around were filled to the brim. They destroyed all the ships anchored in the sea.

An Italian Jesuit missionary by name Antonio Criminali who lived and preached among these Portuguese and fishermen was way laid, stabbed and killed on the spot . His head was severed and held up on a post. His body was recovered the day after this murder, and buried but none is able to decipher where exactly, in the beach. The Portuguese deserted this place there after never to return. But yet, they wormed their way to Kilakkarai thereafter and did pearl fishing.

Fr. Antonio Criminali, a Jesuit was a contemporary of Fr. Francis Xavier. He was appointed by Fr. Francis Xavier as the superior of priests, in the coast up to Kanyakumari. He was preaching and acting as spiritual father among the Portuguese and coastal fishermen and in fact did not fully agree with the Portuguese officials in estranging the pilgrims to Ramanathaswamy temple. There is a small church at Vedhalai where his picture is prominently displayed with a lancer piercing his breast and announcing his age at the time of his martyrdom as only 29. (1520—1549).It is 464 years since he made his supreme sacrifice in Vedhalai.

They are celebrating his memory on 25 th May 2013 at Vedhalai.
The battle in which Fr. Antonio Criminali was killed is well described by Fr.J.P.Tehsal S.j.(the original written in 1905 could not be got. But I have the translation brought out in 1905 by St. Joseph’s college press which has been republished by Fr.Arul Santiago parish priest of Vedhalai) . It reads as follows::–‘’

வேதத்துக்காகக் கொலையுண்டு மரிக்கிறார்.

வேதாளையிருந்த ஸ்திதியைக் கண்ட சத்ருக்களோ, அதில் இருக்கப்பட்ட போர்த்துக்கீச் சேவகர் வெகு சொற்பமென்று சண்டைக்கான சாமான்கள் அவர்களுக்குக் கிடையாதென்றும் தீடீரென அவர்களைப் பலமாய்த் தாக்கினால், தங்களை எதிர்த்துப் போராட வல்லவர்கள் அல்ல என்றும் பார்த்து, உடனே அங்கே வந்து தாணையம் போட்டிதிருந்த மதுரைத் தேசாதிபதியாக நாயக்கரின் பட்டாளத்தை தங்களுக்கு உதவியாகத் தேடி, ஈட்டித் துப்பாக்கி முதலிய ஆயுதங்கள் அணிந் திருந்த சேவகர் உத்தேசம் ஐநூறு அல்லது அறுநூறு பேரடங்கிய படை வகுப்பு ஒன்றைத் தயார் பண்ணினார்கள். பின்னும் இவர்கள்எல்லோரும் போர்த்துக்கீசரால் தங்கள் தெய்வத்துக்குச் செய்யப்பட்ட நிந்தைக்குப் பழிவாங்க வேண்டுமென்று உக்கிரமமான ஆவல் கொண்டவர்களாய் முந்த முந்த வேதாளைக்குப் போய் அங்கிருந்து சேது அணைச் சென்று, போர்த்துக்கீசரால் வெட்டிவிடப்பட்ட கால்வாயை அடைக்க வேண்டுமென்பதாய்த் தீவிரித்துப் புறப்பட்டார்கள்.

சேனாதிபதியும், சத்துருக்களின் வலிமையை அறிந்தவனாய் இனி அங்கிருப்பது கன ஆபத்தென்று கண்டு தாமதமின்றியே தானும் தன் சேவகரும் புன்னைக் காயலில் இருந்து கப்பல்களில் ஏறித் தப்பிப் பிழைப்பதை விட, வேற வழியில்லை என்று தீர்மானித்து ,எளிதாய்க் கப்பல்களில் ஏறிக் கொள்ளும் படியாகக் கடற்கரையை அடுத்துப் போய் விட்டான்.

அப்பொழுது வேதாளையில் இருந்த அந்தோனி கிரிமினாலி என்ற குருவானவர் கொஞ்சத்துக்கு முன் மனம் திரும்பின புதுக் கிறிஸ்துவர்களுக்குப் புத்தி போதனை சொல்பதில் வெகு முயற்சியாய் இருந்தார். இதோ, சேனாபதியும் அவனோடு இருக்கப்பட்ட நாற்பது சேவகரும் போய்விடுவார் களேயாகில் , சுதேசக் கிறிஸ்துவர்களை அக்கியானிகள் பலவாறாக உபாதித்து, இன்னும் அவர்க்ளைக் கொல்லவே கூடுமேயென்னு யோசித்துப் பார்த்து, அருளப்ப பெர்னாந்தஸ் கொர்ரேயா என்ற சேனாதிபதியுடம் சென்று

“ஓ! துரையே! இச்சமயத்தில் நீரும் உமது சேவகரும் இவ்விடத்தை விட்டு அப்புறப்படுவது சரியல்ல. சத்துருக்களுடன் நேரத்தோட சமாதான உடன்படிக்கை செய்து கொள்வதே உத்தமம்”

என்றுரைக்க, சேனாதியானவன்,

“சுவாமீ, இந்தக் சனத்துடனே சமாதானம் பேசுவது எனக்கு யோக்கியமாகுமோ!” என்று சொல்லி, “தேவரீர் உயிர் பிழைக்க வேண்டுமானால், என்னோடு கப்பல் வந்து சேரும். இல்லாவிட்டால் உமக்கு உயிர் சேதம் வருவது தப்பாது” என்று குருவானவரைத் தன்னோடு வர மன்றாடினான்.

இவ்வார்த்தைகளைக் கேட்கவும், நமது பரிசுத்த அப்போஸ்தலர் மிகவாய்த் துக்கித்து, *“நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் உயிரைக் கொடுப்பான்”*, என்று கர்த்தர் திருவுளம் பற்றிய சொற்களை நினைவு கூர்ந்து சேனாபதியை நோக்கி:

“துரையே, உமது விருப்பப்படி நான் நடப்பது கூடாது. கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுப்பாருண்டோ! நான் இதுவரையிலும் அவ்வளவு அன்பாய் விசாரித்து வந்த இக்கிறிஸ்தவர்களை, ஆபத்தான இவ்வேளையில் விட்டுப் பிரிவேனேயாகில், அவர்கள் தாயற்ற பிள்ளைகளும், மேய்ப்பனற்ற ஆடுகளுமாய்த் தவிப்பார்களே! இது எப்பேர்க்கொத்த பரிதாபம்! என் ஞான மக்களைப் பாதுகாப்பில் நான் செத்தாலும் சாவேனெயொழிய ஒரு போதும் அவர்களை விட்டுப் பிரியேன்.” என்று சேனாபதியோடு கப்பலில் ஏறிப் போகச் சம்மதித்தவரல்ல. 

ஆனால் கிறிஸ்தவர்களில் எத்தனை பேரைக் கப்பலில் ஏற்றிக் கொண்டு போகக் கூடுமோ, அவ்வளவு பேரையும் விஷேசமாய்ப் பெண் பிள்ளைகளையும் கப்பலில் எற்றிக் கொண்டு போகத் துரையிடம் கேட்டுக் கொண்டார். என்றாலும், கப்பல்களில் ஒரே தடவையில் ஜனங்களை எற்றி விடப் படகு தோணிகள் சிறியவைகளாகவும் பூச்சியமகாவும் இருந்த படியினால் கொஞ்சம் பேருக்கு மாத்திரம் இந்தச் சகாயம் கிடைத்தது.

இவ்வண்ணமே கடற்கரை ஓரத்தில் பேசிக் கொண்டு அவதியவதியாகச் சனங்களைக் கடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் சத்துருக்கள் அங்கே சேர்ந்து ,போர்த்துக்கீசரை நோக்கிச் சில துப்பாக்கி சுட்டதில், மூன்று பேர் செத்தும் , மூன்று பேர் கடும் காயக்பட்டும் விழ்ந்தார்கள். அந்தோனி கிரிமினாலி என்ற குருவானவரை எங்கும் பின் சென்று வந்திருந்த *பரத குலத்தவரான* உபதேசியாரும் அபாயமான தருணத்தில் தன் நேச குருவை விட்டுப் பிரிய மனம் சகியாமல், அவர் கிட்ட நின்று கொண்டிருக்கும் போது துப்பாக்கிக் குண்டு தைத்துக் கீழே விழுந்து மரித்தார். போர்த்துக்கீஸ் சேவகரும் அக்கியானிகளோடு வெகு வீரியமாய்ப் போராடி அநேகரைச் சுட்டு விழத்தாட்டி யிருந்தாலும், கையில் இருந்த மருந்துகளெல்லாம் செலவாகிப் போக, சத்ருக்கள் கூட்டமும் வர வர அதிகரிக்க, அவர்களே எதிர்த்துத் தாக்க வகையின்றி, பின்னிடைந்துபோய்த் தங்கள் கப்பல்களில் ஏறி, ஆபத்துக்குத் தப்ப நடுக்கடல் சென்றார்கள்.

இப்படியிருக்கச் சத்ருக்கள் வெகுவாய் இரைந்து வெகு மூர்க்கத்துடன் புதுக்கிறிஸ்துவர்களைத் தாக்க அவர்களில் அநேகர் கடலில் பாய்ந்து, அந்தக் கடலில் அங்குமிங்கும் இருக்கப்பட்ட சிறு தீவுகளிலேயாவது போய்ச் சேர்ந்து உயிர் பிழைக்கலாமென்று பார்த்ததில் நீச்சல் தெரிந்தவர்கள் நீங்கலாக, மற்றவர்கள் தண்ணீரில் அமிழ்ந்த மடிந்தார்கள். அநேகர் கோப வெறி கொண்ட அக்கியானிகளால் கொல்லப்பட்டார்கள்.

ஆனால் அந்தோனி கிரிமினாலியென்ற குருவானரைக் கண்ட சத்ருக்களில் முதல் இரு கூட்டத்தாரும், அவரை ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள். ஆயினும் அவர் முழங்காலில் இருந்து இரு கரங்களையும் விரித்து, வானத்தை நோக்கித் தமது கண்களை உயர்த்தி வெகு உருக்கமாய்ச் செபம் செய்து கொண்டு தமது மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த சத்ருக்களின் மூன்றாங் கூட்டத்தார் சத்தியவேதக்குருவாகிய இவர் மட்டில் தங்கள் நிஷ்டூரத்தையும் பகைவராக்கியதையும் காட்டத் துவக்கினார்கள், அதெப்படியென்றால், ஓர் ஈட்டியால் அவர் விலாவின் இடது பக்கத்தில் குத்த அக்காயத்தில் இருந்து அவர் திரளாய் இரத்தம் சிந்தினார். கொடும்புலிகள் நடுவே சிக்கின செம்மிறிப்புருவைக்கு ஒப்பாய் இத்துஷ்டர்கையில் அகப்பட்டவர், தாம் அன்று காலையில் திவ்விய பூசைப் பலி ஒப்புக் கொடுத்துவிட்டு வந்திருந்த வேதாளைக் கோவிலில் போய் மரிக்க ஆசை கொண்டு, எழுந்து சற்றுத் தூரம் நடந்து போக, இரும்பிலும் கொடிய துஷ்டர், மீளவும் அவர் நெஞ்சில் வலுவாய்க் குத்த, ஈட்டியும் நெஞ்சில் பாய்ந்து, அதைவிட்டு வராமல் இருக்க, இதோ அவர் குப்புற விழுந்தார். வேத விரோதிகளும் அவர்மேல் விழுந்து அடித்து உபாதித்து, அவர் அணிந்திருந்த உடுப்புகளையும், இரத்தத்தால் நனைந்து சிகப்பாயிருந்த அவர் உட்சட்டையுந்த தானே பறித்துக் கொண்டார்கள். ஆனால் கர்த்தரின் விஷேச கருணையால் அவர் கால் சட்டை மாத்திரம் மரியாதையாக விடப்பட்டது.

குருவானவரும் சொல்லிடங்கா வலி வேதனை அனுபவத்திருந்தும் கோவிலில் போய்ச் சேர்ந்து அங்கே உயிர் விடும் ஆசையால், இன்னும் ஒருவிசை எழுந்து நடக்கக் கொஞ்சம் பிரயாசைப்பட்டு பார்க்கையில், மகா நிஷ்டுரனான ஒருவன் ஈட்டியால் மூன்றாம் விசையாக அவர் விலாவின் வலது பக்கத்தில் பலமாய்க் குத்த ,இதோ! தாம் நினைத்த இடம் போகுமுன் . இருந்த இடந்தானே விட்டு அசையக் கூடாதவராய்ப் போனார். இதைக் கண்டும் சற்றேனும் மணமிளகாத அந்தச் சண்டாளன். ஆ! கொடூரமே! ஓர் வாளை எடுத்து ஓங்கி பரிசுத்த வேதசாட்சியின் தலையை வெட்டினான்.

இதோ! அந்தோனி கிரிமினாலி என்ற குருவானவர் தாம் அவ்வளவு காலம் ஆசித்து வந்த பலியும் இன்றைக்கு நிறைவேறலாயிற்று! ஐயோ! அவ்விடத்துக் கிறிஸ்துவர்களும் அவ்வளவு சீக்கிரம் தங்கள் அருமைத் தந்தையை இழந்த பிரலாபத்துக்குரிய குழந்தைகள் போலுமானார்கள்.

ஆயினும் சிலாபத்துறை பக்கத்தில் உண்டாகத் துவக்கின திருச்சபையில் அதின் விசுவாசத்துக்குரிய சாட்சியாக இக்குருவானவர் மாத்திரமல்ல. *ஆனால் அவரோடு கூட சுதேசிக் கிறிஸ்துவர்க்ளில் அநேகரும் உயிரிழந்தார்களாமே*.

இவர்களோ தங்கள் பரிசுத்த அப்போஸ்தலர் ஏவுதலினால் சர்வேசுரனுக்காக உயிர் கொடுத்தார்கள். கருத்தே ஒருவனே வேதசாட்சிகள் என்பதற்குச் சந்தேகமேயில்லை. *இது சுதேச கிறிஸ்துவர்களுக்கு எவ்வளேவா மேலான மகிமை! விஷேசமாய் பரதக் குலத்தோரான கிறிஸ்துவர்களே, உங்கள் குல உபதேசியார் தன் குருவின் பாதத்தில் வேதத்துக்காகக் கொல்லப்பட்டு மரிக்கும் பாக்கியம் பெற்றீர்களாதலால் உங்களுக்கு வாழி, வாழி!*

இது நிற்க இப்பேர்க்கொத்த சங்காரத்துக்குப் பின் அக்கியானிகள் போர்த்துக்கீசர் கடற்கரையை அடுத்துக் கட்டியிருந்த சொற்பக் கோட்டைக்கு முன்பாக வண. அந்தோனி கிரிமினாலி என்ற குருவானவரின் சிரசையும், இரத்தத்தில் தோய்ந்திருந்த அவர் உட்சட்டையையும் ஓர் கம்பத்தில் கட்டித் தொங்க வைத்திருந்தார் களென்று, நமது வேத சாட்சியின் காலத்தில் உயிரோடு இருந்தவர்களான ஆறு குருக்கள் கோவாப் பட்டணத்து மேற்றிராணியாருக்கு எழுதியிருக்கிறார்கள். மேலும் குரூர குணமுள்ள அந்த அக்கியானிகள் அங்கே கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த வேத சாட்யின் திருச்சிரசை யெடுத்து, தாங்கள் கொண்ட திருச்சிரசையெடித்து, தாங்கள் கொண்ட வெற்றிக்கு அடையாளமாகவும், தங்கள் தெய்வத்துக்கு நன்றியறிந்த தோத்திரமாகவும் பெரிதான தங்கள் கோவிலுக்கு கொண்டு போனார்கள் என்று முன் சொன்ன ஆறு பேரில் ஒருவராகிய சங்.சீப்பிரியானியென்ற குருவானவர் வரைந்திருக்கிறார்.

இவ்வாறே வண. அந்தோணி கிரிமினாலி என்னும் குருவானவர் சத்திய வேதத்துக்காக இரத்தம் சிந்தி, சேசு சபையின் முதல் வேத சாட்சியானது 1549-ம் வருஷ்ம் மே மாதக் கடைசி அல்லது ஜீன் மாதத் துவக்கத்திலேயாம்.

Since many of our distant cousins were felled in battles of Vedhalai, some along with Father Criminali, Vedhalai has a special place in Parava History

by A.X Alexander

இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும்

Rare book collection
இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும்
ஆசிரியர் சி. பத்மநாதன் வெளியீட்டாளர் குமரன் புத்தக இல்லம்
வெளியீட்டாண்டு 2001

இசைத் தொகுப்பு - 5

வேம்பாற்றுவாசிகளின் பாதுகாவலாரம் சந்த செபஸ்தியார் பேரில் பாடலுக்கான இசைத் தொகுப்பு - 5


சிறந்த ஞாலம் தனில் வேத சாட்சியாம் ........

AN ACCOUNT OF THE PEARL FISHERY COAST OF CEYLON

Rare Collection

AN ACCOUNT OF THE PEARL FISHERY COAST OF CEYLON

BY:
JAMES STEUART


Download

மாசி தொக்கு !!!




தேவையான பொருட்கள்:

மாசித்தூள் - 3 டீஸ்பூன்


பெரிய வெங்காயம் - 100 கிராம்

பழுத்த தக்காளி - 100 கிராம்

பச்சை மிளகாய் - 1

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய் -ஒரு குழிகரண்டி

கடுகு,உளுந்து - தலா அரைடீஸ்பூன்

கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது

உப்பு - தேவைக்கு


செய்முறை:

மாசி கருவாட்டு துண்டை அம்மியில் பொடித்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியையும் பச்சைமிளகாயும் நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகுளுந்து சேர்த்து வெடிக்கவிடவும்.

பின்னர் கறிவேப்பிலை பச்சைமிளயா சேர்த்து நன்கு பொரிந்து வந்ததும் வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி போல் வந்ததும் மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வெந்ததும் மாசித்தூள் மற்றும் அரை டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து பிரட்டவும். உப்பு சரி பார்த்துக்கொண்டு ஒரு சேர தொக்குபக்குவம் வந்ததும் இறக்கவும்.

சாத வகைகளுடன் சாப்பிட அருமையான சைட்டிஸ்.

நன்றி: சமையல் எக்ஸ்ப்ரஸ்.

கடற் படையின் கப்பல்கள்






கடற் படையில் உபயோகப் படுத்தப்படும் கப்பல்கள் பல வகைப்படும். அவைகள் ;
  • ரோந்துக் கப்பல்.(CRUISER)
  • நாசகாரி (DESTROYER)
  • விமானம் தாங்கிக் கப்பல்.(AIRCRAFT CARRIER.)
  • நீர் மூழ்கிக் கப்பல்.(SUBMARINE)
  • கண்ணிவெடிப் படகு.(TORPEDO BOAT)
  • கொடிக்கப்பல் அல்லது தளபதிக் கப்பல் (FLAG SHIP)
  • கட்டளைக் கப்பல்.(COMMAND SHIP)
  • ஓர் அடுக்கு பீரங்கிக் கப்பல்.(CORVETTE)
  • வேவுக்கப்பல்.(PATROL VESSEL)
  • கண்ணிவெடி வைக்கும் கப்பல்.(MINE LAYER)
  • துணைக் கப்பல் அல்லது ஊழியக் கப்பல்.(TENDER)
  • கண்ணிவெடி ஒழிப்புக் கப்பல்.(MINE SWEEPER)
  • பீரங்கிப் படகு.(GUN BOAT)
  • படை வீரர்களை இறக்கும் கப்பல்.(LANDING SHIP)
  • கப்பலை இழுத்து செல்லும் இழுவைக் கப்பல்.(TUG)
  • காவல் கப்பல்.(GUARD SHIP)

சந்த செபஸ்தியார் பேரில் விருத்தாப்பா

வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின்
எழுத்தோவியத்தில் உருவாகிய 
சந்த செபஸ்தியார் பேரில் விருத்தாப்பா



வரத்தினால் உயர் மாதவனே உனை

வண்கணாளர் வளைந்து வளைந்து கூர்ச்

சரத்தினால் எய்ய உன் திருமேனியில்

தைத்த அம்புகள் தாம் எங்கள் காவலாம்



வருத்தமாக வரும்பிணி கொள்ளைநோய்

வந்தடர்ந்து வலிமை செய்யாமலே

துரத்துவாய் சந்த செபஸ்திய நேயனே உன்

துணைப் பதத்தில் அடைக்கலம் நாங்களே!

MANUAL ON PEARL CULTURE TECHNIQUES

Rare Book Collection

MANUAL ON PEARL CULTURE TECHNIQUES

K. ALAGARSWAMI AND S. DHARMARAJ

Prepared by:

CMFRI SPECIAL PUBLICATION
Number 20
October 1984
CENTRAL MARINE FISHERIES RESEARCH INSTITUTE
INDIAN COUNCIL

Download link

மீன் எண்ணெயின் மருத்துவக் குணம்


உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும். அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.

மீன் எண்ணெய் என்றால் என்ன?

இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.

இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.

எதற்கு சாப்பிட வேண்டும்?

இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.
மீன் எண்ணெய் rickets & tuberculosis நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. தீக்காயங்கள் மற்றும் புண்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். 

மீன் எண்ணெயில் cods, halibut, shark liver oil என்று பல வகையுண்டு. 

மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரத்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. 

வேம்பாற்றுறையின் பெருவிழா அழைப்பிதழ்

எழு கடற்றுறையின் முதற்றுறையாம் வேம்பாற்றுறையினை 


"பாதமலர்க் காவல் தந்து ஏதமறவே புரந்து காக்கும்" 


ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் மகோன்னத பெருவிழாவானது வரும் 11.01.2016 அன்று மாலை 6.30 மணியளவில் திருகொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பாதுகாவலரின் மகோற்சவ நகர்வலப் பவனியானது 19.01.2016 இரவிலும் 20.01.2016 அதிகாலையிலும் நடைபெறுகிறது.

மகா ஆடம்பர பெருவிழா திருப்பலியானது 20.01.2016 அன்று நண்பகல் 11.30 மணியளவில் நடைபெருகிறது.

ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலைமுடி 20.01.2016 அன்று இரவு முத்தி செய்ய தரப்படும்.

இவ்விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு பாதுகாவலரின் அருகிருப்பினைப் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


அழைப்பில் மகிழும் 

வேம்பாற்றுவாசிகள் 

Remarks on the Origin and History of the Parawas


Rare Collection

Remarks on the 
Origin and History of the Parawas


By:Simon Casie Chitty

The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland
Vol. 4, No. 1 (1837), pp. 130-134

எழுகடற்றுறை நாயகியை நோக்கி பாடல்


ஏழுகடற்றுறை நாயகியே



நீ தந்த நாவு கொண்டு நின்புகழ் பாடுவேன்

நிர்மல சுதனே என் தேவனென்று – நீ

சொன்னதால் நானும் திருமுழுக்குப் பெற்றேன்

நானூற்றேண்பதாண்டு கத்தோலிக்க மரபு



தாயை மறந்திருக்கும் குழந்தைகள் குவலயத்திலுண்டு

சேயை மறந்த அன்னையும் அவனியிலுண்டோ?

நீயே எமை மறந்தால் நிலையெமக் கேதம்மா?

நோயோடு நொடியும் வறுமையும் தானம்மா.



நித்தம் உனை நினைந்து நியமமுடன் வாழ

சுத்த மனநிலையும் செல்லும் செயலும் ஈந்து

சுற்றும் பலபிணிகள் தொடரா தருள் புரிவாய்

சத்தியமாய் சரித்திரமாய் விளங்கும் பனிமயமே!



பென்னம் பெரிய திருமந்திர நகரோடு நிம்பையும்

புன்னையாபதிகாயலும் மணவை ஆலும்

தென்வீரபாண்டிய பட்டணத்தோடு செந்துரும்

சேத்துப் பாரும் திகழ் ஏழுகடற்றுறை நாயகியே!

அமலோற்பவத் தாயார் மீது அகர குற்றுயிர் மடக்கு வெண்பா

வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்களின் எழுத்தோவியத்தில் அமலோற்பவத் தாயார் மீது அகர குற்றுயிர் மடக்கு வெண்பா


ககன பரம கரம மரப
வகன லகல மகத வகன
வபல சனன வரச மரப
கமல சரண மபய


பொருள் :
விண்ணாட்டின் பரமனாகிய கடவுளின் திருக்கரத்தில் அமர வரம் பெற்றவளும், பாவக் கனலாகிய நரக ஆக்கினை ஒழியும்படி மகாதவத்தின் மேன்மையைக் கொண்டு அமல உற்பவமாய் அவதரித்தவளும், அரச குலத்தவளுமாகிய தேவ தாயின் தாமரை மலரையொத்த திருவடிகள் எனக்கு அடைக்கலம். 

ரிஜினா செலி


ரிலிக் என்று ஆங்கிலத்திலும் ரிலிக்யூயா என்று போர்த்துக்கீசிய மொழியிலும், அருளிக்கம் அல்லது திருப்பண்டம் என்று தமிழிலும் கூறப்படுவது, புதுமை வரம் கொண்ட புனிதர்களின் பொருட்கள் அல்லது அவையவங்களை குறிக்கும் சொல். ஏசுகிறிஸ்துவின் திரு உடல் விண்ணகம் சென்று விட்டாலும், அவர் இவ்வுலகில் விட்டுச் சென்ற முழுநீள அங்கி, திருமுகம் பதிந்த துணி, திரு இதயத்தை குத்திய ஈட்டி, கல்லறையில் அவரை மூடி இருந்த போர்வை, அவர் திருக்கரங்களையும், கால்களையும் துளைத்த ஆணிகள் இவற்றிற்கெல்லாம் வரலாறுகள் உண்டு. அவர் மரித்த திருச்சிலுவை சிறு சிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு, உலகின் பல ஊர்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில், வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. மணப்பாடு திருச்சிலுவை ஆலயத்தில் உள்ளது போல, நம் அன்னையின் ஆலயத்திலும், மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பொன்மயமான ஒரு பாத்திரத்தில், திருச்சிலுவையின் சிறு துண்டு ஒன்று உள்ளது என்பது அநேகர் அறியாத உண்மை. 

அதைப்போன்று மற்றுமொரு உன்னதமான அருளிக்கம் இருப்பதும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 15-ம் நூற்றாண்டில், கீழ்த்திசை நாடுகளின் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு, பரிசுத்த பாப்பரசரின் ஆணையின்படி போர்த்துக்கீசிய மன்னரே ஞானாதிக்கம் படைத்தவராய் இருந்தார். அதே காலகட்டத்தில், இங்கே கொடுங்கோல் நாயக்க, வடுக, மன்னர்களுக்கும், பட்டாக்கத்திகளுடன் குலை நடுங்கச் செய்த மூர் இன துலுக்கருக்கும் இடையில் சிக்கி, சீரழிந்து கொண்டிருந்த முத்துக்குளித்துறை பரதவர் இனத்தை கைகொடுத்து காப்பாற்றியதும், பரிசுத்த பனிமயத்தாயை முத்துக்குளித்துறையின் ஏக அடைக்கலத்தாயாக பிரகடனம் செய்ததும், மற்றும், சத்தியமறையில் உறுதியாக இருந்து உயிர் நீத்த வேதசாட்சிகளைப் பற்றியும், உடனுக்குடன் அறிந்துவந்த போர்த்துக்கீசிய மன்னர், இந்த பரதவர்களை தம் ஞானப்பிள்ளைகளாக கருதி, அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து வந்தார். இதனால், தம் திருநிலையினர் மூலமாக நம் அன்னைக்கு அவர் அளித்த நன்கொடைகளில் ஒன்று நவரத்தினக்கற்களால் ஆவே மரியா என்று பொறித்த விலைமதிப்பற்ற கனத்த அட்டியல். மற்றது, அன்னையின் திருத்தலைமுடி. 

அன்னாளும் சுவக்கினும் வருடிக் கொடுத்த திருத்தலைமுடி. சின்ன சேசுபாலனின் பிஞ்சு விரல்கள் விளையாடிய திருத்தலைமுடி. மரித்த சேசுவின் சிதைந்த உடல் அன்னைமரியின் மடியில் வளர்த்தப்பட்டபோது, அன்னையின் கண்ணீரும், மகனின் உதிரமும் இணைந்து நனைந்த, அதே திருத்தலைமுடிகளில் ஒன்று நம் ஆலயத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விண்ணகத்தில் இருக்கும் நம் அரசியின் திருத்தலைமுடி, பரலோகத்திற்கும், நம் பசிலிக்காவுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து நமக்கு அருள் பாலித்து வருகிறது.

கொச்சி மறைமாவட்டத்தின் தலைமைபீடம் அஞ்சங்கோவில் (சொலதாரே) இருந்து, கொச்சி ஆயர் தொம் பிரே யோசெதெ சொலதாரே ஆண்டகை, 24-ம் தேதி மே மாதம் 1790-ம் ஆண்டு தேர்மாறன் என்று அழைக்கப்படும் சிஞ்ஞோர். தொம் கபிரியேல் வாஸ் கோமஸ்,குலாதிபனுக்கு எழுதிய ஒரு பெரிய மடலில் இவ்விபரம் காணப்படுகிறது. அதில், அவரால் அனுப்பிவைக்கப்பட்ட திருத்தலைமுடி, அது அன்னையின் திருத்தலைமுடிதான் என்பதற்கான சான்றிதழ்களும், அதற்கு எப்படிப்பட்ட ஆராதனை, வணக்கம் செய்ய வேண்டும் என்ற விபரங்களும் அனுப்பி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை உறுதிசெய்யும் வண்ணம் 26.01.2000 அன்று, பனிமய அன்னை ஆலயத்தில் இருக்கும் திருபண்டங்களை எல்லாம், பேராலய அதிபர் அருட்திரு ரத்தினராஜ் அடிகள் முன்னிலையில் சோதித்து பார்த்தபோது, திருச்சிலுவை, புனிதர்கள் மரிய கொரற்றி, பார்பரா, பாப்பரசர் 10-ம் பத்திநாதர், அவர்களுடைய திருப்பண்டங்களுடன் விண்ணக அரசி என்று பொருள்படும் ரிஜினா செலி என்று பொறிக்கப்பட்ட ஒரு திருப்பண்டம் அடங்கிய பாத்திரத்தை காண முடிந்தது. இதனை மேலும் உறுதி செய்யும் வண்ணம், 1802-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆலயத்தின் நகைப்பட்டியலில் பொன்னாலான அருளிக்கம் என்ற வார்த்தையும் காணப்படுகிறது. அன்னையின் மைந்தர்களாகிய நாம், நம் அன்னையின் திருமுடியை உரிய இடத்தில் வைத்து, உரிய மரியாதை செலுத்த கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் வைரம், பொன்மகுடம் மற்றும் அணிகலன்களையெல்லாம் அணிந்த நம் திருச்சுரூபத்தையும் விட இந்த தலைமுடி அளவில்லாத மதிப்புக்குரியதாகும்.

பாண்டியபதியின் பழைய கோப்புகளிலிருந்து தேடி எடுத்த போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட இந்த குறிப்பிட்ட மடலை, மொழிபெயர்த்து ஆய்ந்து, இந்த அரிய உண்மையை வெளிக் கொணர்ந்த பெருமை, வேம்பாறு திரு.தம்பிஐயா பர்னாந்து அவர்களைச் சாரும்.
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com