வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 2 January 2016

எழுகடற்றுறை நாயகியை நோக்கி பாடல்

ஏழுகடற்றுறை நாயகியே



நீ தந்த நாவு கொண்டு நின்புகழ் பாடுவேன்

நிர்மல சுதனே என் தேவனென்று – நீ

சொன்னதால் நானும் திருமுழுக்குப் பெற்றேன்

நானூற்றேண்பதாண்டு கத்தோலிக்க மரபு



தாயை மறந்திருக்கும் குழந்தைகள் குவலயத்திலுண்டு

சேயை மறந்த அன்னையும் அவனியிலுண்டோ?

நீயே எமை மறந்தால் நிலையெமக் கேதம்மா?

நோயோடு நொடியும் வறுமையும் தானம்மா.



நித்தம் உனை நினைந்து நியமமுடன் வாழ

சுத்த மனநிலையும் செல்லும் செயலும் ஈந்து

சுற்றும் பலபிணிகள் தொடரா தருள் புரிவாய்

சத்தியமாய் சரித்திரமாய் விளங்கும் பனிமயமே!



பென்னம் பெரிய திருமந்திர நகரோடு நிம்பையும்

புன்னையாபதிகாயலும் மணவை ஆலும்

தென்வீரபாண்டிய பட்டணத்தோடு செந்துரும்

சேத்துப் பாரும் திகழ் ஏழுகடற்றுறை நாயகியே!

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com