Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள்…..

வடக்கே வேங்கட மலையும் தெற்கே தென்குமரியும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட பரந்த தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களுள் சேரர் என்பவர் இன்றைய கேரளப் பகுதிகளை ஆண்டவர்கள் எனப் புரிதலுக்காகக் குறிப்பிடலாம்.

சேர மன்னர்களின் வரலாற்றை அறிவிக்கும் நூல்போல் விளங்குவது பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியமாகும். இதில் பத்துப் புலவர்கள் பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியான நூறு பாடல்களை இந்நூல் கொண்டிருந்தது. முதற் பத்தும் கடைசிப் பத்தும் நீங்கலாக எண்பது பாடல்கள்தான் அதாவது எட்டுப் பத்துகள்தான் இன்று கிடைத்துள்ளன.

இவற்றுள் இரண்டாம் பத்து என்னும் பகுதியைப் பாடிய புலவர் குமட்டூர்க் கண்ணனார் ஆவார்.இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்புலவரைச் சிறப்பிக்க நினைத்த மன்னன் இமயவரம்பன் உம்பற்காட்டுப் பகுதியில்(மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்குப் பகுதி) ஐந்நூறு ஊர்களையும், தென்னாட்டு வருவாயில் முப்பத்தெட்டு ஆண்டுவரை பகுதியும் வழங்கினான் என அறிய முடிகிறது.

கடம்பர் என்ற கடற்கொள்ளையரை அழித்து வெற்றியுடன் மீண்ட இமயவரம்பன் செடுஞ்சேர லாதனை அவன் நாட்டு மக்கள் பாராட்டி வரவேற்றனர். அக்காட்சியைக் கண்ட புலவர் பெருமா னுக்குக், கடலுள் மாமர வடிவில் இருந்த சூரபத்மனை அழித்து மீண்ட முருகன் நினைவுக்கு வருகின்றான். அம் முருகனாகவே புலவர் இமயவரம்பனை எண்ணிப் பாடியுள்ளார்.

கடம்பர்கள் என்பவர்கள் கடலிடை உள்ள தீவுகளை வாழிடமாகக் கொண்டு அவ்வழிச் செல்லும் கலங்களைக் (கப்பல்களை) கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக் கொடியவர்களால் தம் நாட்டில் நடைபெற்று வந்த கடல்வணிகம் பாதிக்கப்பட்டதை அறிந்த இமயவரம்பன் அக்கடம்பர் பகுதி மீது(அரபிக்கடல் பகுதியில்)படையெடுத்தான்.

சேரநாட்டுப் படை மறவர்கள் கடம்பர்களின் கலத்தையும் நாட்டையும் பாழ்படுத்தினர். சேரர் படையுடன் போரில் வெற்றிபெற முடியாது என உணர்ந்த கடம்பர்கள் தங்கள் காவல் மரத்தை மட்டுமாவது காத்துக்கொள்ள நினைத்தனர். அவர்களின் காவல் மரமான கடம்ப மரத்தை அழிக்கும் முன் கடம்பர்களையும் சேரர் படை அழித்தது. கடம்ப மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி, வீழ்ந்த கடம்பமரதைக் குடைந்து முரசாக்கி மறவர்கள் முழக்கம் செய்தனர். அம் முழக்கொலி கேட்ட சேரநாட்டுப் படை மறவர்களும் மக்களும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். 

இதனைக் கண்ட குமட்டூர்க் கண்ணனார்,

“வரைமருள் புணரி வான்பிசிர் உடைய,
வளிபாய்ந்து அட்ட துளங்கு இரும் கமஞ்சூல்
ஒளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறள்வேள் களிறு ஊர்ந்தாங்கு…
“பலர்மொசிந்(து) ஓம்பிய அலர்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்குபணை செய்த வெல்போர்
நார்அரி நறவின் ஆர மார்பின்,
போர்அடு தானைச் சேர லாத!” (பதிற்றுப்பத்து 2: 1-16)
எனவும்,

“துளங்கு பிசிர்உடைய மாக்கடல் நீக்கிக்
கடம்பறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை” (பதிற்றுப்பத்து 17: 4-5)
எனவும்

“இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன் ” (பதிற்றுப்பத்து 20 :2-5)
எனவும் பாடியுள்ளார்.

அகநானூற்றுப் புலவர் மாமூலனார் அவர்கள் (கி.மு.மூன்றாம் நூற்றாண்டு. பார்க்க: பே.க.வேலாயுதனாரின் சங்ககால மன்னர் வரிசை,1997)

“சால்பெரும் தானைச் சேரலாதன்
மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய
பண்அமை முரசின் கண்அதிர்ந்தன்ன”(அகம். 347)

(பொருள் : பெரும் படையுடையவன் சேரலாதன். அவன் பெரிய கடலில் பகைவர்களை அழித்து அவர்களின் கடம்ப மரத்தை அறுத்து முரசு செய்தான். அம் முரசு முழங்கியது போல) எனவும்

“வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பறுத்து” (அகம். 127 )

(பொருள்: வெற்றி தரும் முரசத்தையுடையவன் சேரலாதன்.அவன் கடலில் பகைவரை வென்று அவரது காவல் மரத்தை வெட்டினான்) எனவும் பாராட்டியுள்ளனர்.

பண்டு கிரேக்க, உரோமை நாடுகளுக்குச் சேரநாட்டு யானைத் தந்தங்கள், மிளகு முதலிய பொருள்களும் பாண்டியநாட்டு முத்து உள்ளிட்டவையும் மேலைக்கடற்கரை வழிச் சென்றமையும் அந்நாட்டின் செல்வம், பொருள்கள் தமிழகம் வந்ததையும் வரலாற்றால் அறிகிறோம். அவற்றைக் கடம்பர்கள் கொள்ளையடித்ததையும் ஒருவாறு உய்த்துணர முடிகிறது.

இப்பாடலடிகளின் வழியாக இன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் செய்யும் வேலைகளைப் பண்டைய கடம்பர்கள் செய்தனர் போலும். இவை பற்றி விரிவாக ஆராய இடம் உள்ளது. கடம்பர்கள் இல்லை. கதம்பர்கள் எனப் பொருள்கொள்ளும் அறிஞர்களும் உள்ளனர்.இக் கதம்பர்கள் மைசூர் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனவும் அறியமுடிகிறது. தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

– முனைவர் மு.இளங்கோவன்

ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் வளைப்பத்து பாடல்கள் தொகுப்பு


நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள வளைப்பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.


191.தலைவன் கூற்று

கடல்கோடு செறிந்த வளையார் முன்கைக்
கழிப்பூத் தொடர்ந்த இரும்பல் கூந்தல்
கானல் ஞாழல் கவின்பெறு தழையள்
வரையர மகளிரின் அரியள்என்
நிறையரு நெஞ்சம் கொண்டுஒளித் தோளே.

192.தலைவி கூற்று

கோடுபுலம் கொட்பக் கடல்எழுந்து முழங்கப்
பாடுஇமிழ் பனித்துறை ஓடுகலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தோழியென் வளையே.

193.தோழிகூற்று

வலம்புரி உழுத வார்மணல் அடைகரை
இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்
துறைகெழு கொண்கநீ தந்த
அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே.

194.தோழிகூற்று

கடற்கோடு அறுத்த அரம்போழ் அவ்வளை
ஒண்தொடி மடவரல் கண்டிகும் கொண்க
நன்னுதல்இன்று மாஅல் செய்தெனக்
கொன்றுஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே.
195.தலைவன் கூற்று

வளைபடு முத்தம் பரதவர் பகரும்
கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்
கெடல்அரும் துயரம் நல்கிப்
படல்இன் பாயல் வௌவி யோளே.

196.தோழிகூற்று

கோடுஈர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி ஆயின்
தெண்கழிச் சேயிறாப் படூஉம்
தண்கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ.

197.தலைவன் கூற்று

இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம்புதை கதுப்பினள் இறைஞ்சிநின் றோளே
புலம்புகொள் மாலை மறைய
நலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே.

198.தோழிகூற்று

வளையணி முன்கை வால்எயிற்று அமர்நகை
இளையர் ஆடும் தளையவிழ் கானல்
குறுந்துறை வினவி நின்ற
நெடுந்தோள் அண்ணல் கண்டிடும் யாமே.

199.தோழிகூற்று

கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்
வானுயர் நெடுமணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே.

200.தோழிகூற்று

இலங்குவீங்கு எல்வளை ஆய்நுதல் கவினப்
பொலந்தேர்க் கொண்கண் வந்தனன் இனியே
விலங்கரி நெடுங்கண் ஞெகிழ்மதி
நலங்கவர் பசலையை நகுகம் நாமே.


கடல்வழிப்பயணம் ஆவணம்

Rare Collection 

இந்தியாவிலிருந்து கடல்வழிப்பயணம் தொடர்பான இரு ஆவணங்கள் கீழே உள்ள இணைப்பில் காண்க.  

முதல் நூல் கி.பி மூன்றாம் நுற்றாண்டில் பாஹியன் சீனாவிலிருந்து வட இந்தியாவுக்கு வந்து பின்னர் அங்கிருந்து தாமிரலிபி துறைமுகத்தில் 200 பேர் அமர்ந்து செல்லக்கூடிய வணிகக் கப்பலில் பயணம் செய்து இலங்கை அடைந்ததைக் குறிப்பிடுவதைக் கணலாம்.  குளிர்காலத்தில் பயணம் தொடங்கியதாகவும் 27 நாட்கள் காற்றின்போக்கில் பயணித்து இலங்கையை அடைந்ததாகக் குறிப்புள்ளது.  இலங்கையிலிருந்து மீண்டும் இன்னொரு 200 பேர் பயணம் செய்த வணிகக் கப்பலில் பயணம்.


இரண்டாவது ஆவணமும் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் தாமிரலிபியில் இருந்து பயணம் தொடங்கி இலங்கையைத் தொடாமல் நக்கவரம் தீவைத் தொட்டு, மலாய, ஜாவா வழியாக மேற்கொண்ட பயணத்தைக் குறிப்பிடுவதாக உள்ளது.  மலாயா ஜாவா பகுதியில் அரசருக்குச் சொந்தமான கப்பல்களிலும் வணிகக் கப்பலிலும் பயணித்த குறிப்புகள் உள்ளன


கீழக்கடல் பகுதியான இந்துமாக்கடலில் காற்றின் திசைக்கேற்பப் பயணிக்கும் 200 பேர் அமர்து செல்லக்கூடிய வணிகக் கப்பல்கள் இயங்கியுள்ளதையும் அக்கப்பல்கள் வழியே பெளத்தமும் இந்துமாக் கடல்வழியே கீழ்த்திசை நாடுகளுக்குப் பரவியதை அறியலாம். 

நண்டு கட்லெட்

தேவையான பொருட்கள் :

நண்டு - அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
பிரெட் தூள் - ஒரு கப்
மைதா மாவு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நண்டை வேக சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து ஆற வைக்கவும்.

* நண்டு ஆறியதும் அதன் ஓட்டை உடைத்து சதையை மட்டும் தனியாக எடுத்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, நண்டு சதை, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா தூள், மிளகாய்த் தூள், நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

* வாணலியை சூடாக்கி அதில் சிறிது எண்ணெய் ஊற்றி இந்தக் கலவையைப் போட்டு வதக்கி, கெட்டியானதும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* மைதா மாவில் சிறிது உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

* வதக்கிய நண்டு கலவையைச் வேண்டிய வடிவில் பிடித்து கொள்ளவும்.

* தட்டி வைத்துள்ள நண்டு கலவையை, மைதா மாவு கரைசலில் நனைத்து, பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.

* ஒரு கடாயில் பொரிக்க தேவையான எண்ணெய் ஊற்றி  தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.

* சூடான நண்டு கட்லெட்டை சில்லி சாஸுடன் பரிமாறவும்.

இரத்த பூமி - பாகம் 10


போர்சுகல் கோட்டையில் வீரபாண்டியர்.


கொச்சின் போர்சுகல் கோட்டையில் மலபார் கேப்டன் மற்றும் பட்டங்கட்டிமார் புடைசூழ பாண்டியனார் விரக்தியில் சொன்னார்.

இந்த நிலத்துக்கும் கடலுக்கும் உரிமையான பரதவர்கள் நாங்கள் எங்கள் பாரம்பரியம் காக்க எங்கள் மரபை காப்பாற்ற காலகாலமாக நாங்கள் கடைபிடித்த ஆசாரங்களை ஆண்டவ சடங்குகளை உதறிவிட்டு உங்களோடு இணைந்தோம்.

ஆனால் இன்று அதுவே எங்களுக்கு பெரும் பகையாகி போனது. எமது பாண்டியனுக்கு சோழ மறவனுக்கு அள்ளி கொடுத்ததை பின்னர் நாயக்கனுக்கும் கொடுத்தோம்.

பரதவரின் பாரம்பரிய கடலை அபகரிக்க பரத்தியரின் பண்பாட்டு மரபை அவமானிக்க நினைத்த மூரை சிதைத்தோம். ஆனால் தலைக்கு நாலு பணம் பேசி நாயக்கனும் எமை அழிக்க நினைத்தான். அவன் கடலை பறித்தான். எமது உரிமையை கெடுத்தான் .

உம்மோடு சேர்ந்து இழந்த கடல் உரிமையை பெற்றுக்கொண்டோம். ஆனால் எம்மையே இழந்து விட்டோமே!! யாருக்காக, எதுக்காக, நாங்கள் மதம் மாறினோமோ.... அந்த இனத்தையே கருவறுக்கின்றார்களே.... காவலுக்கு வந்த உங்களுக்கே.... நாங்கள் காவல் காக்க வேண்டியதாயிற்றே.

உம்மோடு இணைந்து உம்மதத்தை சம்மதமாய் ஏற்று கொண்ட நாள் தொட்டு பரதவ கடலோரம் முழுவதும் எம் பாண்டி பரதவரின் பிணக் குவியல். பெரும்பான்மை பரத சமூகம் நாயர்களால் நாயக்கர்களால் மூர்களால் வெறி பிடித்த சகோதர இந்துக்களால் நித்தம் நித்தம் ஆக்கினைக்கு ஆளாகி அல்லல் படுகிறது. எவன் நண்பன் எவன் பகைவன் எனத் தெரியாதபடி சுற்றிலும் பகைவர்களால் சூறையாடப் பட்டு சின்னஞ்சிறு கூட்டமாக குறுகி போய் விடுமோ பயமாயிருக்கிறது.

முதல் முதலாக எம் மண்ணுக்குள் ஊடுருவி பட்டி மரைக்காயன் குஞ்சாலி மரைக்காயன் கூட்டமாய் வந்து கொன்று குவித்தான். உம்மோடு இணைந்து பரதவ இளைஞர்கள் ஒரே இரவில் அத்தனை பேரையும் பரதவ கடலிலே புதைத்தழித்தார்கள். இப்போது எதிரிகள் மத்தியிலே இந்த பரத சமூகம் கையளிக்கப் பட்டுவிட்டதா.... பரம்பரை வீரம் பாழ்பட்டு போனதா...

குமரி பரதவனை வழிந்து வந்த வடுகன் அடித்து விரட்ட ஆழிபாறையில அடைக்கலம் புகுந்தானே அப்போதும் கேட்பாரில்லை சவேரியார் எமை திரட்டி படுக்காளி படை விரட்டி முடித்தது தங்களுக்கு தெரியாது போல.... சவேரியார் ஐயா இருக்கும் வரை நல்ல பிள்ளையாய் நடந்து கொண்டு ஐயா கப்பலேறி போனது தெரிந்ததும் அங்கே குமரிக்கு மேற்க்கே பரதவ குடிகளை திருவிதாங்கூர் அரசன் அழிக்கிறான்.

அங்கே என் பிள்ளைகள் கோட்டைகுள்ளே 3 நாட்களாக பசியிலே இரப்பாளியின் கோரப்பிடியிலே சிக்கித்தவிக்கின்றனர். ஆறா கண்ணீர் வடிக்கின்றனர். இன்றைக்கு உள்ளே நுழைந்து விட்ட இரப்பாளியின் இறப்பே ஆழியில் தான் முடிவு தெரிந்து விட்ட ஓன்று. ஆனால் பிடித்து செல்லப்பட்ட தூய தந்தை வீர மறவன் காத்தவராயன் கேப்டன் குடும்பத்தவர் கதி....... 

கவலை வேண்டாம் டீ குரூஸ் எங்கள் கேப்டனை ஒன்றும் செய்ய மாட்டார்கள்.....

ஆம் பரதவர்களை மட்டும் தான் பலி வாங்குவார்கள்...மறந்து விட்டீர்களா கேப்டன் போன வருடம் (1552)கூட அருள் தந்தை பவோலோ டி வாலே வை சிறை பிடித்து கொண்டு போய் நாயக்க படை துன்புறுத்தியபோது எம் குல மறவர்கள் தான் சாவுக்கும் அஞ்சாமல் நாயக்க படை முகாமுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி தந்தையை தூக்கிக்கொண்டு வந்தது. நாயக்கனை அடக்குங்கள் இல்லை அந்த நாய்க்கு எச்சில் துண்டுகளை போடுங்கள்... 

பாண்டியரே பிரித்து பேச வேண்டாம் நாம் போர்த்துகல் மக்கள், இறை யேசுவின் குழந்தைகள், உங்களது காவலாளி நாங்கள், இறுதி வரை உடன் வரும் சகோதரர்கள்... பாண்டியனாரே பொறுமை காப்பீராக இனி வரும் காலத்தில் இந்தியா முழுமைக்கும் நமது சிலுவை கொடி பறக்கும் அதனால் பரதவ புகழ் சிறக்கும்...

சிலுவை கொடி பறக்க இன்னும் பரதவர் எத்தனை பேர் இறக்க. பரதவ தலைவனின் விவேகமான உரை கேட்ட போர்த்து கீசியர் இன்னும் காலம் தாழ்த்தினால் இவர்கள் நம்மீது நம்பிக்கை இழக்கநேரிடும் என்பதனால் கில் பர்னாண்டஸ் டி கார்வெல்கோ கேப்டன் ...... தலைமையில் உடனே படை கூட்ட ஆயத்தமானார்கள்.

இவ்விதமாக கொச்சின் கோட்டையிலே பாண்டியனார் படை திரட்டியிருக்க... இங்கே கொற்கை கோ வந்ததும் புது வேகம் வந்துவிட்டது... பரத்திகளுக்கோ பெத்த பிள்ளையை காட்டிலும் மூத்த பிள்ளையாம் கொற்கை வந்ததும் இரப்பாளியின் சங்காரத்தை காணும் சந்தோசம் பிறந்தது. காணியாளன் முதலில் கேட்டான் ஐயா கூட போனீரோ ஐய .. விட்டுட்டு போன இடத்தை நான் விட்டுட்டு போவேனோ.. இல்லை, என் உயிரும் போகுமோ..!

முத்தம்மையின் பாம்படம் முத்தாரம்மனாய் என்ன காத்தாலும் பரத்திமாரின் வைத்தியமே நித்தியமாய் காத்தது. அது சரி அவர்கள் எங்கே முத்துகளை கொட்டி வைக்கும் பாண்டியம் பதி நிலபறையில் பரதவ முத்துகளி வைத்திருக்கிறேன். நல்முத்து ஒன்று பிறந்திருக்கிறது காத்தவராயன் பெயர் சொல்ல எங்கே ராயன் எனக் கேட்க..... விக்கித்து போன காணியாளன் சொன்னான். தூயதந்தை உயிர்காக்க நம் பரதகுடி வழி உரிமை காக்க அடுத்தாரை காக்க இராயன் கைதியானான்.

நாயக்கனால் கடத்தபட்டான் என காத்தவராயன் கடத்தபட்டானா... என் உயிரை காத்த ராயன் என் பெயரை காத்த ராயன் என் நிழல் எனக்காக... எங்கே இரப்பாளி என கேட்க ..... இதோ உன் மாளிகையின் மாடி நிலா முற்றத்திலே பீதியிலே பிதற்றி நடக்கிறான் பார்.

நேற்றே முடித்திருப்பேன் கதையை பரத்திகளின் வீரம் பற்றி விசனம் பேசியவனை என் ஆத்தா முத்தம்மையின் கை கொண்டே மூச்சடக்கி தீருவேன் என சபதம் கொண்டான்...


(தொடரும்)
கடற்புரத்தான் 

கேள்வியும் பதிலும்

ஐயம் அகற்று புத்தகத்திலிருந்து ...கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம்
கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும் 

கேள்வி : தென்தமிழ்ப் பரத குலத்தவர் எக்காலத்திலேனும் பாண்டிய நாடாண்டதாக வரலாறு உள்ளதா?

பதில் : பாண்டியண் பெயர்களில் பரதவர் என்பதும் ஒன்று, பத்து பாட்டிலும் சங்க இலக்கியங்களிலும் இது பெரு வழக்கு, பரத குலத்தவர் என்னும் சொல்லின் பழம் பொருள் பாண்டிய மரபினர் என்பதுதான், வேறு எவ்வகைக் குலமும் சாதிகளும் தென்னாட்டில் 400 ஆண்டுகளுக்கு முன் கிடையாது.

வலம்புரிச் சங்கு


சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்குகள் உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் (clock wise whorls) அபூர்வமாகவே கிடைக்கும். வலம்புரிச் சங்குகளை இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர். இரண்டு வகையும் கடலில் வாழும் சங்கு இனப் பிராணிகள்தான். ஆனால் இந்துக்கள் என்ன காரணத்தால் வலம்புரிச் சங்குகளைப் புனிதமாகக் கருதுகின்றனர் என்பதற்கு ஒரு அறிவியல்பூர்வ காரணமும் கிடைக்கவில்லை. இவைகள் அபூர்வமாகக் கிடைப்பதாலும் விஷ்ணுவின் கையில் இருப்பதாலும் தெய்வப் பட்டம் சூட்டினரா என்றும் தெரியவில்லை.

வலம்புரிச் சங்குகள் பற்றிச் சமய நூல்களில் நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன. கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு 1008 சங்குகளை வைத்து அபிஷேகம் செய்வது பல கோவில்களில் நடைபெறுகிறது.

சங்குகளின் பெயர்கள்:

கோவில்களிலும் போர்க்களங்களிலும் அரசர் நிகழச்சிகளிலும் சங்கநாதம் முழங்கும். பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறப்பான சங்கை வைத்திருந்தனர். அதற்குத் தனியான பெயரும் உண்டு. கிருஷ்ணனின் சங்கின் பெயர் ‘பாஞ்சஜன்யம்’; பஞ்ச பாண்டவர்களின் சங்குகளின் பெயர்கள் பின்வருமாறு: தர்மன்- ‘அநந்த விஜயம்’ ,பீமன்- ‘பௌண்டரம்’ , அர்ஜுனன்-‘தேவதத்தம்’, நகுலன்- ‘சுகோஷம்’ , சகாதேவன்- ‘மணிபுஷ்பகம்’.

16-08-1978 தினமணிப் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தியின் தலைப்பு : அரைக் கிலோ வலம்புரிச் சங்கு

“சென்னை, ஆக. 14:- வலம்புரிச் சங்குகள் கிடைப்பது அபூர்வம். பெரிய உருவமுள்ள வலம்புரிச் சங்குகள் கிடைப்பது அதைவிட அபூர்வம். 2 வாரங்களுக்கு முன் ராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள திருப்பாலக்குடிக்கு அருகில் கடற்கரையில் 485 கிராம் எடையுள்ள வலம்புரிச் சங்கு கண்டெடுக்கப்பட்டது. இது இப்பொழுது தமிழ்நாடு மீன்வள வளர்ச்சி வாரிய திட்டத்திடம் இருக்கிறது. இது 40,000 ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள். இதை கீழக்கரைவாசி ஒருவர் 20,000 ரூபாய்க்கு வாங்க முன்பணம் செலுத்தினார். ஆனால் சங்கு குளிப்பது அரசுடமை ஆக்கப்பட்டுவிட்டதால் அதை அரசிடம் ஒப்படைக்க நேரிட்டது. சாதாரண சங்குக்கு ஒரு ரூபாயும் வலம்புரிச் சங்குகளுக்கு ஆயிரம் ரூபாயும் அரசு தரும். இதற்கு முன் தமிழ்நாட்டுக் கடற்கரையில் 16 ஆண்டுகளுக்கு முன் வலம்புரிச் சங்கு கிடைத்தது.”

இந்தச் செய்தியைப் படிக்கையில் வலம்புரிச் சங்குகளின் அபூர்வத் தன்மை ஓரளவு புரிந்திருக்கும். அப்போது ரூ.40,000 என்பது இப்போது ரூ. 4 லட்சத்துக்கும் மேலாக இருக்கும்.

சங்க இலக்கியத்தில் வலம்புரிச் சங்கு:

தமிழ்ச் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வலம்புரிச் சங்கு பற்றிப் புலவர்கள் பாடுகின்றனர். அரண்மனைகளிலும் போர்க்களங்களிலும் எப்படி ஒலித்தது என்பதை பின்வரும் இடங்களில் படிக்கலாம்:

அக.201, 350; ஐங்குறு.193; கலி.135; திரு.23, 127; நெடு. 142, பதி. 67, பரி. 3-88, 13-44, 15-59; புற225, 397;பெரு.35; முல்லை.2

தருமி என்னும் ஏழைப் பிராமணப் புலவருக்குச் சிவபெருமான் பாட்டு எழுதிக் கொடுத்து அவன் ஆயிரம் பொன் பரிசு பெறும் தருணத்தில் அதை பாண்டியப் பேரரசின் தலமைப் புலவர் நக்கீரர் எதிர்த்தார். உடனே நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் இடையே பெரிய வாக்குவாதம் வெடித்தது. அப்போது “சங்கு அறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம்?” என்று சிவபெருமானின் குலத்தையே கிண்டல் செய்தார் நக்கீரர். இதிலிருந்து வேளாப் பார்ப்பான் ( அக்கினி வளர்த்து யாகம் செய்யாத பார்ப்பனர்கள்) சங்கு வளையல் செய்து விற்றுவந்தது தெரிகிறது. இதற்குப் பின்னர் சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து நக்கீரனை வாட்டிய போதும் “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று தமிழுக்காக வீர முழக்கம் செய்தார் சங்கு அறு தொழிலில் ஈடுபட்ட நக்கீரன்.

இவ்வளவு இடங்களில் வலம்புரிச் சங்கைக் குறித்துப் புலவர்கள் பாடுவதே அதன் மகிமையை உணர்த்தும்

திருமணத்தில் சங்கு:

வங்காளிகள் இன்றும் கூட திருமணத்தில் சங்கு வளையல்கள் கொடுக்கின்றனர். வாழ்நாள் முழுதும் அணியும் புனிதப் பொருள் என்று கருதுகின்றனர். சங்குகளில் வளையல், மோதிரம், மாலை முதலியன செய்து அணிவது இந்துக்களிடையே அதிகம் காணப்படுகிறது

சிவஸ்ரீ பாலசுந்தரக்குருக்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வரும் விஷயங்களைத் தருகிறார்: சங்க ஒலி ஓம்கார ஒலியைக் குறிக்கும். வைதீக சைவர்கள் ஆத்மார்த்தமாகவோ பரமார்த்தமாகவோ செய்யும் பூஜைகளில் சங்கு பூஜை முக்கிய இடத்தைப் பெறுகிறது. நத்தார்படையின் மகிமை சொல்லுதற்கரியது. சங்குப் படைக்கு மத்தியில் அதன் அதி தேவதைகளான கங்கா தேவியும் வருணனும் வசிக்கின்றனர். சங்கின் முன்பாகத்தில் கங்கை, சரஸ்வதியும் பின்பாகத்தில் பிரஜாபதியும் வசிக்கின்றனர்.

"ஏ, பாஞ்சஜன்யமே! நீ முன்னர் திருப்பாற் கடலில் உதித்தனை. மஹாவிஷ்ணுவினால் கையில் தரிக்கப்பட்டு எல்லா தேவர்களாலும் பூஜிக்கப்பட்டனை. தேவர் தம் பகைவராகிய அசுரர்களின் மனைவியரின் கருக்களை எல்லாம் உன் பேரொலியினால் ஆயிரம் தூள் தூளாகினை. உனக்கு வணக்கம்" என்ற மந்திரத்தினால் சங்கில் தீர்த்தத்தை நிரப்பவேண்டும்.

சங்கு, ஹரியின் இருப்பிடம். பணத்தைக் கொண்டுவரும். சங்கு தீர்த்தம் பற்றி பத்ம புராணம் விரிவாகக் கூறுகிறது. சங்கில் பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால் பிறவிப் பிணியை அறுக்கலாம் என்றும் புராணங்கள் கூறும்.”

தட்சிணாவர்த்த(வலம்புரிச் சங்கு) சங்கு கொண்டு அர்ச்சிப்போன் ஏழு பிறவிகளில் செய்த வினைகளயும் நீக்கலாம் என்று ஸ்காந்தம் கூறும்.

உலகின் பல மியூசியங்களில் தங்கக் கவசம் போடப்பட்ட சங்குகளை வைத்திருக்கின்றனர். இவை இந்தியக் கோவில்களில் இருந்து சென்றவை. பணக்கரர்கள் பல லட்சம் கொடுத்து வலம்புரிச் சங்கு வாங்குவதற்குக் காரணம் அவை அதிர்ஷ்டகரமானவை, நிறைய பணத்தைக் கொண்டு வருபவை என்று நம்புவதே.

தென் ஆப்பிரிக்கக் கடற்கரையில் கிடைக்கும் சில வகைச் சங்குகள் வலம்புரியாக இருந்தும் அவை இந்தியவகை போன்று புனிதமானவையோ விலை மதிப்புடையனவோ அல்ல.

பவுத்தர்களும் சங்கை புனிதமாகக் கருதுகின்றனர். அவர்களுடைய எட்டு மங்கலச் சின்னங்களில் இதுவும் ஒன்று. ஆயுர்வேதத்தில் சங்குப் பொடியைப் பயன்படுத்துகின்றனர். சீனவிலிருந்தும் திபெத்திலிருந்தும் வரும் தங்கப் பிடி போட்ட சங்குகள் வெளிநாட்டு ஏலக் கம்பெனிகளில் பல லட்சம் பவுன் அல்லது டாலர்களுக்கு ஏலம் விடப்படுகின்றன

லண்டனில்உள்ள பிரிட்டிஷ்மியூசியம், நியூயார்க்கிலுள்ள மெட்ரோபாலிடன் மியூசியம் முதலியவற்றில் அரிய சங்குகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.பூஜை செய்யும் சங்குகளைத் தரையில் வைக்ககூடாது என்பதால் அதற்கு வெள்ளி அல்லது தங்கத்தில் அழகான ‘ஸ்டான்ட்’ செய்துவைக்கின்றனர். திருவாங்கூர் மகாராஜா கொடியிலும் கூட சங்கு இடம்பெற்றது. Conch (சங்கு) என்னும் ஆங்கிலச் சொல் ‘சங்க’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்ததே!

முத்து, பவளம் ஆகியவும் கடலில் இருந்தே கிடைக்கின்றன. சோழிகளில் குறிப்பிட்ட வகையை ஒருகாலத்தில் பணமாகப் பயன்படுத்தினர். இவைகளும் கடல் தரும் செல்வங்களே.

பன்மீன் கூட்டம் - பாகம் 3


அகர வரிசையில் ......

  1. அருந்தல்
  2. அராம்பு
  3. அரடுக்கு
  4. அரணை (பாம்பு மாதிரியான மீன். சாப்பிட மாட்டார்கள்)
  5. அண்டிகா
  6. அங்கலாத்தி 
  7. அக்கா கிளிமீன்
  8. அளக்கத்தான்
  9. அயலை
  10. முண்டக்கண் அயலை
  11. அரலுக்கு
  12. அரஞ்சான் பொடி
  13. அகலை
  14. அவிலி 
  15. ஆரல் 
  16. ஆளல் 
  17. ஆழியா
  18. ஆக்கணா
  19. இலத்தி
  20. புள்ளி இலத்தி
  21. இடிமீன்
  22. இணாட்டு 
  23. ஈக்குத் தொண்டன்
  24. உறு
  25. உருவு (ஒட்டுமீன்)
  26. உரா
  27. கொம்பு உரா
  28. உல்லம் (அழிந்து விட்ட மீன், உள்ளதை விற்று உல்லம் வாங்கிச் சாப்பிடு என்பது பழமொழி)
  29. உடும்பு
  30. உழுவாரா
  31. ஊளி மீன்
  32. கரை ஊளி (திரியான்)
  33. மாஊளி
  34. மஞ்சள் ஊளி
  35. ஊடன் 
  36. கறுப்பு ஊடன்
  37. புள்ளி ஊடன்
  38. வரி ஊடன்
  39. ஊட்டான்
  40. ஊரா
  41. ஊர்த்த வெள்ளை
  42. ஊலா (ஊளா)
  43. ஊடகம்
  44. ஊடவரை
  45. ஊசிக்கவலை
  46. எரையா (எறியா)
  47. எறியாள்
  48. எறும்பன் (எலும்பன்)
  49. எலக்கு (சிறிய வாளை மீன்)
  50. எட்டவாளை (சூரை இன மீன்)
  51. ஒட்டி (முயல்மீன்)
  52. ஒசிகா
  53. ஒடுக்கு 
  54. ஓரா (முள் குத்தினால் கடுக்கும், இதன் நெய்யைக் கொண்டே இதைப் பொறிக்கலாம்) 
  55. வெள்ளை ஓரா
  56. வடையன் ஓரா (கறுப்புநிற வரிகள்)
  57. ஓவாய்
  58. ஓரண்டை
  59. ஒடத்தேரி
  60. ஓரியான் சம்பு
  61. கடல் கெளுத்தி 
  62. கல்வெட்டி
  63. கல்லடக்கை 
  64. கல் உறிஞ்சி 
  65. கலவா (மூஞ்சான்) 
  66. கல்லூரி (மூஞ்சி கார்வா)
  67. கடவுளா
  68. கடல் சீலா (மஞ்சள்நிறம், வயிறு கறுப்பு. தலை சட்டி போல இருக்கும், பார்க்கடலில் மட்டுமே ஒன்றிரண்டாகத் திரியும். சீலாப் போல கூட்டமாகத் திரியாது)
  69. கடல் சவுக்கை
  70. கடலாடி
  71. கட்டக்கொம்பன்
  72. கருந்திரளி
  73. கல்லாரல்
  74. கருக்கா (விளமீன்)
  75. கச்சி (ககசி)
  76. கச்சம்
  77. கக்காசி (செந்நவரை)
  78. கருங்காக்கணம்
  79. கருங்கண்ணி
  80. கருணா விளமீன்
  81. கருமுறை செல்வி
  82. கலக்கி
  83. கசலி
  84. கயல்
  85. கட்டமேதல்
  86. கருப்பமட்டவன் (நவரை)
  87. கடல் தவக்கை
  88. கறிமீன்
  89. கறுப்புவால் புட்சக்கன்னி
  90. களறியன்
  91. களிமீன்
  92. கருக்கு மட்டை (வெள்ளை)
  93. களர் (மத்தி. முதுகில் பச்சை நிறம்)
  94. கண்ணாடி மீன்
  95. கன்னமீன்
  96. கன்னங்குட்டை
  97. கணவ ஓலை

கத்தாளை

  1. அளக்கத்தாளை
  2. ஆண்டிக் கத்தாளை (ஆண்டாமிக் கத்தாளை)
  3. ஆனைக் கத்தாளை
  4. ஆனவாயன் கத்தாளை
  5. கீறுக் கத்தாளை
  6. சதைக் கத்தாளை
  7. புள்ளிக் கத்தாளை
  8. சாம்பல் கத்தாளை
  9. கருங் கத்தாளை
  10. வரிக் கத்தாளை
  11. முட்டிக் கத்தாளை
  12. மொட்டைக் கத்தாளை
  13. முறாக் கத்தாளை
  14. பன்னாக் கத்தாளை
  15. கலிங்கன்
  16. சப்பைக் கலிங்கன் (கட்டைக் கலிங்கன்)
  17. உருளைக் கலிங்கன்
  18. கலைக்கான்
  19. கட்லா

கட்டா

  1. செல் கட்டா
  2. ஓமலி கட்டா
  3. ஆரியக் கட்டா
  4. ஆழியாக் கட்டா
  5. ஓலைக் கட்டா
  6. ஓங்கல் கட்டா (19 கிலோ வரை எடையிருக்கும்)
  7. கறுப்புக் கட்டா
  8. திரியா கட்டா
  9. மஞ்சள் கட்டா
  10. வங்கடை கட்டா
  11. குருக் கட்டா
  12. அம்முறிஞ்ச கட்டா (ஊசிமுகம், நடுக்கண்டம் வட்டமாக இருக்கும்)
  13. கண்டல்
  14. கடலெலி
  15. கடமாடு

கடமாடு (Trunk Fish)


மாட்டுமீன், பெட்டி மீன் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த வகை பார் மீன், கடினமான வெளித்தோலைக் கொண்டது. ஆமை ஓடு போல இந்த கனத்த தோல், மீனின் உடல் முழுவதையும் மூடியிருக்கும். இந்த உடல் 6 பக்கங்கள் கொண்ட செதிள் அல்லது தகடுகளால் ஆனது. இந்த கனமான தடித்ததோல் காரணமாக இந்த வகை மீனால் மிகமிக மெதுவாகத்தான் நீந்த முடியும். உடலை நகர்த்துவது கடினம். மேல் தூவிகளோ, அடித்தூவிகளோ இல்லாத நிலையில் இந்த மீன் வால்புறம் மேலும் கீழும் இருக்கும் சிறுதூவிகளை அசைத்தே நகர்கிறது.

பெட்டி வடிவத்தில் இருப்பதால் ஆங்கிலத்தில் இது பெட்டி மீன் என அழைக்கப்படுகிறது. தமிழில் இந்த மீனுக்கு கடமாடு என்பது பெயர். மாடு போன்ற கண்கள் இருப்பதாலும், கண்களுக்கு மேலே மாட்டின் கொம்பு போன்ற துருத்தல் மேடு இருப்பதாலும் இது மாடு என அழைக்கப்படுகிறது. கடமாடு குட்டியாக இருக்கும்போது அதன் உடல் நீள்வட்ட வடிவில் காணப்படும். மீன் முதிர முதிர அது முக்கோண வடிவமாகும். இரை தின்னும் போது தலையை தரையில் ஊன்றி, இது முகத்தால் தரையைக் கிளறி இரைதேடி இரையை உறிஞ்சித் தின்னும்.

மெதுவான நீச்சல் காரணமாக மீன்வலைகளில் இது எளிதாக சிக்கும். ஆனால் உணவுக்காக யாரும் இதைப்பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், வெளிநாடுகளில் இதன் தடித்த தோலுடன் இதை வறுத்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளது. கடமாடுகளில் புள்ளிக் கடமாடு ஒன்றரை அடி நீளம் உடையது. அதுபோல முதுகில் 4 சேணக்குறிகள் கொண்ட லெதர் ஜாக்கெட் என அழைக்கப்படும் மீனும் ஒன்றரை அடி நீளம் இருக்கும். நமது கடல்களில் 7 அங்குல நீளமுள்ள சிறிய கடமாடு உண்டு.

கடமாட்டில் மெல்லிய தோல் கொண்ட கடமாடும் உள்ளது. வெள்ளை நிறமான அதன்மேல் கறுப்புத் திட்டுகளும், கறுப்புநிற வரிகளும் காணப்படும். இன்னொரு வகை கடமாடு, சிவப்புநிற நெற்றி, உதடுகளுடன், பச்சை நிறத்தில், நீலநிற வாலுடன் விளங்கும்.

- மோகன ரூபன்

இரத்த பூமி - பாகம் 9

கண்முன்னே கல்வாரி

இரப்பாளி கசையடி தண்டனையை நிறைவேற்ற கொள்ளையருக்கு ஆணையிட்ட போதே... பரதவர்கள் தங்கள் மனங்களை கட்டுபடுத்த ஆயுத்தமானார்கள். முதலில் தூய தந்தையை தரதரவென இழுத்து வரும் போதே பரதவர்கள் மத்தியில் கூச்சலும் குழப்பமும் உருவாக துவங்கியது...

முதல் கசையடி தூய தந்தையின் பின் புறத்தில் விழுந்த போது தூய வெண்ணாடை கிழிந்து இரத்தவரித் தடம் பதிய o jesus ஏசுவே.... என கதறினார். அவர் கதறல் வரும் முன்பே கட்டுப்படுத்த முடியாமல் பரதவர்கள் கூட்டம் பாய்ந்தெழுந்தது. சுற்றியிருந்த கொள்ளையரின் துப்பாக்கியின் தோட்டாக்கள் வெடிக்க வெடிக்க வெட்டுப்பட்ட மரம் போல பரதவர்கள் கீழே சாய்ந்தனர்.

பெண்களின் அழுகை ஓலம். அந்த கோட்டையெங்கும் முட்டித் தெறிக்க விழுந்தவர்களை காப்பாற்ற மாறிமாறி கட்டி பிடித்து தாங்கி கதற ......

இரப்பாளி சப்தமிட்டான் ….. நெட்டையன் மொழி பெயர்த்தான்…… 
ஏ.. சத்தம் ஒரு பயமூச்சி விடக்கூடாது….

இந்த நோஞ்சான் துறவிக்காக வீர பரதவர்கள் உயிரை விட போகிறீர்களா......

நல்லது.........உங்களையெல்லாம் கொன்று விட்டு…. நான் யாரை ஆளுவது யார் எனக்கு காணிக்கை தருவது….. சகோதரா….. துப்பாக்கிய இங்கே திருப்பு…….

இந்த போர்த்துகீசியரை கொன்னுப்போட்டா தான் இரப்பாளி ராஜா ஆகமுடியும்.

வீரர்களே....

இடுப்புக்கு கீழதானே சுட்டீங்க......? பாரம்பரிய பரதவரே உங்க ஒவ்வொரு உயிரும் ஒரு கோடிக்கு சமம். இனி நீங்க நினைச்சாலும் சாக முடியாது.. அடிபட்டவனை எல்லாம் தூக்கி அப்பால கொண்டு போய் கிடத்து. என ஆணையிட்ட இரப்பாளி

நல்ல பிள்ளைகளா நான் சொல்லுவதை செய்யணும் , என்றபடி கண்ணை காட்ட துப்பாக்கியின் பின்கட்டை கொண்டு கேப்டனின் கழுத்தோடு அடித்தான் நெட்டையன். தளபதி... அப்படியே குப்புற விழுந்தார். அவரது மனைவியும் குழந்தையும் கதறி அழுது துடிக்க.. பரதவர்கள் எதிர்ப்பு குறைந்தது போல இரப்பாளிக்கு தெரிந்தது. பரதவரின் பலவீன பாசத்தை புரிந்தவன்

தனது நீண்ட வாளை உருவி சுழற்றி அப்படியே தூய தந்தையின் கழுத்தருகே நிறுத்தினான். கூட்டமே அலறியது. முத்தாரம்மா காப்பாத்து…. முருகா ஈசுவரா காப்பாத்து….. மாடா, எசக்கி, என தாங்கள் இதுவரை வழிபட்ட தெய்வங்களை அவரவர் குடும்ப தெய்வங்களின் பெயரை சொல்லி அழைக்க ஒரு சில பரத்திகள் இரப்பாளின் வம்சத்தையே வகை கெட்டு அறுத்து கிழித்தனர்

சப்தமிட்டு மிரட்டி அமைதியாக்கின இரப்பாளி சொன்னான்,
இப்போ எனக்கு தேவை சில தகவல்கள் …..
அதை கொடுத்தால், இவரை விடுவிப்பேன்…...
பொய் சொன்னால், அவனை அப்பவே அப்படியே கொன்னேபோடுவேன் தைரியமுள்ள ஆம்பிளை உடனே கிட்டவா என சீறினான்.

எவரும் எழும்ப வழியில்லை அப்போதுதான் முடிவற்ற கொடுமைகளுக்கு முடிவு வர தன் மக்களை காக்க தன் தந்தையை பற்றி தமையனை பற்றி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வள்ளியம்மை நாச்சியாரின் பக்கத்தில் அழுதபடி இருந்த.மீனம்மை நாச்சியார் எழும்பினார்கள். இதை இரப்பாளி கவனிக்கும் முன்பே அடப்பனார் கவனித்து சத்தமாக ... இதோ பாடன் வருவான் என்றார். ஒன்றும் அறியாத பாடன் பெரியவர் அடப்பனார் ஆணையை கேட்ட மறு நொடி எழுந்தான், அவனை கண்டதும் இரப்பாளி அதிர்ந்தான்.

7அடி உயரம் 2 இரப்பாளியின் தேகம் புடைத்தெழுந்த திமில் தோள்கள் முறுக்கேறிய கைதசைகள் கவசம் கூட்டினாற் போன்ற கரும்பாறை மார்பகங்கள் என பாடன் பரதவரின் அடையாளமாய் இருந்தான். நீண்ட தலைமுடியை சுற்றி கொண்டை போட்டிருந்தான். காதில் பெரிய முத்து கோர்த்த தொங்கட்டம் ஆட இரப்பாளியை நோக்கி மதயானை போல் முன்னேறினான்.

தென் பாண்டி அரசர் கொற்கை விடுத்து மதுரை இடம் பெயர்த்த போது இங்கேயே கொற்கையில் தங்கிப் போன பாண்டிய போர்படை தளபதி படையன் வம்சாவழி வந்தவன் இந்த பாடன்.அவனை அருகே நெருங்க விடாது தூரத்திலே நிறுத்தினான் இரப்பாளி இப்போது.. இரப்பாளி கேள்வியை நெட்டையன் கேட்டான்.

எங்கே உங்கள் ராஜா..??
ஈழம் போயிருக்காவ
உண்மையாகவா
ஆமாம் அவரு மகனுக்கு பொன்னு பாக்க குடும்பத்தோடு போயிருக்காவ 
எங்கே தளபதி... ?
யாரவரு தெரியாதே 
நேற்று எங்க தளபதியை கொன்ன அண்டானியோ பிராங்கோ எங்கே..?
உண்மையை சொல்கிறாயா என்று கேட்பதற்குள்,

அப்போது கொள்ளை தளபதி ஒருவன் சத்தமாக சொன்னான். யாரும் எங்கும் போகவில்லை கூட்டத்திற்குள் இங்கேதான் எங்கோ இருக்கிறார்கள். ராசாவின் அரண்மனையிலே நேற்று கூட விருந்து நடந்திருக்கிறது உணவுகள் இன்னும் இறைந்து கிடைக்கின்றன இப்போது தான் பார்த்தேன் என உண்மை விளம்பினான்.

சினம் கொண்ட இரப்பாளி கலவரமானான், இரப்பாளி அவன் வாளை எடுத்து தூயதந்தையை கொன்றே போடுவான் என பரதவர் திகிலடைய அடப்பனார் சத்தமிட்டார். நிறுத்துங்கள் நான் சொல்கிறேன் என்று .பதில் வந்த திசை நோக்கிய இரப்பாளி சைகை காட்டி அழைக்க முன்னே சென்றார் அடப்பனார். நெட்டையன் கேட்டான் எங்கே தளபதி? 

இதோ தளபதி, காத்தவராயன் என கூவி அழைக்க 

காத்தவராயன் ஏதும் அறியாது - ஆனால் அடப்பனாரின் எண்ணம் அறிந்தவனாக சபை முன்னே நின்றான்.

போர்த்துகீசிய தளபதி இவனா..? இல்லை தளபதி உடையில் இருந்தவன் இவன் என்றார். பரதவரின் முகச்சாயல் ஒரே மாதிரியாக உணர்ந்த அரேபியர்களுக்கு காத்தவராயன் தளபதியாக தோன்றினான். ஆமாம் என கொள்ளையர்கள் தலையாட்ட காத்தவராயன் கைகள் பிணைக்க பட்ட கைதியானான்.

மக்களின்றி தனி விசாரணை நடத்தவும் தனது அடுத்த கட்ட அரசியல் ராஜா கனவுக்கான நகர்வுகளை தொடரவும் திட்டமிட்ட இரப்பாளி. மீண்டும் அனைவரையும் ஆயுதக்கிடங்கிலும் ஆலயத்துக்குள்ளும் அனுப்பி வைத்து விட்டு கைதிகளையும் அடப்பனாரையும் அழைத்து கொண்டு போர்த்துகீசிய இராணுவ அலுவலகத்துக்குள் நுழைந்தான்.

நெட்டையனை தவிர அனைவரும் வெளியேற்றி விட்டு கதவை இழுத்து மூடியதும் முற்றிலுமாக மாறி போனான் இரப்பாளி. அடப்பனாரை சினேக புன்னகையோடு அமரவைத்தான். நயவஞ்சகமாக உரையாடினான், நெட்டையன் சொன்னான். உங்க ராசா கிட்ட சொல்லுங்க ....

உங்களுக்கு முழு விடுதலை……. உங்களுக்கு முழு ஆயுத பலம்……. உங்களுக்கு புதிய உலகம் போற்றும் அல்லா எனும் கடவுள் அனைத்திற்கும் நான் வழி செய்கிறேன்.

அடப்பனாரும் அதே கனிவுடன் முதலில் அடக்கு முறைக்கு அடிபணிபவரல்லர் பரதவர். இரந்துவரும் இரப்பாளிக்கும் இருப்பதையெல்லாம் இறைப்பவர் நாங்கள் இவர்களை விடிவியுங்கள் இல்லாது எந்த மாற்றமும் நடைபெறாது. உங்கள் எண்ணப்படி எல்லாமும் நடக்க - எங்க ராசா வரட்டும் அதுவரை அமைதி காப்போம்,

அப்போது கதவு தட்டப்பட்டு நாயக்க தளபதி விதாலன் புன்னை பட்டினம் வந்து விட்டதாக சொல்ல கோபமான இரப்பாளி கதவை திறந்து வெளியே போனான். இங்கேயே இருங்கள் வருகிறேன் என்றபடி நெட்டையனும் வெளியே போய் கதவை அடைத்தான். துணிந்த அடப்பனார் தூய தந்தையை கட்டியணைத்து தேம்பினார். அனைவரின் கட்டுகளை அவிழ்க்க வைத்தார்,

அடுத்தாரை காப்பதற்கா காத்தவராயன் துணிந்த அடப்பனார் தூய தந்தையை கட்டியணைத்து தேம்பினார். அனைவரின் கட்டுகளை அவிழ்க்க வைத்து இருக்கையில் அமர்த்தி இளைப்பாறவைத்தார். ஆனால் காத்தவராயன் மட்டும் மௌனமாய் இருந்தான். என்னாச்சி ராயா கோபமா - ஐயா உன்னை எதிரிகளிடம் கையளித்தேன் என்றான். கவலையோடு கேட்டார். இல்லை எனக்கு தெரியும். கொற்கை கோ வைத்தான் தேடுகிறார்கள் என்று ஆனால் அதுவல்ல எனது சிந்தனை தலைவரில்லாமல் கொற்கையில்லாமல் 

இரப்பாளி ஒரு பக்கம், நாயக்கன் பக்கம், தந்தை - போர்த்துகீசியர் ஒரு பக்கம், நாம் ஒரு பக்கம், என்ன சிக்கல் இது... முடிவு எது – எப்படி நாமும் நமது சமுதாயமும் மீண்டு வருவோம்.

தூய தந்தை வானம் பார்த்து சொன்னார்...நாளை அனைத்தும் முடிவடையும்... நிச்சயம் முடிவடையும். கர்த்தரின் கிரியையால் அதுவாக நடக்கும். கதவு திறக்கப்பட்டு நெட்டையன் உள்ளே வந்தான் அனைவரது கை கட்டுகள் அவிழ்க்கப்பட்ட நிலையை கண்டவன் கத்த அவனையும் தாண்டி அடப்பானார் சொன்னார். இன்னும் ஓரிரு நாழிகைக்குள் அனைவரும் விடிவிக்கப்படவேண்டும் இல்லை எங்கள் உயிர் போனாலும் இரப்பாளியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை இதுதான் முடிவு என எகத்தாளமாக கூறியபடியே வெளியேறினார் அடப்பனார்.

அங்கே நாயக்க படைகள் சாரை சாரையாக கோட்டைக்குள் நுழைந்து கொண்டிருக்க நாயக்க பெரும் படை வீரர்கள் புடை சூழ விதாலன் உள்ளே நுழைந்தான், பரத குலத்தின் பரம வைரி விதாலனை காணும் போதே அடப்பானருக்கு பற்றிக் கொண்டு வந்தது .

விதாலன் கோபத்தின் உச்சியில் இருந்தான். பரதவருக்கு எதிரான சதியில் நாயக்கரையும் சேர்த்து சதிக்கும் இரப்பாளியின் துரோகத்தையும் தன்னையே அச்சுறுத்துவது போல தன்வீரனை கொன்று போட்டதையும் அறிந்து எண்ணி எண்ணி இரப்பாளியை தாக்கி ஒழிக்கும் எண்ணத்தோடுதான் பெரும் படை கூட்டி வந்தான்.

நாயக்கனும் இரப்பாளியும் தனியே உரையாடி முடிவு எடுத்தனர். போர்த்துகீசிய கேப்டனையும் - குடும்பத்தையும் தூயதந்தை மற்றும் காத்தவராயனை, மீதமுள்ள 17 வீரர்களையும் தங்களிடம் ஒப்படைக்க விதாலன் கேட்க. கடலோரம் முழுவதிலும் அவர்களை காட்டி பயமுறுத்திதான் தனது ஆட்சியை நிறுமாணிக்க நினைத்திருந்த இரப்பாளி.

இப்போது இரப்பாளியின் படைகள் காட்டிலும் நாயக்கர் படைகள் அதிகமாக கோட்டைக்குள் நுழைத்து விட்ட நிலையில் அடுத்த கட்டம் என்ன என்பதை நினைத்தபடி நான் இங்கே அனைத்தையும் கவனித்து கொள்கிறேன். நீங்கள் கிளம்புங்கள் உங்களுக்கு வர வேண்டிய கப்பம் வந்து சேரும் என இரப்பாளி கூற கொக்கரித்தான் விதாலன். யார் இடத்தில் வந்து யார் கப்பம் வசூலிப்பது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கடி பேச்சுவார்த்தை முடிவில், இரப்பாளியை நாயக்க அரசின் பிரதிநிதியாக இங்கே இருந்து வரி வசூல் செய்து விதாலனிடம் சமர்ப்பிக்கவும் மாதம் அதற்கான வருவாயில் ஒரு பங்கை இரப்பாளிக்கு நாயக்க அரசு தருவதாகவும் ஒப்பந்தம் செய்து கொண்டு அரசியல் கைதிகளான தூயதந்தை கேப்டனும் அவர் குடும்பமும் வீரர்கள் 17பேரும் மற்றவரோடு விதாலன் வெளிக்கிளம்பினான் .

கோவில் மணி அடிக்கப்பட மக்கள் கூட்டமாய் வெளியே ஓடி வந்தனர். அங்கே விதலான் தன் படையோடு தூய தந்தையையும் மற்றவரையும் அழைத்து கொண்டு தெற்கு வாசல் வழி வெளியேறினான். பரதவர்கள் கண்ணீர் விட்டு கதறினார். காத்தவராயனின் தாய் அடுத்தாரை காப்பதற்கா என் பிள்ளையை காவு கொடுத்தேன். என மண்ணில் புரண்டு புலம்பியழுதாள். நாயக்கனின் ஒரு வீரன் கூட இல்லாமல் அனைவரும் வெளியேறி இருந்தனர் .

எங்குமே மயான அமைதி இப்போது இரப்பாளியின் படைகள் மீண்டும் மக்களை சுற்றி வளைக்க இரப்பாளி பேசினான் அல்லாவின் கருணையை பெற்றவர்களே..... எனது நாட்டின் மக்களே..... நமது புதிய ஆட்சியை மக்களுக்கு தெரியப்படுத்த பெரியவர்கள் கூடி ஊர் ஊராக சென்று தெரியப்படுத்துங்கள் அனைவரையயும் எனது பதவியேற்புக்கு அழைத்து வாருங்கள் என்றபடி அடப்பனார், பாடனை நோக்கி அழைக்க ,அடப்பனார் இன்னும் சிலரை அழைத்து கொண்டு இரப்பாளியிடம் சென்றார்.

எங்கே எம் தந்தை எங்கே எம் காத்தவராயன் என அடப்பனார் ஆவேச குரலெழுப்ப இடைமறித்த நெட்டையன் சொன்னான். கப்பத்திற்கு பிணையாக கொண்டு போய் உள்ளனர். பதவி ஏற்பு நாளன்று நாங்களே மீட்டு வருவோம் என்று பயமே இல்லாமல் பாடன் சொன்னான். ஆழியில்தான் உங்கள் பதவியேற்பு என்று என்ன என நெட்டையன் கேட்க காணியாளன் சொன்னான் ஆடி மாசமா பதவியேற்புன்னு கேட்கிறான் என்று. மேலும் கடமைக்காக இரப்பாளி சொன்னவைகளை கேட்டு இரப்பாளியின் ஆணை நூலையும் பெற்று கொண்டு வடக்கு பரதவ கிராமங்களுக்கும், தெற்கு பரதவ கிராமங்களுக்கும், கொள்ளையர்களின் கப்பல்களிலே பயணமானார்கள். இவ்வாறாக இரப்பாளி படையின் பெரும் பகுதி கோட்டையை விட்டு வெளியேறியிருந்தது. 

பாண்டியன்பதியின் அரண்மனை சமையலறையில் சமைத்து கொள்ளையர்கள் உண்டிருந்தார்கள். பாண்டியம்பதி அரண்மனையில் இரப்பாளியும் நெட்டையனும் தங்கிருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல உணவு உண்ட மயக்கத்தில் இரப்பாளி உறங்கிப்போனான் .

கோட்டையை சுற்றி காவலுக்கு நின்ற கொள்ளையர்களை தவிர அனைவருமே நித்திரையில் ஆழ்ந்து போயினர். இரண்டு நாட்களாக தூங்காத மக்கள் தூய தந்தையை நினைத்து, காத்தவராயனை நினைத்து, காணாமல் போன கொற்கையை நினைத்து அழுது அழுது பசியோடு அயர்ந்து தூங்கி போயிருந்தனர் .

அதிகாலை நேரம் தூயதந்தை இரத்த கோலத்தோடு இரப்பாளியின் நெஞ்சுக்குள் வாள் கொண்டு குத்தி இறக்க துடித்தபடி கனவில் இருந்து எழுந்தான் இரப்பாளி. இப்போது அவன் கால்களில் பிசுபிசுப்பாக ஏதோ ஒட்ட உற்று நோக்கியவன் பேயறைந்தாற்போல் அலறினான் ..அவன் அலறல் எங்கும் ஒலிக்க ..... கொள்ளையர்கள் விரைந்து வந்தால் அங்கே கழுத்திலே ஒரு குத்துவாள் இடதிலுருந்து ஊடுருவி வலதாக வெளியே நீண்டிருக்க.... ரத்த வெள்ளத்திற்கு நடுவே கிடந்தான் இரப்பாளியின் பேச்சாளன் நெட்டையன். 

இரப்பாளி முழுவதுமாக உடைந்து போயிருந்தான். தன் அருகிலே கிடந்தவன் பிணமாக கிடக்கிறான் கொலையாளிக்கு நான் தான் முக்கியமானவன் என்னை ஏன் கொல்லவில்லை..என் தளபதியை கொன்ற அதே அடவிலே அதே வேகத்தில், யார் அவன் எங்கே அவன் சிறிது நேரத்தில் இரப்பாளிக்கு பைத்தியமே பிடித்து விடும் போல் ஆனது .

நெட்டையனின் உடலை எடுத்து கோட்டையின் மைதானத்தில் வைத்திருந்தார்கள். மக்கள் அதை தூரத்தில் நின்றே கவனித்து போனார்கள். கழுத்தில் குத்தியிருந்த குத்துவாளை கண்டதும் உற்சாகத்தில் தன்னையும் அறியாமல் காணியாளன் கத்தினான். கொற்கை கோ .....சின்ன ராசா என பின்னாலிருந்து தட்டினான். அவசர குடுக்கை என கொற்கை கோ. 

நெட்டையனின் முடிவை எண்ணி நிம்மதி இழந்திருந்தான் இரப்பாளி. பாவி இரப்பாளிக்கு புலிவால் பிடித்த கதைபோல புன்னையை பிடித்த கதையாயிற்று. இரப்பாளியின் கதை முடிக்க புன்னை கோட்டையிலே கொற்கை கோ துடித்திருக்க கொச்சின் கோட்டையிலே பாண்டியனார் படை திரட்டியிருக்க... 

அடப்பனாரோடு போன கொள்ளையர்கள் ஆழியோடும் பரதவரூர் மண்ணடியோடும் போயிருக்க காலமெனும் காற்று பரதவருக்காய் வீச காத்திருந்தது.

(தொடரும்) 
கடற்புரத்தான் 

பசி தாங்கும் கிழங்கு

கப்பல்களில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு முறையான வரி விதிக்கப்பட்டது. அரசு நேரடியாக மேற்கொண்ட வணிகம் மட்டுமல்லாது பல்வேறு வணிகக் குழுக்களும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. அவர்களில் நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர், மணிக்கிராமத்தார், அஞ்சுவண்ணத்தார், வளஞ்சியர் என பல்வேறு வணிகக் குழுக்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

மணிக்கிராமத்தார் என்போர் பல நகரங்களில் வாழ்ந்து வணிகம் புரிந்தவர்கள். உறையூர் மணிக்கிராமம், கொடும்பாளூர் மணிக்கிராமம், காவிரிப்பூம்பட்டினத்து மணிக்கிராமம் எனும் கல்வெட்டுத் தொடர்கள் இவர்களைப் பற்றிய விவரங்களைக் கூறுகின்றன. வேள்விக்குடி கோயிலின் ஒரு பகுதியை வளஞ்சியரும் திசையாயிரத்து ஐந்நூற்றுவரும் கட்டினர் எனக் கல்வெட்டு கூறுகிறது. 'சோழர் கையாண்ட பாய்மரக்கப்பல் ஓட்டுமுறை’ என்ற கட்டுரையில் ஆய்வாளர் பா.அருணாசலம், பல நுட்பமான தகவல்களைத் தருகிறார். 

சோழர்கள் பயன்படுத்திய கப்பல் ஓட்டுமுறையையும் அவர்கள் கண்டறிந்த வழிகளையும் மீண்டும் ஆராய்ந்து அறிவதற்காக மும்பை பல்கலைக்கழகப் பேராசிரியர் பா.அருணாசலத்தின் மேற்பார்வையில், மும்பை கடலியல் நிறுவன ஆதரவுடன் ஜ.என்.எஸ்.தரங்கிணி என்ற பாய்மரக் கப்பல், சோழர்களின் வழித்தடத்தில் பிரதிபலிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டது.

அந்தக் கட்டுரை, ராஜேந்திரனின் கடல் வழியை அடையாளம் காட்டுகிறது. ராஜேந்திர சோழனின் கடற்படை 1022-ம் ஆண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, கடற்கரையைச் சார்ந்து தெற்கு நோக்கிச் சென்று, தென் நோக்கி ஓடும் நீரோட்டத்தின் உதவியாலும், வன்னி ஒழினி காற்றால் உந்தப்பட்டும் இலங்கையின் வடகரையை அடைந்து, அங்கிருந்து தெற்கு நோக்கிச் சென்று முல்லைத் தீவு, திரிகோணமலை, கல்முனை, அக்கரைப்பட்டி, திருக்கோயில் துறையை அடைந்து, அதன் பின்னர் நேர் கிழக்காக கப்பலை ஓட்டி, சுமத்ரா தீவின் மேற்குக் கரையை அடைந்தது. பிறகு, கடற்கரை ஓரமாகவே தெற்கே சென்று, சுண்டா நீர் நிலையைக் கடந்து, சுமத்ராவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சிறீவிஜயா ஆட்சி செய்த பாலம் பாங் என்ற துறையை அடைந்தது.

கடல் படையெடுப்புக்கு ஏற்றது வங்கக் கடலில் வட கிழக்குக் காற்று ஓயும் காலம். இந்தக் காலநிலை மார்கழி மாதத்தின் இறுதியில் ஆரம்பம் ஆகும். அப்போது, வங்கக் கடலில் புயல்கள் முடிந்து, கடல் காற்றோட்டம், கடல் அமைதி நிலையை அடைந்து இருக்கும். சோழர் காலத்தில் விரல் கணக்கு, நாழிகை வட்டில், கௌவெள்ளிப் பலகை என்ற ராப்பலகை, டப்புப் பலகை ஆகியவையும் ஓரளவுக்குப் பயன்பட்டன. இவற்றால் அறிந்த அளவுகள் தற்கால நுண் கருவிகளின் அளவுகளுக்கு ஈடாக இருந்தன. 

மிகப் பெரிய யுத்தங்களை நடத்திய ஜூலியஸ் சீஸர், அலெக்ஸாண்டர், தைமூர், செங்கிஸ்கான் ஆகியோர்கூட, தங்கள் படையுடன் தரை வழியாகவோ அல்லது நதிகளைத் தாண்டியோதான் படையெடுத்தனர். ஆனால், ராஜேந்திர சோழன் தனது பல்லாயிரம் யானைகளையும் குதிரைகளையும் வீரர்களையும் சுமந்து செல்லக்கூடிய கப்பல்களை உருவாக்கி, அதைக்கொண்டு கடல் தாக்குதல்கள் நடத்தி இருக்கிறான். கடாரம் மட்டுமின்றி பர்மாவில் இருந்து இந்தோனேஷியாவின் தெற்கு முனை வரை ராஜேந்திரன் வென்ற நிலப்பரப்பு ஏறத்தாழ 36 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். 

இவ்வளவு சிரமப்பட்டு நாடுகளை வென்ற ராஜேந்திர சோழன், அவற்றைத் தன் பேரரசுடன் இணைத்துக்கொள்ளவில்லை. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அரசாக திரை செலுத்தி ஆட்சி செய்யவே அனுமதித்து இருக்கிறான். அந்தக் காலத்தில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டு மலாக்கா நீரிணையின் நுழைவாயிலுக்குச் சென்றன. அங்கிருந்து நேராகத் தாய்மலாய்த் தீபகற்பம், சுமத்ரா அல்லது ஜாவா தீவில் உள்ள துறைமுகங்களுக்குச் சென்றன. ஒருவேளை, கப்பல் தென் சீனக் கடலில் பயணம் செய்ய விரும்பினால், தென் கிழக்குப் பருவக் காற்று வீசத் தொடங்குவதற்காக, வாரம் அல்லது மாதக் கணக்கில் துறைமுக நகரங்களில் காத்திருக்கவேண்டி இருந்தது.

அதனால், மீண்டும் பயணம் செய்யச் சாதகமான காற்று வீசும் வரை அவர்கள் தங்குவதற்காக, துறைமுக நகரங்களில் வெளிநாட்டினருக்கானக் குடியிருப்புகள் கட்டப்பட்டன.

இந்தியாவில் இருந்து அந்தப் பகுதிக்கு வந்து, திரும்பிச் செல்லக் குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகின. 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீனக் கடலோரப் பகுதிகளில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்கள் தங்கிச் செல்வதற்கான முன்னணி இடைநிறுத்தத் துறைமுகமாக ஸ்ரீவிஜயா தலையெடுத்தது. பங்கா மற்றும் மலாக்கா நீரிணை வழியாக நடக்கும் வணிகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில்வைத்திருந்த ஸ்ரீவிஜய அரசர்கள், சோழர்களுடன் நல்லுறவுடன் இருந்தனர். 

எனினும், 11-ம் நூற்றாண்டில் சோழ வணிகர்களின் சந்தன மரங்களை ஏற்றி வந்த கப்பல்கள் யாவும் அரசின் பிரதிநிதிகளுக்கு அவர்கள் நிர்ணயம் செய்த விலைக்கு மட்டுமே விற்க வேண்டும் என்ற மறைமுகக் கட்டுபாட்டை உருவாக்கியது. இதனால் ஏற்பட்ட கசப்பு உணர்வு காரணமாகவே சோழர்களுக்கும் ஸ்ரீவிஜய மன்னருக்கும் பகை உருவானது. மேலும், பல ஆண்டுகளாக சீனாவோடு நெருக்கமான நட்பு வைத்துக்கொள்ள விரும்பிய ஸ்ரீவிஜய மன்னர்களின் முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறாமல், சோழர்கள் சீன அரசின் நல்லுறவைப் பெற்றது அவர்களுக்கு மனவேறுபாட்டை ஏற்படுத்தியது. 

இன்னொரு பக்கம், ஸ்ரீவிஜயத்தின் அரசுரிமைப் போட்டி காரணமாக கடல் வணிகர்களின் கப்பல்கள் அடிக்கடி கொள்ளை அடிக்கப்பட்டன. ஏற்றிவந்த பொருட்களில் மூன்றில் ஒரு பகுதி கொள்ளைபோவதைத் தாங்க முடியாமல் அவர்கள் சோழப் பேரரசிடம் முறையிட்டனர். இந்த மூன்று காரணங்களும் ஒன்று சேரவே, சோழர் படை ஸ்ரீவிஜயத்துக்குப் படை எடுத்து ஒடுக்கியது.

கடல் வணிகத்தின் இன்னொரு முக்கிய மையமாக விளங்கிய கம்போடியா, சோழர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதற்காக கம்போடிய அரசன் முதலாம் சூர்ய வர்மன் தனது சொந்தத் தேரை ராஜேந்திர சோழனுக்குப் பரிசாக அளித்துக் கௌரவித்தான். சொழாந்தியம் என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்கள். இவை மிகப் பெரியதாகவும் பெரிய அளவு பொருட்களை சுமந்து செல்வதற்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டு இருந்தன. 

பௌத்த பிக்குகள் இந்தியாவில் இருந்து ஸ்ரீவிஜயா வழியாக சீனாவுக்கு அடிக்கடிப் பயணம் செய்ததாக ஏடுகள் கூறுகின்றன. ஸ்ரீவிஜயாவில் பௌத்த சமயம் பரவி இருந்ததைக் காட்டுவது மட்டுமின்றி, இந்திய - சீனக் கடல் வழியில் முக்கிய மையமாக ஸ்ரீவிஜயா இருந்ததையும் அடையாளப்படுத்துகிறது. கி.பி. 1005-ல் நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரை ஒன்று சூடாமணிவர்மன் என்ற ஸ்ரீவிஜய மன்னனால் கட்டப்பட்டது. அதற்கு, சூடாமணிவர்ம விகாரை என அவருடைய பெயர் சூட்டப்பட்டது. அந்த விகாரை சூடாமணி வர்மனின் புதல்வரும் அவரை அடுத்து முடி சூட்டியவருமான மாறவிஜயதுங்க வர்மனால் கட்டி முடிக்கப்பட்டது. 

ராஜேந்திரச் சோழன் கி.பி. 1006-ல் சூடாமணி விகாரையின் பராமரிப்புக்காக ஆனைமங்கலம் கிராமத்தைத் தானமாக வழங்கியதை, ஆனைமங்கலச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. கடல் பகுதியையும், கடல் வணிகத்தையும் பாதுகாக்க மட்டுமே ஆரம்ப காலங்களில் சோழர்களின் கடற்படை பயன்பட்டதாகத் தெரிகிறது. பிறகு அது, எதிர்ப்புகளை முறியடிக்கப் படையெடுக்க வேண்டிய நிலை உருவானது. சோழர்களின் கடல் எழுச்சி காரணமாக கடல் வணிகம் செழுமை அடைந்தது. இதனால், சோழர்களின் பொருளாதார நிலை உயர்ந்து ஓங்கி இருந்திருக்கிறது.

பொதுவாக, தமிழக மன்னர்கள் வணிகம் மேற்கொள்வதற்காக மட்டுமே கடலில் கலம் செலுத்தினர். கடற்படையைப் பயன்படுத்தி ஒருவர் மற்றவர் மீது சண்டையிட்டுக்கொள்ளவில்லை. நாடு பிடிப்பதற்காக முயற்சி செய்யவில்லை.

'தமிழக அரசுகளும் மௌரியப் பேரரசும்’ என்ற தனது கட்டுரையில் ஆய்வாளர் கணியன் பாலன், தமிழர்கள் காலம் காலமாக வணிகம் செய்வதற்காக பிற தேசங்களுக்குச் சென்றுவந்த விவரங்களை விளக்கமாகக் கூறுகிறார். தமிழகத்தில் இருந்து வணிகம் செய்வதற்காக இன்றைய கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டிய மாநிலங்களைக் கடந்து சென்று பல மாதங்கள் தங்கி வணிகம் செய்தனர் என்ற செய்தி சங்க கால அகப் பாடல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. முக்கியமாகப் பாலைப் பாடல்கள் பாடிய மாமூலனார் இந்தச் செய்தியை மிக விளக்கமாக தனது பாடல்களில் குறிப்பிட்டு இருக்கிறார். 

கி.மு. 4-ம் நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் தமிழ் வணிகர்கள் நேரடியாகச் சென்று தங்கி, வணிகம் செய்தனர் என்பதை சங்க காலப் பாடல்களில் உள்ள குறிப்புகளும், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரமும் உறுதி செய்கின்றன. 

தமிழகத்தில் இருந்து வணிகம் செய்ய வடநாடு செல்பவர்கள், முதலில் வெய்யூர் எனப்படும் இன்றைய வேலூர் வழியாக அல்லது கொங்கு நாட்டில் உள்ள தகடூர் என்னும் இன்றைய தர்மபுரி வழியாகச் சென்று, கர்நாடகத்தைக் கடந்து சாதவ மன்னர்களின் தலைநகராக இருந்த படித்தானம் எனும் இன்றைய ஒளரங்காபாத் அருகே போய்ச் சேர்ந்தனர். சேர நாட்டில் இருந்து துளு நாட்டு வழியாகவும் படித்தானம் போக முடியும். பின்னர், படித்தானத்தில் இருந்து தக்காணப் பாதை வழியாக உஜ்ஜயினி முதல் பாடலிபுத்திரம் வரையிலான வட நாட்டு நகரங்களுக்குச் சென்று வந்துள்ளனர்.

சங்க காலத்தில் ஆந்திர, கலிங்க நாடு வழியாக வட நாடு செல்லும் பாதையும் இருந்துள்ளது. மாமூலனார் தனது அகப் பாடல்களில் புல்லி என்ற குறுநில மன்னன், வேங்கட மலையைக் கடந்து சென்றது குறித்துப் பாடி உள்ளார். இந்த வழியில் செல்பவர்கள் கலிங்கத்துக்கு வணிகம் செய்யச் சென்றவர்களாக இருத்தல் வேண்டும். பிறகு, கலிங்கத்தில் இருந்து வட நாடு செல்லப் பாதைகள் இருந்தன. ஆனால், கர்நாடகம் வழியாக படித்தானம் சென்று, பின் வட நாடுகள் செல்லும் பாதையே புகழ்பெற்ற தக்காணப் பாதையாக இருந்துள்ளது.

வணிகத்தைப் பாதுகாப்பதில் தமிழக அரசுகளுக்கு இடையே ஐக்கியக் கூட்டணி இருந்ததாகத் தெரிகிறது. தமிழ் அரசுகள் முக்கியமாக, மூவேந்தர்கள் ஒன்றுசேர்ந்து செயல்பட்டு இருக்க வேண்டும். அப்படியான தமிழ் மன்னர்களின் கூட்டணி பற்றி கலிங்க மன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு குறிப்பிடுகிறது. அத்திக்கும்பா கல்வெட்டின் காலம் கி.மு. 165 ஆகும். சமீபமாக நடக்கும் கடலியல் ஆய்வுகள் சோழர்களின் கடற்படை வலிமை குறித்து புதிய வெளிச்சங்களை அடையாளப்படுத்துகின்றன.

குறிப்பாக, ஆய்வாளர் ஒரிசா பாலு தமிழர்களின் கடல் வணிகப் பாதை மற்றும் பயண வழிகள் குறித்து புதிய கருத்துகளைத் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைக்கிறார்.

''கடல் வாழ் ஆமைகள் முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பதற்காக பல்லாயிரம் மைல்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநிலக் கடற்கரைகளுக்கு வருகின்றன. இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்களின் புராதனக் கடல் வணிக வழி குறித்த அரிய செய்தி உள்ளதாக பாலு கண்டறிந்து இருக்கிறார். அதாவது, சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85 கி.மீ. தூரமே நீந்திக் கடக்க முடியும். ஆனால், இந்த ஆமைகள் குறுகிய காலத்தில் பல்லாயிரம் மைல்களைக் கடந்து வருகின்றன. 

இதற்குக் காரணம், கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம் கி.மீ. நீந்தாமல் மிதந்துகொண்டு பயணிக்கும் விஷயம் தெரியவந்திருக்கிறது. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின் பெயர்களும் அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடே இருந்திருக்கிறது. ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இனத்தின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்பு உள்ளதாக இன்றளவும் இருக்கின்றன. 

பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாகப் பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோலோச்சி இருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும்'' என்கிறார் ஒரிசா பாலு. 

அவர் சுட்டிக்காட்டும் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இது, தமிழகத்தில் விளையும் ஒருவகைக் கிழங்கு. மீனவர்கள் கடலோடும்போது, பல நாட்கள் பசி தாங்குவதற்கு இவற்றையே உணவாகக்கொள்ளும் வழக்கம் இன்றளவும் இருக்கிறது. இதே வழக்கத்தை தமிழுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் மியான்மர், 

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் பெயர் 'குமரா’ என்பதாகும். பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் 'திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் 'அம்மா’ வலது பாகம் 'அக்கா’ இடது பாகம் 'வக்கா’. அடிப்பாகம் 'கீழ்’. இவ்வாறு, கடலியல் சார்ந்த புதிய ஆய்வுகளின் வருகை சோழர்களின் மிச்சங்கள் தாய்லாந்திலும் கம்போடியாவிலும் கடாரத்திலும் எவ்வாறு இருக்கின்றன என்பதை அடையாளப்படுத்துகின்றன.

ஆனாலும், வலிமைமிக்க சோழர்களின் கடற்படை எவ்வாறு அழிந்துபோனது? அந்தக் கடற்படையின் வரைபடங்கள், கப்பல் கட்டும் தொழில்நுட்பம் போன்றவை ஏன் நமக்கு கிடைக்கவில்லை என்பவை இன்னமும் கண்டறியப்படாத தமிழகத்தின் அரிய வரலாற்று உண்மைகள்.

அவை முறையாக ஆராயப்படும்போது தமிழனின் பராம்பரியக் கடலியல் அறிவும், தொழில்நுட்பமும் முழுமையாக வெளிப்படக்கூடும்.

எஸ்ராமகிருஷ்ணன்....


பொரித்த மீன்

தேவையானவை:
உங்களுக்கு பிடித்த மீன் 5 துண்டுகள்
(சின்ன மீன் என்றால் 5 மீன்கள்)
மிளகாய் தூள் 1 தே.க
மஞ்சள் தூள் 1/2 தே.க
மல்லி தூள் 1/2 தே.க
கரைத்த புளி 1 தே.க
உப்பு தேவைக்கேற்ப
பொரிக்க எந்த எண்ணெய் பயனடுத்துவீர்களே, அது கொஞ்சம்

செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் எண்ணெயை விட்டு சூடாக்கி கொள்ளுங்கள். [மீனை சுத்தம் செய்து மேற்கூறிய தூள்கள், புளி, உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.] மிதமான சூடு வந்ததும் மீன் துண்டுகளை போட்டு பொரிய விடுங்கள்.
2. மீன் ஒரு பக்கம் பொரிந்து வந்ததும் அடுத்த பக்கம் திருப்பி பொரிய விடுங்கள்.
3. இரண்டு பக்கமும் பொரிந்ததும், மீனை எடுத்து எண்ணெயை வார விட்ட பின்னர் பரிமாறுங்கள்.
* மீன் பொரிக்கும் போது கொஞ்ச வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நீள வாக்கில் பொரித்து எடுத்தாலும் நல்ல சுவையாக இருக்கும் என நான் சொல்லியா நீங்க தெரிஞ்சுக்கணும்!

தமிழ் இலக்கியங்களில் கடல் சூறாவளியும், கடலழிவில் இருந்து மீளுதலும் ஆன குறிப்புகள்


செம்மொழி இலக்கியங்களில் கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் திணை பற்றிய பாடல்கள் பல உள்ளன. இவற்றின் வழியாகக் கடல்புறத்தில் வாழ்ந்த பண்டைத் தமிழர்களின் வாழ்நிலையை அறிந்து கொள்ள முடிகின்றது. கடலோடு அவர்கள் கொண்டிருந்த தொடர்பு, கடல்படு பொருள்கள் கொண்டு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறை, கடல் வாழ்வின் சவால்களில் இருந்துத் தங்ளைத் தற்காத்துக் கொண்டமை முதலான பல வாழ்முறைகளைச் செம்மொழி இலக்கியங்கள் அறிவித்து நிற்கின்றன.

தலைவன் தலைவியைச் சந்தித்துவிட்டுத் தேரேறிச் செல்கின்றான். அவ்வாறு அவன் தேரில் ஏறிச் செல்லும் காட்சி பெருங்கடற்பரப்பில் பரதவர்கள் கப்பல் ஏறிச் செல்வது போல இருந்தது என்று கடல்வழியையும், நில வழியையும் ஒருங்கு வைத்துக் காண்கிறது ஒரு அகநானூற்றுப்பாடல்.


சிறுகுடிப் பரதவர் பெருங்கடல் மடுத்த

கடுசெலல் கொடுந்திமிழ்போல

நிவந்துபடு தோற்றமொடு இகந்துமா யும்மே! (அகநானூறு.330)


என்ற இப்பாவடிகளில் "கடுசெலல் '' என்ற சொற்பகுதி பெருங்கடலில் செல்லும் பயணம் எளிய பயணம் அன்று கடுமை வாய்ந்த பயணம் என்பதை எடுத்துரைக்கின்றது.

மேலும் தமிழன் கடற்பகுதிகளில் எவ்வெவ் தொழில்கள் செய்தான் என்பதைப் பின்வரும் பாடல் உணர்த்துகிறது.


அவனொடு

இருநீர் சேர்ப்பின் உப்புடன் உழுதும்

பெருநீர்க்குட்டம் புணையோடு புக்கும்

படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்

தருகுவன் கொல்லோ தானே (அகநானூறு 280)


வரிய நிலையுடைய தலைவன் செல்வ வளம் மிக்கத் தலைவியைக் காதலிக்கிறான். இதன் காரணமாக அவளை அடைய வழி எவ்வாறு என்று தேடுகிறான். இதற்கு ஒரு வழியாக அவன் தலைவி வீட்டில் தொண்டுகள் பல செய்ய முற்படுகிறான். குறிப்பாக தலைவியின் தந்தைக்கு அருகில் இருந்து அவருடன் இணைந்து நன்முறையில் பணியாற்றுகிறான். இந்தக் காரணம் கருதியாவது தன்மகளை தொண்டு செய்யும் தலைவனுக்கு தந்துவிடானா என்பதுதான் தலைவனின் ஏக்கம்.

இப்பாடலில் இடம்பெற்றுள்ள "பெருநீர்க்குட்டம்'' என்ற குறிப்பு கடலைக் குறிப்பதாகும். அதனுள் புணையோடு புக்கும் என்பதனால் தலைவியின் தந்தையோடு இத்தலைவன் பெருங்கடலில் சென்று மீன்பிடித்தல் போன்ற பல தொழில்களைச் செய்தும் (படுத்தும்), பணிந்தும், பக்கத்திலேயே இருந்தானாம். இதன் காரணமாகவாவது தலைவியின் தந்தை, தலைவியைத் தந்து நிற்கமாட்டானா என ஏங்குகிறான் இத்தலைவன்.

இப்பாடலின் வழியாகத் தமிழர்களின் கடல் தொழில்களில் உள்ள கடுமை தெரியவருகிறது. இக்கடுமையோடு பற்பல தடைகளையும் தமிழர்கள் கடல் தொழிலில் அனுபவித்துள்ளனர். (அனுபவித்தும் வருகின்றனர்)


. . . திண்திமில்

எல்லுத் தொழில்மடுத்த வல்வினைப் பரதவர்

கூர்உளிக் கடுவிசை மாட்டலின் பாய்புஉடன்

கோள்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை

தண்கடல் அசைவளி எறிதொறும் வினைவிட்டு

முன்றில் தாழைத் தூங்கும் (அகநானூறு 340)


இப்பாடலில் மீன் தொழில் செய்யச் செல்லும் தமிழர்க்கு ஏற்பட்ட தடைகள் பல காட்டப் பெற்றுள்ளன. பரதவர்கள் மீன் பிடிப்பதற்காக வலை கட்டி வைக்க அந்த வலையையே வேகம் கொண்டச் சுறா மீன்கள் அழித்துவிடுகின்றன என்ற குறிப்பு கிடைக்கின்றது.

இவ்வகையில் கடல்புற வாழ்வில் பல இடைஞ்சல்கள் உள்ளன என்றும் அவற்றைக் கடந்து மேலாண்மை செய்து தமிழன் அக்காலத்திலேயே வாழ்ந்துள்ளான் என்பது தெரியவருகிறது.


"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உறவோன் மருக'' (புறநானூறு: 66)


என்று புறநானூறு கரிகாலனைப் போற்றுகின்றது. அதாவது கடலில் கப்பல் செலுத்தி காற்றை வசப்படுத்தியவரின் மருமகன் கரிகாலன் என்று இப்பாடல் அவனைப் புகழ்கிறது. கரிகால் பெருவளத்தான் காலத்தில் திருந்திய கடல் வாணிப முறை இருந்தது என்பது தெரியவருகிறது.

மேற்கருத்தை உறுதி செய்யும் வண்ணமாகக் கரிகாலனின் பட்டினமான காவிரிப்பூம்பட்டிணத்தில் கடல் படு பொருள்களும், நிலம் படு பொருள்களும் வந்து குமிந்திருந்த நிலையைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் பாடியுள்ளார்.


" நீரின் வந்த நிமிர் பரிப்புரவியும்

காலின் வந்த கருங்கறி முடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலை பிறந்த ஆரமும் அகிலும்

தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகின்

(பட்டினப்பாலை 183193)


மேற்கண்ட பாடலில் காவிரிப்பூம்பட்டிணத்தில் வந்திறங்கியிருந்த, ஏற்றமதியாகவிருந்தப் பொருள்களின் பட்டியல் எடுத்துரைக்கப் படுகிறது.

அமைதியாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் கடல் பரப்பு சீறி எழுகின்றபோது பேரழிவு ஏற்பட்டுவிடுகின்றது. இந்தப் பேரழிவுகளில் இருந்து மீட்டெழவேண்டிய ஆற்றலை, சவாலை மனித இனம் பெற்றுய்ய வேண்டியிருக்கிறது. இப்பேரழிவுகளில் இருந்து மனித குலத்தைக் காக்க பல்வழிகளில் போராட வேண்டியிருக்கிறது. தற்போது பேரழிவுத் தடுப்பு மேலாண்மை என்ற புதிய மேலாண்மைப்புலம் உலக அளவிலும், இந்திய அளவிலும் ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேலாண்மை அமைப்பு மாநிலங்கள் அளவிலும் செயல்பட்டுவருகின்றது.

பேரழிவு என்பதை " மனிதர்களால் மீட்டெடுக்க முடியாத அளவிற்கு பேரழிவுகளை உண்டாக்கும் பெருத்த உயிர் மற்றும் பொருள்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்தும் சூழ ல் '' என்று விளக்கிக் கொள்ளலாம்.இதனை இருவகையாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று இயற்கை ஏற்படுத்தும் பேரழிவுகள் என்பது ஆகும். இதனுள் கடல்கோள், நிலச்சரிவு, பூகம்பம், புயல் போன்றனவற்றைக் கொள்ளலாம். மற்றது மனிதன் ஏற்படுத்துவதாகும். இதனுள் போர் அழிவுகள், இராசயனப் பொருள்களினால் ஏற்படும் அழிவுகள், அணுகுண்டு கதிர்வீச்சு போன்றவற்றால் ஏற்படும் சீரழிவுகள் போன்றனவற்றை இதனுள் அடக்கலாம்.

செம்மொழி இலக்கியங்களில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட சீரழிவுகளையும், அதனைத் தடுக்கும் முறைகளையும், அதிலிருந்து மீண்ட முறைகளையும் காணமுடிகின்றது.

கடல் சூறாவளி

கடலில் ஏற்படும் புயல் போன்றவற்றால் பல அழிவுகள் ஏற்படுகின்றன. கடலில் வீசும் சூறாவளியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மதுரைக் காஞ்சியில் ஒரு குறிப்பு இடம் பெற்றுள்ளது.


பனைமீன் வழங்கும் வளைமேற்பரப்பின்

வீங்கு பிணி நோன்கயிறு அரீஇ இதைப் புடையூ

கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்

கடுங்காற்று எடுப்ப கல்பொருது உரைஇ

நெடுஞ்சுழி பட்ட நாவாய் போல

இருதலைப் பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து

கோலோர்க் கொன்று மேலோர் வீசி

மெனபிணி வன்தொடர் பேணாது காழ் சாய்த்து

கந்து நீந்து உழிதரும் கடாஅ யானையும்

அம்கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து

(மதுரைக் காஞ்சி 375385)


என்ற இந்தப் பாடல் அடிகளில் இயற்கைப் பேரழிவான கடல் சூறாவளி தந்த அழிவுகளும், மன்னன் நடத்தியப் போரின் அழிவுகளும் ஒப்பு நோக்கப் பெற்றுள்ளன.

குறிப்பாக பனைமீன் என்ற வகை சார்ந்த மீன்கள் உலவும் கடற்பரப்பில் பெருங்காற்று வீசியது. இதன் காரணமாக மரக்கலங்களின் மேலே கட்டப் பெற்றிருந்த பாய்மரச் சீலைகள் கிழிந்து வீழ்ந்தன. காற்று நான்கு பக்கங்களிலும் பெருமளவில் வீசியதால் பாய்கள் கட்டப் பெற்றிருந்த மரங்கள் கூட முறிந்து வீழ்ந்தன. நங்கூரக் கல் கயிற்றுடன் மோதிப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக கடலில் சென்ற கலங்கள் அசைந்து ஆழச் சுழியில் அகப்பட்டு அழிந்தொழிந்தன. இத்தோற்றத்தைப் போல போர்க்களத்தில் யானைகள் அழிவைச் செய்தன. யானைகள் தாங்கள் கட்டப் பெற்றிருந்த முளைக் கம்புகளைச் சிதைத்து, இரும்புச் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு யானைகள் அழிவைச் செய்ய கிளம்பினவாம்.

இவ்விரு காட்சிகளின் வழியாக மதுரைக் காஞ்சி இயற்கைச் சீரழிவு, போர்ச்சீரழிவு இரண்டையும் ஒருங்கு காட்டியுள்ளது. இவற்றின் இழப்புகளையும் பதிவு செய்துள்ளது. இவற்றைத் தடுத்திட வேண்டும் என்ற எண்ணம் படிப்பவர் மனதில் ஏற்படும் வண்ணம் அழிவுகள் தமிழ் இலக்கிய நெறிப்படி மிக்க அழுத்தம் கொடுத்துச் சொல்லப்பெற்றுள்ளன. அதாவது உயிரளபடை என்ற நிலையில் அழுத்தம் கொடுத்து நீட்டித்துச் சொல்ல வேண்டிய நிலையில் அழவுகளை மதுரைக் காஞ்சி சுட்டிக்காட்டியுள்ளது.

"அரீஇ, உரைஇ '' ஆகிய சொற்கள் அழுத்தம் மிக்க சொல்லிசை அளபெடை சொற்களாகும். அழிவின் விளைவுகள் கருதி இதைப் பாடவந்த மாங்குடி மருதனார் அழிவு அழுத்தம் கருதி சொற்களை அழுத்தத்துடன் இப்பாடலில் படைத்துள்ளார் என்பது கருதத்தக்கது.

மேலும் மதுரைக் காஞ்சி என்ற செம்மொழிப் பனுவல் பாடப்பட்டதன் நோக்கமே நிலையாமை உணர்த்துதலே ஆகும். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு வீடுபேற்றைப் பற்றி அறிவுறுத்தவும், போரின் மீது அவன் கொண்டிருந்த பெருவிருப்பைத் தடுக்கவும் மதுரைக் காஞ்சி பாடப் பெற்றுள்ளது.


...வல்பாசறை

படுகண் முரசம் காலை இயம்ப

வெடிபடக் கடந்து வேண்டு புலத்து இறுத்த

பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்

கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர்

திரை இடு மணலினும் பலரே உரைசெல

மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே''

( மதுரைக் காஞ்சி 231238)


என்ற பகுதியில் போர்செய்து ஒழிந்த மன்னர்கள் கடல் மணலை விடப் பெரிய அளவினர் என்று ஏளனக் குறிப்பு விளங்கச் செய்யப்பெற்றுள்ளது. உயிர்க்கொலைகளை மிகுவிக்கும் போரினைப் பற்றிய ஏளனக் குறிப்பு இதுவாகும். இப்போர்த் தொழிலை விடுத்து நிலைத்த அருள்வழியைத் தேடு என்பது மதுரைக்காஞ்சிப் பாடலின் அடிக்கருத்தாக விளங்குகிறது.

கப்பல் அழிவில் இருந்துத் தப்புதல்

கடலில் செல்லும் கப்பல் இயற்கைச் சீற்றத்திற்கு ஆளாகின்றபோது அதில் இருந்து மீண்டெழுந்த மனித குல முயற்சியையும் செம்மொழி நூல்கள் பதிவு செய்துள்ளன.


கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு

பலர்கொள் பலகை போல

வாங்க வாங்க நின்று ஊங்கு அஞர் நிறையே

(நற்றிணை 30)


இப்பாடல் பரத்தையர்கள் பலரின் பழக்கத்திற்கு உரிய தலைவன் ஒருவனை இடித்துரைக்கும் போக்கில் தலைவி கூறிய பாடலாகும். அதாவது கடல்மரம் எனப்படும் கப்பல் கவிழ்ந்துவிட்டால் அதில் பயணித்தவர்கள் ஏதாவது கைக்குக் கிடைக்கும் பொருளைக் கொண்டுத் தப்பிக்க முயலுவர். அந்நிலையில் ஒரு பலகை கடலில் மிதக்கிறது. அந்தப் பலகையைப் பிடித்து உயிர் தப்பிக்க பலர் முன்னேறுவர். ஒரு பலகையைப் பிடிக்கப் பலர் முயன்றுக் கைப்பிடித்தல்போல தலைவனின் கைகளை பலராகிய பரத்தையர்கள் பிடித்ததாகத் தலைவி இடித்துரைத்துத் தலைவனின் இயல்பை இப்பாடலில் சுட்டுகிறாள்.

இதே நிலையில் ஆதிரையின் கணவனாகிய சாதுவன் மணிமேகலைக் காப்பியத்தில் கடலில் பலகை ஒன்றின் துணை கொண்டு உயிர்தப்புவான்.


"நளியிரு முந்நீர் வளிகளன் வௌவ

ஒடிமரம் பற்றி ஊர் திரையுகைப்ப ''


என்று மணிமேகலை இச்சூழலை விளம்பும். அவன் அவ்வாறு தப்பித்து வேறு ஓர் நிலப்பகுதிக்குச் சென்றுவிடுவான். நாகர் வாழும் மலை அதுவாகும். அங்கு அவன் நாகர்கள் பேசும் மொழி பேசி அவர்களின் அச்சுறுத்தலில் இருந்துத் தப்புவான்.

இவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் கடல் அழிவுகளும் , அதில் இருந்து மீண்ட மனித குலத்தின் இயல்புகளும் எடுத்துரைக்கப்படுகின்றன.


ஊழி பெயரினும் தான்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்ப டுபவர் ( திருக்குறள் 989)


என்ற திருக்குறள் தமிழர்களின் பேரழிவு எதிர்ப்பிற்கான ஆணிவேரான குறள் ஆகும். ஊழி பெயர்கின்ற அளவிற்குத் துன்பம் வந்திடினும் தன்னிலை பெயராமல் இருப்பவர்களாக மனிதர்களை வளப்படுத்துவதற்கு, சான்றோர்களாக ஆக்குவதற்கு பேரழிவு மேலாண்மை உதவி வருகின்றது என்பது கருதத்தக்கது.

முடிவுகள்

இவ்வாய்வுக் கட்டுரையின் வாயிலாகப் பின்வரும் முடிவுகள் எட்டப்படுகின்றன.

பேரழிவுகள் அடிப்படையில் இயற்கைப் பேரழிவு, மனிதனால் உண்டாக்கப்படும் பேரழிவு என்று இரு வகைப்படும். இவை இரண்டும் மனித இனத்திற்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியன என்பதில் ஐயமில்லை. இவையிரண்டையும் ஒருசேரக் கருதி இவற்றைத் தடுக்க எழுந்த முதல் தமிழ்க்குரல் செம்மொழி இலக்கியமான மதுரைக் காஞ்சியின் குரல் என்றால் அது மிகையில்லை.

கடல் சூறாவளி பற்றிய குறிப்புகளையும், கடல் பேரழிவில் இருந்து மனிதன் தப்பிக்க முயலும் முயற்சிகளையும் தமிழ் இலக்கியங்களில் பரக்கக் காணமுடிகின்றது. மணிமேகலை, நற்றிணை, மதுரைக்காஞ்சி போன்றவற்றில் பேரழிவு தடுப்பு மேலாண்மை பற்றிய செய்திகள் காட்டப்பெற்றுள்ளன.

மதுரைக் காஞ்சியில் மனிதர்கள் எதிர்கொள்ளும் பேரழிவுகளைச் சுட்டும்போது அவற்றினைச் சொல்லழுத்தம் கொடுத்துக் காட்டியிருப்பது அழிவின் துயரத்தை சொல்லாலும் பொருளாலும் உணர்த்திக்காட்டுவதாக உள்ளது.

தொடர்ந்த மனித வாழ்வில் பேரழிவுகள் நடைபெற்று வந்துள்ளன. அதிலிருந்து மீண்டு மனிதஉயிர்களும், மற்ற உயிர்களும் எழுந்தே நின்றுள்ளன. இன்னும் எழுந்து நிற்பதற்கான மன, உடல் உறுதிகளை மனித உலகம் பெற வேண்டும் என்பதே பேரழிவு மேலாண்மையின் உயரிய நோக்கமாகும்.

பயன்கொண்ட நூல்கள்

1. சுப்பிரமணியன்.ச.வே.,(உ.ஆ), சங்கஇலக்கியம், எட்டுத் தொகை தொகுதிகள் 1, 2, 3 மணிவாசகர் பதிப்பகம், 2010

2. நாகராசன்.வி. (உ. ஆ) பத்துப்பாட்டு, நியு செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை, 2004

நன்றி: www.manidal.blogspot.in
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com