இரத்த பூமி - பாகம் 7
படுக படுக்காளி பயலுவளா… இப்போது பெண்கள் ஆண்கள் என பரதவர்கள் 500 க்கும் அதிகமானோரில் ஆண்கள் கோவிலிலும் பெண்கள் ஆயுத கிடங்கிலும் இருந்தனர். பெண்கள் மத்தியிலே கொற்கை கோ வை பற்றியே பேச்சு நடந்து கொண்டிருந்தது இன்னும் கொஞ்ச நாள்களில் இலங்கை பரத்தி யை மணம் செய்ய இருந்த நேரத்தில் இப்பிடி ஆகி விட்டதே ஏதோ விஷம் தடவிய குத்து வாளாம் கொற்கை பிழைப்பது கஷ்டமாம் என அவரவருக்கு தோன்றிய கிடைத்த தகவல்களை பரிமாறி அழுது புலம்பிக்கொண்டிருக்க முத்தம்மை மட்டும் பிரம்மை பிடித்தவளாய் இருந்தாள்.
அதே நேரத்தில் கோவிலில் இருந்த பரதவர் மத்தியில் அன்று கொற்கை கோ வை கருவிக்கு கொண்டு போன இருவரும் கூட்டத்தில் பெரும்பிரச்சனையை கிளப்பி கொண்டிருந்தார்கள் சாதி தலைவனாம் அரசனாம் மண்ணாங்கட்டி வசமா நம்மளையெல்லாம் சிக்க வைச்சிட்டு அப்பனும் மகனும் குடும்பத்தோட ஓடிட்டானுவ பாண்டியம்பதி ன்னு தலையில வச்சு கொண்டாடுனானுவ இப்போ எல்லாரு தலையையும் நாயக்கமாரு வெட்டி எடுக்க போறானுவ அப்பவே சொன்னோம் ஒரு பயலுக்கும் காது கேட்கவே இல்ல என வாய்க்கு வந்தபடி பாண்டியம்பதி குடும்பத்தை வசை பாடி கொண்டிருக்க கூட்டத்திலிருந்து பெரும் உருமலோடு எழும்பினார் பெரியவர் அடப்பனார்.
கூடவே இருந்து குழி தோண்ற படுக படுக்காளி பயலுவளா யாரை பத்திடா பேசுறியள்வ ........ உங்க எளவுலதானே வேதாளை போருல மவளுக்கு பாத்த மாப்பிள்ளையை பலி கொடுத்தாரு... நேத்தைக்கும் ஒரு மாசத்துல கல்யாணம் பண்ண போர மகன் வெட்டு பட்டு சாக கிடக்கிறான். அவரு ஊர் ஊரா போய் ஆள் சேர்த்துக்கிட்டு அலையுறாரு படுபாவி புழுக்கை பயலுவ பேசுற பேச்சைப்பாரு உங்களையெல்லாம் உயிரோடு உட்டா பாண்டிமார் ஒற்றுமையே இல்லாம போயிரும் அடிச்சி கொல்லுங்கடா இவன்வளை என பாய மொத்த கூட்டமும் கொந்தளித்து பாயவும் அப்போது அங்கு வந்த தூய தந்தை அய்யா அடைப்பனாரே பொறுங்கையா என மன்றாடி கூட்டத்தை அமைதி படுத்தினார்.
அப்போதுதான் கவனித்தார்கள் தூய தந்தையோடு கேப்டனும் ராயன் காணியாளனும் நின்று கொண்டிருந்தார்கள். ராயன் சத்தமாக கூறினான் அடப்பனார் அய்யா இதோ நமது பெரியய்யா கிட்ட இருந்துசெய்தி வந்திருக்கிறது என வரைவு பட்டொன்றை விரித்து படிக்கலானான்.

காலைப் பொழுது விடியும் பொழுது இரப்பாளி நாயக்க படைகள் கோட்டை கதவுகளை வெடி வைத்து தகர்த்து உள்ளே நுழைந்தன. எங்கும் மயான அமைதி எதிரிகள் எதிர்பார்த்து வந்த தாக்குதல் ஏதுமில்லாது. பரதவர்கள் அமைதியாக இருந்ததால் எதிரிகளும் தாக்குதல் செய்யாமலே சுற்றி வளைத்திருந்தனர். கோட்டை மதிலேறி கொள்ளையர்கள் கோட்டையை கைப்பற்றி கொண்டனர்.
உள்ளே பதுங்கியிருந்த பரதர், பரத்தியர் மற்றும் போர்த்துகீசிய வீரர்கள் அனைவரையும் இழுத்து வந்து கோட்டைக்குள்ளே ஆலயத்தின் முன்பு வெட்ட வெளியில் உட்கார வைத்தனர். இறுதியாக தனது கொள்ளைக்கார தளபதிகளோடு வெற்றி மமதையில் வந்து கொண்டிருந்தான். இரப்பாளி அப்போது கோட்டையின் மேல் பறந்து கொண்டிருந்த போர்த்துகீசிய கொடியை வெட்டி சாய்த்து நாயக்க கொடியை நாயக்க வீரன் ஏற்றி கொண்டிருந்தான்.
இதைக் கண்ட இரப்பாளி சைகை காட்ட இரப்பாளியை சுற்றி நின்ற தளபதிகளின் துப்பாக்கிகள் கக்கிய குண்டுமழையில் நாயக்க வீரனின் உடல் சல்லடையாகி மேலிருந்து கீழே கூட்டத்தின் நடுவே விழுந்து துடித்து அடங்கியது. கூட்டமே நடுநடுங்கி கிடக்க இரப்பாளியின் தளபதி ஒருவன் பச்சை வண்ணத்தின் நடுவே வெள்ளை பிறை கொண்ட இஸ்லாமிய கொடியையும் கூடவே கொள்ளையர்களின் கொடியான மண்டை ஓடு கொடியையும் ஏற்ற இரப்பாளி ஆவேசமாக அல்லாஹு அக்பர் என சப்தமிட மொத்த கூட்டமும் அல்லாஹு அக்பர் என முழக்கமிட்டனர்.
இப்போது பரதவர்களை காட்டிலும் நாயக்க வீரர்கள் பயத்திலே உறைந்து போய் இருந்தார்கள். சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்டது போல உண்மையில் விதாலனோடு சேர்ந்து கோழிக்கோடு சமாரின் சதி வலை பின்னும் போதே விதாலனையும் சதித்து இரப்பாளியின் மூலம் போர்துகீசியரை வேட்டையாடி பரதவர்களை இஸ்லாமியர்களாக மாற்றி பரதவர்களை பரதவகடலை மூர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். அதற்காகவே இரப்பாளியை மன்னாருக்கு அரசனாக்குவதாக ஆசைகாட்டியே புன்னை தாக்குதலில் ஈடுபடுத்தி இருந்தான்.
அதனாலேயே இரப்பாளி தனது ஆசைக்கு எதிரான நாயக்கரை அச்சுறுத்தி வெளியேற்றுவதிலேயே இரப்பாளி குறியாய் இருந்தான். இப்போது ராஜா தோரணையோடு கொள்ளைக்கார இரப்பாளி மக்கள் கூட்டத்தை சுற்றி வந்தான். கூட்டத்திலே இளவயது பரத்திகளும் குழந்தைகளும் இல்லாதது சந்தேகத்தை தூண்ட இரப்பாளி ஏதோ தனது தளபதிகளுக்கு ஆணை இட பாண்டியம்பதி அரண்மனையை முழுதுமாக ஆராய்ந்து பார்த்த பொழுது யாருமேயில்லை. காரணம் வள்ளி நாச்சியம்மையும் அவர்களது மகளும் பரத்திகளோடு கூட்டத்தில் இருந்தனர். ஆனால் தூய தந்தை, கேப்டன் கோட்டிங்கோ, அவரது மனைவி, மகள் நால்வரையும் சங்கிலியால் பிணைத்து மக்கள் முன் இழுத்து வந்தனர். தூய தந்தையை அந்நிலையில் பார்த்த பரதவர்களுக்கு பெரும் துக்கமாகி போனது.
இறை ஏசுவை காணாத பரதவர் வாழ்வில் இறையாய் வந்தவர் தான் பரதவ புனிதர் சவேரியார் அவரது இறை வாரிசாகவும் பரதவரின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த தூய தந்தை ஹென்ரிக் ஹெண்ட்ரிகஸ் பற்றி நீண்ட குறிப்புகள் பல உள்ளன. அவருக்காக அவரது பணிகளுக்காக இந்த பரதர் சமூகம் காலங்கள் கடந்தாலும் கடன் பட்டு இருக்கிறது அவரை கண்ட பரதவர்கள் வாய் விட்டு அழுதனர். ஏதோ ஒன்று நடக்கிறது அதனை தனது பாணியிலேயே அச்சுறுத்தி கண்டு பிடிக்கும் எண்ணத்தோடும் பகைவர்களால் பரதவர் பற்றி எடுத்து சொல்லப்பட்ட மூர்களை பழிவாங்கிய பழைய தாக்குதல்களை எல்லாம் வஞ்சனையாய் கொண்டபடி பரதவர்களை இம்சிக்க துடித்தான். வெறி பிடித்த ஓநாய் போல அரபியில் கத்தினான்
Gavvi parathi kullu wine
aana javvuth vaahath parathi
intha savvi mouth alf nafar ?
மக்கள் புரியாது பயந்து நடுங்கினர். அப்போதுதான் அந்த நெட்டையன் தமிழிலே சொன்னான்.
வீர பரத்தியள எங்கப்பா, ஒருத்திய தொட்டா, ஆயிரம் பேரை கொல்லுவிங்களாமே…
Lakkin aana maa ebahaa
Kullu parathi fechuf sheaba
தொடர மாதிரி ஒண்ணுமே இல்லை … எல்லாமே கிழடா இருக்கு….
Aana irappaali atha mekkaan
Aana mudhir
நான் இரப்பாளி , இனி நான்தான் இங்கே அரசன்… மக்கள் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூயதந்தை கேப்டன் அவர் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து கொலை வெறியோடு சொன்னான்.
alathul allah huu portukal asqaf huu
huu soja, huu patchaa, paath nafer kullum
aana savvi moth intha jittham
இந்த அல்லா விரோதி இவனையும், இந்த போர்சுகல் தளபதி அவன்பொண்டாட்டி குழந்தை எல்லோரையும் உங்க கண்ணு முன்னால கொல்லபோறேன்.
Savvi kas moth valla
Savvi.......moth valla
Savvi mueallaq moth
வெட்டி கொல்லணுமா, குத்தி கொல்லணுமா, இல்லை தூக்கில போட்டு கொல்லணுமா
Paat vahat nafar paaki
Huu savvi moth aana asqaf
Wine huu geep huu
Halli huu eegee
Thak nafar kullum ena mowjood
இன்னொருத்தன் பாக்கி இருக்கான், என் தளபதியை கொன்னவன், அவனை எங்கே கொண்டுவா அவன் கிடைக்கிற வரை இவன்களுக்கு சவுக்கடி கொடுத்துட்டே இரு….
Aana maa epahaa haraam mal bahar
Allahu akbar la elahu ilallaa
Kullu nafar eippada allaah valla
Aana irappaali savi moth
Kullum aana saif
இனிமேல் கடல் கொள்ளை கிடையாது, நான் கோட்டையிலேயே தங்கபோறேன். எல்லோரும் மிக பெரியவனான அல்லாவை கும்பிடணும், இல்லை இந்த வாளுக்கு இரையாகணும்.
Aana mudir aaththi eurud kullum nafar
இந்த அரசனின் அடிமையா எனக்கு காணிக்கை செலுத்தணும்
Aana fechuf portukees
Huu baabaa naayakkan bath
Aana fechuf
Inshaa allah zain kallam nafar
Kullu row baath valla savvi moth
நான் இவர்களை பார்த்துக்கிறேன், இவன் அப்பன் நாயக்கனையும் பாத்துக்கிறேன், சரி என்பவர்கள் வீடுகளுக்கு போகலாம். இல்லைனா சாக தயாராகுங்கள் என்றான். நித்தம் நித்தம் சாவோடு விளையாடி திரும்பும் இந்த வீர பரத கூட்டத்திற்கு சாவை பற்றி இரப்பாளி பயமுறுத்தியது. கடலுக்கே உப்பு பற்றி சொன்ன கதையாயிருந்தது.
(தொடரும்)
கடற்புரத்தான்