வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 8 September 2016

இரத்த பூமி - பாகம் 8
தூய தந்தை ஹென்றிக் ஹெண்ட்ரிகஸ் அடிகளார்

பரதவ சொந்தங்களுக்கு இரப்பாளி என்ன செய்தான் ......? பரதவர் தப்பினாரா ..........? எதிர் பார்புகள் கிளற காத்திருக்கிறீர்கள் ....!
இடையில் சில நிகழ்வுகளை பதிவிட விரும்புகிறேன் ........

தூய தந்தை ஹென்றிக் ஹெண்ட்ரிகஸ் அடிகளார் 1520 ல் போலந்து தேசத்தில் விளாவிக்கோஸா எனுமிடத்தில் யூத பெற்றோருக்கு மகனாக பிறந்தவர். 1545 ல் தனது 40000 crusados மதிப்புள்ள சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து விட்டு தன்னை ஏசு சபையில் இணைத்து துறவறத்தை மேற் கொண்டவர். திருமறை சட்ட கல்வியில் பட்டம் பெற்றவர்

ஏசு சபையில் ஆன்மீக பணிக்காக கோவா வந்தவரை கிருத்துவத்தில் பரதவரை திருநிலை படுத்த பாடுபட்டுக் கொண்டிருந்த பரதவ புனிதர் சவேரியாருக்கு உதவியாளராக 1547 ல் ஏசு சபை பணித்தது. அந்நாள் முதற் கொண்டு பரதவ கடலோரம் முழுமைக்கும் புனிதரின் நிழல் போல பின் தொடர்ந்தார். புனிதர் கிழக்கிந்திய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட போது ஏசு சபையின் பொறுப்பை வீர துறவி கிரிமிலானி அவர்களிடம் விட்டு சென்றிருந்தார்.

வேதாளையில் படுக நாயக்கர்களால் 1549 ல் கிரிமிலானி அவர்கள படுகொலை செய்யப்பட்ட போது தூய தந்தை ஹென்றிக் ஹெண்ட்ரிகஸ் அடிகளாரை ஏசு சபையின் பொறுப்பேற்க புனிதர் கடிதம் வாயிலாக ஆணையிட்டதை தொடர்ந்து ஏசு சபையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து பரதவ கடலோரம் எங்கும் அவர் ஆற்றிய சமய சமூக பணிகளால் அவர் மீது பரதவரிடத்தில் மதிப்பு மரியாதை அதையும் தாண்டி கண்மூடித்தனமான பக்தி உருவாகியிருந்தது .

அவர் ஊன் உருக பிராத்தித்தால் எதுவும் நடக்கும் என்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கை பரதவர் மத்தியிலே நிலைக்கும்படி புனிதராக வாழ்ந்து காட்டிக்கொண்டிருந்தார். அத்தகைய புனிதர் மேல் பரதவர் கொண்டிருந்த அளப்பரிய அன்பை புரிந்து கொண்ட இரப்பாளி அவரையே குறிவைத்து கொடுமைப் படுத்தினான். 

தூய தந்தைக்கு பரதவர்கள் கண்முன்னே கல்வாரிக் கொடுமை பரதவர்கள் தங்களின் உயிருக்கு மேலாய் நினைத்து போற்றிய தூய தந்தைக்கு நிகழ்வதை காண சகிக்காத பரதவர்கள் இரத்த கண்ணீர் வடித்தனர் அவருக்காக தங்கள் உயிரை உடமையை அதை விடவும் மேலாக பரதவர் எண்ணும் தன்மானத்தையும் இழக்க துணிந்தனர். வேறு வழியில்லாது இரப்பாளியின் கால்களில் சரணடைந்தனர்

கஷ்ட காலத்திலே இறைவனை நோக்கி செபிக்கக்கூடிய லத்தின் போர்த்துகீசிய செபங்களும் பாடல்களும் சமீப காலங்களில் சொல்லி கொடுக்கப் பட்டிருந்தாலும் அந்த நேரத்திலே பரதவர்கள் தூய தந்தையை காப்பாற்ற ஆத்தா முத்தாரம்மனையும் அசுர குலம் அழித்த வேல்கொண்ட முருகனையும் துணைக்கு கூவி அழைத்ததுதான் முரண்பட்ட விந்தை இந்த நிகழ்வு தான் பின்னாளில் புதிய பரிணாமத்திற்கு வித்திட்டது எனலாம்.

இரப்பாளியின் தாக்குதல் முடிவுக்கு வந்த பின்னர் தன் உயிர் காக்க தங்கள் பழைய கடவுளை தேடிய பரதவர் நிலை உணர்ந்தார் தூய தந்தை. ஏற்கனேவே கடலோரங்களில் பரதவர் காலகாலமாக கட்டி வழிபட்ட இந்து ஆலயங்களில் இருந்து உதாரணத்திற்கு குறிப்பாக செந்தூர் முருகனிடமிருந்தும், உவரி சிவலிங்கசாமியிடமிருந்தும், கன்னியாகுமரி பகவதியம்மனிடமிருந்தும், வெகு தூரத்திற்கு பரதவர்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்திருந்தார் புனிதர்.

ஆனாலும் தெரிந்தும் தெரியாமலும் திருவிழா காலங்களில் தங்களது முதல் மரியாதை வடம் தொடு சடங்குகளிலும், கலந்து வந்தனர் பரதவர்கள் இதையெல்லாம் மனதில் கொண்டு உடனடியாக சில பரதவ இளைஞர்களை தேர்ந்தெடுத்து லிஸ்பனுக்கு அனுப்பி குருத்துவத்தோடு அச்சக்கலையையும் படித்துவர பணித்தார் அதற்கு பரதவரும் பணத்தை வாரி இரைத்தார்.

இன்றய காலத்தில் தமிழை வளர்த்ததாக வாய் கிழிய திராவிடமும் தமிழ் தேசியமும் பேசும் எவனுக்கும் இல்லாத பெருமை பாண்டி பரதவனுக்கு உண்டு. ஏனென்றால் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர் நாம் என்றால் நகையாடும் தமிழர்கள்.

16 ஆம் நூற்றாண்டிலே 1555 லே லிஸ்பன் மாநகரத்திலே முதல் முதலில் தமிழை ஒவ்வொரு எழுத்தாக செதுக்கி அச்சிலே வடிவமைத்து அழகு பார்க்க அடித்தளமாய் உழைத்தவர், அவர்தான் தூய தந்தையால் துறவி அருள் பெற்ற பெருமணல் லூயிஸ் என எண்ணப்படுகின்ற இந்தியாவின் முதல் கிருத்துவ துறவி பெரு லூயிஸ் எனும் பரதவ துறவி என்பது இன்றய தமிழர்கள் அறியாதது.

அப்படியாக பரதவனுக்கு தமிழிலே தம்பிரான் வணக்கம் கிறித்தறியாயினி வணக்கம் எனும் துதி வணக்கங்களை கொண்ட சிறு நூல்களை பரதவ துறவிகளின் துணையோடு தூய தந்தை வெளியிட்டார். அதன் பின்னர் தான் ஏசு மரி சூசையும் பிதா சுதனும் தமிழுக்குள் வந்து பரதவருக்குள் நிறைந்தார்கள்.

தூய தந்தை தமிழை இலக்கணத்தோடு கற்று தேர்ந்தார் அதனாலேயே அயல் நாட்டவர் தமிழை இலக்கணத்தோடு எளிமையாக கற்றுணர பயிற்று நூல்களை வெளியிட்டு சேசு சபை துறவிகளுக்கு படைத்தார் பின்னாளில் வீரமாமுனிவர் தமிழ் இலக்கணம் வரைய இவரது நூல்கள்தான் அடிப்படை என்பதனை வீரமாமுனிவரே குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மாதங்களை ஆங்கில மாதங்களோடு இணைத்து முதல்முதலாக இந்திய துணை கண்டத்திற்கு காலண்டர்எனும் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான் திண்ணைக்கல்வி குருகுல கல்வி அனைத்தையும் உடைத்து தமிழ் பள்ளி கல்வி முறையை புன்னக்காயலில் 16 ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கிய உத்தமரும் இவர்தான் அதற்காக பணத்தை வாரி இறைத்தவர்களும் பரதவர்தான். இவ்வாறு பரதவரின் பொருளாதார பின்பலத்தோடு மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியை சில ஆண்டுகளிலே பரத சமூகம் வாயிலாக இந்த நாட்டிற்கு தந்தவர். மத நல்லிணக்கம் என்பதற்கு முழு உதாரணமாய் திகழ்ந்தவர் இவரது காலத்தில் மூர்களின் வெளியேற்றம் நடந்தேறியது. பரதவர்குல இஸ்லாமியரே காயல்பட்டணத்தில் இருந்தனர். 

அவர்களுக்கும் சுற்று வட்டார இந்துக்களுக்கும் இவர் தந்தையாயிருந்தார். இவரது மரணம் 1600 நிகழ்ந்த போது பரதவர்கள் மட்டுமல்ல காயல்பட்டினம் ஏரல் உள்ளடக்கிய சுற்று வட்டார மக்கள் 2 ,3 நாட்கள் உண்ணாது உறங்காது துக்கத்தில் வாடி கிடந்தனர். இவரது இறுதி ஊர்வலம் புன்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற போது ஏற்பட்ட கூட்டமும் இவரது உடலை முத்தி செய்ய முண்டியடித்த கூட்டமும் இவரது பெரும் புகழை பறை சாற்றின இறுதியில் இவரது நல்லடக்கம் மாதா கோவிலிலே நடந்தேறியது. 

இப்படியெல்லாம் வாழ்ந்து தன்னைப் போலவே நல்ல துறவிகளை இந்த பரத சமூகத்தில் உருவாக்கி சென்றுள்ளார். ஆனால் இன்று திட்டமிட்டு துறவறம் மேற்கொண்டு பாதிரி என்கின்ற போர்வையில் ஆட்சி அதிகாரம் கையிலெடுத்து பொய் பித்தலாட்டம் ஆடி மக்களின் சொத்தை களவாடி கொள்ளையடித்து வஞ்சகம் வக்கிரம் என காம களியாடி திரியும் சில கள்ள துறவிகளே திருச்சபைக்கு பாரசிலுவையாக சுமையாகி நிற்கின்றனர்.

வெள்ளாட்டு மந்தையோடு கலந்து விட்ட வெறி நாய் குட்டிகளே திருந்துங்கள் இல்லையேல் திருத்தப்படுவீர்கள் வருந்துங்கள் இல்லையேல் வருத்தப்படுவீர்கள்

பரதவனின் உயிரையும் உணர்வையும் மட்டுமே விட்டு விட்டு அனைத்தையும் உறுவிக்கொண்ட பாவிகளே இன்னும் எம்மீது அடக்குமுறையும் அராஜகமும் அவமானமும் தொடர்ந்தால் உம்மிடமிருந்து எமக்கு பிடித்த மதம் காக்க பரதவர் எமக்கும் மதம் பிடிக்கும்

எச்சரிக்கும் ஓர் கடல் புரத்தான்
(தொடரும்)
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com