Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

திருமந்திரநகர்

தூத்துக்குடி என்று பொதுவாக அனைவராலும் அழைக்கப்பட்டாலும், பரதவர்கள் இன்றும் தங்களுடைய ஆலயப் பாடல்களிலும், விருத்தப்பாக்களிலும் தூத்துக்குடியை, "திருமந்திர நகர்" என்றே குறிப்பிடுகின்றனர். தூத்துக்குடியை பரதவர்கள் 'திருமந்திர நகர்' என்று குறிப்பிடுவதற்கான காரணங்களைப் பழங்காலக் கலவெட்டுக்களில் காணப்படும், 'திருமந்திர நகர்' என்ற சொற்களின் மூலம் அறிய முடிகிறது.

"திருமந்திர ஓலை நாயகம்" என்ற கல்வெட்டில் காணப்படும் வார்த்தைக்கு "அரசன் ஆணையை ஓலையில் எழுதிய பின்னர் அவ்வோலையை அரசனிடமிருந்து கிடைத்த ஆணையாகக் கருதி அதைப் பார்த்து அனுமதி அளிக்கும் உயர் அதிகாரி," என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு வார்த்தை திருமந்திர நகர் என்பதாகும். இதற்குக் "கோவில்" என்றும், கோவிலில் வழங்கப்படும் உணவைத் தயாரிக்க ஏற்படும் செலவினங்களைக் கொடுத்துக் குறித்து வைக்கப்படும் ஊர்" என்ற பொருள் வருகிறது.

மேற்கண்ட இரண்டு கல்வெட்டுக்களையும் ஆராயந்து பார்க்கும்போது சில செய்திகள் கிடைக்கின்றன. பாண்டியர்களால் முத்துக்குளித்துறையின் பரதவ குலத்தினர் குறுநில மன்னராகவே கருதப்பட்டு வந்திருக்கின்றனர். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் அரசாணையை, முத்துக்குளித்துறைத் தலைவன் மற்ற பரதவ மக்களுக்குத் தெரிவிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதன் காரணமாக பரதகுலத் தலைவர், "திருமந்திர ஓலை நாயகம்" என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். 

அதுபோலவே தூத்துக்குடியில் முத்துக்குளிக்கும்போது கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை மதுரை, திருச்செந்தூர், போன்ற ஊர்களில் கோயில்களில் நடைபெறும் வழிபாட்டுக்கும் அதற்குச் செய்வதற்கான செலவினங்களுக்கான பணத்தையும் முத்துக்குளித்துறைத் தலைவனான பரதவகுலத் தலைவன் பாண்டிய மன்னனிடம் கொடுத்திருக்க வேண்டும். எனவே பாண்டிய மன்னர்களால் தூத்துக்குடி, "திருமந்திர நகரம்" என்ற சிறப்புப் பெயரால் குறிப்பிட்டிருக்கப் படவேண்டும். 

கல்வெட்டுக்களில் காணப்படும் இரண்டு வாசகங்களான, 'திருமந்திர ஓலை நாயகம்' அல்லது 'திருமந்திர போனகப் புறம்' என்பது மருவி, "திருமந்திர நகர்' என்று பரதவர்களால் தூத்துக்குடி அழைக்கப்பட்டிருக்க வேண்டும். பரதவர்கள் மத்தியில் மட்டுமே திருமந்திர நகரம் என்ற வார்த்தை தூத்துக்குடியைக் குறிப்பிடும் சொல்லாக இன்றளவும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.      

Ronaldo Fernando 

Harappa and the Erythraean Sea



In today's episode we shift our focus east and look at the earliest identifiable civilization on the Indian subcontinent. The Harappan people were known to have had contacts with Egypt and Mesopotamia thanks to Harappan artifacts that have been discovered in those places. Sadly, there is very little evidence of maritime activity on the part of the Harappans, even though we know they were active to some extent.
We'll also look at the characteristics of the Erythraean Sea (Arabian Sea) and see how the monsoons helped connect the civilizations of the near east in antiquity. Other items include the so-called 'dockyard' at Lothal and a few boat depictions from the ancient Harappans.

விடிந்தகரை 3.04

கேரளத்து நம்பூதிரிமாரும், மதுரை நாயக்கமாரும், பெர்சிய மூரினத்தானும் - முத்திசையும் தாக்கி; எம் மூச்சடக்கி, அழித்தொழிக்க நினைத்தாலும்….! 
தடையெனும் மலை உடைக்கும் ஆழி பேரலை வம்சமடா
இந்த பரதவர் பாண்டியர் அம்சமடா.
……………………………………

முதியவர் பூபாளன் ஆராச்சார் தன் குரல் திரட்டி ஆணையிட்டார் “ஒரே போடு
தல கொண்டயில போடு” முனியா…….?

குரல் கேட்டதும் முதிர்ந்து பட்டு காய்ந்து போன தாழிப்பனை கொண்டையின் கீழ் தன்னை நாரால் பிணைத்து கொண்டு லாவகமாக ஊசலாடி கொண்டிருந்த முனியன் தன் பலம் திரட்டி கோடரியை பாய்ச்ச ஒரே வீச்சில் தாழிப்பனை கொண்டை முறிந்து பக்கத்து மரக்கிளைகளை முறித்து கொண்டு பெரும் ஒசையோடு தரையில் விழுந்தது. 

பூபாளன் ஆராச்சார் ஆணை தன் மீதான கொலைவெறி தாக்குதல் என முடிவெடுத்த கணத்தில் கங்கன் மின்னும் வாளெடுத்து வீச காத்து நின்றார். கொண்டை விழுந்த ஓசை கேட்டு திரும்பி பார்த்த பூபாளன் ஆராச்சார் வாளோடு விரைத்து நின்ற பரதவர்மனை கண்ட போது குழம்பித்தான் போனார். தரையில் கிடந்த தாழிக் கொண்டையையும் தலைவர் கங்கனார் கொண்டையையும் மாறி மாறி பார்த்தவர். அதுவரை இருந்த கோபம் கணப்பொழுதில் மாறி கலகலவென சிரித்து விட்டார் ஆராச்சார். 

என்ன கங்கனாரே!
முன்பகை எதுவும் தீர்க்க வந்தியளா ?
இல்லை உங்க அரசனுக்காக கொட்டாரத்து தாக்கோல் கேட்டு மிரட்ட வந்தியளா ?
“வாளெடுத்து வீராப்பு காட்டுரியரு மாப்ள"

இது உம்ம எடம் ஓய் வாரும் வந்து உட்காரும் என பரதவ வர்மன் அருகே வந்து
கையை பிடித்து இழுத்து போய் அங்கிருந்த கல் திண்டில் தன்னருகே உட்கார வைத்தார். கங்கனின் பதட்டம் தணிக்க பேச ஆரம்பித்தார்.

மாப்ள!
கேரளத்து நம்பூதிரிமாரும்
மதுரை நாயக்கமாரும்
பெர்சிய மூரினத்தானும்
முத்திசையும் தாக்கி நம் மூச்சடக்கி
அழித்தொழிக்க நினைத்தாலும்
தடையான மலையையும் உடைக்கும்
ஆழி பேரலையின் அம்சம்மடா
நாம இந்த பரதவர் பாண்டியர் வம்சம்மடா

ஏ.. மக்கா..... கங்கனா நீ…
எங்க மனசுல இருக்க வேண்டிய கங்கன் தாத்தாவிடம் தரகனாய் வந்து
அதுவும் பயந்தாங்கொள்ளி வீர ரவிவர்ம குலசேகர பெருமாள் ஆளாக வந்து …….. நினைத்தாலே கோவம் கோவமா வருது மக்கா...

மதுர நாயக்கமாரோ பாண்டிய இனத்தின் கடைசி எச்சம் பரவனை கருவருக்க துடிக்கானுவ, திருவிதாங்கூர் சமஸ்தானத்து நாயர்மாரும், நம்பூதிரிகளும் கறிவேப்பிலையாய் நம்மை 
ஒதுக்கி தூக்கி எரிந்து மதத்தை சொல்லி ஏறி மிதிக்கான் மாப்ளே!

நாப்பது நாப்பத்தைந்து வருடத்துக்கு முன்பு எங்கைய்யா மும்மணி ஆராச்சார் எடுத்த முடிவுதான் இது மாப்ளே!

அம்மச்சாவை பகவதியாக்க கேரளத்தான் பலகதைகளை சொன்ன போதும்
எங்கய்யா மும்மணி மறுதலித்தார். கோயில்ல நம்ம அரசர் வில்லவராயர் காலத்து கல்வெட்டுகளை உடைத்தபோதும், வட்டக்கோட்டை பாண்டி பரணசாலையில் மீனை பரதவ அடையாளத்தை உடைத்த போதும், உரக்க உரக்க எதிர்த்தோம் மக்கா. 

இன்னொரு புரத்தில் நாயக்க வடுக படை படையெடுப்பு ஆராச்சார்கள் பலரை கொன்று பழி தீர்த்து கொண்டது. உயிர் பிழைக்கத்தானே கோவிலை விட்டு ஆத்தாளை விட்டு இங்கே விளைகாட்டுக்குள் வந்து விட்டோம் ஆராச்சுமார். கோவிலும் இல்லை, கூடாரம் இல்லை புதிய புராணம் புரளியாய் மாற மாறி விட்டோம் மக்கா!

பிரச்சனை ஆரம்பத்தை சொல்லுறேன் கேள் மாப்பிள்ளை!

ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே முத்துக் குளித்து....  சங்கு பறித்து.... மீன்பிடித்து....  பாய்மரங்கட்டி மேல்திசை கீழ்திசை நாடலாம் சுத்தி வந்து பணத்தோடும் பவுசோடும் வாழ்ந்து வந்தவன் பரவன். நம்ம அடிமையாக்க குமரிக்கும் மன்னாருக்கும் லங்கைக்கும் இடையேயான நம்ம பரதவரின் பாரம்பரிய தாய் கடலை அந்த கடல் உரிமையை தடுத்தான் நாயக்க அரசன். கோழிக்கோடு சமாரியன் ஏற்பாட்டுல நாயக்கன் கிட்ட இருந்து பெர்சிய மூரினத்தானுவ பரதவமார்க் கடலை குத்தகைக்கு எடுத்தானுவ! 

பாதிக்கப்பட்ட பரவமாறு கடலையே அடைத்தான் பரவமாறு 
முத்துக் குளிக்கல! முத்துக்குளிக்க எவனையும் விடல!!
பரவமாறு மீன்பிடிக்கல! மீன்பிடிக்க கடலுக்குள் இறங்க எவனையும் விடல!!

நீண்ட சண்டை சச்சரவுக்கு பின்பு வேறு வழியில்லாமல் முத்துக்குளி வருமானத்தை அரசனுக்கு, மூரினத்தானுக்கு, பரவமாறுக்கு, என மூன்று பங்காகப் பிரித்தெடுத்துக் கொண்டனர். ஆனாலும் 4,5 வருடமாகவே மூருக்கும் பரவனுக்கும் உள்ளுக்குள்ள இருந்த காய்மாரம் கொஞ்ச நாள்லே [1532ல்] தூத்துக்குடியில் பெரும் கலவரமாய் மாறிச்சி அதுதான் பாம்பட கலவரம். 

நாயக்கனும் மூரும் சேந்து கொண்டு ஒரு பரவர் தலைக்கு நான்கு பணம் என கொட்டடிச்சி அறிவிச்சி...  பரவர்களை கொன்னு கொன்னு குவிச்சானுவ... இந்த கலவரத்தில் பரதவரினத்தின் கால் பங்கு காவு கொடுக்கப்பட்டது மாப்ளே!

பரவமார் உயிர்பிழைக்க பரவமாரோட 20 குட்டி தீவுகளில் குடும்பங்களோடு ஓடி ஒளிஞ்சிகிட்டாங்க ... சில வருடங்கள் கரை பக்கமே திரும்ப முடியவில்லை.  வேறு வழியில்லாமல் சமுதாயத்தை காப்பாத்த சாதித்தலைவர் குமரித் துறையில் முட்டத்தில் உங்க ஐயாவோடு தங்கியிருந்த குதிரை வியாபாரி டாம் குரூஸ் செட்டியை சந்திச்சி அவன் வழியா கொச்சிக்குப் போய் மதம் மாறி போர்த்துக்கீசியரோடு சேர்ந்து நம்ம கடலை, நம்ம கடல் உரிமையை திரும்ப எடுத்தோம். அந்த.. இனத்தையே நீரோடி வரை அடிச்சி விரட்டுனோம்.

பொறவு படை திரட்டி வந்து கடக்கரை முழுசா தீ வைச்சி பரவமாரை வேட்டையாடுனானுவ பட்டிமரைகாயரும், குஞ்சாலி மரைகாயரும் அவனுவளையும் பின்னாலே போய் வேதாளயில வெட்டி புதைச்சோம். அப்புறம் வந்தான் பாரு, இரப்பாளின்னு ஒரு கடல் கொள்ளைக்காரன், புன்னக்காயலை புடிச்சி வச்சிட்டு பரவமாரை துலுக்கனா மாறுன்னு கொடுமை படுத்தினா...  ஒரே ராத்திரியில கடக்கரை பட்டங்கட்டிமார் புன்னக்காயல் கோட்டைய பிடிச்சி, அவன கூர் கூரா வெட்டி
தொங்க வுட்டோம்....

பாரம்பரியமா நம்ம ஆத்தாமாரு, நம்ம உடப்புறந்தாமாரு, பாண்டி பரத்திமார் உடம்ப மறச்சி, கச்சைகட்டித்தான் வந்தோம். நாயக்கனா இருந்தாலும், நம்பூதிரியரா இருந்தாலும் எவனுமே இதில் தலையிட்டது இல்லை. ஆனால் பட்டங்கட்டி வீட்டு வேலைக்கார பொம்பளயளும் கச்சை கட்டியது ராச துரோக ம்னு சொல்லி வர்க கட்டுப்பாட்டை கடக்கரை பட்டங்கட்டி மார் கெடுக்கானுவன்னு நினைச்சானுவ உங்க அரசனும் நம்பூதிரிமாரும்,  அப்போ ஒரு நாராசாக்கமங்கலம் கொட்டாரத்துக்கு பட்டினபிரவேசம் வந்த நம்பூதிரிமார் முலையை மறைச்சி முண்டு போட்ட பட்டங்கட்டி நாஞ்சிப்பிள்ளை தோப்பு பார்வைக்காரி முலையை அறுத்து உயிரோடு எரிச்சானுவ, பட்டங்கட்டி மார் கரைகாட்டு வேலக்காரனுவளை சிறபுடுச்சானுவ,  தலைவனார் மருமவன் பட்டங்கட்டி நாஞ்சிப்பிள்ளை மதுர நாயக்க அரசனுக்கு ஆளனுப்பி படை கூட்டி வந்து நம்பூதிரிகளை கொன்னே போட்டாரு ….. ஆனா

நாயக்க படை போன பொறவு சாமிமாரை புது மதத்துக்காரன் கொன்னு போட்டான்னு பெரிய கலவரம் வந்தது. நாயன்மாரும், நம்பூதிரிமாரும் சேர்ந்து நாஞ்சிப்பிள்ளை தோப்ப அழிச்சி, வூட்டுக்கு தீ வைச்சதுல, நாஞ்சிப்பிள்ளை பொஞ்சாதி பிள்ளய குடும்பமே எறிஞ்சி போச்சி, நாஞ்சிப்பிள்ளைக்கு கண்ணும் போச்சி. 

கண்களில் கண்ணீர் முட்ட,  துக்கத்தில் தொண்டை அடைக்க, ஆராச்சார் விசும்பிச் சொன்னார். அனாதையா நின்னவர அவரு மருமவன் உவரி சந்தானம் பட்டங்கட்டி கூட்டிட்டு போய்ட்டாரு. ஆராச்சார் ஏதோ சொல்ல வாய் திறந்தாலும் ஓசை எழாமல் மெளனமானார். 

தலையை தூக்கி ஆகாயத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த முதியவரின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. பரத வர்மனுக்கு இப்பொதுதான் புரிந்தது. நாஞ்சிப் பிள்ளையின் வீரம், விவேகம், தியாகம்.  அதுவும் தனது குருகுல தோழன் முத்தையா வாசின் தாத்தா என்று. 

அழுது கொண்டிருந்த ஆராச்சாரை தேற்றும் விதமாக ஆறுதலாக முதியவரின் கையை பற்றி கொள்ள நினைவு திரும்பியவராய் தன் முண்டை எடுத்து வழிந்த கண்ணீரை துடைத்தவர், மீண்டும் ஆவேசமானார் சொல்லு மாப்ளே…..?

நம்மள அழிக்க இந்த மதத்தை கையில ஆயுதமா உங்க அரசாங்கம் எடுத்தா
அதே போல இன்னொரு மதத்தை கேடயமா நாங்களும் எடுப்போம்ல..!

இதெல்லாம் உமக்கும் தெரிஞ்சிருக்கலாம். அப்படி உங்க அய்யா சொல்லித் தராமயிருந்தா நான் சொல்லி தான் ஆகணும்.  பாம்பட கலவரத்துக்கு பொறவு கொஞ்சங் கொஞ்சமாகங்கனார், ஆச்சாரியார், மற்றும் ஒரு சில தரவாடுகள் தவிர ஒட்டு மொத்த பரத இனமும் [1537] மதம் மாறினது தெரியும் தானே.

அப்போ கிருத்தவம் னா என்னன்னு ஒருத்தனுக்கும் தெரியாது. அப்புறம் அஞ்சாறு வருசத்துக்கு பொறவு கடக்கரைகளில் கிருத்துவத்துக்கு மாறியிருந்த புதிய கிருத்துவ பரதவருக்கு உபதேசம் சொல்லி வழி நடத்த போத்துகீசிய அரசரால் இங்கே அனுப்பபட்டவர் தான் வீர சவேரியார். ஆர்வம் தாளாமல் பூபாளன் ஆராச்சாரின் பேச்சை இடைமறித்து சொன்னான் தெரியும் எனக்கு. 

எங்க ஐயாவோட சாமி! ஆட்டுத்தோல் சாமி!!
கோட்டியாத்து கரையிலே ஒத்தையில நாயக்க படையை மிரட்டி விரட்டிய சாமி!!!

பரதவ வர்மனை கூர்ந்து கவனித்தார் பூபாளன் ஆராச்சார், இதுவரைக்கும் தன்னிடம் பதில் சொல்லாமல் இருந்ததால் தன்னிடம் பேரன் கங்கனார் பிணங்கி இருப்பதாக எண்ணிய பெரியவருக்கு இப்போது மகிழ்ச்சி சிறிதாக புன்முறுவலோடு சொன்னார். 

தெரியாதே பின்னே! உங்க ஐயாதானய்யா அவருக்கு எல்லாமே!!
ஊடல் மறந்து கூடலாய் உரையாடும் அவர்களது உரையாடல் வீர சவேரியாரின் பக்கம் திரும்பியது.
யார் இந்த வீர சவேரியார்....?
தொடர்வோம்.....

அன்புடன் உங்கள்
….கடல் புரத்தான்….

A superstar J.P Chandrababu

Joseph Panimayadasan Rodriguez better known as Chandrababu hailed from the south Indian town of Tuticorin attending St Joseph's Colombo from the early to the late 1940's. His connection to the Colombo school was a twist of fate in the wake of World War 2 which involved the then colonial British India government (and possibly the Government of Ceylon). 

Rodriguez (snr) a publisher of an Indian newspaper had supported the Indian Independence / satyagraha movement that prompted the Indian government of the day to force the family into exile in Sri Lanka. Young Chandrababu gained admittance to St Joseph’s College, Colombo 10 during the tenure of Rev.Fr.Le Goc. The Rodriguez family residence was at Forbes Road in Maradana presently known as Devanampiyatissa Mawatha which is opposite the school. It was said that there were 11 children in the family but only Chandrababu appears to have attended SJC . It is further said that he had attended Aquinas College Borella too, but this could be due to classes having being conducted for students of SJC at the above location in the face of World War 2. Chandrababu however by this time was conversant in spoken Sinhala! 

With the cessation of the war hostilities, the family had repatriated themselves to Tuticorin where the strong ambitions of young Chandrababu took firm root in movie acting. By the early 1950's he had spiralled into being one of the most famous and sought after actors in the South Indian cinema. At his heyday it is said he commanded a higher price than the famous MGR (M G Ramachandran). Additionally Chandrababu was a talented singer and dancer too, who recorded over 50 songs for the Indian cinema. 

As a dancer and comedian his movies drew audiences to packed houses. Chandrababu’s versatile acting performing the perennial hit song 'pamarak kanaley kaatal' is a class by itself. Even the well known song 'Dingiri dingale' (thankfully not the Sinhala version!) too is thought to have been sung by him. It is further mentioned that he even sang Sinhala songs for early Sri Lankan cinema. 

Despite all the glamour and glory of the silver screen, Chandrababu in later years plunged into a financial abyss which resulted from a failed marriage and misfortunes in some of his movie production ventures. This moved the once generous and accommodating actor to near poverty. He however was fortunate to count on the great Indian movie legend Gemini Ganeshan in his later years as a genuine friend.

His untimely demise was on the 8th of March 1974 at the age of 46 years. The remains were laid to rest at the Quibble Island Roman Catholic cemetery in Chennai amidst a vast gathering. Even to this date fans pay homage at his grave. 

பட்டனத்துக் காத்து ... (பட்டினத்து காற்று)


பண்டைத் தமிழர் கடற்கரையோர நகரங்களை பட்டினம் என அழைத்தனர். அதற்கமைய மாந்தைப் பட்டினம் என அழைக்கப் பட்ட பெருமையை உடையதாக மாந்தை மாநகரம் இருந்தது. அதன் துறைமுகத்திலே நங்கூரம் இடப்பட்டு நின்ற ஒரு பாய்மரக்கப்பலில் வாலிபன் ஒருவன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் பாய்மரக் கப்பலில் படுத்து உறங்குவதை இளம் பெண்ணொருத்தி கண்டாள். அவனது உறக்கத்தைப் போக்க நாட்டுப்பாடல் பாடிச் சீண்டுகிறாள்.

கடற்காற்றுக்கு அவன் துங்குகிறான் என்பதை பட்டனத்துக் காத்து படபட என்று வீசுவதால் அவன் தூங்குகிறான் என்கிறாள். பாருங்கள் கடற்கரையில் வீசும் கடற்காற்றுக்கு, ஓர் அழகிய தமிழ்பெயரைச் சூட்டி ‘பட்டனத்துக் காத்து’ என்று அழைக்கிறாள். அந்த பட்டினத்துக் காற்றை அவனோடு இருந்து நுகர ஆசைகொண்டு ‘காத்தாட நான் வாரட்டா?’ எனக் கேட்கிறாள். அதற்கு அவன் உடன்பட்டால் அவள் கதை கதையாகச் சொல்வாளாம். அவளது கேள்விக்கு அவன் என்ன பதில் சொன்னானோ தெரியவில்லை. ஆனால் எமக்கு பட்டனத்துக் காத்து என்று ஒரு பெயர் கிடைத்திருக்கிறது.

பெண்: பட்டனத்துக் காத்து
படபடத்து அடிக்கையில
பாய் மரக் கப்பலிலே
படுத்து உறங்கு மச்சானாரே
காத்தாட நான் வரட்டோ
கதை கதையாச் சொல்லிடட்டோ

- நாட்டுப்பாடல் (மாந்தை)

(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

கடல் வாணிபத்தின் தொட்டில்!

கடல் வாணிப போக்குவரத்துக்கு ஆதாரமாக விளங்குவது, துறைமுகம். துறைமுகம் என்பது கப்பல்கள் மற்றும் படகுகள் வந்து தங்கிச் செல்வதற்குரிய இடம். இங்கு கப்பல்களுக்கு வேண்டிய பொருட்கள், தொழிலாளர்களுக்கு இருப்பிடம் போன்ற வசதிகள் வழங்கப்படும். துறைமுகங்கள், ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பறைசாற்றும் முக்கிய அம்சம்.

தமிழ்நாட்டில், கடல் வாணிபம் சிறக்க, சேர, சோழ, பாண்டியர் காலத்தில், கடலோர துறைமுகங்களை உருவாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வரலாற்றில் இடம் பெற்ற துறைமுகங்கள் இவை: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கொற்கை துறைமுகம்; காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம்; காஞ்சிபுரம் மாவட்டம் கடப்பாக்கம் அருகில் உள்ள ஆலம்பரக்கோட்டை என்ற ஊரில் எயிற்பட்டினம் துறைமுகம்; மாமல்லபுரம் அருகில் நீர்ப்பெயற்று துறைமுகம். கி.மு. 3ம் நூற்றாண்டில், வணிக மையங்களாகவும், நாகரிகத்தின் தொட்டில்களாகவும் விளங்கிய பூம்புகார், காவிரிப்பூம்பட்டினம், நாகபட்டினம், கொற்கை உள்ளிட்ட பல துறைமுகங்கள், காலப்போக்கில் நலிவுற்று வீழ்ச்சியடைந்து விட்டன.

இயற்கையால் பாதுகாக்கப்பட்ட ஆழமான நீர்நிலையைக் உள்ளடக்கிய நிலவடிவம் துறைமுகம். கப்பல்கள் பாதுகாப்போடு நங்கூரமிடலாம்; அலைகளின் வேகமும் குறைவாக இருக்கும்; புயல்காற்றின் பாதிப்பு இருக்கமுடியாது என்பதை கணக்கில் கொண்டு, துறைமுகங்கள் அமைந்தன. பண்டைய துறைமுக நகரங்களின் பெயர் பட்டினம் என்றும், வணிக முக்கியத்துவம் வாய்ந்த பெருநகரங்கள் பட்டணம் என்றும் அழைக்கப்பட்டன. தேங்காய்பட்டினம், காயல் பட்டினம், முசிறிபட்டினம், காவிரிப்பூம்பட்டினம் இப்படி பல துறைமுகப் பட்டினங்கள் இயற்கைத் துறைமுகங்களாக விளங்கின.

இயற்கைத் துறைமுகத்துக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது, மும்பை துறைமுகம். தமிழ்நாட்டில் தோணிப் போக்குவரத்து நடக்கின்ற தூத்துக்குடியும் பழைய துறைமுகமே. செயற்கைத் துறைமுகத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு, சென்னைத் துறைமுகம். இந்தியாவின் 7,517 கிலோ மீட்டர் நீளமான கடலோரப் பகுதியில் 12 முக்கியத் துறைமுகங்களும், 187 சிறிய அளவிலான துறைமுகங்களும் இயங்கி வருகின்றன. இந்தியாவின் பெரிய துறைமுகங்களின் வரிசையில், மும்பை, கோவா, கொச்சி, விழிஞ்சம், விசாகப்பட்டினம் என்று, பிரபலமான 6 இயற்கைத் துறைமுகங்கள் இருக்கின்றன.

தமிழகத்தின் முக்கியத் துறைமுகங்களாக, சென்னைத் துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஆகியவை விளங்குகின்றன. சிறிய துறைமுகங்களாக, சென்னை எண்ணூர், நாகபட்டினம், புதுச்சேரியில் காரைக்கால் ஆகியவை உள்ளன. துறைமுகங்கள் கடல் வாணிபம் செய்வதற்காக மட்டுமின்றி, நாட்டின் கடல் பாதுகாப்பை உறுதிசெய்யும் அரணாகவும் இருக்கின்றன.

- ஜெ.பிரபாகர்

How ancient Tamil ports helped trade in gems, Arab horses

State In Sangam Period Had Direct Maritime Trade Links With Europe, Egypt & Asian Nations

Dubbed as a game-changer in the subcontinent’s maritime history, the proposed deep-sea port at Enayam in Kanyakumari district when completed would emerge as a major gateway for Indian cargo and mother vessels. Proposed at a cost of Rs 27,570 crore, the port would act as a transshipment hub for the global east-west trade route and also reduce the logistics cost for Indian traders who are dependent on transshipment in Colombo and Singapore.

Interestingly, Enayam port is not the first of its kind in Tamil Nadu. The state, as early as the 3rd century BC, had more than 16 such ports — between Chennai and Tirunelveli — that helped it maintain direct maritime links with China, Egypt, parts of Europe and Southeast Asian countries. Archaeologists say ancient Tamil literature and excavations provide evidence about the existence of such ports that played a major role in overseas trade in the past.

Secretary of Madurai-based Pandya Nadu Centre for Historical Research, C Santhalingam, says trading activities by Tamils through sea route can be traced to the Sangam period (3rd century BC — 3rd century AD). “The historical coastal town of Kaveripoompattinam (Poompuhar in Nagapattinam district) recorded import of horses from Arab countries and finished goods from Indonesia and Sri Lanka. The port was also a major centre for export of spices from south India,” he adds. References to Kaveripoompattinam are found in Tamil literary works like ‘Pattinappalai’ and ‘Silapathikaram’.Santhalingam says evidence about ship maintenance units and dock yards in many parts of the state point towards TN’s ancient maritime trade with the rest of the world. Excavations indicated the existence of a port at Azhagankulam in Ramanathapuram district, while Tamil scripts mentioned about a port at Korkai in Tuticorin district. 

The Pallavas developed Mamallapuram as a vital seaport in the north. Mylapore in Chennai, Kovalam and Sathurangapattinam (Sadras) in Kancheepuram district and Kulasekarapattinam and Veerapandianpattinam in Tuticorin district were active ports during the Chola and Pandiya rule. Ports came in handy to Chola emperors for naval expeditions to Southeast Asian nations. Irukanthurai in Tirunelveli district is the latest in the list of active ports that have disappeared. “Arikamedu at Puducherry is another ancient port,” Santhalingam adds.

Unlike modern-day ports that are developed as artificial facilities along the coastline, the ancient ports were situated on river mouths. According to P D Balaji, professor and head of the department of ancient history and archeology, University of Madras, the ancient ports were built near river mouths to facilitate easy entry of vessels into the mainland. “Vessels in the past were not as big as they are today. River mouths were the right access points for safe docking,” he says.

Another key navigation route in the south was through the west coast in the Arabian Sea. Balaji says Romans sailed through the sea, disembarking at ‘Musuri’ port in Kerala. “Thereafter, foreign traders travelled till Coimbatore and split to different directions of Tamil Nadu from there. This is why several Roman coins and artefacts were discovered in the ‘Kongu’ region of TN,” he says. Artefacts like huge pots, used by Romans to transport wine, were also unearthed during the excavations, he adds. “However, the ports vanished after the civilisation perished.”
- Yogesh Kabirdoss

An Indus Boat Seal

An unfired steatite seal and sealing of a boat found at Mohenjo-daro. A close and insightful reading by Ernest J.H. Mackay reads "Seal 30 ... was found in two pieces. It is rectangular in shape and incomplete motif on the back consists of roughly scratched lines that cross one another... The face is nearly complete and it clearly bears a representation of a ship, the first of its kind to be found one a seal from Mohenjo-daro... Why representations of boats and ships are so rare it is difficult to explain, as it is more than probable that the river Indus was largely used for traffic of all kinds, and river craft should have been perfectly familiar to the inhabitants of Mohenjo-daro.

The vessel portrayed on this seal is boldly but roughly cut, apparently with a triangular burin, and is apparently not the work of an experienced seal cutter; hence its interest, because, probably as a consequence of inexperience, the motif is not a stereotypical one. The boat has a sharply upturned prow and stern, a feature which is present in nearly all archaic representations of boats; for example, the same boat appears in early Minoan seals, on the Predynastic pottery of Egypt, and on the cylinder seals of Sumer. In the last mentioned country, this type of boat was used down to Assyrian times. On the ivory knife-handle of Gebel-el-'Arak in the Louvre are depicted ships which bear a very close resemblance to the one on our seal; these and the other scenes on this handle are, indeed, explained by Petrie as not Egyptian, but the product of an Oriental people inspired by Elam and the Tigris region.

It will be noticed that this boat is shown as lashed together at both bow and stern, indicating perhaps that it was made of reeds like the primitive boats of Egypt and the craft that were used in the swamps of southern Babylonia. The hut or shrine in its center also appears to be made of reeds and fastened at each end of it is a standard bearing an emblem comparable, though not in actual shape, with the ensigns on the Gebel-el-'Ark handle. At one end of the boat on the seal from Mohenjo-daro a steersman whose head is unfortunately missing is seated at a rudder or steering-oar. The seal-cutter here was not at all sure of his figure and placed it well above the seal.

The absence of a mast suggests that this boat was used only for river work, as are some of the wooden boats on the Indus at the present day; though the modern boats have a less acutely upturned prow and stern, they usually have a similar cabin-like erection in the middle, sometimes constructed of wood and sometimes of reeds. The boats of today are chiefly used for fishing and are either rowed or punted against the stream.

This seal is invaluable in indicating a type of vessel that was in use in ancient Sindh. Its owner was perhaps connected with shipping of some kind for in in engraving it most careful attention had been paid to detail. (E.J.H. Mackay, Further Excavations at Mohenjo-daro, 1938, p. 340-1).

The nautical historian Basil Greenhill makes an interesting point about why this boat style may have endured on the Indus: "As for the punts [long, narrow, flat-bottomed boats, square at both ends and propelled with a long pole, used on inland waters chiefly for recreation], their silhouette bears perhaps some resemblance to that of the boat depicted in one of the two scribings of boats found at Moenjo Daro, the Indus civilization site which lies on the west side of the river roughly in the center of the long stretch of the Indus on which these boats are to be found today. Models of carts found at Moenjo Daro are exactly like the bullock carts currently found in the locality; but to suggest that the boats remain likewise little changed is to push back the development of the sophisticated flat-bottomed punt a long, long, way in the history of man's efforts to make a living on the water.

Simple people who have suffered no great upheaval in their society tend to cling to the familiar, if it serves its purpose, even though the results of forty generations of slow thought and experiment and chance lies alongside them at the same wharf. This is particularly true of the boatmen, partly because to depart from established practice may mean death by drowning, or worse still, loss of the means to keep alive, but mostly because at most times and at most places in the story of man boatmen have been poor, and the poor have no means to bring about change." (Boats and Boatmen of Pakistan, 1971, p. 182).

"உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்று ஏன் சொன்னார்கள் தெரியுமா?

உப்புப் பெறாத விஷயமெல்லாம் மாய்ந்து மாய்ந்து பேசும் நாம், உப்பை விளைவிப்பவர் யார்? உப்பு எப்படி நமக்கு கிடைக்கிறது என்று எப்போதாவது நினைத்திருக்கிறோமா ?

நெய்தல் நிலத்தில் மட்டுமே அங்கே வாழும் பரவரால் உற்பத்தியாகும் உப்பினை ஏனைய நிலப்பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணியினை உமணர் என்போர் மேற்கொண்டிருந்ததை சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. மருத நிலத்தைச் சேர்ந்த உமணர்கள் கழுதைகள், மாட்டுவண்டிகளின் வாயிலாக உப்பைக் கொண்டு வந்து அவற்றை நெல்லுக்கு பண்டமாற்று செய்தனர். இப்பண்ட மாற்று முறையில் நெல்லின் மதிப்பும் உப்பின் மதிப்பும் சமஅளவில் இருந்துள்ளது. இதில் உமணர்கள் என்பது யாரைக் குறிக்கும் என்பது ஆய்வுக்குரியது. உப்பை விநியோகிக்கும் பொறுப்பு மட்டும் உமணர்கள் வசம் இருந்தது. 

அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் புள் ஓர்த்துப்
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர் –

-- மதுரைபுலவர் சேந்தம்பூதனார், அகம்.

அணங்கு என்னும் பெண் தெய்வம் உறையும் கடலினது நீர் பரவிய உப்பளத்தில் விளைந்து, நன்கு காய்ந்த அமிழ்தமாகிய வெண்ணிற உப்பினைப் படைக் கலன்களைக் கையிற் கொண்டெழுந்த வீரச் செயல்கள் புரியும் உமணர்கள் மூட்டைகளாக அடுக்கி, வெண்ணிறக் கழுத்தினைக் கொண்ட கழுதைகளின் மீது ஏற்றிக் கொண்டு, நிமித்தம் பார்த்தவராய்; அவற்றை மேற்குத் திசைகளில் உள்ள இடங்களுக்குக் கொண்டு செல்வர். இது அகநானூறு வருணிக்கும் ஒரு அந்த நாளைய வாழ்வியல் காட்சி.

உப்பு அமிர்தத்திற்கு இணையாகக் காணப்பட்டது சோழர் காலத்தில் நெல்லின் விலையும் உப்பு விலையும் அருகருகே இருந்தன. பழந்தமிழ் நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்புதான் விளங்கியிருக்கிறது. உலகத்திலேயே முதன் முதலில் எகிப்தியர்கள் தான் கடல்நீரில் இருந்து சோடியம் உப்பை பிரித்தெடுத்தார்கள். என்றுக் கூறப்படுகிறது எகிப்திய நாடு ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் செல்வாக்கு பெற்ற நாடாக விளங்க காரணம் எகிப்தியர்கள் சுற்றியுள்ள நாடுகளுக்கு எல்லாம் உப்பை விற்று செல்வத்தை ஈட்டியிருக்கிறார்கள்

ஆனால் அந்த உப்பு எடுக்கும் கலையும் தொழில் அறிவும் தமிழகத்தின் தொல் பரவலுக்கு பின்பே தமிழர்களின் தொடர்புகளால்  வந்திருக்கலாம். எகிப்திய இறந்த மன்னர்களின் உடலைப் பதப்படுத்த தமிழ் நாட்டை சேர்ந்த பருத்தி துணிகளும், வாசனைத் திரவங்களும் பயன்பட்டபோது, இறந்த உடலைப் பதப்படுத்தும் உப்பையும் தொல் தமிழர்களே அறிமுகப்படித்திருக்கலாம். அதிகமாகப் பிடித்த மீன்களை உப்பிட்டு கருவாடாக்கும் வித்தையை தெரிந்தவர்கள் தொல் நெய்தல் நில மக்கள் ஆன பரதர் ஆகும் .

எகிப்து நாட்டில் இருக்கும் பல பிரமீடுகளில் காசா பிரமீடு மிக பெரியதாக உள்ளது. இதில், தமிழகத்தின் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழக்கத்தில் இருந்த தமிழி எழுத்துக்கள், காசா பிரமீடு நுழைவு வாயிலில் ”கந்தன்’’ என்ற பெயராக எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த தமிழ் மொழி ஆய்வாளர் மதிவாணன் இதனை உறுதி செய்துள்ளார்.

உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். நாகைக்கு அருகில் பேரளம், சென்னைக்கு அருகில் கோவளம் (கோ அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள். கடற்கரை பகுதியில் தோன்றிய மனித நாகரீகங்கள் எல்லாம் பெரும்பாலும் உப்பை அடிப்படையாகக் கொண்டவை என்கிறார்கள். அவ்வளவு ஏன் உயிர்கள் முதலில் தோன்றியதே உப்பு நீரில் இருந்துதான் என்று அறிவியல் அடித்துச் சொல்கிறது.

மனித நாகரீகத்தின் முதல் அடியே ருசியில்தான் துவங்குகிறது. அறுசுவை என்பது உடலுக்கு ஐம்பூத ஆற்றலை வழங்குவது. சுவை சூக்ஷமானது. அந்த கண்ணுக்குத் தெரியாத சுவையை நாக்கில் உள்ள சுவை மொட்டுக்களே பிரித்து அனுப்புகிறது. நாக்கைத் தாண்டியபின் உடலுக்கு சுவைத் தெரியாது.

வெட்டி வேலை என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதற்கும் உப்புக்கும் பரவருக்கும் தொடர்புண்டு தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சிக்காலத்தில் “வெட்டி” என்ற பெயரில் நிலவிய ஊதியமில்லா கட்டாய வேலை முறை "ஊழியம்” என்ற பெயரில் தென் திருவிதாங்கூர் மன்னர் (தற்போதைய கேரள மாநிலம்) ஆட்சிப்பகுதியில் நிலவியது. பல்வேறு வகையான ஊழியங்கள் மக்கள் மீது சுமத்தப்பட்டன. இவற்றுள் ஒன்று “உப்பு ஊழியம்” ஆகும்.

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப் பகுதியில் எடுக்கப்படும் உப்பில் ஒரு பகுதியை திருவட்டாறு, நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் உள்ள கோயில் மடப்பள்ளிகளுக்கு சுமந்து சென்று வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் உப்புக்கு விலை கிடையாது. சுமை கூலியும் கிடையாது. அதே வேளையில் இப்பணியைச் செய்யாவிட்டால் தண்டனை மட்டும் உண்டு. இதைத்தான் அப்போதைய மக்கள் வெட்டி வேலை என்று பயனற்ற வேலையை சொல்லும் வழக்கம் இன்றுவரை உள்ளது. வரலாறு வாழும் மக்களிடமும் உள்ளது, கல்வெட்டிலும் உள்ளது. 

கி.பி.12 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று “உப்புக்காசு” என்ற பெயரிலான வரியை குறிப்பிடுகிறது. மேலும் கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரான்மலைச் சொக்கநாதர் கோயில் கல்வெட்டொன்று

உப்பு பொதி ஒன்றுக்கு காசு ஒன்று

உப்பு பாக்கத்துக்கு காசு அரையும்

உப்பு தலைச்சுமை ஒன்றுக்கு காசு அரையும்

உப்பு வண்டி ஒன்றுக்கு காசு பத்தும்  என்று குறிப்பிடுகிறது.

இதே கல்வெட்டு

நெற்பொதி ஒன்றுக்கு காசு ஒன்றும்

நெற்பாக்கம் ஒன்றுக்கு காசு அரையும்

நெல் வண்டி ஒன்றுக்கு காசு பத்தும் என்று குறிப்பிடுகிறது. 

இக்கல்வெட்டு மூலம் உப்புக்கு இணையான வரியே நெல்லுக்கும் வாங்கப்பட்டுள்ளது. உப்பும் நெல்லும் ஒரே விலை விற்ற செய்தியும் தெரியவருகிறது. 

இதே போல சடையவர்மன் நான்காம் சுந்தரபாண்டியனின் ஆறாம் ஆட்சியாண்டுக் (1324-24) கல்வெட்டு ஒன்று காரைக்கால் அருகாமையில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலின் ராஜமண்டபத்தில் காணப்படுகிறது. அக்கோயிலின் தானத்தார்க்கு அவன் விடுத்த கட்டளையொன்று அதில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

இன்னாயனார் திருநாமத்துக் காணியி(n)ல
தரிசு கிடந்த நிலத்தில் ஒரு கண்டமும்
ஒரு கெணியும்
தருசு திருத்தி, உப்பு படுத்து
முதலான உப்பு புறநாட்டிலெ விற்று இம்முதல்
கொண்டு திருமார்கழித் திருவாதிரை திருநாள்த்
தாழ்வுபடாமல் எழுந்தருளப் பண்ணவும்
மார்கழித் திருவாதிரைத் திருநாள் நடத்தும் செலவுக்காகப்
புதிதாக உப்பளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

இந்தக்கல்வெட்டின் மூலம் நெய்தல் நில மக்களின் மார்கழி திருவாதிரை அடுத்த கடல் பயணப் புறப்பாட்டு ஏற்பாடுகளுக்காக சிவனை வழிபாட்டு கிளம்பும் முறை இருந்து வந்தது தெரியவருகிறது. அப்போதுதான் பருவக்காற்று சாதகமாக இருக்கும். இன்றைய வரையில் சிதம்பரம் தில்லை நடராசர் ஆலயத்தில் ஆருத்திரா திருவிழாவில் முதல் மரியாதை சிதம்பரத்து மீனவருக்கே இருக்கிறது. அவர்களின் வழிபாட்டிற்குப் பிறகே நடராசர் 1000 கால் மண்டபத்தைவிட்டே வெளிவருவார். அந்த விழாவுக்கு பெயரென்னத் தெரியுமா தரிசனம் .!

ஏதன் தரிசனம்? ஆருத்திரா தரிசனம் என்றால் மார்கழி திருவாதிரையை நெய்தல் மக்களுக்கு தரிசனப்படுத்தி கடல்பயணம் செய்ய வைக்கும்  நிகழ்வுதான் அந்தத் திருவிழா. திருவண்ணாமலையில் மலையில் கார்த்திகைத் திருநாள் அன்று தீபம் ஏற்றும் உரிமை இன்னமும் நெய்தல் நில மக்களிடமே உள்ளது. கார்த்திகை
மாத கார்த்திகைக்கு பிறகு தீபம் ஏற்றியதும் அடை மழை நின்று பயணம் தொடங்க ஏற்பாடுகள் நடக்கும் .

தமிழ் சமூகத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு வாழ்ந்து வரும் கடலோரச் சமூகங்களில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் சமூகம் பரவர். பரவர் அல்லது பரதவர் என்பது தற்காலத்தில் சாதிப் பெயராக அடையாளம் காணப்பட்டாலும் அது சாதிப் பெயர் அல்ல. பண்டை இலக்கியங்களில் நெய்தல் என்னும் திணையின் தலைவர்களாக வருகிறவர்களே இந்த பரவர்கள். தம் பெருமை வலிமை அறியாத அனுமனை போல், கட்டு இல்லாதிருந்தால் கட்டுண்டதாக மயங்கி நிற்கும் கோயில் யானைப்போல் இன்று பெருமை கொண்ட நெய்தல் நில மக்கள் மயக்கத்தில் இருக்கின்றனர்.

நெய்தல் நிலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை சங்க இலக்கியங்கள் ‘பரதவர்” என்று அடையாளப்படுத்துகின்றன. தமிழக கரையோரப்பட்டினங்களில் இவர்கள் கடல்சார் தொழில் புரிவோராகவும் வணிகராகவும் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களை மீனவர் என ஒரு சாதிப்பெயரில் அடக்கி, அவர்தம் பெருமையை மழுங்க அடித்து, வயிறு பிழைப்புக்கு மீன்பிடித் தொழில் புரிந்து ஆயிரம் ஆயிரம் வருட பாரம்பரிய கடல் சார் அனுபவமும் அறிவும் படைத்த ஒரு சமூகம், இந்த நிலையில் இருக்கும் நிலை மிகக்கொடுமையானது.

அவர்களுக்கும் 22 சாதிப்பிரிவுகள் இருக்கின்றன. பரவர், முக்குவர், பட்டினவர், வலையர், கரையார், பர்வதராஜகுலம், மரக்காயர், என இன்னும் பல சாதிகளாக அடையாளம் காணப்படும் மீனவ மக்கள் நீளமான இக்கடலோரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

உண்மையில் தமிழனின் கடல் சார் பயணத்தையும், அவர்களின் வணிகத்தையும், பொருளாதார ஆளுமைகளையும் ஆராய இன்னமும் மிஞ்சி இருக்கும் கலப்பில்லாத உண்மைத்தமிழராக இருக்கும் தமிழ் நாடு, இலங்கை மீனவர்களையும், நகரத்தாரையும் ஆராய்ந்தால் போதும். அதாவது பட்டினவரையும், பட்டணத்தவரையும் ஆராய்ந்தால் போதும். முதலில் தொல் தமிழ் நாட்டின் திணை ஒன்றான நெய்தல் நிலமக்கள் முதலில் மீனவர் எனும் சாதிப்பிரிவில் இருந்து வெளிவரவேண்டும். அவர்களின் பெருமையும் அனுபவமும் அறிவும் மீன்பிடித்தலில் மட்டுமல்ல. 

தமிழ் சித்தர்களை வெறும் மருத்துவர்கள் என்று அறிவது எப்படித் தவறானதோ, அப்படியே நெய்தல் நில மக்களை மீனவர்கள் என்று கூறுவதும் ஆகும். அவர்கள் மிகச் சிறந்த மாலுமிகள், கடலில் கலம் ஓட்டும் காற்றின் திசை அறியும், உலகின் ஆயிரம் திசை அறியும் வல்லமைபெற்றவர்கள், மிகச் சிறந்த வணிகர்கள், பொருளாதார நிபுணர்கள், யாருக்கும் கட்டுப்படாத தீரர்கள், அஞ்சாத வீரர்கள் இன்னம் சொல்ல நிறைய இருக்கிறது. இத்தகையது திரை மீளர்களைப் பற்றி சொல்லச் சொல்ல விரியும்.

அண்ணாமலை சுகுமாரன் எம். ஏ , டி இ இ

நினைவலையில் நீந்துகிறேன்

பரந்த கரையில்
பார் காட்டியது கடல்
கதிரவன் வெளிச்சத்தால்
நிலவு தெரியவில்லை
நிலவுக்கோ உடல் நலக்குறைவு
அதனால் அலையும் எழும்பவில்லை.

பார் மேய்ந்தது சிறுவர் கூட்டம்
கரை பிட்டித்த நண்டுகள்
விடுவிக்க பட்டன,
பாரிலிருந்த நத்தைகள்
சிறை பிடிக்கப் பட்டன.

கைதிகளாய் நத்தைகள்
சரணடைந்தாலும் போருக்கு 
வந்தது அஞ்சாலை.
பயந்த வீரர்கள் பின்வாங்க
பயமறியா படை வீரன் 
சிறைபிடித்தான் நத்தைகளை.
படைத் தளபதி அவனுக்கு 
பரிசாய் வீரத்தழும்பு.

சங்குடைத்து, சதை எடுத்து
சுடச்சுட வரும் நத்தைப் பொரியல்
தளபதிக்கு அதிக பங்கு.
உழைத்தவனுக்கு ஊதியமது
சரியாய் சேரும் 
சிறு வயதிலே நெய்தல் படிப்பித்தது.

போகவில்லை வெளியூர்கள்
விளையாடவில்லை பார்க்குகளில்
சுக்கான் பலகையில்
பனக்கட்டை அடைவைத்தே
விளையாடினோம் சீசாக்கள்
டிராம்போலைனின் குதிக்கவில்லை
பதிலாக பாசி மெத்தையில்
துள்ளிக் குதித்தொம்
களைத்து சோர்ந்தால்
பட்டு மணலில் படுத்துறங்குவோம்
தெரியாது கம்பியூட்டர் எங்களுக்கு
பக்கத்து வீட்டு தொலைகாட்சியை
தொலைவிலிருந்து பார்துக்கொள்வோம்.

வலைபடும் மீனில் சிறுமீன்
தருவர் சிறுவர் எங்களுக்காய்
உழைத்தவர் அவர்களும்.
மீனுக்கு பண்டமாற்று
மரியா ஆச்சியிடம்
வியாபார யுக்தி அதை
விளையாடிய வயதிலே
நெய்தல் படிப்பித்தது.

சி.ஐ.டி வேலை அதை
சீராய் செய்தோம்
"ஐய்ஸ் பால் ரெடி"
கட்டுவைத்து விளையாடினோம்.
கட்டுப்பட்டோம் நாங்கள்
பெற்றோரின் கட்டுகளுக்கும்
விளையாட்டின் கட்டுகளுக்கும்
கட்டுப்பாடு அதைச் சொல்லியே
வளர்த்தது நெய்தல் எங்களுக்கு.

விடிய விடிய படிக்கவில்லை
விடிந்தவுடன் ஓடவில்லை
வண்டிக்கு பள்ளி வண்டிக்கு.

கட்டுமரங்கள் அதை எண்ணி
எண்களை படித்தோம்
மீன்கள் அதை விற்று
கூட்டல் கழித்தல் படித்தோம்
சூரியனின் வெப்பத்தால்
கடல் நீர் குடித்து
பிரசவிக்கும் மேகம்
பொழியும் மழை
அறிவியலும் படித்தோம்
கடற்கரையில் இருந்தே.

வளர்ந்தோம் நாங்களும்
சேர்ந்தே வளர்ந்தது நெய்தலும்
படித்தோம், பல நாடு கடந்தோம்
வந்து பார்தோம்
காணவில்லை படிப்பித்த நெய்தலை.
இனி எங்கு தேடுவேன்
அந்தப் பரந்த கரையை???

-ஜோ ரினு

பரதர் நாடு பிரகடனம்

பரதகுலத்தவரின் தனி நாடு பிரகடனம்

வருடம்  கிபி 1603

பரதகுல எழுச்சி  ஆம் பரதவர்கள்  1604ல் இருந்து  1610  வரை   உலகில் தனித்து  வாழ்ந்த தனித்துவமான  வரலாறு 

தூற்றுக்குடிக்கு அருகே உள்ள   பாண்டியன் தீவு அல்லது முயல் தீவு (HARE ISLAND) என்று அழைக்கப்படும் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள தீவு போர்த்துகீசியர் காலத்தில் ராஜதீவு ISLE DES RESIS என்று அழைக்கப்பட்டது. அந்த காலத்தில் இத்தீவு முற்றிலும் கடலால் சூழப்பட்டிருந்தது. இன்றிருக்கும் தரைவழி அன்று இல்லை. பரத வணிகர்களின்   கப்பல்களும் வெளி நாட்டினர்  கொண்டு வரும் வணிக கப்பல்களும்  வணிக கூலங்கள் அதாவது பண்டகங்களை பாதுகாக்கும் பண்டக சாலையாக  இந்த தீவு பயன்படுத்த  பட்டது

-------------------------------------------

பரதகுல பாண்டியனின் எதிரியான  நாயக்கனின் அராஜகம் 

கிபி 1311 ல் மாலிக்காபூரால் பரதகுல பாண்டியர்கள்  வீழ்ச்சி  அடைந்த பிறகு  பரதகுல மக்கள்  ஒடுங்கி  போய்  நெய்தல்  நிலத்தில்  பாண்டியாபதி தலைமையில் வாழ்ந்து கொண்டிருந்த  காலத்தில் 

1600 ஆம் ஆண்டுகளில்  மதுரையை ஆண்டு வந்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கனின்  நம்பிக்கைக்கு உரிய  பரதகுல மக்கள்  மீது  நாயக்கனுக்காக அராஜகங்கள் செய்ததால்  பரதகுல மணப்பாட்டு பரதவர்களால்  வெட்டி கொலை செய்யப்பட்ட  வெட்டும்  பெருமாள்   இழந்து  இருந்த  முத்து கிருஷ்னப்ப நாயக்கன்  பரதவர்களை பழிவாங்கும்  நோக்கத்துடன், கயத்தாறு  குறுநில மன்னனுடன்  ஒரு ஒப்பந்தம்  செய்து கொண்டான் . அதன்படி  6000 பணம்  எனும் பெருந்தொகையை  பரதர்களிடம் இருந்து  வரியாக வசூலித்து  தரும்படி ஏவினான்.

முத்துக்குளித்துறை பரத மக்கள் மீது 6000 பணம் என்னும் தொகையை வரியாக விதிக்கப்பட்ட தொகையை கட்டமுடியாமல் திக்குமுக்காடி  போயினர்  பரவர்கள் அதற்கு  காரணம்  கிபி 1603ம் ஆண்டில் முத்துச்சலாபம்  சரியாக  நடைபெறவில்லை. ஆகவே வரி செலுத்த முடியாது  என  நாயக்கன் ஆனையை ஏற்க மறுத்தனர் 

 மதுரை நாயக்கன், தனது படையுடன், விஜயநகர பேரரசின் வடுகர் படையையும் கயத்தாறு  மன்னனின் சிறுபடையும்  சேர்ந்து, ஏறத்தாள 3000 போர்வீரர்கள்,யானைப்படை, குதிரைப்படை சகிதமாக தூற்றுக்குடியை தாக்கி மக்களின் வீடுகளைச் சூறையாடினான். தற்போதைய கெரக்கோப் மைதானத்தில்  அன்று அமைந்து இருந்த  போர்ச்சுகீஸியர்  தலைமை இல்லத்தையும் அதை ஒட்டி இருந்த  இயேசு சபைத் இல்லத்தையும் இடித்துத் தகர்த்தனர்.

அதற்கு  முன்பாகவே  பரதர் மாதாவாம்  பனிமயத்தாயின் திருச்சுரூபம், பாதுகாப்பான  ஒரு இடத்திற்கு  கடத்தப்பட்டு இருந்தது.
அதோடு இணைந்திருந்த பனிமய மாதா ஆலயத்தையும், குருமடத்தையும், புனித இராயப்பர் கோவிலையும் நெருப்பு வைத்து அழித்தனர். பதினெட்டு நாட்களாக இருந்த முற்றுகைக்குப்பின் இயேசு சபை பொருளாளராக இருந்த சுவாமி கஸ்பார் தப்ரோ (Gaspar De Abreu) வை பிணைக் கைதியாகக் கொண்டு சென்றனர். நாயக்கனின்  படையெடுப்பு மீண்டும்  தொடரும்  என்பதை அறிந்த   அன்றய பரதகுலாதிபன், பாண்டியாபதி,  தொன் ஜெரோனிமுஸ் தெக்குருஸ் பீரிஸ் ( 1590 - 1615 ) கப்பம் கட்டாமலே யுத்தத்தை தவிர்க்க ஒரு வியூகம் தீட்டினார்.

 அதன்படி எழுகடற்றுறை பட்டங்கட்டிகளும் மற்றும்  சமூதாய பெரியோர்களும், புன்னைக்காயலில் கூடி வரிப்பிரச்சனை பற்றி கலந்துரையாடினர். இறுதியில் சிவந்தி நாத பிள்ளை என்னும் அதிகாரியை பரதகுல மக்களுக்காக பரிந்து பேசி வரியைக் குறைக்க கயத்தாறு மன்னனிடம் அனுப்பி வைத்தனர். அதற்கு கயத்தாறு மன்னன் இணங்க மறுத்தான்.

 இரண்டாவது முறையாக பரதகுல பாண்டியாபதியும் எழுகடற்றுறை பட்டங்கட்டிகளும்,மற்றும்  முத்துக்குளித்துறையின் முக்கிய பிரதிநிதிகள் அனைவரும்  புன்னைக்காயலில் கூடினர்.

சமூதாய கூட்டம் இறுதியில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் ஒன்றை பிரகடனப்படுத்தினார்கள். 

பிரகடனப்படுத்திய பரதகுல பெருமக்கள் 

தொன் ஜெரோனிமுஸ் தெக்குருஸ் பீரிஸ் முத்துக்குளித்துறை முழுவதுக்குமான சாதித் தலைவன்)

பிரான்சிஸ் டி மெல்லா - தூற்றுக்குடிக்கு மட்டுமான சாதித் தலைவர்

ஜான்  டி குருஸ் - (முத்துக்குளித்துறை முழுவதற்குமான பொருளாளர்)

அந்தோணி டி குருஸ் - (கொம்புத்துறைப் பட்டங்கட்டி)

ஜான் டி குருஸ் - (பரதகுலாதித்தன், தூற்றுக்குடி)

ஜான் பெர்னாண்டஸ் கொரைரா - (தூற்றுக்குடி)

தொம் பேதுரு காகு -  (முத்துக்குளித்துறை முழுவதற்குமான தலைமைக் கணக்குப்பிள்ளை)

பவுல் மச்சாது - (புன்னைக்காயல்)

தொம்மை டி குருஸ் - (வைப்பாறு)

தொம்மை டெனிஸ் - (மணப்பாடு)

தொம்மை வாஸ் டி லீமா - (வேம்பாறு)

தொம்மை பீரிஸ் - (வைப்பாறு)

பேதுரு வாஸ் - (தூற்றுக்குடி)

தொம்மை டி குருஸ் வீர நாராயணத் தேவர்

மத்தேயு தல்மெய்தா வல்நாசியார்

மனுவேல் டி குருஸ் - தூற்றுக்குடி

தாமஸ் குருஸ் - (வீரபாண்டியன் பட்டணம்)

மனுவேல் டி மேஸ்கித்தா - (வேம்பாறு)

ஜான் டி மிராண்டா  - (வேம்பாறு)

தொம்மை டி குருஸ் ஆரிய பெருமாள் - ( மணப்பாடு)

மத்தேயு டி மொறாய்ஸ் - (பழையகாயல்)

ஜான் டி குருஸ் - (தூற்றுக்க்குடி)

தொம்மை பர்னாந்து குத்திப்பெரிலார் - (ஒவிதோர், தூற்றுக்குடி)

பெர்த்தொலமே விக்டோரியா - (ஒவிதோர், தூற்றுக்குடி)

------------------------------------

பரதகுல வரலாற்று  பிரகடனம்

கிபி 1603 ல்  எடுக்கபட்ட பிரகடனம்  இனி பரதகுல மக்கள்  எந்த ஒரு மன்னனுக்கும் குடி மக்கள்  ஆக மாட்டார்கள்    இப்போது  வாழும் இடத்தை விட்டு ஒட்டு மொத்தமாக  பாண்டியன்  தீவில்  குடியேறி தனி நாடாக  வாழ்வோம் என்பதே  அந்த பிரகடனம்

உடனடியாக மக்கள்  குடியேற்றம்  நடை பெருவதற்க்காக  புனித இஞ்ஞாசியாரின் சேசுசபை  குருக்களுடன்,  கோவா போர்ச்சுகீஸிய ஆளுனர் ஜாஸ் டி சூசா  என்பவர்  ஒத்துழைப்புடன் 

ஏறக்குறைய பத்தாயிரம் மக்கள் பாண்டியன்  தீவில் குடியேறினர். அங்கு தங்களுக்கென்று தனித்தனி இல்லங்கள் அமைத்து வாழ்ந்தனர். அனைவருக்கும் குடிநீர் வழங்க பெரிய நீர்த்தேக்கங்களும் கட்டப்பட்டன.   போர்ச்சுகீஸ்  அதிகாரிகளுக்கும் அலுவலகங்கள்  நேர்த்தியாக கட்டப்பட்டன.மேலும் தீவைச் சுற்றி பாதுகாப்பிற்காக ஒரு மதிற்சுவரும் அமைக்கப்பட்டது. இங்கே  பரதகுல மக்கள்  குடியேரியது   கி பி 1604ல் நிறைவேறியது 

அன்னை மரியாளுக்கு பெரியதோர்  ஆலயமும் மூன்று  சிறிய ஆலயங்களும் கட்டப்பட்டன, முன்பே கடத்திழவைக்கபட்டு இருந்த பரதர் மாதாவின் திருச்சொரூபம் பெரிய ஆலயத்தில்  நிறுவப்பட்டது.

-----------------------------

புனித இஞ்ஞாசியாரின்  இயேசு சபையினரும் தூற்றுக்குடியிலிருந்த தங்களின் தலைமை இல்லத்தை முயல் தீவுக்கு மாற்றினர். மொத்தம் பதினாறு அறைகளைக் கொண்ட புதிய தலைமை இல்லம் ஒன்றை அங்கு கட்டி எழுப்பினர். அதைச் சுற்றி மூன்று அரண்களும் அமைக்கப்பட்டன.

இயேசு சபையினரின் தலைமை இல்லத்திற்கு அருகே கற்களால் ஒரு பெரிய ஆலயம் கட்டப்பட்டது. இப்புதிய ஆலயத்திற்கு, இயேசு சபையின் கொச்சி மாநிலத் தலைவர் ஆல்பர்ட் லெர்சியோ, 1604 ஆம் ஆண்டு ஜூலை  2 ஆம் தேதி தேவ தாய் எலிசபெத்தம்மாளைச் சந்தித்த திருநாளில், அடிக்கல் நாட்டினர். இவ்வாலயம் தேவதாய் மரியாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஆலயத்தை உருவாக்க மக்கள் 1000 தங்க நாணயங்களைக் காணிக்கையாகக் கொடுத்தனர். 

புதிய ஆலயத்தின் கட்டிட வேலைகள் 1606 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்றது. அதன் அகலமும் அழகும் மிக்க ஆலயம். ஆலயத்தினுள்ளே ஒன்பது பீடங்கள் இருந்தன. ஆலயத் திறப்பு விழாவிற்குப் பின் பாண்டியன் தீவு ஒரு தனிப் பங்காகவே இயங்கியது. இயேசு சபைக் குரு ஒருவர், இப்பங்கைக் கண்காணித்து வந்தார். அது 'தேவ மாதா பங்கு' (MADRE DE DEOS) என்று வழங்கலாயிற்று. அன்னையின் ஆலயம் நீங்கலாக மேலும் மூன்று சிற்றாலயங்களும் கட்டப்பட்டிருந்தன. தீவின் ஒரு கோடி முனையில் உயர்ந்ததோர் மரச் சிலுவையும் நடப்படிருந்த்து. (தகவல்: உரோமை இயேசு சபை பழங்சுவடி நிலையம் (ARSJ) Goa 55. 163-164)

பரத மக்கள், தூற்றுக்குடியிலிருந்து பனிமய அன்னையின் அற்புத சுரூபத்தை பத்திரப்படுத்தி, அதனைத் தங்களோடு பாண்டியன் தீவுக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு உருவாகியிருந்த புதிய ஆலயத்தில் அன்னையின் சொரூபத்தை ஆடம்பரமாய் நிறுவி வணங்கி வந்தனர். முன்னர் தூத்துக்குடியில் பனிமய தாயின் சுரூபத்தைப் பக்தி பரவசத்தோடு வணங்கி, அதனால் அன்னையின் அற்புதக் காட்சிகளைக் காணும் பேரறு பெற்றிருந்த, இயேசு சபை சகோதரர் வணக்கத்திற்குரிய பேதுரு பாஸ்து என்பவர், பாண்டியன் தீவிலும் தங்கி, பனிமய அன்னைக்கு வழக்கம் போல் தனது பக்தி வணக்கத்தைச் செலுத்தி வந்தார். 

-----------------------------

பட்டொளி வீசிப்பறந்த பரதர் நாடு

ஒரு தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்ட பாண்டியன்  தீவு தன்மானத்துடன்  பாண்டியாபதி தலைமையில் கிபி 1604 முதல் 1610   வரையில்  ஆறு ஆண்டுகள்  அற்புதமாக கடந்தது

---------------------------

தனிநாடு வீழ்ச்சியும் முட்டாள்  ஆயரும்

அக்காலத்தில் முத்துக்குளித்துரைக் கிறிஸ்தவ மக்கள், இயேசு சபைக் குருக்களின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தாலும், முத்துக்குளித்துறை முயல் தீவு, மன்னார் தீவு அனைத்தும் கொச்சி மறைமாவட்டத்திற்கு உட்பட்டிருந்ததினால், அவை கொச்சி ஆயரின் ஞான அதிகாரத்தின் கீழ் இருந்தது. முயல் தீவு குடியேற்றத்தின் போது, கொச்சி ஆயராக இருந்தவர் அந்திரேயாஸ் என்பவர். அவர் பிரான்சிஸ்கன் சபையை சார்ந்தவர். அவர் இலங்கை சென்றிருந்த நேரத்தில் அவருக்குத் தெரியாமலேயே பாண்டியன் தீவுக் குடியேற்றம் நடந்து முடிந்தது. இதனால் ஆயர் அந்திரேயாஸ் மனம் நொந்தார். பாண்டியன் தீவு கிறிஸ்தவக் குடியேற்றத்தைத் தனது ஞான அதிகாரத்திலிருந்து விடுபட, இயேசு சபையினர் செய்த சூழ்ச்சி என்று தவறுதலாகப் புரிந்து கொண்டார்!

எனவே, பாண்டியன் தீவில் குடியேறிய கிறிஸ்தவ மக்களை, மீண்டும் நிலப்பகுதிக்கே திரும்புமாறு ஆயர் வற்புறுத்தினார். ஆனால் நிலப்பகுதி தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினால், மக்கள் ஆயரின் ஆணைக்குப் பணிய மறுத்தனர். ஆயர் அந்திரேயாஸ் தீவில் குடியறியவர்களை திருச்சபையிலிருந்து விலக்கம் செய்ததுடன், மதுரை நாயக்கன், கயத்தாறு மன்னனுடன் போர் ஒப்பந்தம் செய்து கொண்டார். பின் கொச்சி மற்றும் கோவாவிலிருந்து ஒரு போர்த்துக்கீசியப் படையைத் திரட்டி வந்து, பாண்டியன் தீவை முற்றுகையிடும்படி செய்தார். 

இந்த முற்றுகை 22 நாட்கள் நீடித்தது. போதிய உணவும், குடிநீருமின்றி மக்கள் தவித்தனர். எனினும் ஆயரின் படைக்கு எதிராக இயேசு சபைக் குரு ஜான் போர்கஸ் என்பவர் தலைமையில் பரதர்கள் சண்டையிட்டனர். இறுதியில் போர்த்துகீசிய வீரர்கள், இராஜ தீவுக்குள் புகுந்து, அங்கிருந்த இயேசு சபை தலைமை இல்லத்தையும் தாக்கி அழித்தனர். மாதாவின் ஆலயமும், மக்களின் வீடுகளும் சேதமடைந்தன. இதனால் வேறு வழியின்றி மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர் திரும்பினர். இயேசு சபையினரும் மன்னார் தீவில் தஞ்சம் புகுந்தனர். ஆறு ஆண்டுகளாக நீடித்த பாண்டியன் தீவுக் குடியேற்றம் இவ்வாறு முடிவுக்கு வந்தது. ( தகவல் : AGSJ: Goa 56 (Malabarica) f. 178: Goa 55, ff 176 -178)

இந்த சமயத்தில்   பல பரதகுல மக்கள் கடற்கரை தவிர்த்து  உள்நாடு பகுதில் குடியேற்றம்  நடந்தது

அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்பியதும் கொச்சி ஆயர் #அந்திரேயாஸ் தூத்துக்குடி, வேம்பாறு, வைப்பாறு, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டணம் ஆகிய ஊர்களைக் கண்காணித்து வந்த இயேசு சபைக் குருக்களை நீக்கிவிட்டு கத்தனார்கள் எனப்படும் சிரியன் ரீதிக் குருக்களை நியமித்தார். இதனால் இந்த பங்குகளில் லத்தீன் வழிப்பாட்டு முறைகள் நீக்கப்பட்டு, சிரியன் ரீதியான வழிப்பாட்டு முறைகள் புகுத்தப்பட்டன.

போர்த்துகல் மன்னன் 3 -ஆம் பிலிப்பு முத்துக்குளித்துறையில் நிகழ்ந்த குறிப்பாக இராஜ தீவில் நிகழ்ந்த நிகழ்வுகளை அறிந்து வேதனையுற்று மீண்டும் இயேசு சபையினரிடம் முத்துக்குளித்துறையை ஒப்படைக்குமாறு கொச்சி ஆயருக்கும், கோவாவிலிருந்த போர்த்துகீசிய ஆளுநருக்கும் 1614 ஆண்டில் ஆணை பிறப்பித்தார். அதனை பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை. எனவே மீண்டும் கோவா ஆளுநருக்கு கண்டிப்பான கட்டளையிட்டு கடிதம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து 1621 ஆம் ஆண்டு இயேசு சபையினர் பரத குலத்தோரின் மிகுந்த வரவேற்பிற்கிடையே மீண்டும் முத்துக்குளித்துறைக்குத் திரும்பினர். இதனால் அதிர்ச்சியுற்ற கொச்சி ஆயர் தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்தார்.

மறைந்த மறைத்திரு வெனான்ஸியுஸ் அடிகளார் இக்கடலோரத்தில் வாழும் கடவுளின் மக்களை  வாழவைத்ததிலும்  அழித்ததிலும்  நம் ஞான அதிகாரிகளுக்கு முக்கிய பங்குண்டு  என கடலோரம் கடவுள் என்ற புத்தகத்தில் எழுதிஉள்ளார்

நன்றி: பாண்டியாபதி  கோப்புகள்

RAO BAHADUR CRUZ FERNANDEZ

RAO_BAHADUR_CRUZ_FERNANDEZ
(1869—1930)

The first half of the twentieth century in Tuticorin threw up many stalwarts in our community. The Pereiras and the D’Mells who did very well in business in Srilanka; the Mascarenhases who did well as Tamil poets; the Rodriguezes who were part of Madurai Tamil sangam and specialized in Chithira kavis; and the Moraises who championed the labourers; the innumerable priests and nuns who adorned the firmament of catholic church, the Lobos who excelled as teachers.  But one personality who stands out like a Colossus by his public service, philanthropy, generosity, love and affection for the people , determination and perseverance to achieve the goals set, is CRUZ FERNANDEZ of Tuticorin who was elected to the chairmanship of TUTICORIN MUNICIPALITY not once but five times, between 1909 and 1927; who was awrded the title of RAO BAHADUR by the Government; and who was elected to the Madras Legislative Assembly.

Born in a middle class family on 15th November 1869. and educated up to the school finals in St. Xaviers in Tuticorin CRUZ FERNANDEZ joined the Walcot company as a clerk under Manager Selviger, and rose up to be his personal secretary by dint of hard work ,sincerity and loyalty to the company. Having done well in Walcot, in his desire to move further up , he left Walcot and joined the Ralieh company as an Accountant. The proprietors of the Ralieh, impressed by the honesty,truthfulness and impartiality, considered fit to offer Cruz Fernandez the broker ship of the company; and he in turn brought many shareholders to the company and made it bigger than what he found when he joined as an Accountant. The efforts he put in to add to the strength and number of shareholders of the company impressed the top brass of the company so much that he was readily offered the Sub Agentship of the company. What a rise to a School Finalist In a private firm!

The position he held opened up many opportunities for him to interact with people of different caste, religion, language, colour or location. To all, he exuded unbounded affection, love, kindness and unlimited service, clothed in an unparelled simplicity and honesty expecting nothing and this in turn won the hearts of all those not only who came in contact with him but also those who heard about him. He became so popular that people desired that he should stand for the elections to be the Chairman of the municipality and he became the chairman on 12th December 1909 and stepped down at the expiry of the term on 22nd july 1910. In deference to the desires of common people he again donned the mantle of Chairmanship on 6th September 1910 and continued till 5th September 1912. He rose again to the Chair on 12th November 1912 and served till 11th November1914. For the fourth time he ascended to the seat of Chairmanship 0n 27th May 1919 and served the town till 17 th November 1921. He had his last tenure from 2nd November 1925 to 1st November 1926. Judging from today’s standard is it not an achievement to have sat in position of responsibility to serve – not once but five times – that too without much break ?! Is there any one today among us who can command such popularity with common people and move into slots of this kind.?

The present generation may not remember the contribution of Cruz Fernandez as earlier generation closer to the times of Cruz Fernandez would, despite the Statues and Pillar and buildings in his name in Tuticorin. It is good to delve on his following six contribution for the sake of our generation.
1. The Tuticorin Drinking Water Scheme.
2. The Saturday Market.
3. The Educational Trust.
4. Attention to Health and Hygiene.
5. Attention to the sick in the hospital.
6. Organization of Cruzpuram. Co-operative bank. Baby home.

Tuticorin from time memorial had only unprotecected water supply which chronically caused Cholera and other deadly diseases. Saddened by the fate of people who had to take only such unprotected water, first he sternly advised people to take only hot water. One can imagine how much he must have struggled to convince people to take hot water in Tuticorin which has hot climate. Secondly he brought water for cooking from Kadambur and Ceylon and rationed and distributed .Thirdly he conceived and designed a system of water supply from Tambraparani and ensured protected water supply to the town. He was criticized for the tax he imposed for the water supply. He was let down by other municipalities which promised monetary contribution to execute the scheme but he was undeterred and gave what he wanted to give to Tuticorin – the protected water supply.

Cruz Fernandez noticed that sellers and buyers of food stuff and other stuff did not have a market place where they could assemble and sell their goods hygienically and collectively . He organized the Saturday Market, the present day Periya Market by removing thorny bushes and cleaning the space ensuring hygiene. Initially there was much reluctance to go to this market. But Cruz Fernandez remained steadfast and established the market.

Collecting the sample cotton from different mills and disposing them for a cost , Cruz Fernandez built a FUND, from which he sanctioned scholarships to poor children who were good at studies.He showed no partiality, in granting the scholarship, nor did he accept unmerited recommendations.

Daily he visited the municipal hospital and saw the patients and enquired from Doctors about their progress and ensured steady supply of medicines and diet.
Cruz Fernandez went on rounds in his phaeton everyday without fail and made field inspection of Tuticorin town and got first – hand knowledge on cleanliness, garbage removal, hawkers, etc.it is said that he used to be intolerant on those who violate cleanliness and hygiene and thereby breed flies and insects that bred diseases. It seems once when he was on such a round he saw a widow selling home – made cookies in an open plate near a gutter. The chairman saw a swarm of flies on the cookies. He got down from his phaeton abused the widow, confiscated the cookies along with the plate and left the widow in the lurch and returned home. After some time it is said the old widow approached the chairman’s house and represented to his staff about her poverty and upraided the chairman for his act and left the house, wailing. The chairman who had come to know of the poverty of the widow sent to her house a glass case seller box and Rs twenty. The glass case seller box for selling the cookies without swarming flies and Rs 20 for having caused loss to her by confiscating her selling stuff. An example of strictness and benevolence.

Cruz Fernandez was the chairman of the Big mosque trust and oversaw the receipts and expenditures of the mosque. How much he must have been friendly to be trusted by another community to run the affairs of place of their worship! He was the founder president of THOOTHUKUDI Co-operative bank started with the sole aim of looking after the financial needs of the poor. The Cruzpuram residents could get loans from this bank to construct their residences. He was also responsible for building Baby Home for new babies. He took steps to form the huge Graveyard which serves Twelve communities. Though a very important leader of Tuticorin he desired to be buried in the common grave yard, and as he desired he was buried on 29 th March 1930.

He had the solid support of the British administration in all his endeavors. He was particularly supported by Collector ASH whose memory, when he was shot dead by Vanchi, at Maniyatchi was commemorated by Cruz Fernandez by erecting ASH MEMORIAL opposite to the old port in Beach road.

The good that he rendered to the public was recognized by the British government by the award of the title RAO BAHADUR and the grateful public of Tuticorin elected him to the MADRAS LEGISLATIVE ASSEMBLY.

What is that we have to learn from him?
1. Commitment to the cause,
2. Align with powers.
3. Love people.
4. Be honest.
5. Avoid isolation. Mix with others.
6. Cultivate a mind unruffled by adversity and criticism.

#GEM_OF_TUTICORIN

பார்

‘பார்’ என்றால் என்ன?’ தமிழ் தெரிந்த இலக்கிய ஆர்வலர் ஒருவரிடம் இப்படி கேட்டுப் பாருங்கள். அவர் ‘உலகம்’ என்பார்.

‘பார் என்றால் என்ன?’ நெய்தல் நிலம் சார்ந்த கடலோடி ஒருவரிடம் கேளுங்கள். அவர் ‘பார் என்றால் கடலடியில் உள்ள பாறை’ என்பார்.

ஆம். பார் என்பது இன்று உலகத்தைச் சுட்டி நிற்கும் தமிழ்ச்சொல்தான் என்றாலும், உண்மையில் அது கடற்பாறையை அல்லது கடலோரத்தை, கடலடியில் உள்ள தரைப்பகுதியைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச்சொல் ஆகும். காரணம், ஒருகாலத்தில் ஒட்டுமொத்த உலகப்பந்திலும் ஆழி சூழ்ந்திருந்தது. அந்த ஆழியின் அடியில் அமிழ்ந்திருந்த பார்கள் மெல்ல தலைதூக்கி பின்னர் உருவானதுதான் இந்த தரை உலகம்.

வள்ளுவர் பெருமான் அவரது குறளில் பார் என்ற சொல்லை எந்த அடிப்படையில் பயன்படுத்துகிறார் பாருங்கள்.

‘இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்குவிடும்’ என்கிறார் நம் பாட்டன். அதாவது, ‘காவல் இல்லாத கப்பல் அல்லது தோணி பார் தாக்கி உடைபடும்’ என்கிறார் வள்ளுவர்.

தமிழில் கடற்பாறையை, கடலோரத்தைக் குறிக்கும் இந்த பார் என்ற சொல், பல்வேறு நாட்டு மொழிகளில் கடல் அல்லது கடற்கரை என்ற பொருளில் புழங்குகிறது.

எடுத்துக்காட்டாக, அரபு மொழியில் ‘அமிர் அல் பாஹ்ர்’ (Amir-Al-Bahr) என்றால் கடலின் மன்னன் என்று பொருள். இந்த அமிர் அல் பாஹ்ர் என்ற சொல்லில் இருந்துதான் கடற்படைத் தளபதியைக் குறிப்பிடும் அட்மிரல் என்ற ஆங்கில வார்த்தை உருவானது. பாஹ்ரைன் என்ற அரபுச் சொல்லுக்கு இரண்டு கடல்கள் என்பது அர்த்தம்.

பாரசீகம் எனப்படும் பெர்சியன் மொழியிலும் பார் என்பது கடற்கரையைத்தான் குறிக்கும். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜான்சிபார் (Zanzibar) என்ற தீவின் பெயர், பாரசீக மொழியைச் சேர்ந்த சென்ஜிபார் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. அதற்கு ‘கருப்புக் கடற்கரை’ என்பது பொருள். (Zenji-கருப்பு, Bahr-கடற்கரை).

பார்வா (Parva) என்ற சொல் கொண்டாட்டத்தைக் குறிக்கும் அந்நிய மொழிச்சொல் என்பார்கள். ஹோலிப் பண்டிகைக்குப் பின் பார்வதி பிறந்ததால், அவள் பார்வதி எனப் பெயர் பெற்றாள் என்றும் சிலர் கூறுவார்கள்.

ஆனால், நாம் ஏற்கெனவே சொன்னதுபோல, பார் என்பது கடற்கரையைக் குறிக்கும் தமிழ்ச்சொல். வதி என்றால் வாழ்பவள் என்று பொருள். பார்வதி என்ற அங்கயற்கண்ணி, கடற்கரையில் வாழ்ந்த பெண் என்பதால் அவள் பார்வதி எனப் பெயர் பெற்றாள் என்பதே உண்மை.

பாரிஜாதப்பூ என்ற ‘தேவலோகப்பூ’ உண்மையில் கடலோரம் மலர்ந்த பவள மல்லிகைப்பூ. ஆகவே, ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்று எழுதிய பாரதி ஒரு பைந்தமிழன் என்றால், ‘பார் தாக்கப் பக்குவிடும்’ என்று குறள் எழுதிய வள்ளுவன் ஒரு தொல்தமிழன்.
-  மோகன ரூபன் 

ஆளை அசத்தும் அஞ்சாளை மீன்

சமவெளி மக்கள் பாம்பை பார்த்து நடுங்குவர் என்றால், கடலோடிகள் அஞ்சும் மீன் வகைகளில் ஒன்று விலாங்கு மீன் இனத்தைச் சேர்ந்த அஞ்சாளை. பாம்பு போன்று இந்த மீனுக்கு விஷம் இல்லை என்றாலும் ஒருமுறை அஞ்சாளையிடம் கடி வாங்கினால் வாழ்நாளுக்கும் மறக்காது. கடல் மூரைகள் எடுக்கப் போய் அஞ்சாளையிடம் கடிபட்ட கடலோடிகள் ஏராளம்.

தமிழ்நாட்டு கடலில் சுமார் 20க்கும் மேற்பட்ட அஞ்சாளை மீன்( The fearless shark) இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை நீளம் மற்றும் வண்ணம் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் பழுப்பு, மஞ்சள், கறுப்பு, தவிட்டு நிறங்களில் காணப்படுகின்றன. 4 அங்குலம் முதல் 1மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. பெரும்பாலும் கடற்கரை ஓரங்களில், பாறை பொந்துகளில், பாறைத் தொடர்கள் அதிகம் உள்ள இடங்களில் வசிக்கின்றன.

பற்களுடன் கூடிய இரு தாடை அமைப்புகளை கொண்ட ஒரே மீன் அஞ்சாளை மட்டுமே.இரண்டாவது தாடை தொண்டை பகுதிக்கு பின் இருக்கும். இரையை முதல் தாடையான வாய் பகுதி பிடிக்கும் போது இரண்டாவது தாடை வாய்ப்பகுதிக்கு நகர்ந்து வந்து இரையை கவ்வி உணவுப் பாதைக்குள் தள்ளும். இரு தாடை அமைப்பால் இரையானது அஞ்சாளையிடமிருந்து தப்ப இயலாது.

கண்கள் மிகச்சிறியவை. பற்கள் மிகவும் கூர்மையானவை.தோலில் திரவம் சுரப்பதால் வழுவழுப்பாக இருக்கும். சிறிய அளவு விஷத்தன்மை கொண்டது என்பதால் அஞ்சாளையை கடலோடிகள் உண்பதில்லை. சிறுவர்கள் அளைகளில் வசிக்கும் அஞ்சாளையை கொந்தானில் கண்ணி வைத்து பிடித்து தோலை உரித்து வெயிலில் காய வைப்பார். காய்ந்த தோலை தேங்காய் சிரட்டையில் கட்டி பறை போன்று குச்சியால் அடித்து ஒலி எழுப்பி விளையாடும் வழக்கம் கடற்புறங்களில் இருந்தது.

தாது மணல் கொள்ளையர் புண்ணியத்தில் அழிந்த கரையோர மீன் இனங்களில் அஞ்சாளையும் ஒன்று. சிறுமீன்கள், நண்டுகள், சிப்பிகள் தாது மணற் கழிவுகளால் அழிந்து அஞ்சாளையின் உணவுச் சங்கிலி பாதிக்கப்பட்டதால் இன்று கரையோரங்களில் அஞ்சாளை இல்லை.

#magnificent_fish 

- Francis Xavier Vasan

பரவர் புராணம்

திரு. த. அருளப்பமுதலியார் அவர்களால் 

1909ஆம் ஆண்டு இயற்றப்பட்ட,

திங்களின்மர பின்வரு சீரியர்
பங்க மில்லாப் பரவர் சரித்திரமான

பரவர் புராணம்

பாண்டியன்வம்ச பாரம்பரை

Rare Book Collection

பாண்டியன்வம்ச பாரம்பரை 

- ஸ்ரீமத் சுவர்னம் எட்வார்ட்

பாண்டியாபதியின் பட்டாபிஷேக கீர்த்தனை


சி.சி.தொன் சூசை அந்தோனி தெக்குருஸ் வாஸ் பல்தான் பரதவர்ம பாண்டியன் - (1839 - 1856) என்ற பாண்டியாபதியின் பட்டாபிஷேக முகூர்த்தத்தில் ராஜா வாசல் வித்வான் லூயிஸ் ஆனப்பு லேயோ பரத பண்டிதர் அவர்கள் பாடிய கீர்த்தனை.....

(தரு. இராகம் - அசாவேரி. ஆதிதாளம் )

பல்லவி

பரத குல திலக புரவல னென வரு:
பாக்ய லட்சுமி பாண்ட்யா!

அநுபல்லவி

வரத குணன் தென் கஸ்பார் அந்தோனி தெக் குருசு
வாசுக் கொறேய்ரா மஹா ராஜன் வரத்தில் வந்த ( பரத)

சரணங்கள்

1)அட்டதிக் கெங்கும் புக ழெட்டு மிங்கிலீஷ் கொம்பன்யர்
அநவரதமு மகிழனுகூலா !
துட்டர் தமைச் செயிக்குந் துரை லாற்டாம்,
லாற்டெல் பின்ஸ்றன்!
இட்டமா யபிடேகம் பெற்ற கெம்பீரதீரா!

2) கன்ன னெனு மெஸ்க் கோயே,
மன்னன் ஜோ ஸேப்பு வாய்க்கட்
கருத்தி லிசை மஹத்வ கன சிலாக்யா!
நன்னயஞ் சேர் பரத ரிந்நிலத் தெவருக்கும்!
அண்ணலெனப் பேர்பெற்ற கன்னல் மதுரவாயா ! ( பரத)

3) இலகும் மணவை நகர் தலமாம் இன்பகவிஞ!
னெழில் சேர் புத்திரன் றனக் கிரங்கிக் கிருபைகள் செய்
பல புய கேசரி! எனப் பலர் துதித் திடும்
சிலைமத னாந் தொன் சூசை அந்தோனி,
வாஸ் பல்தான் வேள் !

பொருள்

வரதகுணன் - உபகாரகுண முடையவர்

வாழ்க பரதகுலம்

மன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு


இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியை மன்னார் வளைகுடா எனப்படுகிறது. ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பாம்பன் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகள் அமைந்து உள்ளன.

இந்த மன்னார் வளைகுடா பகுதி தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான முள்தோலிகள், சங்கு சிப்பிகள், கணுக்காலிகள், திமிங்கிலங்கள், கண்களைக் கவரும் விதத்தில் வண்ண மீன்கள், பாலூட்டி வகையான கடல் பசுக்கள், கடல் அட்டைகள், கடல் பாம்புகள், கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள், பவள பாறைகள் என இங்கு மொத்தம் 4 ஆயிரத்து 223 கடல்வாழ் உயிரினங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு வாழ்ந்து வருகின்றது.

மன்னார் வளைகுடாவில் தற்போதுள்ள கடல்வாழ் உயிரினங்களின் குறித்து விரிவான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு, அந்த ஆய்வை நடத்த தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இனைதொடர்ந்து சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் நபார்டு வங்கி மேற்பார்வையில் ஆய்வை மேற்கொண்டனர்.

ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கடலுக்கு அடியில் கணக்கெடுப்பு நடத்தினர். ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகள் 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டு, அவைகள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 11 கடல் பஞ்சு இனங்கள், 14 கடின பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 2 மீன் இனங்கள், 17 மெல்லிய பவளப்பாறை இனங்கள்,16 சங்கு இனங்கள் என 62 புதிதான உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவை தவிர 50-க்கும் மேற்பட்ட அடையாளம் காண முடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளது.இதில் 39 வடக்கு பகுதியிலும், 11 தெற்குப் பகுதியிலும் காணப்பட்டன.

இவைகளை அடையாளம் காண சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் முயன்றுவருகிறோம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரினங்கள் அனைத்தும் மன்னார் வளைகுடாவுக்கு புதியவை. கடந்த 2003-2005-ல் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களையும், தற்போதைய ஆய்வுத் தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் வளத்தில் பருவநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பேட்டர்சன் எட்வர்ட். ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை 345 கி.மீ. தூரம் உள்ள மன்னார் வளைகுடா பகுதி முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2003 முதல் 2005 வரை மன்னார் வளைகுடா பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது தூத்துக்குடி முதல் பாம்பன் வரையிலான பகுதியில் பவளப்பாறைகளைப் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு சில அடிப்படைத் தகவல்கள் மட்டும் சேகரிக்கப்பட்டன.அதனை தொடர்ந்து ஆண்டுதோறும் மன்னார் வளைகுடா பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

ஆனால், தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை இதுவரை பெரிதாக ஆய்வுகள் எதுவும்; நடத்தபடாததால்.இந்தப் பகுதிகளில் தற்போது விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களையும், தற்போதைய ஆய்வுத் தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் வளத்தில் பருவநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது என்றார்.

இந்த ஆய்வு குறித்து சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சியாளர் திரவியராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில் பறவைகள் மற்றும் விலங்குகளை ஆண்டு ஒன்றுக்கு கணக்கெடுப்பு நடத்துவது போல் கடல் வாழ் உயிரினங்களையும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், காரணம் பருவநிலை மாற்றம்,புவி வெப்பமயமாதல் ஆகிய காரணங்களால் கடல் வாழ் உயிரினங்கள் எண்ணிக்கை குறித்து தெரிய வரும்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட கணகெடுப்பில் 4,223 வகையான கடல்வாழ் தாவரம் மற்றும் விலங்கினங்கள், கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தாங்கள் கடலுக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்த போது 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், 77 புதிய பவளப்பாறை திட்டுகள் மற்றும் 39 புதிய கடல்புல் திட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.மேலும் 50-க்கும் மேற்பட்ட அடையாளம் காணமுடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மன்னார் வளைகுடாவின் அனைத்து கடல் பகுதிகளிளும் கண்காணிக்க வேண்டும் அப்படி கண்காணித்தால் மட்டும்மே கடலில் என்ன மாற்றம்,பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தெரிய வரும்,தற்போது நாங்கள் கடலுக்கு அடியில் நடத்திய கணக்கெடுப்பில் தூத்துக்குடி முதல் ராமேஸ்வரம் வரை அடர்த்தியான கடல் புல் திட்டுகள்; இருப்பது தெரியவந்துள்ளது அதே போல் 13 கடல் புல் வகைகளும் முன்னதான கண்டறியப்பட்டுள்ளது என கடல் ஆராய்சியாளர் மேத்யூ பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கடலுக்கு அடியில் ஆய்வு செய்வதற்க்கு மிகவும் முக்கியமான ஸ்கூபா டைவிங் குறித்து தினேஷ்குமார் பிபிசி தமிழிடம் பேசிய போது: கடல் வள ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியமானது ஸ்கூபா டைவிங். ஸ்கூபா டைவிங் என்பது ஒரு சாகச விளையாட்டு என்பதால் உடல் அளவிலும், மனதளவிலும் உறுதியாக இருத்தல் வேண்டும். கடலில் அதிக காற்று மற்றும் மழை காலங்களிலும் இந்த இந்த ஸ்கூபா டைவிங் செய்யலாம். கடலுக்கு அடியில் நடத்தப்படும் ஆய்வுக்கு ஸ்கூபா டைவிங் அவசியமான ஒன்று என்றார்.

Thanks: www.bbc.com
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com