பட்டனத்துக் காத்து ... (பட்டினத்து காற்று)

கடற்காற்றுக்கு அவன் துங்குகிறான் என்பதை பட்டனத்துக் காத்து படபட என்று வீசுவதால் அவன் தூங்குகிறான் என்கிறாள். பாருங்கள் கடற்கரையில் வீசும் கடற்காற்றுக்கு, ஓர் அழகிய தமிழ்பெயரைச் சூட்டி ‘பட்டனத்துக் காத்து’ என்று அழைக்கிறாள். அந்த பட்டினத்துக் காற்றை அவனோடு இருந்து நுகர ஆசைகொண்டு ‘காத்தாட நான் வாரட்டா?’ எனக் கேட்கிறாள். அதற்கு அவன் உடன்பட்டால் அவள் கதை கதையாகச் சொல்வாளாம். அவளது கேள்விக்கு அவன் என்ன பதில் சொன்னானோ தெரியவில்லை. ஆனால் எமக்கு பட்டனத்துக் காத்து என்று ஒரு பெயர் கிடைத்திருக்கிறது.
பெண்: பட்டனத்துக் காத்து
படபடத்து அடிக்கையில
பாய் மரக் கப்பலிலே
படுத்து உறங்கு மச்சானாரே
காத்தாட நான் வரட்டோ
கதை கதையாச் சொல்லிடட்டோ
- நாட்டுப்பாடல் (மாந்தை)
(பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)