வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 22 November 2019

நினைவலையில் நீந்துகிறேன்
பரந்த கரையில்
பார் காட்டியது கடல்
கதிரவன் வெளிச்சத்தால்
நிலவு தெரியவில்லை
நிலவுக்கோ உடல் நலக்குறைவு
அதனால் அலையும் எழும்பவில்லை.

பார் மேய்ந்தது சிறுவர் கூட்டம்
கரை பிட்டித்த நண்டுகள்
விடுவிக்க பட்டன,
பாரிலிருந்த நத்தைகள்
சிறை பிடிக்கப் பட்டன.

கைதிகளாய் நத்தைகள்
சரணடைந்தாலும் போருக்கு 
வந்தது அஞ்சாலை.
பயந்த வீரர்கள் பின்வாங்க
பயமறியா படை வீரன் 
சிறைபிடித்தான் நத்தைகளை.
படைத் தளபதி அவனுக்கு 
பரிசாய் வீரத்தழும்பு.

சங்குடைத்து, சதை எடுத்து
சுடச்சுட வரும் நத்தைப் பொரியல்
தளபதிக்கு அதிக பங்கு.
உழைத்தவனுக்கு ஊதியமது
சரியாய் சேரும் 
சிறு வயதிலே நெய்தல் படிப்பித்தது.

போகவில்லை வெளியூர்கள்
விளையாடவில்லை பார்க்குகளில்
சுக்கான் பலகையில்
பனக்கட்டை அடைவைத்தே
விளையாடினோம் சீசாக்கள்
டிராம்போலைனின் குதிக்கவில்லை
பதிலாக பாசி மெத்தையில்
துள்ளிக் குதித்தொம்
களைத்து சோர்ந்தால்
பட்டு மணலில் படுத்துறங்குவோம்
தெரியாது கம்பியூட்டர் எங்களுக்கு
பக்கத்து வீட்டு தொலைகாட்சியை
தொலைவிலிருந்து பார்துக்கொள்வோம்.

வலைபடும் மீனில் சிறுமீன்
தருவர் சிறுவர் எங்களுக்காய்
உழைத்தவர் அவர்களும்.
மீனுக்கு பண்டமாற்று
மரியா ஆச்சியிடம்
வியாபார யுக்தி அதை
விளையாடிய வயதிலே
நெய்தல் படிப்பித்தது.

சி.ஐ.டி வேலை அதை
சீராய் செய்தோம்
"ஐய்ஸ் பால் ரெடி"
கட்டுவைத்து விளையாடினோம்.
கட்டுப்பட்டோம் நாங்கள்
பெற்றோரின் கட்டுகளுக்கும்
விளையாட்டின் கட்டுகளுக்கும்
கட்டுப்பாடு அதைச் சொல்லியே
வளர்த்தது நெய்தல் எங்களுக்கு.

விடிய விடிய படிக்கவில்லை
விடிந்தவுடன் ஓடவில்லை
வண்டிக்கு பள்ளி வண்டிக்கு.

கட்டுமரங்கள் அதை எண்ணி
எண்களை படித்தோம்
மீன்கள் அதை விற்று
கூட்டல் கழித்தல் படித்தோம்
சூரியனின் வெப்பத்தால்
கடல் நீர் குடித்து
பிரசவிக்கும் மேகம்
பொழியும் மழை
அறிவியலும் படித்தோம்
கடற்கரையில் இருந்தே.

வளர்ந்தோம் நாங்களும்
சேர்ந்தே வளர்ந்தது நெய்தலும்
படித்தோம், பல நாடு கடந்தோம்
வந்து பார்தோம்
காணவில்லை படிப்பித்த நெய்தலை.
இனி எங்கு தேடுவேன்
அந்தப் பரந்த கரையை???

-ஜோ ரினு
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com