Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

பரத குலமும் 21 ஆம் எண்ணும்

21 ஆம் எண் பரத குலத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்பதை பின்வரும் புள்ளிவிபரங்கள் மூலம் அறியலாம்.



பரத குலத்திற்குரிய விருதுகள் - 21

பரத குல சாதித் தலைவர்கள் - 21

பரத குலத் தலைவரின் சின்னங்கள் - 21

பரத குலத்தோரின் தாலியில் கோர்க்கப்படும் உருக்கள் - 21

பரத குல பெண்மணியரின் காதில் தொங்கும் உருக்குமணியின் உருக்கள் - 21

அச்சாரம் வழங்கும் போது அளிக்கப்படும் பணம் - 21

அன்பாய்க் கொடுக்கும் பலகாரங்களின் எண்ணிக்கை - 21

பரத குலப் பெண்கள் உடுத்தும் சேலையின் முழம் - 21

பரத குல இந்துக்கள் கடவுளுக்கு படைக்க பயன்படுத்திய இலைகள் - 21

தர்மத்தின் வேதசாட்சி சங். சூசை மாணிக்கம் சுவாமிகள்

சூசை மாணிக்கம் சுவாமிகள், தஞ்சை பகுதியை சேர்ந்தவர். வேம்பாறு பரிசுத்த ஆவி பணித்தளத்தின் பொறுப்பாளாராயிருந்த மொன்சிஞ்ேஞாா் D. சாமி நாதர் சுவாமிக்குத் துணை குருவாகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் வேம்பாறு பரிசுத்த ஆவி வேத போதக தளம் 25 துணைப்பங்குகளைக் கொண்டு விளங்கியது. சங். சூசை மாணிக்கம் சுவாமிகள் சிப்பிகுளம் கிராமத்தில் பொறுப்பேற்றிருந்தார்.

சிப்பிகுளம் கிராமத்தில் இன்று நெடிதுயர்ந்து நிற்கும் புனித வியாகுல அன்னை ஆலயம் கடலோடிகளுக்கும், சாலையில் 5 கிலோ மீட்டருக்கும் அப்பால் பயணிக்கும் பயணிகளுக்கும் மாதாவின் மகிமையை வெளிப்படுத்துகிறதென்றால் அதற்குரிய முழு புகழும், பெருமையும் தர்மத்தின் வேதசாட்சி என்றழைக்கப்படும்  சங். சூசை மாணிக்கம் சுவாமிகளையே சாரும். 

D. சாமி நாதர் சுவாமிகள் வேம்பாற்றில் புதிய ஆலயம் உருவாக்கத் திட்டமிட்ட போது, சிப்பிகுளத்திலும் அதே போன்ற ஆலயத்தை உருவாக்க சங். சூசை மாணிக்கம் சுவாமிகள் விரும்பினார். ஆனால் அதற்கு சாமி நாதர் சுவாமிகள் ஒப்பவில்லை. திருச்சி ஆயர் பசாந்தியரும் நிதி உதவி அளிக்கவில்லை. 

உள்ளுரிலே, கடற்கரை வருவாயைக் கொண்டு சங். சூசை மாணிக்கம் சுவாமிகள் சிப்பிகுளத்தில் ஆலயத்தை உருவாக்கினார். இறுதிக் கட்டத்தில் பணமுடை ஏற்பட்டது. இந்த நேரம், ஏற்றுமதிக்காகச் சென்ற தோணிகளிலிருந்து பஞ்சு மூட்டைகள் சிப்பிகுளம் கடற்கரையில் வந்து ஒதுங்கின. அவை தூத்துக்குடி ராவ்பகதூர் கயத்தான் வில்லவராயருக்குச் சொந்தமானவை. பஞ்சு மூட்டைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர் அன்பளிப்பாகக் கொடுத்த ரூ2000/- ஆலயப் பணிகள் நிறைவுற உதவிற்று. அந்த காலத்தில் இந்த ஆலயம் எழுப்ப மொத்த செலவு ரூபாய் ஏழாயிரம்.

வைப்பார் (இன்றைய கீழவைப்பார்) கிராமத்தில் மிகத் தீவிரமாகப் பெரியம்மை நோய் பரவி, அதனால் பலர் பாதிக்கப்பட்டனர். அந்த பங்கு சங். சூசை மாணிக்கரின் பணிகுட்பட்டதல்ல. இருப்பினும் அங்கு சென்று அருட்சாதனங்களை வழங்கிக் கொண்டிருந்தார். அங்கு பொறுப்பில் இருந்தவர்கள் இந்த பணியைச் செய்ய முன் வரவில்லை. இந்த சூழ்நிலையில் பெரியம்மை நோய் சங். சூசை மாணிக்கரைத் தாக்கியது. பத்து நாட்களாக வேம்பாறு கிராமத்தில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தார்.

'மிகக் கொடூரமான வேதனையில் சிரமப்பட்டாலும், ஒரு வார்த்தை கூட மனம் நொந்து பேசவில்லை. அவஸ்தை கொடுத்த பின், இறுதி மூன்று நாட்களிலும் அவரது உடல் உபாதைகள் மிகக் கொடுமையாயிருந்தது. அவரது நாசியினால் அவரால் சுவாசிக்க இயலவில்லை. அவருடைய குடல், வயிறு எல்லாம் எரிவதாகக் கூறினார். இந்த நல்ல குருவானவர், மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அவரது பிரிவாற்றாமையால் மக்கள் மிகவும் துன்பப்பட்டனர். அனைவரிலும் சிப்பிகுளம் மக்கள் இரட்டிப்பு மடங்கு துயரப்பட்டு நொந்தனர். இப்பேற்பட்ட தங்களின் நல்ல தகப்பனை, சிப்பிகுளம் ஆலயத்திலேயே நல்லடக்கம் செய்ய வேண்டுமென்றும், சடலத்தை தங்களிடம்  ஒப்படைக்க வேண்டுமென்றும், சிப்பிகுளம் மக்கள் போராடினர். நலிவுற்ற உடல், மாட்டுவண்டிப் பயணத்தினால் மேலும் பாதிக்கப்பட்டு விடும் என்பதால் சடலத்தை சிப்பிகுளம் மக்களிடம் ஒப்படைக்கவில்லை' என்கிறார் சாமிநாதர் சுவாமிகள்.

பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை யாரும் போய்ப் பார்க்க மாட்டார்கள். எனினும் இந்த உத்தமக் குருவின் உன்னதமான சேவைகளை மறக்காத எல்லா மக்களும் - இந்துக்கள் - முஸ்லிம்கள் உட்பட பலரும் பல்வேறு கிராமங்களிலிருந்து அணி அணியாக வந்து, வணங்கி, மரியாதை செய்தனர். இதனால் எல்லா மக்களும் இறுதி மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக, சடலத்தை மூன்று நாட்கள் வரை வைத்திருந்து, வேம்பார் தூய ஆவியானவர் ஆலயத்தின் நடுபகுதியில் (இடது புற சன்னலருகில்) நல்லடக்கம் செய்தார்கள். அந்தக் கல்லறையை இன்றும் காணலாம்.

1910 பெப்ரவரி மாதம் 10 ஆம் நாளில் காலமான இந்த நல்ல குருவானவரை 'தர்மத்தின் வேதசாட்சி' (Martyr of Charity) என்று கூறலாம்.

இந்த வரலாறு: - "Trichy - Morning Star" 10 th Year No 56' ல் தரப்பட்டுள்ளது.

- கலாபன் வாஸ் 

எகிப்தில் கோலோச்சிய தமிழ் பரதவர் - 3

எகிப்து நாட்டில் தமிழ் எழுத்துகள் 2100 ஆண்டுகளுக்கு முற்பட்டவை கண்டுபிடிப்பு...

செங்கடல் கரையில் உள்ள குவெய்ர் அல் கடிம் (Quseir-al-Qadim, an ancient port with a Roman settlement on the Red Sea coast of Egypt) என்னும் துறைமுக நகரில் உடைந்த மண்ஜாடி ஒன்றில் தமிழ் பிரம்மி எழுத்துக்கள் உள்ளன என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகத்தில் ரோமானியர்கள் தங்கி வாணிபம் செய்துள்ளனர். இந்த எழுத்துகள் கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதும் கண்டு அறியப்பட்டுள்ளது. ஜாடியின் இரண்டு பக்கங் களிலும் இந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. “பனை உறி” என்ற எழுத்துகள் உள்ளன. கயிறுகள் கட்டித் தொங்க விடப்பட்டு அதில் பானைகள் அடுக்கி வைக்கப்படும். அது உறி எனப் பெயர்ப்படும்.

எகிப்துத்துறைமுக நகரில் அகழ்வாராய்ச்சியை மீண்டும் தொடங்கிய இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பீகாக் மற்றும் புளு (Prof. D. Peacock and Dr. L. Blue of University of Southampton, U.K) ஆகியோர் இதைக்கண்டு அறிந்துள்ளனர். லண்டனில் உள்ள பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தின் மட்பாண்ட வல்லுநர் (Dr. Roberta Tomber) இதனை ஆராய்ந்து, இது இந்தியாவில செய்யப்பட்ட மண்பாண்டம் என சான்று அளித்துள்ளார். தமிழ் எழுத்தாய்வறிஞர் அய்ராவதம் மகாதேவன் (Iravatham Mahadevan) இவை தமிழ் எழுத்துகள் என்றும், 2100 ஆண்டுகளுக்கு முந்தையவை என்றும் உறுதிப் படுத்தியுள்ளார்.

புதுச்சேரியிலுள்ள பிரஞ்ச் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பேராசிரியர் சுப்பராயலு (Prof. Y. Subbarayalu, French Institute of Pondicherry), நடுவண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜன் (Prof. K. Rajan of Central University, Puducherry) மற்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் செல்வகுமார் (Prof. V. Selvakumar, Tamil University, Thanjavur) ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்து இதனைக் கண் டறிந்து அறிவித்துள்ளனர்..

“பானை உறி” என்ற எழுத்துகள் மிகவும் தெளிவாகவே பொறிக்கப்பட்டுள்ளதாக அய்ராவதம் மகாதேவன் தெரிவிக்கிறார். இந்தப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அகழ்வாராய்ச்சியில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட இரண்டு பானைகள் கண்டு எடுக்கப்பட்டன. இவை கி.பி. முதல் நுற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.

இதே காலத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் 1995 இல் பெரனைக் என்னும் ரோமானியர் வசித்த பகுதியில் (Berenike, a Roman settlement, on the Red Sea coast of Egypt) கண்டு எடுக்கப்பட்டன என்கிற விவரத்தை அய்ராவதம் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் செங்கடல் வழியே ரோம நாட்டுடன் கடல் வணிகம் செய்து வந்தனர் என்று தமிழ்ச் சங்கப் புலவர்கள் எழுதிய பாடல்களிலும் மேலை நாட்டின் பழைய இலக்கியவாதிகளும் எழுதியதற்கு ஆதாரமாக இவை அமைந்துள்ளன. கடலோடிகளாகக் கப்பல் மூலம் வணிகம் செய்து உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிறந்து விளங்கினர் என்பதனை இதனாலும் விளங்கிக் கொள்ளலாம்.



தேடல் தொடரும் 

கரிகாலன் காலத்திய காவிரிப்பூம்பட்டின பரதவர்


கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம்-----ப‌ட‌கிலே உப்பைக் கொண்டு வ‌ந்து நெல்லுக்கு அதை விற்று அந்த‌ப் ப‌ட‌கில் நெல்லை நிர‌ப்பிக் கொள்கிறார்க‌ள் ப‌ர‌த‌வ‌ர்க‌ள். அந்த‌ப் ப‌ட‌குக‌ளைக் க‌ழிக‌ளின் ப‌க்க‌த்தில் குதிரைக‌ளைப் போல‌க் க‌ட்டியிருக்கிறார்க‌ள். 

கடற்கரைப் பக்கத்தில் பரதவர் மக்கள் தமக்கு விருப்பமான ஊனைத் தின்றுவிட்டு அடப்பம் பூவைத் தலையிலே செருகிக்கொண்டு ஆட்டை முட்டவிட்டு விளையாடுகிறார்கள். காடை கவுதாரி கலைச் சண்டையிடச் செய்து பார்க்கிறார்கள். ஒருவரோடு ஒருவர் மற்போரும் வாட்போரும் செய்து விளையாட்டு அயர்கிரார்கள். 

பரதவர் தெருவில் உறைக்கிணறுகள் இருக்கின்றன. பன்றிகளையும் கோழிகளையும் அவர்கள் வளர்கிறார்கள். அமாவாசை நாளிலும் பௌர்ணமி யன்றும் கடலில் பரதவர் மீன் பிடிக்கப் போகாமல் தம்முடைய தெய்வமாகிய வருணனுக்குப் பூசை போடுகிறார்கள். தம் மனைவிமாருடன் சேர்ந்து மீனின் கொம்பை நட்டு அதில் வருணனை எழுந் தருளுவித்து வழிபடுகிறார்கள். கூதாளம் பூமாலையையும் தாழம்பூவையும் சூடிப் பணங்கள்ளை உண்டு விளையாடுகிறார்கள். காவிரி கடலோடு கலக்குமிடத்தில் தீவினை போகக் கடலாடிப் பிறகு நல்ல நீரில் குளிக்கிறார்கள். 

பெரிய வீதிகளில் பல மாடங்கள் இருக்கின்றன. வானுலகத்தைப் போன்ற இன்பங்களை உடையவை அவை. அங்குள்ள மகளிர் இரவில் இனிய பாடலைக் கேட்டும், நாடகங்களைக் கண்டும், நிலாவிலே இருந்து மகிழ்ந்தும், கள்ளை அருந்தாமல் உயர்ந்த மதுபானங்களை அருந்தியும், பட்டைக் களைந்துவிட்டு மிக நுட்பமான துகிலை உடுத்தும் தம் கணவருடன் மகிழ்கின்றனர். அப்படியே அவர்கள் தூங்கிப் போகிறார்கள். மாடங்களில் ஏற்றிய விளக்குகள் விடியற்காலத்திலும் சுடர்விட்டு எரிகின்றன. இரவிலே மீன் வேட்டைக்காகச் சென்ற பரதவர்கள் அந்த விளக்கை ஒன்று இரண்டு என்று எண்ணுகிறார்கள். 

பரதவர் வாழும் அகன்ற தெருவிலே பண்ட சாலை இருக்கிறது. அங்கே கடுமையான காவலை அமைத்திருக்கிறார்கள். உள் நாட்டிலிருந்து வரும் பண்டங்களை அங்கே குவித்திருக்கிறார்கள். அவற்றிற்கெல்லாம் புலிப்பொறியையிட்டுச் சுங்கம் வாங்கிக் கப்பல்களில் வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள்.

அப்படியே கப்பலில் வெளிநாட்டிலிருந்து வரும் பண்டங்களுக்கும் முத்திரையிட்டுச் சுங்கம் வாங்குகிறார்கள். இந்தப் பண்டசாலையின் முற்றத்தே பல பண்டங்களையுடைய மூட்டைகள் மலையைப் போலக் குவிந்து கிடக்கின்றன. அவற்றின்மேல் நாயும் ஆடும் ஏறி விளையாடுகின்றன. சுங்க வரி தண்டும் அதிகாரிகள் நேர்மையுடன் தங்கள் கடமைகளைச் செய்கிறார்கள். அவர்கள் சிறிதும் சோர்வில்லாமல் வேலை செய்கிறார்கள். அளந்தறியாத பல பண்டங்கள் அங்கே கிடக்கின்றன. ஏவலர்கள் அவற்றைக் கப்பலிலிருந்து இறக்குகிறார்கள்; பலவற்றைக் கப்பலில் ஏற்றுகிறார்கள். 

திருமகள் களிநடம் புரியும் அங்காடி வீதிகளிலே உயர்ந்த மாடங்கள் இருக்கின்றன. திண்ணைகளும் படிக்கட்டுகளும் இடைகழியும் பல கட்டுகளும் உடைய மாடங்கள் அவை. அங்கே அழகிய மகளிர் கடவுளை வணங்குகிறார்கள். குழல் அகவுகின்றது. யாழ் முரலுகின்றது. முழவும் முரசும் முழங்குகின்றன. எப்போதும் விழா அறாத ஆவண வீதி அது. அங்கே பல வகையான கொடிகள் அசைகின்றன. 

கடவுளைத் தொழும் கோயில்களில் ஒரு வகையான கொடிகள் அசைகின்றன. இன்ன இன்ன பண்டங்கள் இங்கே விற்ப்பெறும் என்பதற்கு அடையாளமாக நட்ட கொடிகள் அங்கங்கே இருக்கின்றன. பல நூல்களைக் கற்றும் கேட்டும் கரை கண்ட அறிவுடைய நல்லாசிரியர், தம்மோடு யாரேனும் வாதம் செய்வாருண்டானால் வருக என்று தம் வீட்டு வாயிலில் நாட்டிய கொடிகள் ஒருசார் அசைகின்றன. கடற்பக்கத்தைப் பார்த்தால் கப்பல்களில் உள்ள கூம்புகளில் கொடிகள் பறக்கின்றன. கள் விற்கும் இடத்தில் அதைத் குறிக்கத் தனியே கொடியை நட்டிருக்கிறார்கள். 

இப்படிப் பல கொடிகளும் கலந்து பல நிறங்களோடு விளங்கும் பட்டினத்தில் கப்பலில் வந்த அழகான குதிரைகள் ஒருபக்கம் நிற்கின்றன. தமிழ் நாட்டிலிருந்து பிற நாட்டுக்குப் போகவேண்டிய மிளகு மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப் பெற்றிருக்கிறது. இமயமலையிலே பிறந்த மணியும் பொன்னும் ஓரிடத்தில் விற்பனையாகின்றன. மேற்கு மலையிலே விளைந்த சந்தனமும் அகிலும் ஓரிடத்தில் கொட்டிக் கிடக்கின்றன. பாண்டி நாட்டுக் கடலிலே எடுத்த முத்தும் பவளமும் ஓரிடத்தில் பளபளக்கின்றன. கங்கைக்கரையிலே விளைத்தபண்டம் ஒரு பக்கம்; காவிரிக்கரையிலே விளைத்த பொருள் ஒரு பக்கம்; ஈழ நாடாகிய இலங்கையிலிருந்து வந்த உணவுப் பொருள் ஒருசார்; காழகமாகிய பர்மாவிலிருந்து வந்த பண்டம் ஒரு சார். 

இவ்வளவு பண்டங்கள் நிறைந்து கிடக்கும் ஆவணத்தில் நேர்மையான முறையில் வணிகர்கள் வியாபாரம் செய்கிறார்கள். வேளாளர்கள் நடுநிலையோடு வாழ்கின்றனர். கொலையும் களவும் இன்றி மக்கள் வாழ்கிறார்கள். பசுமாடுகளைப் பாதுகாக்கிறார்கள். புண்ணியச் செயல்களை இடையீடின்றிச் செய்து வருகிறார்கள். 

எங்கே பார்த்தாலும் வாணிகம். உலகில் உள்ள பண்டங்கள் அத்தனையும் இந்த அங்காடியிலே காணலாம். அதுமாத்திரம் அன்று. உலகத்து மொழிகள் பலவற்றையும் இங்கே கேட்கலாம். அந்த அந்த நாடுகளிலிருந்து வந்து செல்லும் மக்கள் பலர் இங்கே உலவுகிறார்கள். அவர்கள் தங்கள் மொழிகளிலே பேசிக்கொள்கிறார்கள். 

எப்போதும் விழா நிறைந்த வீதியாக விளங்குகிறது ஆவண வீதி. 

காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பை எண்ணி முடிவு காண முடியுமா?

ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

Rare Book Collection

ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

 Translated book of The Tamils Eighteen Hundred Years Ago

ஆங்கில நூலாசிரியர்:

திரு.வி. கனகசபை பி.ஏ., பி. எல்.,

தமிழாக்கம் :

திரு. கா. அப்பாத்துரை பி.ஏ., எல்.டி.,

கழக வெளியீடு

Download Link



The Tamils Eighteen Hundred Years Ago

Rare Book Collection


The Tamils Eighteen Hundred Years Ago

Description:

In 1904, Kanakasabhai published his magnum opus, The Tamils Eighteen Hundred Years Ago. Dedicated to Sir S. Subramania Iyer, the book was made up of sixteen chapters, each of which examined the life, culture, geography, trade, religion and philosophy of the ancient Tamil country based on the descriptions in two ancient Sangam epics, the Silappatikaram and the Manimekalai. The book is considered to be a classic and as one of the first notable efforts to research the history of Sangam period Tamil Nadu.

ஆசந்திப் பவனி பாடல் - 1

ஆரய்யோ இனிப் பாவம் செய்யத் துணிபவன்
பாரய்யோ கண்ணால்

பூங்காவில் ஏசுநாதர் தமதுபிதாவை வேண்டும்
போது யூதர் வளைந்து பிடித்தாரய்யோ
தீங்காய் கொடிய  தரை - தனில் விழாத்தாட்டிக் கொண்டு
திருமுதுகில் ஈட்டியால்  இடித்தாரய்யோ

கற்றூணில் ஏசு நாதர் கரங்களைக் கட்டி வைத்து
கல்நெஞ்சர் கசை கொண்டு அடித்தாரய்யோ
கொட்டும் உதிரம் ஓட உடைமர முள் முடியை
முதல்வன் திருச்சிரசில் பதித்தாரய்யோ

அத்தியந்த மகிமைக்குரிய திருமுகத்தின்
அழகு இரத்தக் கரையால் சிதைந்ததய்யோ
சத்திய ஏசுநாதர் கனத்த சிலுவைபாரம்
தாங்கித் தாங்கி திருத்தோள் சரிந்ததய்யோ

தூர வழி நடந்து துயரத்தால் கால்கள் பின்ன
பாரந்தனைச் சிமியோன் பகிர்ந்தாரய்யோ
பக்தை வெரோணிக்கமாள் பரமன்முகம் துடைக்க
பாங்காய்த் துகிலில் முகம் பதித்தாரய்யோ

தாங்காத் தாகத்தால் ஏசு தவித்து நாவுவரண்டு
தாகம் தீரத் தண்ணீரும் கேட்டாரய்யோ
ஓங்காரம் செய்யும் கடற்பாசிதனிலே தோய்த்து
பிச்சு கலந்த காடி கொடுத்தாரய்யோ

பெரிய சிலுவை தன்னில் தம்மை அறைவதற்கு
பின்னப்படாமல் கரம் விரித்தாரய்யோ
கருணைத்திரு  விழியால் பரலோகந் தன்னைப் பார்த்து
கர்த்தர் நமக்காகத்தான் மரித்தாரய்யோ

- வேம்பாறு  சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ 

பெயரில்லா மரங்கள்

சில வரலாற்றுச் சம்பவங்கள் செவிவழிச் செய்திகளாகவே நிலவி, காலச்சுழற்சியில் சிக்கிச் சிதைந்து விடுகின்றன. "பெயரில்லா மரங்கள்" என்று அந்தக் காலத்தில் நம் மக்களால் அழைக்கப்பட்ட பெரிய மரங்களின் சிறுவிவரங்கள் கூட இன்று நமக்குக் கிடைக்காத அளவிற்கு, நூற்றாண்டுகளின் ஓட்டப்பாதையின் ஓரச்சரிவுகள் மூடி மறைத்துவிட்டன.

தூத்துக்குடியில் நமது பரிசுத்த பனிமய அன்னையின் ஆலய வளாகத்தை அடுத்து, அதன் வடமேற்கு மூலையில் கிரக்கோப்பு தெருவின் பக்கமிருக்கும் திறந்த வாசல் (Gate) அருகில் ஒன்றும், அன்றைய சன்பவுல் ஆலய முகப்பின் எதிரில் இருந்த குருசடி முன்புறம், கடற்கரைப் பக்கத்தில் (இன்று மச்சாடோ கட்டிடம் இருக்கும் இடம்?) ஒன்றும், பனிமய அன்னையின் ஆலயத்திற்குத் தெற்கே தொலைவிலிருந்த ஒரு குருசடிக்கும் பின்புறம், தருவைக் காட்டிற்கும் குருசடிக்கும் இடையில் இருந்த ஒரு திட்டில் (இன்று மனோரா ஹவுஸ் இருக்கும் இடம்?) ஒன்றுமாக - ஆகா மூன்று மிகப்பெரிய மரங்கள் இருந்ததாக ஒரு செவிவழிச் செய்தி உண்டு.

அந்த மூன்று மரங்களின் அடிப்பாகத்தின் (Trunk) சுற்றளவு, ஆறு பேர் சுற்றி நின்று கைகளை அகல விரித்துப் பிடித்தாலும் சுற்றி வளைக்க முடியாத பருமன் கொண்டதாய் இருந்தன வென்று, தங்கள் முன்னோர்கள் சொல்லிக் கேள்விப்பட்டதாக சில முதியவர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள். அவற்றின் கிளைகள், பேய்போல் தலைவிரித்துப் பரந்து வியாபித்து, நிழல் தருவனவாக இருந்தனவாம்.

பண்டைய நாள்களில், அரேபிய வணிகர்கள் ஓய்வெடுக்கும் நிழற்பந்தல்களாகப் பயன்தரும் வகையில், அவர்களால் ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டு நடப்பட்டதாகக் கூறுவார். அந்த மரங்களின் பெயர் என்னவென்று அறிந்திராத அன்றைய பரத குல கிறிஸ்தவர்கள் அவற்றைப் பெயரில்லா மரங்கள் என்று அழைத்தனர். 

அதன் இலைகளோடு சுக்கைச் சேர்த்து அரைத்துப் பூசினால், மூட்டு வலி குணமடையும் என்றும், அதன் இலைகளை ஒரு துணியின் மேல்பரப்பி, கடற்கரை மணலை வறுத்துச் சூடாக்கி அதன் மேல் கொட்டிக் கிழிகட்டி ஒத்தடம் கொடுத்தால், வாதரோகம் குணமடையும் என்றும் அதன் காய்ந்த இலைகளைப் பொடியாக்கி வெட்டுக் காயங்கள் மேல் அப்பினால், இரத்தக் கசிவு நிற்கும் என்றும் கர்வாலோ அடப்பனார் என்ற வைத்தியர் கூறியதாகச் சொல்வார்கள்.

மேற்கூறிய செவிவழிச் செய்திகளை மெய்பிக்கும் விதத்தில் வண. கால்டுவெல் பாதிரியார் அவர்கள் தாமெழுதிய திருநெல்வேலி மாவட்ட விவரச்சுவடி (Gazetteer of Thinneveli District) என்ற நூலில் தூத்துக்குடியைப் பற்றிக் கூறும் போது, இந்த பெரிய மரங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். மக்கள் அறியாமையால் அவற்றைப் பெயரில்லா மரங்கள் என அழைத்தாலும், அதன் தாவரவியல் பெயர் (Botanical Name) Adansonia Digitata என்றும், ஆப்பிரிக்க மொழியில் போபாமரம் (Boabab Tree) என்றும், அதன் பொருள் குரங்கின் ரொட்டி (Monkey’s Bread) என்றும் குறிப்பிடுகின்றார். 1834 – ல் பிறந்த மனப்பாட்டுப் புலவர் அட்டாவதானி அன்னப்பு சிங்கராய பரதன் என்ற லெயோன் என்பாரது சொற்பொழிவுகளின் தொகுப்பு நூலிலும் இம்மரங்கள் பற்றியக் குறிப்புகள் காணக்கிடைகின்றன.

எனது தேடல்களின் மத்தியில் தற்செயலாக நான் சமீபத்தில் கண்ட ஒரு நூலில், பெயரில்லா மரங்கள் என்று நம் மக்களால் அழைக்கப்பட்ட அந்த மரங்களைப் பற்றிய மேலும் பல பொது/ மருத்துவ விவரங்களை கீழே தருகிறேன். 

அடன்சோனியா டிஜிடேட்டா’ என்ற பெரிய மரம் தாவரவியல் வகைப்படுத்துதலின்படி (Taxonomy) மால்வேசி (Malvaceae) இனத்தைச் சேர்ந்தது. நாம் சாதாரணமாகக் காணும் பூவரசு (Thespesia Populnea), செம்பருத்திப்பூ (Hibiscus Rosa Sinensis) போன்ற தாவரங்களும் இதே மால்வேசி இனத்தைச் சேர்ந்தவைதான். இந்த பெயரில்லா மரத்தின் உண்மையான தமிழ் பெயர் பெப்பராப்புளி (Pepperappuli) என்றும் பாப்பரப்புளி (Papparapuli) என்றும் ஆணைப் புளிய மரம் என்றும் அழைக்கப்படுவதாகும். இதன் சிங்கள மொழிப் பெயர் கெளதிம்புள் (Kathimbul) என்பதாகும். கோவா, மகராஷ்டிரா, குஜராத், இலங்கை என அரேபியர் வந்து சென்ற கடலோரப் பகுதிகளில் இம்மரங்கள் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டிருகின்றது.

ஆண்டுதோறும் இலை உதிர்க்கும் (Deciduous) தன்மை கொண்ட இந்த மரம், 60 முதல் 70 அடி உயரம் வரை வளரும். அடிமரம் மிகப் பெருத்துக் காணப்படுவதால், தூரத்திலிருந்து காண்பதற்கு குட்டையான (Stumpy) தோற்றமளிக்கும். பரந்து விரிந்த கிளைகள் முழுவதும் இலைகளோடு இருக்கும்போது காண்பதற்கு மிக அழகாக இருக்கும். இதன் பழத்தின் சதைப்பற்று (Pulp), மரப்பட்டை (Berk), இலைகள் மருத்துவக் குணம் கொண்டவை.

இதன் பழம்: புளிப்பு (acidic) உடலுக்கு குளிர்ச்சியூட்டுதல் (Refrigerant), வயிற்றுக்கு இதமளித்தல் (Stomachic) சிறுநீர் பெருக்கும் (Diuritic) தன்மை கொண்டது. 

விதைகளும் சதை பற்றும்: (Seeds & Pulp) இரத்தப் போக்கைக் குறைக்கும் (astringent) வாய்ப்புண், எரிவு, வீக்கம் இவற்றைக் குறைக்கும் (demulcent), கடலோடிகளுக்கு வரும் Scurvy என்ற நோய் தடுப்பு சக்தியுடையது (antiscorbutic). சதைப்பற்று நல்ல மலமிளக்கி (aperient), இதன் பட்டை பெண்களின் மாதக்கோளாறுகளுக்கு நல்ல மருந்து (antiperiodic). இதன் பழத்தோடு அத்திபழம் சேர்த்து செய்த சர்பத், புளித்த ஏப்பத்திற்கும் (acid eructations) பித்த அஜிரணத்திற்கும் (Niliousdyspepsia) நல்லது.

இதன் பட்டையிலிருந்து உரிக்கப்படும் நார் மிகுந்த வலிமை பொருந்தியது. துக்னி மொழியில் (Dukhini) இந்த மரத்திற்கு (Hatti Khatiyan) ஹத்தி கட்டியன் என்று பெயர். அதன் பொருள் யானை நார் என்பது. (Hatti Khatiyan means Elephant flax in allusion to the great strength of the fibre prepared from its bark - Dr. K.M. Nadkarni.)

முனைவர் நட்கர்னியின் நூலை வாசித்த பிறகுதான், 1982 - ல் தேர் மலரில் சேர்ப்பதற்காக, நண்பர்கள் மூலம் சேகரித்து பொருள் புரியாமல் ஒதுக்கித் தள்ளிய ஒரு அம்பா பாட்டின் கீழ்க்கண்ட வரிகளின் பொருள் தெளிவாகின்றது: 

 " யான புலி நாலேடுத்து ஏலேலம்மா ஏலேலோ 
மூனுபுலி தாம்புவச்சி  ஏலேலம்மா ஏலேலோ 
ரண்டுபன நாமுடிக்க  ஏலேலம்மா ஏலேலோ 
ஒன்னு எதாண தந்தாயம்மா  ஏலேலம்மா ஏலேலோ "


கல்வியறிவில்லாத முந்திய தலைமுறைகளின் கடலோடிகள், வழிவழிக் கேள்வி அறிவால் கிடைத்த பாடல்களைப் பாடும் போது, காலப்போக்கில் சொற்கள் சிதைவுண்டு, திரிபோ, மருவலோ ஏற்படுவது இயல்புதான். கயறு என்ற பொருள் தரும் தாம்பு என்ற சொல்லத் திறவுகோலாக எடுத்துக் கொண்டால் இந்த அம்பா பாட்டின் பொருள் இவ்வாறு இருக்கலாமல்லவா?

ஆனைப்புளி நார் எடுத்து - மூன்று பிரி தாம்பு (கயறு) வைத்து - இரண்டு புணை நான் முடிக்க - ஒன்று துணை தந்தாயம்மா என்று தேவ அன்னைக்கு நன்றி கூறும் அம்பாப் பாடலாக அமைந்திருக்கலாம். 'புணை' என்றால் கட்டுமரம் என்று பொருள்.

இவ்வாறு நம் அன்னையின் ஆலயத்தைச் சுற்றி வாழ்ந்த அக்காலத்து மக்களுக்கு, கற்பகத் மரங்களாக ஓங்கி நின்றவை இன்று சுவடு தெரியாமல் அழிந்து போய் விட்டன.

- Indian Materia Medica - (Vol I Page 38/No 52 by Dr. K.M. Nadkarni. F.S.C., L.A.,M.C.S., M.Br.Ph.C. (Lond) 1950.


- செல்வராஜ் மிராண்டா 




தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் காணப்படும் 
பப்பரபுளி/ பொந்தன்புளி/பெருக்க மரங்கள் 





















அகர குற்றுயிர் மடக்கு வெண்பா


வேம்பாறு சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ அவர்கள்
அமலோற்பவத் தாயின் பேரில் அருளிய
அகர குற்றுயிர் மடக்கு வெண்பா 


வெண்பா :

ககன பரம கரம மரப

வகன லகல மகத வதன 

வமல சனன வரச மரப 

கமல சரண மபய 


பொருள் :

விண்ணாட்டின் பரமனாகிய கடவுளின் திருக்கரத்தில் அமர வரம் பெற்றவளும், பாவக்கனலாகிய நரகாக்கினையை அகலும்படி, மாதவத்தின் மேன்மை கொண்டு, அமலோற்பவமாக ஜெனித்தவளும், அரசக் குலத்தவளுமாகிய தேவ தாயின் தாமரை மலரையொத்த திருவடிகளெனக் கடைக்கலமாமென்றவாறு....

சிந்துவெளியும் பழந்தமிழ் பரதவரும்

Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.

தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுஃகள் வெளிப்படுத்துகின்றன.

சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்:

'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.

சிந்துவெளி நாகரிகம் குறித்த தமிழரின் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.

புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.

சிந்துவெளி மக்கள் தமிழர்கள் தான் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.

எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.

சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்:

பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.

எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

நதிகள், மலைகளின் பெயர்கள்:

நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பöறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.

பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.

தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.

தென்னாட்டுப் போர்க்களங்கள் – பகுதி 4

முதற் கடற் போரும் கடற் பேரரசும்

வான விளிம்பு கடந்து, ஆனால் அவ் விளிம்பிலே மயங்கும் இலக்கிய மரபிலே, நாம் தமிழரின் இப்பெருங் கடலகப் போரின் தடத்தைக் காண்கிறோம். அது தடங்கெட்ட இன்றைய தமிழர் வாழ்வுடனே கூடத் தொடர்புடையது என்று கூறலாம். அதுபற்றிய இலக்கியக் குறிப்புகளும் மரபுரைகளும் பல. அதற்கு ஆக்கம் தரும் பிற்கால இடைக்கால வரலாற்றுச் செய்திகளும், கல்வெட்டுச் சான்றுகளும் கூட உண்டு. ஆயினும் இவற்றாலும் அத்தொல் பழங்காலச் சித்திரத்தின் முழு உருவத்தை நாம் தெளிவாகக் காணமுடியவில்லை. காணும் அளவிலும் ஆராய்ச்சியாளர் கருத்து வேறுபாடுகளும், அவர்களது ஆராயா நம்பிக்கை அவநம்பிக்கைகளும் அதன் உருவின் மீதே நிழலாடுகின்றன.

சங்க இலக்கியத்திலே பழங்காலப் பாண்டியருக்கும், அவர்கள் முன்னோர்களுக்கும் முற்பட்ட பாண்டியனாக நெடியோன் விளங்குகிறான். கடைச் சங்க காலத்திலே பாடல் சான்ற பெரும்புகழ் பாண்டியன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனே. அவன் முன்னோர்களாக மதுரைக் காஞ்சியாசிரியர் மாங்குடி மருதனார் பல்சாலை முதுகுடுமியையும் நெடியோனையும் சிறப்பிக்கின்றார். அதேசமயம் முதுகுடிமியைப் பாடிய நெட்டிமையார் முதுகுடுமியின் முன்னோனாக அவனைக் குறிக்கிறார். எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் அது கடந்தும் மிகப் பழங்காலத்துப் பாண்டியனாகவே நெடியோன் கருதப்பட்டிருந்தான்.

நெடியோன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியன் அல்லன். ஏனெனில் கடைச் சங்க காலத்தில் மட்டுமே மதுரை பாண்டியர் தலைநகராயிருந்தது. உண்மையில் தலைநகரை முதல் முதல் கொற்கையிலிருந்து தற்கால மதுரைக்கு மாற்றியவன் முதுகுடுமியே. அவனுக்கு முற்பட்ட இடைச் சங்க காலத்தில் கடல்கொண்ட குமரியாற்றின் கடல் முகமான அலைவாய் (கவாடபுரம்) நகரும், தலைச்சங்க காலத்தில் அதற்கும் தெற்கில் கடல் கொண்ட பக்ரறுளி ஆற்றின் கரையிலிருந்த தென் மதுரையும் பாண்டியர் தலைநகரங்களாய் இருந்தன என்று அறிகிறோம். நெடியோன் தலைநகர் பக்றுளி ஆற்றின் கரையிலே இருந்ததென்று சங்கப் பாடல்கள் பகர்கின்றன.

‘பரதன்’ ‘பரதகண்டம்’ ‘ஆதி மனு’

நெடியோனுக்கு நிலந்தருவிற் பாண்டியன் என்றும் பெயர் உண்டு. “நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன்” என்ற மதுரைக் காஞ்சியடிகள் இதை நினைவூட்டுகின்றன. நிலந்தருவிற் பாண்டியன் காலத்திலேயே அவன் அவைக்களத்திலேயே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. இது அந் நூற்பாயிரம் தரும் தகவல் ஆகும். நெடியோன் பக்றுளியாறு கடல் கொள்ளுமுன் அவ்வாற்றின் கரையிலே இருந்து ஆண்ட முதற் சங்க காலத்துப் பாண்டியன் என்பதை இது வலியுறுத்துகிறது. அத்துடன் கடல் கோளின்போது அவன் வாழந்ததனால், கடல் கோளுக்குப் பின் அவனே குமரியாற்றின் கடல் முகத்திலிருந்தே ஆட்சி தொடங்கியிருக்க வேண்டும்.

பக்றுளியாறு கடல் கோளால் அழிந்தபின், இவன் வடதிசையில் தன் ஆட்சி எல்லையை விரிவுபடுத்தி, இமயம், கங்கை ஆகியவற்றைக் கைக்கொண்டிருந்ததாகத் தமிழ் ஏடுகள் சாற்றுகின்றன.

“பக்றுளியாற்றுடன் பனிமலை யடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்திசையாண்ட தென்னவன்”

என்று சிலப்பதிகாரம் கூறுவது காணலாம். பழந்தமிழகப் பகுதிகள் கடலுள் அழிந்த அக்காலத்திலேயே இமயமும் சிந்து கங்கை வெளிகளும், கடலிலிருந்து புது நிலமாகத் தோன்றியிருந்தன. நெடியோன் கடல்கோளுக்குத் தப்பி வந்த துணையிலிகளையும், ஏலாரையும், துயருழந்தாரையும் அவ்விடங்களில் கொண்டு குடியேற்றியிருக்க வேண்டும். ஏனெனில் இமயம் வரை அவன் நாளில் ஒரே தமிழ் மொழி பேசப்பட்டதென்று கூறப்படுகிறது.

“தென்குமரி வடபெருங்கல்

குணகுட கடலா வெல்லைத்

தோன்று மொழிந்து தொழில் கேட்ப”

என்ற மாங்குடி மருதனார் கூற்று இதற்குச் சான்று.

புதுநிலமாகக் கங்கையும் இமயமும் உள்ளடக்கிய பரப்பைத் தமிழகத்துக்குத் தந்த காரணத்தாலேயே நெடியோன் நிலந்தருவிற் பாண்டியன் என்று பெயர் பெற்றான். இப் பெயருடன் அவன் இன்று ‘இந்தியா’ என்று அழைக்கப்படும் பகுதி முழுமைக்கும் ஒரே பேரரசன் ஆனான்.

வெள்ளையர் ஆட்சிக்கு முற்பட்ட, இமய முதல் குமரி வரை ஆண்ட முதற் பேரரசன் மட்டுமல்ல, ஒரே பேரரசன் நெடியோன் என்ற நிலந்தருவிற் பாண்டியனேயாவான். முன்னும் பின்னும் இல்லாத இவ்வரும் பெருஞ் செயல் இதிகாச புராணங்களில் தன் அருஞ் சுவட்டைப் பதிப்பிக்கத் தவறவில்லை. இந்தியா அல்லது பாரத கண்டம் முழுதும் ஒரு குடைக் கீழ் ஆண்டதாக இதிகாசங்களில் கூறப்படும் பரதன் இவனே என்று பண்டித சவரிராயன் போன்ற அறிஞர் கருதியுள்ளனர். பரதர் அல்லது கடலரசர் என்பதுப் பாண்டியருக்குப் பொதுவாகவும் இவன் மரபினருக்குச் சிறப்பாகவும் ஏற்பட்ட பெயரேயாகும். பரத கண்டம் என்று பெயரில் அது இன்னும் நிலைபெற்ற வழக்காகியுள்ளது.

மற்றும் மிகப் பழங்காலப் புராணங்களில் இவனே ‘ஆதிமனு’வாக குறிக்கப்படுகிறான். இந்திய புராணங்களில் காணப்படும் ‘ஆதிமனு’ வரலாறு மட்டுமின்றி, விவிலிய நூலில் கூறப்படும் ‘நோவா’ வரலாறும், அதுபோன்ற பிற இனங்களின் ஊழி வெள்ளக் கதைகளும் இவன் பழம்பெரும் புகழ் மரபில் வந்தவையே என்று பல உலகப் பழமை ஆராய்ச்சி அறிஞர் கருதுகின்றனர்.

பண்டைச் சாவக வெற்றி

இமயம் வரை நிலப்பேரரசனாக ஆண்டதுடன் இப் பாண்டியன் பேரவா நிறைவு பெறவில்லை. அவன் மறவன் மட்டுமல்ல, கடல் மறவன் அல்லது பரதவன். தமிழ்ப் பரதவரின் கடலாட்சிக் கொடியாகிய மீன் கொடியை அவன் கடல் கடந்த நாடுகளுக்கும் கொண்டு சென்றான். முந்நீர் விழாவின் நெடியோன் என்ற இவன் முழுச் சிறப்புப் பெயரும் தமிழ் மரபிலேயும் தமிழ்ப் புராண மரபிலேயும், ‘சயமாகீர்த்தி’ என்ற பெயரும் இக்கடற் பெரும் போர் வெற்றியைக் குறித்த வழக்குகளேயாகும்.

“முழங்கு முந்நீர் முழுவதும் வளை இப்

பரந்து பட்ட வியன் ஞாலம்

தாளில் தந்து தம்புகழ் நிறீஇ

ஒருதாம் ஆகிய உரவோர்” (புறம் 18)


-என்று 
தலையாலங்கானத்து நெடுஞ்செழியனைப் பாடிய குடபுலவியனாரும்,


“செந்நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கீர்த்த

முந்நீர் விழவின் நெடியோன்

நன்னீர்ப்பக்றுளி மணல்” (புறம் 9)

என்று
முதுகுடிமியைப் பாடிய நெட்டிமையாரும்,


“வானியைந்த இருமுந்நீர்ப்

பேஎ நிலைஇய இரும்பௌவத்துக்

கொடும்புணரி விலங்குபோழ…

ஊர்கொண்ட உயர் கொற்றவை” 
 (மதுரைக் காஞ்சி 75-7, 87-8)

-என்று மாங்குடி மருதனாரும் தம் காலத்திலும் பழங்காலப் புகழ்ச் செய்திகளாக இவற்றை விரித்துரைத்துள்ளார்.

‘உயர் நெல்லின் ஊர்’ என்ற மதுரைக் காஞ்சியுரை நெல்லின் பெயருடைய ஓர் ஊரைக் குறிக்கிறது. கடலில் கலம் செலுத்திச் சென்று கொண்ட ஊராதலால், அது கடல் கடந்த ஒரு நாட்டின் ஊர் என்பதும் தெளிவு. இத்தகைய ஊர் நெடியோன் வெற்றிச் சின்னங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சாவகம் அல்லது சுமத்ராத் தீவிலுள்ள சாலியூரேயாகும். சாலி என்பது நெல்லின் மறு பெயர். அத்தீவின் பழம் பெயர்களாகிய சாவகம், பொன்னாடு, ஜவநாடு, யவநாடு ஆகியவற்றில் யவநாடு என்பதன் பொருளும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையதே. ஏனெனில் ‘யவ’ என்பது வாற்கோதுமையின் மறு பெயர் ஆகும்.

சாலியூர் இன்றளவும் ‘சாரி’ என்றே வழங்குகிறது. சோழர் 12 ஆம் நூற்றாண்டில் கடாரத்தில் அடைந்த வெற்றிகளிலும் சாலியூர் வெற்றி குறிக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் கடாரம் என்பது சீர்விசயம் என்ற கடற் பேரரசாய், மலாயாவையும் பல தீவுகளையும் உட்கொண்டிருந்தது. அதன் தலைநகரான சீர் விசய நகர் சுமத்ராத் தீவிலுள்ள இன்றைய ‘பாலம்பாங்’ நகரமேயாகும். சாலியூர் இந்தச் சீர்விசய நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. பாண்டியன் படையெடுப்பின்போது சாலியூரே தலைநகராய் இருந்ததென்றும் பாண்டியன் வெற்றி குறித்த புதிய பேரரசத் தலைநகரே சீர்விசய நகரென்றும் நாம் கொள்ள இடம் உண்டு. ஏனென்றால் சோழர் படையெடுப்பின்போது அங்கே ஆண்ட பேரரசன் சீர்மாற சீர்விசயோத்துங்கனே. அவன் குடிப் பெயரான ‘சீர்மாற’ என்பது ‘மாறன்’ அல்லது பாண்டியன் மரபை நினைவூட்டுகிறது. அவர்கள் கொடியும் மரபுப் பெயருக்கிசைய மீனக் கொடியாகவே இருந்தது.

நன்றி: www.siragu.com

இரத்த பூமி - 20


இரப்பாளி என்பவன் உண்மையா?


கடல் புரத்தானின் சொந்தங்களுக்கு....!

இரப்பாளியின் முடிவு காலம் நெருங்கிவிட்டது ஆனாலும் காலம் கடந்து என் கண்களுக்குள் தட்டுப் பட்டதனால் அவனது முடிவு அகோரமாகத்தான் இருக்கும். என் எழுத்துக்களை வாசித்தவரும் நேசித்தவரும் இரப்பாளி என்பவன் உண்மையா? நடந்ததா? என எதிர்மறையாய் யோசித்தவருக்கும் பதில் சொல்ல வேண்டியுள்ளது

மனிதம் பொதுவானது பரிணாமபட்ட மனிதமே மனித நேயத்திற்க்கு விதையானது தப்பி பிழைத்தல், தற்காத்தல், காரணங்களுக்காக மிருகங்களிடம் போராடிய மனிதன் மனிதர்களுக்குள்ளும் போராடினான். போர், படை, ஆதிக்கம் என நாகரீகங்கள், பேரரசுகள் உருவாகின. விஞ்ஞான யுகமானாலும் அன்றுதொட்டு இன்றுவரை இது தொடரதான் செய்கிறது.

குறிப்பாக பரதகண்டத்தில் மாத்திரமே இனக்குழுக்களாக நிறத்தால் மதத்தால், மொழியால் கூறுகூறாக பிரிக்கப்பட்ட களமாக மாறி போய்கிடக்கிறது. இந்நிலையில் உலகமே கைபேசியால் கைவசம் வந்தபிறகு இணையதளம் எல்லாவற்றையும் இணைத்தபிறகு தேடுதல்கள் ஒன்றும் கடினமல்ல.

நான் என்னைபற்றி...

என் குடும்பம் பற்றி...

என் ஊர் பற்றி...

என் இனம் பற்றி ....

தேடி தேடி தெரிந்து கொண்டவற்றையே..... பூட்டி வைக்க மனதில்லாது புதுசாக எழுத வந்தேன். தேடும் போதெல்லாம் புதையலாய் எனக்கு கிடைத்தது. ஆம் நான் பாக்கியம் பெற்றவன். ஒழிக்கப்பட்ட வரலாற்றை முதல் முதலாக பாமர பரதவனுக்கு பறைசாற்றினேன். தொண்மையான பரத சமூக வரலாறுகள் மதத்தால் மறைக்கப்பட்டன பிற மதத்தால் மறுக்கப்பட்டன. சுற்றிசூழ் சகோதர சொந்தங்களால் ஒழிக்கப்பட்டன. 

ஆனாலும் காலத்தின் எச்சத்தில் மிஞ்சிய துருப்புகளைக் கொண்டு தூராய்ந்து கிடைத்த புதையலே இரப்பாளி. நுனி நூல் பிடித்து கண்டதை களமாக்கினேன். இப்போது இந்த நூல்கண்டு உங்களிடமே ஒப்படைக்கிறேன்.

இதுபோல பலவற்றை தேடுங்கள். பயனுள்ள பரதவ வம்சத்து உண்மையான தகவல்களை பரப்புங்கள். வரலாற்றில் விலாசம் இல்லாதவர் எல்லாம் அடுத்தவரின் முகவரியை கபளீகரம் செய்து மாயையை உருவாக்கும்போது கண்டமே தனதாக கொண்ட பாண்டியரினம் பாடுபட்டு பகுக்கப்பட்டு கிடக்கலாகாது.

50 ஐ தாண்டிய எனக்கு விசைபலகை அறியாத எனக்கு ஒருபக்கம் எழுதுவதற்கே ஏழு நாட்கள் ஆகும். பரதவ இளந்தலைமுறையே எழுந்து வா.... ஏதாவது செய்.....

நான் வாழும் காலத்திலேயே என் பரதசமூகம் இதுதான் இப்படித்தான் என்பதனை எனக்கும் என் தலைமுறைக்கும் நிருபிக்கவேன்டும். புதையலாய் கொட்டிகிடக்கிறது ஏராளம் தேடு தேடு.... இதோ என் பேனாவுக்கு மை வார்த்தவர்கள்.

------------------------------------------------------------------

MARITIME HISTORY OF THE PEARL FISHERY COAST WITH SPECIAL REFERENCE TO THOOTHUKUDI DOCTOR OF PHILOSOPHY


IN HISTORY By 
Sr. S. DECKLA

The Third Expedition (1553) Vitthalaraya wanted to subjugate the Portuguese completely, since they were still the lords of the pearl fisheries. This time he formed an alliance with a Muslimpirate Irapali, a subject of the Zamorin, in order to attack the Fishery Coast by sea. Punnaikayal being the capital of the Portuguese settlements became the target of their attack Manoel Rodriguez Coutinho, the captain had a tough time and both Vitthala and Irapali took possession of the town together with the fort. 

Irapali then issued a proclamation to all the inhabitants of the coast announcing the end of the Portuguese rule. He invited all to become disciples of the Prophet unless they preferred to feel the edge of the Muslim sword. Gil Fernandez de Carvalho, the captain of Cochin arrived on the Fishery Coast with a huge galliot – three lighters and one sloop. He slaughtered several Muslims with the help of the Marava chieftain After this victory, Gil Fernandez straight away (page166) went to Punnaikayal to rescue Coutinho, his family, soldiers and Fr. Henrique Henriques.

A hundred thousand fanams were demanded as ransom. Gil Fernandez found himself unable to accede to this and sent a secret message to Ramaraya in Vijayanagar asking for his favour to liberate the captives. An order finally came to Vitthala to hand over the captives to Gil Fernandez and this was done at Thoothukudi. 

Vitthala however demanded from the captain, the sum of a thousand pardaus which was partly paid by the Christians of the Fishery Coast. It was probably after this expedition that the whole of the fishery Coast agreed to pay a small portion of the catch of a day’s fishing to the Nayak of Madurai which accounted to ten thousand pardaus every year. (page167)

இன்னும் உண்டு……………………..








முஸ்லிம்களும் தமிழகமும் நூலில் ...
........கடல் புரத்தான்.........

நலம் தரும் கடல் புற்கள்


கடல்சார் மருத்துவத்துறையில் (Marine Pharmacology) கடற்புற்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள், தாதுப்பொருள் மாத்திரைகள், புற்றுநோய் தடுப்பிற்கான மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்தியாவில் பாரம்பரிய இன மீனவர்கள் தலைமுறை தலைமுறையாக பல ஆயிரக்கணக்கான வருடங்களாக தங்களது முன்னோர்களிடமிருந்து செவிவழிச் செய்தியாக கடல்புல்லின் மருத்துவக் குணங்களை அறிந்து அதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். 

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆறு கலக்கும் இடத்திலுள்ள பழவேற்காடு, காஞ்சிபுரம் மாவட்டம் பாலாறு கடலில் கலக்கும் இடமாகிய சதுரங்கபட்டினம் (கல்பாக்கம்), தென்பெண்ணை ஆறு கடலில் கலக்கும் இடமான கடலூர், காவேரி ஆறு கடலில் கலக்கும் இடமாகிய பூம்புகார், தாமிரபரணியாறு கடலில் கலக்கும் இடமான புன்னைக்காயல் மற்றும் முத்துக்குளித்துறை பகுதிகளில் உள்ள கடல் கழிமுகப் பகுதிகளில் கடற்புற்கள் அதிக அளவு காணப்படுகின்றன. கடற்புற்கள் பற்றிய விரிவான கட்டுரைகளோ, புத்தகங்களோ நமக்கு கிடைப்பதில்லை. அதனால் பெரும்பாலான மக்கள் இதனைப் பற்றி அறியாதவர்களாகவே உள்ளனர்.

தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள கடற்கரை பகுதியில் ஏறக்குறைய நாற்பது இடங்களில் கடற்புற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. கடற்கரை பகுதியில் உள்ள மீனவ மகளிர் குறிப்பாக பழவேற்காடு, இராமேஸ்வரம் பகுதியில் மிகக் குறைந்த கூலியைப் பெற்றுக் கொண்டு பன்னாட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இந்த கடற்புற்களை அறுவடை செய்து கொடுக்கிறார்கள். கொண்டு பன்னாட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கடற்புல்லிலிருந்து மருந்து, மாத்திரைகள் தயார் செய்து, விற்பனைக்கு அனுப்பி கொள்ளை இலாபம் சம்பாதிக்கிறார்கள்.

கடற்புற்கள் இந்தியாவின் 7517 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் மீன் இனப்பெருக்கத்துக்கும், சில அபூர்வ கடல்வாழ் உயிரினங்கள் உணவாகவும், கடல்நீரில் பிராண வாயுவை அதிகரித்து மீன்கள் மற்றும் கடல் உயிரினங்கள் செத்து மடியாது காக்கவும் காரணமாக அமைகின்றன. 

  • கடல்நீரில் கலக்கும் கரியமில வாயுவை (Carbon –di – oxide) உறிஞ்சுகிறது.
  • மிகுதியான பிராண வாயுவை (Oxygen) வெளியிட்டு கடற்புற சுற்றுசூழலுக்கும் கடல் வாழ் உயிரினங்கள் வாழவும் துணை செய்கின்றன. 
ஒரிசா மாநிலத்தில் உள்ள இந்தியாவிலேயே மிகப் பெரிய உப்பு நீர் ஏரியான சில்கா ஏரியில் கடற்புற்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் மன்னார் வளைகுடாப் பகுதியில் அதிகமான கடற்புற்கள் காணப்படுகிறது. மன்னார் வளைகுடாப்பகுதியில் பன்னிரெண்டு வகையான கடற்புற்கள் காணப்படுகின்றன. பவளப்பாறைகள் மிகுந்துள்ள இடங்கள், சதுப்பு நிலக் காடுகள் நிறைந்துள்ள இடங்களில் கடற்புற்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. 

தமிழகத்தில் காணப்படும் சில கடற்புற்களின் வகைகளையும், அவைகளின் பயன்பாடுகளும் கீழே தரப்பட்டுள்ளன.

1. அலைவாரி புற்கள்
2. கடல் கோரைக் புற்கள்
3. கடல் கரும்பு புற்கள்
4. வெள்ளை புற்கள்
5. வெள்ளை தாழை புற்கள்

இவைகள் கால்நடைகளுக்கு உணவாகவும், செடிகளுக்கு உரமாகவும் பயன்படுகின்றன. காயங்களை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகின்றன.

6. கடல் தாழை புற்கள் 
7. ஓலைப் புற்கள் 
8. திட்டு வகை புற்கள் 

இவை கடல் நோயை (Sea Sickness) குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. இவை கடல் நீரோடு சேர்ந்து பருகும் பொழுது இதய நோய்களைக் குணப்படுத்தவும், குறைந்த இரத்த அழுத்த நோயை (Low Blood Pressure) சீர் செய்யவும் பயன்படுகிறது.

9. கடல் அருகம்புல் 
10. கொத்து கோரைப் புற்கள்
11. பஞ்சு புல் 
12. கட்டைக் கோரைப் புற்கள்

நமது நாட்டில் கடல் மருந்துகள் பற்றிய படிப்பு கொச்சியிலுள்ள மீன்வள பல்கலைக் கழகத்தில் “KUFOS” (Kerala University of Fisheries and Ocean Studies) இரண்டாண்டு முதுகலைப் பட்டப் படிப்பாக M.Sc. (Marine Microbiology & Marine Drugs) கடலியல் நுண் உயிரியல் மற்றும் மருந்தாகப் படிப்பகப் பயிற்றுவிக்கப்படுகிறது. 

கடற்புற்களை மீனவ மகளிர் குழுக்களிடமிருந்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் குறைந்த கூலியைக் கொடுத்து அறுவடை செய்து, அந்நிறுவனங்கள் மருந்து தயாரிப்பின் மூலம் அதிக இலாபம் அடைவதை விட அரசோ அல்லது மீனவ கூட்டுறவு அமைப்புகளோ இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை உருவாக்கி, தனியார்கள் கொள்ளை இலாபம் அடைவதை தடுக்கலாம். இதன் மூலம் மீனவ மகளிர் நியாயமான ஊதியமும் பெற முடியும்.

இந்த அரிய வகை மருத்துவக் குணங்கள் நிறைந்த கடற்புற்கள் அறுவடையை அரசு முறைப்படுத்தினால், கடல்வளம் பெருகுவதோடு, குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் சாதாரண மக்களுக்கும் கிடைக்கும். 

- ஜேம்ஸ் பர்னாண்டோ 



இரத்த பூமி - 19


என்னைக்கும் எவனும் பரவனின் எதிரியாகிவிட்டால்... 

ஏன் எமனுக்கும் கூட எமகாதகர்கள் பரவர்கள் தான்...

……………………..

பரதவ கூட்டமே கொற்கைகோவின் வாய் உமிழும் வஞ்சனை வார்த்தையை எதிர் நோக்கி கவனமாய் காத்திருந்தது. ஆத்தா முத்தம்மை, உன் சபதம் நிறைவேற போகிறது, இங்கே வாருங்கள் என தொண்டை வலிக்க கத்தினார் கொற்கைகோ. 

கூட்டமே அழுகையை விட்டுவிட்டு ஆவேசமானது. காத்தவராயனின் குழந்தையை தூக்கியபடி கொற்கை கோ அருகே வந்தார். முத்தம்மை, ஆத்தா உன் பாம்படத்தை போட்டுகொள்ள நேரம் வந்துவிட்டது, பத்திரமாக வைத்திருக்கிறாயா, என கேட்க

இருக்கய்யா இருக்கு ... என் சுறுக்கு பையிலே பத்திரமா இருக்கு... என சுருக்கு பையை தடவி பார்த்து பட்டென்று பதில் சென்னாள். கொண்டா என் காத்தவராயனின் வாரிசை, இனி இவன் தான் என் வாரிசு... இவன் தான் இனிஅடுத்தாரை காத்தார் என்றவர், 

எங்கய்யா பாண்டியம்பதியே..... 

அடப்பனாரே... 

பாடனாரே.... 

சடையனாரே.....

பரதகுலத்து பட்டங்கட்டிமாரே....

நான் ஒன்று சொல்லபோகிறேன். நான் செய்தது தவறென்றாலும் என்னை மன்னியுங்கள், என பரதவ கூட்டம் நோக்கி தலைதாழ்ந்து சொன்னார் கொற்கைகோ.

புன்னைக்குள்ளே புகுந்து புனித தந்தையையும் கேப்டனையும் என் உயிர்காத்த ராயனையும் பிணையமாக கொண்டு போனவர்களுக்கு பிணையமாக்கவே நான் இதை செய்தேன் என சொல்ல எங்கும் மயான அமைதி நிலவியது. புன்னைக்கோட்டை கூட்டமே கொற்கைகோ செய்ததை அறிய அமைதி காத்தது...

மௌனம் கலைத்த கொற்கைகோ ஆவேச ஆணையிட்டார். காணியாளா, போ போய் நான் தப்பி பிழைக்க தங்கிருந்த.... பாண்டியம்பதி நிலவறையில் எங்கிருந்தோ வந்த பரத்திமாரின் பவித்திரத்தை பழித்த..... எம் கண்முன்னே தூயதந்தையை வாளெடுத்து கொல்ல துணிந்த.... எம் கோட்டையிலே கொள்ளையரின் கொடியை பறக்கவிட்ட.... உயிர்பிழைக்க எதுவும் செய்யும் பயந்தாங்கொளி பாண்டியன் இவன் என எம் பாரம்பரிய வீரத்தை எள்ளி நகையாடி எம்மை சாய்புமாரக மாற்ற நினைத்த சாம்பிராணி என்னைக்கும் எவனும் பரவனின் எதிரியாகிவிட்டால் எமனுக்கும் கூட எமகாதகர்கள் பரவர்கள் தான்.

நாடு பிடிக்கும் ஆசை கொண்ட பரதேசிகள் யாரானாலும் பரதவனின் பூமியை பரதவனின் காலடி பிடி மண்ணைக்கூட ஒரு பயலாலும் தொடமுடியாது என்பதை காட்டுவோம். இப்படி நம்மை இம்சை படுத்திய அந்த ஈன இரப்பாளியையும் அவன் கூட்டத்தையும் கொண்டு வா. இன்னைக்கு அவனுவளை வெட்டி கூறு கூறா போட்டு, அவனவன் இடத்துல கொண்டு போய் தொங்க விடுவோம். என படபடத்து பேச கூட்டமே அதிர்ச்சியில் உறைந்து போனது.

புன்னைக்கோட்டையில் வீரமறவன் காத்தவராயனின் சடலத்தின் முன்பே துக்கம் கொண்டாடிய பரதவரின் கூட்டம் கொற்கைகோவின் விளக்கம் கேட்ட ஒரே நொடியில் வீராவேசம் கொண்டு எழுந்தது இரப்பாளி இங்கே உயிரோடு இருக்கிறானா? தப்பியதாக கூறியது,

இவன் தான் இரப்பாளி என பரதவரும் மறவரும் வேட்டையாடியது உண்மையிலே இரப்பாளியே அல்ல என்பதனை கொற்கைகோவின் வாயிலாக அறிந்ததும் இரப்பாளியை கொண்டு வா... என்கின்ற கொற்கைகோவின் உக்கிரமான ஆணையை கேட்டு அனைவருமே அதிர்ந்தாலும் மறுகணமே கொற்கைகோவின் விவேகத்தை பாண்டி பரத வம்ச அரசியல் வித்தை இதுதானே என மனதுக்குள் நினைத்து நினைத்து பரதவ மறவ குலமே புளங்காகிதமடைந்தது.

இரவிலே இருட்டிலே சண்டை நடந்தது எல்லாமே, ஒரு ஏற்பாடா என புன்னைக்கோட்டை மக்களும் தங்களுக்குள்ளே உரையாடி ஆனந்த அதிர்ச்சி கொண்டனர். பேச திராணியற்று தான் ஓரத்தில் கிடந்தாலும் பாண்டியம்பதியின் வாரிசு பரதவரின் புது தலைவனாக எழுச்சியுறும் தன் மகனின் அரசியல் வியூக உரை கேட்க கேட்க தன்னை அறியாமலே நரம்புகள் முறுக்கேற எழுந்தார் விக்கிரமாதித்ய பாண்டியன். தன் தனயனை எண்ணி பெருமையடைந்தார்.

இரப்பாளியை உயிரோடு இன்னும் தனது தணயன் காத்து வைத்திருக்கிறான் என்பதை அறிந்ததும் அரசியல் ரீதியாகவும்,

மானுட அகிம்சை ரீதியாகவும்,

பண்டை பாண்டிய போர் தர்ம முறையாகவும்,

கொற்கை செய்திருந்தாலும் ஒற்றை பரதவனை காத்தவராயனை காவு எடுத்த துருக்கியரை நினைத்து அவரது கோபம் பன்மடங்காக பெருகியது. அதேபோல காத்தவராயனின் சடலத்தின் முன்பே துக்கம் கொண்டாடிய பரதவரின் கூட்டம் வஞ்சனையை தீர்த்துகொள்வதற்காக கொலை வெறி பிடித்தாடியது.

(தொடரும் )
........கடல் புரத்தான்.........
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com