வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 1 April 2017

இரத்த பூமி - 19

என்னைக்கும் எவனும் பரவனின் எதிரியாகிவிட்டால்... 

ஏன் எமனுக்கும் கூட எமகாதகர்கள் பரவர்கள் தான்...

……………………..

பரதவ கூட்டமே கொற்கைகோவின் வாய் உமிழும் வஞ்சனை வார்த்தையை எதிர் நோக்கி கவனமாய் காத்திருந்தது. ஆத்தா முத்தம்மை, உன் சபதம் நிறைவேற போகிறது, இங்கே வாருங்கள் என தொண்டை வலிக்க கத்தினார் கொற்கைகோ. 

கூட்டமே அழுகையை விட்டுவிட்டு ஆவேசமானது. காத்தவராயனின் குழந்தையை தூக்கியபடி கொற்கை கோ அருகே வந்தார். முத்தம்மை, ஆத்தா உன் பாம்படத்தை போட்டுகொள்ள நேரம் வந்துவிட்டது, பத்திரமாக வைத்திருக்கிறாயா, என கேட்க

இருக்கய்யா இருக்கு ... என் சுறுக்கு பையிலே பத்திரமா இருக்கு... என சுருக்கு பையை தடவி பார்த்து பட்டென்று பதில் சென்னாள். கொண்டா என் காத்தவராயனின் வாரிசை, இனி இவன் தான் என் வாரிசு... இவன் தான் இனிஅடுத்தாரை காத்தார் என்றவர், 

எங்கய்யா பாண்டியம்பதியே..... 

அடப்பனாரே... 

பாடனாரே.... 

சடையனாரே.....

பரதகுலத்து பட்டங்கட்டிமாரே....

நான் ஒன்று சொல்லபோகிறேன். நான் செய்தது தவறென்றாலும் என்னை மன்னியுங்கள், என பரதவ கூட்டம் நோக்கி தலைதாழ்ந்து சொன்னார் கொற்கைகோ.

புன்னைக்குள்ளே புகுந்து புனித தந்தையையும் கேப்டனையும் என் உயிர்காத்த ராயனையும் பிணையமாக கொண்டு போனவர்களுக்கு பிணையமாக்கவே நான் இதை செய்தேன் என சொல்ல எங்கும் மயான அமைதி நிலவியது. புன்னைக்கோட்டை கூட்டமே கொற்கைகோ செய்ததை அறிய அமைதி காத்தது...

மௌனம் கலைத்த கொற்கைகோ ஆவேச ஆணையிட்டார். காணியாளா, போ போய் நான் தப்பி பிழைக்க தங்கிருந்த.... பாண்டியம்பதி நிலவறையில் எங்கிருந்தோ வந்த பரத்திமாரின் பவித்திரத்தை பழித்த..... எம் கண்முன்னே தூயதந்தையை வாளெடுத்து கொல்ல துணிந்த.... எம் கோட்டையிலே கொள்ளையரின் கொடியை பறக்கவிட்ட.... உயிர்பிழைக்க எதுவும் செய்யும் பயந்தாங்கொளி பாண்டியன் இவன் என எம் பாரம்பரிய வீரத்தை எள்ளி நகையாடி எம்மை சாய்புமாரக மாற்ற நினைத்த சாம்பிராணி என்னைக்கும் எவனும் பரவனின் எதிரியாகிவிட்டால் எமனுக்கும் கூட எமகாதகர்கள் பரவர்கள் தான்.

நாடு பிடிக்கும் ஆசை கொண்ட பரதேசிகள் யாரானாலும் பரதவனின் பூமியை பரதவனின் காலடி பிடி மண்ணைக்கூட ஒரு பயலாலும் தொடமுடியாது என்பதை காட்டுவோம். இப்படி நம்மை இம்சை படுத்திய அந்த ஈன இரப்பாளியையும் அவன் கூட்டத்தையும் கொண்டு வா. இன்னைக்கு அவனுவளை வெட்டி கூறு கூறா போட்டு, அவனவன் இடத்துல கொண்டு போய் தொங்க விடுவோம். என படபடத்து பேச கூட்டமே அதிர்ச்சியில் உறைந்து போனது.

புன்னைக்கோட்டையில் வீரமறவன் காத்தவராயனின் சடலத்தின் முன்பே துக்கம் கொண்டாடிய பரதவரின் கூட்டம் கொற்கைகோவின் விளக்கம் கேட்ட ஒரே நொடியில் வீராவேசம் கொண்டு எழுந்தது இரப்பாளி இங்கே உயிரோடு இருக்கிறானா? தப்பியதாக கூறியது,

இவன் தான் இரப்பாளி என பரதவரும் மறவரும் வேட்டையாடியது உண்மையிலே இரப்பாளியே அல்ல என்பதனை கொற்கைகோவின் வாயிலாக அறிந்ததும் இரப்பாளியை கொண்டு வா... என்கின்ற கொற்கைகோவின் உக்கிரமான ஆணையை கேட்டு அனைவருமே அதிர்ந்தாலும் மறுகணமே கொற்கைகோவின் விவேகத்தை பாண்டி பரத வம்ச அரசியல் வித்தை இதுதானே என மனதுக்குள் நினைத்து நினைத்து பரதவ மறவ குலமே புளங்காகிதமடைந்தது.

இரவிலே இருட்டிலே சண்டை நடந்தது எல்லாமே, ஒரு ஏற்பாடா என புன்னைக்கோட்டை மக்களும் தங்களுக்குள்ளே உரையாடி ஆனந்த அதிர்ச்சி கொண்டனர். பேச திராணியற்று தான் ஓரத்தில் கிடந்தாலும் பாண்டியம்பதியின் வாரிசு பரதவரின் புது தலைவனாக எழுச்சியுறும் தன் மகனின் அரசியல் வியூக உரை கேட்க கேட்க தன்னை அறியாமலே நரம்புகள் முறுக்கேற எழுந்தார் விக்கிரமாதித்ய பாண்டியன். தன் தனயனை எண்ணி பெருமையடைந்தார்.

இரப்பாளியை உயிரோடு இன்னும் தனது தணயன் காத்து வைத்திருக்கிறான் என்பதை அறிந்ததும் அரசியல் ரீதியாகவும்,

மானுட அகிம்சை ரீதியாகவும்,

பண்டை பாண்டிய போர் தர்ம முறையாகவும்,

கொற்கை செய்திருந்தாலும் ஒற்றை பரதவனை காத்தவராயனை காவு எடுத்த துருக்கியரை நினைத்து அவரது கோபம் பன்மடங்காக பெருகியது. அதேபோல காத்தவராயனின் சடலத்தின் முன்பே துக்கம் கொண்டாடிய பரதவரின் கூட்டம் வஞ்சனையை தீர்த்துகொள்வதற்காக கொலை வெறி பிடித்தாடியது.

(தொடரும் )
........கடல் புரத்தான்.........
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com