வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 13 April 2017

ஆசந்திப் பவனி பாடல் - 1
ஆரய்யோ இனிப் பாவம் செய்யத் துணிபவன்
பாரய்யோ கண்ணால்

பூங்காவில் ஏசுநாதர் தமதுபிதாவை வேண்டும்
போது யூதர் வளைந்து பிடித்தாரய்யோ
தீங்காய் கொடிய  தரை - தனில் விழாத்தாட்டிக் கொண்டு
திருமுதுகில் ஈட்டியால்  இடித்தாரய்யோ

கற்றூணில் ஏசு நாதர் கரங்களைக் கட்டி வைத்து
கல்நெஞ்சர் கசை கொண்டு அடித்தாரய்யோ
கொட்டும் உதிரம் ஓட உடைமர முள் முடியை
முதல்வன் திருச்சிரசில் பதித்தாரய்யோ

அத்தியந்த மகிமைக்குரிய திருமுகத்தின்
அழகு இரத்தக் கரையால் சிதைந்ததய்யோ
சத்திய ஏசுநாதர் கனத்த சிலுவைபாரம்
தாங்கித் தாங்கி திருத்தோள் சரிந்ததய்யோ

தூர வழி நடந்து துயரத்தால் கால்கள் பின்ன
பாரந்தனைச் சிமியோன் பகிர்ந்தாரய்யோ
பக்தை வெரோணிக்கமாள் பரமன்முகம் துடைக்க
பாங்காய்த் துகிலில் முகம் பதித்தாரய்யோ

தாங்காத் தாகத்தால் ஏசு தவித்து நாவுவரண்டு
தாகம் தீரத் தண்ணீரும் கேட்டாரய்யோ
ஓங்காரம் செய்யும் கடற்பாசிதனிலே தோய்த்து
பிச்சு கலந்த காடி கொடுத்தாரய்யோ

பெரிய சிலுவை தன்னில் தம்மை அறைவதற்கு
பின்னப்படாமல் கரம் விரித்தாரய்யோ
கருணைத்திரு  விழியால் பரலோகந் தன்னைப் பார்த்து
கர்த்தர் நமக்காகத்தான் மரித்தாரய்யோ

- வேம்பாறு  சித்திரக்கவி முத்தையா ரொட்ரிகோ 
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com