Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

கடலன்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் வட்டத்திலிருக்கும் பூலாங்குறிச்சியில் 1979 ஆம் ஆண்டில் கிடைத்த கல்வெட்டொன்று கடலகப் பெரும்படைத் தலைவன் எங்குமான் என்பான் அக்கல்வெட்டை வெட்டியதாகக் கூறுகிறது. கடலகப் பெரும்படைத்தலைவன் என்பது பாண்டியரின் கடற்படைத் தலைவர்களுக்குத் தரப்பட்டப் பட்டமேயாகும். 

கி.மு. 5ஆம் நூற்றாண்டிற்குரிய
10.11.1978 ல் மாங்குளத்தில்
கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு 
மீனாட்சிபுரம் (மாங்குளம்) கல்வெட்டும் கடலன் வழு(த்)தி என்னும்  பாண்டியனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கணி நந்தாசிரியன் என்னும் ஆசீவகத் துறவிக்கு தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் அரச அதிகாரியான (பண அன்) கடலன் வழுதி என்பவன் வடித்துத் தந்த கற்படுக்கை என்னும் பொருளில் அந்தக் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. 

வெகுண்டெழுந்து வந்த பகைவர்களின் வேற்படையையும், யானைப்படையையும், போர்க்களத்தில் வென்ற மாவண் கடலன் விலங்கில் என்னும் அழகிய ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் என்று புறநானூற்றுப் புலவர் ஆலம்பேரிச் சாத்தனார் குறிப்பிடுகிறார்.

சேரமான் மாதரஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சிக்கு உட்பட்டுக் கடலன் என்னும் சிற்றரசன் விலங்கில் எனும் ஊரை ஆண்டு வந்தான். அப்போது அவனுடைய பகைவர்கள் விளங்கிலைப் பிடிக்க எண்ணி, அவ்வூரை முற்றுகையிட்டனர். இந்நிலையில் யானைப்படையுடனும், குதிரைப் படையுடனும் வந்த சேரமான் மாதரஞ்சேரல் இரும்பொறை, அப்பகைவரை முறியடித்து விளங்கிலைக் காப்பாற்றினான். பொருந்தில் இளங்கீரனார் எனும் புலவர் அச்சேரமானின் மீது பாடிய புறநானூற்றுப் பாடல் இச்செய்தி உள்ளது. 

மேலே காணும் இரண்டு குறிப்புகளும் மாவண் கடலன் என்பான் சங்ககாலத்தில் அரபிக்கடலின் ஓரத்திலிருந்த விளங்கிலை ஆண்டு வந்ததாகக் கூறுகின்றன. 

பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் கடலன் என்பதும் கடலகப் பெரும்படைத்தலைவன் என்பதும் சங்க காலம் தொட்டுக் கடற்படைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பதவிகள் என்பது இவற்றால் உறுதிபடுகிறது. 

அகநானூற்றுப் புலவர்களில் எருமை வெளியனார் மகனார் கடலானார் எனும் புலவரும் ஒருவராவர். இவரது *89 பாடல் குறிஞ்சித் திணைக்கு உரியது. அவர் கடலன் என்னும் கடற்படைத் தலைவன் பதவியை வகித்தவராவென்பது தெரியவில்லை.

பரதன் என்பாரைப் பற்றிக் குறிப்பிடும் இலங்கையின் பொலன்னறுவைக் கல்வெட்டொன்று அவனை சாகரிக என்னும் பெயராம். கடலன் வழுதி கடல் வாநிபத்திலும் ஈடுபட்டு வந்தான் என்பதைப் பொலன்னறுவை கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ள கப்பல் காட்டுகிறதாம். 

இலங்கையில் கிடைத்த பழைய காசு ஒன்றின் பக்கத்தில் பரத திசக என்று பாகத எழுத்திலும் தமிழி (தமிழ் பிராமி) எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பரதனாகிய திசனுடையது என்பது அதன் பொருளாம். அக்காசின் மறுபுறத்தில் பாண்டியனின் மீன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த காசில் காணும் பரத என்னும் குறிப்பு, கடலோடிகளான பரதவரைக் குறிக்கும். இருபதுக்கும் மேற்பட்ட இலங்கைக் கல்வெட்டுகளில் பரதன் என்னும் பெயர் காணப்படுவதாகக் கூறுகிறார்கள். கடலன் என்னும் கடற்படை அதிகாரிகளில் பெரும்பாலானோர் பரதவர்களாயிருந்தனர் என்பது இதனால் விளங்குகிறது.

தொன்மையில் பாண்டிய நாட்டிலிருந்தும், சேர நாட்டிலிருந்தும், ஈழத்திலிருந்தும் பொருள்வழிப் பிரிந்து கடல் கடந்து சென்ற தமிழர்களான கடலன்களின் வழிவந்தோர், பின்னர் வடக்கு எசுபானியாவிலுள்ள பைரனீசு மலைத்தொடருக்கு தெற்கே குடியேறியுள்ளனர். இரும்புக் கொல்லுலைகளையும், இரும்பை ஆக்கும் தொழில் நூட்பத்தையும் தமிழகத்திலிருந்து தம்முடன் அவர்கள் கொண்டு சென்றுள்ளனர். கடலன் கொல்லுலைகளை வைத்தே ஐரோப்பாவில் இரும்பு எக்கு தொழில் அரும்பியது. அக்கடலன்கள் தாய்நாட்டுடனான கொப்புள் உறவுகளிக் காலப்போக்கில் இழந்து தனியொரு தேசிய இனமாயினர். தமிழை முற்றிலும் மறந்து உரோமானிய மொழிகளின் தாக்கத்தால் புதியதொரு மொழியை உருவாக்கிக் கொண்டனர்.

-  அறிஞர் குணா

தமிழரின் தொன்மை நூலிலிருந்து 

பன்மீன் கூட்டம் - பாகம் 9

வாளை

828. துப்பு வாளை
829. முள்ளு வாளை
830. முய(ல்) வாளை 
831. கார்த்திகை வாளை
832. கரை வாளை
833. கலக்கு வாளை (பச்சை முதுகு)
834. தேத்து வாளை (தேத்து நீரில் அதாவது தெளிந்த கடல்நீரில் இருக்கும் வாளை)
835. சுண்ணாம்பு வாளை
836. சோனக வாளை
837. கிளவாளை (சூரை இனம்)
838. பூவாளை
839. ஓலை வாளை
840. அம்பட்டன் வாளை (சொட்டை வாளை)
841. பண்டு வாளை
842. பவள வாளை
843. நாவி வாளை
844. மண்டி வாளை
845. இலக்கு வாளை
846. கொழு வாளை
847. குண்டங் கொழுவாளை
848. கன்னங்கொழுவாளை

வாவல் (வவ்வால்)

849. ஐய் வாவல்
850. வெள்ளை வாவல்
851. கருவாவல்
852. மூக்கரை வாவல்
853. சிரட்டை வாவல்
854. வாமுட்டான் (உருளை மீன்)
855. வாய்நாறி
856. விராலி

விளமீன்

857. பருத்த விளமீன்
858. ஒரியா விளமீன் (நீண்டமுகம்)
859. கருணா விளமீன்
860. தாடி விளமீன் (கன்னத்துப்பக்கம் பொட்டு உண்டு)
861. விலாங்கு
862. வியாலா
863. வெக்கட்டை
864. வெங்கண்ணி (உல்லம்)

வெங்கணா (வெங்கணை)

865. திரவெங்கணை
866. இளவெங்கணை
867. பெருவெங்கணை (பருவெங்கணை)
868. ஓட்டு வெங்கணை (முள் நிறைந்தது)
869. வெள்ளியா
870. உருண்டை வெள்ளியா
871. கறுப்பு வெள்ளியா
872. வெளிச்சி
873. வெள்றா (சீலாவில் ஓரினம்)
874. வெம்புலியன்
875. வொரண்டை
876. நங்கல் குட்டி

நவரை

878. வரிநவரை
879. கல் நவரை
880. கண் நவரை
881. செந்நவரை
882. வெண்நவரை
883. ரோமியா நவரை
884. நகரை
885. நாக்கு மீன்
886. புள்ளி நாக்குமீன்

நாக்கண்டம்

888. நெடு நாக்கண்டம்
889. பாரி நாக்கண்டம்
890. நாறல்
891. நீற்றுக்கவலை
892. நுணலை (கொய்மீன்)
893. நெடுமீன்
894. நெய்மீன்
895. நெடும்புலி
896. நெத்தி (பயிந்தி இனம், முள் குத்தினால் கடுகடுக்கும்)
897. நெத்தி பிரியன்

- மோகன ரூபன்

Jesuits In Malabar Vol I

Rare book Collection


Jesuits In Malabar Vol I (1939)

by Ferroli, D.

திண்தோள் மறவர்கள்

பரதவர் பண்பாடு -  ஆண் அழகர்கள் 

உப்புக் கடலில் மேனி படப் பட, அந்த உடலில் ஒரு பளபளப்பு... மினுமினுப்பு! அடலேறு போன்ற ஆடவர்கள். நெடுதுயர்ந்த உயரம். பரந்து விரிந்த நெஞ்சு... திண் தோள்.....

வலைகளைப் படகுகளில் நிரப்பிக் கொண்டு, இடியெனப் பேரலைகள் முழங்கி மோதும் கடலின் ஊடே அப்படகினை செலுத்துவர். பரதவர்கள் படகின் இரு மடங்கிலும் இருந்து கொண்டு, கரையிநின்ரும் கடலுக்குள் படகை வலிவுடன் தள்ளிச் செலுத்துவது,

மதமிகு களிற்றினைப் பாகர்கள் பக்கத்தே நின்று தள்ளிச் செல்லவதை நிகர்க்கும் என்று நற்றிணை 75 : 2-3 வியந்து பாராட்டுகிறது.

கடலில் காணும் மீன் திரட்சியைப் பரதவர் மாப்பு எ
ன்றும், அம்மீன் கும்பல் கடலில் நகர்ந்து கொண்டிருப்பத்தை மாய்ப்பு சாய்கிறது என்றும் கூறுவர்.

பரதவர்கள் கொல்ல வல்ல கொடுஞ்சுறா மீன்களை வேட்டையாடிப் பிடிப்பதில் அஞ்சா நெஞ்சமும் ஆர்வமும் கொண்டவர்கள். சுறா மீன்கள் மிகப் பெரியவை. அவற்றின் அருகில் செல்வதே ஆபத்து. எனவே, கூறிய முனையுள்ள எரியுளியை அச்சுறாவுகள் மீது குறிவைத்து வீசியெறிந்து, அவற்றைப் பிடித்துப் படகில் திணித்துப் பெருமிதமடைவர். நள்ளிரவிலும் பரதவர் மீன் வேட்டையாடுவதில் நாட்டம் மிக்குடையவர், என்பதை

கொல்வினைப் பொலிந்த கூர்வாய் எரியுளி 
முகம்பட மடுத்த முளிவேதிர் நோன்காழ் 
தாங்கு அகு நீர்ச் சுரத்து எறிந்து வாங்குவிசைக் 
கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீன் எரிய 
 - குறுந்தொகை 304 : 1-4 விவரிக்கிறது.

கட்டுமரங்களையும், வள்ளங்களையும் பரதவர் அடிக்கடி தூய்மை செய்து நறுமணங்களும், தூபமும் காட்டித் தொழுவர். அப்படி செய்வதால் படகுகளுக்கு எத்தகைய தீமையும், குறைபாடுகளும், தெய்வக் குற்றங்களும், பைசாசத் தொல்லைகளும் ஏற்படா. நலமுடன் இயங்கி வளமடைய செய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை. பரதவர் மொழியில் காற்றுக் கருப்பு அண்டாது காப்பாற்றப்படும் என்று கூறுவர்.... என்று சங்க இலக்கியங்கள் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மனித வாழ்கையில் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறோம். ஆனால் சங்க இலக்கியங்களில் நெய்தல் நிலம் - பரதவர் தொழில் - கலாச்சாரம் போல் வேறு எந்த தொழிலையும் சிறப்பித்துப் பாடவில்லை எனலாம்.

திண்தோள் மறவர்கள் :

பண்டைய நாளில் கடலில் கலம் செலுத்துவோர் காற்றையே நம்பித் தொழில் செய்தனர். காற்றுக் கடல் அமைதியாகி விட்டால் தண்டு வலிப்பர்கள். அதற்கென முதிர்ந்த மூங்கில்களை நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து பயன்படுத்துவர். இதனைத் துளவை என்பார்கள். கடல் தொழில் செய்பவர்கள் கட்டாயம் தண்டு வலிக்கும் திறன் பெற்றேயாக வேண்டும். இப்படித் தண்டு வலிப்பதானாலே யே, கடல் தொழிலாளியின் புஜங்கள் உருண்டு திரண்டு சதைப் பிடிப்புடன் வலுவாயிருக்கும்.

மீன் குஞ்சுகளுக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமோ! ஏழெட்டு வயது சிறுவர்களே கடல் அலைகளை எதிர்த்து நீச்சலடிக்கக் கற்றுக் கொள்வார்கள். கொஞ்ச நாளில் மூச்சையடக்கி முத்துக் குளிப்பார்கள். திடீரென்று வாலிப முறுக்குடன் கம்பீரமாக நிற்பான்.... அவன் வயதுள்ள கடல் தொழில் செய்யாத இளைஞனோடு ஒப்பு நோக்கினால், அவன் நோஞ்சானைப் போல இருப்பான். கடல் உப்பும், கடல் அலைகளும், கடுமையான உழைப்பும் கடலோடிகளை ஆண் அழகர்களாக மாற்றிவிடுகிறது. 

அதுவும் அந்தக் காலத்துக் கடலோடிகள் அழகான கொண்டை முடிந்திருப்பர். காதுகளில் கடுக்கன் பளிச்சிடும்! பரத பாண்டியர்களில் ஒரு சில ஆண்கள் பூணூல் அணிந்திருந்தார்கள். சிப்பிகுளத்தில் திருவாளர் தம்பியா லியோன் அவர்கள் இறுதி காலம் வரை பூணூல் அணிந்திருந்தார். கேலியாக அவரிடம் நீங்கள் எப்படி பூணூல் அணிந்திருக்கிறீர்கள்? பரவருக்கு இது உரியதா? என வினவினால் பூணூல் அணிவது நமது பாரம்பரிய உரிமைதான் என்பார். இந்தத் தகவல் திரு. தி. சொர்ணராஜன் விக்டோரியா எழுதியுள்ள பரதவர் குலப் பெருமை - பாகம் 2 ல் பக்கம் 205 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமணமான ஆண்களில் பெரும்பாலோர் முறுக்கிய கிருதா மீசையுடன் தோன்றுவர். இளவட்டங்கள் கத்தி மீசையுடன் கம்பீரமாகக் காணப்படுவார்கள். வாலிபர்களுக்குள் போட்டி வந்தால் இரண்டு புஜங்களுக்குள் இரண்டு பேரைத் தூக்கி பிடித்துச் சுழற்றி விளையாடுவார்கள்.

சிலம்ப கம்பைக் கையிலெடுத்து சுழற்றுவதே கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். இரண்டு கைகளிலும் இரண்டு சிலம்பங்கள்... தரையிலிருந்து உயரத்தில் தாவிக் குதித்து, எதிரியை திணறடித்து விடுவார்கள். சிலம்பத்தைத் தொட்டுக் கொடுக்கும் ஆசானுக்கு முதல் மரியாதையாக அவர்கள் செலுத்தும் சலாம் வரிசையைப் பார்ப்பதற்கே அழகாயிருக்கும்.  

சிப்பிகுளத்தைச் சேர்ந்த திரு. சலோமை சந்தியாகு பர்னாந்து என்ற ஆசான் மிக திறமைசாலி, சகலகலா வல்லவர். மருத்துவம் பார்பார், சிலம்பம் கற்றுத்தருவார். மேஜிக் விளையாட்டுகளை செய்வார். அறிவியல் கண்ணோட்டத்தில் ஆழ்ந்த கருத்துகளை தூய தமிழில் எடுத்துரைப்பார். தனது மகன் ஆசையா பர்னாந்துவை தரையில் கிடத்தி, அவனின் நெஞ்சில் இரண்டங்குல ஒட்டாஞ்ச்சல்லியை வைப்பார். அதன் மீது ஒரு வாழைக்காயை வைத்துவிட்டு நீண்ட வாள் எடுத்து சாகசங்கள் செய்து வீசுவார். கடைசியில் வாழைக்காயை ஒரே வெட்டில் இரு துண்டாக்குவார்.

அந்த மகனை உட்கார வைத்து அவன் தலை மீது ஒரு போத்தலில்  (பாட்டில்) தேங்காயை நிறுத்துவார். கழுந்து உலக்கைப்போல ஒரு குறுந்தடியை சுழற்றி விளையாடுவார். எதிர்பாராத நேரத்தில் தேங்காயில் ஓர் அடி போட்டு, அதை இரண்டாகப் பிளப்பார். அவர் மகனும் வீரதீர விளையாட்டுகளில் சலித்தவர் அல்ல. பனைமரம் ஏறுவதில் வல்லவர். ஒருமுறை நண்பர்களில் சவாலை ஏற்று தலைகீழாக பனை மரம் இறங்கும் போது பாதி தூரத்தில்  கீழே விழுந்தார். அவரை அவர் தகப்பனரே எண்ணெய் ஊற்றி, ஆறு மாதங்களில் குணப்படுத்தினார்.

ஒருமுறை கீழவைப்பாறை சேர்ந்த திரு. சவியேர் பர்னாந்து அவர்களின் தகப்பனார் கல்லாத்துப் பகுதியில் ஒரு புலியை எதிர்கொள்ள நேரிட்டது. கையில் ஆயுதம் ஏதும் இல்லை. அருகில் கிடந்த பனை மட்டையை வைத்துக் கொண்டு புலியுடன் போராடி உயிர் பிழைத்தார். அன்றிலிருந்து அவருக்குக் கல்லாத்துப் புலி என்று சிறப்புப் பெயர். இன்றளவும் அவரது வம்சாவழியினரை கல்லாத்துப் புலி என்ற அடைமொழியுடன் அழைக்கிறார்கள்.

இப்படி வீர தீரச் செயல்களாற்றும் முதியோரும், இளைஞரும் எல்லாக் கடற்கரை கிராமங்களிலும் இருக்கிறார்கள். அவர்களை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டத்தான் ஆளில்லை!



- கலாபன் வாஸ் 
நன்றி: பரவர் மலர் 2016


மிக.வந். இம்மானுவேல் பர்னாந்து ஆண்டகை அவர்களுக்கு வாழ்த்துப்பா


நிம்பநகர் உவந்தளித்த மிக. வந். பிதேலிஸ் லயோனல் இம்மானுவேல்
பர்னாந்து ஆண்டகை அவர்கள் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின்
துணை மேற்றாணியாராக அபிஷேகம் செய்யப்பட்டபின் முதன்முறையாக
தம் தாய்பதியாம் வேம்பாற்றுக்கு விஜயம் மேற்கொண்ட போது
நிம்பை உதய தாரகை சங்கத்தினர் வாசித்தளித்த 

வாழ்த்துப்பா 

எம் பெரிய குருவே !

நீர், சத்திய திருமறை மெச்சும் விதமாய் உத்தம நல் மேய்ப்பனாக இலங்கை தேசத்தின் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் முதல் தமிழ் ஆயராக அபிஷேகிக்கப்பட்டதை கண்டு உம் உடன்பிறப்புகளாம் நிம்பவாசிகள் அனைவரும் சொல்லிலடங்கா உவகை அடைகிறோம். திருமறை தழுவிய 475 ஆம் வருட நிறைவில், திருமறைக்கு நம்பதி அளித்த முதல் ஆயனைக் கண்டு எம்முள்ளம் பூரிக்கின்றது, அக்களிக்கின்றது, அகமகிழ்கின்றது, ஆனந்தத்தால் ஆர்ப்பரிக்கிறது.

மதிகுல பரதவர் மகிழ்பதியாம் வேம்பாற்றிக்கு பெரும் புகழினைத் தேடித் தந்த உம்மை எமக்கு அளித்த உம் குடும்பத்தினரை யாம் நன்றியுடன் நினைவு கூறுகிறோம். சிறப்பாக உம் பெற்றோர் காலம் சென்ற திரு. சேவியர் பஸ்டியன் பர்னாந்து, திருமதி. ஞான சொரூபி பர்னாந்து அவர்கள் இருவருக்கும் எம் நெஞ்சம் நிறை வணக்கமும், நன்றியும், பாராட்டும், என்றென்றும்!

“சீர் பெறும் கலைஞர், சித்திர கவிஞர், பக்த குருமார் ஈன்ற பழநாடு” எனப் புகழப்படும் நமதூர் இன்று உம்மால் “உத்தம நல்லாயன் ஈன்ற பழநாடு” என புகழப்படுகிறது. நமதூரின் முதல் பொறியியளாரான உம் தந்தை நம் உதயதாரகைச் சங்கத்தின் தலைவராக 1931 ஆம் வருடத்தில் சிறப்புடன் செயல்பட்டு அரும் பணிகள் ஆற்றினார். தந்தை வழிநின்று நமதூருக்கு பெரும் பெருமை சேர்க்கும் தமையரான உம்மை வேம்பாற்று வம்சம் என்றும் மறவாது.  

எழுகடற்றுரையின் முதற்றுரையாம் வேம்பாற்றின் எட்டாம் குருவாம் தாங்கள் பாப்பரசர் ஆறாம் பவுல் அவர்களால் 1973 ஆம் வருடம் ஜனவரி  6 ஆம் திகதியன்று குருவாக திருநிலைப் பெறும் பேற்றினைப் பெற்றீர்கள். நீவீர் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் ஏழாம் ஆயர் மட்டுமல்ல, மாறாக நம் பரத குலத்தின் ஏழாவது ஆயரும் நீரே! என்பதில்; எமக்குப் பெரும் மகிழ்ச்சியே!

தண்டமிழ் நாட்டில் செந்தமிழ் விளங்கும் இவ்வூரில் பிறந்த தாங்கள் இலங்கை தேசத்தில் தமிழ் ஆயராக பணி செய்வதன் மூலம் தமிழன்னைக்கு நிம்பவாசிகள் சூட்டிய மணி மகுடத்தில் நீரும் ஓரு நித்திலமாக திகழ்கிறீர் என்பதில் சிறு மணியளவிலும் ஐயப்பாடில்லை.

எம் ஞான மேய்ப்பரே! நீவீர் கொழும்பு மாநகரில் பணிசெய்தாலும்; நமதூரையும், வேம்பாற்று உறவுகளையும் என்றும் மறந்ததில்லை என்பதை யாம் அறிவோம். எனினும் நமதூரையும், நம்பதியையும், நம்மக்களையும் இறைவன் அரவணைத்துக் காத்திட உம் அன்றாட செபத்தில் எமக்காக என்றும் இறைஞ்சுவீர்.

                                             இவண்:

தங்களின் திருக்கர ஆசீர் பெற ஆசிக்கும்,

                       நிம்பை உதயதாரகை சங்கத்தினர்,
                 வேம்பாறு, தமிழ்நாடு, இந்தியா

27.5.2012 
     
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com