Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

மத்தி மீன்கள் என்னும் சாலை மீன்

சிக்கன், மட்டன் உணவுகளை விட மீன் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம்.

இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள் என்னும் சாலை. இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.

100 கிராம் மத்தி மீனில் உள்ள சத்துக்கள்

புரதச்சத்து – 20.9 கிராம்

கொழுப்பு சத்து – 10.5 கிராம்

சாம்பல் சத்து – 1.9 கிராம்

நீர்ச்சத்து – 66.70 கிராம்

மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.

மத்தி மீனில் விட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது.

மத்தி மீனில் விட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்து கழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது.

இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மூரை - Sea Urchin

தமிழக தென்பகுதி கடலோரத் தேரிகளில் காணப்படும் முள்ளிப்பூ போன்ற உருவம் கொண்ட கடல் உயிரினம்மூரை. முள்பந்து போன்ற இதன் உருவம், முள்ளம்பன்றியை நினைவுபடுத்தக்கூடியது. ஆங்கிலத்தில் Urchin என்ற பெயர் மூரைக்கு வந்தது இதனால்தான்.

மூரைகளில் ஏறத்தாழ 200 இனங்கள் இருக்கின்றன. கறுப்பு, சிவப்பு, பழுப்பு, இளஞ்சிவப்பு, ஊதா என பலவகை நிறங்களில், பல வடிவங்கள் மற்றும் அளவுகளில் இவை காணப்படும். சிரட்டை முதல் தேங்காய் அளவிலான மூரைகள் உள்ளன. பனிக்கடலான துருவக் கடல்களைத் தவிர மற்ற எல்லாக் கடல்தரைகளிலும் மூரையைப் பார்க்க முடியும்.சகதி, பார்களில் இவை அதிகம் தட்டுப்படும்.

மூரைகளின் உடலைச்சுற்றி முள்கள் காணப்படும். இவை அசையக் கூடியவை. மூரையை ஒருவர் தொட்ட மாத்திரத்தில் அந்த இடத்தை நோக்கி முள்கள்சிலிர்க்கக் கூடியவை. உடலின் மேல் பகுதியில் இருக்கும் முள்கள் கீழ்நோக்கி வரவர சிறிய முள்களாக மாறும். 

மூரையின் முள்கள் மூரையை பாதுகாப்பது மட்டுமின்றி, மெதுவாக இடம்விட்டு இடம் நகரவும், உருமறைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. கடல்பார்களை மூரை ஒட்டிப்பிடித்துக் கொள்ளவும் முட்கள் பயன்படுகின்றன. மூரையின் முறிந்த முட்கள் மீண்டும் வளரக்கூடியவை. அதிக சேதம் ஏற்பட்டால் மட்டுமே முட்கள் மீண்டும் வளராது. முள்களின் முனையில் நகம் போன்ற அமைப்பும் உண்டு.

மூரையின் உடல் சுண்ணாம்புபோன்ற கடினத் தகடால் ஆனது. சிரட்டையைவிட சற்று தடிமன் குறைந்த தகடால் மூரை மூடப்பட்டிருக்கும். முட்களைத் தவிர நீண்ட குழாய் போன்ற கால்களும் மூரைக்கு உள்ளது. இந்த உறிஞ்சுக் கால்கள் மூலம் மூரை நகரவும், தன்னைச் சுற்றியுள்ள கடல்நீரில் மிதக்கும் உணவுத் துணுக்குகளை உறிஞ்சி உணவாக்கவும் செய்கிறது. உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இந்த உறிஞ்சுக்கால்கள் உதவுகின்றன.

மூரையின் வாய் அதன் அடிப்பகுதியிலும், மலத்துளை உடலின் மேற்பகுதியிலும் காணப்படும். இதன் வாய், அரிஸ்டாட்டிலின் விளக்கு என வித்தியாசமாக அழைக்கப்படுகிறது. 5 பற்கள் கொண்ட தகடு போன்ற வாயால் மூரை உணவை உட்கொள்கிறது. சிப்பி போன்றவற்றின் தோடுகளை உடைத்து உண்கிறது. மூரைகள் ஏறத்தாழ 30 ஆண்டுகாலம் உயிர்வாழக்கூடியவை, செங்கடல் மூரை இனம் 200 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது.

மூரைகள் கூட்டமாக கடல்பார்களில தங்கும். இது ஓர் இரவு நடமாட்ட விலங்கு.பகலில் பார் இடுக்குகளில் மறைந்திருந்து இரவில் இவை இரை தேடி வெளிவரும். ஒளியை விரும்பாத மூரை, இருள் மற்றும் நிழலைத் தேடி ஒதுங்கும். ஒரே பாரில் குடியிருக்கும் மூரைகள் பையப் பைய பாரை அரித்து தாங்கள் ஒளிந்து வாழ ஓர் இருப்பிடத்தைத் தேடிக் கொள்ளும்.

மூரை ஓர் அனைத்துண்ணி. கடல்பாசிகள், கடற்புல், பூண்டுகளைத் தவிர இறந்த நண்டு, மீன், சிப்பி, கடற்பஞ்சு, கொட்லாஸ் போன்றவை இதன் முதன்மை உணவு. ஒரு மூரை இன்னொரு மூரையை உண்ண வல்லது. இரை இருப்பதை மோப்பத்தால் அறிந்து ஒரே நேர்க்கோட்டில் பயணித்து இரை இருக்குமிடத்தை மூரை அடையும்.

மூரையின் முதன்மை எதிரி நட்சத்திரமீன் மற்றும் கிளாத்தி மீன்கள்தான். நட்சத்திர மீன் மூரையை ஆரத்தழுவி அதை இரையாக்கிக் கொள்ளும். கிளாத்தி மீன் வேகவேகமாக மூரையின் முள்களை நொறுக்கி, ஓட்டை உடைத்து உணவாக்கிக் கொள்ளும். ஒரு பார்க்கடல் செழித்துகாணப்படுகிறது என்பதற்கான அடையாளங்களில் ஒன்று மூரை. மூரை மாசற்ற கடல்களில் வாழக்கூடியது. மூரை இருக்குமிடம் பார் செழிக்குமிடம்.
கடல் மாசுபட்டால் அங்கு முதலில் இறக்கும் உயிரினங்களில் ஒன்று மூரை. அதேப்போல மூரை உயிர் வாழ சிலவகை ஒட்டுண்ணிகள் கண்டிப்பாக வேண்டும். இந்த ஒட்டுண்ணிகளை நீக்கினால், முள்கள் உதிர்ந்து மூரை மெல்ல மடிந்து போகும். மூரையின் உள்ளிருக்கும் அரைதிரவ மஞ்சள்நிற பொருள் உண்பதற்கு மிகவும் ஏற்றது. கடலில்மிதக்கும் படகில் இருந்தபடி மூரையை பிளந்தால் அந்த வாசனைக்கு சுறா வர வாய்ப்புண்டு. கரையில் தீமூட்டி மூரையை சுட்டுத்தின்னும் பழக்கம் கடலோரத்தில் உண்டு.

கடலடியில் மூரையை ஒருவர் தொட்டதும் மூரை எச்சரிக்கையடைந்து பாரை இறுகப் பற்றிக் கொள்ளும். பிறகு கடப்பாரையில் அதை உடைத்து பிய்த்தெடுக்க மட்டுமே முடியும். மாறாக மூரையைத் தொட்டவுடன் தூக்கினால் எளிதாக அதை பாரில் இருந்து அப்புறப்படுத்தி விடலாம்.

மூரையின் முள்களுக்கு மூராங்குச்சி என்ற பெயர் உண்டு. இந்த மூராங்குச்சிகளை சிலேட்டுப் பலகைகளில் எழுதுகோலாகப் பயன்படுத்த முடியும். கடற்கரை சிற்றூர்களில் அ, ஆ, இ என சிறார்களுக்கு எழுத்தறிவித்த பெருமை மூரையின் முள்களுக்கு உண்டு.
- மோகன ரூபன் 
Thanks: www.mohanareuban.blogspot.in

வேம்பாறு புனித அந்தோனியார் ஆலய பொன்விழா அழைப்பிதழ்




இரத்த பூமி - பாகம் 6


AANAA MAALUM KULLUM INDA ESKITH

நாயக்க படைகள் எதிர்பாரின்றி புன்னை நகரை சுற்றி வளைத்தது. உயிர் பிழைத்து கிடந்த இரப்பாளியின் கொள்ளையர்களும் இணைந்து கொள்ள வெறியாட்டம் துவங்கியது. எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் இந்த நிமிடத்திலிருந்து எதுவும் நடக்கலாம் தங்களை காக்கும் தலைவன் கொற்கை கோ வின் நிலைமை என்ன அவரில்லாத நிலையில் தங்களுக்கு ஏற்படப்போகும் முடிவை நினைத்து கோட்டைக்குள் மக்கள் பீதியில் உறைந்து போய் இருந்தார்கள்.

கொற்கையை ராயன் தூக்கிக்கொண்டு பாண்டியம்பதி அரண்மனையை நோக்கி ஓடி வரும் போதே பரத்திகளின் அழுகுரலால் கோட்டையே மையானமாகி போனது வாசலில் நின்றிருந்த கொற்கை கோ வின் தாயார் வள்ளி நாச்சியம்மை என் ராசாவுக்கு என்னாச்சி என ஒரு நிமிடம் உடைந்து போனவர்கள் மக்களை சோர்வடைய விடக்கூடாது என்பதால் தன் பதட்டத்தை அடக்கி சின்னவருக்கு சின்ன காயம் தான் நான் பார்த்துக்கிறேன் என்றபடி உள்ளே போனார்கள் மற்றபடி கொற்கை கோ வின் நிலைமை என்ன எவருக்கும் எதுவும் தெரியாது.

கோட்டையின் மேற்கே அமைந்திருந்த பரதவரின் குடிசைகளை, வீடுகளை அடித்து உடைத்து நாசமாக்கி தீயிட்டு கொளுத்தி குதுகலத்தோடு கொள்ளையர்கள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர் ஆனாலும் கோட்டை வாசலை தாக்கி உள்ளே நுழைய பயந்தே இருந்தனர். கோட்டை தாக்குதலை தொடங்க இரப்பாளியின் வருகைக்காக காத்திருந்தனர்.

வானுயர தீ கொழுந்து விட்டெறிய கோட்டைக்கு மேலே மதிற்சுவரின் நடைவாரங்களில் பதுங்கியிருந்த பரதவ மறவர்கள் அனைவரும் பகைவரின் அட்டூழியம் கண்டு சினந்து போய் கிடந்தனர் அங்கே தான் காத்தவராயனும் காணியாளனும் இருந்தனர்.

கொற்கை கோ களமாடியிருக்க கூடாது கொட்டின் கோ போல அவரும் கட்டளையிட்டு கொண்டு கோட்டையில் இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது பாண்டியனாரின் திட்டங்கள் அனைத்தும் அறிந்தே செயல்படுத்தினார் கொற்கை கோ. ஆனால் கொற்கை இல்லாத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன நமக்கு ஒன்றுமே தெரியாது. கேப்டன் க்காவது ஏதாவது தெரியுமோ என்னவோ மூர்படை இன்னும் வருவதாக சொல்கிறார்கள். என்ன செய்வதென்று ஒன்றுமே முடியாத நிலையில் உள்ளோமே கோட்டைக்குள்ளே நாம சமாதி தான் போல என காணியாளன் விரக்தியில் விசும்பினான்.

விடு நாச்சியம்மை பெரிய மருத்துவச்சி தெரியுமா வெட்டுப்பட்ட கையை கொடுத்தாலே ஒட்டி தந்துருவாங்க. கொற்கை நாளை காலைக்குள் பழைய கொற்கையாக வருவார் என நம்பிக்கைகூறியவன், நீயே இப்படி பயந்தால், பெண்பிள்ளைகளும் குழந்தைகளும் எப்படி..?  ஆமாம் குழந்தைகள் குமரிகள் எல்லோரும் எங்கே ஒரு சனத்தையும் இன்றைக்கு பார்க்க முடியவில்லையே? எனக் கேட்டான் காத்தவராயன்.

எனக்கென்ன தெரியும் ஏதோ ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்னு கொற்கை சொன்னார். அதானே நேற்று இரவே கடல்வழி கடத்தியிருப்பார். இல்லை நமக்கு தெரியாமலா இருக்காது. கோட்டைக்கு வெளியே அப்போது எழுந்தது காட்டுக் கூச்சல் இருவரும் கோட்டை மதிற்சுவரின் மேலே பதுங்கி இருந்த மற்றவர்களை கடந்து கிழக்கு கோட்டை வாசல் பக்கமாக தவழ்ந்தபடி ஊர்ந்து சென்றனர். அங்கே... கடற்கரையில் வரிசை வரிசையாக 10, 15 பாய்மரக் கப்பல்கலில் கொள்ளையர்கள் வந்து இறங்கி கொண்டிருந்தார்கள்.

காணியாளன் கருவினான் ஒரு ஊரை பிடிக்க உலகத்தையே திரட்டிவிட்டு வந்திருக்கானா நாயக்கன். விவரம் தெரியாம பேசாதே கால காலமா இதுதான் நடக்குது. எங்க பூட்டா சொல்லியிருக்காரு வடக்க கைலாச மலையிலையிருந்து கன்னியாகுமரிக்கு தெக்க குமரி நாடு வரைக்கும் பாண்டியமார் நாமதான் இருந்தோமாம். அப்போ மேக்கால இருந்து வெள்ளை காட்டானுவ ஆயிரக்கணக்கா வந்து வந்து நம்ம இடத்தையெல்லாம் புடிச்சிட்டானவளாம் நம்ம பாண்டிமார் சரித்திரங்களை பாண்டவர்னு மாத்தி அயோத்தி பரவமார் நம்மளை விரட்டியே வுட்டுட்டானுவளாம்.

இப்படித்தான் ஒருத்தனை பத்து பெரு சேர்ந்து அடிக்கிறதுதான் கோழை பயலுவ வீரம் அதான் பேசாதே நடப்பதை கவனி. அவனை அமைதியாக்கினான் ராயன். கையில் தீப்பந்தங்களோடு படைசூழ ஒரு கூட்டம் கடற்கரையிலிருந்து இரப்பாளி... இரப்பாளி.... இரப்பாளி.. என கூக்குரலிட்டபடி மேலேறி வந்தது. நாயக்க தளபதி ஒருவன் கட்டி அனைத்து வரவேற்றான்,....... அது... இரப்பாளி, ஆறடி உயரத்தில் மெல்லிய தேகத்தோடு ஒடுங்கிய கன்னத்தோடு பெரிய பெரிய புருவமும், மீசை தாடியுமாய் இருந்தான். ஆனால் இருட்டிலும் அவனது பொடி கண்களில்தெரிந்த வெறி அவனை ஒரு கொள்ளைகாரன் என்பதை விட கொலைகாரனாகவே காட்டியது.
கொள்ளைக்கார தளபதிக்கே உருவான கரடுமுரடு உடையும் தொப்பியும் அணிந்திருந்த அவனது கையிலிருந்த வாள் மட்டும் நாலடி நீளமாக இருந்தது. இருபக்கமும் கூறான வாள் வெட்டி வெட்டி மின்னியது. பக்கத்தில் அவனைவிட நெட்டையாய் ஒருத்தன் நாயக்க தளபதி பேசுவதை இரப்பாளிக்கும் இரப்பாளி பேசுவதை நாயக்கனுக்கும் சொல்லி சொல்லி புரிய வைத்து கொண்டிருந்தான்.

இராயா இவன் யாரு... மெதுவாக கேட்டான். இவன் தான் மூர்படை தளபதி போல இலை தாடியாம் இவன் பேரு அரபி நாட்டு துலுக்கன் போல இருக்கான் என்றான் ராயன். பதிலுக்கு காணியாளன் சொன்னான் பாத்தா பிச்சைகாரன் போல இருக்கான் ஆனா சொளவு தாடில வச்சிருக்கான். இவனா தளபதி இராயன் அவனை அதட்டி இன்னும் கவனமானான். அந்த கூட்டம் அப்படியே இவர்கள் மறைந்திருந்த கோட்டை மதிற்சுவரின் கீழே கிழக்குவாசல் பக்கம்வந்து வாசல் கதவை தடவிபார்த்து கோட்டையின் கிழக்கு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வலைகளை பற்றி அறியாது அதன் மேலேயே நின்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர்.

திடீரென்று இரப்பாளி நாயக்க தளபதி யை பார்த்து சத்தமிட்டான்

AANAA MAALUM KULLUM INDA ESKITH 
RO .... KUL INDA MUDIR

அதே வேகத்தோடு நெட்டையனும் சத்தமிட்டான். எனக்கெல்லாம் தெரியும் நீ மூடு இல்லை உன் அரசன் கிட்ட போ.

NESIL KULLUM PEERANKI 
PAATH KULLUM SUKAL FESUF SUPA 
INSA ALLAA KULLUM NAFAR NOM

மீண்டும் நெட்டையன் சொன்னான். எல்லா பீரங்கியையும் கரையிலே இறக்கு எல்லாம் காலையில் தான் நிம்மதியாக படுத்து தூங்குங்கள். கூட்டம் கலைந்து கடற்கரை நோக்கி போனது. ஆங்.. இப்போ சொல்லு , காணியாளன் கேட்டான். உள்ளாலையே பிரச்சனை வந்தாச்சு நாயக்கன் ராத்திரியே வாசலை உடைக்க சொல்லுறான். துலுக்கன் காலையில பாத்துக்கலாம்னு சொல்றான். பயலுவ உள்ள வந்து சாகுறதுக்கு துடிக்கிற துடிப்பை பாரு.

பக்கத்தில் பதுங்கி இருந்த பரதவன் இளைஞன் ஒருவன் கேட்டான். ஏம்பா... ரெண்டு பேருக்கும் பயமே கிடையாதா..? சும்மா கிண்டல் பண்ணிக்கிட்டு..

ஓ... செட்டியா....... மருமவனே ! எங்க மச்சான் வீரசெட்டி மவனா நீ, தொடை நடுங்கி பயவுள்ளா பயந்தா என்ன நடக்கும் பயப்படலைனா என்ன நடக்கும்...? நடக்கிறது நடக்கத்தான் செய்யும்...பாரு நேத்தே சொட்டய முறிச்சு நாயக்கமாரை போட்டிருக்கனும் இந்த அவசரக்குடுக்கை தீவைச்சிவுட்டுட்டான். சரி, இன்னைக்கு கொள்ளைகாரன்வளை மொத்தமா வெட்டி சாய்கும் போது நாயக்கன் வந்துட்டான் இருக்கிறது 500 பேரு வாரது 5000 பேரு, அதான் உயிரை கப்பாத்தனும்தான் உடனே கோட்டையை திறக்க சொன்னாரு, அதுக்குள்ளாடி அவரை வெட்டி சாச்சிட்டானுவ… ஐயோ..! சின்னராசா.. என்னாச்சி, செட்டி பதறினான். ஏ.. ஏ.. நீ சத்தம் போடாதே ஒன்னுமேயில்லை… வருவான், நாளைக்கு வருவான். எடா, பாண்டி பரவமாரை அழிக்க நினைச்சவமெல்லம் போயிட்டனுவ இலத்தாடி யாருடா…

சரி மருமவனே இங்கேயே இருங்க நாங்க கீழே போய் பார்க்கிறோம் என்றபடி இருவரும் நகர்ந்தனர். தூயதந்தை யை பார்த்தால்தான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி தெரியும் என்பதால் இருவரும் அவரை காண ஏசு சபை அலுவலகம் சென்றனர் அங்கே கோட்டின் கோவின் மனைவி குழந்தைகளை பரதவ பெண்களோடு கலந்திருக்க தூய தந்தை சொன்னதை மறுத்த கொட்டின் கோ தனக்கு எந்த ஆபத்தும் விளையாது. நடந்தால் போர்சுகல் அரசு சும்மா விடாது என அரசியல் பேசிக் கொண்டிருந்தார். நாளை நடக்க போகும் விபரீதம் அறியாமல்…….

(தொடரும்)
கடற்புரத்தான் 

மீன் குழம்பு


தேவையானவை:

சுத்தம் செய்த மீன் & அரைக்கிலோ
மிளகாள்தூள் & மூன்று தேக்கரண்டி
தனியாத்தூள் & ஒரு தேக்கரண்டி
தேங்காய் & அரை மூடி
சின்ன வெங்காயம் & இருபது
சீரகம் & அரைத் தேக்கரண்டி
கடுகு & அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை & ஒரு கொத்து
எண்ணெய் & நான்கு தேக்கரண்டி
புளி & எலுமிச்சைம்பழம் அளவு
உப்பு, மஞ்சள் & தேவையான அளவு

செய்முறை:

தேங்காயைத் தனியே நன்றாக அரைக்கவும். சின்ன வெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைக்கவும்.

சின்ன வெங்காயத்தில் நான்கை மட்டும் தனியே வட்ட வட்டமாக அரைக்கவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெங்காயம், கருவேப்பிலையை போடவும். வெங்காயம் சிவந்து வந்ததும் புளி கரைத்த நீரை ஊற்றி உப்பு, மசாலா ( தனியா, மிளகாய்) தூள்களைச் சேர்க்கவும்.

தேங்காய், அரைத்த வெங்காயம், சீரகத்தையும் சேர்க்கவும். மீன் துண்டுகளைப் போட்டு மூடி வேகவிடவும். குழம்பு கெட்டியாகி எண்ணெய் மிதந்ததும் இறக்கவும்.

மீன் குழம்பை அதிகம் கிண்டி விடலாகாது. மீன் கரைந்து குழம்பெல்லாம் முள்ளாகிவிடும்.

மீனவருக்கு கிடைத்த ரூ .672 கோடி மதிப்புள்ள 34 கிலோ முத்து


பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பல்வான் என்ற தீவில் பெயர் வெளியிடப்படாத மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, கடலில் புயல் வீசத்தொடங்கியபோது பாதுகாப்பிற்கு நங்கூரத்தை வீசியுள்ளார். ஆனால், அந்த நங்கூரம் பாறை ஒன்றில் சிக்கியுள்ளது.

நீண்ட நேரம் போராடி நங்கூரத்தை வெளியே எடுத்தப்போது அதில் மிகப்பெரிய முத்து ஒன்று சிக்கியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனாலும், அந்த முத்துவின் மதிப்பு பற்றி அறியாத அவர் அதனை ஒரு ராசிக்கல்லாக வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.

ஒரு மாதம் இரண்டு மாதம் அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக அந்த அரிய முத்துவின் மதிப்பு தெரியாமல் அதனை வீட்டிலேயே வைத்துள்ளார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவர் வசித்து வந்த மரத்தால் செய்யப்பட்ட வீடு திடீரென தீவிபத்திற்கு உள்ளானதும் அந்த முத்துவை எடுத்துக்கொண்டு மற்றொரு வீட்டிற்கு குடி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, அப்பகுதியில் வசித்து வந்த சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் எதிர்பாராத விதமாக இந்த முத்துவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து விலையில்லா கற்கள் பற்றி ஆய்வு செய்து வரும் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 34 கிலோ எடையுள்ள அந்த முத்துவை ஆய்வு செய்தபோது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் உலகிலேயே மிகப்பெரிய முத்து இது தான் என தெரியவந்தது. இதன் இப்போதைய மதிப்பு 76 மில்லியன் பவுண்ட்(ரூ.672 கோடி) என தெரியவந்துள்ளது.

கடந்த 1934ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 6.4 கிலோ எடையுள்ள ‘அல்லா’ என்ற பெயருடைய முத்து தான் உலகின் பெரிய முத்து என பெயர் பெற்றுருந்தது. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டு முத்து அந்த பெயரை முறியடித்து தற்போது நியூயோர்க் நகரில் உள்ள கண்காட்சியில் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் தொண்டிப் பத்து பாடல்கள் தொகுப்பு


நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள தொண்டிப் பத்து பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.


171.தலைவன் கூற்று


திரைஇமிழ் இன்னிசை அளைஇ அயலது

முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறு இசைக்கும்

தொண்டி அன்ன பணைத்தோள்.
ஒண்தொடி அரிவைஎன் நெஞ்சுகொண் டோளே.


172.தலைவன் கூற்று


ஒண்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே

வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்

உரவுக் கடலொலித் திரையென
இரவி னானும் துயிலறி யேனே.


173.பாங்கன் கூற்று


இரவி னானும் இன்துயில் அறியாது

அரவுறு துயரம் எய்துப தொண்டித்

தண்ணறு நெய்தல் நாறும்
பின்னிரும் கூந்தல் அணங்குற் றோரே.


174.தலைவன் கூற்று


அணங்குடைப் பனித்துறைத் தொண்டி அன்ன

மணம்கமழ் பொழில்குறி நல்கினள் நுணங்கிழைப்

பொங்கரி பரந்த உண்கண்
அங்கலிழ் மேனி அசைஇய எமக்கே.

175.தலைவன் கூற்று


எமக்கு நயந்து அருளினை ஆயின் பணைத்தோள்

நன்னுதல் அரிவையொடு மென்மெல இயலி

வந்திசின் வாழியோ மடந்தை
தொண்டி அன்னநின் பண்புபல கொண்டே.


176.தலைவன் கூற்று


பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்

தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்தொடி

ஐதுஅமைந்து அகன்ற அல்குல்
கொய்தளிர் மேனி கூறுமதி தவறே.


177.தோழிக்கூற்று


தவறிலர் ஆயினும் பனிப்ப மன்ற

இவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு

முண்டக நறுமலர் கமழும்
தொண்டி அன்னோள் தோள்உற் றோரே.


178.தலைவன் கூற்று


தோளும் கூந்தலும் பலபா ராட்டி

வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்

குட்டுவன் தொண்டி அன்ன
எற்கண்டு நயந்துநீ நல்காக் காலே.

179.தோழிகூற்று


நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப

அலவன் தாக்கத் துறைஇறாப் பிறழும்

இன்னொலித் தொண்டி அற்றே
நின்அலது இல்லாது இவள்சிறு நுதலே.


180.தோழிகூற்று


சிறுநனி வரைந்தனை கொண்மோ பெருநீர்

வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்

பறைதபு முதுகுருகு இருக்கும்
துறைகெழு தொண்டி அன்னஇவள் நலனே.


கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் - நாகப்பட்டினம்

தமிழ்நாட்டிலுள்ள சிவாலயங்களில் குறிப்பாகத் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்களில் மூலட்டானத்தைச் சுற்றி அமைந்துள்ள திருச்சுற்றில் திகழும் திருமாளிகைப்பத்தி எனப்பெறும் சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார்கள் தம் திருவுருவச் சிலைகள் வரிசையில் திகழ்வதை நாம் காணலாம். ஒவ்வொரு நாளும் அத்திருக்கோயில்களில் மூலவராகத் திகழும் லிங்கத் திருமேனிக்கு பூஜைகள் நிகழும்போது இந்த நாயன்மார்களின் பிரதிமங்களுக்கும் வழிபாடுகள் நடத்தப்பெறும். அத்திருக்கோயிலின் சிவாச்சாரியார் பூஜைகள் செய்வார். 

அறுபத்துமூவர் திருநட்சத்திர நாட்களிலும், ஆண்டுப் பெருவிழாவின்போது ஒரு குறிப்பிட்ட நாளிலும் (அறுபத்து மூவர் திருவிழா) சிறப்பு பூஜைகள் நடத்தப்பெறுவதோடு அவர்தம் செப்புத் திருமேனிகளை வீதி உலாவாக எடுத்து வருவதும் நம் மரபுப் பெருமையாகும். சைவாகம நூல்கள் இந்த அடியார்களுக்கு நாள் வழிபாடுகள் நிகழ்த்துவது பற்றியும் திருவிழாக்கள் நடத்துவது பற்றியும் சிறப்புற எடுத்துரைக்கின்றன. 

சேக்கிழார் பெருமானார் பெரிய புராணத்தில் கூறியுள்ள அறுபத்துமூவர் வரலாற்றையும் நாம் ஆழ்ந்து நோக்கும்போது அவர்கள் அந்தணர்களில் தொடங்கி தீண்டத்தகாதவர் எனப் பண்டு கருதப்பெற்ற குடிகள்வரை அனைத்து சாதிகளையும் சார்ந்தவர்கள் என்பதை நாம் அறியலாம். அவர்கள் ஒழுகிய நெறியாலும், பக்தியாலும், அவர்தம் வாழ்வாலும் அனைவரும் திருக்கோயில்களில் தெய்வமெனப் போற்றப் பெறுகின்றனர். ‘சாதிகள் நெறியில் தப்பா’ என்பது சேக்கிழார் வாக்கு. சாதிகளைக் கடந்து சிவநெறியில் திளைக்கும்போது வேறுபாடுகள் மறைந்து மானுடநெறி தழைக்கும். இதைத்தான் அந்த அருளாளர்கள் நமக்குக் கற்பித்துச் சென்றுள்ளனர்.

‘விரிதிரைசூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்’ எனச் சைவாகமம் போற்றுகின்ற சிவாச்சாரி யார் குலத்துதித்த சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் பாடியிருக்கிறார் என்பதை நோக்கும்போது நாகப்பட்டினத்தில் பிறந்த அதிபத்தர் என்ற பரதவரின் பெருமை எவ்வளவு உயர்வுடையது என்பதை நாம் அறியலாம்.சோழநாட்டு நாகப்பட்டினத்தில் பரதவர் குலத்தில் தோன்றியவர் அதிபத்தர். மீனவர்களின் தலைவராய்ச் சிவ பக்தியில் சிறந்த இவர் நாள்தோறும் கடலில் மீன் பிடிக்கும்போது வலையில் அகப்படும் முதல் மீனை எடுத்து ‘இது சிவனுக்கு’ என்று அன்பினால் கடலிலேயே விட்டுவிடுவார். இச்செய்கையினின்று அவர் என்றும் தவறியதில்லை. 

இவ்வாறு இதுவே சிவப்பணி என உறுதியுடன் அவர் வாழ்ந்தபோது கடலில் மீன்கள் அகப்படாமல் பஞ்சமேற்பட்டது. பல நாட்களில் ஒவ்வொரு மீனே வலையில் அகப்பட்டது. அதனைத் தன் நியமப்படியே கடலிலே விட்டு வந்தார். இவ்வாறு ஒழுகும் நாளில் ஒருநாள் இவருடைய ஏவலர்களாகிய பரதவர்கள் கடலில் வலை வீசியபோது நவமணிகள் பதிக்கப்பெற்ற பொன்னால் செய்யப்பட்ட தங்க மீனொன்று அகப்பட்டது. பரதவர்கள் அதனை கையிலெடுத்து ‘ஒரு மீன் பிடித்தோம்’ என்றனர். தொடர்ந்த அவர்களுடைய வறுமை நிலையில் இது ஒரு பொக்கிஷமெனக் கிடைத்தது. ஆனால், அதனைக் கையில் வாங்கிய அதிபத்தரோ ‘‘இது என்னை ஆட்கொண்டருளிய சிவனுக்கே உரியது” என்று கூறி அதனைக் கடலிலேயே சேர்ப்பித்தார். 

அப்போது சிவபெருமான் இடபத்தின் மீது உமையம்மையோடு காட்சி தந்து அவருக்கு அருள்பாலித்தார். சிவப்பேறு பெற்ற இவர் படவர் எனப்பெறும் பரதவர் குலத்தில் உதித்தவர் என்பதால் இவர் பிறந்த படவர் குலத்தைப் பின்னாளில் ‘சிவன் படவர்’ எனக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. சிவன் படவர் என அழைக்கப்பெற்ற அச்சொல் காலப்போக்கில் மருவி செம்படவர் என்றாயிற்று.

நாகப்பட்டினத்துக்கு அருகே திருக்கோளிலி என்ற தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் ஒன்றுள்ளது. இவ்வூரினை திருக்குவளை எனத் தற்காலத்தில் அழைப்பர். திருக்கோளிலி சிவாலயத்து மகா மண்டபத்தின் கிழக்குச் சுவரில் மூன்றாம் ராஜராஜ சோழனின் நான்காம் ஆட்சியாண்டு (கி.பி.1219) கல்வெட்டொன்று உள்ளது. அதில், ‘‘ஸ்வஸ்தி ஸ்ரீதிரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 4வது மார்கழி மாதத்தொரு நாள் உடையார் திருக்கோளிலி உடையார் கோயிலில் முன்னாளில் சிவன் படவரில் ஆலன் எழுந்தருளுவித்த அதிபத்த நாயனார்க்கு திருமுகப்படி மாற்றுக்கு இவன் சாதியார் பக்கல் இறந்து பெற்ற காகாய் காலசேரி அய்யனைப்பட்டன் மகன் தாமோதிரப்பட்டன் பக்கல் நெல் பொலிசைக்கு குடுத்த காசாய் இவன் ஒடுக்கின காசு 2100. 

இக்காசு இரண்டாயிரத்தொரு நூறும் கைக்கொண்டு திருப்படிமாற்றுக்கு நாள் ஒன்றுக்கு இருநாழி அரிசி அமுதுபடிக்கு அளப்போமாகவும் நாங்கள் இப்படி செய்வோமாக சம்மதித்தோம்” என்று கூறுப்பெற்றுள்ளது. சிவன் படவர்(செம்படவர்) இனத்தைச் சார்ந்த ஆலன் என்பான் திருக்கோளிலி கோயிலில் அதிபத்த நாயனார் என்ற நாகப்பட்டினத்து மீனவருக்கு உருவச் சிலையினை முதலில் எடுப்பித்தான். பின்பு (கி.பி.1219) தன் சிவன்படவர் இனத்து மக்களிடமிருந்து யாசகமாக 2100 காசுகளை வசூல் செய்து அதனைக் கொண்டு அக்கோயிலில் ஓர் அறக்கட்டளையை உருவாக்கி, அத்தொகைக்கு தொடர்ந்து கிடைக்கும் வட்டியிலிருந்து தான் முன்னர் இக்கோயிலில் அமைத்த அதிபத்த நாயனார் திருமேனிக்கு நாள்தோறும் அமுதுபடியோடு வழிபாடு செய்ய ஏற்பாடுகள் செய்ததை இக்கல்வெட்டு விரிவாகக் கூறுகின்றது. செம்படவர் என்ற சொல் பண்டு சிவன்படவர் என அழைக்கப்பெற்றதையும் இக்கல்வெட்டுச் சாசனம் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயிலுக்குச் செல்வோர் அங்கு அறுபத்துமூன்று நாயன்மார் வரலாறும் சிற்பக் காட்சிகளாக விளங்குவதைக் காணலாம். அவ்வரிசையில் 43ம் காட்சிக்கு மேலாக ‘அதிபத்தர் கதை’ என்ற சோழர்கால கல்வெட்டுப் பொறிப்பு காணப்பெறுகின்றது. அக்காட்சியில் ஒருபுறம் சங்கு, மீன், நண்டு ஆகியவற்றுடன் கடலொன்று திகழ்கின்றது. அக்கடலில் கட்டுமரத்தின்மேல் நின்ற வண்ணம் மூன்று மீனவர்கள் வலைவீசி மீன் பிடிக்கின்றனர்.

தனை கவனித்தவாறு அதிபத்தர் நிற்கிறார். அடுத்து அவரே வலையில் கிடைத்த நவமணிகள் பதிக்கப்பெற்ற பொன்மீனை கையில் ஏந்தி, கடலில் விடுகின்றார். எதிர்புறம் இடபத்தின் மீது சிவபெருமானும் உமையம்மையும் எழுந்தருளி காட்சி கொடுக்க, அதிபத்தர் எதிரே நின்றவாறு தலைக்கு மேல் கையுயர்த்தி ஈசனையும் தேவியையும் வழிபடுகின்றார். எழிலார்ந்த இக்காட்சி நம்மை மெய்மறக்கச் செய்யும். இங்கு மூன்று நிலைகளில் அதிபத்தர் காணப்பெறுகின்றார்.

சுந்தரரும், நம்பியாண்டார் நம்பியும், சேக்கிழார் பெருமானும் இலக்கியத்தில் செப்பியுள்ள நாகப்பட்டினத்து இம்மீனவரின் வரலாறு பின்னாளில் எவ்வாறு போற்றப்பெற்றது என்பதனை கல்வெட்டுகள் வாயிலாகவும், சிற்பக்காட்சியின் மூலமாகவும் கண்டோம். உறுதியானதும் செம்மையானதும் ஆகிய பெருவாழ்வு வாழ்ந்து சிவத்தோடு இணைந்த அப்பேரருளாளர் தான் பிறந்த குலமக்களுக்கு என்றும் அழியாத ‘சிவன்படவர்’ (செம்படவர்) என்ற சிவநாமத்தையும் அருளிச் சென்றுள்ளார்.

நாகப்பட்டினத்து மீனவர்களில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுடைய ஈம ஊர்வலம் கயாரோகணசுவாமி திருக்கோயில் எனப்பெறும் நாகை நகரத்துச் சிவாலயம் வழியாகச் செல்லும்போது கோயில் முன்பாக இறந்தவரின் உடலுக்கு திருக்கோயில் மரியாதைகள் செய்யப்பெறுவது இன்றளவும் நிகழும் நடைமுறையாகும். அது சிவன் படவராகிய அதிபத்தருக்காகச் செய்யப்பெறும் மரியாதையாகும்.

நன்றி: www.kungumam.co.in

இரத்த பூமி - பாகம் 5

முத்தம்மையின் பாம்படம்

நாயக்கபடைகளுக்கு பலம் கூட்டி மீண்டும் 2000 வீரர்களை வடக்கு தெற்காக செந்தூருக்கும் தூத்துக்குடிக்கும் பாளயத்திலிருந்து அனுப்பி வைத்தான் விதாலன். கீழக்கரை குதிரைமரைக்காயர் சங்குமரைகாயர் சகோதரர்களோடு தொடர்புகொண்டு விதாலன் தாக்குதல் பற்றி நாயக்கமன்னருக்கு அவர்கள் வழியாக செய்தி அனுப்பியிருந்தார் பாண்டியனார். பேச்சு வார்த்தைக்காக மதுரையிலிருந்த போர்த்துகீசிய தலைமைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட பேச்சுவார்த்தையை புறகணித்தவர்கள் கடலிலே இரப்பாளி தாக்குதலுக்கு பயந்து வேதாளை கடல்வழி பயணத்தை விடுத்து பாண்டியனார் செய்தி அனுப்பியிருந்த மறவர்கள் துணையோடு மேற்கே பெரியகுளம் வழியாக மலைதாண்டி கொச்சினுக்கு பயணப்பட்டனர்.

இரவோடு இரவாக சாய்க்கப்பட்டிருக்க வேண்டிய நாயக்கபடை தப்பியது பின்னடைவுதான் என்றாலும் பரணியாற்று வெள்ளம் தாண்டி நாயக்கர் படை வரமுடியாது என்பதனால் தற்போதைய மூர்களின் தாக்குதலை எதிர்நோக்கியே புன்னை பரதவர்கள் காத்திருந்தனர்.

காலையிலிருந்து புன்னை கரையோரம் கடற்கரை ஊர்பரதவர்களும் பட்டங்கட்டிகளும் வந்திறங்கிய வண்ணம் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் கோட்டைக்குள்ளே உணவு பரிமாறப்பட்டு தூரத்தில் காத்திருக்க மீண்டும் அனுப்பி வைத்தனர், கூட்டம் கூட்டமாக புன்னைகரையின் வடக்கு தெற்கு கடலோரங்களின் தாளை புதர்களுக்குள்ளும் மணல் மேடுகளுக்குள்ளும் மறைந்துகிடந்தனர்.

இந்த முறை போர்ச்சுகல் படை மதுரை சென்றுவிட்டதால் பரதவர்களே படைவீரர்களாக மாறியிருந்தனர். படைகளம் முழுவதும் கொற்கைகோவின் கட்டுப்பாட்டில் இருந்தது. கொற்கைகோ, கேப்டன்கொட்டின்கோ காத்தவராயன் காணியாளன் மற்றும் போர்ச்சுகல் உடையில் பரதகுல மறவர்கள் 100 பேரும் போர்ச்சுகல் சிப்பாய்கள் 50 பேருமாக பரதவ இளைஞர்கள் 100 க்கும் அதிகமாக மொத்தத்தில் சுமார் 300 க்கு குறையாமல் இருந்தனர். அனைவருமே புதைக்க பட்டிருந்த வலைகளை தாண்டி கடலடியில் நின்றுகொண்டிருந்தனர்.

காலம் தனது காவு படலத்தை தொடர காத்திருந்தது, தூரத்தில் சின்னதும் பெரிதுமான பாய் மரக்கப்பல்கள் தென்பட்டன. மக்கள் அங்கு இங்குமாக ஓட ஆரம்பிக்க, அந்த கூட்டத்தில் சின்னராசா எங்கள கொன்னு போடுங்கன்னு நேற்று சொன்ன வீரபரத்தி முத்தம்மை தனது இடது பாம்பட காதை அறுத்து ரத்தம் சொட்ட சொட்ட ஒரு கையில் பாம்படமும் மறு கையில் காது அறுத்த கத்தியுமாய் பரதகுல பத்தினி கண்ணகியாய் வந்தாள். ஐயா சின்னராசா, இந்தாங்க பாம்படம் பரத்திமார் மானத்தையும், பரவமார் கடல்நிலத்தையும் காப்பத்துங்கய்யா என்றபடி கொற்கைகோவின் வலது கை விரல்களுக்குள் பாம்படத்தை திணித்தாள்

தன் எதிரே போர்களத்தில் இரத்தகோலத்தோடு பரத்தி முத்தம்மை ஒரு நிமிடம் ஆடிப்போனார் கொற்கைகோ. ஏதும் சொல்ல முடியாமல் யாத்தே முத்தம்மை, என்னஇது...?  போஆத்தா சண்டைக்கு நாளியாச்சி.!!

அவர் சொன்னதையும் கண்டுகொள்ளாமல், “பரம்பரை பாண்டிமார் வழக்கப்படி ஆத்தா நான் வைக்கிறேய்யா ரத்த குறி” என்றபடி கிழிந்து தொங்கிய தன் காது சதையை அழுத்தி பிடித்து இரத்தத்தை உறுவி எடுத்து கொற்கைகோ நெற்றியிலே தேய்த்து சரித்திரம் சொல்லும் ராசா.....! உங்க வெற்றியை னு சொல்லியபடி அவள் வைத்த குறியால் வெற்றி கிடைத்துவிட்டதாக எண்ணிக் கொண்டு பதட்டமே இல்லாமல் ஆணவத்தோடு நிதானமாக கோட்டையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

கையிலிருந்த பாம்படத்தையும் இரத்தம் சொட்டசொட்டபோகும் முத்தம்மை வையும் பார்த்த கொற்கைகோ யாத்தே இந்தா பாம்படம் என்றழைத்தவர், ஏதோ நினைத்தபடி அதை அப்படியே.. தன்சீருடையை இழுத்து கழுத்துக்கு கீழே உள்ளே போட்டவர் உணர்ச்சி வசப்பட்டபடி இன்னும் வேகமானார். கொற்கைகோ கூவினார். வீரர்கள் தவிர அனைவரும் கோட்டைக்குள் சென்று வாயில்களை அடையுங்கள் சீக்கிரம். இரண்டு நாட்களாக அல்லாடி இப்போதுதான் வாடையின் வாட்டம் அறிந்து பாயை திருப்பிய இரப்பாளியின் காவுபடை இறக்கை கட்டி பறப்பதுபோல அலை கிழித்து பாய்ந்து வந்து கொண்டிருந்தது.

இன்னும் சில மணித்துளிகளே உள்ள நிலையில் கொற்கைகோ கேப்டனிடமிருந்து தொலைநோக்கியை வாங்கி இரப்பாளியின் படைகளை பார்த்தார். தூரத்து பாய் ஓட்ட வேகத்தோடு வந்த முதல் கப்பல் பெரியதாக இருந்தது. மூன்று பக்கமும் பீரங்கி இருந்தது. 2oo க்கு அதிகமானோர் கறுப்பு ஆப்ரிக்கர்களும், வெள்ளை அரபியர்களும் கலந்து இருந்தனர், அடுத்து அடுத்து என 3 சின்னதும் பெரிதுமாக கப்பல்களில் சுமார் 1000 க்கும், குறையாதவர்களாக இருந்தனர்.

வேக முடிவெடுத்த கொற்கை உடையிலுள்ளவர்கள் மட்டும் கடலடியில் நில்லுங்கள் மற்றவர்கள் வடக்கு வாசல் செல்லுங்கள். கேப்டன் நீங்களும் உங்கள் வீரர்களும் கோட்டை மேல் நின்று பீரங்கி தாக்குதலை கவணியுங்கள், ராயா நீயும் மேலே போ.. காணியாளா நீ மட்டும் கட்டளை கொடியோடு என்னோடு இங்கேயே இரு, சீக்கிரம் சீக்கிரம் என விரட்ட …. அப்படியே ஒருகூட்டம் பெயர்ந்து வடக்கு வாசல் போனது. கொட்டின்கோ தனது வீரர்களோடு கோட்டைக்குள் சென்று கதவை மூடினார்.

இரப்பாளியின் முதல் பாய்மரக் கப்பல் தறிகெட்டுபாய்ந்து புன்னை கரையேற வந்தது. பாய்கள் அவிழ்த்து விடப்பட கனபொழுதில் கிழக்கே கடலோரம் நின்றிருந்த பரதவர்களை கடந்து மேற்கே வடபரணி கிளைக்குள்ளே பாய்ந்து முன்னேறியது. பரணியின் எதிர்வெள்ளத்தால் வேகம் குறைய வடகிளையின் வடக்குகரையோடு ஒதுங்கி தரை தட்டி நின்றது.

அதை தொடர்ந்து வந்த அடுத்த கப்பலும் அவ்வாறே உள்நுழைந்து பொழிமுகம் தாண்டி கரையேறி நின்றது. இன்னும் இரண்டு கப்பல்கள் பாய்கள் அவிழ்க்கப்பட்டு வேகம் குறைந்த காரணத்தால் கரையருகே உள்ளே முன்னேற முடியாமல் தாவுக்கு மீண்டும் வழிய ஆரம்பித்தது. உயிர் களை புசித்தே தீராத பசி கொண்ட காலம் எனும் காலன் இதோ வந்தே விட்டான்.

முதல் கப்பலில் இருந்து தளபதி பாய்மர கயிற்றை வெட்டி தாவிபிடித்து இரண்டாம் கப்பலுக்கு பறந்து கொண்டிருந்தான். கவனித்த கொற்கைகோ காணியாளா கிழக்கே பீரங்கியால் தாக்கு என ஆணையிட்டபடி பரணி கரையோரமாக மேற்கே நோக்கி ஓடிக் கொண்டிருந்தார். காணியாளன் கணநேரத்தில் தன்கொடி தூக்கி கிழக்காலே தாழ்த்த மேலிருந்து இராயன் ஆணையிட வினாடியில் கடலுக்குள்ளே பீரங்கிகுண்டுகள் இடைவிடாது குண்டுமழை பொழிந்தன. இரண்டு கப்பல்களுமே நினைப்பதற்க்கு நேரமின்றி தீக்காட்டில் அலும்பி அமிழ்ந்தன.

பரணியின் தென்கரை மேலேறி நின்ற 2ஆம் கப்பலிலிருந்து கர்ண கொடுரமான ஊளையோடு அரபிய கொள்ளை தளபதி ஆணையிட்டான். அனைவரையும் தாக்கி கோட்டையை பிடியுங்கள், எதிர்பவரை கொன்று போடுங்கள். உடனே தாக்குங்கள்..... என்றபடி கப்பலில்இருந்து கீழே துள்ளி குதித்தான். அவன் விழுகின்ற நடுவழியிலேயே தூரத்திலிருந்து ஓடிவந்தபடி கொற்கைகோ வீசியடித்த குத்துவாள். மின்னலாய் தளபதியின் தொண்டை குழியில் பாய்ந்து அவன் உயிரை பருகியது. 

உயிரற்ற உடலாய் தாமிரபரணி கரையில் விழுந்தான் தளபதி முதல் உயிர் பலி கணநேரத்தில் பீதியான கொள்ளையர்கள் ஆணையிட ஆளில்லாமல் அதிர்ச்சியடைந்தனர். கட்டுகோப்பிளந்து கலவரமாயினர். கொற்கை ஆணையிட்டார், பரதவ மண்ணிலே பாரசீகரின் பாதம்கூட படக்கூடாது வெட்டிச்சசாயுங்கள் மறவர்களே! மேற்கு நோக்கியே நகருங்கள்!! வலைகளுக்குள் சிக்கி கொள்ளாதீர்கள்!!!

படகுகளிலிருந்து குதித்த இராட்சதர்களின் பாதங்கள் பரணிகரை தொடுவதற்கு முன்பே பரதவ வீரர்கள் பாய்ந்து முன்னேறி வெட்டிசாய்த்தனர். வடக்கு கப்பலிலிருந்தும் ஆற்றிலே குதித்து கொள்ளையர்கள் நீந்தி வந்து கரையேறிக்கொண்டிருக்க, கிழக்கே இருந்து மேற்காக கொற்கைகோ வெட்டி சாய்த்து முன்னேறி கொண்டிருந்தார். கடலுக்குள் எரிந்த கப்பலிலிருந்து கரைக்கு வந்த கொள்ளையர்களை மணல்மேடுகளில் பதுங்கி கிடந்த பட்டங்கட்டிமார் படை பந்தாடியது.

தெரியாத இடத்தில் புரியாத நிலையில் பொறியில் சிக்கிய இறப்பாளிக்கூட்டம் பரதவர் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது. களம் கைமாறூம் நிலையிலே கோவில் மணி விடாது ஒலிக்க கோட்டையை பார்த்த கொற்கை அங்கே இராயன் மேற்கே நோக்கி கைகாட்ட மேற்க்கே திரும்பி பார்த்தபோது, பரணியின் வடகரையில் மேற்க்கே வெகு தூரத்தே படகுகளிலும் கரையோரமாகவும் நாயக்க படைகள் சாரை சாரையாக வந்துகொண்டிருப்பதை கண்டதும் கோட்டை கதவுகளை திறந்துவிடு இராயா என உத்தரவிட்டார் கொற்கைகோ.

எல்லோரும் கோட்டைகுள்ளே செல்லுங்கள் என்றபடி வடக்குவாசலை நோக்கி சண்டையிட்டப்படி முன்னேறினார். ஏற்கனவே அரபிய தளபதியை வெட்டிசாய்த்த போர்த்துகீசிய தளபதியாக போர்த்துகீசிய தளபதி உடையிலிருந்த கொற்கைகோவை நினைத்துக்கொண்ட கொள்ளையர்கள் அவரையே குறிவைத்து மொத்தமாக சுற்றி வளைத்து தாக்க துவங்கினர். பரதவ வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு வாசல் வழி நுழைந்து கொண்டிருக்க கிழக்கு வாசல் வழியாக காயம் பட்ட பரதவர்களை தூக்கி சென்று கொண்டிருந்தனர்.

பேயாட்டம் ஆடிய இரப்பாளியின் அரக்கர்கள் நடுவே இடது விலாவிலே ஒரு குத்துவாள் ஊடுறுவி புதைந்திருக்க கீழே வலது கால்ஆடு சதை பிய்த்து தொய்க்க முன்னும் பின்னுமாக வெட்டுகள் விழுந்து விழுப்புண்களோடு பரதவனின் தந்தை வீர அபிமன்யுவாக தனி ஆளாக நின்று  நாலாபுறமும் சமாளித்தபடி வீரக்களமாடிக் கொண்டிருந்தார் கொற்கை. அவரது உடம்பிலிருந்து வழிந்த குருதி அவரை சுற்றி செஞ் சதுப்பு மணலாய் மாறி இருந்தது.

கோட்டைவாசல் நெருங்கி கொண்டிருக்க லாவகமாக பின்வாங்கி பின்வாங்கி வடக்குகோட்டை வாசல் சுவற்றோடு சாய்ந்தார். கொற்கைகோ, அவரது வெள்ளை சீருடை இரத்தத்தால் சிவப்புடையாக மாறியிருந்தது. அதற்குள்ளே சில பரதவவீரர்கள் குறுக்கே புகுந்து தாக்குதலை வாங்கி தன் பரதவதலைவனின் ஒரே வாரிசை காப்பாற்ற தங்கள் உயிரை ரத்தமும் சதையுமாக தாரை வார்த்து கொண்டிருந்தனர். 

கண்கள் மயங்க எண்ணங்கள் சிதற தன் தந்தை பாண்டியனார் தன்னை நம்பி இட்டு சென்ற பணி நாயக்க படைகள் வருகிறதே....? 
என் மக்கள் கதி .....? எல்லோரும் கடலுக்குள்ளே போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ,....? 
வீணாக என் மக்களை பலி கொடுத்து விட்டேனோ ...? 
நம்மால் எதிரிகளை வெல்ல முடியாதா......?
அனைவருக்கும் பரவன்தான் பகைவனா...?
ஆத்தா முத்தாரம்மன விட்டதால பழி எடுக்கிறாளா.....? 
பாண்டிமார் வம்சமே பட்டு போகுமோ......? 
என் தவறான முடிவால் பரதகுலம் அழியுமோ.....? 
ஐயா இருந்திருந்தா இப்படி நடக்காதே.....?

நான் இறந்துவிடுவேனோ நினைக்கும்போதே கொற்கை கோ மனபலமும் இழந்தவரானார்.

தன் மரண கணக்கை மனதுக்குள்ளே வாசிக்கும் போதே அதனை முடித்து வைப்பது போல் கொலை வெறியோடு காட்டுமிராண்டி ஒருவன் கொற்கை கோ மேல் பாய்ந்தான். கோட்டைச் சுவர் மணலிலே விழுந்தவர். மேலேறி அமர்ந்த அந்த கருப்பு அரக்கன் கொற்கை கோ வின் கழுத்தை நெறித்து, மூச்சை அடக்க முழு பலம் கொடுத்தான். கண்கள் பிதுங்க திணறிய கொற்கை கோ தள்ளி விட முடியாமல் தத்தளித்தார். தன் இறுதி நிமிட முட்டலிலே கை கால்களை உதறி பரிதவித்தார்.

மேலிருந்து இதை கண்ட காத்தவராயன் அலறித் துடித்தான் கோட்டைச்சுவரின் மேலே கிழக்கிலிருந்து கொட்டின் கோ விரைந்து வந்து கொண்டிருந்தார். அந்த கறுத்த பேயின் வலது கை கொற்கை கோ வின் இடது விலாவிலே புதைந்திருந்த குத்துவாளை திருக்கி உறுவ உயிர் வலியோடு தன் மரணத்தை உணர்ந்த கொற்கை கோ தன்னிலை மறந்தவராய் காலகாலமாக சொன்ன வார்த்தை ஆபத்தான கணத்திலே அறியாமல் விழுந்தது காப்பாத்து ஆத்தா முத்தாரம்மா என்பது.

காப்பாத்து ஆத்தா முத்தம்மை என்றே வந்தது. முத்தம்மையின் ரத்தகுறியும் வெற்றி வாழ்த்தும். கண நேரம் மனக்கண்ணில் வந்து போனது. அதே கணத்தில் கறுத்த காட்டேரி குத்துவாளை ஓங்கி கொற்கை கோ வின் வயிற்றோடு இறக்கியது.

கொற்கை கோ வின் சீருடைக்குள் வயிற்றில் கிடந்த முத்தம்மையின் பாம்படம் கணீரென்று சத்தமிட்டு வாளை வழுக்கி விட மரண அவஸ்தையில் மணலில் துளவிய கையில் பட்ட துப்பாக்கி எடுத்து டப்பென்று சுட தாடையில் குண்டு பாய்ந்து பொத்தென்று விழுந்தது. கொற்கை கோ வின் உயிர் குடிக்க நினைத்த காட்டேரி ஏதோ நடந்தது என அறிந்தும் அறியாமலும் மேலே இருந்து பொறுக்க முடியாமல் கீழே குதித்தான் காத்தவராயன்.

கொட்டின் கோ இப்போது மேலிருந்து தன் குழுக்களோடு கொற்கை பாண்டியனை சுற்றி வந்த கொள்ளையர்களை குறிபார்த்து சுட்டு தள்ள கூட்டம் கிழக்காக ஓடியது. இரத்த கறையோடு அங்கே வந்து சேர்ந்த காணியாளன். கொற்கை கோ வை இந்நிலையில் கண்டு ஓலமிட்டான். அங்கே கொற்கை கோ மயங்கி போயிருந்தான். காணியாளனின் அலறல் எல்லோரையும் பீதியாக்க ராயன் காணியாளனுக்கு விட்டான் ஓர் அறை குழப்பத்தை உருவாக்காதே கொற்கைக்கு ஒன்றுமில்லை.

தூக்கு என்றபடி இருவரும் கொற்கையை தூக்கி பிடிக்க காத்தவராயன் அப்படியே கொற்கையை தூக்கி தோள்களிலே போடவும் கோட்டை கதவுகள் மீண்டும் திறந்து கொற்கையும் தப்பிய பரதவர்களும் கோட்டைக்குள் நுழைந்து கொண்டனர். கதவு மீண்டும் அடைக்கப்பட்டது.

வடகரை கொள்ளை கப்பல்களை அழிக்க எரிஉமிழ்கலன்கள் வழி வைக்கோல் குண்டுகள் வீசப்பட்டன, அழிந்தும் அழியாமல் பரணியில் ஆடியபடி கப்பல்கள் கரையில் அமிழ்ந்து இருந்தன. வெளியூர் பட்டங்கட்டிகள் மீண்டும் தாளை புதர்களிலும் மணல் மேடுகளிலும், பதுங்கி கொண்டனர்.

புன்னைகரையிலே பரதவர்களின் ரத்தமும் பகைவரின் ரத்தமும் தோய்த்து போய் கிடக்க கிழக்கு வடக்கு தெற்காக படகிலும் கரையிலுமாக நாயக்கர்கள் கோட்டையை சூழ சூரியன் மறைய துவங்கியது. பகைவரின் பேயாட்டம் ஆரம்பமாகியது...

கடற்புறத்தான்

(தொடரும்) 

பனிமய தாயை நோக்கிய இலங்கை வாழ் பரதர்களின் புகழ் பாடல்

பனிமயத் தாயின் பக்தர்களே – நீங்கள் 
இறைவனை வேண்டிடுங்கள்

இடைவிடாது சகாயம் புரியும் – அந்த 
அன்னையை கேளுங்கள்

தெய்வீக கலைஞனின் பெரும் படைப்பாம் – அவள் 
தெய்வத்தின் சன்னிதி ஒளிவிளக்காம் 
பரமனின் உள்ளம் வாழ்பவள் நீயே 
மண்ணகம் வாழ்வோர் முதற்கனி நீயே – பனிமய

கொழும்புமா நகரின் அணிகலன் நீயே 
விரும்பிய விண்ணக நிறையருள் தாயே 
நொந்திடும் உள்ளங்கள் எல்லாமே வருக 
இறைவனின் சொல்லிலே நிம்மதி பெறவே – பனிமய

நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி


நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றிலோ, குளத்திலோ, கடலிலோ குளிக்கச் சென்று, தண்ணீரின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல், தத்தளித்துத் தடுமாறி, தண்ணீரில் மூழ்கி விடுவதைச் செய்திகளில் படித்திருப்பீர்கள்.

நீர் நிலைகளில் ஏற்படும் ஆபத்தின்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீச்சல் தேவைப்படுகிறது. பொதுவாக, குழந்தைகளுக்கு ஐந்து வயதில் நீச்சல் கற்றுத்தர ஆரம்பிக்கலாம். பதினெட்டு வயதுக்குள் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உடலின் எடை கூடிவிடும். மூட்டுகளில் அசையும் தன்மையும் நெகிழ்வுத் தன்மையும் குறைந்துவிடும். இந்தக் காரணங்களால், நீச்சல் கற்றுக்கொள்வது கடினம். பத்து வயதுக்குள் ஒருவர் நீச்சல் கற்றுக் கொண்டால், அவர் தனக்கு ஒரு சொத்து சேர்த்து வைத்ததற்குச் சமம்.

நீச்சல் பயிற்சியின் நன்மைகள்:

நீச்சல் பயிற்சி என்பது ஒரு காற்றலைப் பயிற்சி. நுரையீரல் வலுப்பெறுவதற்கும் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் நீச்சல் பயிற்சி நன்கு உதவுகிறது. தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வருபவர்களுக்கு எலும்பு மூட்டு தொடர்பான நோய்கள் வருவது குறைகிறது. முக்கியமாக முதுகுவலி, கழுத்துவலி, முழங்கால் மூட்டுவலி போன்றவை பாதிக்காது. மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் நீந்துவதைப் பழக்கப் படுத்திக் கொண்டால், மன அழுத்தம் குறைந்து, நாள் முழுவதும் உற்சாகமாகப் பணி செய்வார்கள். ’டௌவுன் சின்ட்ரோம்’ போன்ற மனநலக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் நீச்சல் ஒரு நல்ல பயிற்சியே. சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். ஆரோக்கியம் கைகூடும்.

யாருக்கு நீச்சல் பயிற்சி ஆகாது?

வலிப்பு நோய் உள்ளவர்கள் நீச்சல் பயிற்சி செய்யாமல் இருப்பது நல்லது. காரணம், தண்ணீரில் வலிப்பு வந்தால் உயிருக்கு ஆபத்து வந்து சேரும். அவர்களைத் தண்ணீரிலிருந்து சமாளித்துக் கரை சேர்ப்பதும் கடினம். அதுபோல் மாற்றுத் திறனாளிகள், ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், இதயநோயாளிகள், பிறவி இதயக் குறைபாடு உள்ள குழந்தைகள், ஆஸ்துமா போன்ற சுவாசம் தொடர்பான ஒவ்வாமை நோய் உள்ளவர்கள் நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது.

நீச்சல் பயிற்சியில் பெற்றோர் பங்கு என்ன?

குழந்தைக்கு நீச்சல் கற்றுத்தர வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், பயிற்சிக்குத் தேவையான உடல் தகுதி குழந்தைக்கு உள்ளதா என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள நீச்சல் குளம் பயிற்சிக்கு உகந்தது. அதில் நீச்சல் கற்றுக் கொள்வதற்கு வசதியாக குறைந்த அளவு ஆழம், நல்ல அகலம், தூமையான தண்ணீர், சுழற்சி முறையில் தண்ணீர் வெளியேற்றப்படும் வசதி, மிதவை போன்ற கருவிகள் முதலியவை அவசியம் இருக்க வேண்டும். எட்டுக் குழந்தைகளுக்கு ஒரு பயிற்சியாளரும், அனுபவமிக்க லைஃப் கார்டும் இருக்கிறார்களா என்பதைப் பெற்றோர் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். நீச்சல் பயிற்சியின்போது அப்பா, அம்மா,தாத்தா, பாட்டி, மாமா என்று உறவினர் யாராவது உடனிருக்க வேண்டும். டிரைவர், வேலையாள் போன்றவர்களை அனுப்பக்கூடாது.

நீரில் ஏற்படும் ஆபத்து:

குளத்தில் அல்லது கடலில் குளிக்கும்போது, படகில் செல்லும்போது, நீச்சல் பயிற்சியின்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிடலாம். நீந்தத் தெரியாதவர்கள் அப்போது வேகமாக சுவாசித்து, தண்ணீரைக் குடித்து, திக்குமுக்காடுவார்கள். இந்த நிலைமையில் நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். காற்று இருக்க வேண்டிய இடத்தில் இப்போது தண்ணீர் இருப்பதால், மூளைக்கு பிராண வாயு கிடைக்காது. இதன் விளைவால், அந்த நபரின் மூளைக்குப் பாதிப்பு ஏற்பட்டு, மயக்கம் உண்டாகி, தண்ணீரில் மூழ்கிவிடுவார். உயிரிழப்பார்.

எப்படிக் காப்பாற்றுவது?

நன்றாக நீந்தத் தெரிந்தவர்கள் மட்டுமே தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு முதலுதவி செய்ய முன்வர வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் இதில் ஈடுபடக் கூடாது.

தண்ணீரில் மூழ்கியவரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி முறைகள் ஐந்து. அவை; அணுகுதல், கையால் இழுத்தல், எறிதல், கருவி கொண்டு இழுத்தல், அருகில் செல்லுதல். பாதிக்கப்பட்ட நபர் நினைவோடு இருக்கிறார், அதேநேரம் தண்ணீரில் தத்தளிக்கிறார் என்றால், அவருக்குக் கம்பு, கயிறு, களி, குச்சி, மரக்கிளை, வேஷ்டி, போர்வை, டவல் போன்றவற்றில் ஒன்றை நீட்டி, அதைப் பற்றிக்கொள்ளச் செய்து, அதை உங்கள் பக்கமாக இழுங்கள். இதை நீங்கள் செய்யும்போது, தண்ணீரில் தத்தளிக்கும் நபர், உங்களைத் தண்ணீருக்குள் இழுத்துவிடாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பாதிக்கப்பட்ட நபர் எட்ட முடியாத தூரத்தில் இருக்கிறார் என்றால், தண்ணீரில் மிதக்கக்கூடிய பொருள்களில் ஒன்றை - எடுத்துக்காட்டாக, கார் டயர், காற்றடைத்த பெரிய பந்து, மர மிதவைகள், ஃபோம் மெத்தைகள் போன்றவற்றில் ஒன்றை அவரை நோக்கி வீசுங்கள். அதைப் பற்றிக் கொண்டு அவர் கரைக்கு மீண்டு வந்துவிடுவார். ஒருவேளை அந்த நபர் வெகு தொலைவில் இருந்தால், நீங்கள் நன்கு நீச்சல் தெரிந்தவராக இருந்தால், அவருக்கு அருகில் சென்று அவரைக் காப்பாற்ற கவனத்துடன் முயற்சி செய்யுங்கள்.

என்ன முதலுதவி செய்வது?

* தண்ணீரில் மூழ்கியவருக்குச் சுவாசம் உள்ளதா, நாடித்துடிப்பு உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

* தண்ணீரில் மூழ்கியவர்கள் பெரும்பாலும் அதிகமாகத் தண்ணீர் குடித்து விடுவார்கள். நுரையீரலிலும் இரைப்பையிலும் தண்ணீர் நிரம்பிவிடுவதால் வயிறு வீங்கி, சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். ஆகவே, இந்தத் தண்ணீரை வெளியேற்றுவதற்கு, முதலுதவி செய்யும் நபர் வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும்.

* தண்ணீரில் மூழ்கியவரைக் குப்புறப்படுக்க வைத்து, தலையைப் பக்கவாட்டில் திருப்பி வைத்துக்கொண்டு, முதுகையும் வயிற்றையும் அமுக்க வேண்டும். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து செய்யவேண்டும்.

* அந்த நபருக்குச் சுவாசம் நின்றிருந்தால் அல்லது மூச்சுத் திணறல் இருந்தால், செயற்கை சுவாசம் தர வேண்டும்.

* இதயத்துடிப்பு நின்றிருந்தால் இதய மசாஜ் தர வேண்டும்.

* இதற்கு ‘இதய சுவாச மறு உயிர்ப்புச் சிகிச்சை’ (cardiopulmonary resuscitation - சுருக்கமாக - CPR) என்று பெயர்.

* இதைப் பள்ளியில் படிக்கும் போதே தெரிந்து வைத்துக்கொண்டால் நல்லது.


செயற்கை சுவாசம் தருவது எப்படி?

* அந்த நபரை மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும்.

* அவருடைய பற்களுக்கிடையில் மரக்கட்டை அல்லது துணியைப் பல மடிப்புகளாக மடித்து வைத்து, வாயைத் திறந்தபடி வைத்துக் கொள்ள வேண்டும்.

* காற்று செல்லும் பாதை தடையில்லாமல் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

* முக்கியமாக, வாயில் அந்நியப் பொருள்கள் ஏதேனும் இருந்தால், அகற்றி விட வேண்டும்.

* பாதிக்கப்பட்டவரின் மூக்கை விரல்கள் கொண்டு மூடி, அவரது வாயில் முதலுதவி செய்பவரின் வாயை வைத்துக் காற்றை பலமாக ஊதி உள்ளே செலுத்த வேண்டும். இதனால், அவரது மார்பு உயரும். அப்போது முதலுதவி செய்பவர் வாயை எடுத்துவிட வேண்டும். மீண்டும் ஊத வேண்டும். இவ்வாறு நிமிடத்துக்கு 12 முறை ஊத வேண்டும்.

* குழந்தையாக இருந்தால் நிமிடத்துக்கு 30 முறை ஊத வேண்டும்.


இதய மசாஜ் தருவது எப்படி?

* சுவாசத்துக்கு வழி செய்யும் அதே நேரத்தில் இதயத் துடிப்புக்கும் வழி செய்ய வேண்டும். அந்த நபரின் நடு நெஞ்சில் முதலுதவி செய்பவரின் உள்ளங்கைகளை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து, மார்பை பலமாக அழுத்த வேண்டும். நிமிடத்துக்கு 80 அழுத்தம் என்று மொத்தம் 15 முறை தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும். இதனால் இதயம் துடிக்க ஆரம்பிக்கும்.

* நான்கு சுழற்சிகள் இதய மசாஜ் செய்துவிட்டு, இரண்டு முறை செயற்கைச் சுவாசம் தர வேண்டும்.

* பாதிக்கப்பட்ட நபருக்கு சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு ஏறுபடும்வரை இதைத் தொடர வேண்டும்.

* அதேநேரத்தில் தாமதிக்காமல் மருத்துவச் சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் தண்ணீரில் மூழ்கியவரை முழுமையாகக் காப்பாற்ற முடியும்.

* இதற்கு, பாதிக்கப்பட்ட நபரை 108 ஆம்புலன்ஸ் உதவியால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

Pearls and pearl divers

By Shireen SENADHIRA

Passing through Kuwait end of July on travel, I read the Arab Times and found an article titled ' Young Sailors Return Home, ' dated 24 July 2010. It was the end of their Pearl Diving Heritage Revival Festival with the return of their pearling boats. Kuwait kept alive their tradition of pearl diving of long ago which was one of their main livelihoods then.

Young men were trained on pearl diving and they went out to sea for ten days where they explored the sea bed for pearls. Many pearls were collected after harvesting the oysters and cracking them. The article went further to say that on the arrival day of the young men, when the boats were sighted on the horizon, there was uproarious excitement, when family, friends and visitors assembled eagerly to welcome them on the shore. Then the feasts began,

Gulf of Mannar

In a different era, in Mannar, in the north western coast of Sri Lanka, men were diving for pearls in the Gulf of Mannar. The great chronicle of history of the island, the Mahavamsa, records that when Prince Vijaya (later to become King Vijaya) arrived on the island in 5th century BC, pearl diving was well established. During the Portuguese, Dutch and British eras pearl diving flourished and more so in the 18th century. When the multitude of boats brought the pearl divers ashore in the Bay of Condatchy in Mannar, there was similar excitement like that in Kuwait. The large eager crowds rushed to the waves on the beach, their faces showing so much emotion. A roaring cheer went up as some of the boats would be laden with riches. The boat owners displayed anxious expecting countenances. The crowd was of jewelers, brokers, merchants of all colours and descriptions, both native and foreign, who were occupied with pearls. Their work was either separating and assailing the pearls or weighing, valuing and ascertaining their numbers. Others were either hawking them, or drilling and boring the pearls for future use. This shows the value and importance of the object and the endless bustle it created on the shores of Mannar.

Several thousands of people of different skin hues, countries, castes and occupations continuously passed and repassed in the busy crowd. The vast numbers of small tents and huts erected near the shores had many a bazaar or market place dotted here and there. In fact, at that time, life was teeming there. The enticing smells of spicy food mingled in the sea breeze with occasional whiffs of the stench of the decaying and discarded oyster shells. The harvesting of pearls mainly started in the month of February and went on till April and it happened every third year, so that once the oysters were harvested, there was sufficient time for the new pearls to grow in the new oysters.

Galle harbour
Added to the melee on the shores of Mannar, were the astrologers and the religious men. The former gave the auspicious times and days for good harvesting and also foretold the future, the latter prayed over the divers, invoked blessings on the boats going out to sea. Amidst this exciting mass of humanity and the carnival atmosphere, there were much serious activities going on. The divers had to keep themselves fit and supple as they descended many fathoms into the sea. They had their noses pinched with wooden clothes pegs like tweezers and they plunged into the waters with stones attached to their feet or waist. There simply was no scuba diving apparatus and likewise in those days. The divers' job was an exacting one. The ones who could stay under water the longest were the best and gathered many oysters. The duration under water was on average about 2 minutes, maybe 3. There were some who could stay under for 4 or more minutes and that was a feat. They got rid of the stones quickly at the bottom and swam about gathering as many oysters clinging to the rocks. Some divers were deft enough to gather oysters with their feet too. They collected them in the nets hanging from their necks or waist. Then they tugged at the rope attached to them and were quickly hauled up. They did the diving in relays when the first five or ten dived and came up, the next lot was ready to dive. Thus a diver did about 50 or 60 dives a day. There were also the underwater hazards of shark, manta rays and other marauders which they had to avoid and always be on the alert.

Robert Percival has described the pearl fishers in his book titled, An Account of the History of Ceylon, well. We can see from his account that the diver's task was arduous. The exertion undergone during the process is so that on being hauled up to the boat, they discharge water from their mouth, nostrils and ears and sometimes even blood. But this does not deter them from diving again in turn. During the season all the boats regularly sail and return together. The boats, it is said, reach the oyster banks before daybreak. The sailing goes on daily during the 2-3 month period unless storms happen. Another considerable interruption to the sailing is the diversity of religious holidays observed by the divers of different sects and nations.
Ancient times

Galle in the south of our island is said to be the Tarshish in the Bible. Many ships sailed to and fro from Galle and other ports in Sri Lanka in ancient times. At those times, the Gulf of Mannar together with the Persian Gulf and the Red Sea were reputed to be the hub of the international pearl trade. Pearls from the Gulf of Mannar are believed to have reached the courts of kings and emperors of ancient empires such as Mesopotamian, Egyptian, Greek, Phoenician, Scythian, Roman, Byzantine etc. In the 10th century BC King Solomon's ships are believed to have reached the ports of Sri Lanka, from where they filled their cargo with pearls, rubies, sapphires, ivory and peacocks. The Phoenician trade fleets are also believed to have reached the Gulf of Mannar to purchase pearls.

The Mahawamsa and the Chulawamsa record that pearls were sent as gifts by Kings of Sri Lanka to Indian Kings in the 5th and 3rd centuries BC. The Greek ambassador to the Mayuran king, Chandragupta was Megasthenes and he had written in the 3rd century BC. that "the island of Taprobane was more productive of gold and large pearls than the Indias." The 16 - 20 centuries had the Portuguese, Dutch and British ruling Sri Lanka in turn. Looking back, the entry of the western nations into the pearl trade of Sri Lanka, was a disaster for the people of the area and their livelihood, as these nations used fire power to terrorize the people.
This caused a lot of tension and insecurity in the area in contrast to the peaceful atmosphere that prevailed during pearling activities for thousands of years.

The last pearl fishery held by the British was in 1906. It was presided over by Leonard Woolf, the Government Agent in Jaffna kachcheri (secretariat). It is recorded that it was a failure lasting only 11 days only with a poor crowd in attendance.

Attempts to culture pearls in oysters didn't succeed. This was the time in Japan, when Mikimoto had already successfully cultured 'Mabe' pearls.
Famous pearls

Talking of famous pearls, in acient times, it is probable that Queen Sheba would have been proudly wearing her pearls, gifts from King Solomon and that they would have been from the Gulf of Mannar. Likewise, Cleopatra, Queen of Egypt, would have dazzled Caesar and Marc Antony with her pearls. There is a story told by Pliny the elder that Cleopatra, the last of the Egyptian Queens owned two large pearls of all times, left to her by oriental kings. Cleopatra, being the interesting character she was, once had a wager with Antony while dining. The story says, that Antony asked what more could be added to a such sumptuous meal. Cleopatra, with her usual arrogance mentioned an exorbitant amount, that she could use in a meal. Antony who didn't quite believe her took the wager. The next day, she set a magnificent meal and when dining, Antony laughingly asked for the reckoning. She replied that this was a preliminary meal and assured him that she would consume half a million dollar worth meal herself. Then she ordered the dessert and as instructed, a dish was set before her. This dish contained vinegar, so strong that it could dissolve pearls into slush. At that time, she was wearing her remarkable, unique pearl earrings. She took one pearl earrings while a bemused Antony looked on. She plunged it into the vinegar. When it dissolved she swallowed the exotic dessert and won the wager. Lucius Plancus witnessed the wager.

One of the oldest known pearl is the Jomon pearl and it dates back 5500 years. It is named after a period in Japanese history the Jomon era (10,000 to 300 BC). In Britain, Mary, Queen of Scots married three times and because of her multiple marriages amassed a large amount of jewelry including pearls. Her numerous dresses and mantles were studded with pearls and other jewels. However, none of these helped her when later, she was tried for treason and executed. Mary, Queen of Scots had a 6 stranded pearl necklace containing more than 600 pearls.

Her cousin, Queen Elizabeth I, bought this valuable necklace. Pearl tiaras were worn at weddings, mostly by royalty. It was Princess Diana who carried her pearl tiara well and indeed looked the proverbial enchanting princess. Mughal paintings of their princes show them wearing strands of pearls. Emperors Akbar's (1556 -1605) and Jehangir's (1605-1627) courts displayed all the usual trappings of oriental luxury, in particular, prodigious stocks of jewels of which pearls were the most numerous and most highly regarded.
Drama, song and verse

Turning to music, George Bizet's first opera, 'the Pearl Fishers,' centered on a love triangle. This opera originally set in Mexico, was switched to Ceylon, featuring Leila, a Hindu priestess, the village headman and a pearl diver. In paintings, pearls are depicted in the well known paintings of Johannes Vermeer, Delft, 1665, 'The Girl with the Pearl Earring' and 'Woman with the Pearl Necklace' which are highly valued works of art. In poetry, Mathew Arnold , poet, (1822 - 1888) says thus:

"Searching the wave I won therefrom a pearl Moonlike and glorius, such as Kings might buy emptying their treasury."

Cosmetics and curatives

Pearls have been used in cosmetics. Finely ground powder of pearls, similar in texture to flour began to be used cosmetically by ladies of France and believed greatly to improve the texture and lustre of the skin. The cosmetic industry adds pearls to face powders and creams. It is also used as a curative. The reject pearls from pearl fisheries and farms are processed and provide the pharmaceuticals industry as a valuable source of calcium.

Myths and legends

The pearl, cherished both by men and women for many thousands of years became steeped in legends. Some believed that the pearls were the end product of dew. Arabian writers of antiquity have added to this myth, saying, in April the oysters rise from the sea bed and open their shells to receive the rain which falls at that time. The raindrops thus gathered become pearls. Chinese mystics say that dragons are rainmakers and that when they spit, that some of their spittle is of pearls and so, rain and pearls fall when dragons are fighting in the heavens.

Hindu folklore tells that pearls are found in the stomach and forehead of an elephant. These are avidly sought as powerful talismans against all kinds of dangers. Hindu astrological terms present a pearl as associated with the moon and consider pearls are representative of lovers. That is why the Hindu love potions are full of finely powdered pearl. Such is the story of pearls with its beauty and it's worth. Therefore, it is disconcerting that there has been no pearling activities in the Gulf of Mannar for so long. On the Indian side of the Gulf, considerable success has been achieved in culturing pearls with Japanese technical assistance.

Unfortunately, in Sri Lanka this could not be done due to lengthy terrorist activities. Now after the restoration of peace to the island nation, it is hoped that necessary incentives and encouragement will be provided to private companies to invest in the lucrative pearl culturing industry in collaboration with the Japanese and the Chinese. Then, Sri Lanka's fame as a pearl producing centre for far and wide will spread once more and why not?

It is known as the Pearl of the Indian Ocean.

About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com