இலங்கையில் பனிமய நாயகி
பனிமயத்தாயின் பக்தி வழிபாடு தூத்துக்குடியிலிருந்து இலங்கைத் தீவினூடே புகுந்து பரவ ஆரம்பித்தது. முதல் முறையாக பனிமய அன்னையின் பக்தி வழிபாடு கொழும்பு கோட்டடி பகுதியிலுள்ள செபஸ்தியார் வீதியில் வாழ்ந்த வேம்பார், தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டினம், மணப்பாடு உள்ளிட்ட பல்வேறு பரதவ கிராமங்களைச் சேர்ந்த பரதவ மக்கள் ஆண்டுதோறும் தங்களது இல்லத்தில் நவநாள் மன்றட்டுக்களை நடத்தி வந்தனர்.
1928-ஆம் ஆண்டு நடத்திய இறுதி நாள் பிரத்தனையில் பரத குலத் முக்கியஸ்தர்கள் ஐ.எக்ஸ். பெரைரா, கஸ்பரார் கோமஸ், ஜீ.ஆர்.மோத்தா, ஜே.எக்ஸ்.பிஞ்ஞயிரே. ஜீ.எக்ஸ்.ஹகோமஸ், ஜே.ஏஸ்.ரோச் ஆகியோர் கலந்து கொண்டனர் ஐ.எக்ஸ். பெரைரா தனது உரையில் மாதாவின் திருநாளை பரத குலத்திருவிழாவாக ஓர் ஆலயத்தைச் சார்ந்து கொண்டாட வேண்டும் என்று நல்லாலோசனை கூறினார். அது போலவே.
1929 -ஆம் ஆண்டு அனைத்து ஊர்ரவர்களும் அழைக்கப்பட்டு பனிமய அன்னையின் திருநாளை பரதவர்களின் திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாட வோண்டும்மென தீர்மானிக்கப்பட்டு ஆகஸ்ட் திங்கள் 5-ஆம் நாள் புனித பிலிப் நேரியார் ஆலயத்தில் முதல் முறையாக கோலாகலமுடன் தம் குலத் திருநாளாகக் கொண்டாடினர்.
இத்திருநாள் பரவ குலத்தவரின் ஏக போக உரிமைத் திருநாள்! வளமையும் பழைமையும் பொதிந்த மரபுரிமையாகக் கொண்டாடப்பட்டும் பெருவிழா!.
1534-ஆம் ஆண்டில் 30 கிராமங்களைச் சேர்ந்த 30,000 பரதவர் திருமுழுக்குப் பெற்ற 400-ஆம் ஆண்டின் ஞாபகமாக, கொழும்பில் உள்ள புனித பிலிப்நேரியார் ஆலயத்திலே பனிமய அன்னை திருசுருபத்தை வைக்க 1935-ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற பரத குல சஙகத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்திலே தீர்மானிக்கப்பட்டது.

பனிமய அன்னை சுருபம் வந்த 50-ஆண்டை பரத குல மக்கள் பொன் விழாவாக கொண்டாடினர்.