வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 10 August 2016

ஐங்குறுநூறு - நெய்தல் திணையின் சிறுவெண் காக்கை பத்து பாடல்கள் தொகுப்பு

நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு, மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

ஐங்குறுநூறின் நெய்தல் திணையில் உள்ள சிறுவெண் காக்கை பத்து  பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.


161. தலைவி கூற்று

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்துநுதல் அழியச் சாஅய்
நயந்த நெஞ்சம் நோய்ப்பால் அஃதே.

162.தலைவி கூற்று

பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டு
பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும்
துறைவன் சொல்லோ பிறவா யினவே.

163.தலைவி கூற்று

பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்
துறைவன் துறந்துஎனத் துறந்துஎன்
இறைஏர் முன்கை நீங்கிய வளையே.

164.தலைவி கூற்று

பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை ஆரும்
தண்ணந் துறைவன் தகுதி
நம்மோடு அமையாது அலர்பயந் தன்றே.
165.தலைவிகூற்று

பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
அறுகழிச் சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல்என்
இறையேர் எல்வளை கொண்டுநின் றதுவே.

166.தோழிகூற்று

பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
வரிவெண் தாலி வரைசெத்து வெரூஉம்
மெல்லம் புலம்பன் தேறி
நல்ல வாயின நல்லோள் கண்ணே.

167.தலைவி கூற்று

பெருங்கடல் கடையது சிறுவெண் காக்கை
இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக்கூறி
நல்கான் ஆயினும் தொல்கே ளன்னே.

168.தோழிகூற்று

பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
துறைபடி அம்பி அகம் அணை ஈனும்
தண்ணந் துறைவன் நல்கின்
ஒண்ணுதல் அரிவை பாலா ரும்மே.

169.தலைவி கூற்று

பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
பொன்இணர் ஞாழல் முனையின் பொதியவிழ்
புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து உண்மை அறிந்தும்
என்செயப் பசக்கும் தோழிஎன் கண்ணே.

170.தலைவி கூற்று

பெருங்கடல் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்கும் துறைவன்
நல்லன் என்றி ஆயின்
பல்இதழ் உண்கண் பசத்தல்மற்று எவனோ.


Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com