மருந்தாகும் கடல் உயிரிகள்

படுக்கையில் சீறுநீர் கழித்தல் - 5 வயதுக்கு மேல் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு சாவாளை மற்றும் துப்பு வாளை மீன்களின் குடலை அவித்துக் கொடுப்பர் மற்றும் பெரிய மீனில் வையுற்றில் உள்ள சிறிய மீனை சமையல் செய்யது குடுத்தால் படுக்கையில் சீறுநீர் கழித்தல் நின்றுவிடும். .சிலர் திருக்கை மீனின் வாலை குழந்தைகளின் இடுப்பில் கட்டுவதுண்டு.
சளித்தொல்லை - சாளை மற்றும் நெத்திலி மீன் அவியல்
இரத்தக்கொதிப்பு - சூரை மற்றும் காளா (கட்டிக்காளை ) மீன் அவியல்
இரத்த விருத்தி - சூரை மீன் அவியல்
சிலவகை காய்ச்சல் - கருவாட்டு குழம்பு
உடல் இளைப்பு - இளைத்தவர்கள் பெருக்க வறுத்த நெத்திலி கருவாட்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிடக் கொடுப்பர்
உடல் பெருக்க - கெழுது மீனின் உருக்கிய நெய்யில் சோற்றைப் பிசைந்து கொடுப்பர்
குறுக்குப் பிடிப்பு - சுறா மீனின் ஈரலை பச்சையாக சாப்பிடக் கொடுப்பர்
வாயுத் தொல்லை - கத்தாளை மீனுடன் பூண்டு , ஓமம் சேர்த்த குழம்பு
வயிற்றுக் கோளாறு - காரப்பொடி அவியல்
தாய்ப்பால் பெருக்க - பிள்ளைச் சுறா , திருக்கை ,காரல் மீன் குழம்பு
ஜலதோஷம் - நண்டுக் குழம்பு
வேர்க்குரு - வெண் சங்கை தாய்ப்பாலில் உரசி பூசுவர்
கட்டிகள் உடைய - வெண் சங்கை உரசி பற்றுப் போடுவர்