Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

அகநானூறில் பரதவர்

அகநானூறில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்


250 நெய்தல்

எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப,
மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர,


5
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட,
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி,
தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன்,
வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும்
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு


10
அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய்,
அவ் வலைப் #பரதவர் கானல் அம் சிறு குடி
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
துஞ்சாது, கங்குலானே!

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்

சிறுபாணாற்றுப்படையில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்



சிறுபாணாற்றுப்படையில் இருந்து பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்

கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண்
மதியேக் கறூஉம் மாசறு திருமுகத்து
நுதிவே னோக்கி னுளைமக ளரித்த
பழம்படு தேறல் #பரதவர் மடுப்பக்
கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான் .

சிறுபாணாற்றுப்படைஎழுத்தாளர்: இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

பாடியவர்: இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
பாடப்பட்டவன்: ஓய்மானாட்டு நல்லியக்கோடன்
திணை: பாடாண்திணை
துறை: ஆற்றுப்படை
பாவகை: ஆசிரியப்பா
மொத்த அடிகள்: 269

மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை
யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போலச்
செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக்
கொல்கரை நறும்பொழிற் குயில்குடைந் துதிர்த்த
புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடைநெறித்துக்
கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற
லயிலுருப் பனைய வாகி யைதுநடந்து
வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
வேனி னின்ற வெம்பத வழிநாட்
காலைஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப் . . .10

பாலை நின்ற பாலை நெடுவழிச்
சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசைஇ
யைதுவீ ழிகுபெய லழகுகொண் டருளி
நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
மணிவயின் கலாபம் பரப்பிப் பலவுடன்
மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ
யுயங்குநாய் நாவி னல்லெழி லசைஇ
வயங்கிழை யுலறிய அடியி னடிதொடர்ந்
தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையிற்
சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென . .20

மால்வரை யழுகிய வாழை வாழைப்
பூவெனப் பொலிந்த ஓதி ஓதி
நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்
தியாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப்
பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கி
னின்சே றிகுதரு மெயிற்றி னெயிறெனக்
குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல்லியல் . ..30

மடமா னோக்கின் வாணுதல் விறலியர்
நடைமெலிந் தசைஇய நன்மென் சீறடி
கல்லா விளையர் மெல்லத் தைவரப்
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பி
னின்குரற் சீறியா ழிடவயிற் றழீஇ
நைவளம் பழுநிய நயந்தெரி பாலை
கைவல் பாண்மகன் கடனறிந் தியக்க
வியங்கா வையத்து வள்ளியோர் நசைஇத்
துனிகூ ரெவ்வமொடு துயராற்றுப் படுப்ப
முனிவிகந் திருந்த முதுவா யிரவல . ..40

கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்க்
கழுநீர் மேய்ந்த கயவா யெருமை
பைங்கறி நிவந்த பலவி னீழல்
மஞ்சண் மெல்லிலை மயிர்ப்புறந் தைவர
விளையா விளங்க ணாற மெல்குபு பெயராக்
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளுங்
குடபுலங் காவலர் மருமா னொன்னார்
வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண்
வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று . .50

நறவுவா யுறைக்கும் நாகுமுதிர் நுணவத்
தறைவாய்த் குறுந்துணி யயிலுளி பொருத
கைபுனை செப்பங் கடைந்த மார்பிற்
செய்பூங் கண்ணி செவிமுத றிருத்தி
நோன்பகட் டுமண ரொழுகையடு வந்த
மகாஅ ரன்ன மந்தி மடவோர்
நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்
வாள்வா யெருந்தின் வயிற்றகத் தடக்கித்
தோள்புற மறைக்கும் நல்கூர் நுசுப்பி
னுளரிய லைம்பா லுமட்டிய ரீன்ற . ..60

கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடுந்
தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் #கோமான்
தென்புலங் காவலர் மருமா னொன்னார்
மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்
கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்
தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று
நறுநீர்ப் பொய்கை யடைகரை நிவந்த
துறுநீர்க் கடம்பின் றுணையார் கோதை
ஓவத் தன்ன வுண்டுறை மருங்கிற் . .70

கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்
வருமுலை யன்ன வண்முகை யுடைந்து
திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை
யாசி லங்கை யரக்குத்தோய்ந் தன்ன
சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை
யேம வின்றுணை தழீஇ யிறகுளர்ந்து
காமரு தும்பி காமரஞ் செப்புந்
தண்பணை தழீஇய தளரா இருக்கைக்
குணபுலங் காவலர் மருமா னொன்னா
ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந் . .80

தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய
னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று
வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்க னாடன் பேகனுஞ் சுரும்புண
நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரல் .. .90

பறம்பிற் கோமான் பாரியுங் கறங்குமணி
வாலுளைப் புரவியடு வையக மருள
வீர நன்மொழி யிரவலர்க் கீந்த
வழறிகழ்ந் திமைக்கு மஞ்சுவரு நெடுவேற்
கழறொடித் தடக்கைக் காரியு நிழறிகழ்
நீல நாக நல்கிய கலிங்க
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோ
ளார்வ நன்மொழி யாயு மால்வரைக்
கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி . ..100

யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீந்த
வுரவுச்சினங் கனலுமொளிதிகழ் நெடுவே
லரவக்கடற் றானை யதிகனுங் கரவாது
நட்டோ ருவப்ப நடைப்பரி கார
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாட னள்ளியு நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகக்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க் கீந்த
காரிக் குதிரைக் காரியடு மலைந்த . ..110

வோரிக் குதிரை யோரியு மெனவாங்
கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ
ளெழுவர் பூண்ட வீகைச் செந்நுகம்
விரிகடல் வேலி வியலகம் விளங்க
வொருதான் றாங்கிய வுரனுடைய நோன்றா
ணறுவீ நாககு மகிலு மாரமுந்
துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய
பொருபுன றரூஉம் போக்கரு மரபிற்
றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய
நன்மா விலங்கை மன்ன ருள்ளும் . ..120

மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா
ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன்
களிற்றுத்தழும் பிருந்த கழறயங்கு திருந்தடிப்
பிடிக்கணஞ் சிதறும் பெயல்மழைத் தடக்கைப்
பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை
நல்லியக் கோடனை நயந்த கொள்கையடு
தாங்கரு மரபிற் றன்னுந் தந்தை
வான்பொரு நெடுவரை வளனும் பாடி
முன்நாள் சென்றன மாக விந்நா
டிறவாக் கண்ண சாய்செவிக் குருளை . . 130

கறவாக் பால்முலை கவர்த னோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த
பூழி பூத்த புழற்கா ளாம்பி
யல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை யுப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்
திருக்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு
மழிபசி வருத்தம் வீடப் பொழிகவுட் . . .140

டறுகட் பூட்கைத் தயங்குமணி மருங்கிற்
சிறுகண் யானையடு பெருந்தே ரெய்தி
யாமவ ணின்றும் வருதும் நீயிரு
மிவணயந் திருந்த விரும்பே ரொக்கற்
செம்ம லூள்ளமொடு செல்குவி ராயி
னலைநீர்த் தாழை யன்னம் பூப்பவுந்
தலைநாட் செருந்தி தமனியம் மருட்டவுங்
கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவும்
நெடுங்காற் புன்னை நித்திலம் வைப்பவும்
கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப் . . 150

பாடல் சான்ற நெய்த னெடுவழி
மணிநீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய
பனிநீர்ப் படுவின் பட்டினம் படரி
னோங்குநிலை யட்டகந் துயுன்மடிந் தன்ன
வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகிற்
கரும்புகைச் செந்தீ மாட்டிப் பெருந்தோண்
மதியேக் கறூஉம் மாசறு திருமுகத்து
நுதிவே னோக்கி னுளைமக ளரித்த
பழம்படு தேறல் #பரதவர் மடுப்பக்
கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற் கோமான் . . .160

தளையவிழ் தெரியற் றகையோற் பாடி
யறற்குழற் பாணி தூங்கி யவரொடு
வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்
பைந்நனை யவரை பவழங் கோப்பவுங்
கருநனைக் காயாக் கணமயி லவிழவுங்
கொழுங்கொடி முசுண்டை கொட்டங் கொள்ளவுஞ்
செழுங்குலைக் காந்தள் கைவிரல் பூப்பவுங்
கொல்லை நெடுவழிக் கோப மூரவு
முல்லை சான்ற முல்லையம் புறவின்
விடர்கா லருவி வியன்மலை மூழ்கிச் . 170

சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வே னுதியிற் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி
னுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை
யெயிற்றிய ரட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை யாயமொ
டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்
நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து . . 180

புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை
முள்ளரைத் தாமரை முகிழ்விரி நாட்போது
கொங்குகவர் நீலச் செங்கட் சேவல்
மதிசே ரரவின் மானத் தோன்று
மருதஞ் சான்ற மருதத் தண்பணை
யந்தண ரருகா வருங்கடி வியனக
ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின்
வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி
னுரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை . .190

பிடிக்கை யன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ மகமுறை தடுப்ப
விருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த
அவைப்புமா ணரிசி யமலைவெண் சோறு
கவைத்தா ளலவன் கலவையடு பெறுகுவி
ரெரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக்
கருமறிக் காதிற் கவையடிப் பேய்மக
ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப்
பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா
ளண்ணல் யானை யருவிதுக ளவிப்ப . .200

நீறடங்கு தெருவினவன் சாறயர் மூதூர்
சேய்த்து மன்று சிறிதுநணி யதுவே
பொருநர்க் காயினும் புலவர்க் காயினு
மருமறை நாவி னந்தணர்க் காயினுங்
கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன
அடையா வாயிலவ னருங்கடை குறுகிச்
செய்ந்நன்றி யறிதலுஞ் சிற்றின மின்மையு
மின்முக முடையையு மினிய னாதலுஞ்
செறிந்துவிளங்கு சிறப்பி னறிந்தோ ரேத்த
அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையு . . .210

மாணணி புகுதலு மழிபடை தாங்கலும்
வாண்மீக் கூற்றத்த்து வயவ ரேத்தக்
கருதியது முடித்தலுங் காமுறப் படுதலு
மொருவழிப் படாமையு மோடிய துணர்தலு
மரியே ருண்க ணரிவைய ரேத்த
அறிவுமடம் படுதலு மறிவுநன் குடைமையும்
வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசில ரேத்தப்
பன்மீ னடுவட் பான்மதி போல
இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகிப் . ..220

பைங்க ணூகம் பாம்புபிடித் தன்ன
வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின்
மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து
வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக்
கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப்
புகழ்வினைப் பொலிந்த பச்சையடு தேம்பெய்
தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்
பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக்
கூடுகொ ளின்னியங் குரல்குர லாக
நூனெறி மரபிற் பண்ணி யானாது . .230

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவு
மிளையோர்க்கு மலர்ந்த மார்பினை யெனவு
மேரோர்க்கு நிழன்ற கோலினை யெனவுந்
தேரோர்க் கழன்ற வேலினை யெனவு
நீசில மொழியா வளவை மாசில்
காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப்
பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்
காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் . .240

பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்
வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்த்த
விளங்கதிர் ஞாயி றெள்ளூந் தோற்றத்து
விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி
யானா விருப்பிற் றனின் றூட்டித்
திறல்சால் வென்றியடு தெவ்வுப்புல மகற்றி
விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி
நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்
வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு
பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி . ..250

யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்
கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்
டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியடு
சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத்
ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல
வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு
மாசெல வொழிக்கு மதனுடை நோன்றாள்
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ ..260

யன்றே விடுக்குமவன் பரிசின் மென்றேட்
டுகிலணி யல்குற் றுளங்கியன் மகளி
ரகிலுண விரித்த வம்மென் கூந்தலின்
மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித்
துணிமழை தவழுந் துயல்கழை நெடுங்கோட்
டெறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னிக்
குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்
செல்லிசை நிலைஇய பண்பி
நல்லியக் கோடனை நயந்தனிர் செலினே. . . .269

பெருவிழா அழைப்பிதழ்

எழுகடற்றுறைக்கும் முதல் துறையாம் வேம்பாற்றின் பாதுகாவலராகிய ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் வருடாந்திர மகோற்சவ பெருவிழா வரும் 11.01.2018 அன்று மாலை 6.30 மணியளவில் திருக்கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகி 28.01.2018 அன்று காலை 8.30 மணியளவில் கொடியிறக்க வைபவத்துடன் நிறைவடைகிறது. 

மகா ஆடம்பர பெருவிழாவிற்கான மாலையாராதனையானது 19.01.2018 அன்று மாலை 6.30 மணியளவில் வேம்பாறு திவ்ய இஸ்பிரித்து சாந்து சர்வேஸ்ரனின் ஆலயத்தில் நடைபெருகிறது. பாதுகாவலரின் மகோற்சவ நகர்வலப் பவனியானது 19.01.2018 இரவிலும் 20.01.2018 அதிகாலையிலும் நடைபெறுகிறது. பவனியைத் தொடர்ந்து மகா ஆடம்பர பெருவிழா திருப்பலியானது 20.01.2018 அன்று நண்பகல் 11.30 மணியளவில் நடைபெருகிறது.

ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலத்தில் 20.01.2018 அன்று மாலை 6.30 மணியளவில் மாலையாராதனை நடைபெறும். தொடர்ந்து பாதுகாவலரின் திருத்தலைமுடி இரவு முத்தி செய்ய தரப்படும். 21.01.2018 அன்று காலை 7.00 மணியளவில் திருத்தலத்தில் பெருவிழா திருப்பலியும் நடைபெறுகிறது. 

இவ்விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு பாதுகாவலரின் அருகிருப்பினைப் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அழைப்பில் மகிழும் 

வேம்பாற்றுவாசிகள்

முந்நீர் விழா

Rare Book Collection

முந்நீர் விழா

ஆசிரியர் : கி. வா. ஜகந்நாதன்

1958 

Download Link 

சங்க இலக்கியத்தில் பரதவர்

சங்க இலக்கியத்தில் பரதவர் பற்றிய வரலாற்று சான்றுகள்

பதிற்றுப்பாட்டு

பேர் எழில் வாழ்க்கை
எழுத்தாளர்: காசறு செய்யுட் பரணர்

ஐந்தாம் பத்து 8

துறை: இயன்மொழிவாழ்த்து

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கு

பெயர்: பேர்எழில் வாழ்க்கை

பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி
ஒண்நுதல் விறலியர்க்(கு) ஆரம் பூட்டிக்
கெடல்அரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
கடலொ(டு) உழந்த பனித்துறைப் #பரதவ!
ஆண்டுநீர்ப் பெற்ற தாரம் ஈண்(டு)இவர் 5

கொள்ளாப் பாடற்(கு) எளிதின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன்எனத் தத்தம்
கைவல் இளையர் நேர்கை நிரைப்ப
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
முனைசுடு கனைஎரி எரித்தலின் பொரிதும் 10

இகழ்கவின் அழிந்த மாலையொடு சாந்துபுலர்
பல்பொறி மார்பநின் பெயர்வா ழியரோ
நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவின்
பொழில்வதி வேனில் *பேர்எழில் வாழ்க்கை* 15

மேவரு சுற்றமோ(டு) உண்(டு)இனிது நுகரும்
தீம்புனல் ஆயம் ஆடும்
காஞ்சிஅம் பெருந்துறை மணலினும் பலவே.

பாண்டிய வம்சம் மீனவ வம்சமா?


திருவிளையாடல் புராணத்தின் ஆசிரியர் பரஞ்சோதி முனிவர். இவரது காலம் கி.பி.16 ஆம் நூற்றாண்டு. மதுரை மீனாட்சியம்மை பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றி சிவபெருமானின் திருவிளையாடல்களை பாடும் படி கூறியமையால் இந்நூலை பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

3363 பாடல்களைக் கொண்ட திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளாவன:
  • மதுரைக்காண்டம் - 18 படலங்கள் 
  • கூடற்காண்டம் - 30 படலங்கள் 
  • திருவாலவாய்க் காண்டம் - 16 படலங்கள்


இவற்றில் மதுரைக் காண்டம் கூறும் பாடல்கள் வரிகள் சில .....

"வரை செய்தார் முடிச்சுந்தர மீனவன்"  - பாடல் 994

"வீங்கிய மானமுக்க மீனவன் மதுரை சூழ்ந்தன்" - பாடல் 1095

" 'தானவர் மன்னவர்' மோகசரந்தொடுத் தெளிந்தானாக மீனவன் அதனை ஞானவாளியில் விளந்து மாய்ந்து" - பாடல் 1104



இவற்றில் திருவாலவாய்க் காண்டம் கூறும் பாடல்கள் வரிகள் சில .....


"விரதமு மறனுமன்றி மீன்படுத்திழிஞரான 
பரதவர் மகளா கொன்று பணித்தனன் பனித்தலோடும்" - பாடல் 2653

"வீங்குநீர்ச்சடையநியாணிங்கு மெலல்லியல் பரிவு நோக்கி 
வாங்கு  நீர்காணல் வலைஞர் கோன் மகளாய் விக்கி" - பாடல் 2654

"நாயன் ஏவலாலோ வலைஞர் மாதர் இயது நந்திப்புத்தே" - பாடல் 2659

"செடிய காருடற் பரதவர் தீண்டி மிடைத்தா 
நெடிய வாழியிற் படுத்த மன்றிரை கொடு" - பாடல் 2669 

"தக்க மேருமோ மலைகளோடைடயிற் றவத்தான் 
மிக்க மீனவன் வேள்வியிற் விரும்பிய மகவாய்" - பாடல் 2671

"அருந்தவ வலைஞர் வேந்தன் அதிசய மகத்துட்டோன்ற" - பாடல் 2697  


இது போன்ற பெரும்பாலான செய்யுட்களில் மீனவன், பரதவர் மற்றும் வலைஞர் கோன் என்றும் பாண்டிய அரசர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிகிறது. ஆக இதன் மூலம் மீனவ வேந்தனே பாண்டிய வேந்தன் என அறிய முடிகிறது. 

மன்னார் மறைமாவட்டத்தின் 3ஆவது ஆயரின் வரவேற்பும் பணிப்பொறுப்பேற்பும்


மன்னார் மறைமாவட்டத்தின் 3ஆவது ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் வரவேற்பும் பணிப்பொறுப்பேற்பும் 30 டிசெம்;பர் 2017 அன்று கோலாகலமாக நிறைவேறியது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை திருப்பலியை ஆரம்பித்த பின்னர் புதிய ஆயரின் நியமனம் தொடர்பான திருத்தந்தையின் ஆணைமடல் திருத்தந்தையின் பிரதிநிதியால் ஆங்கில மொழியில் வாசிக்கப்பட்டது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பை ஏ.இராயப்பு அடிகளார் வாசித்தார். 

புதிய ஆயரின் நியமனம் தொடர்பான திருத்தந்தையின் ஆணைமடல் வாசிக்கப்பட்டவுடன் இந்தப் புதிய நியமனத்தை வரவேற்பதன் அடையாளமாக அனைவரும் கரவொலி எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மன்னார் மறைமாவட்டத்தைப் புதிய ஆயருக்குக் கையளிப்பதன் அடையாளமாக அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை பேராலயத் திறப்பை புதிய ஆயருக்குக் கையளித்தார். பேராலய நற்கருணைப் பேழையின் திறப்பை பேராலயப் பங்குத்தந்தை பெப்பி சோசை அடிகளார் புதிய ஆயருக்குக் கையளித்தார்.

ஆயருக்குரிய ஆட்சியதிகாரங்களைக் குறிக்கும் செங்கோலை அப்போஸ்தலிக்க பரிபாலகர் புதிய ஆயருக்கு வழங்கினார். பின்னர் அப்போஸ்தலிக்க பரிபாலகரும் பேராயர் மல்கம் கர்தினால் றஞ்சித் ஆண்டகையும் புதிய ஆயரை அழைத்துச்சென்று மறைமாவட்ட ஆயருக்குரிய பேராலயத்தின் அதிகாரபூர்வ இருக்கையில் அமர்த்தினர். இலங்கையின் அனைத்து ஆயர்களும் கூடி நின்று மன்னார் மறைமாவட்டத்தை பொறுப்புக் கொடுத்தனர். பின்னர் மன்னார் மறைமாவட்டக் குருக்களும் மன்னார் மறைமாவட்டத்தில் பணி செய்யும் குருக்களும் வரிசையாக வந்து புதிய ஆயரின் மோதிரத்தை முத்தமிட்டு தமது வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் கீழ்ப்படிவையும் தெரிவித்தனர்.

விடிந்தகரை 2.04


பரதவ குலத்து மாமுனி சித்தர் சாமிபிள்ளை

சாரட் வண்டியில் வந்து கொண்டிருந்த பரதவவர்மனின் எண்ணங்கள் சாமிபிள்ளையை பற்றி தனது குருகுல நண்பன் உவரி சந்தானபட்டங்கட்டி மகன் முத்தையாவை பற்றி மனதுக்குள் அசைபோட்டது.

ஏற்கனவே சைவ சித்தாந்த வழி மரபில் வாழ்ந்து வந்த உவரி பரதவர்கள் நெடுங்காலமாக சுயம்புலிங்க சுவாமியை வழிபட்டு வந்தனர் கோவில் சம்பந்தமாக பக்கத்து யாதவருடன் ஒரு கலவரம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதன்பின்னர் வந்த காலத்திலே கடல் உரிமைக்காக நாயக்க, மூரினத்தை எதிர்த்து பரதவ குலமே போரிட்டது மதம் மாறியது இந்த நிகழ்வுகளால் கோவில் உரிமை மறுப்பு பூசை புனஸ்கார மறுப்பு கடும் கடல் வரி விதிப்பு என நாயக்க அரசு கடலோரத்து பரதவர் மீது தொடுத்த ஆன்மீக பலாத்காரத்தால் விரக்தியில் இருந்த உவரி பரதவர்களை தேற்றுவதாகவும் பாதுகாப்பதாகவும் சொல்லி மீண்டும் அவர்கள் பழைய மத சடங்குகளில் கலந்து கொள்வதை தடுக்கும் விதமாக அங்கிருந்து இரண்டு மூன்று காததூரத்திற்கு மேற்க்காக சவேரியாரால் உவரி மக்கள் குடியமர்த்தப்பட்டார்கள்.  

ஆனாலும் தங்களது பழைய தெய்வத்தை மறக்காது ரகசியமாய் வழிபட்டவர்கள் அதிலும் இருந்தார்கள். இதற்கு மாறாக காவி உடையும் கந்தனின் வேலுமாக சடைமுடியோடு ஓம் முருகா! ஓம் முருகா!! என உச்சரித்தபடி பரதவர்களின் நடுவே நடமாடிக் கொண்டிருந்தவர் தான் பரதவகுலத்து மாமுனி சாமிபிள்ளை. ஆனால் அவரது பெயர் கடம்பன் என யாரோ சொன்னதாக பரதவ வர்மனுக்கு நினைவு.

பரதவகுலம் மதம் மாறும் முன்பு வரை அவரை சாமியாக பரதவ குலமே கொண்டாடியதால் சாமிபிள்ளை ஆகிவிட்டார். அதை காட்டிலும் அவரை சித்தராகவே பரதவ குலமே வரிந்து கொண்டது. சாமிபிள்ளையை விட 10 வயது இளைய தம்பி 82 வயதில் இறந்து போனார். அவர் மகனுக்கே இப்போது 50 தாண்டிவிட்டது அப்படியானால் சாமிபிள்ளையின் வயது எவ்வளவு? யாருக்குமே தெரியாது.

எண்பெரும் யோகப் பயிற்சியால் எண்பெரும் சித்திகளை பெற்றவர். இரசவாதம், வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகாலட்சணம், கைரேகை சாத்திரம், வான சாத்திரம், புவியியல், தாவரயியல், சோதிடம், கணிதம் முதலியதுறைகளில் கைதேர்ந்து விளங்கிய அவரை சித்தராக பரதகுலமே கொண்டாடியதில் மிகையேதுமில்லை! வியப்பேதுமில்லை!!

பொதுவாக சித்தர்கள் மன ஓட்டமானது உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான் உருவம் இல்லா உண்மை அவன். இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை தானும் அடைவார் அந்நிலை தன்னை என்பது தான் சித்தர் கொள்கை மாறாக பரதவகுலத்து மாமுனி சாமிபிள்ளை முருகனை ஒம்கார ஸ்ருதியிலே தியானித்து பூஜித்து ஆர்பரித்து வந்தார்.

உவரி கடல்புரத்தை தாண்டி வடக்கே கடம்பு மரக்காட்டிலே தனி குடில் அவருடையது. 100 வயதை தாண்டிய பிரம்மச்சரிய ஆண்டியின் ஆஸ்ரமத்தை நிர்வகித்து வந்தவர்கள் அவரது சீடர்களே. உடல்நலன் பாதிக்கப்பட்டு நோயுடன் வருபவர்களின் கையின் நாடித் துடிப்பின் தன்மைகளை அறிந்து கொண்டு, அவரது ஆஸ்ரமத்திலே வளர்க்கும் மூலிகைச் செடிகளின் இலைகளைப் பொடியாக்கியும், தைலமாகவும் தருவார்.  இம்மருந்து உடலில் மெதுவாகக் கரைந்து, இரத்தத்துடன் கலந்தபின் நோய் முற்றிலும் குணமாகி விடும். தீராத வியாதிகளும், தீர்த்து வைத்திடும் வைத்தியம் பரதவ மாமுனி சாமிபிள்ளையின் சித்த வைத்தியம்.

தனது குருகுல வாழ்கையில் சாமிபிள்ளை தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் சீடர்கள் தங்களோடு இருந்ததாக நினைவில்லை அவ்வப்போது காணாமல் போய்விடுவார். அவரது தனிகுடிலில் வாசல் எப்போதும் மூடியே இருக்கும். அவர் உள்ளே நடந்து செல்வதை மட்டுமே பாக்க முடியும், வெளியேறுவதை இதுவரை கண்டதில்லை. அவர் இல்லாத சமயம் ஆஸ்ரமத்தில் சுற்றி திரியும் பூனையை கண்டால் சீடர்கள் அனைவருக்கும் பயம். காரணம் கூடு விட்டு கூடு பாயும் பிராகமிய சித்தில் வல்லவராய் இருந்தார்.

ஆனால் யாருக்காவது உயிர் போகும் தருவாய் என தூக்கி கொண்டு ஓடி வரும்போது யாரும் எதிர்பாரா விதத்தில் தனது குடில் கதவை திறந்து வெளியே வருவார் என்பதுதான் மிகப் பெரும் ஆச்சரியம். எதை உண்பார் ?எப்போது உண்பார்? என்பதை யாரும் கண்டதில்லை.

எல்லோரும் வருகின்ற போர்த்துகீசிய அடியார்களைப் பின்பற்றி நடந்த போதும் அவர் அங்கேயிருந்து முருகனை சேவித்துக் கொண்டிருந்தார். இது, வரும் மத போதகர்களுக்கு எரிச்சலாய் இருந்தாலும், அவர்கள் வழி குறுக்கிடாது பார்த்து கொண்டார். ஆனாலும் அவர் ஒரு பொழுதும் அவர் கும்பிட்ட முருக கடவுளை விட்டு கொடுக்கவில்லை. அந்த முருக பித்தர் தான் சவேரியாரோடு திருச்செந்தூரில் மந்திர தந்திர விளையாட்டில் ஈடுபட்டவர். இவ்வாறு சாமிபிள்ளையின் அருமை பெருமைகளை நினைத்து, நினைத்து திகைத்தபடி பரதவ ர்மன் அரசரது சாரட்டிலே முட்டம் திரும்பிக் கொண்டிருந்தார்.

ஜனசத்தமில்லாத அந்த இருண்ட பனைமர காட்டில் ஒற்றை ஆல் மரத்தின் கீழ் பனை ஓலை சருகு கொளுத்திய வெளிச்சத்தில் கருவாட்டு வியாபாரி விளைக்காரர் ஒச்சியாபிள்ளையும் மரக்காரன் கரிசட்டியும் பார்வைகாரன் மாடன் கொண்டுவந்த ஒரு பானை மொந்தகள்ளை பனையோலை பட்டை கொண்டு மொண்டு மொண்டு  குடித்தபடி பிதற்றிக் கொண்டிருந்தனர்.

ஏலே கரிசட்டி! மாப்பிள்ளை என்னத்தல சொத்து வச்சிருக்க.... பாத்தியா முட்டம் போறவரைக்கும் ஒச்சையா விளைதாம்லே...னு ஒச்சியம் வைக்க பதிலுக்கு மற்றவர் ஓய் நா கரிசட்டி இல்ல பர்ணாந்து அந்தோணி பர்ணாந்து நினைச்சிகிடும்.... ஆமா இவரு நாலா, மூணா முறிஞ்சு கடலை கடைஞ்சி சம்பாதிச்சாரு..... நெத்தலி பாடு காலத்திலயும், சாவாளை பாடு காலத்திலயும் எங்க வைத்தில அடிச்சி வாங்கின விளைதானுவே இது......

அடப்பாவி பய கரிசட்டி! என் விளை கள்ள குடிசிட்டு என்னையே யேசுறானே... போதை கூடிபோச்சா என ஒச்சயா நினைத்து கொண்டே அப்போ நான், எங்க ஐயா, அண்ணன் தம்பிமார் கடலுக்கு போய் சம்பாதிக்கலையா என கேட்க.... கரிசட்டி விட்டபாடில்லை.. ஓய் உமக்கும் எனக்கும் ஓர் பந்தயம்வே, கன்னியாரி பரந்தாவடையில (கன்னியாகுமரி வடக்கு கடற்கரை) ஒத்தையில மரத்த இறக்கி, ஒத்தையில தொடுத்து, ஒத்தையில பாய உசத்தி, திருவணை தாண்டி, இட்டியல் தாண்டி, கல்லு தாண்டி தெக்க போய்டு வாரும், என் ஒத்தக்கர மீசைய எடுக்கேன். கரிசட்டி புலம்பினாலும், ஒத்த மீசை பந்தயத்தை விரும்பாத ஒச்சயா பிள்ளை, மாப்பிள்ளை உனக்கு ஏறி போச்சு மாப்பிள்ளை, விடு வா கிளம்பலாம் என்றாலும் கரிசட்டி இடைவிடாது பேசி கொண்டிருந்தார்.

என்ன சொத்த மயிரு வச்சிருக்க? அதான் பாக்கேனே, ஆயுசு முழுசும் கடனில்லாம கள்ளு குடிக்கலாம், மொக்களுக்கு நொங்கு கிழங்கு பயினி குடுக்கலாம் வெற என்னத்த மயிரு உமக்கு கிடைக்கும்.

வியாபாரிமார் எவனபாத்தாலும் விளை வைச்சிருக்கேங்கிறான். விளைக்குள்ளாற போய் பாத்தாத்தான் தெரியுது என்னத்த வைச்சிருக்காவுனு... மச்சான் ஒச்சியா மச்சான் சொன்னா கேளுங்கவே... காச குடுங்க, பணத்த குடுங்க பாண்டி பரவமார் சக்தியை குடுத்து தொலைக்காதிய பின்னால உங்க பரம்பரைக்கே எதிரா வந்து நிக்கும் பாத்துகிடும்.... ஏ பர்னாந்து மாப்பிள்ளை கிளம்பு ன்னு ஒச்சியாபிள்ளை சொன்னாலும் கரிச்சட்டி பேசிக் கொண்டே....யிருந்தான்.

இப்போ சுத்து வட்டாரத்துல உம்ம பார்வைகாரன் மாடன் தான் பெரிய ஆளு தெரியுமாவே உமக்கு, உம்ம விளை கள்ளு தான் கோவளத்துக்கும் கன்னியாரிக்கும் கூட்டபுளிக்கும் ஊடு ஊடாய் போய்டு இருக்கு. அப்போது தூரத்தில் சாரட்டு வண்டியின் குதிரை சத்தம் எதிரொலிக்க ஒச்சியாப்பிள்ளை பேச்சை திருப்பும் விதமாக, எலே மாப்பிள்ளை நிறுத்து சத்தத்த கேட்டியா சாரட்டு வருதுல, கங்கையா வாராவு, இல்லை இது அவரு வண்டியில்லை சத்தம் குறைவா கேக்கு என கரிசட்டி சொல்ல...

எட்டு பட்டை அடிச்சாலும் சரியா சொல்றீருவே மாப்பிள்ளை எப்படி சொல்ற கங்கையா சாரட்டு இல்லை,....

அது நம்ம பெருமாள் அரசர் சாரட்டு, நாலு குதிரை சத்தம். கங்கைய யூட்டுல 8 குதிரை உண்டு ஆன இண்ணைக்கு அரமனை சாரட்டுல போயிருக்காருனு கரையில சொன்னானுவ....

பாத்திய பாத்திய கரிசட்டி இல்லை பர்ணாந்து, அரசன் கிட்ட நாலு குதிரை கங்கன் கிட்ட எட்டு குதிரை  புரிஞ்சிதால  உனக்கு மாப்பிள்ளை.

ஏதோ புரிஞ்சது போல கரிசட்டி சொன்னான், புரிஞ்சிட்டு மச்சான் கால காலமா பாண்டி பரவமாரு கவுரதிவே அது எங்க மச்சான் மட்டும் என்னா குறைஞ்ச ஆளா ஒரு கலைய கள்ளுக்கு ஊரு பூரா பனங்காடு, பார்க்க பார்வைகாரன் அவன் குடும்பம் ஆனாலும் இது சொந்த விளை கள்ளு மச்சான் அதான் வே மாப்பிள்ளை என ஒச்சியா சொல்லமாறி மாறி பிதற்றி உளற்றி கொண்டிருக்க அரசரது சாரட் ஒச்சியா விளையை கடந்து போய் கொண்டிருந்தது.

முட்டம் மணல்முகட்டிலே அரசரது சாரட்டின் ஈறிணை அரபிக்குதிரைகள் திக்கி திணற குரல் எழுப்பி விசை சொடுக்கி சாரியன் அதட்டி, உருட்டி சவுக்கடி கொடுத்து உசுப்ப, உசுப்ப இருளிலே கலந்த அந்த ஆரவாரம் பரதவவர்மனின் முட்டம் வருகையை குடில்களுக்குள் ஓய்வெடுத்து இருந்த முட்டத்து பரதர்களுக்கு உணர்த்தியது.

பரதவவர்மன் தன் தரவாட்டை அடையும் முன்னரே அங்கே தீபந்த வெளிச்சத்தில் பரதவர்கள் கூட்டமாய் இருப்பதை கண்டார். தராவட்டை நெருங்க நெருங்க பதட்டம் கூடியது. காரணம் சாரட்டிலே சென்று வரும்போதேல்லாம் வரவேற்க காத்திருக்கும் தன் உயிர் மனையாட்டி சந்தமரியா இல்லை மாறாக பரதவர்மனின் ஆத்தா கங்கம்மை அங்கே நின்று கொண்டிருக்க,

ஏதோ விபரீத நிலமை என பரதவர்மன் நினைத்தபடி சாரட்டில் இருந்து அவசரகதியாய் கீழே இறங்கினான். ஓடி வந்த ஆத்தா பரதவர்மனை கட்டி அணைத்து ஐயா வந்துட்டாரையா.. உங்க சாமி வந்துடாரையா நம்மோட பரதகுல மாமுனி வந்துடாரையா என திக்கி திணறி சொல்ல சொல்ல பரதவ வர்மனுக்கு உடம்பெல்லாம் புல்லெரித்து. 

கண்கள் சொக்க கண்ணீர் வடிந்தது. அடங்காத வேட்கையோடு ஆத்தாளின் காதிலே கேட்டான். சாமி எங்காத்தா….? ஆத்தா சொன்னாள். வெள்ளியல் பாறையில தியானத்துல நிக்காரு.

சாயங்காலம் ஊரே வெள்ளியல் கிட்டே கூடீ நின்னுச்சு... என்னானு பாத்தா சாமி ஒத்த கால்ல தியானத்துல இருந்தாரு... நாதான் போய் சாமி பத்தி சொல்லி கூட்டத்த கலைச்சேன்னு ஆத்தா சொல்ல.... பரதவர்மனுக்கு உடனே மனதுக்குள் பொறி தட்டியது. அம்மச்சா கோவில் தேர் திருவிழா பிரச்சனைக்கு அவரை அழைக்க நினைத்த உடனே அவருக்கு தெரிந்து அறிந்து வந்துவிட்டார் போல பரதவ மாமுனி சித்தர் சாமிபிள்ளைன்னா சும்மாவான்னு மனசுக்குள் தனது குருவை பற்றிய கர்வத்துடன் கிழக்கே வெள்ளியலை நோக்கி பரதவ வர்மன் புறப்பட, எய்யா சாமிய பாக்க குளிச்சி எடுத்துட்டு சுத்த பத்தமா போங்கய்யா.... என்று ஆத்தா கங்கமா சொல்ல அதுவும் சரிதான்னு நினைத்தார் பரதவவர்மன்.

அப்போது வீட்டின் முன்பு கூடியிருந்த  பரதவ கூட்டத்தில் இருந்து ஒருவர் ஐயா யாரையா அவரு தாவுல மடி வாங்கிட்டு இருக்கும் போது தடார்னு ஒரு ஆளு தாவி போறத பாத்து பயந்தே போயிட்டோம் கூட்டு மடிக்காரனுவளும் பாத்து சொன்னானுவ ஏதோ உவரி முனின்னு, கரைக்கு வந்தா வெள்ளியல தியானம் செயிரத பாத்தேன். உவரி முனி புள்ளபிடிகாரனா சூனியக்காரனா, உங்க ஆத்தா நல்லவனு சொல்றாவ, சாமிக்கு கூட சொல்லி உட்டாச்சு அவுங்க விசயதாழைக்கு போயிருக்காவளாம் அதனை கேட்டு ஆத்திரமான பரதவவர்மன் கோபத்தை மனசுக்குள் அடக்கி கொண்டு,

மாமா நீங்க நினைக்கிறது சரியில்லை... சாமியும் வரவேண்டிய அவசியமில்லை... சாமிகெல்லாம் பெரிய சாமி வந்துருக்காரு.... கங்கன் சொல்றேன் ஒன்னுமே நடக்காது. போயிட்டு வாங்க கோரணி மாமா என சொல்ல,  ஏ தங்கச்சி மருமவபிள்ளைக்கு மாமா யாருனு சொல்லிக் குடுக்கலையா? நா கோக்கியார் மருமவனே.  அந்த.......... பெயரை சொல்லி கேவலபடுத்தாதியும், என்று சொன்ன மறு கணமே கூட்டத்தில் இருந்த கோரணியார் ஏல யாரல சொல்ற ........ மவனே என மாறி மாறி முட்டி மோதி கொள்ள பரதவவர்மனும் மற்றவர்களும் அவர்களை சமாதானபடுத்தி அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 

மீதம் இருந்த மக்களை ஒரு வழியாக பேசி அனுப்பிவிட்டு, வீட்டின் இருபக்க திண்ணை நடுவே உள்ள படிகட்டில் காலை வைக்க, மனைவி மரியம்மா கொண்டு வந்த சொம்பு தண்ணீரை வாங்கி காலை நனைத்தார். கண நேரத்தில் அவரது மூக்கை துளைத்த சுருட்டின் வாசம் நோக்கி தலையை திருப்ப திண்ணை இருட்டிலே சுருட்டின் கங்கு வெளிச்சம். தாடாரென பாய்ந்து படியேறி சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார். சுருட்டை புகைத்தபடி இருட்டில் இருந்தார் பரதவகுலத்து மாமுனி சித்தர் சாமிபிள்ளை.

...கடல் புரத்தான்...

வேம்பாற்றுவாசிகளின் மரபு கீதம்


வேம்பாற்று மண்ணின் மைந்தர் மேதகு முனைவர். பிடேலிஸ் லயனல் இம்மனுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக பொறுப்பேற்கும் நிகழ்வினை நினைவு கூறும் விதமாக ஒலி வடிவில் தயார் செய்யப்பட்ட வேம்பாற்றுவாசிகளின் மரபு கீதம் 01.01.2018 அன்று புத்தாண்டு நள்ளிரவு திருப்பலிக்குப் பின்னர் அதிகாலை 2.00 மணியளவில் வேம்பார் பரிசுத்த ஆவி ஆலய வளாகத்தில் வெளியிடப்பட்டது. பங்குத்தந்தை. அருட்பணி. பிரதிபன் லிபோன்ஸ் குறுந்தகட்டினை அறிமுகம் செய்து வைத்தார். குறுந்தகட்டின் முதல் பிரதியை கிராம தலைவர் திரு. கெளதமராஜ் பர்னாந்து அவர்கள் வெளியிட திரு. அபூர்வம் கோமஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். 



விடிந்தகரை 2.03

ஆத்திய காலந்தொட்டே இது பரவமார் தேசமாணும் பாண்டியமார் நாடாணும் கங்கன் என்னா கொம்பனா..!! கேள்வி வந்த திசை நோக்கி கோபத்துடன் திரும்பினார்... அரசர் வீர ரவி வர்ம குலசேகர பெருமாள். அங்கே அம்மச்சா கோவில் ஆச்சாரியார் அரசரின் கோப பார்வையால் நடுங்கி தலை குனிந்தார். ஆவேசமான அரசர் சொன்னார்

ஓ என்டே கொச்சி ஆச்சாரி
எந்தா பரைஞ்சி
கொம்பனா ணோன்னு
கங்கமார் மாத்திரமல்ல, கங்கன்டே
பரவமாரு ஒக்க வலிய கொம்பமாராணும்
அவமாரு சரியேத்திரம்
நிங்களுக் கெல்லாம் அறிஞ்சோடா பட்சே
ஈ திருவிதாங்கூர் சமஸ்தானத்து
மகராசமாருக்கு ஒக்க அறியாம்

ஆத்திய காலந்தொட்டே இது
பரவமார் தேசமாணும்
பாண்டியமார் நாடாணும்
கொச்சு ஆச்சாரி
ஞான் உரைக்கின்னது உரப்பாணும்
இவமாரே ஆத்திய ஜனசங்கல்பம்
எத்தனை வலிய கொம்பமார்க்கும்
இவமாரு பணிஞ் சிட்டில்லா

பூசை, புனஸ்காரம், 
சாஸ்திரம், சம்பிரதாயம்,
மந்திரம், மாந்திரீகம் ஒக்க
படிக்கானும் படிப்பிக்கானும் 
இவமாரு திறக்காரனாணும்

இவமாரு ஆத்தியமாயிட்டு செஞ்ச தெற்று
சோழ நாட்டு ஆச்சாரிமாரை இவிடே 
திருச்செந்தூர் கோவிலுக்கு வருபிச்சி 
அவமாருக்கு அதிகாரம் ஒக்க விட்டு கொடுத்து 
பட்டம் கிட்டம் மாத்திரம் இவமாருக்கு கிட்டியது. 
பட்சே….. சமுத்திர வருமானம் ஒக்க 
கோவிலுக்கு கொடுத்து ஆனா அவமாரு
நிங்களைபோல ஆச்சாரிமார் 
இபரவமாருக்கு மறுபடியாயிட்டு
செஞ்சது எந்தானுன்னு அறியுமோ!

ஆச்சாரிமார் பரவமார் கோவிலே 
பரவமார் சம்பாத்தியத்திலே சுகிச்சிட்டே 
நாயக்க அரசமார்கிட்டே
நுணைபறைஞ்சி பரவமார்க்கு அவமார்க்கு
பிரஷ்னை உண்டாக்கி
சாய்பு மாரும் கூடிகளிச்சு 
அவமாரு கடலை தெத்தி எடுத்து 
கலவரங்களாயிட்டு போனபோழ்
பரவமாரு அச்சமாரை தேடிபோய் 
மதம்மாறான் காரணமாயி

ஆத்திய காலம் தொட்டு கங்கமார் 
பாண்டிமாரோட தளபதி 
நம்மளட காலத்திலும் அவமார் தளபதி தன்னே 
பாரவமார் ஒக்க அம்மச்சாவை நிந்திச்சாலும் 
கங்கமார் இன்னும் மாறி ட்டில்லா 
வலியச்சன் சேவியரையும் நமக்கு பரிச்சயப்படுத்தி 
வலியச்சனை கொண்டு நாயக்கமாரை 
கோட் டியாத்து கரையில
பேடிபிச்சி ஓடான் செய்பிச்ச கொம்பனானும்
இ கங்கமார்

ஆதிவசம் வலியச்சன் சேவியர் 
நம்மள இரட்சித்திலேங்கில் 
கேரளத்து தரவாடு ஒக்க
நாயக்கமாரு நசிச்சு ஒழிப்பிச்சிருக்கும் 
பட்சே
கங்கமார்க்கு நம்மளோடு தேச்சியமானும்
மங்கல துறை கொட்டார கலவரத்தின்டே
விசேஷம் அவமாரு நம்மோடு பிணங்கி போயி

இப்போழும் பரவமார் கங்கமார் 
இவிடே உண்டேங்கில் 
கொச்சு ஆச்சாரி நீங்களுக்கு
இவிடே பணியில்லா….மனசிலாயோ!
சொல்பம் மிண்டாதிறுக்கணும் கேட்டோ...

என படபவென தன் மனதில் உள்ளதை பொழிந்து தள்ளினார் கேரள அரசர் வீர ரவி வர்ம குலசேகர பெருமாள் மேலும் ஏதேதோ யோசித்தவாறு தனக்குத்தானே மெதுவாக பேசிக் கொண்டார்.

ஒவ்வொரு கொல்லமும் சித்திரை விசு விசேஷம் தொட்டு கங்கமார் அரசமனைக்கு வரும். ஈ கொல்லமும் என்னை வந்து கண்டுட்டுண்டு. 

அம்மச்சா அம்பல பிரஷணம் களையான் தாத்பரியம் 
கங்கன்மார் மாத்ரமே அறியும் 
அவமாரை விழிப்பிச்சி சோத்திச்சாலோ
என எண்ணி முடிப்பதற்க்குள் 
தளவாய் என சப்தமிட 
நின்று கொண்டிருந்த தளபதி விரைந்து 
அரசருக்கு அருகே வந்து நின்றார்

தளவாய்…. ஆ.. கங்கமார் தரவாடு 
இவிடருந்து தொட்டடுத்த குமரி முட்டமானும் 
அவமாரை மாகராசா விளிக்கின்னு 
பரைஞ்சி மரியாதயாயிட்டு 
சாரட் வண்டியில விழிச்சிட்டு வா
உரைபாயிட்டு வரும் என நம்பிக்கையோடு 
தன் தளபதியை அனுப்பி வைத்தார்.

மாலை கருக்கலில் கொட்டாரத்து அரண்மனை பரப்பரப்புக்குள்ளானது. அரண்மனையின் பூட்டிய கதவுகளுக்குள் கங்கனார் குல வாரிசு ஒருவர் மாகாராசவுடன் ஓசைபட நடத்திய விவாதம் கதவு இடுக்கு வழி வெளியே முனகலாய் வெளிபடர்ந்தது.

நீண்டபொழுது கடந்து கதவு திறந்து அரசரே வாயில் வரை வந்து வழியனுப்பிய போதுதான்  கொட்டாரத்து சிப்பந்திகளும் அதிகாரிகளும் அங்கு பணிபுரிந்த யுவதிகளும் கண்டனர். 25 வயது இளைஞன் ஒருவன் சூரிய ஒளி போல் மேனி தகதகக்க பூணூல் கொடி படபடக்க மடுதா பாச்சின வேட்டியும் துண்டுமாய் பவித்திர புருசனாய் நடந்து வந்தான். அவன் தான் கங்கன் குல வாரிசான இளம் பரதவ வர்மன்.

மகராசனுடன் உரையாடியது இக்கட்டான சமஸ்தானத்து நெருக்கடி காலத்தில் கங்கன் வம்சாவளியை மகராசா நினைவிற் கொண்டதை எண்ணி புளங்காகிதத்தோடு மகராசாவின் சாரட் வண்டியில் தன் தரவாடு நோக்கி திரும்பினாலும் பரதவர்மனின் எண்ணம் முற்றிலும் அலைபாய்ந்து கொண்டே இருந்தது, பாரம்பரிய ராஜவிசுவாசம் பதட்டப்பட வைத்தது.

சமஸ்தானம் அளித்த பணியை நினைத்த பரதவர்மனுக்கு சிறிது நெருடலாய் இருந்தது. பரதவரின் அண்மை தேடும் அம்மச்சாவின் ஏக்கம் ஏதோ இனம்புரியாத பாரத்தை தந்தது. தன் பரதவ இன சொந்தங்கள் பிரிவுபட்டு கிடப்பதால் அம்மச்சாவின் தேர்வடத்தை தொட்டு இழுக்க, எவரை அணுக எதை சொல்லி அணுக என புரியாது குழம்பி தவித்தபோது, மின்னலாய் இடியாய் மழையாய், பரதவர்மனின் நினைவினில் பொழிந்த உருவம் சாமிப்பிள்ளை…. உவரி சாமிப்பிள்ளை.

சடைமுடி நாதர், அடுத்த நொடி நடப்பதையும், தன் நாடி வழி உணரக்கூடிய சித்தர் ஆறுபடை முருக பெருமானின் பித்தர் பரதவர்மனின் வசிஷ்டன் 12 வருடங்களாக பரதவர்மன் சாமிபிள்ளையின் சீடனாக அவரோடு குருகுல வாழ்க்கை வாழ்ந்து வந்தவன் அதனாலே தான் பரத குலத்து மாமுனி சாமிபிள்ளையை தவிர எவரையும் நினைக்கவும் அழைக்கவும் பரதவர்மனுக்கு முடியவில்லை. ஆனாலும்

பரதவர்மனுக்கு சாமி பிள்ளையை உடனே காண்பதெப்படி தலை கிறுகிறுத்தது. பரதவ மாமுனி சாமிப்பிள்ளை அறுபடை வீட்டில் எந்த வீட்டில் 
தியானித்து இருக்கிறாரோ…? இல்லை உவரியிலே ஓய்வெடுக்கிறாரோ…!குழம்பியபடி, புலம்பியபடி, பரதவ வர்மன் பயணிக்க…

கங்கனாரின் முட்டத்து ஈரடுக்கு மட்டுப்பா வீட்டிலிருந்து கூப்பிடும் தூரத்திலிருந்த வெள்ளியல் பாறையில் ஒற்றைக்காலில் நின்று தாய் கடல் நோக்கி தியானித்துக் கொண்டிருந்தார் சாமிப்பிள்ளை. முற்றும் அறிந்த மாமுனியை விதி குமரிக்கு அழைத்து வந்ததில் வியப்பேயில்லை.

ஆனால் அவரே விளையாட குமரிகரைக்கு விரைந்தாரோ….? அவ்விதம் எண்ணுவதிலும் தப்பில்லை ஆக திருவிளையாடல் ஆரம்பம்...
அதையும் தான் பார்ப்போம்….?

…….. கடல் புரத்தான் ……..
About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com