பாண்டிய வம்சம் மீனவ வம்சமா?
திருவிளையாடல் புராணத்தின் ஆசிரியர் பரஞ்சோதி முனிவர். இவரது காலம் கி.பி.16 ஆம் நூற்றாண்டு. மதுரை மீனாட்சியம்மை பரஞ்சோதி முனிவரின் கனவில் தோன்றி சிவபெருமானின் திருவிளையாடல்களை பாடும் படி கூறியமையால் இந்நூலை பரஞ்சோதியார் இயற்றியதாக நம்பப்படுகிறது. சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்ட அன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த திருவிளையாடல்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
3363 பாடல்களைக் கொண்ட திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளாவன:
- மதுரைக்காண்டம் - 18 படலங்கள்
- கூடற்காண்டம் - 30 படலங்கள்
- திருவாலவாய்க் காண்டம் - 16 படலங்கள்
இவற்றில் மதுரைக் காண்டம் கூறும் பாடல்கள் வரிகள் சில .....
"வரை செய்தார் முடிச்சுந்தர மீனவன்" - பாடல் 994
"வீங்கிய மானமுக்க மீனவன் மதுரை சூழ்ந்தன்" - பாடல் 1095
" 'தானவர் மன்னவர்' மோகசரந்தொடுத் தெளிந்தானாக மீனவன் அதனை ஞானவாளியில் விளந்து மாய்ந்து" - பாடல் 1104
இவற்றில் திருவாலவாய்க் காண்டம் கூறும் பாடல்கள் வரிகள் சில .....
"விரதமு மறனுமன்றி மீன்படுத்திழிஞரான
பரதவர் மகளா கொன்று பணித்தனன் பனித்தலோடும்" - பாடல் 2653
"வீங்குநீர்ச்சடையநியாணிங்கு மெலல்லியல் பரிவு நோக்கி
வாங்கு நீர்காணல் வலைஞர் கோன் மகளாய் விக்கி" - பாடல் 2654
"நாயன் ஏவலாலோ வலைஞர் மாதர் இயது நந்திப்புத்தே" - பாடல் 2659
"செடிய காருடற் பரதவர் தீண்டி மிடைத்தா
நெடிய வாழியிற் படுத்த மன்றிரை கொடு" - பாடல் 2669
"தக்க மேருமோ மலைகளோடைடயிற் றவத்தான்
மிக்க மீனவன் வேள்வியிற் விரும்பிய மகவாய்" - பாடல் 2671
"அருந்தவ வலைஞர் வேந்தன் அதிசய மகத்துட்டோன்ற" - பாடல் 2697
இது போன்ற பெரும்பாலான செய்யுட்களில் மீனவன், பரதவர் மற்றும் வலைஞர் கோன் என்றும் பாண்டிய அரசர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிகிறது. ஆக இதன் மூலம் மீனவ வேந்தனே பாண்டிய வேந்தன் என அறிய முடிகிறது.
