Welcome to Vembar

'மதி குலத்தோரின் துறையேழின் முதற்றுறையாம் வேம்பாறு'

This site is a treasure trove of historical information about the Bharathas and a pearl trading centres in the Gulf of Mannar. Especially for elegant coastal village of ‘Vembaru’.

Blog
வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

பரத குலத்தோரின் இருபத்தொரு விருதுகளுக்கான விருத்தம்


திங்கள்வம் மிசதிலக  பரதகுல பாண்ட்யர்தம்
ஜெயவிடால் மூவேழ்வகை
செப்புவோம் விவரமா யானையுங்1 காளையுஞ்2
சேவலோ3 டனுமந்தனும்4
சிங்கமும்5 யாளியுங்6 கருடனொடு7 பன்றியுஞ்8


சேல்9 மகரம்10 வேங்கை11 யாவும்12
திகழ் கனக13 மதனுடன் சங்கமுங்14 கப்பலுஞ்15
சிப்பியுங்16 கிளி17 யன்னமும்18
மங்கலாகாரதொனி  முரசு19 பைம்பொன்னுருவ
மயிலோடு20 கொடிய தாலம்21
மரமுமா கியவிவைக ளாகுமின்வ களையிவர்கள்
மகிமையோ டுலகறியவே
தங்களுக்குரிய பல நன்மைதின்மைக் கெலாந்
தனிவிருதெனா நடாத்தித்
தார்தலத் தேபவனி வருதன்மா பழமையாய்ச்
சாற்றுவார் போற்றுவாரே ........


பரத குலத்தோரின் கொடியில் 21 சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
இதை விளக்கும் விதமாக விருத்தமொன்றும் பாடப்பட்டது.

தொலைக்காட்சியில் வரலாற்றுப்பதிவுகள்

 வசந்த் தொலைக்காட்சியின் மண் பேசும் சரித்திரம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட வேம்பாறு குறித்த வரலாற்றுப்பதிவுகள் பின்வரும் இணைப்பில் உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது. தவறாமல் கண்டு நம் வரலாற்றை அறிவோம்.... பெருமிதம் கொள்வோம் .....நாமும் வேம்பாத்தான் என்று.....

இணைப்பு-1 (2.8.2014)
இணைப்பு-2  ( 9.4.2016)

நன்றி: வசந்த் தொலைகாட்சி 

நெய்தல் நிலத்து குறுந்தொழில்கள்

நெய்தல் நிலத்து கடல் தொழில்களான மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், உலர் மீன் தயாரித்தல், மீன் அல்லது உப்பு விற்பனை செய்தல், முத்தெடுத்தல் போன்றவற்றை நெய்தல் நிலத்து பெருந்தொழில்களாகச் சுட்டலாம்; கொல்லர் தொழில், தச்சுத்தொழில், பொற்கொல்லர் தொழில், கால்நடைவளர்ப்புத்தொழில், குடிசைகள் கட்டும் தொழில் மறறும் பணியாளர்த் தொழில் என்று பலவகையானக் குறுந்தொழிலிகள் நெய்தல் நிலம் சார்ந்தவையாக சங்க இலக்கியங்களின் வழி காணமுடிகிறது

கொல்லர் அல்லது தச்சர் தொழில்

ஐந்திணை மக்களின் தொழில்புரி கருவிகளிலும் கொலலர் மற்றும் தச்சர்களின் தொழில்கள் உள்ளன, குறிப்பாக நெய்தல் நிலத்தொழிலாளர்களின் மீன்பிடித்தொழிலுக்கும் அவர்களின் வாழ்வுக்கும் பயன்படும் மிகப்பெரும்பாலான பொருட்கள் கொல்லர் மற்றும் தச்சர்களின் தொழிலால் வடிவமைக்கப்பட்டுள்ளன.1

இரும்புப்பொருட்கள் இயற்றும் கொல்லர்களின் தொழிலை “கொல்வினை” (குறுந்தொகை – பா. 304) எனக் குறுந்தொகை சுட்டுகிறது. மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள பரதவர் படகில் சென்று கொண்டிருக்கும் போதெ எதிர் கொள்ளும் முகத்தில் கொம்பு உள்ள சுறாமீன்களின் தலையை நோக்கி ஓர் உளியை எறிவர், அவ்வுளி உறுதியுடன் கூடிய கூர்மையாலும் மீன்பிடித்தொழிலாளரின் விசையுடன் கூடிய தாக்குதலாலும் மீனின் முகத்தில் ஆழமாக அழுந்திவிடும் பின் அம்மீனினை பெருங்கயிறுகளால் பிணித்து கரைக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள். பேரொலியைக் கேட்டு கரையில் இருக்கும் அன்னப்பறவைகள் அஞ்சி ஓடும் என்பர். அவ்வாறு எறியப்படும் உளிக்கு “எறிஉளி” என்று பெயர். இதனை

“…………கூர்வாய் எறிஉளி
முகம்பட மருத்த மளிவெதிர் நோன்காழ்
தாங்கரு நீர் சுரந்து எறிந்து வாங்கு விசைக்
கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீன் எறிய
நெடுங்கரை இருந்த குறுங்கால் அன்னத்து
வெண் தோடு இரியும்……….” (குறுந்தொகை பா. – 304)
“எறிஉளி” (அகம். பா. எ. 114)
“எறிஉளி பொருத ஏமுறு பெருமீன்” (அகம். பா. எ. – 210)

உலர்ந்த உறுதியான துண்டு மூங்கிலின் நுனியில் மிக இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கும் கூர்மையானத் தன்மைக் கொண்டது என்பதை அறியமுடிகிறது, இதன்வழி, மீன்பிடித் தொழிலாளர்கள் வலிமைமிக்க சுறா, திமிங்கிலம் போன்ற பெரிய மீன்ளை வீழ்த்துவதற்கு எறி உளியைப் பயன்படுத்துவர் என்பது தெரிகிறது.

கடல் தொழிலாளிகளின் தொழில்முதற்பொருளாக இருக்கும் படகு, தோணி, போன்றவற்றையும் உப்புவணிகர்களுக்கான வண்டிகளையும் தச்சுத்தொழிலாளர்கள் காணப்படுகின்றனர்.

“நெடுந்திமில்” (அகம். பா.
“கொடுந்திமில்” (அகம். பா. 70)
“நுடங்கும் நெடுங்கொடி தோன்று நாவாய்” (அகம். பா. 110)

என்பைப் போன்ற இடங்களில் அறியமுடிகிறது. மேலும், நெய்தல் நிலத் தலைவர்கள் பயணிக்கும் தேர்கள் மிகச்சிறப்பாக சுட்டப்படுகின்றன. இவற்றை,

“மாணிழை நெடுந்தேர்…” (அகம். பா. 50)
“திண்தேர்…” (அகம். பா. 60) “
 “கொடுஞ்சி நெடுந்தேர்…” (அகம். பா. 250)
 ரூ (குறுந்தொகை பா. 212)
“கடுந்தேர்…” (அகம். பா. 310)
“பொலம்படை பொலிந்த வெண்டேர்…” (குறுந்தொகை பா. 205)
“சிறு நா ஒண் மணி வினரி ஆர்ப்ப
கடுமா நெடுந்தேர்…” (குறுந்தொகை பா. 336)

என்பன பொன்ற பாடல் அடிகளால் அறிய முடிகிறது, இதில் “மாணிழை” என்பது மிகச்சிறப்பான இழைப்புத் தொழிலால் செய்யப்பட்ட நீண்ட தேர் என்பதும், உறுதியான நிலையிலும், தச்சர்களால் உருவாக்கப்பட்டது என்பதை உணர்த்துகின்றன, மேலும் “வெண்தேர்” என்பது யானையின் தந்தங்களால் செய்யப்பட்டதாகவும், பொலம்படை, என்பது பொன்னால் செய்து படுத்து வைக்கப்பட்ட தேர்த்தட்டைக் கொண்டதாகவும் இருக்கும் இதில், “கொடுஞ்சி” என்பது தேரில் பயணம் செய்கின்றவர் உறுதியானத்ன்மையோடு அமர்வதற்கு பிடித்துக் கொள்ளும் கைப்படியாகும.; இது தாமரை வடிவத்தில் செய்யப்பட்டிருக்கும் என்பதும் சிறப்புடையாரின் தேர்களில் இது காணப்படும் என்பதும் பாடல்களின் வழி அறியமுடிகிறது.

பொற்கொல்லர் தொழில்

இரும்பு, மரம் போன்ற பொருள்களில் கடலவாழ் மக்களுக்கும் அவர்களின் தொழிலுக்கும் உதவும் கருவிகளை செய்து தருகின்றவர்கள் போல பொன்னால் மனிதர்களுக்கும், குதிரைகளுக்குமான அணிகலன்களையும் தேர்களுக்கான அலங்காரப் பொன்னணிகளையும் செய்து தரக்கூடியவர்களாய இருந்துள்ளனர். இதனை,

“வாலிழை மகளிர் விழவணி கூட்டும்…” (குறுந்தொகை பா. 386)
“விழவணி மகளிர்…” (அகம். பா 70)
“மின்னிழை மகளிர்…” (குறுந்தொகை பா. 246)
“தொடியோள்…” (குறுந்தொகை பா. 296)
“செல்லா நல்லிசை பொலம்பூண் திரையன்…” (அகம் பா. 340)

என்பனப் போன்ற பாடல் அடிகள் வெளிப்படுத்துகின்றன. மேலும், பொன்னால் மட்டுமன்றி நெய்தல் நிலத்தில் கிடைக்கும் முத்து, சங்கு போன்ற பொருள்களிலும் அணிகலன்கள் செய்யக்கூடியவர்களாக நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பொற்கொல்லர்கள் திறன் படைத்து இருந்தனர். இதனை,

“சின்னிரை வால் வளைப் பொலிந்த…” (அகம். பா. 390)
என்ற அகநானூற்றுப் பாடல் அடி உணர்த்துகின்றது.

மணிகள் பதிக்கப்பட்ட “நீல உத்தி” (அகம். பா. 400) 

எனப்படும் அணிகலன் மற்றும் கழுத்தில் மாட்டுவதற்கான மணிகள் பூட்டப்பட்டதும் ஓவியங்கள் வரையப்பட்டதுமான கழுத்துப்பட்டைகளும் (அகம். பா. 400), மற்றும் (குறுந்தொகை 345) செய்யப்பட்டிருக்கும் செய்திகளையும் குறிப்பிடுகிறது.

பொன், இரும்பு போன்றவற்றில் பணிபுரியும் கொல்லர்கள் நெய்தல் நில சமுதாயத்தில் எல்லா இடங்களிலும் குடியமைத்து வாழவில்லை, இவர்கள் பணிபுரியும் ஊதுலைப்பட்டறைகள் ஏழு ஊர்களுக்கு ஓரிடம் என்கின்ற நிலையில் பொது தொழிலகங்களாக அமைக்கப்பட்டிருந்தன என்பதை,

“ஏழ் ஊர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
உலைவாங்கு மிதி தோல்” (குறுந்தொகை பா. 172)

என்கின்ற பாடலடிகள் வலியுறுத்துகின்றன. நிலம் சார்ந்த உழவுத்தொழில், மீன்தொழில் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்குமான உபகரணக் கருவிகளைத் தயாரிக்கும் இன்றியமையாத நிலைப் பெற்றவர்களாக இருந்தும் இவர்களுக்கான சமூக மதிப்பு குறைவுபட்ட நிலையில் இருந்திருப்பதை உணரமுடிகிறது.

தேர்ப்பணியாளர்கள்

தேரை உருவாக்கும் கொல்லர், தச்சர்களைப் போன்று தேரைச் செலுத்துகின்ற “பாகர்” தொழில் செய்கின்றவர்களும் இருந்துள்ளனர் என்பதை நெய்தல் நிலப்பாடல்கள் வழி அறியமுடிகின்றது. தேரை செலுத்துகின்ற பாகன் “பாகுநூலறிவு” பெற்றவனாக இருப்பின் வன்மை, மென்மை உணர்ந்தவனாக செயல் படுவான் இதாவது மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் நீரைப் போலவும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போலவும் தேரை செலுத்துவான் (அகம். பா. 160, 400) என்றும் மேலும் கடலில் படகு செல்வது போல நெய்தல் நிலத்தில் தேரை செலுத்துவான் என்றும் (அகநானூறு பா, 340) சுட்டுகிறது மெதுவாக நடந்து செல்லும்படியாக செலுத்துகின்றபோது தாளம் தவறாதபடி அடியிட்டு செல்லக்கூடியதாக தேர்ப்பாகன் அதற்கு பயிற்சி அளித்திருப்பான். இதனை,

“பாணி பிழையா” மாண் வினைக் கலிமா” (அகம். பா. 330)

என்கிறது அகநாறுனூறு. நெய்தல் நிலத் தலைவன் தேரில் வரும்பொழுது அவனுடன் வருவதற்கும் அவனுக்கான சிறுசிறு உதவிகளை செய்வதற்கும் குறு ஏவல் தொழிலாளர்கள் இனையர்கள் என்ற நிலையில் உடன் வருகின்றவர் கூறுவர் இதனை (அகநானூறு பா. 250,300,310) போன்ற பாடல்களால் அறியமுடிகிறது.

பிற தொழில்கள்

நெய்தல் நிலத்து உமணர்கள் உப்பு வண்டியை ஓட்டி செல்வதற்கு எருமை, கழுதை போன்றவற்றை பயன்படுத்தி உள்ளனர். அவற்றை விளர்பதும் மேய்ப்பதுமானத் தொழில்களும் நிகழ்கின்றன. மாடுகள் வளர்ப்பமை,

“வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தலம் புதுமலர் மாந்தும்…” (அகம். பா. 100)

“அண்டர் கயிறு அரி எருத்தில் கதுறும் துறைவன்” (குறுந்தொகை பா. 177)

என்ற பாடல் அடிகளாலும்,

கடலோர கழிமுகங்களில் வண்புயினை இழுக்கக் கழுதைகளைப் பயன்படுத்தி உள்ளனர் இதனை,

“கழிச்சுறா எறிந்த புண் தாள் அத்திரி நெடுநீர் இருங்கழி…” (அகம். பா. 120)
என்கிறது அகநானூறு. அத்திரி என்பதற்க கழுதை என்று பொருள்.

முடிவுகள்

  1. கடல் தொழிலில் மீன்பிடத்தல், உலர் மீன் தயார்ப்பு, பசுமீன் அல்லது உலர்மீன் விற்றல், உப்பு தாயாரித்தல் மற்றும் விற்றல் போன்றவைப் பெருந் தொழில்களாக நிகழ்ந்துள்ளன.
  2. மீன் பிடித்தொழிலில் கடல பாதைகளை வரையறுத்து வைத்திருந்தனர்.
  3. பகல் நேரங்களைவிட இரவு நேரங்களில் செல்லும் மீன் தொழிலாளர்கள் சிறப்பு பயிற்சி பெற்றவராக இருந்துள்ளனர்.
  4. இரவு நேர மீன்பிடிப்படகுகளில் விளக்குகள் பயன்படுத்தி உள்ளனர்.
  5. மீன்தொழிலாளர்கள், வலைகள், கருவிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி உள்ளனர்.
  6. பலவகை தோணிகள், வலைகள், கருவிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி உள்ளனர்.
  7. மீன்தொழிலில் வல்லமை பெற்ற ஆண்களுக்குத் தங்கள் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
  8. உலர் மீன் தொழிலைப் பெண்கள் செய்துள்ளனர்.
  9. மீன், உப்பு, முத்து போன்றவற்றை விற்று நெல், அரிசி, பருப்பு போன்ற பொருள்களைப் பண்டமாற்றாக பெற்றுள்ளனர்.
  10. உப்பு விற்பனை செய்த உமணர்கள் அதை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வியாபாரம் முடியும்வரை நாடோடி வாழ்க்கை நடத்தி உள்ளனர்
  11. கடல் தொழிலில் கிடைத்த மீன், முத்து போன்ற பொருள்களை இரவலர்கள், தொழிலில் ஈடுபட முடியாதபடி நோய்வாய்ப்பட்ட சக தொழிலாளர்கள் தன் இனமக்கள் போன்றோர்க்கு கூறு போட்டு வழங்கி உள்ளனர்.

முனைவர் ந.பாஸ்கரன், 
பேராசிரியர், தமிழ்த்துறை, 
பெரியார் கலைக்கல்லூரி, கடலூர்-1

பண்டைய இலங்கையில் பரதவரின் எச்சங்கள்


இலங்கையில் கிடைத்த கி.மு. 1--ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் பெளத்த சங்கத்திற்கு சமூகத்தின் உயர்நிலைகளில் இருந்த பலதரப்பட்ட பிரிவினர் அளித்த குளம், கால்வாய், குகை, கற்படுக்கை, நாணயங்கள், உணவு, தானியம் என்பன பற்றிக் கூறுகின்றன.

இவற்றைப் பிற மதத்தவரும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு வர்த்தகம், பொருளாதார நடவடிக்கைகளுக்காகச் சென்றவர்களும் அவதானித்துள்ளனர். இவ்வாறு தானமளித்தோரில் பலர் தமது பெயருடன் தமது மூதாதையினர் பட்டம், பதவி, தொழில், வாழுமிடம் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளனர். இவை சுருக்கமான தகவல்களாக இருப்பினும் அக்காலத்தில் எவ்வாறு சமூக, தலைமை அமைப்பானது உருவாக்கப்பட்டது என்பதை விளக்கிக் கொள்ள உதவுகின்றன.

இதுவரைக்கும் இலங்கை நாட்டின் பல பகுதிகளிலிருந்து கிடைத்த கல்வெட்டுக்களில் 155-க்கும் மேற்பட்டவற்றில் 'பத' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 'பரத' என்ற சொல்லின் இன்னொரு வடிவமாகக் கருதப்படுகிறது. இதன் பெண்பாற் சொல்லாக 'பதி' என்ற பெயர் காணப்படுகிறது. இவ்விரு பெயர்களும் கல்வெட்டுக்களில் ராஜா, பருமக போன்று ஒரு பட்டப் பெயருக்குரிய நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (புஷ்பரத்தினம்--தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு) 

தோலமி சோழ நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களை 'பதை எனக் கூறுகிறார். இது பரதவரைக் குறிக்கலாம். (டி.கே.வேலுப்பிள்ளை, 1980, புஷ்பரத்தினம், பக்கம்:62)

திராவிட சொல்லகராதியில் 'பரத' என்ற சொல்லுக்குச் சமமாகப் பரதவர், பரதர், பரவர் என்ற சொல் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலோனி என்ற அறிஞர் தென் தமிழ் நாட்டிலும் வடமேற்கு இலங்கையிலும் தற்காலத்தில் வாழ்ந்து வரும் பரதவ சமூகத்தின் தோற்றத்தைச் சங்க இலக்கியங்களில் வரும் பரவர், பரதவர் சமூகத்துடன் தொடர்பு படுத்தி இரு பெயர்களும் ஒன்றென்கிறார். (புஷ்பரத்தினம், 1999:61). இலங்கைத் தமிழகப் பண்பாட்டுத் தொடர்பின் பின்னணியில் நோக்கும்போது இது பொருத்தமுடையதாகத் தெரிகிறது.

மேலும் பாண்டி நாட்டுச் செல்வமாக இருந்த நெய்தல் நிலத்து முத்து பற்றிச் சங்க இலக்கியங்களிலும் வடமொழி இலக்கியங்களிலும் பல குறிப்புகள் உள்ளன. பாண்டியர்களின் செல்வச் செழிப்பிற்குக் காரணமாகக் கடல்படு திரவியங்களே கூறப்படுவதும் இங்கு சிந்திக்கத் தக்கது. முத்து, பாண்டியரின் சொத்தாகவும், மீன் பாண்டியரின் பிரதான உணவாகவும் விளங்கியது. சங்க இலக்கியத்தில் மீன் என்ற சொல் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தகத்தில் குதிரை வெளிநாட்டு வர்த்தகப் பொருளாகவும், உப்பு உள்நாட்டு வர்த்தகப் பொருளாகவும் திகழ்ந்தன. பட்டினப்பாலையும் மதுரைக் காஞ்சியும் மேலைநாட்டுக் குதிரைகள் தென்பாண்டித் துறைமுகங்களுக்குக் கொண்டுவரப் பட்டதைக் கூறுகின்றன. பாண்டி நாடு நெடுகிலும் கடற்கரையை ஒட்டிய நெய்தல் நிலத்தில் குதிரை வர்த்தகம் நடந்ததாகத் தெரிகிறது. பாலி நூல்கள் தமிழ்நாட்டு பரதவ வணிகர்கள் குதிரை வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறுகின்றன.

இவ்வாறு பலதரப்பட்டப் பொருளாதார நடவடிக்கையில் நெய்தல் நில மக்கள் ஈடுபட்டதனால் செல்வம் குவிந்தது. இவர்களின் மாளிகைகள் கப்பல்கள், அலங்கார வண்டிகள், வாகனங்கள் பற்றி வரும் குறிப்புகள் இவர்களின் செல்வ நிலையைக் காட்டுகின்றன. பாண்டிய நெடுஞ்செழியனைக் 'கொற்றவன் காவலன்,' "பரதவத் தலைவன்", எனக் கூறுவது அரசியலிலும், சமூகத்திலும் பாண்டிய மன்னர்களுக்கும் நெய்தல் நில மக்களுக்கும் இடையேயான மிக நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது.

பாண்டிய நாட்டிலுள்ள தாமிரபரணியாற்றங்கரை பரதவர் வாழும் இடமாக அடையாளம் காணப்படுகிறது. இதே பெயர் முழு இலங்கையையும் குறிக்கும் பெயராக மாறியது. இச்சமூகத்தினரின் வர்த்தக அரசியல் பண்பாட்டுத் தொடர்பைக் காட்டுகிறது.

"பரதர்" பற்றி வரும் கல்வெட்டுக்களில், பொல நறுவை மாவட்டத்தில் உள்ள தூவகெல என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில், 'பரதஸஹகிதஸ" என்பவன் கொடுத்த குகை பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது.

இதில் 'பரத' என்ற பெயருக்கு முன்னால் கப்பலின் உருவம் வரையப்பட்டுள்ளது. இது 'பரத' என்பவனைக் கப்பல் தலைவனாகவோ அல்லது வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டவனாகவோ கருத இடமளிக்கிறது.

குரு நாகல் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டில் தலைவன் என்ற பட்டயத்துக்கு உரிய 'பரத' என்பவன் அரச தூதுவனாகக் கடமையாற்றியமை கூறப்பட்டுள்ளது.

கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உதிரன், தசபிடன், மகாசாத்தன், கபதி கடலன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்களோடு 'பரத திஸ" என்ற பெயர் பொறித்த நாணயமும் கிடைத்துள்ளன. இதன் சிறப்பு என்னவெனில் பின்புறத்தில் "பரத திஸ" என்றும் முன்புறத்தில் இரு மீன் கோட்டுருவமும் இடம் பெற்றிருப்பதாகும். இதைப் பாண்டியர்களின் தொடக்கமாகக் கருத இடமுண்டு. இதில் பரத என்ற பெயர் "பரதவ" சமூகத்தையும் 'திஸ' என்ற சொல்லானது 'திரையர்' என்ற பொருளையும் தரும். திரை என்ற சொல்லுக்குக் கடல், கடலலை, குளம் என்ற பல பொருள்கள் உள்ளன.

கி.மு. 2 ஆம் நூற்றாண்டிற்குரிய நாணயம் ஒன்று மீன் அமைப்பில் வடிவமைக்கப்பட்டது. அதன் மத்தியில் 'திஸஹ' என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இதை 'திஸ' அல்லது 'திரையன்' என்பானின் வணிக முத்திரை எனலாம். முதலில் பெரும் பரதவ வணிகர்கள் தஙக்ள் வியாபார அடையாளமாகப் பயன்படுத்திய சின்னம் பின்பு படிப்படியாகப் பாண்டியர்களின் கொடியாகவும், அரசச் சின்னமாகவும் உருமாறியிருக்கக் கூடும்.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இலங்கையில், ஆட்சி புரிந்த முதல் தமிழ் மன்னர்களான 'சேன, குத்தக' என்போரின் பெற்றோர் வெளி நாட்டிலிருந்து குதிரைகளைக் கொண்டு வந்து இலங்கையில் விற்பனை செய்த குதிரை வணிகனின் பிள்ளைகள் என மகாவம்சம் கூறுகிறது. குதிரை வியாபாரத்தில் தென்பாண்டி நாட்டு பரதவ வணிகர்கள் ஈடுபட்டனர் எனப் பாலி நூல்கள் கூறுவதன் அடிப்படையில் இலங்கையிலும் தமிழகத்திலும் ஏற்பட்ட குறுநில மன்னர்களின் ஆட்சியையும் தொடர்பு படுத்திப் பார்க்கலாம். மெல்ல மெல்ல வலிமை வாய்ந்த நெய்தல் நிலத் தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், முடியுடைய வேந்தர்களாகவும் உருமாற்றம் அடைந்துள்ளதைப் பார்க்கும்போது நெய்தல் நில மக்களுக்கும், பாண்டியர்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தெளிவாக விளங்குகிறது. அதாவது இருவரும் ஒருவரே அல்லது ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களே என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது.

குமரி முனையில் அரசனாகவிருந்த வில்லவராயன் என்பான் பகவதி அம்மன் ஆலயத்திற்குத் திருப்பணி செய்ததாக ஆலயத்தின் ஒரு கல்வெட்டுச் சான்று பகருகிறது. இதைத் திருவிதாங்கூர் மக்கள் தொகை ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. பாண்டிய மன்னர்கள் 'குமரிச் சேர்ப்பன்' என்று குறிக்கப்படுவது இங்கு நமக்கு புதிய வரலாற்றுச் சிந்தனையைத் தோற்றுவிக்கிறது.

மேலும் இலங்கையை ஆண்ட பராக்கிரம பாகுவுக்கும் 91153--1186) குலசேகர பாண்டியனுக்கும் நடந்த போரில் வில்லவராயன் கொல்லப்பட்டான் என்று அத்தியாயம் 76 பாடல் வரி 163 சூள வம்சம் என்ற பாலி மொழி நூலில் கூறப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரா அல்லது ஒரே குலத்தில் உதித்தவர்களா என்பது ஆய்வுக்குரியது.

இதே போன்று ஐவர் ராஜாக்கள் கதையில் குலசேகர பாண்டியனுக்காகக் கன்னடியனுடன் வில்லவராயனும், வில்லவராயக் கூட்டங்களும் போரிட்டு மாண்டதையும், மற்றொரு மந்திரி காலிங்கராயன் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாகக் கடற்துறைக்கு அழைத்துச் சென்று பாதுகாத்ததையும் மிக விரிவாகச் சொல்கிறது.

செண்பகராமன் பள்ளுவின் தலைவன், காலிங்கராயன் என அழைக்கப்படுவதும் நமக்கு நெய்தல் நில பரதவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இருந்த உறவினைக் காட்டுகிறது. இவையனைத்தும் பரதவ குலத்தினரிடம் வழங்கப்பட்ட பட்டங்களாகும். இவர்களில் சிறந்தோரே குறுநில மன்னர்களாகவும், தளபதிகளாகவும் விளங்கினர் என்பது மேற்கூறியவற்றால் புலனாகும்.

"ஒன்று மொழி" பரதவர் என்ற மதுரைக் காஞ்சியின் வரிகளுக்கேற்ப இவர்களுக்குள் நிலவிய அசாதாரணமான ஒற்றுமை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாண்டியர்களின் வலிமையான ஆட்சிக்கு அடிகோலியது. இவர்களே முதன்மையான பாண்டியர்களின் தளபதிகளாகவும், மந்திரிகளாகவும் கடற்துறைகளிலும் போர் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் இருந்து ஆட்சி செய்தனர். இடைக்காலங்களில் முதன்மைப் பாண்டிய மன்னனுக்காக போரில் உயிர் துறந்ததையும் வரலாற்றின் மூலமாகவும், நாட்டார் இலக்கியங்கள் வாயிலாகவும் அறிகிறோம். சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் இறந்த பிறகு கோநகர் கொற்கையிலிருந்த வெற்றி வேல் செழியன் மன்னரானது, காலம் காலமாக நடந்து வந்த பரம்பரைப் பழக்கம் என்பதற்கு வலிமையான சான்றாகும்.

மேற்கூறிய செய்திகளிலிருந்து பாண்டியர்களுக்கும் நெய்தல் நில மக்களுக்குமான தொடர்பு அவர்கள் இருவரும் வெவ்வேறானவர்களாக இருக்க முடியாது என்பதையும் அவர்களுக்கு இடையிலான மிக நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதையும் இருவரும் ஒருவரே என்பதையும் பாண்டியர்கள் நெய்தல் நிலத் தலை மக்கள் தாம் என்ற புதிய முடிவுக்கு நம்மை இட்டுச் செல்வதையும் உணரலாம்.


தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு


Rare Book Collection

தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு

பண்டைய இலங்கையில் பரதவ சமூகம் சில தொல்லியல் சான்றுகள்

ஆசிரியர் : ப.புஷ்பரட்ணம்

Download Link

நெய்தல்திணை



நெய்தல்திணை:


கடலும் கடல் சார்ந்த பகுதிகள் நெய்தலுக்கு நிலமாகும். மீன் வளம் நாடி கடலிலே திமில் ஏறி செலவது பெரும்பாலும் ஆடவர் தொழில் ஆதலின் அவர் குறித்த பொழுதில் திரும்பாத போது 'இரங்கலும் இரங்கல் நிமித்தமும்' ஆக எழும் பேச்சும் இந்நிலத்துக்கு இயல்பாயின. 


நெய்தல் திணைக்கு ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகவும் எற்பாடு (பிற்பகல்) சிறுபொழுதாகவும் அமையும்.

நெய்தல்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் வந்த தலைவன் சிறைப்புறத்தான் ஆக தோழி தலைமகளுக்கு சொல்லுவாளாய் தலைமகனுக்கு சொல்லியது"

கடலுக்கு அடியில் தமிழர் நகரம்


கடலுக்கடியில் பூம்புகார்..

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது.

கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.

வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.

தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.

ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?

பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.

இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா?

வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?

இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?

புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

நன்றி : அனைத்துலக தமிழ் மையம்


Ancient anchors off Tamil Nadu coast and ship tonnage analysis

Rare Collection

Ancient anchors off Tamil Nadu coast and ship tonnage analysis


BY: 

N. Athiyaman1 and P. Jayakumar2

1 Centre for Underwater Archaeology, Tamil University, Thanjavur 613 005, India

2 Department of Archaeology, Tamil University, Thanjavur 613 005, India

நெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தி

நெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தியும் சங்கத் தமிழரின் நீர் மேலாண்மையும்


நீர் உயிர் வாழ்வதற்கு மிக இன்றியமையாத ஒன்று. இதனை, “நீரின் றமையாயாக்கைக் கெல்லாம்” (புறம். 18:18) என்று புறநானூறும், “நீரின்று அமையாதுஉலகு…” (குறள். 20) என்று திருக்குறளும் நீரின் சிறப்பினைப் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய சிறப்புமிக்க நீரைப் பாதுகாத்து, வறண்ட காலத்திலும் நீர்வளத்துடன் இருக்க குளங்கள் மற்றும் பிற நீர் நிலைகள் பெரும்பங்காற்றி உள்ளன. சங்ககால மக்களின் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கும் வேளாண்மைக்கும் நீர் ஆதாரமாகக் குளங்கள் விளங்கியுள்ளன. இதனைக் ”குளம் தொட்டு வளம்பெருக்கி” (பட்டினப். 284) என்று பட்டினப்பாலையும் குளத்தால் வளம் பெருகியதாகப் பாடப்பட்டுள்ளமையைக் காணலாம். அவ்வகையில், ஆற்றுவளமிக்க மருதநிலத்தில் மட்டுமே நெல் உற்பத்தி செய்த நிலை மாறி நெய்தல் நிலத்திலும் நெல் உற்பத்தி செய்யும் அளவிற்கு சங்கத் தமிழர் நீர் மேலாண்மை திறன் பெற்றிருந்தனர் என்பதை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

நெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தி

கடல் சார்ந்த நெய்தல் நிலம் உப்பினை உற்பத்தி செய்யும் நிலமாக இருந்தது. இந்நிலத்தில் உற்பத்தி செய்த உப்பினை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு மருத நில மக்களிடத்தில் சென்று நெல்லுக்கு இணையாக உப்பினைப் பண்டமாற்று செய்து வந்ததனை,

“நெல்லின் நேரே வெண்உப்பு எனச்

சேரி விலைமாறு கூறலின் ……….” (அகம் 140:7-8 )

“உப்பை மாறி வெண்ணெல் தரீஇய” (குறுந் 269:5)

என்பதன் மூலம் தெளியலாம்.

நெல் உற்பத்தி மருத நிலத்தில் மட்டும் உள்ள நிலை தாண்டி நெய்தல் நிலத்திலும் விளைவிக்கும் அளவிற்கு மாற்றம் நிகழ்ந்திருப்பதற்குச் சான்றாக சங்க இலக்கியப் பதிவில், கழனி உழவர்கள் விரைந்து வீசும் காற்றில் நெல்லினைத் தூற்றும் பொழுது, பறந்து சென்ற தூசுக்கள் அருகிலிருந்த உப்பு விளைவிக்கும் உப்பளத்திலுள்ள சிறிய பாத்திகளில் சென்று வீழ்ந்து, உப்பு பாழ்பட்டுப் போனமையால் சினந்த நுளையர்கள், கழனி உழவருடன் சென்று சேற்றுக் குழம்பினை எடுத்தெறிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளதை,

“தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய

நீர்சூழ் வியன்களம் பொலியப் போர்பழித்துக்

கள்ளார் களமர் பகடு தளை மாற்றிக்

கடுங்காற் றெறியப் போகிய துரும்புடன்

காயற் சிறுதடி கண்கெடப் பாய்தலின்

இருநீர்ப் பரப்பிற் பணித்துறைப் பரதவர்

தீம்பொழி வெள்ளுப்புச் சிதைதலிற் சினைஇக்

கழனி உழவரொடு மாறெதிர்ந்து மயங்கி

இருஞ்சேற் றள்ளல் எறிசெருக் கண்டு” (அகம்366:1-9)

என்ற பாடலின் வழி அறியலாம். இப்பாடலில், உப்பு விளைவிக்கும் நிலம் அருகில் இருந்ததால் அது கடலை ஒட்டிய பகுதியாகவே இருந்திருக்க வேண்டும். மேலும், உழவர்கள் நெல்லைத் தூற்றும் போது கொடியகாற்றினால் தூசும் துரும்பும் உப்பளங்களில் கலந்தது என்பதால், இந்த உப்பளங்களின் மிக அருகிலேயே இந்நெல்விளையும் வயல்கள் இருந்திருக்க வேண்டும். எனவே, நெய்தல் நிலத்திலேயே நெல் விளைவித்திருக்க வேண்டும்.

இதற்குச் சான்றாக நெய்தல் நிலத்திலே மழை பெய்யும் காலத்து நெல்லும் மழை இல்லாத காலத்து உப்பும் விளைவித்துள்ளனர். இதனை,

“பெயினே, விடுமான் உழையினம் வெறுப்பத் தோன்றி

இருங்கதிர் நெல்லின் யாணர் அஃதே

வறப்பின், மாநீர் முண்டகந் தாஅய்ச் சேறுபுலர்ந்து

இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும்

அழியா மரபின்நம் மூதூர் நன்றே” (நற்.311:1-5)

என்பதன் மூலம் அறியமுடிகிறது. இதற்கு உமணர்களின் பங்கு இன்றியமையாததாக இருந்திருக்கக் கூடும்.

நெய்தல் நிலத்தில் நெல்லும் உப்பும் வேறு வேறு காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், கழனி உழவருக்கும் நுளையருக்குமிடையே வன்முறை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஆனால், இங்கு நெல்லும் உப்பும் ஒரே காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உப்பினை வேனிற் காலத்தில் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். அது போன்றே நெல்லிற்கு நீர் மிக இன்றியமையாத ஒன்றாகும். எனவே, நெய்தல் நில உழவர்கள் நெல்லிற்குத் தேவையான நீரை, குளம், கிணறு, கால்வாய் போன்றவற்றின் ஏதேனும் ஒன்றில் பெற்று வேனிற்காலத்திலும் நெல் விளைவித்திருப்பர் என அவதானிக்கலாம்.

சங்கத்தமிழர் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர். பாறைகளையும், சிறுகற்களையும் (சிறு குளம் என்று குறிப்பிட்டுள்ளதால் இப்பாடலில் பொறை என்பதற்கு மலை என்று பொருள்கொள்ளாமல் கற்கள் என்று பொருள் கொள்ளப்பட்டது). இடையிடையே அமைய இணைத்து பிறை வடிவில் ஏரிகளுக்குக் கரையமைத்து பாதுகாக்கும் முறை சங்ககாலத்தே இருந்துள்ளமையை,

“அறையும் பொறையு மணந்த தலைய

எண்ணாட் டிங்க ளனைய கொடுங்கரைத்

தெண்ணீர்ச் சிறுகுளங்…………………..” (புறம்.118:1-3)

என்ற பாடல் வழியும் சங்கத்தமிழரின் நீர் மேலாண்மைத் திறன் வெளிப்படுகிறது.

மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் பண்டைய சங்கத் தமிழர்கள் மருத நிலத்தில் மட்டுமன்றி நெய்தல் நிலத்திலும் நெல் விளைவித்துள்ளனர். ஆறு, குளம், போன்ற நீர் நிலைகளை பாதுகாத்தும் பராமரித்தும் வரும் மேலாண்மைத் திறன் பெற்றிருந்தனர் என்பதும் பெறப்படுகிறது.



பயன்பட்ட நூல்கள்:

  1. ஔவை சு. துரைசாமிப்பிள்ளை, (உ.ஆ.), புறநானூறு, கழக வெளியீடு, சென்னை, 2007
  2. ந.மு. வேங்கடசாமி நாட்டார், ரா. வேங்கடாசலம் பிள்ளை. அகநானூறு, கழக வெளியீடு, சென்னை, 2008
  3. பரிமேலழகர், திருக்குறள், திருமகள் நிலையம், சென்னை,1998
  4. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், நற்றிணை, கழக வெளியீடு, சென்னை, 2007
  5. பொ.வே. சோமசுந்தரனார், (உ.ஆ.), குறுந்தொகை, கழக வெளியீடு, சென்னை, 2007
  6. பொ.வே. சோமசுந்தரனார், (உ.ஆ.), பத்துப்பாட்டு மூலமும் உரையும், பகுதி-2, கழக வெளியீடு, சென்னை, 2008


பா. சிவக்குமார் 
முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
பாரதியார் பல்கலைக்கழகம், கோவை – 46.


இறால் ஊறுகாய்


தேவையானவை:


இறால் - 1/4 கி

இஞ்சி பூண்டு விழுது 2 தே . க

மிளகாய் தூள் - 2 தே. க

மஞ்சள் தூள் - 1 தே. க

நல்லெண்ணெய் - 200 கி

வினிகர் - 1/2 கப்

உப்பு - 1 ( அ) 11/2 தே. க

வறுத்து பொடிக்க

கடுகு - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

வெந்தயம் - 1/2 ஸ்பூன்


செய்முறை:

முதலில் இறாலை சுத்தமாக கழுவிய பின்  கொஞ்சம் உப்பு, ம.தூள், மி.தூள், இஞ்சி, பூண்டு விழுது பிசறி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் பாதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் இறலை போட்டு நன்கு சிவக்க பொரித்து ஆற விடவும்,

இறாலை பொரித்த எண்ணெயுடன் மீதி எண்ணெயை ஊற்றி . சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். 

அடுத்து பொரித்த இறால் ம.தூள் மி.தூள் போட்ட்டு 5 நிமிடம் கிண்டி விடவும். பின்பு வினிகர் உப்பு சேர்த்து இறக்கி விடவும். 

மேலாக வறுத்து பொடித்த பொடியை கின்டி ஆற வைத்து பாடிலில் போட்டு வைக்கவும். ஊறுகாய்க்கு மேலே 1 இஞ்ச் உயரத்திற்க்கு எண்ணெய் இருக்க வேண்டும்.

பாட்டிலின் வாயை வெள்ளை துணியால் மூடி மூன்று நாள் கழித்து உபயோகபடுத்தலாம். 

உப்பு காரம், புளிப்பு போன்றவை அவரவர் ருசிக்கேற்ப்ப சேர்த்துக் கொள்ளலாம் இந்த ஊறுகாய் 2 மாதம் வரை கெடாமல் இருக்கும்.

கொரியாவின் பாண்டிய இளவரசி

கொரியாவின் காயா அரசை தோற்றுவித்த சுரோ என்ற இளவரசரின் துணைவியாள் இயோ எனப் பெயர் பெற்ற ~ஆய்~ நாட்டு இளவரசியாக கொரிய கதைகளில் குறிக்கப்படுகிறாள். இவளின் கூட்டம் காரா எனப்படும் கூட்டம். இவளின் சின்னம் இரட்டை மீன் சின்னம்.

இதை ஆராய்ந்த வடநாட்டு ஆய்வாளர்கள் இந்த கொரிய இளவரசி உத்திரப்பிரதேச அயோத்தியாவைச் சேர்ந்தவர் எனக் கதை அளந்து வருகின்றனர். அதுக்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தின் "தற்போதையச்" சின்னமும் இரட்டை மீனாம். அயோத்தியா பெயர் ~ஆய்~ என்னும் பெயருடன் ஒத்து வருகிறதாம். அதனால் இவள் அயோத்தியாக்காரியாம். ஆனால் அம்மீன் சின்னம் 19ஆம் நூற்றாண்டுகளடையது என்பதை வடநாட்டார் மறைத்துவிட்டனர்.

ஆனால் நம்ம பாண்டிய நாடு 2600 ஆண்டுகள் முன்பிருந்தே மீன் சின்னத்தை பொறித்ததற்கு ஏராளமான காசுகள் உள்ளன. அதிலும் பாண்டியர் கீழிருந்த பரவர்கள் கொரியாவில் உள்ளது போலவே இரட்டை மீனைப் பொறித்துக்கொண்டனர். மதுரைப் பாண்டியர் சங்ககாலத்தில் ஒரு மீனைப் பொறித்தாலும் கொற்கைப் பாண்டியர் இரண்டு மீன்களைப் பொறித்தனர். அதனால் பாண்டிய நாட்டின் கீழிருந்த முதலாம் நூற்றாண்டு ஆய் நாட்டு பரவர்களே இரட்டை மீன் சின்னங்களை கொரியாவிற்கு கொண்டு போயிருக்க வேண்டும்.

ஏற்கனவே இது தொடர்பாக கடலியல் ஆய்வாளர் @Orissa Balu மும்முரமாக ஆய்ந்து வருகிறார். மேலும் இது தொடர்பாக என் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் ஈழத்தில் பரதவர்கள் வெளியிட்ட காசு ஒன்றில் கொரியாவில் உள்ளது போல் இரட்டை மீன்கள் இருக்கும் சங்ககாலக் காசு ஒன்றை காட்டியுள்ளேன். கொற்கை செழியன் வெளியிட்ட இரண்டு மீன்கள் கொண்ட காசையும் காட்டியுள்ளேன். ஆனால் இது கொரிய மீன் சின்னத்தில் இருந்து வேறுபட்டது. அதே சமயம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தை குறிக்கும் தொலெமி ஆயர்களுக்கு கீழே தென்பாண்டி நாடு இருந்ததாகக் குறிப்பிடுகிறார். ஆக ஆய் நாட்டைச் சேர்ந்த பரதவர்களே கொரியாவில் இச்சின்னத்தை கொண்டு போயிருக்க வேண்டும். காரணம் கொரியாவின் தமிழ் இளவரசியின் மரபு காரா என்னும் கூட்டத்தைச் சேர்ந்தது. ~ஆய்~ என்னும் நாட்டைச் சேர்ந்த மரபாக இது கொரிய இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது. அந்த காரா என்னும் பெயரில் தென் தமிழகத்திலும் ஈழத்திலும் வாழும் கரையார் என்பவர்களே குறிப்பிடுகின்றனர். பாலியில் இவர்களை காரவா என்பர். இந்த காராக் கூட்டத்தை கொரியாவில் காயா என்றும் அழைப்பர். இதுவும் கூட காயல் என்னும் பெயரைக் குறிப்பதாக கொள்ளலாம். 

ஆக கொரியாவின் இளவரசி தமிழச்சியே தவிர உத்திர பிரதேசத்தவள் அல்ல. இது தொடர்பான என் ஆய்வுக்கட்டுரை நவம்பர் 6 2015 அன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வரங்கில் வெளியாகாவிட்டால் முகநூலில் கூர்ங்கோட்டவர் பக்கத்தில் வெளியிடப்படும்.

நம்ம ஆய்நாட்டு பரவர்களின் சின்னமான இரட்டை மீன்களை தான் ஆய்நாட்டுக்காரி எனக் காட்ட கொரியாவின் தமிழ் இளவரசி இரட்டை மீன்களை பொறித்துக் கொண்டாள். ஆனா இந்த வடநாட்டுக்காரங்க எழுதுனது என்னன்னா "உத்திரப் பிரதேச அரசு சின்னத்தில் இரு மீன்களும் வில்லும் இருப்பதால் அந்த கொரிய இளவரசி உத்திர பிரதேச அயோத்தியோ நாட்டுக்காரி" என்று. அந்த உத்திரப் பிரதேச சின்னம் எப்போது இருந்து பொறிக்கப்பட்டதுன்னு ஏதாவது வரலாறு தெரியுமா? 

அந்த உத்திர பிரதேச மீன் சின்னம் நவாப்களுடையது. அதுவும் 19ஆம் நூற்றாண்டு. நவாப் அறிமுகப்படுத்திய போது அச்சின்னம் கீழுள்ள இணைப்பில் உள்ளது போல் இருந்தது.
டைம்சு ஆஃப் இந்தியாவில் உத்திர பிரதேச மீன் சின்னம் 19ஆம் நூற்றாண்டில் தான் வந்தது எனக் காட்டும் கட்டுரை இணைப்பு கீழே.

LUCKNOW: The state emblem of Uttar Pradesh owes its origin to the Royal Society in the United Kingdom, which approved the symbol in 1916. The 'Coat of Arms' adorning all UP government files, letterheads and vehicles and other government stationery, including its publications using it as seal, has an underlined idea.

Unveiling this quite an unknown idea first suggested by Mr Baker, assistant director of UP state archives, Dr Sandhya Nagar, says the combination of a "pair of fish" and the arrow-bow, embellished with three waves stresses on 'Unity in diversity'.

Dr Nagar said the symbolism attached with each of these characters marked their presence in the logo, the pair of fish with the Muslim rulers of Oudh while the bow and arrow identifying Hindu Lord Ram while the waves marked the confluence of the rivers Ganga-Yamuna.

The proposed logo also contained a star at the bottom, which was deleted later. "The symbol is a vivid representation of geographical, historical and cultural integrity of Uttar Pradesh," Dr Nagar said.

The UP state archives boasts of possession of the documents which fortified the requests made by the then national leaders, especially Govind Ballabh Pant, for implementation of the state symbol.

The documents also show the resistance on the part of the then state offices, especially Sir Harry Graham Haig, the governor of the state, to enforce the emblem which had already seen a green signal from the Royal Commission. Dr Nagar said the proposal had gone across "several oppositions and a few changes before implemented on August 9, 1938. It was with the efforts of an adamant Pant that the state owns the emblem with pride".



காவிரிப்பூம்பட்டினம்


அறிமுகம்:

சங்ககாலத் (கி.மு.300-கி.பி. 300) தமிழகத்தில் இருந்த துறைமுகங்களில் கிழக்குக் கடற்கரையில் சோழர்களின் உலகத்தரம் வாய்ந்த துறைமுகமாக்க் காவிரிப்பூம்பட்டினம் விளங்கியது.

அமைவிடம்:

நாகப்பட்டினம் மாவட்ம் சீர்காழி வட்டத்தில் காவிரிப்பூம்பட்டினம் இன்று ஒரு சிறிய மீனவக் கிராமமாகக் கடற்கரையில் அமைந்துள்ளது. இங்குச் செல்வதற்கு சீர்காழியில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

பெயர்ச்சிறப்பு:

சங்க இலக்கியங்கள் புகார், பூம்புகார், பட்டினம்,காவிரிப்பூம்பட்டினம் எனப் பல பெயர்களில் சுட்டும் இத்துறைமுக நகரம் காவிரி ஆறு வங்கக் கடலில் புகுகின்ற இடத்தில் அமைந்ததால் இப்பெயர்களைப் பெற்றது எனலாம். இலக்கியங்கள் சுட்டுவதுபோல சங்ககாலத்தில் தமிழகம் வந்து சென்ற மேலை நாட்டுக் கடல் பயணிகளும் இந்நகர் குறித்த சிறப்புகளைப் பதிவு செய்யத் தவறவில்லை. இப்பட்டினத்தைப் பெரிப்ளூசு ‘கமரா’ எனவும், தாலமி கபேரிஸ் எம்போரியான் (Kaberis Emporion) எனவும் குறிப்பிடுகின்றனர். மணிமேகலை காவிரிப்பூம்பட்டினத்தின் பிற பெயர்களாகக் குறிப்பனவற்றில் ‘காகந்தி’ என்பதும் ஒன்றாகும். கி.பி. 5ஆம் நூற்றாண்டில் புத்ததத்தர் இங்கிருந்த புத்தவிகாரையில் தங்கியிருந்து பிராகிருத மொழியில் அபிதம்மவதாரம் என்னும் இலக்கியத்தை இயற்றியதாகக் கருதப்படுகிறது. இதில் இவ்வூர் கவேரபட்டினம் எனக் குறிப்பிடப்படுவதோடு இதன் எழில்மிகு தோற்றம், அமைப்பு, அங்கு வாழ்ந்த உயர்குடி மக்கள் மற்றும் அரிய வைரக்கற்கள் முதல்கொண்டு விற்கப்பட்ட பெரிய கடைத்தெருக்கள் வரை பேசுவதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர் (K.V.Raman, Excavation at Poompuhar, II Interantional Tamil Conference, 1968). கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரப் பாடல்களில் இப்பகுதி குறிப்பிடப்படுகிறது. இடைக்காலச் சோழர்களின் காலத்திலும் காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயரே நிலைத்திருந்ததை அக்காலக் கல்வெட்டுகள் வாயிலாக அறியலாம்.

இலக்கியக் குறிப்புகள்:

காவிரிப்பூம்பட்டினத்தின் நகரமைப்பு மற்றும் துறைமுகச் சிறப்புகளை பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. வணிக நிமித்தமாக யவனர்கள் இங்கு வாழ்ந்ததைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. இவர்கள் தங்கிருந்த இடத்தை யவன இருக்கை எனச் சிலப்பதிகாரம் (5-10) சுட்டுகிறது. வெள்ளையன் இருப்பு எனும் ஒரு பகுதி காவிரிப்பூம்பட்டினத்தில் இன்றும் காணப்படுவது நோக்கத்தக்கது. சோழர்களின் சிறப்புமிகு இத்துறைமுக நகரை உருவாக்க யவனத்தச்சர் என அழைக்கப்பட்ட ரோமானிய நாட்டுச் சிற்பிகள் பயன்படுத்தப்பட்டதை மணிமேகலை (19:107-108) காட்டுகிறது. வெவ்வேறு நாடுகளில் இருந்து நீரின் வழியாக இத்துறைமுகத்திற்கு வந்து இறங்கிய பொருட்கள் குறித்தும் அதன் சிறப்புப் பற்றியும் பட்டினப்பாலை (185-193) மிகத் தெளிவாக விவரிக்கிறது. 
அப்பாடல் வரிகள் பின்வருமாறு:

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துண்ர்வும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு”

இப்பாடலிலிருந்து நீரின் வழியாக வரப்பெற்ற உயர்வகை குதிரைகள், நிலவழியாகக் கொண்டு வரப்பட்ட மிளகு, வடக்கு மலைகளிலிருந்து தருவிக்கப்பட்ட அரிய வைரக்கற்கள் மற்றும் பொன், மேற்கு மலைகளில் கிடைக்கின்ற சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருள்கள் தென்கடல் முத்து, கீழைக் கடல் பகுதியிலிருந்து பெறப்படும் பவளம், கங்கை மற்றும் காவிரியின் வளத்தால் பெறப்பட்ட பொருள்கள், ஈழத்திலிருந்து உணவு வகைகள், காழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை (பெரும்பாலும், உலோகப்பொருளாக இருக்க வேண்டும்) , பிற இடங்களிலிருந்து வந்து இறங்கிய அரிய மற்றும் பெரிய பொருள்களும் இத்துறைமுகம் வந்து சென்றதை அறிவதிலிருந்து இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகச் செயல்பாடுகள் உச்சநிலை பெற்றிருந்ததை அறியமுடிகிறது. கடல் வாணிபத்தால் இத்துறைமுக நகரில் காணப்பட்ட செல்வவளம் பற்றிச் சிலப்பதிகாரம் (2:2-6) பேசுகிறது. இத்துறைமுகத்திற்கு இரவு நேரங்களில் வந்துசேரும் கப்பல்களுக்குத் திசையினை உணர்த்த கலங்கரை விளக்கம் இருந்ததை மேற்சுட்டிய இலக்கியம் “இலங்கு நீர் விரைப்பிற் கலங்கரை விளக்கமும்” என்ற பாடல் வரியின் வாயிலாகத் தெரிவிக்கிறது.

புகார் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சிறப்பாக நடைபெற்றதையும், இப்பொருட்களுக்குச் சுங்கம் வசூலிக்கப்பட்டதையும், இதற்கு அடையாளமாக அப்பொருட்களின் மேல் சோழ அரசின் புலி முத்திரை இடப்பெற்றதையும் பின்வரும் பட்டினப்பாலை பாடல் வரிகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.

“நீரினின்றும் நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலி பொறித்துப் புறம்போக்கி
மதி நிறைந்த மலிபண்டம்
பொதி மூடைப் போர் ஏறி”

காவிரிப்பூம்பட்டினத்தில் புலி உருவம் பொறித்த பலவகையான முத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை (ஆறுமுக சீதாராமன், சங்ககாலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள், ஆவணம், 1994) மேற்சுட்டிய இலக்கியச் செய்திகளுக்கு வலுசேர்ப்பதாகும். இம்முத்திரைகளில் 6.150 கிராம் எடையுள்ள செம்பு முத்திரை ஒன்று குறிப்பிடத்தக்கதாகும். இதில் புலி வலது பக்கம் நோக்கிய நிலையில் முன்காலைத் தூக்கியும், வாயைத் திறந்து கொண்டும் மிகக் கம்பீரமாகக் காட்டப்பட்டுள்ளது. இதில் புலிச்சின்னம் குழிவாக முத்திரை முறையில் உள்ளது. இதில் எழுத்துகள் எதுவும் காணப்படவில்லை. இம்முத்திரை துறைமுகத்தில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கவேண்டும். இத்துறைமுகத்திலிருந்து அரசுக்கு நிறைய வருவாய் வரப்பெற்றதோடு வாணிபம் வளர்ச்சியடைந்திருந்ததால் புகார் நகரமும் செல்வச் செழிப்போடு காணப்பட்டது என்பதையும் உணரமுடிகிறது.

பொதுவாக அக்காலத் தமிழகத் துறைமுகங்களில் வங்கம் மற்றும் நாவாய் போன்ற கலங்கள் வாணிப நோக்கில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததைச் சங்க இலக்கியங்கள் பல இடங்களில் சுட்டுகின்றன. அகநானூறு (255:1-6) குறிப்பிலிருந்து வங்கம் என்பது பொருள்களை ஏற்றிச் செல்லத்தக்க வகையில் மிகப்பெரிய கப்பலாக இருந்திருக்க வேண்டும் என்பதை உணரமுடிகிறது.
“………………………. கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைபாரம் தோண்டாது
புகா அர்ப் புகுந்த பெருங்கலம்”

என்னும் புறநானூறு (30:11-13) வரிகள் பாய்மரத்தில் (mast) கட்டப்பட்டிருந்த பாய்கன் (sails) களையாமல் (இறக்கப்படாமல்) பெரிய கலங்கள் (ships) புகார் துறைமுகத்திற்குள் வந்து சென்றதைக் காட்டுவதிலிருந்து சங்ககாலத்தில் இத்துறைமுகச் செயல்பாடுகள் மிகச் சுறுசுறுப்புடன் இருந்ததைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

அகழாய்வுச் சிறப்பு:

1960 ஆம் ஆண்டு எஸ்.பரமசிவன் என்பவர் இக்கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட காந்த அளவியல் (magnetic survey) ஆய்வில் இங்குக் கட்டடப் பகுதிகள் புதையுண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இந்தியத் தொல்லியல் துறை 1962ஆம் ஆண்டு இக்கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட மேற்பரப்பாய்வு மற்றும் அகழாய்வுகள் சிறப்புக்குரியதாகும் (Indian Archaeology-A Review, 1962-1967). மேற்பரப்பாய்வில் (exploration) வானகிரி, கீழையூர் ஆகிய இடங்களில் கருப்பு-சிவப்பு மண்கலச் சில்லுகளுடன் ஒருபக்கம் புலி மறுபக்கம் யானை பொறிக்கப்பட்ட சோழர்காலச் செப்புக்காசு, யவனர் தொடர்புக்குரிய ரூலெட்டட் பானை ஓடுகள், அரிய கல்வகைகளினாலான மணிகள் (beads) மற்றும் வெள்ளையன் இருப்பு என்ற இடத்தில் ரோமானிய நாணயம் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன.

அகழாய்வில் இத்துறைமுகத்தின் உலகளாவிய வரலாற்றுச் சிறப்புகளைக் காட்டும் பல அரிய கண்டுபிடிப்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கீழையூரில் பெரிய செங்கற்களால் உருவாக்கப்பட்ட சுவர்களுடன் கூடிய கட்டடப் பகுதியும் அச்சுவர்களின் மேல் மரத்தினாலான கம்பங்களும் (wooden - posts) கண்டுபிடிக்கப்பட்டன. இக்கட்டடப் பகுதி ஏற்றுமதி இறக்குமதிக்குப் பயன்படுத்தப்பட்ட துறைமுகப் பகுதியின் படகுத் துறையாக (wharf) அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மரக்கம்பங்கள் துறைமுகத்தில் கப்பல்களைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கரிப்பகுப்பாய்வு (Carnbon 14 Dating) காலக்கணிப்பு முறையில் இக்கம்பங்கள் கி.பி. 3ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளமை இத்துறைமுகத்தின் தொன்மைக்கு அறிவியல் பூர்வமான சிறப்பைச் சேர்ப்பதோடு பட்டினப்பாலை காட்டும் இத்துறைமுகச் சிறப்பும் இதன் வழி மெய்ப்பிக்கப்படுகிறது. இக்கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களின் நீளம், அகலம், கணம் முறையே 60×40×7 செமீ அளவு கொண்டதாக மிகப்பெரிய செங்கற்கலாகக் காணப்படுகின்றன.

வானகிரி பகுதியில் செங்கற்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நீர்த்தேக்கம் (water-reservoir) ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நீர்த் தேக்கத்தில் காவிரியிலிருந்து நீரைக் கொண்டு வந்து தேக்கி வைத்துப் பின்னர் அதிலிருந்து நீரைப் பகிர்ந்தளிப்பதற்கு ஏதுவாக மிக நேர்த்தியான தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. இந்நீர்த் தேக்கத்தின் தொழில்நுட்பம் சங்ககாலத் தமிழர்களின் தொழில் நுட்பத் திறனுக்குச் சான்று பகர்வதாகும்.

காவிரிப்பூம்பட்டின அகழாய்வுக் கண்டுபிடிப்புகளின் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது மேலையூரில் பல்லவனீச்சுரம் என்னும் கோயிலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தப் பள்ளி ஆகும். இப்பள்ளியில் 8 சதுரடி பரப்பளவு கொண்ட ஏழு அறைகள் காணப்பட்டன. இதன் சுவர்களில் சுதை உருவங்களும், ஓவியங்களும் வெளிக்கொணரப்பட்டன. இவ்வறைகளின் ஒன்றில் தியான நிலையில் புத்தரின் திருமேனி ஒன்றும் மற்றொரு அறையில் சலவைக் கல்லினாலான புத்தபாதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலையூர் மற்றும் வானகிரி பகுதிகளில் தொல்லியலாளர்கள் மேற்பரப்பாய்வின் போது கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தமதம் சார்ந்த சுடுமண் பொம்மைகளைக் கண்டுபிடித்துள்ளனர் (தினமலர் : 6.8.1998 மற்றும் தினமணி : 16.8.98). அக்காலத்தில் புத்தமதச் செயல்பாடுகள் இப்பகுதியில் மிகவும் வலுவாக இருந்ததை மேற்சுட்டிய கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.

தமிழக அரசு தொல்லியல் துறையினர் 1998 ஆம் ஆண்டு இங்கு மேற்கொண்ட அகழாய்வில் யவனருடன் தொடர்புடைய அம்பொரா மண்ஜாடிகளின் சில்லுகளும், பிராமி எழுத்தில் ‘அபிமகததோ’ எனப் பொறிக்கப்பட்ட மண்கலச் சில்லும் கிடைத்துள்ளன. மேற்சுட்டிய எழுத்துப்பொறிப்பு இலங்கையில் காணப்படும் பிராமி எழுத்துகளுடன் தொடர்புடையதாகக் கொள்ள இடமுண்டு.

கடலகழாய்வு:

தமிழக அரசு தொல்லியல் துறை கோவா தேசியக் கடலாய்வு நிறுவனத்துடன் இணைந்து 1991 ஆம் ஆண்டு முனைவர் எஸ்.ஆர்.ராவ் தலைமையில் பூம்புகாரில் கடலகழாய்வினை நடத்தியது. இதில் 23 அடி ஆழத்தில் ஒரே சீரான வடிவமுள்ள பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த கட்டடப் பகுதி ஒன்று காணப்பட்டமை சிறப்புக்குரியது. இக்கட்டடம் சங்ககாலக் கட்டடமாக அடையாளப்படுத்தப்படுவதோடு அக்காலத்தில் கடலின் சீற்றத்தால் அழிக்கப்பட்டிருக்கவேண்டும் எனவும் கருதப்படுகிறது. காவிரிப்பூம்பட்டின நகரம் கடலின் சீற்றத்தால் (கடல்கோளால்) அழிக்கப்பட்டத்தை மணிமேகலை குறிப்பிடுவதையும் இங்கு நோக்குதல் தகும். 


முனைவர் பா.ஜெயக்குமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

சமுத்திரத்தின் நட்சத்திரமே!


மகாகவி பாரதியின் தோழர் மணப்பாடு ஜே.ஆர். மிராந்தாவின் பேரன் செல்வராஜ் மிராந்தா அவர்களுடன் ஒருமுறை உரையாடிக் கொண்டிருக்கும்போது, இலங்கையில் இன்றும் செல்வாக்குடன் நிலவிவருகிற புத்த சமயத்தில் தாரா தேவி வழிபாடு பெற்றிருந்த முதன்மை குறித்து விவாதிக்க நேர்ந்தது. சிங்கள பெளத்தர்களில் பரதவர், கரையார் போன்ற கடற்புரத்து மக்களும் மரக்கல வணிகர்களும் கடலில் திசையறிதற்கு உதவிய நட்சத்திரக் கூட்டங்களைத் தாரா தேவி என்று அழைத்து வழிபட்டு வந்தனர். வருணன் என்ற கடல் தெய்வத்தின் வானுலக வடிவமான - பாற்கடல் தெய்வமான - அவலோகிதேஸ்வர போதிசத்வரின் இணை (ஜோடி)யாகவும், மணிகளாலான மேகலையாகவும் நட்சத்திரக் கூட்டங்கள் உருவகிக்கப்பட்டன. பெளத்த சமயக் காப்பியமான மணிமேகலை குறிப்பிடும் மணிமேகலா தெய்வம், நட்சத்திரத் தொகுதியான, தாராதேவி அல்லது தாரகை அன்னை எனப்பட்ட விண்மீன் கூட்டமே.

ஜைன (சமண) சமயக் காப்பியமான சீவகசிந்தாமணி, சிந்தாமணி என்ற இந்நூல் மணிமேகலையை ஒத்தது என்று பொருள்படும் வண்ணம்,

“முந்நீர் வலம்புரி சோர்ந்தசைந்து
வாய்முரன்று முழங்கியீன்ற
மெய்ந்நீர்த் திருமுத்து இருபத்தேழ்
கோத்து மிழ்ந்து திருவில் வீசும்
செந்நீர்த்திரள் வடம் போல் சிந்தாமணி”
(சீவக சிந்தாமணி, பா. 3143)

- எனக் குறிப்பிடுகிறது. “இருபத்தேழு முத்துகளால் ஆன திரள் வடம்” என்ற வருணனை, “இருபத்தேழு நட்சத்திரத் தொகுதியாலான மணிமேகலை” என்பதையொத்த ஓர் உருவகமாகும்.

இவ்வாறு தாராதேவி வழிபாடு கடலோடிகளால் சிறப்பாகப் போற்றப்பட்டு வந்துள்ள வரலாற்றினைக் கவிஞர் - ஆய்வாளர் செல்வராஜ் மிராந்தா அவர்களிடம் சுட்டிக்காட்டி, பாண்டி மண்டலக் கடற்கரைப் பரதவர்களிடம் கி.பி. 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை (அவர்கள் கத்தோலிக்கத் திருமறையை ஏற்கும் முன்னர்) தாராதேவி வழிபாடு நிலவியதற்கான தடயங்கள் உள்ளனவா என்று தேடிப் பார்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். அப்போது அவர், மதுரை மீனாட்சியம்மை விண்மீன் தெய்வமே என்ற வரலாற்றினைத் தாம் முன்னரே சில கட்டுரைகளில் பதிவு செய்திருப்பதாகவும், மேரி மாதா என்ற தெய்வப் பெயரே ஹீப்ரு மொழியில் நட்சத்திரம் என்று பொருள்படும் ‘மிரியம்’ என்ற பெயருடனும் லத்தின் மொழியில் கடல் என்று பொருள்படும் ‘மாரிஸ்’ என்ற பெயருடனும் தொடர்புடையதே என்றும் குறிப்பிட்டார். அத்தோடு, “Stella Maris Ora Pro Nobis” என்ற மறைமொழியினை “சமுத்திரத்தின் நட்சத்திரமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்” என்றுதான் முன்னர் மொழிபெயர்த்து எழுதி வந்தனர் என்றும் தெரிவித்தார். பாபிலோனியர்களால் வென்று அடிமையாக்கப்பட்ட யூதர்களும் “சமுத்திரத்தின் நட்சத்திர” அன்னையை வழிபட்டு வந்துள்ளனர் என்ற வரலாற்றுக் குறிப்பினைத் தெரிவித்துத் தாரா, தாரகா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கும் ஸ்டார் என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் மூலமான இஷ்டார் என்ற தெய்வப் பெயர் எஸ்தர் என்ற வடிவில் தற்போதும் வழங்கிவருவதை நினைவூட்டினார்.

Stella என்ற பெயர் Constellation (நட்சத்திரக் கூட்டம்) என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும். 27 நட்சத்திரங்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் அவை ஒவ்வொன்றும் ஒரு தொகுதியாகக் காணப்படும் 27 நட்சத்திரத் தொகுதியையே குறிக்கும். இந்த உண்மையைச் சரியாகப் புரிந்து கொண்டிருந்தாலும்கூட, Stella Maris என்பதை ‘விடிவெள்ளி’ எனத் தற்காலத்தில் குறிப்பிட்டு வருகின்றனர் என்றும், ஏசுநாதர் என்ற ஞானபானுவின் உதயத்தை முன்னறிவிக்கின்ற அறிகுறியாகக் கொள்ளப்பட்டு இவ்வாறு குறிப்பிடப்படுகிறது என்றும் செல்வராஜ் மிராந்தா அவர்கள் குறிப்பிட்டார்.

ஒரு நாமம் ஓருருவம் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடுவதும் இறை வடிவத்தைப் புதுப்புது வகையில் புனைந்து காண்பதும் சமய வழிபாட்டு நெறிகள் அனைத்திலும் நிலவுகிற ஒரு மரபுதான். மேலும் வெள்ளி என்ற கிரகம் இந்தியச் சமய மரபில் சுக்ரன் என்ற அசுர குருவாகக் குறிப்பிடப்பட்டாலும், மேலைச் சிந்தனை மரபில் ‘வீனஸ்’ என்ற ஆதி தாய்த் தெய்வமாகவும் அழகுத் தேவதையாகவும் சித்திரிக்கப்படுவதால் மேரி மாதாவை விடிவெள்ளியாகக் காண்பது பொருத்தமுடையதே.

இருப்பினும், நாள் மீன்கள் வேறு; கோள் மீன்கள் வேறு. நாள் மீன்கள் எனப்படும் நட்சத்திரங்கள் 27 என்றும், கோள் மீன்கள் எனப்படும் கிரகங்கள் 9 என்றும் குறிப்பிடுவது வழக்கம். முத்துக்குளித்துறையின் முதன்மையான தெய்வமாகிய பனிமய மாதா, பார் முதிர் பனிக்கடல் தெய்வத்தின் இணை - ஜோடியான சமுத்திர நட்சத்திரம் - Stella Maris - என்பதே இத்தெய்வத்தின் பல பரிமாணங்களுள் முதன்மையான பரிமாணமாகும்.

பருவக் காற்றுகளை, உரிய பருவங்களில் உருவாக்கிப் பூமியை வளப்படுத்துகிற கடல் தெய்வத்தை, தன்னை அண்டுபவர்களுக்கு முத்தையும், பவழத்தையும் வாரி வழங்கிய கடல் தெய்வத்தை, “படுகடற் பயந்த ஆர்கலி உவகைய”ரான பரதவர்கள் தொன்றுதொட்டு வழிபட்டு வந்தனர். கடலில் திசையறிய உதவும் விண்மீன் கூட்டத்தையும் கடல் தெய்வத்தின் மனைவியாகக் கருதி வழிபட்டு வந்தனர். எனவே, கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்கத் திருமறையில் இணைந்தபோது “சமுத்திரத்தின் நட்சத்திர” அன்னை அவர்களை அரவணைத்து அருள் வழங்கிய நிகழ்வு மிகவும் இயல்பான ஒன்றாகவே அமைந்தது. அதே பழைய அன்னை; அதே அருள் வெள்ளம். ஆனால் அன்றைய நிலையில் அது ஒரு புதிய அலை (New Wave). நான் புரிந்து கொண்ட உண்மை இது.


எஸ். இராமச்சந்திரன் 
(ஆய்வாளர், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்)

நன்றி : www.sishri.org

பரதவர் வாழ்வில் திருஞான சம்பந்தர்


திருஞான சம்பந்தரின் அன்னையார் பெயர் பகவதி. மேற்கு கடற்கரை பெண் தாய் தெய்வங்களின் பெயர். கத்தோலிக்கம் கவிந்த பிறகும் கொற்கை-குமரி மீனவர்களால் ’ஆத்தா’ என உள்ளன்புடன் அழைக்கப்படும் குமரி அம்மனின் பெயர் பகவதிதான். மண்டைக்காட்டிலும் அதுவே. ஆனால் பகவதி அம்மையாரின் ஊர் சேரநாடு அல்ல. சோழ மண்டலம். பகவதி அம்மையாரின் ஊர் திருநனிபள்ளி. பெயரே காட்டுகிறது. சமண ஆதிக்கம் உள்ள ஊராக இருந்திருக்க வேண்டும்.

சமண ஆதிக்கம் பல தொழில் - சமுதாய குழுக்களை பாதித்திருந்தது. அவர்கள் இழிசினராகக் கருதப்பட்டனர்.

இதனை நாம் கீழ்வரும் சீவகசிந்தாமணி பாடலில் காண்கிறோம்:


வில்லின் மா கொன்று வெண்ணிணத் தடிவிளம்படுத்த
பல்லினார்களும் படுகடற் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி
நல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே.

வைதீகம் செழித்த பழந்தமிழர் பண்பாட்டில் அரச குலத்தாருடன் சரி சம அந்தஸ்து கொண்டிருந்தனர். பாண்டியருடன் பொருதும் பொருந்தியும் செல்லும் மக்கள் சமுதாயத்தவராக இருந்தவர்கள் பாண்டிய பதிகள் என வாழும் பரதவ சமுதாயத்தினர். அக்காலகட்டத்தில் அதீத உயிர்கொல்லாமை எனும் சமண கருத்தாக்கத்தால் பரதவ சமுதாய மக்களின் தொழில் உரிமை மறுக்கப் பட்டிருக்கலாம். அத்துடன் தொழில் பெருமையும் இழந்திருக்கலாம். 

பகவதியே கூட பரதவ சமுதாயத்துடன் இணைந்த புரோகிதர் குடும்பத்து பெண்ணாக இருந்திருக்கலாம். அவரை பெண்ணெடுத்த ஊரில் (சீர்காழி) உள்ள சுவாமியின் பெயர் தோணியப்பர். இதுவும் பரதவ சமுதாயத்துடன் இணைந்த பெயரே. (இன்று நிலம் சார்ந்த சமுதாயங்கள் தமதாக சுவீகரித்து கொண்ட ஆன்மிக மரபுகளில் கடற்கரையிலிருந்து வந்து சேர்ந்தவற்றின் பங்கு இன்னும் சரியாகக் கணிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அந்தண சமுதாயங்களின் குடும்ப வழக்காடு சொல்லான ‘அம்பி’ என்பதற்கு தோணி என்றும் பொருள் உண்டு.)

சோழ மண்டல கடற்கரை பரதவ சமுதாய குழுக்கள் தம் தொழில்களை துறந்தது ஒட்டு மொத்த பொருளாதாரத்துக்கும் வாழ்க்கை நிலைக்கும் பெரும் நிலைகுலைவை ஏற்படுத்தியிருக்கும். இவ்வாறு பாலையாகி விட்ட ஊருக்குத்தான் திருஞான சம்பந்தர் வருகிறார். திருஞான சம்பந்தர் இந்த ஊரில் வந்து பதிகம் பாடி பாலையாக இருந்த ஊரில் நெய்தலை உருவாக்கினார் என்பது – தொழில் உரிமையும் குடி உரிமையும் மறுக்கப்பட்டு ஊருக்கு வெளியில் வாழவைக்கப்பட்ட பரதவர்களுக்கு மீண்டும் தொழில் உரிமையை மீட்டெடுத்து மீண்டும் சுயமரியாதையுடன் குடியமர்த்திய சமுதாய மறுமலர்ச்சி செயலை ஞான சம்பந்தர் செய்திருக்க வேண்டும். 

திருநனிபள்ளியில் உள்ள சிவன் கோவிலின் அம்பாள் பெயர் – பர்வத ராஜகுமாரி. சோழ மண்டலத்தின் முக்கிய மீனவர் சமுதாய குழுப் பெயர்களில் ஒன்றாக பர்வத ராஜ குலம் இன்றும் திகழ்கிறது. சமணத்தின் அதீத கொள்கை பிடிப்பினால் ’எல்லை நீங்கிய இழிதொழில் இழிகுலம்’ என களங்கப்பட்டு நின்றவர்களை நாம் பர்வத ராஜகுலம் என கௌரவம் அளித்த மானுட நேயம் பக்தி இயக்கத்தின் முக்கிய பங்களிப்பு.

அம்பா பாடல்கள் பரதவர் கடலில் மீன்பிடிக்கும் போதும் பாடும் பாடல்கள். (அம்=) நீர் மீது பாடும் பாடல்கள் என்கிறார் முனைவர் மோகனராசு. அம்பியில்-தோணியில் செல்லும் போது பாடும் பாடல்கள் என்கிறார் புட்பராசன். அம்பாளை பாடும் பாடல்களே அம்பா பாட்டு என ஆகியிருக்க வேண்டும் என்கிறார் நா.வானமாமலை. முனைவர் மோகனராசு தொகுத்து வெளியிட்ட நாட்டுப்புற பாடல்களின் முதல் தொகுதி அம்பாப் பாட்டுகளைக் கொண்டது. அதில் திருஞான சம்பந்தர் சமணர்களை வென்றது சிலாகிக்கப்படுகிறது:

தேசங்களைக் கண்ட பிள்ளை! – ஏலேலோ ஏலே
தெளிவடைந்த ஞானப் பிள்ளை – ஏலேலோ ஏலே
தெளிவடைந்த ஞானப் பிள்ளை – ஏலேலோ ஏலே
தேவாரம் பாடுரானே – ஏலேலோ ஏலே
தேவாரம் பாடும்போது – ஏலேலோ ஏலே
ஓடுரானே சமணப்பையன் – ஏலேலோ ஏலே
மங்கையரே மாதாவே – ஏலேலோ ஏலே
மங்கையர்க்கரசியாரே – ஏலேலோ ஏலே

(பாட்டு-15: பாடியவர்:சி.ராஜமாணிக்கம் தாத்தா, நாட்டுப்புற பாடல்கள் தொகுதி-1, டாக்டர்.கு.மோகனராசு, ஸ்டார் பிரசுரம்,1988, பக்.136-7)

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். திருநனிபள்ளியில் நெய்தலை மட்டுமல்ல, மருதத்தையும் ஏற்படுத்தினார் திருஞானசம்பந்தர் என்பது வரலாறு. போர்த்துகீசிய கட்டாயத்தால் இஸ்லாமிய தாக்குல்களிலிருந்து தப்ப கத்தோலிக்கத்தை தழுவிய மீனவ சகோதரர்கள் இன்று சொந்த பண்பாட்டிலும் வரலாற்றிலும் சமவெளி சமுதாயங்களிலிருந்தும் அந்நியப்பட்டு நிற்பதை நாம் காண்கிறோம். 

ஆனால் திருஞான சம்பந்தர் மீனவர் வாழ்வுரிமையையும் தொழில் உரிமையையும் மீட்டெடுத்த போது சமவெளி சமுதாயக் குழுக்களுக்கும் நெய்தலுக்கும் எவ்வித தனிமைப் படுத்தலும் ஏற்படாமலிருக்க கவனம் கொண்டிருந்ததையும் இதில் காணமுடிகிறது. கண்மூடித்தனமான அதீத அகிம்சையால் பாழ்பட்டு கிடந்த பொருளாதாரமும் அங்கு சம்பந்த பெருமானால் சீர் பட்டிருக்கிறது. பக்தி இயக்கம் பக்தியின் அடிப்படையில் சமுதாய சமத்துவத்தை மட்டும் வலியுறுத்தவில்லை. 

அதனுடன் அன்று மறுக்கப்பட்ட தொழில் உரிமைகளையும் தொழில் சார்ந்த பெருமிதத்தையும் ஆன்மிகம் மூலமாக மீட்டெடுத்தது. பின்னர் உருவான சோழ பேரரசின் கடற்படையின் முக்கிய தளபதிகளாக செயல்பட்டவர்கள் நெய்தல் சமுதாயங்களே. இன்று நம் பண்பாடு தென் கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதிகளில் அழியாத சின்னங்களாக நிற்க இவர்களே முக்கிய காரணம்.

About Us

Vembar (Vembaru/ Bempaar/ Bempaer) is a coastal village in Tamilnadu situated in the Gulf of Mannar between 2 major towns, namely Tuticorin (56 km) and Ramanathapuram (70 km). This village holds a significant place in the history of Tamilnadu and specifically for the Pearl fishing Community.

A strategic village for the Pandya kings, Vembar has acted as an important trade centre for the kingdom. This village has been a pioneer in pearl harvesting, fishing, sea trading and magnificient churches. Let's explore more about this village's history, culture, people, churches and more..

Vembar Holy Spirit, is one of the ancient catholic parishes of the Pearl Fishery Coast in India (Since 1604). Vembarians are converted to Christianity on 1536. St. Francis Xavier who came to the Pearl Fishery Coast in 1542, visited Vembar several times and had mentioned about this village in his letters. The Jesuit record of 1571 notes the existence of a large beautiful church (Basilica) at Vembar.

Rev. Fr. Henrique Henriquez (The Father of Tamil Press), Veearma Munivar and more Jesuits priests are learnt Tamil in this Parish. In the years 1742 and 43, Rev. Fr. Constantine Joseph Beschi (Veerama Munivar) worked in this parish. Since 1876, Vembar has been a big catholic mission with 60 substations. From 1908 onwards, these substations joined one by one with Tuticorin. At 1967, a Shrine was dedicated to St. Sebastian, a patron of Vembar. Most. Rev. Dr. Fidelis Lional Emmanual Fernando, as a bishop of Mannar, Sri Lanka is from this parish.

img

Thambi Ayya Fernando

Pioneer, The Heritage club of Vembar

Thambi Ayya Fernando was born in Vembar. Single handed he went about recording the Photographs of many epigraphic inscriptions in and around Tirunelvely and Tuticorin districts and preserved them for posterity. He has an impressive library which contains innumerable books and writings including those of St. Francis Xavier, and Fr.Henry Henriques.The contribution of Thambi Ayya to the researchers in coastal affairs. coastal history, coastal literature, coastal church affairs, coastal ethos is immense and Himalayan.

img

Dev Anandh Fernando

Founder, The Heritage club of Vembar

Dev Anandh Fernando, a local Vembarian is passionate on finding facts about the village. As a historian he has done several research studies about coastal villages in Tamilnadu. He has dug deep into the history of these villages, spread of Christianity, Pearl Fishing, sea trade from Pandya kingdom to Moors and then Portuguese, establishment of first churches in Tamilnadu.

img

Anton Niresh Vaz

Adviser, The Heritage club of Vembar

Niresh Vaz, as he is called lives in Chennai but is passionate about his native Vembar. He has done a lot of study and published few blogs on the important churches across the coastal villages from Ramnad to Kanyakumari.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com