வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 23 October 2019

பாண்டியாபதியின் பட்டாபிஷேக கீர்த்தனை

சி.சி.தொன் சூசை அந்தோனி தெக்குருஸ் வாஸ் பல்தான் பரதவர்ம பாண்டியன் - (1839 - 1856) என்ற பாண்டியாபதியின் பட்டாபிஷேக முகூர்த்தத்தில் ராஜா வாசல் வித்வான் லூயிஸ் ஆனப்பு லேயோ பரத பண்டிதர் அவர்கள் பாடிய கீர்த்தனை.....

(தரு. இராகம் - அசாவேரி. ஆதிதாளம் )

பல்லவி

பரத குல திலக புரவல னென வரு:
பாக்ய லட்சுமி பாண்ட்யா!

அநுபல்லவி

வரத குணன் தென் கஸ்பார் அந்தோனி தெக் குருசு
வாசுக் கொறேய்ரா மஹா ராஜன் வரத்தில் வந்த ( பரத)

சரணங்கள்

1)அட்டதிக் கெங்கும் புக ழெட்டு மிங்கிலீஷ் கொம்பன்யர்
அநவரதமு மகிழனுகூலா !
துட்டர் தமைச் செயிக்குந் துரை லாற்டாம்,
லாற்டெல் பின்ஸ்றன்!
இட்டமா யபிடேகம் பெற்ற கெம்பீரதீரா!

2) கன்ன னெனு மெஸ்க் கோயே,
மன்னன் ஜோ ஸேப்பு வாய்க்கட்
கருத்தி லிசை மஹத்வ கன சிலாக்யா!
நன்னயஞ் சேர் பரத ரிந்நிலத் தெவருக்கும்!
அண்ணலெனப் பேர்பெற்ற கன்னல் மதுரவாயா ! ( பரத)

3) இலகும் மணவை நகர் தலமாம் இன்பகவிஞ!
னெழில் சேர் புத்திரன் றனக் கிரங்கிக் கிருபைகள் செய்
பல புய கேசரி! எனப் பலர் துதித் திடும்
சிலைமத னாந் தொன் சூசை அந்தோனி,
வாஸ் பல்தான் வேள் !

பொருள்

வரதகுணன் - உபகாரகுண முடையவர்

வாழ்க பரதகுலம்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com