தமிழி வட்டெழுத்து மாற்றி மென்பொருள்

கடந்த ஒருமாதமாக மிகவும் முயன்று தமிழி மாற்றியை தேடிவந்தேன். இந்த நேரத்தில், இன்று நண்பர் தமிழ வேள் அவர்கள் இவ்வெழுத்து மாற்றி மென்பொருள் தளத்தை பதிவிட்டிருந்தார். கண்டதும் அளவிடற்கரிய பெருமகிழ்வுற்றேன். அதைப்பதிவிட்ட நண்பருக்கு கோடி நன்றிகூறி வணங்குகிறேன்.
இந்த மென்பொருளை உருவாக்கியவர்களுக்கு எத்தனை ஆயிரங்கோடி நன்றி சொன்னாலும் தகும். "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என இப்பழந்தமிழ் எழுத்துகளில் எழுதவும் அறிந்துகொள்ளவும் விருப்பங்கொண்ட நண்பர்கள், இவ்விணைப்பை சொடுக்கி, தற்காலத்தமிழில் எழுதினால் தமிழி மற்றும் வட்டெழுத்தில் மாற்றிக்காட்டும். அவற்றைப் படமாகப் பதிவிறக்கிக்கொள்ளலாம். விருப்பமுடைய அன்பர்கள் பயன்படுத்திக்கொள்ள அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
தமிழி, வட்டெழுத்து கற்போம்.
தமிழி மீண்டெழுக !
வட்டெழுத்து திரும்புக !!
செந்தமிழ் சிறப்புற வாழ்க !!!