அமலோற்பவத் தாயார் மீது அகர குற்றுயிர் மடக்கு வெண்பா

ககன பரம கரம மரப
வகன லகல மகத வகன
வபல சனன வரச மரப
கமல சரண மபய
பொருள் :
விண்ணாட்டின் பரமனாகிய
கடவுளின் திருக்கரத்தில் அமர வரம் பெற்றவளும், பாவக் கனலாகிய நரக ஆக்கினை ஒழியும்படி
மகாதவத்தின் மேன்மையைக் கொண்டு அமல உற்பவமாய் அவதரித்தவளும், அரச குலத்தவளுமாகிய
தேவ தாயின் தாமரை மலரையொத்த திருவடிகள் எனக்கு அடைக்கலம்.