வேம்பாற்றுப் பரதவரும் ஆப்பநாட்டு மறவரும்
பண்டைய துறைமுக நகரமான வேம்பாற்றின் பூர்வீகக் குடிகள் பரதவர்களும், மரைக்காயர்களும், வலையர்களும் ஆவர். தற்காலத்தில் மரைக்காயர்கள் முழுவதுமாக வேம்பாரினை விட்டு புலம் பெயர்ந்து சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வாழந்து வருகிறார்கள். பெரும்பாலான பரதவர்களும் இலங்கை, சென்னை உட்பட உலகின் பல்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். எனினும் பெரும்பான்மையானோர் பரதவர்களே உள்ளனர்.
இவர்களில் வலையர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வசித்து வருகிறார்கள். அவர்களுடன் மறவர்களும், நெசவு வேலை செய்யும் கோழியர் என அழைக்கப்பட்ட வாதிரியர்களும் வாழ்ந்து வருகின்றனர். இது தவிர ஆச்சாரிகள் உட்பட அனைத்து இனத்தவரும் வேம்பாற்றில் தற்காலத்தில் வாழ்கின்றனர்.
இவர்கள் பல இனத்தவராக இருப்பினும் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதர பண்புடனும் மிகுந்து வாழ்கின்றனர். குறிப்பாக பெரும்பான்மைமிக்க பரதவருடன் தொழில் ரீதியாக வலையரும், பழங்காலத்தில் பரதவரின் மரக்கலங்களுக்கு பாய்கள் அமைத்துக் கொடுத்த வாதிரியர்களும், மரக்கலங்களை வடிவமைத்த ஆச்சாரிகளும் தொழில் ரீதியாக சுமூக உறவு கொண்டிருப்பது இயல்பே.
இவர்களுக்கு சரிநிகராக மறவர்கள் பரதவருடன் நட்பு பாராட்டுவதும், உறவு பேணுவதும் மிகவும் ஆச்சரியத்திற்குரியதே!!! வேம்பாற்றில் வாழும் இவ்விரு இனங்களுக்கிடையே காணப்படும் சமூக உறவினை கூர்நோக்கிப் பார்ப்பது மிகவும் அவசியமாகும்.

இந்த உறவு இன்று நேற்று உருவானதாக தெரியவில்லை மாறாக பன்னெடும் காலம் தொட்டே நிலவி வருகிறது. கடல் தொழில் சார்ந்த கிராமமான வேம்பாற்றில் தொழில் ரீதியாக எவ்வித தொடர்பும் இன்றி வாழும் இந்த மறவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? என்ற கேள்விக்கு பதிலாய் அமைவது ஓர் சமூக நினைவு.
அக்காலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் நாடு என்ற உட்பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. இன்று அரசின் வருவாய்த் துறையின் ஆவணங்களில் நாடு என்ற பிரிவு இடம் பெறாவிட்டாலும் நடைமுறையில் ‘நாடு’ என்ற பிரிவு அதிகார மையமாக இன்றும் விளங்கி வருகிறது. இத்தகைய ‘நாடு’ என்ற அமைப்பில் ஒன்றாக ஆப்பநாடு இருந்தது. ஆப்ப நாட்டு மறவர் தலைவரின் மகளைச் சிறையெடுக்க இராமநாதபுரம் ஜமீன்தார் விரும்பியபோது ஆப்ப நாட்டு மறவர்களின் தலைவர் அதற்கு உடன்படவில்லை.

இதை அறிந்த பரதவர் தலைவர் இக்கட்டான நிலைக்கு ஆளானார். அவர்களை எதிர்க்க வலிமையான படை அவரிடமில்லை. அதேநேரத்தில் தம்மிடம் அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றியாக வேண்டும். இறுதியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி ஆப்பநாட்டு மறவர்களின் முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விட்டார். கன்னிப் பெண்ணை, சிறையெடுக்க வந்தவர்கள் ஏமாந்து திரும்பிச் சென்றனர். இச்செய்தியையும் ஒரு வாய்மொழிக் கதையாகக் கொள்ள முடியும்.
இந்த சமூக நினைவை உறவுச்சொல் ஒன்று, இன்றும் மறக்கவிடாமல் வைத்துள்ளது. ஆப்பநாட்டு மறவர் தலைவரின் பெண்ணுக்கு திருமணம் செய்வித்த தன் வாயிலாக தந்தையின் கடமையை வேம்பார் பரதவர்களின் சாதித்தலைவர் செய்துள்ளார். இவ்வுதவியின் வாயிலாக, தம் குலமானத்தைக் காத்ததாக ஆப்பநாட்டு மறவர் சமூகம், இன்றளவும் கருதி வருகிறது. இதன் வெளிப்பாடாக ‘அப்பச்சி’ என்ற உறவுச் சொல்லால் வேம்பார் பரதவ சமூகத்தினரை அழைத்து வருகின்றனர்.
வேம்பாரில் வாழும் பரதவ சமூகத்தினர் உள்ளூர் மறவர்களை ஆப்பநாட்டு தலைவர் மகளின் வாரிசுகளாக கருதுகின்றனர். அதனால் உள்ளுரில் வாழும் மறவர் சமூகத்தினர் பரதவ சமூகத்தினருடன் மாமா, மச்சான் உறவை பேணி வருகிறார்கள். எனவே மறவர்களின் குடியிருப்புகள் பரதவரின் குடியிருப்புகளுக்குள் உள்ளடக்கியே அமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் உற்றுநோக்குதல் வேண்டும்.

தொடரும் .....
நி. தேவ் ஆனந்த்