தொலைக்காட்சியில் வேம்பாறு

வரும் சனிக்கிழமை 2.4.2016 அன்று இரவு 9.00 மணியளவில் வசந்த் தொலைக்காட்சியின் மண் பேசும் சரித்திரம் நிகழ்ச்சியில் கைவிடப்பட்டு சிதைந்து போன மீனாட்சி அம்மையின் ஆலயம், மண்ணில் புதைந்த சப்பரமடத்தின் கதை, வேம்பாற்றின் முதல் கத்தோலிக்க ஆலயம், பண்டைய வேம்பாற்றின் புனித சவேரியார் மற்றும் தமிழின் அச்சுத் தந்தை ஹென்றிக் ஹென்றிக்கஸ் பாதிரியாரின் பணிகள், 300 ஆண்டுகளுக்கு முன் முத்து சலாபத்திற்காக மன்னார் சென்று அங்கு பலுகி பெருகிய கதை எனப் பல அரும் பெரும் வரலாற்று பதிவுகள் ஒளிபரப்பப்படுவதாக இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ச்சி ஒளிபரப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.... வேம்பாறு குறித்த வரலாற்றுப்பதிவுகள் அடுத்த வாரம் (9.4.2016) ஒளிபரப்பப்படுகிறது...... தவறாமல் கண்டு நம் வரலாற்றை அறிவோம்.... பெருமிதம் கொள்வோம் .....நாமும் வேம்பாத்தான் என்று.....
தொலைக்காட்சியில் வேம்பாறு
Dev Anandh Fernando
04:34