வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Friday 11 March 2016

தமிழ் இலக்கியத்தில் பரவர்
பரவரைப் பாடாத புலவன் இல்லை.....
நம் முத்தமிழ் சங்கத்திலே....!

முதலாவது
நற்றிணை

அம்மூவனார்

4;1 கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
கடற்கரைச் சோலையிலுள்ள சிறுகுடியிலிருந்து கடலின்மேற் செல்லும் பரதவர்;

38. உலோச்சனார்
38;2 பாட்டம் பொய்யாது பரதவர் பகர
கடலிடத்து மீன்வேட்டைமேற் சென்றார்க்கு ஆங்குத் தப்பாது மழை பொய்யாது பெய்ததனாலே வலை வளத்தால் வந்த பொருளைப் பிற இடம் சென்று பரதமாக்கள் விலைக்கு விற்று வந்தனர்

63. உலோச்சனார்
63;1 உரவுக் கடல் உழந்த பெரு வலைப்பரதவர்
வலிமையுடை கடலிலே சென்று
மீன்பிடித்தலில் வருந்திய பெரிய
வலைகளையுடைய பரதவர்;
உலோச்சனார்

74;4நிறையப் பெய்த அம்பி காழோர்
சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும் -
அடக்குதற்கு அரிய களிற்றியானையை யானைபாகன்
அடக்கி நடத்துவதை போல மீன்கள் குவிந்த தோணியை
கட்டுப்படுத்தி செலுத்தும் ஆற்றல் மிக்க பரதவர்

87.நக்கண்ணையார்
87;8 சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
சிரிய குடில்களில் வாழ்ந்தாலும், எதற்கும் அஞ்சாது,
எதனையும் எண்ணி கவலை கொள்ளாது
வாழும் பரதவ மக்களின் மகிழ்ச்சியும்

101.வெள்ளியந்தின்னனார்
101;8 மீன் எறி பரதவர் மட மகள்
மீன்களை கூரிய வேல் கொண்டு எறிந்து
வேட்டையாடிப் பிடிக்கும் பரதவனின் இளம் மகள்

111;3 வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர்
பின்னி வரிந்த வலையையுடைய பரதவர்

175;1 நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர்
அளவிடற்கரிய நெடிய கடலையே தன் வலை கொண்டு அலைத்தெடுக்கும் திறன் கொண்டவரும் பெரும் திமில் கொண்ட தோணிகளை உடையவருமான பரதமாக்கள்
பேரிசாத்தனார்

199;6 கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர்
சூழ்ந்த கடனீரில் விரைந்து செல்லும் சுறாமீனை கூரிய வேல் கொண்டு எறிந்து வேட்டையாடிப் பிடிக்கும் வளைந்த பெரும் திமில் கொண்ட மீன் பிடிக்கும் படகினையுடைய பரதவர்;

207;9 முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்
முதிர்ச்சியையுடைய பரதவரின் மடப்பமிக்க மொழியையுடைய இளமகளான இவள்

219. தாயங்கண்ணனார்
219;6 பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
அலைகள் நெருங்கிய கடலின் கண்ணே சென்று பெரிய மீனைப் பிடிக்கும் சிறிய குடியின் கண்ணுள்ள பரதமாக்கள்;

239. குன்றியனார்

239;2 மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
மயங்கிய மாலைக் காலத்தில் கள் குடித்து மகிழ்ச்சியுற்ற பரதவ மாக்கள்

303. மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்

303;9 வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்
தெளிந்த கடலின்கண்ணே வலிய கையையுடைய பரதவ மாக்கள் மீன் பிடித்தற்கு நெடுக இட்ட சிவந்த நிறத்தையும் வலித்துக் கட்டிய முடியையும் உடைய அழகிய வலை;

372. உலோச்சனார்

372;11 இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர்
இருண்ட கடலிலே இரவுப் பனி தலையுடனே மீனை தேடும் பரதவர்கள்

388. மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
388;4 திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ
வன்மைமிக்க புரிகளால் முறுக்குண்ட கயிற்று நுனியிலே கட்டிய ஈட்டியை திமிங்கிலத்தின் மீது எரிந்து அதன் வேகத்திற்கு இணையான நீரில் விரைந்து செல்ல வல்ல திண்ணிய மீன்படகிலே ஒளிபொருந்திய விளக்குகளைக் கொளுத்திக்கொண்டு நள்ளிரவில் கடல் வேட்டை செல்லுகின்ற பரதவர்

கடற் புரத்தான்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com