வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 10 March 2016

அறியப்படாத தின்பண்டம் பனாட்டு
பனையின் முன்னர் அட்டுவரு காலை
நிலையின் றாகும் ஐயென் உயிரே
ஆகாரம் வருதல் ஆவயி னான"
 (தொல்காப்பியம். எழு. 284)

தொல்காப்பியத்தில் பனாட்டு பற்றி வரும் வரிகள் இவை. மேலும் பனாட்டு என்றால் பிசைதல் என்றும் பொருள்.

நெய்தல் நில கடற்பகுதிகளில் வாழும் சிறுவர்-சிறுமிகளின் திண்பண்டமான பனாட்டு காலப்போக்கில் கடல் காற்றோடு கலந்து காணாமல் போய்விட்டது. இதன் விளைவு தமிழ் பேசும் பழங்குடியின மக்களிடம் கூட நூடுல்ஸ் நுழைந்து விட்டது.  இன்று அரிதாக உள்ள இந்த திண்பண்டம் செய்யப்படும் செய்முறையைப் பற்றி பார்க்கலாம்.

பனை பழங்களை மேற் கருந்தோலினை உரித்து அதிலுள்ள கொட்டையுடன் கூடிய சந்தன நிற சதைகளை சாறு பிழிந்து ஒரு சட்டியில் கொட்டைகளுன் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பனை சதைகளுடன் கூல் போன்ற பதத்தில் நீரீணை சேர்த்து ஊற வைக்க வேண்டும். கொட்டையுடன் ஊற வைப்பதால் பனை பழத்தில் உள்ள கசப்பு மற்றும் காறல் சுவையை அகற்ற அது உதவுகின்றது.

நன்றாக ஊறியப் பின்னர் அகன்ற பாத்திரத்தில் (அல்லது சிறிய தொட்டியில்) பனை பழம் சதையையும், பிழிந்த சாற்றினையும், நீரிணையும் சிறிது சிறிதாக ஊற்றி கால்களை நன்றாக கழுவிட்டு நன்றாக மிதிக்க வேண்டும். கூழ் பதம் அடைந்தவுடன் மண் மற்றும் பனை நாரை அகற்ற சல்லடையை பயன்படுத்திக் கொள்ளலாம். கொட்டையில் உள்ள சாற்றினை தண்ணீர் ஊற்றி சிறிது சிறிதாக சாற்றினை எடுக்கவும்.

சல்லடையால் வடிகட்டப்பட்ட பனைச் சாற்றை ஓலைப்பாயில் ஊற்றிப் பரப்ப வேண்டும். நேரடியாக வெயிலில் பனைச் சாற்றை காயவைக்காமல் பந்தல் போட்டு காய வைக்கப்படுகிறது. முதல் அடுக்கு காயந்ததும், இரண்டு மற்றும் மூன்று அடுக்குகளாக பனை சாற்றை அடுத்தடுக்குகளாக பரப்ப வேண்டும். இந்த மூன்று அடுக்கு பனைச் சாற்றினை பந்தல் அடியில் 15 இல் இருந்து 20 நாட்கள் காயவைக்கப்படுகிறது.

பின்னர் காயவைக்கப்பட்ட பனைச் சாறு கேக் போன்ற வடிவில் இரண்டாக மடித்து ஒரு இன்ஞ் வடிவில் கேக் போன்று சதுர வடிவில் வெட்டி இரண்டிலிருந்து மூன்று நாட்கள் காய வைத்தபின்னர். அழகிய ருசியான பனாட்டு தயார்.

Thanks : Rafi

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com