வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Wednesday 1 July 2020

நடுக்கல் வழிபாட்டில் பரதவர்

கிடுகுநிரைத் தெஃகூன்றி
நடுகல்லின் அரண்போல
நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய
குறுங்கூரைக் குடிநாப்பண்
நிலவடைந்த இருள்போல
வலையுணங்கு மணல்முன்றில்
வீழ்த்தாழைத் தாட்டழ்ந்த
வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர்
சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினால்
மடற்றாழை மலர்மலைந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை இரும்பரதவர
பைந்தழைமா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லாது
உவவுமடிந் துண்டாடியும்

பட்டினப்பாலை - 10

தெளிவுரை:

காவிரி பூம்பட்டினத்து பரதவர்கள் நடுக்கற்களை நட்டு வைத்து அதனைச்சுற்றி கேடயங்களையும், வேல்களையும் நட்டுவைப்பர், தாழ்ந்த கூரைகளை கொண்ட வீடுகளில் மீன் தூண்டில்களை வேல் போல் நட்டு வைத்து அவ்வீட்டின் முன்புறம் வலைகளை உலர்த்தி வைப்பர். இக்காட்சி நிலவின் இருட்டை போன்றிருந்தது  விழுதுள்ள தாழை மரத்தின் அடியில் வளரந்த குளிந்த பூவான வெண்டாளியை அணிந்திருந்தனர், கருவூற்ற சுறா மீனின் கொம்பை நட்டு தம் வீட்டிலிருந்தபடி தெய்வத்தை வணங்கினர், தாழை மலரைச்சூடி, பனை கள்ளை குடித்து மென்மையான தலையை உடைய கருத்த பரதவர்கள், பசுந்தழைகளை உடுத்திய கரிய பெண்களுடன் முழுமதிநாளில், பரந்த இருளை உடைய கடலில் மீனை வேட்டையாட செல்லாமல் தாம் விரும்பிய உணவை உண்டும், விளையாடியும் கழித்தனர்.

Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com