வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Saturday 1 June 2019

பரதவரும் பவளமும் - துகிர்
பவளம்: 

தொல்குடி பரவனின் ஆபரணம் முத்து மற்றும் பவளம். கடலில் கிடைக்கும் ஆபரண பொருள் தொல்குடி பரவன் முதல் முதலில் முத்தையும் பவளத்தையும் கடல் பட்டு நூலில் கோர்த்து ஆபரணமாக அணிந்த அழகு மாலை. இந்த பவளம் சிகப்பு, வெள்ளை, வெளிற் சிகப்பு நிறங்களில் கிடைக்கிறது. செம்பவளம், வெம்பவளம், பவளம், என அழைக்கபடும் Precious coral, Whilse Coral, red coral.

பவளப்பூச்சிக்கு, இப்போது ஆங்கிலத்தில் கோரல்லியம் ரூப்ரம் (Corallium rubrum) என்பது பெயர். இந்த முதுகெழும்பிள்ளாத பல பவளப்புச்சிகள் சேர்ந்து கறையான் புற்று போன்று கட்டும் கூடு தான் பவளம் அதாவது பவளபூச்சி உருவாக்கும் திரவம். இது கிட்டத்தட்ட முத்து உருவாகுவது போன்றது தான் பவளமும் முத்துவும் வேதியல் பண்பில் ஒற்றுமை உள்ளவை. இவை இரண்டும் கால்சியம் கார்பனேட் தாதுவே

முத்தை பட்டை தீட்ட தேவை இல்லை ஆனால் பவளத்தை பட்டை தீட்ட பளபளப்பு கூடி ஆபரணம் ஜொலிக்கும். எகிப்து, கிரேக்கத்தில் பரவனின் முத்தும் பவளமும் முக்கிய பங்கு வகித்ததை சாணாக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திம் கூட கூறுகிறது. நவ இரத்தினிங்களிலேயே மருத்துவ குணம் கொண்டுள்ள இரத்தினம் மற்றும் பவளம் மட்டுமே. பிறந்த குழந்தை குளிப்பாட்டி விட்டு உதட்டில் பவளத்தால் தடவி விடுவார்கள் குழந்தையின் உதடு நல்ல நிறம் பெறும் என நம்பிக்கை உண்டு. கழுத்தில் அணியும் பவளம் உடல் உஷ்ணத்திற்கு ஏற்றார் போல் கரையும் தன்மை உடையது.

பவளத்தின் தரத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது

பவளத்தின் தரத்தை உறுதி செய்ய ஓர் உக்தி உள்ளது அதாவது, சுத்தமான பாலில் பவளத்தைச் சிறிது நேரம் போட்டு வைக்க, பாலின் நிறம் மாறாமல் அப்படியே இருந்தால் அது அசல் அல்ல பாலின் நிறம் கொஞ்சம் இளஞ்சிவப்பாக மாறினால்தான் அது அசல். உடல் சூடு அதிகமாக இருக்கும் காய்ச்சல் போன்ற சமயத்தில் பொழிவு மங்கினால் அவை அசல்.

பவளத்தை கேரட் அளவீடில் அளக்கிறார்கள். மோதிரத்தில் பதிக்கப்படும் நன்றாக விளைந்த பவளம் கழுத்தில் அணியும் பவளத்தை விட மூன்று மடங்கு பணம் அதிகமாக விற்கப்படுகின்றது. இந்த பவளம் இப்போது பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானில் அதிகம் எடுக்க படுகிறது.  தமிழகத்தில் கடந்த சில நூற்றாண்டுகளாகவே கடலில் பவளம் எடுப்பது நின்றுவிட்டது. இன்று கடலில் கலக்கும் ரசாயன கழிவுகளாலும், பயன்படுத்தப்படும் இழுவலை மடியாலும் கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு போய்விட்டது. பரவன் கடலில் குதித்தால் முத்து பவளத்துடன் வருவான் என்ற பழமொழி எப்போதும் பொய்க்காது.


ஆகவேதான் கடற்கரை பரதவ பெண்கள்  பின்வரும் தாலாட்டு பாடல் பாடி தாலாட்டுகிறார்கள் . 

முத்து பவளம் சூட்ட வந்திருக்கான் 
எங்க பணகுழி உள்ள கடல் ராசன். 

கடலையும் காத்தையும் கடந்திடுவான்
நல்ல கம்மாறுகாரானாய் சிறந்திடுவான்

ஆத்தா பாடுன துங்கிருவான் 
அலையோசை கேட்டா முங்குளிப்பான்

முத்துக்கு முங்குளிச்சு பவளம் எடுப்பான் 
சங்குக்கு முங்குளிச்சி முத்தெடுப்பான்

முங்குன மூச்சுல எந்திரிப்பான் 
முக்கால் மையில் தூரத்த கடந்திருப்பான்

பட்டுல படுத்தா தூங்க மாட்டான் 
பத்தார்ல படுத்தா தூங்கிருவான்

சங்க இலக்கிய சான்று

பத்திற்றுப்பத்து: பகன்ற ஆயம் 30: 1- 8

இணர்ததை ஞாழல் கரைகெழு பெருந்துறை
மணிக்கலத் தன்ன மாஇதழ் நெய்தல்
பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை
வால்இணர்ப் படுசினக் குருகுஇறை கொள்ளும்
அல்குறு கானல் ஓங்குமணல் அடைகரை 5
தாழ்அடும்பு மலைந்த புணரிவளை ஞரல
இலங்குநீர் முத்தமொடு வார்துகிர் எடுக்கும்
தண்கடல் படப்பை மென்பா லனவும்

இந்த பாடல் முத்து எடுக்கும் போது பவளமும் பெருந்துறையில் எடுத்தது பற்றி கூறுகிறது.

- John Milton Fernando
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com