வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 21 July 2022

சக்கிறமேந்து

'கிரிசித்தியானி வணக்கத்தில்' (1579) இடம்பெற்றுள்ள சொல்தான் சக்கிறமேந்து. கத்தோலிக்க திருச்சபையில் 'ஏழு அருட்சாதனைகள்' என்று சொல்வதுண்டு. ஆங்கிலத்தில் இதனை 'Seven Sacraments' என்பர். போர்த்துக்கீசு மொழியிலும் இதுதான். இந்த 'Sacraments' என்பதைத்தான் 450  ஆண்டுகளுக்கு முன் தமிழில் 'சக்கிறமேந்துகள்' என சங். ஹென்றிக் ஹென்றிக்கஸ் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்...!

இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஏழு சக்கிறமேந்துகளும் அவற்றிற்கான போர்த்துக்கீசு, ஆங்கிலச் சொற்களும், லத்தீன் சொற்களும், இன்றைய தமிழ்ச் சொற்களும் பின் வருமாறு:

1. வவுத்தீசுமு- Baptismo (Portuguese), Baptism (English), Baptisma (Latin), ஞானஸ்நானம்

2. கிரிசிமாரித்தல்- Chrisma (Portuguese), Eucharist (English), Eucharistia (Latin), நற்கருணை

3. மோசக்கிறமேந்து- Sacramento (Portuguese), Confirmation (English), Paenitentia (Latin), உறுதிபூசுதல்

4. கொம்பெசாரித்தல்-Confissao (Portuguese), Confession (English), Confirmatio (Latin), பாவமன்னிப்பு

5. எசித்திரேமவுஞ்சம்-Extremo Uncao (Portuguese), Anointing sick (English), Extrema Unctio (Latin), நோயில் பூசுதல்

6. ஓடுதென்- Orderm (Portuguese), Ordination (English), Ordo (Latin), குருத்துவம்

7. மத்திரிமோனியு- Matrimonio (Portuguese), Matrimonial (English), Matrimonium (Latin), திருமணம்
Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com