வேப்பமலர் புனை சேர்ப்பன் நல்லூரே! வேம்பாரெனப் புகழ் வாய்ந்த தொல்லூரே!!

Thursday 22 February 2024

தமிழ் அச்சில் பரதவர் பங்கு


தமிழுக்கு அச்சு கொடுத்த முத்துகுளித்துறை பரதவர்கள்..

காலத்தின் நேரத்தில் சில வரலாற்றை பதிவு செய்ய தவறிப்போனாலும் அதை எதோ வகையில் காலம் உணர்த்தி விடும்...

உலகில் முதல் முதலாக தமிழுக்கு அச்சு வடிவம் 1554 ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் பரதவர்கள் உதவியோடு அதை போர்ச்சுகீசியர்கள் உருவாக்கி கொடுத்தார்கள் என்பதை சட்டசபையில் பேசிய மாண்புமிகு.அமைச்சர்.தங்கம் தென்னரசு அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்...

ஆனால் தமிழ் நிலப்பரப்பில் தமிழுக்கு அச்சு வடிவம் கொடுத்ததும் பரதவர்கள் தான். 1577 ஆம் ஆண்டு ஜாண் டி பாரியா என்னும் ஜேசு சபை குரு கோவாவில் உருவான தமிழ் உலோக அச்சு எழுத்துக்களை அதே ஆண்டு கோவாவில் இருந்து புன்னைக்காயல் ஊருக்கு தோணியில் கொண்டு வந்து மேன்மை தங்கிய குரு தமிழக அச்சு கலையின் தந்தை அருள்பணி ஹென்றி ஹென்றிக்கஸ் அடிகாளர் அவர்களிடம் ஒப்படைத்தார். அதில் தான் அவர் அடியார் வரலாறு என்னும் நூலை 1586 ஆம் ஆண்டு அச்சில் ஏற்றி தமிழகத்தின் முதல் அச்சு மற்றும் இந்திய நிலப்பரப்பில் அச்சில் ஏறிய முதல் மொழியாக தமிழை பெருமை கொள்ள வைத்த அடியார் வரலாறு நூலை தமிழ் உலகிற்கு புன்னைக்காயல் மண்ணில் இருந்து கொடுத்தார்.. 

ஆனால் முத்துகுளித்துறையின் வரலாற்று பெட்டகம் குருவானவர் வெனான்சியூஸ் பர்னாந்து அவர்கள் 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத ஞானதூதன் இதழில் தமிழ் அச்சு பிரசுர 400 ஆண்டு விழா இதழில் புதிய தகவல் ஒன்றை குறிப்பிட்டார். அதில் oriente conquistado என்னும் நூலின் ஆசிரியர் பிரான்சிகோ டி சூசா அவர்கள் 1578 ஆம் ஆண்டிலே புன்னைக்காயல் மண்ணில் அச்சு இயந்திரம் மூலம் தமிழ் உலோக அச்சால் ஆன புனிதர்கள் வரலாறு (அடியார் வரலாறு 1586), பாவசங்கீர்தன கையேடு (கொம்பெசியொனாயரு 1578 இல் புன்னைக்காயல்?, 1580 கொச்சி?), ஞானோபதேசம் நூல்கள் அச்சிடட்டப்பட்டது என்கிறார்..

 (பாவசங்கீர்தன கையேடு இதன் வழி 1578 புன்னைக்காயலில் முதல் பதிப்பும் 1580 கொச்சியில் இராண்டாம் பதிப்பும் வந்து இருக்கலாம் என்பது அவரின் ஆய்வு. 1586 ஆம் ஆண்டு அடியார் வரலாறு வந்ததாக ஒரு வரலாறு இருந்தாலும் மேல் குறிப்பிட்ட படி ஆண்டுகள் மாறுகிறது) 

தகவல் உதவி- ஆ.சிவசுப்ரமணியன் அவர்கள் எழுதி உலக தமிழாராச்சி நிறுவனம் வெளியிட்ட தமிழ் அச்சுதந்தை அண்ட்ரிக் அடிகளார் என்னும் நூலில் இருந்து..

பல நூல்கள் வழக்கத்தில் இருந்தாலும் சில நூல்கள் கிடைக்காமலே போய்விட்டது கடித குறிப்புகளில் மட்டுமே அவைகள் உள்ளன..ஆனால் அடியார் வரலாற்றின் முன்னுரையாக ஸ்பானிய மொழியில் அவர் எழுதியதில் முத்துகுளித்துறை ஊரில் வாழும் மலபார் மொழியில் எழுதுகிறேன் என்கிறார் ஆனால் அது தமிழில் வடிவமாகவே அவர் அதை குறிப்பிடுகிறார்..அன்றைய கொச்சின் மறைமாவட்ட மேற்றாணியர் அனுமதி கொண்டு இதை அச்சில் ஏற்றுகிறேன் என்கிறார் அடிகளார் அவர்கள்..

ஆனால் தமிழ் நிலப்பரப்பில் அதிகாரபூர்வமாக 1586 ஆம் ஆண்டு அடியார் வரலாறு என்னும் நூலை புன்னைக்காயல் மண்ணில் தமிழில் அச்சிட்டு உலகின் முதல் தமிழ் அச்சு நூலை (தமிழகத்தின் உள்நிலத்துக்குள் அச்சிடப்பட்ட) வெளியிட்டார் கத்தோலிக்க பரதவர்களின் பொருள் பண உதவியோடு....

தமிழுக்கு அச்சு தந்த பரதவனாக..
தா.ரெய்னர் பர்னாந்து 
இடிந்தகரை.





Send us a Mail

.....

Name

Email *

Message *

Contact us

Address:

1/201, Sethupaathai, Vembar, Tamilnadu, India

Phone:

+91 4638 262429

Email:

heritagevembaru@gmail.com