ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரர் பேரில் பாடல்
பாடல் - 1

தற்காரும் துயா
தந்தையாய் எமக்குகந்த
சுந்தரனே நாங்களிந்த
தொந்தரையுறாமலே முந்த
துணையாய் வந்த
சீர்த்தி சேர் நருபோன்தேசா
மார்க்கு மருசுல்யான் நேசா
பார்க்குளெமை ஆதரி வாசா
சர்வேஸ்ரன் தாசா
சேசுபரன் வேதமதைக்
இராசனிறிந்தே மிக வாதை
நல்கினான் தீதை
பட்டமரமே தளிர்க்க
இஷ்டமுடன் நீர் கண்ணோக்க
மட்டில்லாத காய்கனி காய்க்க
மண்ணோர்கள் பார்க்க
துஞ்சு கொள்ளை நோயால் நெஞ்சம்
அஞ்சியே நலிந்து கெஞ்சும்
நிம்பநகர் வாசிகளுக்கு
நீர்தான் தஞ்சம்