தேவ தாயின் பேரில் பாடல்
சம்பாஷானைப் பாடல்

புண்ய கிருபாகரியே
பாச உலகிலெம் மீதரிய
பட்சம் வைத்துண் திருவருள் புரியே
வஞ்ச வினையால் மெய்வாடி
வந்தோம் உன் பாதம் விரைந்தோடி
தஞ்சமென் குருக்குன தருள் நாடி
சஞ்சலம் தீர்த்தருள்வாய் கொண்டாடி
சாற்றிடும் ஈறாரு முடி
சந்திரன் உந்தன் திருவடி
போற்றும் நேயர் உன் புகழ்பாடி
போக்க வேண்டினோம் இடர் மீடி