பெருவிழா அழைப்பிதழ்

பெருவிழா காலங்களில் அன்றாடமும் காலை 6.30 மணியளவில் வேம்பார் பரிசுத்த ஆவி ஆலயத்தில் சிறப்பு திருப்பலிகளும் மாலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் அருளிக்க ஆசீர்வாதமும், திவ்ய நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறும். 19 ஆம் திகதி ஞாயிறு மாலையில் மாலையாராதனையும், தொடர்ந்து ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் மகோற்சவ சப்பரப் பவனியும் நடைபெறும். மறுநாள் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.00 மணியளவில் மீண்டும் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் மகோற்சவ சப்பரப் பவனியும் 11.00 மணியளவில் ஆடம்பர பெருவிழாத் திருப்பலியும் நடைபெறும்.
20 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலத்தில் மாலையாராதனையும், அதனைத் தொடர்ந்து காலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் அருளிக்கத்தை முத்தம் செய்யும் திருநிகழ்வும் நடைபெறுகிறது. மறுநாள் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் ஆராதிஷ்ட செபஸ்தியான் முனீந்திரனின் திருத்தலத்தில் பெருவிழாத் திருப்பலியும் நடைபெறும். பெருவிழா நிகழ்வுகளில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பில் மகிழும்
நிம்ப வாசிகள், வேம்பாறு.